Showing posts with label Current Affairs May 2022. Show all posts
Showing posts with label Current Affairs May 2022. Show all posts

Sunday, May 29, 2022

Current Affairs 2022 - May 29 - TNPSC Group 2/2A & Group 4

1. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் அமல்படுத்தப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ,இதைத் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது ?

அ) 31
ஆ)13
இ) 20
 ஈ) 25

2. இந்தியாவின் எந்த மாநில அரசு நாட்டின் மிகப்பெரிய தங்க இருப்பு குறித்த ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ளது ?

அ) பிகார்
ஆ) தமிழ்நாடு
இ) ஆந்திர பிரதேசம்
ஈ) குஜராத்

3. அண்மையில் ஒரே நாடு ஒரு மருத்துவ நடைமுறை என்ற தலைப்பிலான மாநாடு எங்கு நடைபெற்றது ?

அ) மத்திய பிரதேசம்
ஆ) உத்தர பிரதேசம்
இ) தமிழ்நாடு
ஈ) குஜராத்

4. 75 வது சர்வதேச திரைப்பட விழாவில் தங்கக் கண் விருது
பெற்ற இந்திய இயக்குநர் யார் ?

அ) அக்னியெஸ்கா 
ஆ) நதீம்
இ) மந்தாஸ் குவேதரவிசி 
ஈ) ஷௌனக் சென்

5. இந்தியாவில் எங்கு நாட்டின் முதல் லாவெண்டர் திருவிழாவை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்துள்ளார் ? 

அ) ஜம்மு காஷ்மீர் 
ஆ) உத்தர கரண்ட்
இ) ராஜஸ்தான்
ஈ) கேரளா

6. இங்கிலாந்தின் முதல் தலித் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி யார் ?

அ) கிரேசியா ராம்
ஆ) ஜூலி பிரிட்னி
இ) மொஹிந்தர் கே மிதா 
ஈ) கென்யா பிரிட்டி 

7. சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழி எழுத்தாளர் யார் ? 

அ) டெய்சி ராக்வெல்
ஆ) ரத்தினா பிரியா
இ) தரேகா ராவ்
ஈ) கீதாஞ்சலி ஸ்ரீ

விடைகளும் / விளக்கமும்

1. (இ) 20

¤ தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம், 1998 .
¤ 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் அமைப்புகள் திருத்தச் சட்டம் 2022 விரைவில் அமல்படுத்தப்பட்டள்ளது.
¤ இதற்கான புதிய விதிகள் (ம) துணை விதிகளை உருவாக்க குழுக்கள் அமைத்து நகராட்சி நிர்வாக ஆணையர் பி. பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

2. (அ) பிகார்

¤ பிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் நாட்டின் மிகப்பெரிய தங்க இருப்பு குறித்த ஆய்வுக்கு அனுமதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது .
¤ இந்த முதல்கட்ட ஆய்வுக்கென மத்திய அரசு நிறுவனங்கள் அல்லது பிற அமைப்புகளுடன் ஒரு மாத காலத்துக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மாநில அரசு முடிவு செய்துள்ளது.

3. (அ) மத்திய பிரதேசம்

¤ போபால், மத்திய பிரதேசத்தில் ஆரோக்கிய பாரதி சார்பில் நடைபெற்றது.
¤ மாநாட்டில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.
¤ உலகின் மருத்துவச் சுற்றுலா மையமாக இந்தியா உருவெடுத்துவருகிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.

4. (ஈ) ஷௌனக் சென்

¤ 75 வது சர்வதேச திரைப்பட விழா , கேன்ஸ் நகர், பிரான்ஸில் நடைபெற்றது .
¤ ஆல் தேட் பிரீத்ஸ் என்ற ஆவணப்படத்துக்காக தங்க கண் விருது வழங்கப்பட்டுள்ளது.
¤ படத்தின் கரு : தில்லியை சேர்ந்த நதீம் , சவூத் ஆகிய இரு சகோதரர்கள் புலம்பெயர்த்து வரும் பருந்து உள்ளிட்ட பறவைகளை காற்று மாசு பாட்டிலிருந்து பாதுகாப்பது ஆகும் .

5. (அ) ஜம்மு காஷ்மீர்

¤ தோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வா இந்தியாவின் ஊதா புரட்சியின் பிறப்பிடமாகும். தோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வாவை இந்தியாவின் ஊதா புரட்சியின் பிறப்பிடமாக அமைச்சர் விவரித்தார்.
¤ இறக்குமதி செய்யப்பட்ட நறுமண எண்ணெய்களிலிருந்து உள்நாட்டு ரகங்களுக்குச் செல்வதன் மூலம் உள்நாட்டு நறுமணப் பயிர் சார்ந்த வேளாண் பொருளாதாரத்தை ஆதரிப்பதே இந்த பணியின்
 நோக்கமாகும். ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிட்டத்தட்ட அனைத்து 20 மாவட்டங்களிலும் லாவெண்டர் சாகுபடி நடைமுறையில் உள்ளது.

6. (இ) மொஹிந்தர் கே மிதா 

¤  இங்கிலாந்தில் ஈலிங் நகரசபை மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த தலித் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்திய வம்சாளியை சேர்ந்த மொகிந்தர் மிதா இங்கிலாந்தில் எதிர்கட்சியாக செயல்படும் தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். தற்போது ஈலிங் கவுன்சிலில் உள்ள டோர்மர் வெல்ஸ் வார்டில் துணை மேயராக இருக்கும் இவர், லண்டனில் கடந்த 5ம் தேதி நடந்த நகரசபை தேர்தலில் இக்கட்சியின் சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
¤ இது குறித்து தொழிலாளர் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ``கவுன்சிலர் மொகிந்தர் மிதா ஈலிங் நகரசபை மேயராக அடுத்தாண்டு தேர்ந்தெடுக்கப்பட்டதை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறோம். அவர் வரும் 2022-23ம் ஆண்டில் மேயராக பொறுப்பேற்பார்,’’ என்று கூறப்பட்டுள்ளது.

7. (ஈ) கீதாஞ்சலி ஸ்ரீ

¤ இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ இலக்கியத்திற்காக வழங்கப்படும் புகழ்வாய்ந்த சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச புக்கர் பரிசை வெல்லும் முதல் இந்திய மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
¤ அவரது நாவலான 'ரெட் சமாதி' (Ret Samadhi) என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'டூம் ஆஃப் சாண்ட்'க்கு (Tomb of Sand) இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு குடும்பக் கதை இது. இந்நாவல், கணவர் இறந்த பிறகு வாழும் 80 வயதான ஒரு பெண்ணைப் பின்தொடர்கிறது.
¤ 50,000 பவுண்ட் பரிசுத்தொகை அடங்கியது சர்வதேச புக்கர் பரிசாகும். இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் இருந்து தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்தி மொழி புத்தகமும் இதுவேயாகும்.¤ "புக்கர் பரிசு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் இதனை வெல்வேன் என நினைக்கவில்லை," என கீதாஞ்சலி ஸ்ரீ தெரிவித்துள்ளார். "இது பெரிய அங்கீகாரம். மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் பணிவாகவும் உணர்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

Saturday, May 28, 2022

Current Affairs 2022 - May 28 - TNPSC Group 2/2A & Group 4

1. தமிழகத்தில் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தவர் யார் ?

அ) வெங்கையா நாயுடு 
ஆ) நரேந்திர மோடி
இ) சோனியா காந்தி
 ஈ) மு.க. ஸ்டாலின்

2. தமிழகத்தில் ஆண்டுக்கு எத்தனை நாட்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது ?

அ) ஐந்து
ஆ) ஏழு
இ) மூன்று
ஈ) ஆறு 

3. தமிழக காவல்துறை , தீயணைப்புத்துறை , சிறைத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த எத்தனை பேருக்கு பதக்கங்கள் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது ?

அ) 313
ஆ) 275
இ) 322
 ஈ) 401

4. வங்கதேசம் உருவாவதற்கு காரணமான இந்தியா - பாகிஸ்தான் போர் எந்த ஆண்டு ஏற்பட்டது ?

அ) 1971
ஆ) 1994
இ) 1998
 ஈ) 1985

5. பாரத் ட்ரோன் மஹோத்சளவ் 2022 என்ற மிகப்பெரிய ட்ரோன் திருவிழா எங்க தொடங்கப்பட்டுள்ளது ?

அ) டெல்லி
ஆ) உத்தர பிரதேசம்
இ) தமிழ்நாடு
ஈ) குஜராத்

6. தமிழகத்தில் எத்தனை மாவட்ட பழங்குடியின மக்களுக்கு ரூ.17 கோடியில் அடிப்படைவசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது ?

அ) 31
ஆ) 13
இ) 15
ஈ) 11

7. நாடு முழுவதும் கடந்த 2020 ல் அதிக சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ள மாநிலம் எது ?

அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திர பிரதேசம் 
இ) உத்தர பிரதேசம்
ஈ) கேரளா

8. அண்மையில் எந்த நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளது ?

அ) அமெரிக்கா
ஆ) ஆப்பிரிக்கா
இ) இந்தியா
ஈ) ரஷ்யா

9. செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான ஆர். பிரக்ஞானந்தா வென்றுள்ள இடம் ?

அ) முதலாவது
ஆ) இரண்டாவது
இ) மூன்றாவது
ஈ) நான்காவது

10. உலகம் முழுவதும் 20 நாடுகளில்
எத்தனை பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது ?

அ) 100
ஆ) 1000
இ) 200
ஈ) 2000

11. உலக மாதவிடாய் சுகாதார தினம் ( World Menstrual Hygiene Day ) 2022 ? 

அ) மே 26
ஆ) மே 27
இ) மே 29
ஈ) மே 28

விடைகள் : 

1. (அ) வெங்கையா நாயுடு

¤ துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
¤ சிலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
¤ சிலை மீஞ்சூரில் உள்ள சிற்பக் கூடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
¤ ரூ. 1.56 கோடி செலவில் , 16 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட அந்த சிலையை வைப்பதற்காக 12 அடி உயர பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

2. (ஈ) ஆறு

¤ ஆறு நாட்கள் :
ஜனவரி 26 - குடியரசு தினம்
மார்ச் 22 - உலக தண்ணீர் தினம்
மே 01 - உழைப்பாளர் தினம்
ஆகஸ்டு 15 - சுதந்திர தினம்
அக்டோபர் 02 - காந்தி ஜெயந்தி
நவம்பர் 01 - உள்ளாட்சிகள் தினம் 

3. (இ) 322

¤ பதக்கங்கள் : 
குடியரசுத் தலைவர் பதக்கங்கள்
மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள்
தமிழ்நாடு முதல்வர் பதக்கங்கள்
¤ பதக்கங்கள் வழங்கியவர் : முதல்வர் மு.க. ஸ்டாலின்.

4. (அ) 1971

¤ 1971, இந்தியா - பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக இந்தியா கேட்டில் வைக்கப்பட்டிருந்த தலைகீழாக வைத்த அமர் ஜவான் சின்னமான துப்பாக்கி (ம) தலைக் கவசம் தேசிய போர் நினைவிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
¤ இந்தியா கேட்டில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் தேசிய போர் நினைவிடம் உள்ளது.

5. (அ) டெல்லி

¤ தில்லி , பிரகதி மைதானத்தில் இரண்டு நாள் நடைபெறவுள்ளது.
¤ தொடங்கி வைத்தவர் : பிரதமர் நரேந்திர மோடி.

6. (ஈ) 11

¤ 11 மாவட்டங்கள்: 
திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி.
¤ இதற்காக ரூ. 17 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
¤ இந்த நிதியை கொண்டு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது .

7. (அ) தமிழ்நாடு 

¤ இந்தியாவில் 2020 ல் பதிவான சாலை விபத்துகள் என்ற தலைப்பில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் .
¤ மொத்தமாக : 3,66,138 சாலை விபத்துகள்.
¤ 1,20,806 பேர் பலி ; 3,48,279 பேர் காயமடைந்தவர்கள்.
¤ அதிக சாலை விபத்துகள் முதலிடம் - தமிழகம் (45,484).
¤ அதிக உயிரிழப்புகள் முதலிடம் - உத்தரபிரதேசம் (19,149).

8. (ஆ) ஆப்பிரிக்கா

¤ பெரு, ஆப்பிரிக்காவில் ஆஸாங்கரோ நகருக்கு 13 கி.மீ. தொலைவில் , 218 கி.மீ. ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
¤ ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் 7.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9. (ஆ) இரண்டாவது

¤ ஆர். பிரக்ஞானந்தா , தமிழ்நாடு( 52 வது கிராண்ட்மாஸ்டர் , 2018 ).
¤ இறுதிச்சுற்றில் உலகின் 2 ஆம் நிலை வீரரான டிங்லிரென,சீனா இடம் தோல்வி கண்டு இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

10. (இ) 200

¤ அறிவிப்பு : உலக சுகாதார அமைப்பு.
¤ இந்த தீநுண்மி வேகமாக பரவும் வகையில் தன்னை உருமாற்றம் செய்ததாகத் தெரியவில்லை .
¤ தடுப்பூசி (ம) மருந்துகளே இந்த நோயைக் கட்டுப்படுத்திவிடும்.

11. (ஈ) மே 28

இன்று உலக மாதவிடாய் சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2022 ஆண்டுக்கான இந்த தினம் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான நடைமுறைகளை வழங்கவும் உலக மாதவிடாய் சுகாதார தினம் மே 28 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
¤ Theme : Making Menstruation a normal fact of life by 2030 .
  


Thursday, May 26, 2022

Current Affairs - May 26 / 2022 -TNPSC Group 2/2A & Group 4

1. இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) அபிலாஷா பாரக்
ஆ) ஆஷா சிங்
இ) அனிஷா பேகம்
ஈ) ரோகினி குப்தா 

2. தமிழகத்தில் எத்தனை கோடி மதிப்பிலான மத்திய அரசின் 5 பதிய திட்டங்களை பிரதமர் மோடி (may 26 ) தொடங்கி வைக்கிறார் ? 

அ) ₹28,000
ஆ) ₹29,000
இ) ₹35,000
 ஈ) 50,000 

3. ஓய்வூதியதாரருக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை எத்தனை ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ?

அ) இரண்டு
ஆ) மூன்று 
இ) நான்கு
ஈ) ஏழு

4. இந்தியாவின் எந்த மாநில அரசு தீயை அணைக்க ரோபோக்களை பயன்படுத்தும் தனித்துவமான முயற்சியை மேற்கொண்டுள்ளது ?

அ) குஜராத்
ஆ) டெல்லி
இ) தமிழ்நாடு
ஈ) கேரளா

5. உலக விமான சக்தி குறியீட்டில் மொத்த போர் வலிமையின் அடிப்படையில்  இந்திய விமானப்படை (IAF) பிடித்துள்ள இடம் ?

அ) முதலாவது
ஆ) இரண்டாவது
இ) மூன்றாவது
ஈ) நான்காவது

6. செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள முதல் இந்திய வீரர் ?

அ) அனீஷ் கிரி
ஆ) கார்ல்சென்
இ) ஆர். பிரக்ஞானந்தா
ஈ) சங்க்கரன்

7. ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போதைய தரவரிசையில் ஆல்ரவுண்டர்கள் பிரிவில் முதலிடத்தில் உள்ளவர் ? 

அ) ரவீந்திர ஜடேஜா
ஆ) ரவிச்சந்திரன் அஸ்வின்
இ) ஜஸ்பிரீத் புத்ரா
ஈ) கே.எல்.ராகுல்

8. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் 700 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் யார் ? 

அ) ஷீகர் தவான்
ஆ) டேவிட் வார்னர்
இ) விராட் கோலி
ஈ) கே.எல். ராகுல்

9. National Sorry Day ( தேசிய மன்னிப்பு நாள் ) 2022 ? 

அ) மே 25
ஆ) மே 24
இ) மே 27 
ஈ) மே 26 

விடைகளும் / விளக்கமும்

1. (அ) அபிலாஷா பாரக் 

¤ இந்திய போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
¤ இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் .
¤ கடந்த 2018 , செப்டம்பர் மாதம் விமானப் படையில் சேர்ந்தார்.

2. (ஆ) ₹29,000 கோடி 

¤ தொடங்கப்படவுள்ள 5 திட்டங்கள்
1) மதுரை - தேனி( 75 கி.மீ )  இடையேயான அகல ரயில் பாதை
மதிப்பு : ₹500 கோடி.
2) சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு (30 கி.மீ) மூன்றாவது ரயில் பாதை 
மதிப்பு : ₹590 கோடி.
3) நிறைவேற்றப்பட்டுள்ள 115 கி.மீ நீளமுள்ள எண்ணூர் - செங்கல்பட்டு பிரிவு ( ₹850 கோடியில் ) மற்றும்
4) 271 கி.மீ. நீளமுள்ள திருவள்ளூர் - பெங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டங்கள் .
5) பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ₹116 கோடி மதிப்பீட்டில் சென்னையில் கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளை திறந்து வைக்கிறார்.

¤ மேலும் : ₹28,500 மதிப்பீட்டில் 6 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார் .

3. (இ) நான்கு

¤ அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டமானது மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஜூலை 01,2022 - ஜூன் 30, 2026 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

4. (ஆ) டெல்லி 

¤ நோக்கம் : அதிக அணுகளைக் கொண்டிருக்கும் (ம) குறுகிய பாதைகளில் செல்லவும் , மனிதர்களால் அணுக முடியாத இடங்களை அடையும் (ம)  மக்களுக்கு மிகவும் ஆபத்தான பணிகளைச் செய்யவும் முடியும் .

5. (இ) மூன்றாவது 

¤ இந்திய விமானப்படை (IAF) தற்போது 1,645 மொத்த விமானங்களை அதன் செயலில் உள்ள விமானப் பட்டியலில் கொண்டுள்ளது.

6. (இ) ஆர். பிரக்ஞானந்தா

¤ இப்போட்டியில் இந்த நிலைக்கு முன்னேறிய முதல் இந்தியர்.
¤ ஆர். பிரக்ஞானந்தா , தமிழ்நாடு.
¤ இவர் 52 வது (2018) கிராண்ட்மாஸ்டர் ஆவார்.

7. (அ) ரவீந்திர ஜடேஜா 

¤ ஆல்ரவுண்டர்கள் பிரிவு ( இந்திய அணி ) : 
2nd - ரவிச்சந்திரன் அஸ்வின்
¤ பௌலர்கள் பிரிவு ( இந்திய அணி ) : 
அஸ்வின் - 2nd 
ஜஸ்பிரீத் பும்ரா - 3rd
¤ பேட்டர்கள் பிரிவு (இந்திய அணி): 
ரோஹித் சர்மா - 8 வது
விராட் கோலி - 10 வது

8. (அ) ஷீகர் தவான்

¤ பஞ்சாப் அணியின் வீரர்( 701 பவுண்டரிகள் ) .
¤ அவரை தொடர்ந்து - டேவிட் வார்னர் ( 577 ) & விராட் கோலி ( 576 பவுண்டரிகள் ) .

9. (ஈ) மே 26 

¤ 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் பூர்வீக மக்களின சிறுவர்களையும் குழந்தைகளையும் பெற்றோரிடமிருந்து பிரித்துவிட வழி செய்தது. அந்த சிறுவர்களும் குழந்தைகளும் திருடப்பட்ட தலைமுறையினர் என்று அறியப்படுகிறார்கள். அவர்களை நினைவு கூரவும் பூர்வீக மக்கள் தவறாக நடத்தப்பட்டதை உணர்த்தவும், 1998 ஆம் ஆண்டு முதல் மே 26ம் நாள் தேசிய மன்னிப்பு தினமாக அவதானிக்கப்படுகிறது.
அவர்களது வீட்டுக்குத் திரும்பவைப்போம் (Bringing Them Home) என்ற அறிக்கை, 1997ம் ஆண்டு மே 26ம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  திருடப்பட்ட தலைமுறைகளுக்கும் பூர்வீக மற்றும் டோர்ரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு சமூகங்களுக்கும் மற்றைய ஆஸ்திரேலியர்கள் மத்தியிலும் மே 26ம் நாளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பெருகிக் கொண்டு வருகிறது.


 
 

Sunday, May 22, 2022

TNPSC DAILY CURRENT AFFAIRS - MAY 22 2022

1. இந்தியாவின் எந்த மாநிலம் பேருந்து நிலையம் , சந்தை வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் துணிப்பை (மஞ்சப்பை) வழங்கும் இயந்திரங்களை 
நிறுவ திட்டமிட்டுள்ளது ? 

அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) பஞ்சாப்
ஈ) ஆந்திர பிரதேசம் 

2. தமிழகத்தில் எங்கு புதிய வகை கரோனா வைரஸான பிஏ-4 ன் (BA-4) முதல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது ?

அ) செங்கல்பட்டு 
ஆ) சேலம்
இ) திருச்சி
ஈ) மதுரை 

3. தமிழகத்தில் எங்கு 16 வது தேசிய நெல் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது ?

அ) ஆத்தூர்
ஆ) தருமபுரி
இ) செங்கல்பட்டு
ஈ) திருத்துறைப்பூண்டி

4. பஹ்ரைனில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டி 2022 ல் இந்தியா மொத்தமாக வென்றுள்ள பதக்கங்கள் ?

அ) 25
ஆ) 23 
இ) 31 
 ஈ) 41 

5. தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை ( 2 ம் நிலை ) போட்டி 2022 ல் காம்பவுண்ட் ஆடவர் பிரிவில் இந்திய வென்றுள்ள பதக்கம் ?

அ) ஏதுமில்லை 
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) தங்கம் 

6. சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை நாள் ( International Day for Biological Diversity ) என்று அனுசரிக்கப்படுகிறது ? 
 
அ) மே 21
ஆ) மே 23
இ) மே 22
ஈ) மே 20 

விடைகளும் / விளக்கமும் 

1. (ஆ) தமிழ்நாடு 

▪︎தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளின் உபயோகத்தை தடுக்கும் வகையில் பேருந்து நிலையம் , சந்தை வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் துணிப்பை (மஞ்சப்பை) வழங்கும் இயந்திரங்களை நிறுவ தமிழக சுற்றுச்சூழல் துறை திட்டமிட்டுள்ளது.
▪︎ நோக்கம் : மக்களுக்கு எளிதாக துணிப்பைகள் கிடைக்கும் வகையில் நிறுவப்படவுள்ளது .
ஒரு பைக்கு எவ்வளவு தொகை என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
 குறிப்பு : மக்கள் அன்றாட பயன்படுத்தும் நெகிழிப் பைகள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம்  அண்மையில் தொடங்கப்பட்டது.

2. (அ) செங்கல்பட்டு 

▪︎ செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் உள்ள ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது ( அவர்கள் தற்போது நலமாக உள்ளனர் ) 
▪︎ உலகம் முழுவதும் பிஏ-1 முதல் பிஏ-7 வரையிலான கரோனா வைரஸ்கள் பரவிக்கொண்டிருக்கின்றன.
▪︎ அதில் பிஏ-1 - பிஏ-2 வரை வைரஸ்கள் தமிழகத்தில் பரவி வருகின்றது . 
▪︎ அறிவிப்பு : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் .

3. (ஈ) திருத்துறைப்பூண்டி

▪︎ 16 வது ஆண்டாக நடைபெறும் 2 நாள் தேசிய நெல் திருவிழா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மே 21 அன்று தொடங்கப்பட்டது.
▪︎ தமிழர்கள் பாரம்பரியமாக சாகுபடி செய்து, பின்னர் வழக்கத்திலிருந்து மறைந்துபோன நெல் ரகங்களை மீட்டுப் பாதுகாக்கவும் , விவசாயிகளிடத்தில் பரவலாக்கவும் இவ்விழா நடைபெறுகிறது .
▪︎ விருதுகள் : 
சிறந்த விவசாயிகளுக்கு மறைந்த நம்மாழ்வார் , நெல் ஜெயராமன் ஆகியோரின் பெயர்களின் விருதுகள் வழங்கப்பட்டது .
பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதைநெல்களும் வழங்கப்பட்டது.
மேலும் இதில் பாரம்பரிய நெல் ரகங்கள் , அரிசி வகைகள் (ம) பல்வேறு கைவினைப் பொருட்கள் , வேளாண் இயந்திரங்கள் அடங்கிய கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
▪︎ திருவிழாவை ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் நடத்தியுள்ளது.

4. (ஆ) 23 
▪︎ பஹ்ரைனில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டி 2022 
▪︎ பதக்கங்களின் பட்டியல் : 
7 தங்கம் , 3 வெள்ளி , 13 வெண்கலம்
▪︎ இதுவரை இந்தியர்கள் மொத்தமாக வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 500 ஐ கடந்துள்ளது.

5. (ஈ) தங்கம் 

 ▪︎ காம்பவுண்ட் ஆடவர் அணி பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா , அமன் சைனி , ரஜத்சௌஹான் அணி தங்கம் வென்றுள்ளது.
▪︎ மொத்தம் ஆறு பதக்கங்கள் : 
காம்பவுண்ட் பிரிவு : 1G , 2S , 2B
ரீகர்வ் பிரிவு : 1B
குறிப்பு : இதே அணி முதல்நிலை போட்டியிலும் தங்கம் வென்றுள்ளது.

6. (இ) மே 22 

▪︎ சில மனித நடவடிக்கைகள் காரணமாக உயிரியல் பன்முகத்தன்மையில் கணிசமான குறைவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் மே 22 அன்று உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினத்தை கொண்டாடுகிறது.
▪︎ Theme : Building a Shared Future for all life .

தமிழகத்தில் புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது (BA - 4 Virus ) !

தமிழகத்தில் புதிய வகை கரோனா வைரஸான பிஏ-4 ன் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

■ செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் உள்ள ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது ( அவர்கள் தற்போது நலமாக இருக்கிறார்கள் ).

 ■ உலகம் முழுவதும் பிஏ-1 முதல் பிஏ-7 வரையிலான கரோனா வைரஸ்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. 

■ அதில் பிஏ-1 முதல் பிஏ-2 வரை வைரஸ்கள் தமிழகத்தில் பரவி வருகின்றன . தற்போது பிஏ-4 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

■ அறிவிப்பு : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். 

Tuesday, May 17, 2022

இந்தியாவின் புகை இல்லாத முதல் மாநிலம் ! - Himachal Pradesh

▪︎இமாச்சலப் பிரதேசம் மாநிலமானது, அனைவருக்கும் LPG இணைப்பினை வழங்கிய முதல் மாநிலமாகவும் புகை இல்லாத முதல் மாநிலமாகவும் மாறியுள்ளது.

▪︎மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் மற்றும் கிரஹினி சுவிதா யோஜனா ஆகியவற்றின் காரணமாக இந்தச் சாதனை எட்டப்பட்டது.

▪︎மாநிலத்தினைப் புகை இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காக உஜ்வாலா திட்டம் மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

▪︎கிராமப்புறப் பெண்களுக்கு உதவும் வகையில் கிரஹினி சுவிதா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Monday, May 16, 2022

National Dengue Day - May 16 , 2022


▪︎In India , the National Dengue Day is                Observed  every year on 16 May.

▪︎The day is an initiative by the Ministry of  Health and Family Welfare, to raise                awareness about dengue and its preventive  measures, and preparedness for the control of the Vector - borne disease before the          transmission season begins.

▪︎Dengue is spread through the bite of the female mosquito ( Aedes aegypti ) .

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...