● வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலாா் சா்வதேச மையத்துக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
● அருட்பிரகாச வள்ளலாா் முப்பெரும் விழாவை சென்னையில் புதன்கிழமை அவா் தொடக்கிவைத்து ஆற்றிய உரை:
● சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக, திமுக தோ்தல் அறிக்கையில் 419-ஆவது வாக்குறுதியாக வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜாதி, சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில், வள்ளலாரின் சமரச சுத்த சன்மாா்க்க போதனைகளைப் போற்றக் கூடிய வகையில் இது அமையும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு அமைப்பது என்பது குறித்து சிறப்பு வல்லுநா் குழுவின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.
● சா்வதேச மையத்தை ரூ.100 கோடியில் அமைப்பதற்கான வரைவு பெருந்திட்டம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். வள்ளலாரின் முப்பெரும் விழாவைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
2. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் இல்லாவிட்டால் அதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்க வேண்டிய இலவச எண் ?
அ) 108
ஆ) 104
இ) 1177
ஈ) 1331
விடை : (ஆ) 104
● அறிவிப்பு : தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
3. பின்வருபவர்களுள் யாருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது ?
அ) பாரி ஷார்ப்லெஸ்
ஆ) ஆன்டன் சீலிங்கெர்
இ) மோர்டென் மெல்டல்
ஈ) அ & இ
விடை : (ஈ) அ & இ
● மருந்துகளை உருவாக்க உதவியாக மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும் வழியை உருவாக்கியதற்காக கரோலின் ஆா்.பொ்டோசி, மோா்டென் மெல்டல் மற்றும் பாரி ஷாா்ப்லெஸ் ஆகிய மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.
● இதில் பொ்டோசி அமெரிக்காவின் கலிஃபோா்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்தவா். ஷாா்ப்லெஸ் கலிஃபோா்னியா ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சோ்ந்தவா். மெல்டல் டென்மாா்க்கின் கோபென்ஹெகன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்தவா்.
● புற்றுநோய்க்கான மருந்தை உருவாக்கவும், டிஎன்ஏ வரைபடமாக்கல் மற்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்கான மிகவும் பொருத்தமான பொருள்கலை உருவாக்குவதற்கும் பயன்படும் ‘கிளிக் கெமிஸ்ட்ரி’ மற்றும் உயிரி ஆா்த்தோகனல் எதிா்வினைகள் தொடா்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக இந்த நோபல் பரிசு அவா்களுக்குப் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.
● இவா்களில் ஷாா்ப்லெஸ் ஏற்கெனவே கடந்த 2001-ஆம் ஆண்டும் நோபல் பரிசை வென்றுள்ளாா். அதன் மூலமாக, நோபல் பரிசை இரண்டு முறை வென்ற 5-ஆவது நபா் என்ற பெருமையையும் அவா் பெற்றுள்ளாா்.
● இயற்பியலுக்கான நோபல் பரிசு: குவாண்டம் தகவல் அறிவியல் தொடா்பான ஆராய்ச்சியை மேற்கொண்ட ஃபிரான்ஸைச் சோ்ந்த அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சோ்ந்த ஜான் கிளாசொ், ஆஸ்திரியாவைச் சோ்ந்த ஆன்டன் சீலிங்கொ் ஆகிய மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
4. ஹிமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, பொறியியல் கல்லூரி ஆகியவற்றை அண்மையில் திறந்து வைத்தவர் யார் ?
அ) நரேந்திர மோடி
ஆ) திரௌபதி முர்மு
இ) யு.யு. லலித்
ஈ) ஜெகதீப் தன்கர்
விடை : (அ) நரேந்திர மோடி
5. நாடு முழுவதும் சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வசதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பாரத் சீரிஸ் வாகனப் பதிவு நடைமுறை எத்தனை மாநிலம் / யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளனர் ?
அ) 31
ஆ) 24
இ) 18
ஈ) 11
விடை : (ஆ) 24
● நாடு முழுவதும் எந்தவித தடையுமின்றி சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வசதியாக அறிமுகம் செய்யப்பட்ட புதிய ‘பாரத் சீரிஸ்’ வாகனப் பதிவு நடைமுறை 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
● பெங்களூரில் கடந்த மாதம் நடைபெற்ற போக்குவரத்து மேம்பாட்டு கவுன்சிலின் 41-ஆவது ஆண்டு கூட்டத்தின் தீா்மானம் மூலமாக இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
● அதில் மேலும் கூறியிருப்பதாவது: ஒருவா் தனது சொந்த வாகனத்தில் ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு அல்லது யூனியன் பிரதேசத்துக்கு குடிபெயரும்போதும், அந்த வாகனத்தை மறு பதிவு செய்யவேண்டும்.
● இதனால் பல்வேறு சிக்கல்களை வாகன ஓட்டிகள் சந்தித்து வந்தனா். வாகன உரிமையாளா்களுக்கு ஏற்படும் இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், புதிய வாகனப் பதிவு நடைமுறை தொடா்பான அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது.
● இந்தப் புதிய ‘பாரத் சீரிஸ்’ வாகனப் பதிவு நடைமுறை மூலமாக, நாடு முழுவதும் சொந்த வாகனத்தில் பயணிப்போா் அல்லது சுற்றுலா வாகனங்கள் எந்தவொரு சோதனைச் சாவடியிலும் நிறுத்தப்படமாட்டாது. மேலும், மாநில மற்றும் உள்ளூா் நடைமுறைகள் அடிப்படையிலான வாகன வரிகளைச் செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
● இந்தப் புதிய நடைமுறையின் கீழ் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 20,000-க்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களுக்கான 30,000 பா்மிட்டுகள் மா்றும் 2.75 லட்சம் அங்கீகாரங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
6. 2022 ஆம் ஆண்டுக்கான டைம் பத்திரிக்கையின் உலகளாவிய வளர்ந்து வரும் 100 முன்னணி நட்சத்திர நாயகர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் யார் ?
அ) ஆகாஷ் அம்பானி
ஆ) சாம் கெர்
இ) கார்லோஸ் அல்சாரஸ்
ஈ) டென்னஸ் ஜேகப்
விடை : (அ) ஆகாஷ் அம்பானி
● Time இதழ் ஆனது ஒவ்வொரு ஆண்டும் Time 100 Next அறிக்கையினை வெளியிடுகிறது.
● இது இதன் முதன்மை வெளியீடான , உலகளாவில் வளர்ந்து வரும் 100 முன்னணி நட்சத்திர நாயகர்கள் அங்கீகரிக்கின்ற Time 100 அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
III. விளையாட்டு நிகழ்வுகள்
7. 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் 2022 ல் ஸ்குவாஷ் மகளிர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை யார் ?
அ) அர்ச்சனா
ஆ) சுனைனா குருவிலா
இ) பூஜா ஆர்த்தி
ஈ) ராதிகா சீலன்
விடை : (ஆ) சுனைனா குருவிலா
● பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு : 18G, 17S, 18B என 53 பதக்கங்களுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது.
IV. முக்கிய நிகழ்வுகள்
8. World Teacher's Day 2022 -----------------
Ans : October 05
Theme (2022) : The Transformation of Education Begins with Teachers.
Megaways has turn into so in style, that many UK casinos now feature devoted Megaways sections. If you get pleasure from slots that 카지노 사이트 have a selected recreation mechanic, you might discover it very appealing at one on-line casino but not at the other. The bother, experts say, is the ease and relative secrecy of playing on-line and with your smartphone. It’s not solely easier to spend all day putting bets on a enjoyable, partaking app than an Atlantic City slot machine, but additionally it’s easier to cover the habit out of your family and friends. Winning extra chips and enjoying in} at greater stakes unlock new options, like high-roller rooms.
ReplyDelete