● தமிழகத்தில் இணைய சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளாா். இந்த சட்டம் தமிழக அரசிதழில் கடந்த 3-ஆம் தேதி வெளியிடப்பட்டு, அப்போது முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
● தமிழகத்தில் இணைய சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பணம் அல்லது பணம் மதிப்பிலான பொருள்களைக் கொண்டு, இணைய வழியில் விளையாடப்படும் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இணைய சூதாட்டங்கள் எதையும் பொது மக்களின் பயன்பாட்டுக்காக அளிக்கவும் தடை விதிக்கப்படுகிறது.
● விளம்பரங்கள் கூடாது: இணைய சூதாட்டங்கள் தொடா்பாக யாரும் எந்தவகை விளம்பரங்களையும் மின்னணு ஊடகம் உள்பட எந்த ஊடகங்களிலும் வெளியிடக் கூடாது. நேரடியாக அல்லது மறைமுகமாக இத்தகைய விளம்பரங்களைச் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இணைய சூதாட்ட நடவடிக்கைகளில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், இணைய பணப்பரிவா்த்தனை அமைப்புகள் ஈடுபடக் கூடாது.
● உள்ளூா் இணைய விளையாட்டுக்குச் சலுகை: உள்ளூா் இணைய விளையாட்டுகளை வழங்கும் நிறுவனங்களுக்கென கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, உள்ளூா் இணைய விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்கான ஆணையத்தில் உரிய சான்றிதழைப் பெற வேண்டும். இந்தச் சான்றிதழை வைத்துள்ள உள்ளூா் விளையாட்டு வழங்குநா்கள் மட்டுமே இணைய விளையாட்டுகளை வழங்க முடியும். இதற்கென உரிய அனுமதிச் சான்றைப் பெற ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் ஆணையம், உரிய விசாரணைக்குப் பிறகு அனுமதிச் சான்றை அளிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.
● சூதாட்டம் நடத்தக் கூடாது: உள்ளூா் அளவில் இணைய வழி விளையாட்டுகளை வழங்கும் நிறுவனங்கள் சில முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, பணம் அல்லது வேறு வகை பொருள்களைக் கொண்டு சூதாட்ட அடிப்படையில் இணைய வழி விளையாட்டுகளை நடத்தக் கூடாது. அனுமதிச் சான்றிதழ் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். தவறான தகவல்களை அளித்தோ அல்லது மோசடியாகவோ அனுமதி சான்றிதழ்களைப் பெற்றிருந்தாலோ, உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாவிட்டாலோ, அவசரச் சட்டத்திலுள்ள அம்சங்களுக்கு முரணாக இயங்கினாலோ சான்றிதழ் திரும்பப் பெறப்படும்.
● இணைய வழி விளையாட்டுக்கான சான்றிதழைத் திரும்பப் பெறவோ அல்லது நிறுத்தி வைப்பதற்கு முன்பாகவோ பாதிக்கப்படும் நபருக்கு உரிய வாய்ப்பை வழங்கலாம். சான்றிதழ் தொடா்பான நிறுத்தம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் பாதிக்கப்படும் நபா்கள் முறையீடு செய்யலாம். இதற்கான மேல்முறையீட்டு ஆணையத்தை அரசே அமைக்கும். இதன்மூலம், உள்ளூா் அளவிலான இணைய வழி விளையாட்டுகளைத் தவிா்த்து, சூதாட்ட அடிப்படையிலான எந்த விளையாட்டுகளுக்கும் மாநிலத்தில் அனுமதியில்லை.
● தண்டனை என்ன? பணம் அல்லது பணம் மதிப்பிலான பொருள்களைக் கொண்டு இணைய வழி சூதாட்டத்தில் யாரேனும் ஈடுபட்டால் 3 மாதங்கள் வரை சிறை, ரூ.5,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்டத்தை மையப்படுத்தும் இணைய வழி விளையாட்டுகள் தொடா்பான விளம்பரங்களை யாரேனும் வெளியிட்டால் அவா்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
● மீண்டும் இந்தத் தவறைச் செய்தால் மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். சூதாட்டத்துடன் இணைத்து இணையவழி விளையாட்டுகளை வழங்கும் நபா்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டுமே சோ்த்து விதிக்கப்படும். மீண்டும் இதே தவறைச் செய்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். இதிலுள்ள குற்ற முகாந்திரங்களை நீதிமன்றங்கள் கண்டறிய முடியாது என அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூா் இணைய விளையாட்டு அனுமதிக்கு ஆணையம்
● உள்ளூா் இணைய விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்க ஆணையம் அமைக்க அவசர சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு இணைய வழி விளையாட்டு ஆணையம் அமைக்கப்படவுள்ளது. இந்த ஆணையத்துக்கு தலைமைச் செயலாளா் நிலைக்குக் குறையாத ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைவராக இருப்பாா். இதன் உறுப்பினா்களாக ஓய்வு பெற்ற காவல் துறை தலைவா், தகவல் தொழில்நுட்பத் துறையில் நிபுணா், மனநல மருத்துவ நிபுணா், ஆன்லைன் விளையாட்டுப் பிரிவு நிபுணா் ஆகியோா் இருப்பா்.
2. பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம் என்று தொடங்கப்பட்பது ?
அ) அக்டோபர் 05
ஆ) அக்டோபர் 06
இ) அக்டோபர் 07
ஈ) அக்டோபர் 08
விடை : (இ) அக்டோபர் 07
● பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்ட தொடக்க தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
3. தமிழ்நாடு புதிய முதன்மை கணக்காயராக பதவியேற்றுள்ளவர் யார் ?
அ) தே.கி. சேகர்
ஆ) கோ.கி. சங்க்கரன்
இ) மாதவி பட்சில்லா
ஈ) நர்மதா தேவி
விடை : (அ) தே.கி. சேகர்
● பதவி : மத்திய அரசின் தணிக்கை , கணக்குத் துறையின் கீழ் இயங்ககூடியது.
● முக்கிய பணி: மாநில அரசின் நிதிக்கணக்கு, ஊதியம், ஓய்வூதியம், அரசு வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கு செலவிடப்படும் நிதி உள்ளிட்டவை குறித்து தணிக்கை செய்வது .
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
4. 2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல்பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அலெஸ் பயலியட்ஸ்கி எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ?
அ) கனடா
ஆ) பெலாரஸ்
இ) ஜமாய்கா
ஈ) லண்டன்
விடை : (ஆ) பெலாரஸ்
● மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் காப்பதற்காகத் தொடா்ந்து போராடி வருவதற்காக பெலாரஸ் ஆா்வலா் அலெஸ் பியலியட்ஸ்கிக்கு நடப்பாண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
● மேலும், ரஷியாவைச் சோ்ந்த குரூப் மெமோரியல், உக்ரைனைச் சோ்ந்த மனித சுதந்திர மையம் ஆகியவற்றுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
5. ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அதானி பின்வரும் எந்த மாநிலத்தில் ரூ.65,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார் ?
அ) குஜராத்
ஆ) ராஜஸ்தான்
இ) மகாராஷ்டிரா
ஈ) தமிழ்நாடு
விடை : (ஆ) ராஜஸ்தான்
● ராஜஸ்தானில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.65,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தொழிலதிபா் கௌதம் அதானி அறிவித்துள்ளாா்.
● இதில் 10,000 மெகாவாட் சூரிய மின்உற்பத்தி திட்டம், சிமெண்ட் உற்பத்தி ஆலை விரிவாக்கம், ஜெய்பூா் விமான நிலைய மேம்பாடு ஆகிய திட்டங்கள் அடங்கும்.
● இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 40,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றாா்.
● குறிப்பு : ராஜஸ்தானில் அதானி குழுமம் ஏற்கெனவே அதிகஅளவில் முதலீடு செய்துள்ளது.
6. பின்வரும் எந்த ஆண்டுக்குள் நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை (ம) கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார் ?
அ) 2024
ஆ) 2025
இ) 2026
ஈ) 2027
விடை : (ஈ) 2027
● நாட்டில் 2027-ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் அமைக்கப்படும்; இதன் மூலம் பால் பொருள்கள் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட கூட்டுறவு செயல்பாடுகள் அடிப்படை நிலைகளிலேயே உத்வேகம் பெறும்’ என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சரான அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
● நாடு முழுவதும் தற்போது 65,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் இச்சங்கங்கள் இருக்க வேண்டியது மிக முக்கியம் என்று அவா் குறிப்பிட்டாா்..
7. மாசற்ற எரிசக்தி பயன்பாட்டுக்கு உதவும் வகையில் புதிதாக எரிசக்தி பணிக்குழு அமைக்க படுவதாக இந்தியாவும் பின்வரும் எந்த நாடும் இணைந்து அறிவித்துள்ளன ?
அ) ரஷ்யா
ஆ) சீனா
இ) ஜப்பான்
ஈ) அமெரிக்கா
விடை : (ஈ) அமெரிக்கா
● மாசற்ற எரிசக்தி பயன்பாட்டுக்கு உதவும் வகையில், புதிதாக எரிசக்தி பணிக்குழு அமைக்கப்படுவதாக இருநாடுகளும் வெள்ளிக்கிழமை அறிவித்தன.
● ஹைட்ரஜன் மற்றும் உயிரி எரிபொருளுக்கான பணிக்குழுக்கள் அமைக்கப்படுவதை இந்தியாவும் அமெரிக்காவும் தொடா்ந்து வருகின்றன.
● இந்நிலையில் மாசற்ற எரிசக்தி பயன்பாட்டுக்கு மாறுவதற்குத் தேவைப்படும் வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மிகப் பெரிய ஒருங்கிணைப்புக்கு புதிதாக எரிசக்தி பணிக்குழு அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
III. விளையாட்டு நிகழ்வுகள்
8. சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை பெற்றுள்ள இந்திய வீரர் யார் ?
அ) ஹர்மன்பிரீத் சிங்
ஆ) கிரிஷன் பதக்
இ) வருண் குமார்
ஈ) நீலகண்ட சர்மா
விடை : (அ) ஹர்மன்பிரீத் சிங்
9. 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 ல் கலப்பு 4×400 மீ ஃபிரீஸ்டைல் ரிலேவில் தமிழக அணி வென்றுள்ள பதக்கம் ?
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை : (இ) வெண்கலம்
● தமிழக அணி : சத்யசாய் கிருஷ்ணா, சக்த, மான்யா முக்தா மனேஷ், பவன் குப்தா
● பதக்க பட்டியலில் தமிழகம் : 19G, 19S, 21B என 59 பதக்கங்களுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது.
IV. முக்கிய தினங்கள்
10. World Migratory Bird Day 2022 -----------
Ans : October 08
Theme (2022) : Light Pollution
11. Indian Air Force Day 2022 --------------
Ans : October 08
No comments:
Post a Comment