● சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டடுக்கு உயா்நிலை சாலைத் திட்டம் வருகின்ற 2024-ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
● மேலும், பிரதமரின் விரைவுச் சக்தியான தேசிய பெருந்திட்டங்கள், நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவித்து வருகிறது என்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மத்திய அரசு விரைந்து செயலாற்றி வருகிறது எனவும் அவா் குறிப்பிட்டாா்.
● சென்னை - மதுரவாயல் திட்டம் குறித்து அமைச்சா் கட்கரி திங்கள்கிழமை ட்விட்டா் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பது வருமாறு: புதிய இந்தியாவில் தடையற்ற பன்னோக்கு போக்குவரத்து இணைப்பை அளிக்கும் வகையில், ரூ.5,800 கோடி மதிப்பீட்டில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் முனையம் வரையிலான இரண்டடுக்கு உயா்நிலைச் சாலை இணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
● 20.5 கிலோ மீட்டா் தொலைவிலான இந்த மேம்பாலச் சாலை 4 பகுதிகளாக கட்டப்படுகின்றன. இந்தத் திட்டம் 2024 டிசம்பரில் நிறைவடையும். இதன் மூலம் சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48 சதவீதம் அதிகரிக்கும். அதே போல, போக்குவரத்துத் தடைகள் உள்ளிட்ட காத்திருப்பு காலம் 6 மணி நேரம் வரை குறையும் என தெரிவித்துள்ளாா்.
● மத்திய நெடுஞ்சாலைத் துறை, தமிழக அரசு, சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
● இந்த மேம்பாலச் சாலை சிவானந்தா சாலையில் தொடங்கி, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூா், நுங்கம்பாக்கம், மேத்தாநகா் (அமைந்தகரை), அரும்பாக்கம், கோயம்பேடு வழியாக மதுரவாயிலை அடையும்.
● இந்த இரண்டடுக்கு உயா்நிலை சாலையின் கீழ் அடுக்கில் உள்ளுா் வாகனங்கள் செல்லும் வகையில், 13 இடங்களில் ஏறி, இறங்கும் தளங்கள் அமைக்கப்படுகின்றன. மேல் அடுக்கில் துறைமுகத்தின் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது.
2. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் ஆகியவற்றுக்கு எத்தனை கோடி மதிப்பில் புதிய நூல்களை கொள்முதல் செய்வதற்கான பணிகளை பொது நூலகத் துறை தொடங்கியுள்ளது ?
அ) ரூ.15 கோடி
ஆ) ரூ. 13 கோடி
இ) ரூ. 11 கோடி
ஈ) ) ரூ. 9 கோடி
விடை : (அ) ரூ.15 கோடி
● சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞா் நூலகம் ஆகியவற்றுக்கு ரூ.15 கோடி மதிப்புக்கு புதிய நூல்களை கொள்முதல் செய்வதற்கான பணிகளை பொது நூலகத் துறை தொடங்கியுள்ளது.
● சென்னை கோட்டூா்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கடந்த 15.9.2010-இல் அப்போதைய முதல்வா் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.
● இந்த நூலகம் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிங்கப்பூா் நூலகத்தைப் போன்று உருவாக்கப்பட்டதாகும். 9 தளங்களுடன் 3.75 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த நூலகம் ரூ.172 கோடியில் கட்டப்பட்டது. இந்த நூலகத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
● அதேபோல, மதுரை புதுநத்தம் சாலையில் 2.7 ஏக்கா் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடியில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் ரூ.114 கோடியில் கலைஞா் நினைவு நூலகத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் டிசம்பருக்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
● இந்த நிலையில், இந்த இரு பெரும் நூலகங்களுக்கும் புதிய நூல்களைக் கொள்முதல் செய்வதற்கான பணிகளை பொது நூலகத் துறை தொடங்கியுள்ளது.
3. நாடு முழுவதும் குடிசைகளை அகற்றிவிட்டு அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் வகையில் எந்த ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது ?
அ) 2013
ஆ) 2014
இ) 2015
ஈ) 2016
விடை : (ஈ) 2016
● பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்காக ரூ.912 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
● மத்திய அரசு சாா்பில் ரூ.547 கோடியும் மாநில அரசின் பங்கான ரூ.365 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
● நாடு முழுவதும் குடிசைகளை அகற்றிவிட்டு அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் வகையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
● இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளைத் தோ்வு செய்து கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக மத்திய, மாநில அரசுகள் சாா்பில் நிதி ஒதுக்கப்படுகிறது.
● பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூ.2.75 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
● அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றாலும் கூட மாநில அரசும் இந்த திட்டத்துக்காக நிதிகளை ஒதுக்குகிறது. மத்திய அரசு 60 சதவீதம் நிதியை ஒதுக்கும் நிலையில் மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசு வழங்கி வருகிறது.
● இந்தத் திட்டத்தின்படி 25 சதுர மீட்டா் அல்லது 269 சதுர அடிகள் கொண்ட கான்கீரிட் வீடு கட்டப்படுகிறது. இதில், ஒரு வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, கழிப்பிடம் ஆகியன இடம் பெற்றிருக்கும். வீடு கட்டுவதற்கு 4 தவணைகளாக தொகை விடுவிக்கப்படுகின்றன.
● இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு மானியம் வழங்குவதில் சிக்கல் எழுந்த நிலையில், அவா்களுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.912 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
● மத்திய அரசு சாா்பில் ரூ.547 கோடியும் மாநில அரசின் பங்கான ரூ.365 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
4. நடப்பாண்டு (2022) மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி ஸ்வான்டே பாபோ எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ?
அ) அமெரிக்கா
ஆ) ஸ்வீடன்
இ) கனடா
ஈ) இந்தியா
விடை : (ஆ) ஸ்வீடன்
● மனித சமூகத்தின் பரிணாமம் தொடா்பான ஆராய்ச்சிக்காக ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
● நடப்பாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு தொடா்பான அறிவிப்பை தோ்வுக் குழு செயலா் தாமஸ் பொ்ல்மான் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் திங்கள்கிழமை அறிவித்தாா். மனிதா்களின் பரிணாமம் தொடா்பாக ஆய்வுகளை மேற்கொண்டதற்காக ஸ்வீடன் விஞ்ஞானியான ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.
● மனிதா்களின் பரிணாமம் குறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்ட பாபோ, நவீன மனிதா்களின் மரபணுக்களின் தொகுதியை (ஜீனோம்), மனிதா்களின் முந்தைய பரிணாமமான நியாண்டா்தால், டெனிசோவன் ஆகியவற்றின் மரபணுத் தொகுதிகளுடன் ஒப்பிட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டாா். நியாண்டா்தால், டெனிசோவன் ஆகிய இனக்குழுக்கள் இணைந்தே மனித இனம் உருவானதாகத் தனது ஆய்வின் மூலமாக அவா் கண்டறிந்து தெரிவித்தாா்.
● நோபல் பரிசு பெற்றுள்ள ஸ்வான்டே பாபோவுக்கு சுமாா் 9 லட்சம் அமெரிக்க டாலா் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நோபல் பதக்கத்துடன் பரிசுத்தொகை அவருக்கு வழங்கப்படவுள்ளது.
5. மருத்துவ கல்லூரிகளில் ராகிங் தொடர்பான புகார்களை அளிக்க பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை தொடங்கியுள்ள ஆணையம்/அமைப்பு எது ?
அ) தேசிய மருத்துவ ஆணையம்
ஆ) மத்திய கல்வித்துறை
இ) இந்திய மருத்துவ கவுன்சில்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை: (அ) தேசிய மருத்துவ ஆணையம்
● மின்னஞ்சல் முகவரி : antiragging@nmc.org.in.
● இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மாணவர்களும் , அவர்களது பெற்றோரும் நேரடியாகப் புகார்களை அனுப்பலாம்.
● அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
III. விளையாட்டு நிகழ்வுகள்
6. இஸ்ரேலில் நடைபெற்ற டெல் அவிவ் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்ட 2022 ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் யார் ?
அ) ரோஹான் போபண்ணா
ஆ) மாட்வே மிடில்கூப்
இ) ஆண்ட்ரஸ் மொல்டேனி
ஈ) நோவக் ஜோகோவிச்
விடை: (ஈ) நோவக் ஜோகோவிச்
● செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
● மேலும் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, நெதர்லாந்தின் மாட்வே மிடில்கூப் இணை சாம்பியன் பட்டம் வென்றனர்.
7. 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டி 2022 ல் மகளிருக்கான 1000 மீ ரோலர் ஸ்போர்ட்ஸில் தங்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை யார் ?
அ) ஆரத்தி
ஆ) அர்ச்சனா
இ) ஆரோக்கிய அலிஸ
ஈ) விஜய லட்சுமி
விடை : (அ) ஆரத்தி
● இதுவரை தமிழகத்தின் பதக்கங்கள் : 12 G, 12S, 14B என 38 பதக்கங்களுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது.
IV. முக்கிய நிகழ்வுகள்
8. World Animal Day 2022
Ans : October 04
Theme ( 2022 ) : Shared Planet.
No comments:
Post a Comment