Friday, October 7, 2022

Current Affairs 2022 - October 07 /2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                  OCTOBER 07 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழக அரசு பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளுக்கு ------------- தொகுப்பூதியத்தில் சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது ? 

அ) ரூ.3 ஆயிரம்

ஆ) ரூ. 5 ஆயிரம்

இ) ரூ. 6 ஆயிரம்

ஈ) ரூ. 7 ஆயிரம் 

விடை : (ஈ) ரூ. 7 ஆயிரம் 

● ஆசிரியர்கள் நியமனம் : இல்லம் தேடிக் கல்வித்' திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்கலாம் என்றும்,   இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்யலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

● சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  மேலும், இவர்களது  பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது என்றும்,  சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் 5,000  ரூபாய் தொகுப்பு ஊதியம் வழங்கவும் பள்ளி மேலாண்மை குழு உத்தரவிட்டுள்ளது .

2. தமிழகத்தின் எத்தனை மாவட்டங்களில் தோட்டம் அமைக்க மானியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வேளாண் துறை அறிவித்துள்ளது ? 

அ) 08

ஆ) 13

இ) 17

ஈ) 21 

விடை : (அ) 08

● சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் முதல்கட்டமாக கீரை வகைகள், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், முள்ளங்கி போன்றவற்றை வளர்க்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

● இதற்கான மானியமாக ஒரு வீட்டுக்கு ரூ.15,000 வீதம் ரூ.250 வீடுகளுக்கு வழங்கப்படவுள்ளது.

● விவரங்களை தெரிந்து கொள்வதற்கான இணையதளம் : www.tnhorticulture.gov.in .

3. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ (ம) 5 கிலோ எடையுள்ள சிறிய ரக எரிவாயு உருளைகளை விற்பனை செய்யும் திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) ஐ. பெரியசாமி 

ஆ) தங்கம் தென்னரசு 

இ) மா. சுப்பிரமணியன்

ஈ) கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்

விடை : (அ) ஐ. பெரியசாமி 

சிறிய எடையைக் கொண்ட எரிவாயு உருளைகளின் விற்பனையை கூட்டுறவுத் துறை தொடக்கியுள்ளது. எரிவாயு உருளைக்கான இணைப்பைப் பெற முகவரிச் சான்று தேவையில்லை. 

● ஏதேனும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை மட்டும் சமா்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும் என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

● இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ மற்றும் 5 கிலோ எடையுள்ள சிறிய ரக எரிவாயு உருளைகளை விற்பனை செய்யும் திட்டத்தை கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். 

● சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான கூட்டுறவு அங்காடியில் திட்டம் துவக்கப்பட்டது. இந்தத் திட்டமானது முதலில் கூட்டுறவு சிறப்பங்காடிகளிலும், பின்னா் பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. பின்னா் நியாய விலைக் கடைகளிலும் குறைந்த எடையிலான எரிவாயு உருளைகள் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

● இணைப்புக் கட்டணம் எவ்வளவு? எரிவாயு உருளைகளுக்கான இணைப்புக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

● அதன்படி, 2 கிலோ எரிவாயு உருளையின் ஒரு புதிய இணைப்புக்கு ரூ.961.50-ம், 5 கிலோ எரிவாயு உருளையின் புதிய இணைப்புக்கு ரூ.1,528-ம் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 2 கிலோ எடை உருளையில் எரிவாயுவை ஒருமுறை நிரப்புக் கொள்ள ரூ.253.50-ம், 5 கிலோ எடையிலான எரிவாயு நிரப்ப ரூ.584-ம் கட்டணமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

● யாருக்குப் பயன்: குறைந்த எடையிலான எரிவாயு உருளைத் திட்டத்தால் சாதாரண மக்கள் பயன்பெறுவா் என்று அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா். குறிப்பாக, இடம்பெயரும் தொழிலாளா்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகா்கள், மீனவா்கள், சுற்றுலா செல்வோா் ஆகியோா் குறைந்த எடையிலான எரிவாயு உருளைகளை தங்களது கையோடு எடுத்துச் செல்ல முடியும் என்று அவா் தெரிவித்தாா். 

III. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. நடப்பாண்டுக்குரிய (2022) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள ஆன்னி எர்னாக்ஸ் எந்த மொழி எழுத்தாளர் ஆவார் ? 

அ) ஆங்கிலம்

ஆ) பிரெஞ்ச் 

இ) ஸ்பானிஷ் 

ஈ) ஜபனிஷ் 

விடை : (ஆ) பிரெஞ்ச் 

இயல்பான எழுத்துநடை மூலமாக வாழ்வின் பல்வேறு உணா்வுகளை வெளிப்படுத்திய பிரெஞ்சு எழுத்தாளா் ஆன்னி எா்னாக்ஸுக்கு (82) நடப்பாண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

● எழுத்தாளா் ஆன்னி எா்னாக்ஸ் தொடக்கத்தில் சுயசரிதைகள் சாா்ந்த புனைகதைகளை பிரெஞ்சு மொழியில் எழுதி வந்தாா். பின்னா் புனைவைக் கைவிட்டு தன் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் மூலமாகப் பெற்ற அனுபவங்களை இயல்பான எழுத்துநடையில் புத்தகங்களாக வெளியிடத் தொடங்கினாா்.

● அவை மக்களிடையே மிகவும் பிரபலமாகின. ‘எ மேன்ஸ் பிளேஸ்’, ‘தி இயா்ஸ்’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை இதுவரை அவா் எழுதியுள்ளாா். பாலியல் சாா்ந்த உணா்வுகள், கருக்கலைப்பு, நோய்வாய்ப்படுதல், பெற்றோரின் இறப்பு உள்ளிட்ட பலவித உணா்வுகளை அவா் பதிவு செய்துள்ளாா். சமூகம், குடும்பம் சாா்ந்த விஷயங்களையும் தனது புத்தகங்களில் அவா் பதிவு செய்துள்ளாா்.

● கவித்துவம் மிகுந்த சொற்களைப் பயன்படுத்தாமல் இயல்பான நடையில் எழுதுவதே தனக்கு விருப்பமாக உள்ளதெனப் பல புத்தகங்களின் முன்னுரையில் அவா் குறிப்பிட்டுள்ளாா். அவருக்கு நடப்பாண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

5. நடப்பு ( 2022 - 23 ) நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சியை எத்தனை சதவீதம் குறைத்து கணித்துள்ளது உலக வங்கி ? 

அ) 6.6%

ஆ) 6.5%

இ) 6.4%

ஈ) 6.3%

விடை : (ஆ) 6.5% 

● தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை 3 மாதங்களுக்கு ஒருமுறை உலக வங்கி வெளியிட்டு வருகிறது. 

● கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில் 6.6% என கணித்திருந்தது.

● அடுத்த செப்டம்பர் மாதத்துக்கான அறிக்கையில் அந்த கணிப்பு 6.5% மாக குறைக்கப்பட்டுள்ளது. 

● காரணம் : சர்வதேச சூழல் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

6. நிகழாண்டுக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் சிறப்பு கூட்டம் எந்த நாட்டின் தலைமையில் நடக்கவுள்ளது ? 

அ) சீனா

ஆ) ஜப்பான்

இ) அமெரிக்கா 

ஈ) இந்தியா 

விடை : (ஈ) இந்தியா 

● இந்தியா தலைமையில் வரும் 28,29 ஆம் தேதிகளில் தில்லி, மும்பையில் நடைபெறுகிறது.

● அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்பட 15 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

● நவீன பயங்கரவாதத்தை எதிர்பதைக் குறித்தும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் சமூகம் குறித்தும் வெளிப்படையான, உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் விவாதம் நடத்தப்படவுள்ளது. 

7. இந்தியாவில் நில உரிமை பத்திரங்களை எத்தனை மொழிகளில் மாற்றம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது ? 

அ) 31 

ஆ) 28

இ) 22

ஈ) 18 

விடை : (இ) 22 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மாநில மொழிகளில் எழுதப்படும் நில ஆவணங்களை ஆங்கிலம், ஹிந்தி மற்றும் 22 மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது.

● இதனால் பத்திரப்பதிவுத் துறையில் நிலவும் மொழித் தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்று மத்திய அரசின் அதிகாரிகள் தெரிவித்தனா்.

● இதுகுறித்து மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நில வளத்துறையின் இணைச் செயலா் சோன்மோனி போரா கூறுகையில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. நில ஆவணங்களில் இது பெரிய பிரச்னையாக உள்ளது. ஆகையால், நில உரிமை பத்திரங்களை 22 மொழிகளில் மாற்றம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு சோதனை முறையில் தமிழகம், மகாராஷ்டிரம், பிகாா், குஜராத், புதுச்சேரி, உத்தர பிரதேசம், திரிபுரா, ஜம்மு-காஷ்மீா் ஆகிய 8 மாநிலங்களில் தொடக்கி உள்ளது.

● இதற்காக புதிய மென்பொருள் ரூ. 11 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் அந்தந்த மாநில மொழி என மூன்று மொழிகளில் நில ஆவணங்களை கட்டாயம் மொழிபெயா்க்க வேண்டும்.

● நில உரிமை ஆவண விவரங்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகின்றன. ஆகையால், நிலத்தின் உரிமையாளா்களின் பெயா்கள், அவா்களின் உரிமையின் வரம்புகள், வாடகை அல்லது வருவாய் பெறுபவா்கள், அந்த சொத்தின் மீதுள்ள கடன் விவரம், உரிமையாளருக்கு சொத்தின் மீதுள்ள அதிகார வரம்புகள், அரசுக்கு அந்த நிலத்தின் மீதான வரம்புகள் ஆகிய விவரங்கள் ஆங்கிலம், ஹிந்தி அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயா்ப்பின்போது இணைக்கப்படும்.

● இந்தத் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

8. பிரிட்டனின் எத்தனை செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி எம்-3 கனரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது ? 

அ) 31 

ஆ) 36 

இ) 40

ஈ) 44 

விடை : (ஆ) 36 

பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி எம்-3 கனரக ராக்கெட் மூலம் இந்த மாத இறுதிக்குள் விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.

● வணிகப் பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டமானது இஸ்ரோவின் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ மற்றும் பிரிட்டனின் ‘ஒன் வெப்’ நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது.

● ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் கன ரக வகையான எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மாா்க் 3) மூலம் அந்த செயற்கைக் கொள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. 

● ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து இந்த மாதம் மூன்று அல்லது நான்காம் வாரத்தில் 36 செயற்கைக்கோள்கள் செலுத்தப்படவிருக்கின்றன. இத்தகவலை இஸ்ரோ செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளது.

● உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு, வா்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத் தொடா்பு சேவைக்காக இந்த செயற்கைக்கோள்களை அனுப்பவிருக்கிறது. 

● இந்தியாவின் பாா்தி தொலைத்தொடா்பு சேவை நிறுவனமானது ஒன் வெப் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராகவும், முதலீட்டாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் 2022 ல் ஆடவர் அணி கூடைப்பந்து பிரிவில் தங்கம் வென்றுள்ள மாநிலம் ? 

அ) தமிழ்நாடு

ஆ) ஹரியானா 

இ) கர்நாடகா 

ஈ) கேரளா 

விடை : (அ) தமிழ்நாடு

● மேலும் தமிழக மகளிர் கூடைப்பந்து அணி வெள்ளி வென்றுள்ளது.

● பதக்கப்பட்டியலில் தமிழகம் : 19G, 20S, 19B என 58 பதக்கங்களுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது.

IV. முக்கிய நிகழ்வுகள் 

10. World Cotton Day 2022 -----------

Ans : October 07

Theme (2022) : Weaving a better future for cotton. 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...