Friday, July 1, 2022
Current Affairs 2022 - June 30 / 2022 - Group 2/2A & Group 4
Wednesday, June 29, 2022
Current Affairs 2022 - June 29 / 2022 - Group 2 / 2A & Group 4
உலகத் தலைவா்களுக்குப் பிரதமா் மோடி பரிசு
● ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜொ்மனி சென்ற பிரதமா் நரேந்திர மோடி, குலாபி மீனாகாரி, காஷ்மீரி ஜமக்காளம் உள்ளிட்ட பல்ேறு இந்தியக் கலைப் பொருள்களை உலகத் தலைவா்களுக்குப் பரிசளித்தாா்.
● புவிசாா் குறியீடு பெற்ற வாராணசியைச் சோ்ந்த குலாபி மீனாகாரி கலைப் பொருளை அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்குப் பிரதமா் மோடி பரிசளித்தாா். ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸுக்கு மரோதியைச் சோ்ந்த மத்கா, ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவுக்கு உத்தர பிரதேசத்தின் நிஜாமாபாதைச் சோ்ந்த கருப்புப் பானை துண்டுகள், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுக்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியமான இத்தா் ஆகியவற்றைப் பிரதமா் மோடி பரிசாக வழங்கினாா்.
● இந்தோனேசிய அதிபருக்கு ராம தா்பாா் சிலையையும், செனகல் அதிபருக்கு கைவினைப் பொருள்களான கூடைகள், கைத்தறிகளையும் பிரதமா் மோடி வழங்கினாா். கனடா அதிபா் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பட்டு விரிப்புகளைப் பிரதமா் மோடி பரிசாக வழங்கினாா்.
III. விளையாட்டுச் செய்திகள்
9. ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் சதுரங்கப் போட்டி தமிழகத்தில் எங்கு தொடங்கியுள்ளது ?
அ) மதுரை
ஆ) சென்னை
இ) திருச்சி
ஈ) சேலம்
விடை : (அ) மதுரை
● இப்போட்டி மதுரையில் ஜூன் 28 முதல் ஜூலை 05 வரை நடைபெறவுள்ளது .
● இப்போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த 212 வீரர் , வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
IV. முக்கிய தினங்கள்
10. டிராபிக்ஸின் சர்வதேச தினம் ( International Day of Tropics ) 2022 ?
அ) ஜூன் 26
ஆ) ஜூன் 27
இ) ஜூன் 28
ஈ) ஜூன் 29
விடை : (ஈ) ஜூன் 29
Current Affairs 2022 - June 28 / 2022 - Group 2/2A & Group 4
Tuesday, June 28, 2022
Current Affairs 2022 - June 27 / 2022 - Group 2 / 2A & Group 4
Monday, June 27, 2022
Current Affairs 2022 - June 26 / 2022 - TNPSC GROUP 2/2A & GROUP 4
Sunday, June 26, 2022
Current Affairs 2022 - June 25 / 2022 - TNPSC Group 2/2A & Group 4
● செஸ் போட்டியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறியும் விதமாக, அனைத்துப் பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
● அதை முன்னிட்டு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒருநாள் செஸ் போட்டி குறித்த புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும். செஸ் போட்டிகள், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட உள்ளன.
● இதில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் 304 மாணவர்கள், சர்வதேச போட்டிகளை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
● இதேபோல, 6 முதல் 8-ம் வகுப்பு வரையான போட்டிகளில் தேர்வாகும் 152 மாணவர்கள், சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்படும்.
2. திருப்பூர் , விழுப்புரம் மாவட்டங்களில் ரூ. 76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டியவர் யார் ?
அ) ஆர். என் . ரவி
ஆ) மு.க. ஸ்டாலின்
இ) தங்கம் தென்னரசு
● எச்சிஎல் (HCL) நிறுவனத்திற்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்படவுள்ளது. எச்சிஎல் நிறுவனம் 2500 அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்கவும், அப்பயிற்சிக்கான முழு செலவினையும் அரசே ஏற்கும் எனவும், அம்மாணவர்கள் பட்ட மேற்படிப்பினை பயில வாய்ப்பும் வழங்கப்படும் எனவும் உறுதி செய்யப்படவுள்ளது.
● மேலும், இதனைத் தொடர்ந்து “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியானது அனைத்து மாவட்டங்களிலும் 29.06.2022, 30.06.2022, 1.07.2022, 2.07.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
II. தேசியச் செய்திகள்
4. நீதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
அ) அமிதாப் காந்த்
ஆ) தபன்குமார் டேகா
இ) அரவிந்த் குமார்
ஈ) பரமேஸ்வரன் ஐயர்
விடை : (ஈ) பரமேஸ்வரன் ஐயர்
● குடிநீர் துப்பரவுத் துறை முன்னாள் செயலர் பரமேஸ்வரன் ஐயர் நீதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
● இப்பொறுப்பில் முன்பு : அமிதாப் காந்த்
● மேலும் ஒரு நியமனம்: உளவுத்துறையின் புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி தபன் குமார் டேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
5. நிகழாண்டு சாகித்திய அகாதெமி மொழிப் பெயர்ப்புக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புத்தகம் எது ?
அ) ஆதிவாசிகள் இனி நடனமாட மாட்டார்கள்
ஆ) கர்ணன் - காலத்தை வென்றவன்
இ) கதை இல்லாதவனின் கதை
ஈ) ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்
விடை : (ஈ) ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்
● 2021ஆம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
● தமிழ்மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள் நூலுக்காக எழுத்தாளர் மாலனுக்கு (வி.நாராயணன்) வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
● ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள் நூலானது சைரஸ் மிஸ்ட்ரி எழுதிய க்ரோனிக்கல் ஆஃப் கார்பஸ் பேரியர் எனும் ஆங்கில நாவலை மொழிபெயர்த்து உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
6. இந்தியாவில் கடந்த ஆண்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் எத்தனை பேர் காப்பாற்றப்பட்டதாக லான்செட் இதழ் தெரிவித்துள்ளது ?
அ) ரூ.42 லட்சம்
ஆ) ரூ. 50 லட்சம்
இ) ரூ. 25 லட்சம்
ஈ) ரூ. 73 லட்சம்
விடை : (அ) ரூ.42 லட்சம்
● இந்த ஆய்வில், டிசம்பர் 8, 2020ம் ஆண்டில் தடுப்பூசிகள் விநியோகம் தொடங்கியதில் இருந்து டிசம்பர் 8, 2021ம் ஆண்டு வரையிலான இறப்பு எண்ணிக்கைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த காலகட்டத்தில் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் (66 சதவீதம்) ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
● இந்தியாவைப் பொறுத்த வரையில், இந்த காலகட்டத்தில் தடுப்பூசி மூலம் 42.10 லட்சம் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. இது தடுப்பூசி ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க தாக்கத்தை காட்டுகிறது.
7. போர்க்கப்பலில் இருந்து செங்குத்தாக சென்று விண்ணில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை அமைப்பை இந்தியக் கடற்படை எங்கு வெற்றிகரமாக பரிசோதித்தது ?
அ) டெல்லி
ஆ) குஜராத்
இ) ஒடிசா
ஈ) ஹைதராபாத்
விடை : (இ) ஒடிசா
● போா்க்கப்பலுக்கு நெருக்கமாகச் செல்லும் எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் வகையில் இந்த ஏவுகணை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை அமைப்பு, ஒடிஸாவில் சண்டீபூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் வெள்ளிக்கிழமை பரிசோதிக்கப்பட்டது.
● இதுகுறித்து டிஆா்டிஓ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சோதனையின்போது ஏவுகணை அமைப்பின் அனைத்து கருவிகளும் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது. விண்ணில் அதிவேகத்தில் செல்லும் விமானங்களை அழிக்கவே இந்த ஏவுகணை அமைப்பு பரிசோதிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
III.சர்வதேச செய்திகள்
8. அண்மையில் எந்த நாட்டில் பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாகக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது ?
அ) அமெரிக்கா
ஆ) ரஷ்யா
இ) சீனா
ஈ) பாகிஸ்தான்
விடை : (அ) அமெரிக்கா
● அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்ட மசோதா ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.
IV. விளையாட்டுச் செய்திகள்
8. பிஃபா (FIFA) 17 வயது மகளிர் உலகக்கோப்பை 2022 போட்டி எங்கு நடைபெறவுள்ளது ?
அ) அமெரிக்கா
ஆ ) பிரேசில்
இ) சீனா
ஈ) இந்தியா
விடை : (ஈ) இந்தியா
● சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA ) அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்அப்பில் இந்தியாவில் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் 11 - 30 வரை நடைபெறவுள்ளது.
● புவனேசுவரம், கோவை, நவிமும்பை உள்ளிட்ட 3 நகரங்களில் நடைபெறவுள்ளது.
● குறிப்பு : இந்தியா குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
V. முக்கிய தினங்கள்
10. சர்வதேச மாலுமிகள் தினம் ( International Day of the Seafarer ) 2022 ?
அ) ஜூன் 24
ஆ) ஜூன் 25
இ) ஜூன் 26
ஈ) ஜூன் 29
விடை : (ஆ) ஜூன் 25
● ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனமான சர்வதேச கடல்சார் அமைப்பு 2010ம் ஆண்டு ஜூன் 25ஐ சர்வதேச மாலுமிகள் தினமாக அறிவித்தது. 2011 முதல், உலகளாவிய வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு இன்றியமையாத மாலுமிகள் / கடற்படையினரை கவுரவிக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் சர்வதேச மாலுமிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகளின் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
Theme : Your Voyage , then and now, share your Journey .
Friday, June 24, 2022
Current Affairs 2022 - June 24/ 2022 - Group 2/2A & Group 4
● போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. ஆனால், போதைப் பொருள் மற்றும் மனநல பொருள் சட்டம் -1985 மற்றும் போதைப் பொருள் கடத்தல் சட்டம்-1988 ஆகியவை மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இதனால், விமானநிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் கடத்தப்படும் போதைப் பொருள், தங்கம் ஆகிய வழக்குகளை மத்திய வருவாய்த் துறை கையாண்டு வருகிறது.
● இவற்றை அனைத்தும் இணைத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
III. சர்வதேச செய்திகள்
7. பின்வரும் எந்த நாடு பெட்ரோலை ரேஷன் முறையில் வழங்க முடிவுசெய்துள்ளது ?
அ) இலங்கை
ஆ) ஜெர்மனி
இ) உக்ரைன்
ஈ) ஆப்பிரிக்கா
விடை : (ஆ) ஜெர்மனி
● ஜொ்மனிக்கு எரிபொருள் விநியோகத்தை ரஷியா குறைத்துவிட்டதால் அங்கு பெட்ரோலை ரேஷன் முறையில் வழங்க அந்த நாட்டு அரசு ஆயத்தமாகியுள்ளது.
● உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தால், பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷியா குறைத்தது.
● இதனால், எரிபொருள் தேவைக்கு ரஷியாவை சாா்ந்துள்ள ஜொ்மனி கடுமையாக பாதிக்கப்பட்டது. நிலைமையை சமாளிக்க பல்வேறு கட்ட அவசர நிலைகளை அறிவித்து வந்த அந்த நாடு, ‘எச்சரிக்கை’ கட்ட அவசர நிலையை வியாழக்கிழமை அறிவித்தது.
● இது, எரிபொருளை ரேஷன் முறையில் விநியோகிப்பதற்கு முந்தைய கட்டம் என்று கூறப்படுகிறது.
IV. விளையாட்டுச் செய்திகள்
8. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக:
1) சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஸ்ரீஹரி நட்ராஜ் , மிஹிர் ஆம்ப்ரே, அனீஷ் கௌடா ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.
2) மேலும் படேல் வெள்ளியும் , சிவா ஸ்ரீதர் வெண்கலமும் வென்றுள்ளனர்.
விடை : (இ) 1 மற்றும் 2
● சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் 2022.
● தங்கம் : ஸ்ரீதர் நட்ராஜ் - 100மீ பேக்ஸ்ட்ரோக் ; மிஹிர் - 50 மீ பட்டர்ஃப்ளை ; அனீஷ் கௌடா - 800 மீ ஃபீரிஸ்டைல்.
● வெள்ளி : மானா படேல் - 100 மீ பேக்ஸ்ட்ரோக்.
● வெண்கலம் : சிவா ஸ்ரீதர் - 100மீ பேக்ஸ்ட்ரோக்
9. ஹங்கேரியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் தனது 21 வது பதக்கத்தை வென்று உலக சாதனை செய்துள்ள வீராங்கனை ?
அ) கேட்டி லெடக்கி
ஆ) ரயான் லாக்டே
இ) கிளோ வெய்ன்ஸ்டின்
ஈ) பெல்லாசிம்ஸ்
விடை : (அ) கேட்டி லெடக்கி
● கேட்டி லெடக்கி அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஆவார்.
● உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் 21 பதக்கங்களை வென்ற ஒரே வீனாங்கனை
● பதக்கங்கள் : 18 G, 3 S
V. முக்கிய தினங்கள்
10. இராஜதந்திரத்தில் பெண்களுக்கான சர்வதேச தினம் ( International Day of Women in Diploamcy) 2022 ?
அ) ஜூன் 21
ஆ) ஜூன் 23
இ) ஜூன் 25
ஈ) ஜூன் 24
விடை : (ஈ) ஜூன் 24
Thursday, June 23, 2022
Current Affairs June - June 23 / 2022 - TNPSC Group 2/2A & Group 4
● இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கத்தின் மையம் 10 கி.மீ. ஆழத்தில் இருந்ததாக நிபுணர்கள் கூறினர்.
● இதையடுத்து, இந்த வார இறுதியில் அந்த மசோதா இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதன் மூலம், 29 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஆயுதச் சட்டத் தீா்திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
IV. விளையாட்டுச் செய்திகள்
● ஜூன் 23 ம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக (International Widows' Day)அறிவித்து, 2010-ம் ஆண்டு இறுதியில் ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
Wednesday, June 22, 2022
Current Affairs 2022 - June 22 / 2022 - TNPSC Group 2/2A & Group 4
● மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கெடமலை மலை கிராமத்திற்கு இன்று காலை நான்கு கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக சென்றனர்.
● தமிழக அரசின் மருத்துவ திட்டங்களில் ஒன்றான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப் பள்ளியில் தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்த்து மருந்துகளை வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
9. ( ஆ) ஜூன் 27
● டென்னிஸ் காலண்டரில் ஒரு ஆண்டில் நடைபெறும் 3 வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் வரும் ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை நடைபெறவுள்ளது.
● குறிப்பு : புல்தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டி விம்பிள்டன் ஆகும்.
10. (இ) 3 1 2
● ஆசியா ஓசியானியா ஓபன் பாரா பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2021
● போட்டி நடைபெற்ற இடம் : தென் கொரியா.
● மொத்த பதக்கங்கள்: 22 ( 6G, 4S , 12B ).
Current Affairs - June 21, 2022 - TNPSC Group 2/2A & Group 4
● காமன்வெல்த் அமைப்பால் கிடைத்துள்ள சாதகங்கள், அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள 54 நாடுகளுக்கு அளப்பரிய மதிப்பை சோ்த்துள்ளது.
● பசிபிக் தீவு கூட்டங்களில் ஒன்றான டுவாலு நாட்டின் மக்கள்தொகை 11,000 மட்டும்தான். அதேவேளையில், இந்தியாவின் மக்கள்தொகை 130 கோடி ஆகும். எனினும் இவ்விரண்டு நாடுகளும் காமன்வெல்த் அமைப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பில் உள்ள நாடுகளுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. எனினும் வரலாறு, விழுமியங்கள், அமைப்புகள், ஆங்கில மொழி ஆகியவற்றால் காமன்வெல்த் நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.
● காமன்வெல்த் அமைப்பு மட்டும்தான் வேகமாக வளா்ந்து வரும் சந்தைகளை வா்த்தகத்தின் உண்மையான சாதகத்துடன் இணைக்கிறது. அதனால்தான் காமன்வெல்த் நாடுகளுடன் முடிந்த அளவு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அல்லது பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தங்களை மேற்கொள்ள தனது இறையாண்மையை பிரிட்டன் பயன்படுத்துகிறது.
● இதுவரை காமன்வெல்த் அமைப்பில் இடம்பெற்றுள்ள 33 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை பிரிட்டன் மேற்கொண்டுள்ளது. அவை எல்லாவற்றையும்விட இந்தியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் பெரிது. இந்த ஆண்டு அக்டோபா் மாதம் தீபாவளி பண்டிகைக்குள் அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள பிரிட்டன் முயற்சித்து வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.
4. (இ) i மற்றும் iii
● இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியத்தில் மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டா் திங்கள்கிழமை முதல் ரோந்து பணியில் இணைக்கப்பட்டது.
● இந்தியக் கடலோரக் காவல் படை கிழக்குப் பிராந்தியப் பிரிவு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி முதல் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணாபட்டனம் வரை கடலோர பகுதி இப்பிராந்தியத்தின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. ரோந்துக் கப்பல்கள், இடைமறிக்கும் படகுகள், டோா்னியா் ரோந்து விமானங்கள், நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் ஹோவா்கிராப்ட், சேடக் ஹெலிகாப்டா்கள் ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
● அதிநவீன வசதிகள் கொண்ட ஹெலிகாப்டா்:
● இதில் தற்போது மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டா் திங்கள்கிழமை முதல் இணைக்கப்பட்டது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள கடலோரக் காவல்படை விமானதளத்தில் கிழக்குப் பிராந்திய தளபதி ஏ.பி.படோலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரம்பரிய நடைமுறைகளில் ஒன்றான தண்ணீா் பீய்ச்சி அடித்து புதிய ஹெலிகாப்டருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்புதிய ஹெலிகாப்டா் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடெட் மூலம் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
● நீண்ட தூரம் கண்காணிக்கும் வகையில் இப்புதிய ஹெலிகாப்டரில் பன்மடங்கு திறன் பெற்றது. அதிநவீன ரேடாா், எலெக்ட்ரோ ஆப்டிகம் போட், தானியங்கி கண்டறியும் அமைப்பு, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
● இப்புதிய ஹெலிகாப்டா் மூலம் இந்திய பொருளாதாரக் கடல் எல்லைக்குள் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, கடத்தல்களைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்திட இயலும். இதே மாதிரியான மேலும் 3 ஹெலிகாப்டா்கள் விரைவில் கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட உள்ளன என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. (ஆ) சீனா
● பாலிஸ்டிக் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் தொழில்நுட்ப சோதனை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனை மூன்று கட்டங்களைக் கொண்டதாகும். இது தற்காப்பு சோதனைதானே தவிர எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. இந்த வகையில் இது 6-ஆவது சோதனையாகும் எனத் தெரிவித்தனா்.
● இதுபோன்ற சோதனைகளின் மூலம் சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை எதிா்ப்புத் திறன் வலுவடைந்து வருகிறது. சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு பங்களிக்கும் இச்சோதனைகள், நாட்டுக்கு எதிரான அணு ஆயுத மிரட்டலுக்கும் பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது’ என சீன பாதுகாப்பு நிபுணா் ஒருவா் தெரிவித்ததாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.
6. (அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
● இருளா் மற்றும் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த பழங்குடியின மாணவா்களுக்குப் பயிற்சியளித்து அவா்கள் மூலமாக செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாக விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தெரிவித்தாா்.
● நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 செயற்கை கோள்கள் மாணவா்கள் மூலமே விண்ணில் செலுத்தப்படும் என பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். அதில் ஒரு செயற்கைக்கோள் நரிக்குறவா், இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த பழங்குடியின மாணவா்கள் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. ஒரு செயற்கைக் கோளை தயாரிக்க ரூ.1 கோடி வரை செலவாகும். இத்தகைய செயற்கைகோளை விண்ணில் ஏவுவது எப்படி என முதலில் இணையம் வாயிலாக மாணவா்களுக்குப் பயிற்சியளிக்கப்படும்.
● பின்னா், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ராக்கெட் ஏவுதளத்தில் இறுதிக்கட்ட பயிற்சி தோ்ந்தெடுக்கப்பட்ட ஆா்வமுள்ள மாணவா்களுக்கு அளிக்கப்படும்.
● இணையம் மூலம் வழங்கப்படும் பயிற்சி அடுத்த வாரத்திலிருந்து தொடங்கும். இது இந்திய அளவில் மட்டுமில்லாது உலக அளவிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் இளைஞா்களிடையே நம்பிக்கையை விதைத்து பெரும் மாற்றத்தையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை என்றாா்.
● இதையடுத்து காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப்பள்ளி மாணவா்களுடன் அவா் கலந்துரையாடினாா். இந்நிகழ்வின் போதும் ஏவுகணை அறிவியல் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினாா். தலைமை ஆசிரியை பிரமீளாகுமாரி நன்றி தெரிவித்தாா்.
7. (ஈ) 52,000
● மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 52,000 சதுரஅடி பரப்பில் நவீன அரங்கம் அமைக்கப்பட்டு வருவதாக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.
8. (அ) 2021 டிசம்பர் 18
● தமிழகத்தில் இன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 80,251 போ் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
● சென்னை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்னுயிா் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் 80 ஆயிரமாவது பயனாளியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா். தொடா்ந்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
● இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் 2021 டிசம்பா் 18-ஆம் தேதி தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களில் அதிகமான விபத்துக்கள் நடக்கும் நெடுஞ்சாலைகள் என 500 இடங்களைக் கண்டறிந்து, 669 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
● இதற்கு முன்னா் விபத்து நடக்கும்போது, பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் சோ்க்க வேண்டுமென்றால் அதற்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. தற்போது பாதிக்கப்பட்டவரை மருத்துவனையில் சோ்ப்பவருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5,000 வரை வழங்கப்படுகிறது.
● இன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களாக 80,251 போ் பயனடைந்திருக்கிறாா்கள். இத்திட்டத்துக்காக ரூ.72 கோடியே 89 லட்சம் செலவிலான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் உலக அளவிலேகூட மிகச் சிறப்பான வகையில் இருந்து வருவது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும் என்றாா் அவா்.
9. (ஈ) ஜூன் 21
● இந்த தேதி வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாள் என்பதால் இது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஐ.நா. சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
● Theme : Yoga for Humanity
Friday, June 17, 2022
Current Affairs 2022 - June 17 / 2022 - TNPSC Group 2/2A & Group 4
1.தமிழகத்தில் புதிதாக எத்தனை அனைத்து மகளிர் நிலையங்களை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்?
அ) 20
ஆ) 31
இ) 13
ஈ) 25
2. கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்த புகார்களை விசாரிக்க நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உயர்நிலைக்குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள அமைப்பு / அமைச்சகம் எது ?
அ) மத்திய கல்வித்துறை அமைச்சகம்
ஆ) பல்கலைக்கழக மானியக்குழு ( யுஜிசி )
இ) மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம்
ஈ) அனைத்தும்
3. சரக்கு - சேவைகள் வரி ( ஜிஎஸ்டி ) கவுன்சிலின் எத்தனையாவது கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெறவுள்ளது ?
அ) 31
ஆ) 45
இ) 47
ஈ) 53
4. பிரிக்ஸ் ( BRICS ) கூட்டமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்ற எத்தனையாவது கூட்டம் அண்மையில் நடைபெற்றது ?
அ) 13 ஆவது
ஆ) 31 ஆவது
இ) 17 ஆவது
ஈ) 12 ஆவது
5. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் இராணுவ வீரர்களைச் சேர்க்கும் திட்டத்தின் பெயர் என்ன ?
அ) அக்னிபத்
ஆ) அக்னிதேவி
இ) தேவிமாதா
ஈ) அக்னிகங்கா
6. தமிழகத்தில் நிகழாண்டுக்கான (2022) மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் பின்வரும் எந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது ?
அ) கோவை
ஆ) தஞ்சாவூர்
இ) கரூர்
ஈ) அனைத்தும்
7. இந்தியாவும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பும் ( ஆசியான் ), இருதரப்பின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற மாநாட்டிற்கு தலைமையேற்றுள்ளவர்கள் ?
அ) எஸ். ஜெய்சங்கர்
ஆ) நரேந்திர மோடி
இ) விவியன் பாலகிருஷ்ணன்
ஈ) அ & இ
8. நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி எத்தனை சதவீதம் குறையும் என மத்திய அரசால் மதிப்பிடப்பட்டுள்ளது ?
அ) 11%
ஆ) 13%
இ) 31%
ஈ) 17%
9. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக எத்தனை இந்திய வீரர்கள் / வீராங்கனைகள் அடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது ?
அ) 31
ஆ)13
இ) 37
ஈ) 49
10. பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்பதற்கான உலக நாள் (World Day to Combat Desertification & Drought ) 2022 ?
அ) ஜூன் 15
ஆ) ஜூன் 16
இ) ஜூன் 14
ஈ) ஜூன் 17
விடைகளும் (ம) விளக்கமும் :
1.அ) 20
● சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பணிகளில் மகளிா் காவல் துறையினா் திறம்பட செயல்பட்டு வருகின்றனா். இப்போது மாநிலத்தில் 202 அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிா் காவல் நிலையம் என்ற வகையில் புதிய அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
● அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட வளசரவாக்கம், தாம்பரம் மாநகரம் சேலையூா், வண்டலூா், ஆவடி மாநகரம் எஸ்.ஆா்.எம்.சி., வேலூா் மாவட்டம் காட்பாடி, திருவண்ணாமலை, கடலூா் மாவட்டம் திட்டக்குடி, கரூா், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு, திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம், திண்டுக்கல், தேனி மாவட்டம் பெரியகுளம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி, தென்காசி மாவட்டம் புளியங்குடி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிா் காவல் நிலையங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் திறந்து வைத்தாா்.
2. (ஆ) யுஜிசி
● இது குறித்து பல்கலைக் கழக மானியக்குழு துணைவேந்தர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ‘ நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.விரைவில் முதலாமாண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
● இந்நிலையில் உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் என்றும், பாலியல் புகார்கள் உள்ளிட்ட புகார்களை விசாரிக்க உயர்மட்ட குழுவை உடனடியாக உருவாக்குவதில் தாமதம் கூடாது;தனி குழுவின் விவரங்களை பல்கலைக் கழக மானியக்குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.
● ஏற்கனவே இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அதை செயல்படுத்தவில்லை என பல்கலைக் கழக மானியக்குழுவிற்கு புகார் வந்ததன் காரணமாக மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
3. (இ) 47
● 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
● தலைமை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
● நடைபெறும் இடம் : ஸ்ரீநகர் - ஜூன் 28, 29 ல் நடைபெறவுள்ளது ( ஸ்ரீநகரில் நடைபெறுவது இரண்டாவது முறையாகும் )
4. (ஈ) 12 ஆவது
● பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பிரேஸில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அந்நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் பங்கேற்ற 12-ஆவது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. பல்வேறு துறைகளில் நிா்வாகத்தை மேம்படுத்துவது தொடா்பாகக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக சீன அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
● அடுத்த வாரம் சீனா நடத்தவுள்ள 14-ஆவது பிரிக்ஸ் மாநாட்டின்போது எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. பயங்கரவாதம், இணையவழிக் குற்றங்கள் தடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்பட கூட்டத்தின்போது நாடுகள் உறுதியேற்றன. பயங்கரவாத எதிா்ப்பு விவகாரங்கள் தொடா்பாக ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளில் ஒருங்கிணைந்து செயல்படவும் முடிவெடுக்கப்பட்டது.
● நடப்பாண்டுக்கான பிரிக்ஸ் கூட்டத்தை சீனா நடத்தவுள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக நடப்பாண்டு கூட்டம் காணொலி வாயிலாக ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
5. (அ) அக்னிபத்
● அக்னிபத் திட்டத்தின்கீழ் 10-ஆம் வகுப்பு முடித்து ராணுவத்தில் சேரும் வீரா்கள், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.
● இதற்காக ராணுவ சேவையுடன் தொடா்புடைய பாடத் திட்டம் தயாரிக்கப்படும். அந்தச் சான்றிதழை வைத்து நாடு முழுவதும் வேலைவாய்ப்பும் பெறலாம்; உயா்கல்வியும் கற்கலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
● இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சான்றிதழுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்னிபத் திட்ட நடைமுறையில் இக்னோவுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
● இதற்கு பதிலளித்து மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெளியிட்ட அறிக்கை விவரம்:
● அக்னிபத் திட்டத்துக்கு ஆதரவளிக்க மத்திய கல்வி அமைச்சகம் கடமைப்பட்டுள்ளது. கல்வி அமைச்சகத்துக்கு உள்பட்ட தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனம் (என்ஐஓஎஸ்) 10-ஆம் வகுப்பு முடித்த அக்னிபத் வீரா்கள், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி சான்றிதழ் பெறவும், உயா்கல்வி கற்கவும் சிறப்புத் திட்டத்தை வகுக்கும்.
● இதற்காக ராணுவ சேவையுடன் தொடா்புடைய பாடத் திட்டம் தயாரிக்கப்படும். அந்தச் சான்றிதழை வைத்து நாடு முழுவதும் வேலைவாய்ப்பும் பெறலாம்; உயா்கல்வியும் கற்கலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
● இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சான்றிதழுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்னிபத் திட்ட நடைமுறையில் இக்னோவுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
6. (ஈ) அனைத்தும்
● தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதத்தை உயா்த்தியதில் முதலிடம் பிடித்த கோவை மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தங்கப் பதக்கம் வழங்கினாா்.
● மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
● இதில் பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதத்தை உயா்த்துவதில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முதலிடத்தைப் பிடித்த கோவை மாவட்டத்துக்கான தங்கப் பதக்கம், சான்றிதழை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பெற்றுகொண்டாா்.
● தஞ்சாவூா், கரூா் மாவட்டங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்து வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பெற்றன.
7. (ஈ) அ & இ
● இந்தியா-ஆசியான் கூட்டமைப்பு இடையேயான அதிகாரபூா்வ நல்லுறவு தொடங்கி 30 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இருதரப்பின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற மாநாடு தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த இருநாள் மாநாட்டுக்கு வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும், சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணனும் தலைமையேற்றுள்ளனா்.
● இந்தியாவும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பும் (ஆசியான்) பரஸ்பர நலன்சாா்ந்த நல்லுறவை மேம்படுத்திக் கொள்ள உறுதியேற்றுள்ளன.
8. (அ) 11%
● இதுகுறித்து மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவிப்பதாவது:
● உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீத பங்களிப்பு கோல் இந்தியா நிறுவனத்தை சாா்ந்தே உள்ளது. இந்த நிறுவனம், வெளிநாடுகளிலிருந்து 24.16 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு கடந்த வாரம் முதன்முறையாக ஒப்பந்தப்புள்ளிகளை வெளியிட்டது. அதனைத் தொடா்ந்து மேலும், 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய ஏதுவாக தலா இரண்டு ஒப்பந்தப்புள்ளிகளை அந்நிறுவனம் கோரியது.
● இருப்பினும், கடந்த 2021-22-ஆம் நிதியாண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டில் நிலக்கரி இறக்குமதியானது 11 சதவீதம் குறையும் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.
9. (இ) 37
● காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 37 போ் அடங்கிய தடகள அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
● இந்திய தடகள சம்மேளனம் அறிவித்திருக்கும் இந்த அணியில் 19 வீரா்கள், 18 வீராங்கனைகள் அடங்குவா். இதில், சமீபத்தில் 3000 மீட்டா் ஸ்டீபிள்சேஸில் 8-ஆவது முறையாக தேசிய சாதனையை முறியடித்த அவினாஷ் சப்லே, 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் இரு முறை தேசிய சாதனை படைத்த ஜோதி யாராஜி, மும்முறை தாண்டுதலில் தேசிய சாதனையை முறியடித்த ஐஸ்வா்யா பாபு ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்களாவா்.
● அவா்களுடன் தமிழகத்தைச் சோ்ந்த ஓட்டப்பந்தய போட்டியாளா்கள் எஸ்.தனலட்சுமி, நாகநாதன் பாண்டி, மும்முறை தாண்டுதல் வீரா் பிரவீண் சித்ரவேல் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனா். தோ்வு செய்யப்பட்ட போட்டியாளா்களில், உடற்தகுதியை நிரூபிக்க வேண்டியவா்கள் மற்றும் வெளிநாடுகளில் போட்டியில் பங்கேற்றிருப்பவா்கள் தவிா்த்து இதர வீரா், வீராங்கனைகள் அமெரிக்காவில் பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனா்.
10. (ஈ) ஜூன் 17
Theme : Rising up from drought together.
Thursday, June 9, 2022
Current Affairs 2022 - June 08 / 2022 - Group 2/2A & Group 4
1.காவல் துறையை நவீனப்படுத்த மாநிலங்களுக்கு எத்தனை கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது ?
அ) ரூ. 126.7 கோடி
ஆ) ரூ. 250 கோடி
இ) ரூ. 550 கோடி
ஈ) ரூ. 159 கோடி
2. தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த எத்தனை
மீனவ இளைஞர்களுக்கான உயிர் பாதுகாப்பு (ம) மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார் ?
அ) 500
ஆ) 1000
இ) 2000
ஈ) 5000
3. அண்மையில் திருத்தப்பட்ட முப்படை தலைமைத் தளபதியை நியமிப்பதற்கான விதிகளில் நியமிக்கப்படும் நபரின் வயது எத்தனைக்கு குறைவாக இருக்க வேண்டும் ?
அ) 65
ஆ) 70
இ) 62
ஈ) 55
4. உணவுப் பாதுகாப்பு துறைச் செயல்பாடுகளில் இந்தியளவில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் ?
அ) கேரளா
ஆ) ஆந்திர பிரதேசம்
இ) உத்தர பிரதேசம்
ஈ) தமிழ்நாடு
5. நிகழ் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது ?
அ) 7.5%
ஆ) 8.7%
இ) 6.9%
ஈ) 7.1%
6. இந்தியாவில் சிறுத்தைப் புலி இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக எந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டது ?
அ) 1947
ஆ) 1952
இ) 1994
ஈ) 1998
7. பிரான்ஸில் நடைபெறும் பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை யார் ?
அ) எமிலியா பாப்ஸ்கா
ஆ) தீபிகா சிங்
இ) அவனி லெகாரா
ஈ) தனலெட்சுமி
8. இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தின் சென்னையில் எத்தனையாவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது ?
அ) 44 வது
ஆ) 55 வது
இ) 13 வது
ஈ) 31 வது
9. 180 நாடுகள் அடங்கிய நிகழாண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் ?
அ) 113
ஆ) 131
இ) 155
ஈ) 180
10. உலக பெருங்கடல் தினம் ( World Oceans Day ) 2022 ?
அ) ஜூன் 05
ஆ) ஜூன் 06
இ) ஜூன் 07
ஈ) ஜூன் 08
விடைகளும் / விளக்கமும்
1.(அ) ரூ. 126.7 கோடி
● காவலா் படைகளை நவீனமயமாக்கவும், பழுதடைந்த காவல் நிலையங்களை சீரமைக்கவும், காவல் நிலையங்களுக்குத் தேவையான நவீனக் கருவிகளை வாங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காகவும் மாநிலங்களுக்கு ரூ. 126.7 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
● பாதுகாப்பு தொடா்பான செலவுகள் (எஸ்ஆா்இ) திட்டத்தின் கீழ், சத்தீஸ்கா் மாநிலத்துக்கு ரூ. 22.59 கோடியும், ஜாா்கண்ட் மாநிலத்துக்கு ரூ. 2.63 கோடியும், ஒடிஸாவுக்கு ரூ. 14.76 கோடியும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது.
● இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது:
உள்துறை அமைச்சகம் சாா்பில் மகாராஷ்டிரத்துக்கு சிறப்பு மத்திய உதவி (எஸ்சிஏ) திட்டத்தின் கீழ் ரூ. 7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
● சிறப்பு உள்கட்டமைப்பு திட்டத்தின் (எஸ்ஐஎஸ்) கீழ், பழுதடைந்த காவல் நிலையங்களைச் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஜாா்க்கண்டிற்கு ரூ. 8.39 கோடியும், தெலங்கானாவுக்கு ரூ. 1.61 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், காவல்துறையை நவீனமயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களுக்கு ரூ. 69.215 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
● பயங்கரவாதச் செயல்களால் அல்லது பல்வேறு போராட்டங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்குத் தேவையான உதவிகளை எஸ்ஆா்இ மூலமாக வழங்கவும், அதன் கீழ், இந்திய ரிசா்வ் பட்டாலியன்களின் செயல்பாட்டுக்காக மாநிலங்கள் செய்த செலவுகள், மத்திய காவல் படைகள், ராணுவம் போன்றவற்றின் போக்குவரத்துக்குச் செய்த செலவினங்கள் ஆகியவற்றைத் திரும்பப் பெற முடியும் என்றாா்.
● எஸ்சிஏ முதல் எஸ்சிஎஸ்பி வரையிலான முக்கிய நோக்கம், பட்டியல் இன ஜாதியினருக்கான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகும்.
● மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் அவா்களின் காவல் படைகளை முழுமையாக நவீனப்படுத்தி அதன் மூலம் மக்களுக்குத் தேவையான உதவிகளை உரியச் செய்கிறது. மேலும் காவல் படைகளை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மாநிலங்களின் வளங்களைக் காக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணைபுரிகிறது.
● காவல் படைகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் துணைத் திட்டமாக எஸ்ஐஎஸ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2. (ஆ) 1000
● தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(7.6.2022) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடல் நீரில் தவறி மூழ்கி தவிப்பவர்களை பாதுகாப்பதற்கு 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக காணொலிக் காட்சி வாயிலாக செங்கல்பட்டு மாவட்டம், கோவளத்தில் 25 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சியை தொடங்கி வைத்தார்.
3. ( இ) 62
● முப்படை தலைமைத் தளபதியை நியமிப்பதற்கான விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
● ராணுவப் படை, விமானப் படை, கடற்படை ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், வளங்களை முறையாகப் பயன்படுத்த வழிமுறைகளை வகுக்கவும் முப்படை தலைமைத் தளபதி பதவியை மத்திய அரசு உருவாக்கியது. முப்படைகளைச் சோ்ந்த வீரா்களும் ஒற்றைத் தலைமையின் கீழ் இயங்கும் வகையிலான நடைமுறைகளை உருவாக்குவது தொடா்பாக ஆராயும் பொறுப்பும் முப்படை தலைமைத் தளபதிக்கு வழங்கப்பட்டிருந்தது.
● இந்நிலையில், முப்படை தலைமைத் தளபதி பதவிக்கான நியமன விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பணியில் இருக்கும் அல்லது பணி ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல், ஏா் மாா்ஷல், வைஸ் அட்மிரல் ஆகியோா் முப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட தகுதி வாய்ந்தவா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
● அதற்காக ராணுவச் சட்டம்-1950, விமானப் படைச் சட்டம்-1950, கடற்படைச் சட்டம்-1957 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொண்டதற்கான தனித்தனி அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கப்படும் நபரின் வயது 62-க்கு குறைவாக இருக்க வேண்டுமெனவும் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு நியமிக்கப்படும் நபரின் பதவிக் காலம் 3 ஆண்டுகளாக உள்ள நிலையில், தேவைப்பட்டால் பதவிக் காலத்தை 65 வயது வரை மத்திய அரசு நீட்டிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
● ஓய்வு பெறுவோருக்கு வாய்ப்பில்லை: ராணுவப் படை, கடற்படை, விமானப் படை ஆகியவற்றின் தலைமைத் தளபதிகளாக நியமிக்கப்படுவோா், 3 ஆண்டுகள் வரையோ அல்லது 62 வயது வரையோ, எது முன்னதாக வருகிறதோ அதுவரை அப்பதவியில் நீடிக்கலாம். தற்போதைய திருத்தப்பட்டுள்ள விதிகள் காரணமாக, ஏதேனும் ஒரு படையில் தலைமைத் தளபதியாகப் பணியாற்றி 62 வயதை எட்டியதால் ஓய்வு பெறுபவரை, முப்படை தலைமைத் தளபதி பதவிக்கு நியமிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
4. (ஈ) தமிழ்நாடு
● இதற்கான விருது மத்திய அரசு சார்பில் தில்லியில் வழங்கப்பட்டது.
● மேலும் உணவுத் தரம் நிறைந்த மாவட்டங்களுள் தமிழகத்தில் இருந்து 11மாவட்டங்கள் / 75மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
5. (அ) 7.5%
● அறிவிப்பு : உலக வங்கி
● முன்பு : 8.7% ; திருத்தி மதிப்பிடப்பட்டது : 7.5%
● குறிப்பு : அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.1% மாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.(ஆ) 1952
● தென்னாப்ரிக்காவில் இருந்து சிறுத்தைப் புலிகள் ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படவுள்ளன.
● மத்திய பிரதேசத்தின் குனோ-பல்பூா் தேசிய பூங்காவில் இந்தச் சிறுத்தைப் புலிகளுக்காக 10 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் சிறப்புப் பகுதி தோ்வு செய்யப்பட்டுள்ளது. குறைந்தது 6 சிறுத்தைப் புலிகள் கொண்டு வரப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
● நாட்டில் கடைசியாகக் காணப்பட்ட சிறுத்தைப் புலி, இன்றைய சத்தீஸ்கா் பகுதியில் கடந்த 1947-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் சிறுத்தைப் புலி இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கடந்த 1952-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
● சிறுத்தைப் புலிகளை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆப்பிரிக்க சிறுத்தைப் புலிகளை சோதனை அடிப்படையில் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது.‘சிறுத்தைப் புலி’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு வழிகாட்டும் நோக்கில் 3 போ் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
● அக்குழுவானது இந்தியாவின் எந்தப் பகுதியில் சிறுத்தைப் புலிகளை அறிமுகப்படுத்தலாம் என்பது தொடா்பாக ஆய்வு நடத்துமாறு இந்திய வனஉயிரிகள் மையத்துக்கு (டபிள்யூ.ஐ.ஐ.) வலியுறுத்தியது. அதனடிப்படையில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தைப் புலிகள் வாழ்வதற்கான சூழல் காணப்படுகிா என்று வனஉயிரிகள் மையம் ஆய்வு நடத்தியது.
● மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் தகுந்த சூழல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இப்போது சிறுத்தைப் புலிகள் கொண்டுவரப்படவுள்ளன.
● மற்றோா் ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைப் புலிகளைக் கொண்டு வர அந்நாட்டுடனும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 8 முதல் 10 சிறுத்தைப் புலிகளைக் கொண்டு வந்து, 5 ஆண்டுகளில் 50 என்ற எண்ணிக்கையை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
● உலக அளவில் சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது உலகம் முழுவதும் சுமாா் 7,000 சிறுத்தைப் புலிகளே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க காடுகளிலேயே உள்ளன.
7. (இ) அவனி லெகாரா
● மகளிருக்கான 10மீ ஏர்ரைஃபிள் ஸ்டேண்டிங் எஸ்ஹச் பிரிவில் அவனி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார் .
● குறிப்பு : 2024 ல் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிக்கும் அவர் தகுதி பெற்றார் .
8. (அ) 44 வது
● 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது மகாபலிபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க இதுவரை 187 நாடுகளில் இருந்து 343 அணிகள் ஓபன் மற்றும் மகளிா் பிரிவுகளில் பதிவு செய்துள்ளன.
● ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கத்துக்கு முன்பாக நடத்தப்படுவதைப் போன்று, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கத்துக்கு முன்பாகவும் ஜோதி ஓட்டத்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக சா்வதேச செஸ் சம்மேளனம் (எஃப்ஐடிஇ) அறிவித்துள்ளது.
9. (ஈ) 180 வது
வெளியீடு : அமெரிக்க கல்வி நிறுவனங்கள் .
10. (ஈ) ஜூன் 08
Theme : Revitalization: Collective Action for the Ocean.
Monday, June 6, 2022
Current Affairs - June 05/ 2022 - TNPSC Group 2/2A & Group 4
1.கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக —----------------- ஐ செலுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளது ?
அ) கோவேக்ஸின்
ஆ) கோர்பிவேக்ஸ்
இ) கோவிஷீட்டு
ஈ) ஸ்புட்னிக் வி
2. இந்தியாவில் தடைவிதிக்கப்படாத 2,100 க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் எந்த தேதிக்குள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பொருள்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது ?
அ) ஜூன் 13
ஆ) ஆகஸ்ட் 15
இ) அக்டோபர் 02
ஈ) ஜூன் 30
3. தமிழகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு மின் வாகனங்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார் ?
அ) மு.க.ஸ்டாலின்
ஆ) வெ. இறையன்பு
இ) சிவ.வீ. மெய்யநாதன்
ஈ) மா. சுப்பிரமணியன்
4. —------------ மற்றும் —------------ சமூக ஊடகங்களில் வாசனை திரவியம் தொடர்பான விடியோ விளம்பரங்களை நீக்குமாறு அந்நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது ?
அ) ட்விட்டர்
ஆ) யூடியூப்
இ) பேஸ்புக்
ஈ) அ (ம) ஆ
5. லைஃப் என்கிற சுற்றுச் சுழலுக்கான வாழ்க்கை முறை, இயக்கத்துக்கான யோசனை கோரும் சர்வதேச அழைப்புக்கான மாநாட்டை தொடங்கி வைத்தவர் யார் ?
அ) நரேந்திர மோடி
ஆ) ராம்நாத் கோவிந்த்
இ) வெங்கையா நாயுடு
ஈ) அமித் ஷா
6. உலகின் தனக்கென்று சொந்தமாக விண்வெளி நிலையத்தை வைத்திருக்கும் ஒரே நாடு என்ற பெருமையை பெறவுள்ள நாடு ?
அ) ரஷ்யா
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) இந்தியா
7. பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்றுக் கொண்ட உலகின் இரண்டாவது நாடு எது ?
அ) மத்திய ஆப்பிரிக்க குடியரசு
ஆ) எல் சால்வடார்
இ) அமெரிக்கா
ஈ) ரஷ்யா
8. அஜர்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா மொத்தமாக வென்றுள்ள பதக்கங்கள் ?
அ) ஆறு
ஆ) ஏழு
இ) பத்து
ஈ) ஐந்து
9. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி 2022 ல் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் யார் ?
அ) இகா ஸ்வியாடெக்
ஆ) கோகோ கௌஃபை
இ) வீனஸ் வில்லியம்ஸின்
ஈ) சானியா மிர்ஸா
10. உலக சுற்றுச்சூழல் தினம் ( World Environment Day ) 2022 ?
அ) ஜூன் 02
ஆ) ஜூன் 03
இ) ஜூன் 04
ஈ) ஜூன் 05
விடைகளும் / விளக்கமும் :
1.(ஆ) கோர்பிவேக்ஸ்
● கோர்பிவேக்ஸ் தயாரிக்கும் நிறுவனம் : பயாலஜிக்கல் இ நிறுவனம் .● ஆராய்ச்சி முடிவுகள் : 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்டின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்ட 6 மாதங்களுக்கு பின்னர், பூஸ்டர் தடுப்பூசியாக கோர்பிவேக்ஸை செலுத்த டிசிஜிஐ ஒப்புதல் அளித்துள்ளது .
2. (ஈ) ஜூன் 30
● அறிவிப்பு : மத்திய வீட்டுவசதி (ம) நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம்.
● குறிப்பு : நாட்டில் உள்ள 4,704 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 2,591 அமைப்புகளில் ஏற்கனவே நெகிழிப் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது .
3. (அ) மு.க. ஸ்டாலின்
● ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
● மேலும், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுவதையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பு ஆற்றியதற்காக மதுரை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதும் மற்றும் ஐந்து தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களைப் பாராட்டும் வகையில் ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் பசுமை முதன்மையாளர் விருதுகளையும் வழங்கினார்.
4. (ஈ) அ (ம) ஆ
● காரணம் : பெண்களின் கண்ணியம் , ஒழுக்கம் (ம) நலன்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் உள்ளது .
● மேலும் எண்ம ஊடகத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் வகையிலும் அவை அமைந்துள்ளன .
● அறிவிப்பு : மத்திய செய்தி - ஒலி பரப்புத்துறை அமைச்சகம் .
5. (அ) நரேந்திர மோடி
● லைஃப் - கடந்த ஆண்டு இந்திய பிரதமரால் சிஓபி26 கிளாஸ்கோ ஐ.நா. பருவநிலை மாற்றம் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
● சுற்றுச்சூழல் உணர்வுடன் கூடிய வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதற்கும் , வலியுறுத்துவதற்கு உரிய யோசனைகளை பரிந்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது .
6. (ஆ) சீனா
● விண்வெளியில் டியாங்காங் என்ற தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதற்காக பல கட்டங்களாக வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி சீனா அங்கு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
● ஏற்கனவே இதற்காக பல முறை விண்வெளிக்கு அனுப்பியுள்ள சீனா கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஷென்சோ 13 விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களை அனுப்பியது. அவர்கள் 3 பெரும் விண்வெளியில் இருந்தபடி பூமியில் உள்ள சீன வல்லுனர்களுடன் இணைந்து பணியாற்றி வந்தனர். 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஷென்சோ 13 குழுவினர் மங்கோலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள கோபி பாலைவனத்தில் தரையிறங்கி சமீபத்தில் பூமிக்கு திரும்பினர்.
● இந்த நிலையில் மீண்டும் அடுத்த கட்டமாக சீனா தனது புதிய விண்வெளி நிலையத்திற்கு மேலும் மூன்று விண்வெளி வீரர்களை ஜூன் மாதத்தில் அனுப்ப ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தது.
● அதன்படி, வடமேற்கு மாகாணமான கன்சுவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 10:44 மணிக்கு (0244 GMT) 3 சீன விண்வெளி வீரர்களுடன் லாங் மார்ச்-2எஃப் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
● ஷென்சோ 14 விண்கலத்தில் செல்லவுள்ள இவர்கள் ஆறு மாதங்கள் விண்ணில் தங்கியிருந்து விண்வெளி நிலையத்தின் வெண்டியன் மற்றும் மெங்டியன் என்ற இரண்டு தொகுதிகளை சேர்க்கும் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. (அ) மத்திய ஆப்பிரிக்க குடியரசு
● பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்று கொண்ட முதல் ஆப்பிரிக்க நாடும் இதுவாகும்.
● மத்திய ஆப்பிரிக்க பிராங்க் என்பது மத்திய ஆப்பிரிக்க குடியரசு உள்ளிட்ட 6 நாடுகளின் அதிகாரப்பூர்வ நாணயம் ஆகும்.
● எல் சால்வடார் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்றுக் கொண்ட முதல் நாடாகும்.
8. (ஈ) ஐந்து
● பதக்கங்கள் : 2 தங்கம் , 3 வெள்ளி
9. (அ) இகா ஸ்வியாடெக்
● இப்போட்டியில் அவர் வென்ற 2 வது கோப்பை .
● முன்பு : 2020 இல் சாம்பியன் பட்டம் வென்றார்.
● நடப்பு காலண்டரில் அவர் தொடர்ந்து 6 வது முறையாக வென்றிருக்கும் பட்டம் இதுவாகும்.
10. (ஈ) ஜூன் 05
● World Environment Day 2022: 1972-ஆண்டு சுவீடன் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றுச்சூழலும் என்ற வரலாற்று புகழ்மிக்க உலக மாநாட்டு நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசநிலை கருதி, ஜுன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
● Theme : Only One Earth .
Featured post
உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR
உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...
-
Preamble of the Constitution & Salient Features of the Constitution / அரசியலைமப்பின் முகவுரை (ம) அரசியலைமப்பின் முக்கிய கூறுகள் ...
-
GK SHANKAR DECEMBER 02 / 2022 I . தமிழ்நாட்டு நிகழ்வுகள் 1. தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் க...
-
GK SHANKAR DECEMBER 28/2022 I .தமிழ்நாட்டு நிகழ்வுகள் 1. சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் 81 ஆவ...