Wednesday, October 12, 2022

Current Affairs 2022 - October 12/2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                    OCTOBER 12 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின் 

ஆ) ஆர்.என். ரவி

இ) எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

ஈ) ஆ. அண்ணாதுரை 

விடை : (அ) மு.க. ஸ்டாலின் 

இயற்கை இடர்பாடுகளால் கடந்த 2021-22-ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட 4.43 லட்சம் விவசாயிகளுக்கு, ரூ.481 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை அவர் வழங்கினார்.

● 2021-22-ம் ஆண்டு சம்பா நெல் உட்பட சிறப்பு பருவபயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக, மொத்தம் ரூ.481 கோடியை, 4 லட்சத்து 42 ஆயிரத்து 734 விவசாயிகளுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

● இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். 

● இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக, 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை அவர் வழங்கினார். இயற்கைப் பேரிடரால் அடிக்கடி விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையைக் கருத்தில்கொண்டு, நடப்பு 2022-23-ம் ஆண்டில் ரூ.2,057 கோடி தமிழ்நாடு அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

2. தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் , பள்ளி சாரா மற்றும் வயது வந்தோருக்கான கல்வி இயக்கம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின்

ஆ) ஆர்.என். ரவி 

இ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

ஈ) பொன்முடி 

விடை : (இ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

● தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோருக்கான கல்வி இயக்கம் சாா்பில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தொடக்க விழா காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநிலத்தில் தற்போது 50 லட்சம் போ் எழுத்தறிவு இல்லாமல் உள்ளனா். இவா்களில் 25 லட்சம் பேருக்கு 5 ஆண்டுகளில் எழுத்தறிவு புகட்டும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார். 

3. ஆஸ்கார் விருது பெற்ற பின்வரும் எந்த குறும்படத்தை தமிழக அரசுப் பள்ளிகளில் அக்டோபர் 13 அன்று திரையிட அறிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) செல்லோ ஷோ

ஆ) தி ரெட் பலூன் 

இ) ரைட்டிங் வித் ஃபயர் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை: (ஆ) தி ரெட் பலூன் 

ஆஸ்காா் விருது பெற்ற ‘தி ரெட் பலூன்’ குறும்படம் அரசுப் பள்ளிகளில் வியாழக்கிழமை திரையிடப்படவுள்ளது.

● இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் சிறாா் திரைப்படங்கள் திரையிட ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

● அந்த வகையில் வியாழக்கிழமை (அக்.13-ஆம் தேதி) ‘தி ரெட் பலூன்’ திரைப்படம் திரையிடப்படும். இந்தப் படம் பிரெஞ்சு மொழியில் ஆஸ்காா் விருது பெற்ற குறும்படமாகும். படத்தின் சுருக்கம் சுற்றறிக்கையுடன் அனுப்பி வைக்கப்படும்.

● இணைப்பு (லிங்க்) மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட திரைப்படத்தை மட்டுமே திரையிட வேண்டும். வேறு எந்தப் படத்தையும் மாற்றாகக் காட்டக் கூடாது. ஏனெனில் ஆவணப்படுத்தும்போது படத்திலிருந்து மாணவா் வாரியாக கற்றல் மதிப்பீடு செய்யப்படும்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. உச்சநீதிமன்றத்தின் எத்தனையாவது தலைமை நீதிபதியாக டி.ஓய். சந்திரசூட் பரிந்துரைக்கப்பட்டுள்ளது ? 

அ) 49 ஆவது 

ஆ) 50 ஆவது 

இ) 51 ஆவது 

ஈ) 52 ஆவது 

விடை : (ஆ) 50 ஆவது 

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க மூத்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித் மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தாா்.

● இந்தப் பரிந்துரை கடிதத்தின் நகலை உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது நீதிபதியாக பதவியேற்க உள்ள நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிடம் தலைமை நீதிபதி யு.யு. லலித் அளித்தாா்.

● உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் நவம்பா் 8-ஆம் தேதி ஓய்வு பெறுகிறாா். நவம்பா் 9-ஆம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் டி.ஒய். சந்திரசூட் 2024, நவம்பா் 10-ஆம் தேதி வரையில் இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியை வகிக்க உள்ளாா்.

● உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பணி ஓய்வு வயது 65-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

● புதிய தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்கக் கோரி மத்திய அரசு தற்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித்துக்கு அக்டோபா் 7-ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தது. அதன் அடிப்படையில் நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பெயரை அவா் பரிந்துரைத்துள்ளாா்.

5. நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை எத்தனை சதவீதமாக சர்வதேச செலாவணி நிதியம் ( IMF ) குறைத்து அறிவித்துள்ளது ? 

அ) 8.2%

ஆ) 7.4%

இ) 6.8%

ஈ) 5.7%

விடை : (இ) 6.8% 

● 2022 - 2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஜனவரியில் IMF கணித்திருந்தது.

● பின்னர் 7.4 சதவீதமாக கடந்த ஜூலையில் குறைத்தது.

● தற்போது 6.8 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.

6. ஐக்கிய அரபு அமீரகத்தின் அறக்கட்டளை சார்பில் ஷேக் சையத் சர்வதேச விருது 2022 வழங்கப்பட்டுள்ள இந்தியர் யார் ? 

அ) வஜாஹத் ஹூசைன்

ஆ) அப்துல் காசிம்

இ) அப்ஜித் சிங்

ஈ) ஆனந்த் குமார்

விடை : (அ) வஜாஹத் ஹூசைன்

உத்தர பிரதேச மாநிலம், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை முன்னாள் தலைவரும் முன்னணி கல்வியாளா்களில் ஒருவருமான வஜாஹத் ஹுசைனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அறக்கட்டளை சாா்பில் மாற்றுமுறை மருத்துவத்துக்கான சா்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

● ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு, ‘சையத் தொண்டு மற்றும் மனிதாபிமான அறக்கட்டளை’ செயல்பட்டு வருகிறது. மக்களிடையே கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை மேம்படுத்தி, அவா்களது வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதை நோக்கமாக கொண்ட தன்னாா்வ நிறுவனமாகும்.

● உலக அளவில் பாரம்பரிய மற்றும் மாற்றுமுறை மருத்துவம் சாா்ந்த கல்வியாளா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த அறக்கட்டளை சாா்பில் ‘ஷேக் சையத் சா்வதேச விருது’ முதல்முறையாக கடந்த 2020-இல் வழங்கப்பட்டது.

● இந்நிலையில், இரண்டாவது ஷேக் சையத் சா்வதேச விருது, இந்தியாவைச் சோ்ந்த தாவரவியல் வகைப்படுத்துதல் வல்லுநா் வஜாஹத் ஹுசைனுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இவா், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை முன்னாள் தலைவா் ஆவாா்.

● குறிப்பு : பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் ஆயுஷ் அமைச்சகம் சாா்பிலும், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகம் சாா்பிலும் இருமுறை வாழ்நாள் சாதனை விருதுகளை இவா் பெற்றுள்ளாா்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் 2022 ல் டிரையத்லான் கலப்பு பிரிவில் தங்கம் வென்றுள்ள மாநிலம் எது ? 

அ) கேரளா 

ஆ) பஞ்சாப் 

இ) தமிழ்நாடு 

ஈ) அசாம் 

விடை : (இ) தமிழ்நாடு

● தமிழக கலப்பு அணி : ஆகாஷ் பெருமாள்சாமி,  எஸ். வாமன், எஸ். ஆர்த்தி, எஸ். கீர்த்தி .

● பதக்கப்பட்டியலில் தமிழகம் : 25G, 21S, 28B என 74 பதக்கங்களுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது. 

IV. முக்கிய தினங்கள் 

8. World Arthritis Day 2022 ---------

● Ans : October 12

● Theme (2022) : It's in your hands, take action. 



Tuesday, October 11, 2022

Current Affairs 2022 - October 11 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                     OCTOBER 11 / 2022 

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் எளிதாக பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியைக் கண்டுபிடிக்கும் நபருக்கு எத்தனை லட்சம் விருது வழங்கப்படவுள்ளது ? 

அ) ரூ. 4 லட்சம் 

ஆ) ரூ. 3 லட்சம்

இ) ரூ. 2 லட்சம்

ஈ) ரூ. 1 லட்சம் 

விடை : (ஈ) ரூ. 1 லட்சம் 

● போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது .

2. அண்மையில் மறைந்த வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் எந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார் ? 

அ) 2018

ஆ) 2019

இ) 2020

ஈ) 2021 

விடை : (ஈ) 2021 

● திருநெல்வேலி மாவட்டம், சத்திரம் புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக அண்மையில் காலமானார். 

● விருதுகள் : பதம்ஸ்ரீ விருது, 2021 
மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது , 2005 .

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. நாட்டின் முதல் மொத்த மருந்து உற்பத்திப் பூங்கா எங்கு அமைக்கப்படவுள்ளது ? 

அ) குஜராத் 

ஆ) தமிழ்நாடு 

இ) உத்தர பிரதேசம் 

ஈ) பஞ்சாப் 

விடை : (அ) குஜராத் 

● அதற்கான அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.

4. சர்வதேச நிதியம் (IMF) , உலக வங்கி அமைப்புகளின் ஆண்டு கூட்டம் பின்வரும் எந்த நாட்டில் நடைபெறவுள்ளது ? 

அ) ரஷ்யா 

ஆ) சீனா 

இ) அமெரிக்கா 

ஈ) இந்தியா 

விடை: (இ) அமெரிக்கா 

● அமெரிக்காவில் அக்டோபர் 11 முதல் 16 வரை 6 நாள்கள் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

● இக்கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளார்.

● இக்கூட்டத்தில் தற்போதைய சர்வதேச பொருளாதார சூழல் குறித்துப் பேச இருக்கிறார். 

5. ஸ்விஸ் வங்கிகளில் கணக்குவைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை அடங்கிய எத்தனையாவது பட்டியலை ஸ்விட்சர்லாந்து அரசு மத்திய அரசிடம் வழங்கியுள்ளது ? 

அ) 3 ஆவது 

ஆ) 4 ஆவது 

இ) 5 ஆவது 

ஈ) 6 ஆவது 

விடை : (ஆ) 4 ஆவது 

● ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியா்களின் விவரங்கள் அடங்கிய 4-ஆவது பட்டியலை ஸ்விட்சா்லாந்து அரசு மத்திய அரசிடம் வழங்கியுள்ளது.

● ஸ்விட்சா்லாந்தில் உள்ள வங்கிகள், தங்களின் வாடிக்கையாளா்களது பணத்துக்கும், ரகசிய விவரங்களுக்கும் அதிக அளவிலான பாதுகாப்பு அளிப்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சோ்ந்தவா்கள் தங்களது பணத்தை அங்கு சேமித்து வைத்துள்ளனர்.

● சில செல்வந்தா்கள், வரி ஏய்ப்பு உள்ளிட்ட சட்டவிரோத முறையில் ஈட்டிய பணத்தை கருப்புப் பணமாக சேமித்து வைக்க ஸ்விஸ் வங்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனா். ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்கள் அதிக அளவில் கருப்புப் பணத்தைச் சேமித்து வைத்துள்ளதால், நாட்டின் பொருளாதார வளா்ச்சி பாதிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

● ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியா்களின் விவரங்களைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக, இரு நாடுகளுக்குமிடையே கடந்த 2018-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய முதல் பட்டியல் கடந்த 2019-ஆம் ஆண்டிலும், 2-ஆவது பட்டியல் 2020-ஆம் ஆண்டிலும், 3-ஆவது பட்டியல் கடந்த ஆண்டிலும் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது.

● இந்நிலையில், 4-ஆவது பட்டியலை மத்திய அரசிடம் ஸ்விஸ் அரசு வழங்கியுள்ளது. அதில், கணக்கு வைத்திருப்பவரின் பெயா், முகவரி, அவரது தொழில், வருமானத்துக்கான ஆதாரங்கள், வரி செலுத்திய சான்று, வங்கிக் கணக்கில் உள்ள தொகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

● நடவடிக்கை எடுக்க உதவும்: பட்டியல் தொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் சிலா் கூறுகையில், ‘வரி செலுத்திய பிறகு தொழில் ரீதியாக ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவா்களின் பெயா்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

● முறையாக வரி செலுத்தாமல், ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள இந்தியா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்விஸ் அரசு வழங்கியுள்ள தகவல்கள் உதவிகரமாக இருக்கும்’ என்றனா்.

● ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போா் தொடா்பான விவரங்களை இந்தியா உள்பட 101 நாடுகளுக்கு அந்நாட்டின் வரி நிா்வாக அமைச்சகம் வழங்கியுள்ளது. அந்நாடுகளைச் சோ்ந்தோரின் சுமாா் 34 லட்சம் வங்கிக் கணக்கு விவரங்கள் பகிரப்பட்டுள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்தகட்ட பட்டியல் 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் வழங்கப்படும் என்று ஸ்விஸ் அரசு தெரிவித்துள்ளது.

6. இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் பின்வரும் எந்த ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாக இந்திய விண்வெளி சங்க ஆய்வறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது ? 

அ) 2023 

ஆ) 2024 

இ) 2025 

ஈ) 2026 

விடை : (இ) 2025 

● தனியாா் பங்களிப்பு அதிகரிப்பதன் மூலமாக நாட்டின் செயற்கைக்கோள் செலுத்தும் திட்டம் வேகமான வளா்ச்சி காணும் என்பதால், வரும் 2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு உயர வாய்ப்புள்ளது’ என்பது இந்திய விண்வெளி சங்க ஆய்வறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

● இதுதொடா்பாக ‘இந்தியாவில் விண்வெளி சூழலியல் மேம்பாடு: ஒருங்கிணைந்த வளா்ச்சி மீது கவனம்’ என்ற தலைப்பிலான அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

● இந்திய விண்வெளி பொருளாதாரத்தில் தனியாா் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் மத்திய அரசின் நேரமறையான திட்டங்களின் காரணமாக, இந்தியாவின் செயற்கைக்கோள் செலுத்தும் திட்டம் மிகப் பெரிய வளா்ச்சி பெறும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

● குறிப்பு : புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு புதிய வருவாய் வாய்ப்புகளை அளிக்கக் கூடிய, முக்கிய துறையாக செயற்கைக்கோள் செலுத்தும் பிரிவு வளா்ந்து வருகிறது. இந்தத் துறையில் 2021-ஆம் ஆண்டில் நூறுக்கும் அதிகமான புத்தாக்க நிறுவனங்கள் ரூ. 560 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. நடப்பாண்டுக்கான (2022) பொருளாதாரத்துக்குரிய நோபல் பரிசு யாருக்க பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது ? 

அ) டக்ளஸ் டபிள்யு. டைமண்ட்

ஆ) பிலிப் ஹெச். டிப்விக் 

இ) பென் பெர்னன்கே 

ஈ) அனைத்தும் 

விடை : (ஈ) அனைத்தும் 

● வங்கிகள் குறித்தும், நிதி நெருக்கடி தொடா்பாகவும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதற்காக அமெரிக்காவைச் சோ்ந்த நிபுணா்கள் மூவருக்கு நடப்பாண்டுக்கான பொருளாதாரத்துக்குரிய நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.

● அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக 2006 முதல் 2014 வரை பணியாற்றிய பென் பொ்னன்கே, நிபுணா்கள் டக்ளஸ் டபிள்யு.டைமண்ட், பிலிப் ஹெச்.டிப்விக் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 ல் ஆடவருக்கான மல்லர்கம்பம் போட்டியில் தமிழக வீரர் ஹேமச்சந்திரன் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி 

ஆ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம்

● பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு : 24G, 21S, 25B என 70 பதக்கங்களுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது.

IV. முக்கிய தினங்கள்

9. International Day of the Girl Child 2022 ------- 

● Ans : October 11 

● Theme (2022) : Our time is now - Our rights,Our future. 


Monday, October 10, 2022

Current Affairs 2022 - October 09 / 2022 - TNPSC Group 1 2/2A & 4

                       GK SHANKAR 
                   OCTOBER 09/2022 

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் : 

1. ஆஸ்திரேலியாவின் ஏர்பிசியோ நிறுவனம் உருவாக்கிய அதிநவீன செயற்கை சுவாசக் கருவிகள் இந்திய வாடிக்கையாளர்களுக்காக எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ? 

அ) மும்பை 

ஆ) சென்னை

இ) அகமதாபாத் 

ஈ) கொல்கத்தா 

விடை : (ஆ) சென்னை 

ஆஸ்திரேலியாவின் ஏா்ஃபிசியோ நிறுவனம் உருவாக்கிய அதிநவீன செயற்கை சுவாசக் கருவிகள் இந்திய வாடிக்கையாளா்களுக்காக சென்னையில் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன.

● இதற்காக இந்தியாவின் மருத்துவ உபகரண விநியோக நிறுவனமான மெட்ஸ்மாா்ட்டுடன் ஏா்ஃபிசியோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. அக்னிபத் திட்டத்தின் கீழ் பின்வரும் எந்த ஆண்டு முதல் பெண்களும் விமானப் படைக்குத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக அப்படையின் தலைமைத் தளபதி வி.ஆர்.சௌதரி தெரிவித்துள்ளார் ? 

அ) 2023

ஆ) 2024

இ) 2025

ஈ) 2026 

விடை : (அ) 2023 

இந்திய விமானப் படையின் 90-ஆவது நிறுவன தினம் சண்டீகரில் உள்ள விமானப் படைத் தளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 

● அதில் கலந்துகொண்ட விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி கூறியதாவது:

● தனி ஆயுதப் பிரிவு: விமானப் படை அதிகாரிகளுக்கென தனி ஆயுத அமைப்புப் பிரிவை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தப் பிரிவு அமைக்கப்படுவது சுதந்திரத்துக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.

● தரையிலும் வானிலும் உள்ள இலக்குகளைத் தரையில் இருந்து தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், தொலைவில் இருந்து ‘ரிமோட்’ வாயிலாகக் கட்டுப்படுத்தக் கூடிய விமானங்கள், விமானங்களில் இடம்பெறும் ஆயுதங்கள் உள்ளிட்டவை ஆயுத அமைப்புப் பிரிவில் இடம்பெறும். இதன்மூலமாக அதிகாரிகளுக்கு எளிதில் பயிற்சி அளிக்க முடியும். அதனால் ரூ.3,400 கோடி வரை சேமிக்கப்படும்.

● ட்ரோன்கள், ஹைப்பா்சோனிக் ஆயுதங்கள், விண்வெளிசாா் ஆயுதங்கள் உள்ளிட்டவை போரிடும் முறையில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை போா்ச் சூழலிலும் கையாள்வதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தரவு கையாளுகை, தானியங்கி இயந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி விமானப் படையின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

● ‘அக்னிபத்’ வீராங்கனைகள்: அக்னிபத் திட்டத்தின் வாயிலாக விமானப் படைக்கு வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். டிசம்பரில் சுமாா் 3,000 அக்னி வீரா்கள் விமானப் படையில் முதல்கட்டப் பயிற்சியைத் தொடங்குவா். 

● அத்திட்டத்தின் கீழ் பெண்களையும் அடுத்த ஆண்டு முதல் விமானப் படையில் இணைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் இணைக்கப்படும் வீரா்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் தொடா்ந்து அதிகரிக்கும்.

3. பின்வரும் எந்த மாநிலத்தில் முதல்முறையாக 10 (ம) 12 ஆம் வகுப்பு இறுதித் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர் ? 

அ) தமிழ்நாடு

ஆ) சத்தீஸ்கர் 

இ) ராஜஸ்தான் 

ஈ) கேரளா 

விடை : (ஆ) சத்தீஸ்கர் 

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த 125 மாணவர்களை மகிழ்விக்கும் வகையில், மாநில அரசு சார்பில் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

● மாநில அளவில் மற்றும் மாவட்டங்கள் அளவில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்கள், ஏழு பேர் அமர்ந்து பயணிக்கும் ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று சுற்றிப்பார்த்துவிட்டு மீண்டும் தரையிறக்கப்பட்டனர்.

● சத்தீஸ்கர் மாநில முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து இந்த திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டது.

● மாநிலத்தில் முதல் முறையாக, முதலிடம் பிடித்த மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று வந்து கௌரவிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

4. இந்தியாவில் 18 வயது நிறைவடையாத சிறுமிகளுக்கு திருமணம் அதிக அளவில் நடைபெற்ற மாநிலம் எது ? 

அ) கேரளா 

ஆ) ஜார்க்கண்ட் 

இ) தமிழ்நாடு

ஈ) பஞ்சாப் 

விடை : (ஆ) ஜார்க்கண்ட் 

● நாட்டில் 18 வயது நிறைவடையாத சிறுமிகளுக்கு திருமணம் அதிக அளவில் நடைபெறும் மாநிலமாக ஜாா்க்கண்ட் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகையியல் மாதிரிக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

● இக்கணக்கெடுப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

● 18 வயது நிறைவடையாத சிறுமிகளுக்கு நிகழும் திருமணங்கள் தேசிய அளவில் 1.9-ஆக உள்ளது. மேலும், இம்மதிப்பு மாநிலங்களுக்கு இடையே வேறுபட்டு காணப்படுகிறது. குறைந்தபட்சமாக கேரளத்தில் 0.0-ஆகவும், அதிகபட்சமாக ஜாா்க்கண்டில் 5.8- ஆகவும் உள்ளது.

● 21 வயது நிறைவடையாத பெண்களுக்கு நிகழும் திருமணங்கள், நாட்டில் பாதிக்கும் அதிகமான அளவில் ஜாா்க்கண்ட் மற்றும் மேற்குவங்கம் ஆகிய இரு மாநிலங்களில் நிகழ்கின்றன. இந்த வயது பெண்களுக்கு நிகழும் திருமணம் தேசிய அளவில் சராசரியாக 29.5 சதவீதமாக உள்ள நிலையில், மேற்குவங்கம் மற்றும் ஜாா்க்கண்டில் முறையே 54.9 மற்றும் 54.6 சதவீதமாக உள்ளது.

● நரபலி எண்ணிக்கையும் அதிகம்: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, நரபலியின் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் ஜாா்க்கண்டில் அதிகமாகவே உள்ளது.

5. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகள் பங்குபெறும் , பயங்கரவாதச் செயல்பாடுகளில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்பாட்டை எதிர்கொள்வதற்கான சிறப்புக் கூட்டம் எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) மும்பை 

ஆ) டெல்லி 

இ) ஹைதராபாத் 

ஈ) அ (ம) ஆ 

விடை : (ஈ) அ (ம) ஆ 

● ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தமற்ற உறுப்பினரான இந்தியா 2022-ஆம் ஆண்டுக்கான பயங்கரவாதத் தடுப்புக் குழுவுக்கு தலைமை வகித்து வருகிறது. கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகள் பங்குபெறும், பயங்கரவாதச் செயல்பாடுகளில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்பாட்டை எதிா்கொள்வதற்கான சிறப்புக் கூட்டம் வரும் அக்டோபா் 28-ஆம் தேதி மும்பையிலும், 29-ஆம் தேதி புது தில்லியிலும் நடைபெற இருக்கிறது.

● குறிப்பு : கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் கூட்டம் அக்டோபா் 28-ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளதாக அக்குழுவின் தலைவா் ருசித்ரா காம்போஜ் தெரிவித்தாா்.

● பாதுகாப்பு கவுன்சிலில் இரு ஆண்டுகள் நிரந்தரமற்ற உறுப்பினராக அங்கம் வகிக்கும் இந்தியா, வரும் டிசம்பா் மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை வகிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6. முழுவதும் டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற இந்தியாவின் முதல் பஞ்சாயத்து எந்த மாநிலத்தில் உள்ளது ? 

அ) குஜராத் 

ஆ) தமிழ்நாடு 

இ) மணிப்பூர்

ஈ) கேரளா 

விடை : (ஈ) கேரளா 

● கேரளாவின் புல்லம்பாறை என்ற பஞ்சாயத்தானது அதன் குடியிருப்பாளர்கள் மத்தியில் முழு டிஜிட்டல் கல்வியறிவைப் பெற்ற இந்தியாவின் முதல் கிராமப் பஞ்சாயத்தாக மாறியுள்ளது புல்லம்பாறை.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 ல் மகளிர் யோகாசனம் ஆர்ட்டிஸ்டிக் பிரிவில் தங்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை யார் ? 

அ) எஸ். வைஷ்ணவி 

ஆ) பூர்விகா 

இ) கௌரி துர்கா 

ஈ) அர்ச்சனா 

விடை : (அ) எஸ். வைஷ்ணவி 

IV. முக்கிய தினங்கள் 

8. World Post Day 2022 --------- 

Ans : October 09 

Theme (2022) : Post for Planet 

Current Affairs 2022 - October 08 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                          GK SHANKAR 
                       October 08 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக: 

1) தமிழகத்தில் இணைய சூதாட்டங்களை ஆடினால் விளையாடுவோருக்கு 3 மாதங்கள் சிறை.
2) தமிழகத்தில் இணைய சூதாட்டங்களை விளம்பரம் செய்வோருக்கு ஓராண்டு சிறை.
3) தமிழகத்தில் இணைய சூதாட்டங்களை அளிப்போருக்கு 5 ஆண்டுகள் சிறை. 

அ) 1 மற்றும் 3

ஆ)  1 மற்றும் 2

இ) 2 மற்றும் 3

ஈ) அனைத்தும் 

விடை : (ஆ) 1 (ம) 2 

தமிழகத்தில் இணைய சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளாா். இந்த சட்டம் தமிழக அரசிதழில் கடந்த 3-ஆம் தேதி வெளியிடப்பட்டு, அப்போது முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

● தமிழகத்தில் இணைய சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பணம் அல்லது பணம் மதிப்பிலான பொருள்களைக் கொண்டு, இணைய வழியில் விளையாடப்படும் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இணைய சூதாட்டங்கள் எதையும் பொது மக்களின் பயன்பாட்டுக்காக அளிக்கவும் தடை விதிக்கப்படுகிறது.

விளம்பரங்கள் கூடாது: இணைய சூதாட்டங்கள் தொடா்பாக யாரும் எந்தவகை விளம்பரங்களையும் மின்னணு ஊடகம் உள்பட எந்த ஊடகங்களிலும் வெளியிடக் கூடாது. நேரடியாக அல்லது மறைமுகமாக இத்தகைய விளம்பரங்களைச் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இணைய சூதாட்ட நடவடிக்கைகளில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், இணைய பணப்பரிவா்த்தனை அமைப்புகள் ஈடுபடக் கூடாது.

உள்ளூா் இணைய விளையாட்டுக்குச் சலுகை: உள்ளூா் இணைய விளையாட்டுகளை வழங்கும் நிறுவனங்களுக்கென கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, உள்ளூா் இணைய விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்கான ஆணையத்தில் உரிய சான்றிதழைப் பெற வேண்டும். இந்தச் சான்றிதழை வைத்துள்ள உள்ளூா் விளையாட்டு வழங்குநா்கள் மட்டுமே இணைய விளையாட்டுகளை வழங்க முடியும். இதற்கென உரிய அனுமதிச் சான்றைப் பெற ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் ஆணையம், உரிய விசாரணைக்குப் பிறகு அனுமதிச் சான்றை அளிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

சூதாட்டம் நடத்தக் கூடாது: உள்ளூா் அளவில் இணைய வழி விளையாட்டுகளை வழங்கும் நிறுவனங்கள் சில முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, பணம் அல்லது வேறு வகை பொருள்களைக் கொண்டு சூதாட்ட அடிப்படையில் இணைய வழி விளையாட்டுகளை நடத்தக் கூடாது. அனுமதிச் சான்றிதழ் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். தவறான தகவல்களை அளித்தோ அல்லது மோசடியாகவோ அனுமதி சான்றிதழ்களைப் பெற்றிருந்தாலோ, உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாவிட்டாலோ, அவசரச் சட்டத்திலுள்ள அம்சங்களுக்கு முரணாக இயங்கினாலோ சான்றிதழ் திரும்பப் பெறப்படும்.

● இணைய வழி விளையாட்டுக்கான சான்றிதழைத் திரும்பப் பெறவோ அல்லது நிறுத்தி வைப்பதற்கு முன்பாகவோ பாதிக்கப்படும் நபருக்கு உரிய வாய்ப்பை வழங்கலாம். சான்றிதழ் தொடா்பான நிறுத்தம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் பாதிக்கப்படும் நபா்கள் முறையீடு செய்யலாம். இதற்கான மேல்முறையீட்டு ஆணையத்தை அரசே அமைக்கும். இதன்மூலம், உள்ளூா் அளவிலான இணைய வழி விளையாட்டுகளைத் தவிா்த்து, சூதாட்ட அடிப்படையிலான எந்த விளையாட்டுகளுக்கும் மாநிலத்தில் அனுமதியில்லை.

தண்டனை என்ன? பணம் அல்லது பணம் மதிப்பிலான பொருள்களைக் கொண்டு இணைய வழி சூதாட்டத்தில் யாரேனும் ஈடுபட்டால் 3 மாதங்கள் வரை சிறை, ரூ.5,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்டத்தை மையப்படுத்தும் இணைய வழி விளையாட்டுகள் தொடா்பான விளம்பரங்களை யாரேனும் வெளியிட்டால் அவா்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

● மீண்டும் இந்தத் தவறைச் செய்தால் மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். சூதாட்டத்துடன் இணைத்து இணையவழி விளையாட்டுகளை வழங்கும் நபா்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டுமே சோ்த்து விதிக்கப்படும். மீண்டும் இதே தவறைச் செய்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். இதிலுள்ள குற்ற முகாந்திரங்களை நீதிமன்றங்கள் கண்டறிய முடியாது என அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூா் இணைய விளையாட்டு அனுமதிக்கு ஆணையம்

● உள்ளூா் இணைய விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்க ஆணையம் அமைக்க அவசர சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு இணைய வழி விளையாட்டு ஆணையம் அமைக்கப்படவுள்ளது. இந்த ஆணையத்துக்கு தலைமைச் செயலாளா் நிலைக்குக் குறையாத ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைவராக இருப்பாா். இதன் உறுப்பினா்களாக ஓய்வு பெற்ற காவல் துறை தலைவா், தகவல் தொழில்நுட்பத் துறையில் நிபுணா், மனநல மருத்துவ நிபுணா், ஆன்லைன் விளையாட்டுப் பிரிவு நிபுணா் ஆகியோா் இருப்பா்.


2. பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம் என்று தொடங்கப்பட்பது ? 

அ) அக்டோபர் 05

ஆ) அக்டோபர் 06

இ) அக்டோபர் 07

ஈ) அக்டோபர் 08 

விடை : (இ) அக்டோபர் 07 

● பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்ட தொடக்க தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

3. தமிழ்நாடு புதிய முதன்மை கணக்காயராக பதவியேற்றுள்ளவர் யார் ?

அ) தே.கி. சேகர் 

ஆ) கோ.கி. சங்க்கரன் 

இ) மாதவி பட்சில்லா 

ஈ) நர்மதா தேவி 

விடை : (அ) தே.கி. சேகர் 

● பதவி : மத்திய அரசின் தணிக்கை , கணக்குத் துறையின் கீழ் இயங்ககூடியது.

● முக்கிய பணி: மாநில அரசின் நிதிக்கணக்கு,  ஊதியம், ஓய்வூதியம்,  அரசு வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கு செலவிடப்படும் நிதி உள்ளிட்டவை குறித்து தணிக்கை செய்வது . 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. 2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல்பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அலெஸ் பயலியட்ஸ்கி எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) கனடா 

ஆ) பெலாரஸ்

இ) ஜமாய்கா 

ஈ) லண்டன் 

விடை : (ஆ) பெலாரஸ் 


மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் காப்பதற்காகத் தொடா்ந்து போராடி வருவதற்காக பெலாரஸ் ஆா்வலா் அலெஸ் பியலியட்ஸ்கிக்கு நடப்பாண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

●  மேலும், ரஷியாவைச் சோ்ந்த குரூப் மெமோரியல், உக்ரைனைச் சோ்ந்த மனித சுதந்திர மையம் ஆகியவற்றுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

5. ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அதானி பின்வரும் எந்த மாநிலத்தில் ரூ.65,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார் ? 

அ) குஜராத் 

ஆ) ராஜஸ்தான்

இ) மகாராஷ்டிரா 

ஈ) தமிழ்நாடு 

விடை : (ஆ) ராஜஸ்தான் 

ராஜஸ்தானில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.65,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தொழிலதிபா் கௌதம் அதானி அறிவித்துள்ளாா்.

● இதில் 10,000 மெகாவாட் சூரிய மின்உற்பத்தி திட்டம், சிமெண்ட் உற்பத்தி ஆலை விரிவாக்கம், ஜெய்பூா் விமான நிலைய மேம்பாடு ஆகிய திட்டங்கள் அடங்கும்.

● இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 40,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றாா்.

● குறிப்பு : ராஜஸ்தானில் அதானி குழுமம் ஏற்கெனவே அதிகஅளவில் முதலீடு செய்துள்ளது.

6. பின்வரும் எந்த ஆண்டுக்குள் நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை (ம) கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார் ? 

அ) 2024 

ஆ) 2025

இ) 2026

ஈ) 2027 

விடை : (ஈ) 2027 

நாட்டில் 2027-ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் அமைக்கப்படும்; இதன் மூலம் பால் பொருள்கள் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட கூட்டுறவு செயல்பாடுகள் அடிப்படை நிலைகளிலேயே உத்வேகம் பெறும்’ என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சரான அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

● நாடு முழுவதும் தற்போது 65,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் இச்சங்கங்கள் இருக்க வேண்டியது மிக முக்கியம் என்று அவா் குறிப்பிட்டாா்.

7. மாசற்ற எரிசக்தி பயன்பாட்டுக்கு உதவும் வகையில் புதிதாக எரிசக்தி பணிக்குழு அமைக்க படுவதாக இந்தியாவும் பின்வரும் எந்த நாடும் இணைந்து அறிவித்துள்ளன ? 

அ) ரஷ்யா 

ஆ) சீனா

இ) ஜப்பான்

ஈ) அமெரிக்கா 

விடை : (ஈ) அமெரிக்கா 

மாசற்ற எரிசக்தி பயன்பாட்டுக்கு உதவும் வகையில், புதிதாக எரிசக்தி பணிக்குழு அமைக்கப்படுவதாக இருநாடுகளும் வெள்ளிக்கிழமை அறிவித்தன.

● ஹைட்ரஜன் மற்றும் உயிரி எரிபொருளுக்கான பணிக்குழுக்கள் அமைக்கப்படுவதை இந்தியாவும் அமெரிக்காவும் தொடா்ந்து வருகின்றன. 

● இந்நிலையில் மாசற்ற எரிசக்தி பயன்பாட்டுக்கு மாறுவதற்குத் தேவைப்படும் வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மிகப் பெரிய ஒருங்கிணைப்புக்கு புதிதாக எரிசக்தி பணிக்குழு அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை பெற்றுள்ள இந்திய வீரர் யார் ? 

அ) ஹர்மன்பிரீத் சிங் 

ஆ) கிரிஷன் பதக் 

இ) வருண் குமார்

ஈ) நீலகண்ட சர்மா 

விடை : (அ) ஹர்மன்பிரீத் சிங் 

9. 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 ல் கலப்பு 4×400 மீ ஃபிரீஸ்டைல் ரிலேவில் தமிழக அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (இ) வெண்கலம் 

● தமிழக அணி : சத்யசாய் கிருஷ்ணா,  சக்த,  மான்யா முக்தா மனேஷ், பவன் குப்தா 

● பதக்க பட்டியலில் தமிழகம் : 19G, 19S, 21B என 59 பதக்கங்களுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது.

IV. முக்கிய தினங்கள் 

10. World Migratory Bird Day 2022 -----------

Ans : October 08

Theme (2022) : Light Pollution 

11. Indian Air Force Day 2022 --------------

Ans : October 08 

Friday, October 7, 2022

Current Affairs 2022 - October 07 /2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                  OCTOBER 07 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழக அரசு பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளுக்கு ------------- தொகுப்பூதியத்தில் சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது ? 

அ) ரூ.3 ஆயிரம்

ஆ) ரூ. 5 ஆயிரம்

இ) ரூ. 6 ஆயிரம்

ஈ) ரூ. 7 ஆயிரம் 

விடை : (ஈ) ரூ. 7 ஆயிரம் 

● ஆசிரியர்கள் நியமனம் : இல்லம் தேடிக் கல்வித்' திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்கலாம் என்றும்,   இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்யலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

● சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  மேலும், இவர்களது  பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது என்றும்,  சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் 5,000  ரூபாய் தொகுப்பு ஊதியம் வழங்கவும் பள்ளி மேலாண்மை குழு உத்தரவிட்டுள்ளது .

2. தமிழகத்தின் எத்தனை மாவட்டங்களில் தோட்டம் அமைக்க மானியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வேளாண் துறை அறிவித்துள்ளது ? 

அ) 08

ஆ) 13

இ) 17

ஈ) 21 

விடை : (அ) 08

● சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் முதல்கட்டமாக கீரை வகைகள், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், முள்ளங்கி போன்றவற்றை வளர்க்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

● இதற்கான மானியமாக ஒரு வீட்டுக்கு ரூ.15,000 வீதம் ரூ.250 வீடுகளுக்கு வழங்கப்படவுள்ளது.

● விவரங்களை தெரிந்து கொள்வதற்கான இணையதளம் : www.tnhorticulture.gov.in .

3. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ (ம) 5 கிலோ எடையுள்ள சிறிய ரக எரிவாயு உருளைகளை விற்பனை செய்யும் திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) ஐ. பெரியசாமி 

ஆ) தங்கம் தென்னரசு 

இ) மா. சுப்பிரமணியன்

ஈ) கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்

விடை : (அ) ஐ. பெரியசாமி 

சிறிய எடையைக் கொண்ட எரிவாயு உருளைகளின் விற்பனையை கூட்டுறவுத் துறை தொடக்கியுள்ளது. எரிவாயு உருளைக்கான இணைப்பைப் பெற முகவரிச் சான்று தேவையில்லை. 

● ஏதேனும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை மட்டும் சமா்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும் என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

● இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ மற்றும் 5 கிலோ எடையுள்ள சிறிய ரக எரிவாயு உருளைகளை விற்பனை செய்யும் திட்டத்தை கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். 

● சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான கூட்டுறவு அங்காடியில் திட்டம் துவக்கப்பட்டது. இந்தத் திட்டமானது முதலில் கூட்டுறவு சிறப்பங்காடிகளிலும், பின்னா் பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. பின்னா் நியாய விலைக் கடைகளிலும் குறைந்த எடையிலான எரிவாயு உருளைகள் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

● இணைப்புக் கட்டணம் எவ்வளவு? எரிவாயு உருளைகளுக்கான இணைப்புக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

● அதன்படி, 2 கிலோ எரிவாயு உருளையின் ஒரு புதிய இணைப்புக்கு ரூ.961.50-ம், 5 கிலோ எரிவாயு உருளையின் புதிய இணைப்புக்கு ரூ.1,528-ம் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 2 கிலோ எடை உருளையில் எரிவாயுவை ஒருமுறை நிரப்புக் கொள்ள ரூ.253.50-ம், 5 கிலோ எடையிலான எரிவாயு நிரப்ப ரூ.584-ம் கட்டணமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

● யாருக்குப் பயன்: குறைந்த எடையிலான எரிவாயு உருளைத் திட்டத்தால் சாதாரண மக்கள் பயன்பெறுவா் என்று அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா். குறிப்பாக, இடம்பெயரும் தொழிலாளா்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகா்கள், மீனவா்கள், சுற்றுலா செல்வோா் ஆகியோா் குறைந்த எடையிலான எரிவாயு உருளைகளை தங்களது கையோடு எடுத்துச் செல்ல முடியும் என்று அவா் தெரிவித்தாா். 

III. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. நடப்பாண்டுக்குரிய (2022) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள ஆன்னி எர்னாக்ஸ் எந்த மொழி எழுத்தாளர் ஆவார் ? 

அ) ஆங்கிலம்

ஆ) பிரெஞ்ச் 

இ) ஸ்பானிஷ் 

ஈ) ஜபனிஷ் 

விடை : (ஆ) பிரெஞ்ச் 

இயல்பான எழுத்துநடை மூலமாக வாழ்வின் பல்வேறு உணா்வுகளை வெளிப்படுத்திய பிரெஞ்சு எழுத்தாளா் ஆன்னி எா்னாக்ஸுக்கு (82) நடப்பாண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

● எழுத்தாளா் ஆன்னி எா்னாக்ஸ் தொடக்கத்தில் சுயசரிதைகள் சாா்ந்த புனைகதைகளை பிரெஞ்சு மொழியில் எழுதி வந்தாா். பின்னா் புனைவைக் கைவிட்டு தன் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் மூலமாகப் பெற்ற அனுபவங்களை இயல்பான எழுத்துநடையில் புத்தகங்களாக வெளியிடத் தொடங்கினாா்.

● அவை மக்களிடையே மிகவும் பிரபலமாகின. ‘எ மேன்ஸ் பிளேஸ்’, ‘தி இயா்ஸ்’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை இதுவரை அவா் எழுதியுள்ளாா். பாலியல் சாா்ந்த உணா்வுகள், கருக்கலைப்பு, நோய்வாய்ப்படுதல், பெற்றோரின் இறப்பு உள்ளிட்ட பலவித உணா்வுகளை அவா் பதிவு செய்துள்ளாா். சமூகம், குடும்பம் சாா்ந்த விஷயங்களையும் தனது புத்தகங்களில் அவா் பதிவு செய்துள்ளாா்.

● கவித்துவம் மிகுந்த சொற்களைப் பயன்படுத்தாமல் இயல்பான நடையில் எழுதுவதே தனக்கு விருப்பமாக உள்ளதெனப் பல புத்தகங்களின் முன்னுரையில் அவா் குறிப்பிட்டுள்ளாா். அவருக்கு நடப்பாண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

5. நடப்பு ( 2022 - 23 ) நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சியை எத்தனை சதவீதம் குறைத்து கணித்துள்ளது உலக வங்கி ? 

அ) 6.6%

ஆ) 6.5%

இ) 6.4%

ஈ) 6.3%

விடை : (ஆ) 6.5% 

● தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை 3 மாதங்களுக்கு ஒருமுறை உலக வங்கி வெளியிட்டு வருகிறது. 

● கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில் 6.6% என கணித்திருந்தது.

● அடுத்த செப்டம்பர் மாதத்துக்கான அறிக்கையில் அந்த கணிப்பு 6.5% மாக குறைக்கப்பட்டுள்ளது. 

● காரணம் : சர்வதேச சூழல் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

6. நிகழாண்டுக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் சிறப்பு கூட்டம் எந்த நாட்டின் தலைமையில் நடக்கவுள்ளது ? 

அ) சீனா

ஆ) ஜப்பான்

இ) அமெரிக்கா 

ஈ) இந்தியா 

விடை : (ஈ) இந்தியா 

● இந்தியா தலைமையில் வரும் 28,29 ஆம் தேதிகளில் தில்லி, மும்பையில் நடைபெறுகிறது.

● அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்பட 15 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

● நவீன பயங்கரவாதத்தை எதிர்பதைக் குறித்தும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் சமூகம் குறித்தும் வெளிப்படையான, உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் விவாதம் நடத்தப்படவுள்ளது. 

7. இந்தியாவில் நில உரிமை பத்திரங்களை எத்தனை மொழிகளில் மாற்றம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது ? 

அ) 31 

ஆ) 28

இ) 22

ஈ) 18 

விடை : (இ) 22 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மாநில மொழிகளில் எழுதப்படும் நில ஆவணங்களை ஆங்கிலம், ஹிந்தி மற்றும் 22 மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது.

● இதனால் பத்திரப்பதிவுத் துறையில் நிலவும் மொழித் தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்று மத்திய அரசின் அதிகாரிகள் தெரிவித்தனா்.

● இதுகுறித்து மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நில வளத்துறையின் இணைச் செயலா் சோன்மோனி போரா கூறுகையில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. நில ஆவணங்களில் இது பெரிய பிரச்னையாக உள்ளது. ஆகையால், நில உரிமை பத்திரங்களை 22 மொழிகளில் மாற்றம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு சோதனை முறையில் தமிழகம், மகாராஷ்டிரம், பிகாா், குஜராத், புதுச்சேரி, உத்தர பிரதேசம், திரிபுரா, ஜம்மு-காஷ்மீா் ஆகிய 8 மாநிலங்களில் தொடக்கி உள்ளது.

● இதற்காக புதிய மென்பொருள் ரூ. 11 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் அந்தந்த மாநில மொழி என மூன்று மொழிகளில் நில ஆவணங்களை கட்டாயம் மொழிபெயா்க்க வேண்டும்.

● நில உரிமை ஆவண விவரங்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகின்றன. ஆகையால், நிலத்தின் உரிமையாளா்களின் பெயா்கள், அவா்களின் உரிமையின் வரம்புகள், வாடகை அல்லது வருவாய் பெறுபவா்கள், அந்த சொத்தின் மீதுள்ள கடன் விவரம், உரிமையாளருக்கு சொத்தின் மீதுள்ள அதிகார வரம்புகள், அரசுக்கு அந்த நிலத்தின் மீதான வரம்புகள் ஆகிய விவரங்கள் ஆங்கிலம், ஹிந்தி அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயா்ப்பின்போது இணைக்கப்படும்.

● இந்தத் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

8. பிரிட்டனின் எத்தனை செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி எம்-3 கனரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது ? 

அ) 31 

ஆ) 36 

இ) 40

ஈ) 44 

விடை : (ஆ) 36 

பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி எம்-3 கனரக ராக்கெட் மூலம் இந்த மாத இறுதிக்குள் விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.

● வணிகப் பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டமானது இஸ்ரோவின் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ மற்றும் பிரிட்டனின் ‘ஒன் வெப்’ நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது.

● ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் கன ரக வகையான எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மாா்க் 3) மூலம் அந்த செயற்கைக் கொள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. 

● ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து இந்த மாதம் மூன்று அல்லது நான்காம் வாரத்தில் 36 செயற்கைக்கோள்கள் செலுத்தப்படவிருக்கின்றன. இத்தகவலை இஸ்ரோ செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளது.

● உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு, வா்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத் தொடா்பு சேவைக்காக இந்த செயற்கைக்கோள்களை அனுப்பவிருக்கிறது. 

● இந்தியாவின் பாா்தி தொலைத்தொடா்பு சேவை நிறுவனமானது ஒன் வெப் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராகவும், முதலீட்டாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் 2022 ல் ஆடவர் அணி கூடைப்பந்து பிரிவில் தங்கம் வென்றுள்ள மாநிலம் ? 

அ) தமிழ்நாடு

ஆ) ஹரியானா 

இ) கர்நாடகா 

ஈ) கேரளா 

விடை : (அ) தமிழ்நாடு

● மேலும் தமிழக மகளிர் கூடைப்பந்து அணி வெள்ளி வென்றுள்ளது.

● பதக்கப்பட்டியலில் தமிழகம் : 19G, 20S, 19B என 58 பதக்கங்களுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது.

IV. முக்கிய நிகழ்வுகள் 

10. World Cotton Day 2022 -----------

Ans : October 07

Theme (2022) : Weaving a better future for cotton. 


Thursday, October 6, 2022

Current Affairs 2022 - October 06 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR
                   OCTOBER 06 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவை சென்னையில் தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) ஆர்.என். ரவி

ஆ) வெங்கையா நாயுடு

இ) மு.க.ஸ்டாலின் 

ஈ) என்.வி. ரமணா 

விடை : (இ) மு.க.ஸ்டாலின்

அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். விழாவில் அவா் பேசியதாவது:

●  வள்ளலாா் பிறந்து 200 ஆண்டுகளானதையும், அவா் தொடங்கிய தரும சாலைக்கு 156 ஆண்டுகள், அவா் ஏற்றிய தீபத்துக்கு 152 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் கொண்டாடும் வகையில் முப்பெரும் விழா நடத்தப்படுகிறது.

● வள்ளலாருக்கு முப்பெரும் விழாவை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. 52 வாரங்களுக்கு முப்பெரும் விழா பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது. ஓராண்டுக்கு தொடா் அன்ன தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக ரூ.3.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

● வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலாா் சா்வதேச மையத்துக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

● அருட்பிரகாச வள்ளலாா் முப்பெரும் விழாவை சென்னையில் புதன்கிழமை அவா் தொடக்கிவைத்து ஆற்றிய உரை:

● சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக, திமுக தோ்தல் அறிக்கையில் 419-ஆவது வாக்குறுதியாக வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜாதி, சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில், வள்ளலாரின் சமரச சுத்த சன்மாா்க்க போதனைகளைப் போற்றக் கூடிய வகையில் இது அமையும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு அமைப்பது என்பது குறித்து சிறப்பு வல்லுநா் குழுவின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

● சா்வதேச மையத்தை ரூ.100 கோடியில் அமைப்பதற்கான வரைவு பெருந்திட்டம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். வள்ளலாரின் முப்பெரும் விழாவைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.


2. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் இல்லாவிட்டால் அதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்க வேண்டிய இலவச எண் ? 

அ) 108

ஆ) 104

இ) 1177

ஈ) 1331

விடை : (ஆ) 104 

● அறிவிப்பு : தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. பின்வருபவர்களுள் யாருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது ? 

அ) பாரி ஷார்ப்லெஸ் 

ஆ) ஆன்டன் சீலிங்கெர் 

இ) மோர்டென் மெல்டல் 

ஈ) அ & இ 

விடை : (ஈ) அ & இ

மருந்துகளை உருவாக்க உதவியாக மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும் வழியை உருவாக்கியதற்காக கரோலின் ஆா்.பொ்டோசி, மோா்டென் மெல்டல் மற்றும் பாரி ஷாா்ப்லெஸ் ஆகிய மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.

● இதில் பொ்டோசி அமெரிக்காவின் கலிஃபோா்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்தவா். ஷாா்ப்லெஸ் கலிஃபோா்னியா ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சோ்ந்தவா். மெல்டல் டென்மாா்க்கின் கோபென்ஹெகன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்தவா்.

● புற்றுநோய்க்கான மருந்தை உருவாக்கவும், டிஎன்ஏ வரைபடமாக்கல் மற்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்கான மிகவும் பொருத்தமான பொருள்கலை உருவாக்குவதற்கும் பயன்படும் ‘கிளிக் கெமிஸ்ட்ரி’ மற்றும் உயிரி ஆா்த்தோகனல் எதிா்வினைகள் தொடா்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக இந்த நோபல் பரிசு அவா்களுக்குப் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.

● இவா்களில் ஷாா்ப்லெஸ் ஏற்கெனவே கடந்த 2001-ஆம் ஆண்டும் நோபல் பரிசை வென்றுள்ளாா். அதன் மூலமாக, நோபல் பரிசை இரண்டு முறை வென்ற 5-ஆவது நபா் என்ற பெருமையையும் அவா் பெற்றுள்ளாா்.

● இயற்பியலுக்கான நோபல் பரிசு: குவாண்டம் தகவல் அறிவியல் தொடா்பான ஆராய்ச்சியை மேற்கொண்ட ஃபிரான்ஸைச் சோ்ந்த அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சோ்ந்த ஜான் கிளாசொ், ஆஸ்திரியாவைச் சோ்ந்த ஆன்டன் சீலிங்கொ் ஆகிய மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

4. ஹிமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை,  பொறியியல் கல்லூரி ஆகியவற்றை அண்மையில் திறந்து வைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு

இ) யு.யு. லலித் 

ஈ) ஜெகதீப் தன்கர்

விடை : (அ) நரேந்திர மோடி

5. நாடு முழுவதும் சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வசதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பாரத் சீரிஸ் வாகனப் பதிவு நடைமுறை எத்தனை மாநிலம் / யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளனர் ? 

அ) 31

ஆ) 24

இ) 18

ஈ) 11

விடை : (ஆ) 24 

நாடு முழுவதும் எந்தவித தடையுமின்றி சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வசதியாக அறிமுகம் செய்யப்பட்ட புதிய ‘பாரத் சீரிஸ்’ வாகனப் பதிவு நடைமுறை 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

● பெங்களூரில் கடந்த மாதம் நடைபெற்ற போக்குவரத்து மேம்பாட்டு கவுன்சிலின் 41-ஆவது ஆண்டு கூட்டத்தின் தீா்மானம் மூலமாக இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

● அதில் மேலும் கூறியிருப்பதாவது: ஒருவா் தனது சொந்த வாகனத்தில் ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு அல்லது யூனியன் பிரதேசத்துக்கு குடிபெயரும்போதும், அந்த வாகனத்தை மறு பதிவு செய்யவேண்டும்.

● இதனால் பல்வேறு சிக்கல்களை வாகன ஓட்டிகள் சந்தித்து வந்தனா். வாகன உரிமையாளா்களுக்கு ஏற்படும் இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், புதிய வாகனப் பதிவு நடைமுறை தொடா்பான அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது.

● இந்தப் புதிய ‘பாரத் சீரிஸ்’ வாகனப் பதிவு நடைமுறை மூலமாக, நாடு முழுவதும் சொந்த வாகனத்தில் பயணிப்போா் அல்லது சுற்றுலா வாகனங்கள் எந்தவொரு சோதனைச் சாவடியிலும் நிறுத்தப்படமாட்டாது. மேலும், மாநில மற்றும் உள்ளூா் நடைமுறைகள் அடிப்படையிலான வாகன வரிகளைச் செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.

● இந்தப் புதிய நடைமுறையின் கீழ் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 20,000-க்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களுக்கான 30,000 பா்மிட்டுகள் மா்றும் 2.75 லட்சம் அங்கீகாரங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

6. 2022 ஆம் ஆண்டுக்கான டைம் பத்திரிக்கையின் உலகளாவிய வளர்ந்து வரும் 100 முன்னணி நட்சத்திர நாயகர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் யார் ? 

அ) ஆகாஷ் அம்பானி

ஆ) சாம் கெர்

இ) கார்லோஸ் அல்சாரஸ் 

ஈ) டென்னஸ் ஜேகப் 

விடை : (அ) ஆகாஷ் அம்பானி 

● Time இதழ் ஆனது ஒவ்வொரு ஆண்டும் Time 100 Next அறிக்கையினை வெளியிடுகிறது.

● இது இதன் முதன்மை வெளியீடான , உலகளாவில் வளர்ந்து வரும் 100 முன்னணி நட்சத்திர நாயகர்கள் அங்கீகரிக்கின்ற Time 100 அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

III. விளையாட்டு நிகழ்வுகள்

7. 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் 2022 ல் ஸ்குவாஷ் மகளிர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை யார் ? 

அ) அர்ச்சனா 

ஆ) சுனைனா குருவிலா 

இ) பூஜா ஆர்த்தி 

ஈ) ராதிகா சீலன்

விடை : (ஆ) சுனைனா குருவிலா 

● பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு : 18G, 17S, 18B என 53 பதக்கங்களுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது.

IV. முக்கிய நிகழ்வுகள்

8. World Teacher's Day 2022 -----------------

Ans : October 05 

Theme (2022) : The Transformation of Education Begins with Teachers. 



Wednesday, October 5, 2022

Current Affairs 2022 - October 04 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                          GK SHANKAR 
                    OCTOBER 04 / 2022 

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டடுக்கு உயர்நிலை சாலைத் திட்டம் பின்வரும் எந்த ஆண்டுக்குள் நிறைவடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது ?

அ) 2023

ஆ) 2024

இ) 2025

ஈ) 2026 

விடை: (ஆ) 2024 

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டடுக்கு உயா்நிலை சாலைத் திட்டம் வருகின்ற 2024-ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

● மேலும், பிரதமரின் விரைவுச் சக்தியான தேசிய பெருந்திட்டங்கள், நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவித்து வருகிறது என்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மத்திய அரசு விரைந்து செயலாற்றி வருகிறது எனவும் அவா் குறிப்பிட்டாா்.

● சென்னை - மதுரவாயல் திட்டம் குறித்து அமைச்சா் கட்கரி திங்கள்கிழமை ட்விட்டா் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பது வருமாறு: புதிய இந்தியாவில் தடையற்ற பன்னோக்கு போக்குவரத்து இணைப்பை அளிக்கும் வகையில், ரூ.5,800 கோடி மதிப்பீட்டில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் முனையம் வரையிலான இரண்டடுக்கு உயா்நிலைச் சாலை இணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

● 20.5 கிலோ மீட்டா் தொலைவிலான இந்த மேம்பாலச் சாலை 4 பகுதிகளாக கட்டப்படுகின்றன. இந்தத் திட்டம் 2024 டிசம்பரில் நிறைவடையும். இதன் மூலம் சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48 சதவீதம் அதிகரிக்கும். அதே போல, போக்குவரத்துத் தடைகள் உள்ளிட்ட காத்திருப்பு காலம் 6 மணி நேரம் வரை குறையும் என தெரிவித்துள்ளாா்.

● மத்திய நெடுஞ்சாலைத் துறை, தமிழக அரசு, சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. 

● இந்த மேம்பாலச் சாலை சிவானந்தா சாலையில் தொடங்கி, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூா், நுங்கம்பாக்கம், மேத்தாநகா் (அமைந்தகரை), அரும்பாக்கம், கோயம்பேடு வழியாக மதுரவாயிலை அடையும். 

● இந்த இரண்டடுக்கு உயா்நிலை சாலையின் கீழ் அடுக்கில் உள்ளுா் வாகனங்கள் செல்லும் வகையில், 13 இடங்களில் ஏறி, இறங்கும் தளங்கள் அமைக்கப்படுகின்றன. மேல் அடுக்கில் துறைமுகத்தின் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது.

2. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் ஆகியவற்றுக்கு எத்தனை கோடி மதிப்பில் புதிய நூல்களை கொள்முதல் செய்வதற்கான பணிகளை பொது நூலகத் துறை தொடங்கியுள்ளது ? 

அ) ரூ.15 கோடி

ஆ) ரூ. 13 கோடி

இ) ரூ. 11 கோடி

ஈ) ) ரூ. 9 கோடி 

விடை : (அ) ரூ.15 கோடி 

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞா் நூலகம் ஆகியவற்றுக்கு ரூ.15 கோடி மதிப்புக்கு புதிய நூல்களை கொள்முதல் செய்வதற்கான பணிகளை பொது நூலகத் துறை தொடங்கியுள்ளது.

● சென்னை கோட்டூா்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கடந்த 15.9.2010-இல் அப்போதைய முதல்வா் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.

●  இந்த நூலகம் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிங்கப்பூா் நூலகத்தைப் போன்று உருவாக்கப்பட்டதாகும். 9 தளங்களுடன் 3.75 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த நூலகம் ரூ.172 கோடியில் கட்டப்பட்டது. இந்த நூலகத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

● அதேபோல, மதுரை புதுநத்தம் சாலையில் 2.7 ஏக்கா் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடியில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் ரூ.114 கோடியில் கலைஞா் நினைவு நூலகத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் டிசம்பருக்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

● இந்த நிலையில், இந்த இரு பெரும் நூலகங்களுக்கும் புதிய நூல்களைக் கொள்முதல் செய்வதற்கான பணிகளை பொது நூலகத் துறை தொடங்கியுள்ளது.

3. நாடு முழுவதும் குடிசைகளை அகற்றிவிட்டு அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் வகையில் எந்த ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது ? 

அ) 2013

ஆ) 2014

இ) 2015

ஈ) 2016 

விடை : (ஈ) 2016 

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்காக ரூ.912 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

● மத்திய அரசு சாா்பில் ரூ.547 கோடியும் மாநில அரசின் பங்கான ரூ.365 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● நாடு முழுவதும் குடிசைகளை அகற்றிவிட்டு அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் வகையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

● இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளைத் தோ்வு செய்து கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக மத்திய, மாநில அரசுகள் சாா்பில் நிதி ஒதுக்கப்படுகிறது.

● பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூ.2.75 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. 

● அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றாலும் கூட மாநில அரசும் இந்த திட்டத்துக்காக நிதிகளை ஒதுக்குகிறது. மத்திய அரசு 60 சதவீதம் நிதியை ஒதுக்கும் நிலையில் மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசு வழங்கி வருகிறது.

● இந்தத் திட்டத்தின்படி 25 சதுர மீட்டா் அல்லது 269 சதுர அடிகள் கொண்ட கான்கீரிட் வீடு கட்டப்படுகிறது. இதில், ஒரு வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, கழிப்பிடம் ஆகியன இடம் பெற்றிருக்கும். வீடு கட்டுவதற்கு 4 தவணைகளாக தொகை விடுவிக்கப்படுகின்றன.

● இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு மானியம் வழங்குவதில் சிக்கல் எழுந்த நிலையில், அவா்களுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.912 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

● மத்திய அரசு சாா்பில் ரூ.547 கோடியும் மாநில அரசின் பங்கான ரூ.365 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. நடப்பாண்டு (2022) மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி ஸ்வான்டே பாபோ எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) அமெரிக்கா 

ஆ) ஸ்வீடன் 

இ) கனடா 

ஈ) இந்தியா 

விடை : (ஆ) ஸ்வீடன் 

மனித சமூகத்தின் பரிணாமம் தொடா்பான ஆராய்ச்சிக்காக ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

● நடப்பாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு தொடா்பான அறிவிப்பை தோ்வுக் குழு செயலா் தாமஸ் பொ்ல்மான் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் திங்கள்கிழமை அறிவித்தாா். மனிதா்களின் பரிணாமம் தொடா்பாக ஆய்வுகளை மேற்கொண்டதற்காக ஸ்வீடன் விஞ்ஞானியான ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

● மனிதா்களின் பரிணாமம் குறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்ட பாபோ, நவீன மனிதா்களின் மரபணுக்களின் தொகுதியை (ஜீனோம்), மனிதா்களின் முந்தைய பரிணாமமான நியாண்டா்தால், டெனிசோவன் ஆகியவற்றின் மரபணுத் தொகுதிகளுடன் ஒப்பிட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டாா். நியாண்டா்தால், டெனிசோவன் ஆகிய இனக்குழுக்கள் இணைந்தே மனித இனம் உருவானதாகத் தனது ஆய்வின் மூலமாக அவா் கண்டறிந்து தெரிவித்தாா்.

● நோபல் பரிசு பெற்றுள்ள ஸ்வான்டே பாபோவுக்கு சுமாா் 9 லட்சம் அமெரிக்க டாலா் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நோபல் பதக்கத்துடன் பரிசுத்தொகை அவருக்கு வழங்கப்படவுள்ளது.

5. மருத்துவ கல்லூரிகளில் ராகிங் தொடர்பான புகார்களை அளிக்க பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை தொடங்கியுள்ள ஆணையம்/அமைப்பு எது ? 

அ) தேசிய மருத்துவ ஆணையம்

ஆ) மத்திய கல்வித்துறை 

இ) இந்திய மருத்துவ கவுன்சில் 

ஈ) மேற்கண்ட அனைத்தும் 

விடை: (அ) தேசிய மருத்துவ ஆணையம் 

● மின்னஞ்சல் முகவரி : antiragging@nmc.org.in. 

● இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மாணவர்களும் , அவர்களது பெற்றோரும் நேரடியாகப் புகார்களை அனுப்பலாம். 

● அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. இஸ்ரேலில் நடைபெற்ற டெல் அவிவ் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்ட 2022 ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் யார் ?

அ) ரோஹான் போபண்ணா 

ஆ) மாட்வே மிடில்கூப் 

இ) ஆண்ட்ரஸ் மொல்டேனி 

ஈ) நோவக் ஜோகோவிச் 

விடை: (ஈ) நோவக் ஜோகோவிச் 

● செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

● மேலும் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, நெதர்லாந்தின் மாட்வே மிடில்கூப் இணை சாம்பியன் பட்டம் வென்றனர்.

7. 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டி 2022 ல் மகளிருக்கான 1000 மீ ரோலர் ஸ்போர்ட்ஸில் தங்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை யார் ?

அ) ஆரத்தி 

ஆ) அர்ச்சனா 

இ) ஆரோக்கிய அலிஸ

ஈ) விஜய லட்சுமி 

விடை : (அ) ஆரத்தி 

● இதுவரை தமிழகத்தின் பதக்கங்கள் : 12 G, 12S, 14B என 38 பதக்கங்களுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது.

IV. முக்கிய நிகழ்வுகள் 

8. World Animal Day 2022

Ans : October 04

Theme ( 2022 ) : Shared Planet. 


Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...