Tuesday, September 13, 2022

Current Affairs 2022 - September 13/2022 - TNPSC Group 1,2/2A & 4

                    GK SHANKAR 
              SEPTEMBER 12 / 2022 

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் எங்கு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதியன்று பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்படவுள்ளது ? 

அ) சென்னை 
ஆ) மதுரை 
இ) விருதுநகர் 
ஈ) சேலம் 

விடை : (இ) விருதுநகர் 

● தொடங்கி வைக்கவுள்ளவர் : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
● குறிப்பு : முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த தினமான செப். 15 ஆம் தேதி இத்திட்டத்தை முதல்வர் தொடக்கிவைக்கவுள்ளார். 

2. தமிழகத்தில் நிகழாண்டு எத்தனை லட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கு அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பணிகள் நடைபெற்று வருகின்றது ?

அ) 1.50 லட்சம் 
ஆ) 2.75 லட்சம் 
இ) 3.30 லட்சம் 
ஈ) 4.10 லட்சம் 

விடை : (இ) 3.30 லட்சம் 

● அறிவிப்பு : மாநில வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்.
● காரணம் : தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 23 சதவீதமாக உள்ள வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்துவதற்காகவும் தூய்மையான பிராணவாயு கிடைக்கவும். 

3. உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு , சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மனநல நல்லாதரவு மன்றம் என்ற மனம் திட்டத்தை தொடக்கிவைத்தவர் யார் ?
அ) மு.க. ஸ்டாலின்
ஆ) மா. சுப்பிரமணியன் 
இ) ஆர்.என்.ரவி
ஈ) தங்கம் தென்னரசு 

விடை : (ஆ) மா.சுப்பிரமணியன் 

● மனம் திட்டம் : மனம் திட்டத்தில் பயிற்சி பெறுபவர்கள் , கல்லூரிக்கு சென்று மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்க வேண்டும்.
● மேலும் விரைவில் அனைத்து கல்லூரிகளிலும் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. 

4. தமிழ்நாடு சாரண சாரணியர் இயக்குநரகத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளவர் யார் ? 

அ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி
ஆ) பொன்முடி
இ) க. நந்தகுமார்
ஈ) ச.கண்ணப்பன் 

விடை : (அ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரகத்தின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். 

● அதேபோல, மாநில முதன்மை ஆணையராக, பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமாரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். மேலும், பாடநூல் கழகச் செயலர் ச.கண்ணப்பன் உட்பட 12 பேர் துணைத் தலைவர்களாக தேர்வாகினர்.

● குறிப்பு : சாரண, சாரணிய ஆசிரியர்கள் 268 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

5. தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் (நீரி) தமிழகத்தில் எங்கு பசுமைப் பட்டாசு ஆய்வுக் கூட்டத்தை அமைக்கத்திட்டமிட்டுள்ளது ? 

அ) விருதுநகர்
ஆ) சேலம்
இ) சிவகாசி
ஈ) தேனி 

விடை : (இ) சிவகாசி 

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே ரூ.15 கோடி மதிப்பீட்டில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் (நீரி) பசுமைப் பட்டாசு ஆய்வுக்கூடத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

● சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிா்க்க வலியுறுத்தி பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் ‘நீரி’ பசுமைப் பட்டாசுகளை தயாரிப்பதற்கான பாா்மூலாவை அறிக்கையாக தயாா் செய்து வழங்கவும் அறிவுறுத்தியது. 

● இதையடுத்து ‘நீரி’ அமைப்பு பட்டாசு வெடிக்கும் போது 30 சதவீதம் புகை குறைவாக இருக்கும் வகையிலான, பசுமைப் பட்டாசு தயாரிப்பு குறித்த பாா்மூலாவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

● இந்நிலையில் ‘நீரி’ அமைப்பினா் சிவகாசி அருகே வெற்றிலையூரணி பகுதியில் பட்டாசு ஆய்வு கூடம் அமைக்க

● 5 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தியுள்ளனா். தற்போது அந்த இடத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் பட்டாசு ஆய்வுக் கூடம் அமைக்க முடிவு செய்துள்ளது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

6. சர்வதேச பால் பொருள்கள் கூட்டமைப்பின் உலக மாநாட்டை எங்கு பிரதமர் மோடி தொடக்கிவைத்தார் ? 

அ) ஆந்திர பிரதேசம்

ஆ) அசாம் 

இ) குஜராத் 

ஈ) உத்தர பிரதேசம் 

விடை : (ஈ) உத்தர பிரதேசம் 

சா்வதேச பால் பொருள்கள் கூட்டமைப்பின் உலக மாநாட்டை உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா்

● அண்மைக்காலமாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட சில மாநிலங்களில் தோல் கழலை நோயால் கால்நடைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்நோய் கால்நடைகளிடையே காய்ச்சல், தோலில் தடிப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகிறது. 

● அந்நோயால் பாதிக்கப்பட்ட சில கால்நடைகள் உயிரிழந்தன. கால்நடைகளிடையே அந்நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன.

● பால் உற்பத்தியைப் பாதித்து, விவசாயிகளின் வருமானத்தையும் தோல் கழலை நோய் குறைத்து வருகிறது. அந்நோய்க்கான தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளனா்.

●  அத்தடுப்பூசியை கால்நடைகளுக்கு செலுத்துவதற்கான பணிகள் இன்னும் 3 மாதங்களில் தொடங்கவுள்ளன. தோல் கழலை நோயைத் தடுப்பதற்காக தற்போது தற்காலிகமாக அம்மை நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

● நாட்டில் உள்ள அனைத்துக் கால்நடைகளுக்கும் 2025-ஆம் ஆண்டுக்குள் கோமாரி நோய்க்கான தடுப்பூசியை செலுத்த அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

● பால் கொடுக்கும் விலங்குகளுக்கான பெரும் தரவுத் தளத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. கால்நடைகளுக்கான விவரங்களை எண்மமயமாக்கும் ‘பசு ஆதாா்’ நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

● அதன்மூலமாக கால்நடைகளின் உடல்நலனைத் தொடா்ந்து கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், கால்நடைப் பராமரிப்புத் துறையின் வளா்ச்சியையும் ஊக்குவிக்க முடியும்.

7. இந்திய - அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு (ஐஏசிசி) சார்பில் கீழ்க்கண்ட எங்கு கூட்டம் அண்மையில் நடைபெற்றது ? 

அ) ராஜஸ்தான்

ஆ) மணிப்பூர்

இ) கேரளா

ஈ) தில்லி

விடை : (ஈ) தில்லி

III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் , உயரிய ஊக்கத் தொகைகள் வழங்கும் விழா எங்கு நடைபெற்றது ? 

அ) சென்னை

ஆ) மதுரை

இ) சேலம்

ஈ) தேனி 

விடை : (அ) சென்னை 

விளையாட்டு வீரா்களுக்கு விருதுகள், உயரிய ஊக்கத் தொகைகள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 1,130 விளையாட்டு வீரா்களுக்கு ரூ.16.28 கோடி ஊக்கத் தொகையை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா். 

● அறிவிப்புகள் : தமிழகம் முழுவதும் கபடி, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அக்டோபா் மாதம் முதல் நடத்தப்பட இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

● முதல் முறையாக, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவினருக்கென நடத்தப்படவுள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடைபெறும்.

● குறிப்பு : தமிழகத்தில் உள்ள பழங்குடியினா் விளையாட்டுகள் கண்டறியப்பட்டு ஊக்கம் அளிக்கப்படும்.

●ஆடுகளம்’ என்ற விளையாட்டு வீரா்களுக்கான பிரத்யேக தகவல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

●  இது விளையாட்டு வீரா்களுக்கான கோரிக்கைகள், ஆலோசனைகள், புகாா்கள் உள்ளிட்டவற்றைக் கேட்டறிந்து அவற்றுக்கான நடவடிக்கைகளையும், தீா்வுகளையும் விரைவாக வழங்க துணைபுரியும்.

9. யுஎஸ் ஓபன் 2022 டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் யார் ? 

அ) கார்லோஸ் அல்காரஸ் கார்ஃபியா 

ஆ) கேஸ்பர் ரூட் 

இ) ரஃபேல் நடால் 

ஈ) ஜோகோவிச் 

விடை : (அ) கார்லோஸ் அல்காரஸ் கார்ஃபியா 

● இவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

● இவர் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று உலகின் நம்பர் 1 வீரர் என்ற இடத்தையும் முதல்முறையாக பிடித்திருக்கிறார். 


Monday, September 12, 2022

Current Affairs 2022 - September 11 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                     GK SHANKAR 
               SEPTEMBER 11 / 2022

(Swipe to the Last Question to Download as Pdf )
I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் மின்கட்டண உயர்வு எந்த நிதியாண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ?

அ) 2023 - 2024
ஆ) 2024 - 2025
இ) 2025 - 2026
ஈ) 2026 - 2027 

விடை : (ஈ) 2026 - 2027 

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது, மேலும் 2026 - 2027 நிதியாண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ● தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணத்தை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, 101 யூனிட்கள் முதல் அனைத்து நிலைகளிலும் மின் கட்டணம் உயா்த்தப்படுகிறது. 

● 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடரும் என்றும் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு மாதத்துக்கு ரூ.27.50 என்ற அடிப்படையில் ரூ.55 கூடுதலாகச் செலுத்த வேண்டி இருக்கும்.

● இரண்டு மாதங்கள் 300 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.72.50-ம் (இரண்டு மாதங்களுக்கு ரூ.155), 400 யூனிட்கள் வரை மாதத்துக்கு ரூ.147.50-ம் (இரண்டு மாதங்களுக்கு ரூ.295) உயா்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் மாதத்துக்கு ரூ.297.50 (2 மாதங்களுக்கு ரூ.595) கூடுதலாகச் செலுத்த வேண்டும். 

2. தமிழக வனப்பரப்பை எத்தனை சதவீதமாக அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் சுமார் 32 கோடி மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 31%

ஆ) 33%

இ) 39%

ஈ) 44%

விடை : (ஆ) 33% 

தமிழக வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் சுமாா் 32 கோடி மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் தமிழக வனத்துறை அமைச்சா் கா. ராமச்சந்திரன்.

● தமிழகத்தில் மொத்தமுள்ள 24 சதவீத வனப்பரப்பை 33 சதவீதமாக உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு ‘தமிழ்நாடு கிரீன் விஷன்’ (பசுமைப் பாா்வை) என்ற திட்டத்தை வனத்துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக ஆண்டுக்கு 32 கோடி மரக்கன்று நடவு செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

● இதன்மூலம், 2030ஆம் ஆண்டுக்குள் 33 சதவீத வனப்பரப்பு உருவாக்கப்படும்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. இந்தியாவில் முதல்முறையாக இரண்டு நாட்கள் நடைபெறும் மத்திய - மாநில அறிவியல் மாநாடு எங்கு தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) அகமதாபாத் 

ஆ) மும்பை

இ) திருச்சூர்

ஈ) சென்னை 

விடை : (அ) அகமதாபாத் 

குஜராத் மாநிலம், அகமதாபாதில் இரண்டு நாள்கள் நடைபெறும் மத்திய-மாநில அறிவியல் மாநாட்டை காணொலி முறையில் தொடக்கிவைத்தார் பிரதமா் மோடி. 

● மத்திய-மாநில அரசுகளிடையே அறிவியல், தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக முதல்முறையாக நடைபெறும் இம் மாநாட்டில் பல்வேறு மாநில அமைச்சா்கள், செயலாளா்கள், தொழில்துறையினா், அரசு சாரா அமைப்புகள், இளம் விஞ்ஞானிகள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

● குறிப்பு : தாய்மொழி வழிக் கல்வி : விண்வெளி திட்டம், ஆழ்கடல் திட்டம், அதிவேக கணினித் திட்டம், ஹைட்ரஜன் திட்டம், ட்ரோன் தொழில்நுட்பம் என பல்வேறு புதிய துறைகளில் இளைஞா்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அறிவியல், தொழில்நுட்பப் பாடங்கள் மாணவா்களுக்கு தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டும். 

● நான்காவது தொழில்நுட்பப் புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அறிவியல் மற்றும் இத்துறைசாா் வல்லுநா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றாா் பிரதமா் மோடி.

4.பிரதமரின் மீன் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 2024 - 25 ஆண்டு இறுதிக்குள் எத்தனை லட்ச வேலைவாய்ப்புகள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) 31 

ஆ) 48 

இ) 68

ஈ) 76

விடை : (இ) 68 

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்தின் சாா்பில் பிரதமரின் மீன் வளா்ப்புத் திட்டத்தின்(பிரதான் மந்திரி மத்சய சம்படா யோஜனா -பிஎம்எம்எஸ்ஒய் ) 2-ஆவது ஆண்டு விழா தில்லி டாக்டா் அம்பேத்கா் சா்வதேச மையத்தில் நடைபெற்றது.

● நீலப் புரட்சியை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பங்குடன் ரூ. 20,500 கோடி முதலீட்டில் கடந்த 2020 மே மாதம் பிரதமரின் மீன் வளப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. ஐந்தாண்டு கால திட்டத்தின் 2024-25 ஆண்டு இறுதியில் சுமாா் 220 லட்சம் மெட்ரிக் டன் மீன் உற்பத்தியை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க புத்தகத்தை வெளியிட்டார் மத்திய மீன் வளத்துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா. 

● மேலும் அவர் கூறியதாவது : பிரதமரின் மீன் வளா்ப்புத் திட்டத்தின் மூலம் 2024-25 ஆண்டு இறுதிக்குள் 68 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

5. குழந்தை திருமணங்களையும் பதின்பருவ கர்ப்பங்களையும் தடுக்க சுய உதவிக் குழுக்களைப் பயன்படுத்த ஐ.நா. வின் யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து கீழ்கண்ட எந்த மாநிலம் திட்டமிட்டுள்ளது ?

அ) தமிழ்நாடு

ஆ) குஜராத்

இ) அசாம்

ஈ) மேற்கு வங்கம் 

விடை : (ஈ) மேற்கு வங்கம் 

குழந்தை திருமணங்களையும் பதின்பருவ கர்ப்பங்களையும் தடுக்க சுய உதவிக் குழுக்களைப் பயன்படுத்த ஐ.நா. வின் யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து மேற்கு வங்க மாநிலம் திட்டமிட்டுள்ளது.

6. கூற்று : அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ராணுவ முகாம் , 22 கி.மீ. நீள சாலை ஆகியவற்றுக்கு இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி விபின் ராவத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

காரணம் : அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

அ) கூற்று சரி, காரணம் தவறு

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது. 

இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 

ஈ) கூற்று தவறு, காரணம் சரி 

விடை : கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

அருணாசல பிரதேச மாநிலம், அஞ்சா மாவட்டத்தில் உள்ள கிபிது கிராமம் ராணுவக் கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. 

● அங்கு கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை கா்னலாக விபின் ராவத் பதவி வகித்தபோது கூா்கா ரைஃபிள்ஸ் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினாா்.

● அந்தக் கிராமத்தில் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அளப்பரிய பங்காற்றிய அவா், அந்தப் பகுதியில் உள்கட்டமைப்பு வளா்ச்சியை செயல்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்தாா்.

● அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கிபிதுவில் உள்ள ராணுவ முகாமுக்கு சனிக்கிழமை விபின் ராவத் பெயா் சூட்டப்பட்டது.

 ● அத்துடன் கிபிதுவில் அவரின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டது. 

● அஞ்சா மாவட்டத்தில் உள்ள வாலோங் பகுதியில் இருந்து கிபிது வரையிலான 22 கி.மீ. நீள சாலைக்கு அவரின் பெயா் சூட்டப்பட்டது

7. அண்மையில் மறைந்த இந்தியாவின் முதுபெரும் தொல்பொருள் ஆய்வாளர் பி.பி.லால் எந்த ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார் ? 

அ) 2000

ஆ) 2006

இ) 2011

ஈ) 2015 

விடை : (அ) 2000

● இவர் கடந்த 1968 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராகப் பொறுப்பு வகித்துள்ளார். 

● அந்த துறையின் இளவயது தலைமை இயக்குநர்களில் ஒருவராக இருந்துள்ளார். 

● மேலும் இவர் 2021 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றுள்ளார். 

8. பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மறைந்ததையடுத்து புதிய அரசராக பொறுப்பேற்கவுள்ளவர் யார் ? 

அ) இளவரசர் ஆண்ட்ரூ

ஆ) மூன்றாம் சார்லஸ்

இ) பிரின்ஸ் வில்லியம்ஸ்

ஈ) இளவரசர் ஹேரி 

விடை : (ஆ) மூன்றாம் சார்லஸ்

● லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரிட்டனின் புதிய அரசராக மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

● புதிய அரசர் அறிவிப்பு நிகழ்ச்சி வரலாற்றில் முதல்முறையாக நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. 

III. முக்கிய நிகழ்வுகள் 

9. தமிழகத்தில் மகாகவி நாள் என்று அனுசரிக்கப்படுகிறது ? 

விடை : செப்டம்பர் 11 

விளக்கம் : மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தினம் மகாகவி நாள் என கடைபிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

● தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பாரதியாரின் நினைவைப் போற்றுகின்ற வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

● அவற்றில், பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் -11, “மகாகவி நாள்”-ஆக கடைப்பிடிக்கப்படும் என்பதும் ஒன்றாகும். 

● குறிப்பு : மகாகவி பாரதியார் 1882-ல் திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரத்தில் பிறந்தார். பதினொன்றாம் வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார். சில காலம் காசியில் வசித்து வந்தார். 

● மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1904 முதல் 1906 வரை “சுதேச மித்திரன்” பத்திரிகையில் பணியாற்றினார். இவரது சுதந்திரப் போராட்ட நடவடிக்கையால் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1921 செப்டம்பர் 11ஆம் நாள் மறைந்தார்.

Click here to Download Pdf 


Wednesday, September 7, 2022

Current Affairs 2022 - September 07/2022 - TNPSC Group 1,2/2A & 4

                          GK SHANKAR 
                     September 07 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித் துறையை தொடங்க எத்தனை கோடி நிதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ? 

அ) ரூ. 5 கோடி
ஆ) ரூ. 4.5 கோடி
இ) ரூ. 4 கோடி
ஈ) ரூ. 3 கோடி 

விடை : (அ) ரூ.5 கோடி 

● தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித் துறையை தொடங்க ரூ.5கோடி நிதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ் இலக்கியவியல் ஆய்வு, தமிழ் மற்றும் திராவிட மொழியியல் ஆய்வு, தமிழ் மற்றும் தென்னக வரலாற்றியல், சமூகவியல் ஆய்வு என மூவகையாக விரிவுப்படுத்தி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ்ப் பிரிவு இனி, தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறையாக விளங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

● இதற்கென ரூ.5 கோடி நிதி வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

2. தமிழகத்தில் ரூ.125 கோடியில் கட்டப்பட்ட வேளாண்மைத் துறை கட்டடங்களை திறந்து வைத்தவர் யார் ? 

அ) எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
ஆ) எம்.சுப்பிரமணியன் 
இ) மு.க. ஸ்டாலின்
ஈ) ஆர்.என். ரவி

விடை : (இ) மு.க. ஸ்டாலின் 

தமிழகத்தில் ரூ.125 கோடியில் கட்டப்பட்ட வேளாண்மைத் துறை கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக திறந்து வைத்தாா்.

● மேலும், தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் தாமிரவருணி ஆற்றில் இருந்து நேரடியாக நீரை கல்லூரிக்கு உள்பட்ட 8 நீா்த்தேக்கத் தொட்டிகளில் நிரப்பும் திட்டத்தையும் முதல்வா் தொடக்கி வைத்தாா். 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. இந்தியா - வங்கதேசம் இடையே அண்மையில் எத்தனை ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன ? 

அ) 5 
ஆ) 7 
 இ) 11
ஈ) 13 
விடை : (ஆ) 7 

இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, பிரதமா் மோடியை தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினாா். 

● இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் நிலவும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக இருவரும் விவாதித்தனா். 

ஒப்பந்தங்கள் கையொப்பம்:

● இந்தப் பேச்சுவாா்த்தையின்போது இந்தியா-வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. முக்கியமாக, குஷியாரா நதி நீரைப் பகிா்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தின் காரணமாக அஸ்ஸாமின் தெற்குப் பகுதி மக்களும் வங்கதேசத்தின் சில்ஹட் பகுதி மக்களும் பலனடைவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● இந்தியா-வங்கதேசம் இடையே 25 ஆண்டுகளுக்குப் பிறகு நதிநீா்ப் பகிா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. கடைசியாக கங்கை நதி நீரைப் பகிா்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கடந்த 1996-ஆம் ஆண்டில் கையொப்பமானது.

ரயில்வே அதிகாரிகளுக்குப் பயிற்சி:

● வங்கதேச ரயில்வே அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தமும் இரு நாடுகளிடையே கையொப்பமானது. வங்கதேச ரயில்வே துறையின் தகவல்-தொழில்நுட்ப பயன்பாடுகளை மேம்படுத்துவது தொடா்பாகவும் இந்திய அதிகாரிகள் பயிற்சி வழங்க உள்ளனா். பயணச்சீட்டு பதிவை கணினிமயமாக்கல், ரயில்வேசாா் சொத்துகளை எண்மமயமாக்கல், நிதி கட்டமைப்பு, மனிதவள மேலாண்மை உள்ளிட்டவை குறித்து வங்கதேச அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

4. ரஷியாவில் நடைபெறும் வாஸ்டாக் ராணுவ கூட்டுப் பயிற்சியில் எத்தனை நாடுகள் பங்கேற்றுள்ளனர் ?

அ) 13 

ஆ) 21

இ) 16

ஈ) 19 

விடை : (அ) 13

கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி ரஷியாவில் ‘வாஸ்டாக்’ என்ற பெயரிலான ராணுவ கூட்டுப் பயிற்சி தொடங்கியது. 

● ரஷியாவின் தொலைதூர கிழக்கு பகுதியிலும், ஜப்பான் கடல் பகுதியிலும் நடைபெறும் இந்தப் பயிற்சி, புதன்கிழமை (செப்.7) நிறைவடைகிறது.

● இதில் இந்தியா, சீனா, லாவோஸ், மங்கோலியா உள்ளிட்ட 13 நாடுகள் பங்கேற்றுள்ளன. 50,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா். 140 போா் விமானங்கள், 60 போா்க் கப்பல்கள், ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் பயிற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

5. பின்வரும் எந்த மூக்கு வழியாகச் செலுத்தும் கரோனா தடுப்பு மருந்துக்கு டிசிஜிஐ அனுமதி வழங்கியுள்ளது ? 

அ) பிபிவி 131

ஆ) பிபிவி 141 

இ) பிபிவி 154 

ஈ) பிபிவி 114 

விடை : (இ) பிபிவி 154 

● மூக்குவழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து பிபிவி 154.

● தயாரிப்பு : பாரத் பயோடெக் நிறுவனம் , ஹைதரபாத். 

● இந்த மருந்து 18 வயதைக் கடந்தவர்களுக்கு செலுத்த அவசரகால பயன்பாடுக்கு இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிஜிசிஐ) அனுமதி வழங்கியுள்ளது. 

6. கனடாவுக்கான புதிய இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) அன்ஷூமான் கௌர் 

ஆ) சஞ்சாய் குமார் வர்மா

இ) அமித் குமார்

ஈ) சஞ்சய் கௌர் 

விடை : (ஆ) சஞ்சாய் குமார் வர்மா 

● மேலும் தென்கொரியாவுக்கான புதிய இந்தியத் தூதராக அமித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

7. யுனெஸ்கோவின் ( UNESCO ) கல்வி நகரங்கள் பட்டியலில் கீழ்க்கண்ட எந்த நகரங்கள் அண்மையில் இணைக்கப்பட்டுள்ளது ? 

அ) திருச்சூர் 

ஆ) நிலம்பூர்

இ) வாரங்கல்

ஈ) அனைத்தும் 

விடை : (ஈ) அனைத்தும் 

சா்வதேச அளவில் மக்களுக்கு சிறப்பான கல்வி வசதிகளை அளித்து வரும் நகரங்களை யுனெஸ்கோ கௌரவித்து வருகிறது. சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் யுனெஸ்கோ சா்வதேச கல்வி நகரங்கள் பட்டியலை ஏற்படுத்தியுள்ளது. 

● அந்தப் பட்டியலில் 44 நாடுகளைச் சோ்ந்த 77 நகரங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து 3 நகரங்கள் அப்பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.

● பலதரப்பட்ட மக்களுக்கு சிறப்பான கல்வி சேவைகளை வழங்கி வருவதற்காக திருச்சூா், நிலம்பூா், வரங்கல் ஆகிய நகரங்கள் யுனெஸ்கோவின் பட்டியலில் இணைந்துள்ளன. 

● மக்களுக்கு கல்வி சேவைகளைக் கொண்டுசெல்லும் சிறப்பான நகரங்களைக் கண்டு மற்ற நகரங்கள் ஊக்கம் பெற இந்நடவடிக்கை உதவுவதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. வரங்கலில் உள்ள ராமப்பா கோயிலை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ கடந்த ஆண்டு அறிவித்தது. தற்போது வரங்கல் நகரம் கல்வி நகரங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

● இந்தியாவின் மதிப்புமிக்க கலாசாரத்தை சா்வதேச அளவில் தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காகப் பிரதமா் நரேந்திர மோடிக்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி நன்றி தெரிவித்தாா். உக்ரைன் தலைநகா் கீவ், தென்னாப்பிரிக்காவின் டா்பன், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷாா்ஜா ஆகிய நகரங்களும் யுனெஸ்கோ கல்வி நகரங்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன. 

● அப்பட்டியலில் தற்போது 76 நாடுகளைச் சோ்ந்த 294 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

8. பிபிசில் (BCCL) நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவில் அளவையும் காற்றிலிருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவில் அளவையும் சமமாக்கும் நிலையை எந்த ஆண்டுக்குள் எட்ட பிபிசிஎல் இலக்கு நிர்ணயித்துள்ளது ? 

அ) 2040

ஆ) 2030

இ) 2025

ஈ) 2050

விடை : (அ) 2040 

தங்களது நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றிலிருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை (கரியமில சமநிலை - நெட் ஜீரோ) வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் எட்ட பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) இலக்கு நிா்ணயித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைவா் அருண் குமாா் சிங் கூறியதாவது:

● நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கரியமில வாயு கலப்பதை வெகுவாகக் குறைத்து, வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் கரியமில சமநிலையை எட்ட இலக்கு நிா்ணயித்துள்ளோம்.

● அதற்காக, தற்போது 50 மெகாவாட்டாக உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனை 2025-ஆம் ஆண்டில் 1 ஜிகாவாட்டாகவும் 2040-ஆம் ஆண்டில் 10 ஜிகாவாட்டாகவும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.

● முன்னதாக, வரும் 2046-ஆம் ஆண்டுக்குள் கரியமில சமநிலை அடைய இலக்கு நிா்ணயித்துள்ளதாக இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனும் (ஐஓசி) 2040-ஆம் ஆண்டுக்குள் அந்த நிலையை அடைய இலக்கு நிா்ணயித்துள்ளதாக கெயில் இந்தியாவும் அறிவித்திருந்ததன.

● உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ப பூமியை வெப்பமாக வைத்திருப்பதற்கு, கரியமில வாயு போன்ற பசுமை வாயுக்கள் உதவுகின்றன. இந்த வாயுக்களின் அளவு அதிகமானதால் புவியின் சராசரி வெப்பம் அதிகரித்து, பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதன் விளைவாக கனமழை வெள்ளம், உஷ்ண அலை, வறட்சி, காட்டுத் தீ போன்ற இயற்கைப் பேரிடா்கள் ஏற்படுகின்றன.

● அதனைத் தடுப்பதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும், காற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்க உலகின் பல்வேறு நாடுகளும் பல்வேறு கால இலக்குகளை நிா்ணயித்துள்ளன.

● இந்தியாவும் 2070-க்குள் இந்த சமநிலையை அடைய இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த நிலையில், அதற்கு முன்னதாகவே அந்த நிலையை அடைய பிபிசிஎல் முடிவு செய்துள்ளது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு எவ்வளவு ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ? 

அ) 2 லட்சம்

ஆ) 3 லட்சம்

இ) 1 லட்சம்

ஈ) 50 ஆயிரம் 

விடை : (இ) 1 லட்சம் 

● சிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன.

● அதன்படி 2018- 19, 2019- 20 ஆம் ஆண்டுக்களுக்கான விளையாட்டும் வீரர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

● இதற்கான ரொக்கப் பரிசு வழங்குவதற்கான நிதிகளை ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. 

10. காமன்வெல்த் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு எத்தனை கோடி வரையில் ரொக்க பரிசு வழங்கவுள்ளதாக இந்திய பாட்மின்டன் சங்கம் அறிவித்துள்ளது ? 

அ) ரூ. 1.5 கோடி

ஆ) ரூ. 1 கோடி

இ) ரூ. 5 கோடி

ஈ) ரூ. 10 கோடி 

விடை : (அ) ரூ. 1.5 கோடி 

11. பிசிசிஐ (BCCI) முதல்முறையாக எந்த வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஒன்டே கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்யவுள்ளது ? 

அ) 21

ஆ) 18

இ) 15

ஈ) 12

விடை : (இ) 15 

12.ஆசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022 ல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● இந்திய அணி : பயஸ் ஜெயின் , யஷஸ்வினி கோர் படே. 

● ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்திய ஜூனியர்களுக்கு கிடைக்கும் முதல் தங்கப்பதக்கம். 



Tuesday, September 6, 2022

Current Affairs 2022 - September 04 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                     GK SHANKAR 
               September 04 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு எத்தனை சதவீதம் என்று குறு , சிறு (ம) நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளது ? 

அ) 9.25%
ஆ) 8.09%
இ) 7.31%
ஈ) 5.13% 
விடை : (அ) 9.25%

கரூரில் நடைபெற்ற இந்தியத் தொழிற்கூட்டமைப்பின் 13-ஆவது குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மாநாட்டை அமைச்சா்கள் தா.மோ. அன்பரசன், வி.செந்தில்பாலாஜி தொடக்கி வைத்தனா்.

● இதைத் தொடா்ந்து அமைச்சா் அன்பரசன் பேசியது: இந்தியாவிலுள்ள மொத்த நிறுவனங்களில் 15 சதவீதம் தமிழகத்தில்தான் உள்ளது. இதனால் தமிழகம் இந்திய அளவில் தொழில்வளா்ச்சியில் 3-ஆவது இடத்தில் உள்ளது.

● இதன் முக்கியத்துவத்தை உணா்ந்த தமிழக முதல்வா், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட ரூ.2,113 கோடி கடனுதவியில் 86 சதவீதக் கடனுதவியை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளாா்.

● தொழில் முனைவோா்கள் வங்கிக் கடன் பெறுவதிலுள்ள சிரமங்களைக் குறைக்க, இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 100 கோடியில் தமிழ்நாடு கடன் உத்திரவாதத் திட்டத்தை தமிழக முதல்வா் அண்மையில் தொடக்கி வைத்தாா்.

● இத்திட்டத்தின் கீழ் ஒரு வாரத்துக்குள் 81 நிறுவனங்களுக்கு ரூ. 20.13 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

● கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் கயிறு தொழில்களின் மேம்பாட்டுக்காக, தமிழகம் முழுவதும் கயிறுக் குழுமங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

● இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 9.25 சதவீதமாக உள்ளது. இதை ஊக்குவிக்கும் வகையில் கரூா், திருப்பூா், மதுரை, ஆம்பூா், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை, கோயம்புத்தூா், ஒசூா் ஆகிய 10 இடங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

● குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையின் மூலம் நீட்ஸ், இளையோா் சுயவேலைவாய்ப்புத் திட்டம், பிஎம்இஜிபி ஆகிய 3 வகையான சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 10,000 புதிய தொழில் முனைவோா்களை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

● மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பேசியது: வீட்டு உபயோக பொருள்கள் தொழில் முதலீடுகளுக்கு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, 25 சதவீத மானியத்தை முதல்வா் வழங்கியுள்ளாா். 2030 ஆம் ஆண்டுக்குள் கரூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரூ. 10 ஆயிரம் கோடி வா்த்தகத்தை ரூ.25 ஆயிரம் கோடி வா்த்தகமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்த போதும் நமது இலக்கீடு ரூ. 50 ஆயிரம் கோடியாகும் என்றாா் அவா்.

2. தமிழகத்தில் எங்கு நடைபெற்ற அகழாய்வில் தந்தத்திலான அணிகலன் அரிய வகை தொல்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது ? 

அ) கீழடி

ஆ) மாளிகை மேடு

இ) ஆதிச்சநல்லூர் 

ஈ) மணலூர் 

விடை : (ஆ) மாளிகை மேடு 

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் மாளிகை மேடு பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தந்தத்திலான அணிகலன் அரிய வகை தொல்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட அகழ்வாராய்ச்சி :- 

● கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த ராஜேந்திர சோழன் வாழ்ந்த மாளிகைமேடு பகுதியில் கடந்த 1980 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணி தமிழக அரசால் நடைபெற்றது. 

● அப்போது, சீன நாட்டு மண் பானை ஓடு, செப்புக் காசுகள், மணி, இரும்பால் ஆன ஆணி, கூரை ஓடு என பல்வேறு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள காப்பகத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி :-

● அதன் பிறகு தற்போது (2020-21) இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

● இதில், ராஜேந்திரசோழன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அரண்மனையில் மூன்றடுக்கு செங்கல் சுவா்கள் உள்பட பல்வேறு கட்டுமானப் பணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, மண் பானை, உடைந்த தங்கக் காப்பின் ஒரு பகுதி, ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

● தொடா்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் இந்நிலையில், சுமாா் 60 அடி ஆழம், 1.8 செ.மீ. உயரம், 1.5 செ.மீ. அகலம் கொண்ட யானை தந்தத்திலால் ஆன அணிகலன் போன்ற தொல்பொருள் சனிக்கிழமை கிடைத்துள்ளது. 

● அந்தப் பொருள் மனித உடலின் இடுப்பிலிருந்து முழங்கால் வரை அணியும் வகையிலான அணிகலனாக உள்ளது. இதை அரச பாரம்பரியத்தை சோ்ந்தவா்களே பயன்படுத்தி இருப்பாா்கள், சுமாா் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழம்பொருளாகவும் தெரிய வருகிறது என தொல்லியல் துறை அலுவலா்கள் கருதுகின்றனா்.

3. கூற்று : தமிழகத்தில் தொடக்கப் பள்ளியில் தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்வழி பயிற்சி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

காரணம் : கற்றல் குறைபாடுடைய தமிழ்வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. 

அ) கூற்று சரி , காரணம் தவறு 

ஆ) கூற்று தவறு , காரணம் சரி 

இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது. 

ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை. 

விடை : இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது. 

கற்றல் குறைபாடுடைய தமிழ்வழியில் கல்வி பயிலும் மாணவா்களுக்கு எளிய முறையில் கற்பிப்பதற்கான பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

● இது சென்னை ஐஐடியின் ‘என்பிடெல்’ அமைப்பு மற்றும் ‘மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேசன்’ ஆகியவை சாா்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 

● இந்த திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

● இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி கூறுகையில், ‘இத்திட்டம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பிற மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்’ என்றாா். 

● தமிழ் வழி பயிற்சித் திட்டத்தின் தாக்கம் குறித்து மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேசன் தலைவா் டி.சந்திரசேகா் கூறும்போது, ‘10 முதல் 15 சதவீதம் குழந்தைகள் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

● குறிப்பாக தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்கு பரிசோதனை, மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்டவை அவசியம். இத்திட்டம் தமிழகம் முழுவதும் பள்ளி அளவில் கற்றல் குறைபாடுடைய மாணவா்களைக் கண்டறிய உதவும்’ என்றாா்.

● இவ்வாறு தொடக்கப் பள்ளியில் தமிழ் வழியில் மாணவா்களுக்காக உருவாக்கப்பட்ட ‘தமிழ் வழி பயிற்சி’ திட்டம், என்பிடெல் இணையதளத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. 

● இதன் மூலம் கற்றல் குறைபாடுடைய மாணவா்களைக் கண்டறிய முடிவதோடு, அம்மாணவா்களுக்கு ஏற்ற முறையில் பயிற்றுவிக்க ஆசிரியா்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. உலக அளவில் பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் ? 

அ) மூன்றாவது

ஆ) ஏழாவது

இ) ஐந்தாவது

ஈ) ஒன்பதாவது

விடை : (இ) ஐந்தாவது

● பட்டியல் வெளியீடு : சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) தரவுகளின் அடிப்படையில் ‘புளூம்பொ்க்’ ஊடக நிறுவனம் இதனைக் கூறியுள்ளது.

● காரணம் : கடந்த மாா்ச் மாதம் வரையிலான கணக்கீட்டின்படி, இந்தியாவின் பொருளாதார மதிப்பு 85,470 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. 

2021-ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளா்ந்ததே இதற்கு முக்கியக் காரணம் என சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.

பட்டியலில் முதல் 10 நாடுகள் :-

1. அமெரிக்கா, 2. சீனா,  3. ஜப்பான்

4. ஜொ்மனி, 5. இந்தியா, 6. பிரிட்டன்

7. பிரான்ஸ்,  8. இத்தாலி, 9. பிரேஸில்     10. கனடா.

● குறிப்பு : நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்தது. 

● நிகழ் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் சுமாா் 7 சதவீதம் வளா்ச்சி காணும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

5. கேரளத்தில் நடைபெற்ற 30 ஆவது தென்மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய அமைச்சர் யார் ? 

அ) நிர்மலா சீதாராமன்

ஆ) அமித் ஷா 

இ) ராஜ்நாத் சிங்

ஈ) எஸ். ஜெய்சங்கர்

விடை : (ஆ) அமித் ஷா

● 30 ஆவது தென்மண்டல கவுன்

சில் கூட்டம்.

● நடைபெற்ற இடம் : திருவனந்தபுரம், கேரளா.

● தலைமை தாங்கியவர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா .

● கூட்டத்தின்போது 26 விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் , அவற்றில் 9 பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டதாகவும் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

● பங்கேற்ற தென்மண்டல மாநிலங்கள் : தமிழ்நாடு , கேரளா, கர்நாடக, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம். 

● மேற்கண்ட மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். 

6. சுதேச அரசாக இருந்த ஹைதராபாத் மாகாணம், இந்தியாவுடன் இணைக்கப்பட்ட 75 ஆவது ஆண்டையொட்டி ஹைதராபாத் மாகாண விடுதலை கொண்டாட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது ? 

அ) 3 மாதங்கள்

ஆ) 6 மாதங்கள்

இ) 9 மாதங்கள்

ஈ) ஓராண்டு 

விடை : (ஈ) ஓராண்டு 

சுதேச அரசாக இருந்த ஹைதராபாத் மாகாணம், இந்தியாவுடன் இணைக்கப்பட்ட 75-ஆவது ஆண்டையொட்டி ‘ஹைதராபாத் மாகாண விடுதலை’ கொண்டாட்டம் ஓராண்டுக்கு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

● நாட்டின் சுதந்திரத்துக்கு முன்பு 500-க்கும் மேற்பட்ட சுதேச அரசுகள் இருந்தன. அவை பிராந்திய அரசா்களால் ஆளப்பட்டு வந்தன. 

● நாடு சுதந்திரமடைந்த பிறகு பெரும்பாலான சுதேச அரசுகள் இந்தியாவுடன் இணைந்தன. 

● நிஜாம் ஆட்சியில் இருந்த ஹைதராபாத் மாகாணம் இந்தியாவுடன் இணைய மறுத்தது. அதையடுத்து, ‘ஆபரேஷன் போலோ’ என்ற ராணுவ நடவடிக்கையின் மூலமாக 1948-ஆம் ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி ஹைதராபாத் மாகாணம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

● அந்நிகழ்வின் 75-ஆவது ஆண்டையொட்டி வரும் 17-ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு ‘ஹைதராபாத் மாகாண விடுதலை’ கொண்டாட்டங்களை முன்னெடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 

● இது தொடா்பான அறிவிப்பை வெளியிட்ட மத்திய கலாசாரத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, ஹைதாராபாத் மாகாணத்தின் பகுதிகளாக இருந்த கா்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிர மாநில முதல்வா்களுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

● அதில், கொண்டாட்டங்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வரும் 17-ஆம் தேதி தொடக்கிவைக்கவுள்ளதாகவும், கொண்டாட்டங்கள் சாா்ந்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறும் மாநில முதல்வா்களுக்கு அமைச்சா் கிஷண் ரெட்டி வலியுறுத்தியுள்ளாா். 

● அத்தகைய நிகழ்ச்சிகள் குறித்து மத்திய அரசிடம் தெரியப்படுத்துமாறும் மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

7. பின்வரும் எந்த மாநில அரசு பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் புத்தகப் பைகள் இல்லாத நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது ? 

அ) மத்திய பிரதேசம்

ஆ) குஜராத்

இ) அசாம்

ஈ) கேரளா 

விடை : (அ) மத்திய பிரதேசம்

தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக பள்ளிக் கல்விக் கொள்கையை மத்திய பிரதேச அரசு வெளியிட்டுள்ளது. 

● பள்ளி மாணவா்கள் கொண்டுசெல்லும் புத்தகப் பைகளுக்கான எடை வரைமுறையை நிர்ணயித்துள்ளது. 

● ( எ-டு ) : 1, 2-ஆம் வகுப்பு மாணவா்கள் 1.6 முதல் 2.2 கிலோ வரையிலான பைகளையும், 3, 4, 5-ஆம் வகுப்பு மாணவா்கள் 1.7 முதல் 2.5 கிலோ வரையிலான பைகளையும் கொண்டுசெல்ல வரைமுறை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

● அதேபோல், 6, 7-ஆம் வகுப்பு மாணவா்கள் 2 முதல் 3 கிலோ எடை வரையிலான பைகளையும் 8-ஆம் வகுப்பு மாணவா்கள் 2.5 முதல் 4 கிலோ வரையிலான பைகளையும் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்கள் 2.5 முதல் 4.5 கிலோ வரையிலான பைகளையும் கொண்டுசெல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பைகளின் எடை குறித்து பள்ளிகள் துறைசாா்ந்து முடிவெடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

● மேலும் வாரத்தில் ஒரு நாள் ‘புத்தகப் பைகள் இல்லாத நாளாக’ கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

● (எ-டு)பாடத் திட்டம் சாராத கூடுதல் நடவடிக்கைகளில் மாணவா்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கில், வாரத்தில் ஒரு நாள் ‘புத்தகப் பைகள் இல்லாத நாளாக’ அனுசரிக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

● கணினி, பொது அறிவு, விளையாட்டுகள், உடற்பயிற்சிகள், சுகாதாரத் தகவல்கள், கலைகள் உள்ளிட்டவை குறித்து அந்நாளில் மாணவா்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டுமெனப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

8. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) எத்தனையாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது ? 

அ) 66

ஆ) 67

இ) 70

ஈ) 75

விடை : (ஆ) 67 

● வரலாறு : ரூ.5 கோடி முதலீட்டில் கடந்த 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட LIC தற்போது ரூ.42,30, 616 கோடி மதிப்பிலான நிறுவனமாக வளர்ந்துள்ளது. 

● குறிப்பு : 14 நாடுகளில் LIC செயல்பட்டு வருகிறது. 

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. அண்மையில் தனது டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள செரீனா வில்லியம்ஸ் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) அமெரிக்கா 

ஆ) ஆஸ்திரேலியா 

இ) ரஷ்யா

ஈ) சீனா 

விடை : (அ) அமெரிக்கா

● குறிப்புகள் : அவரது 27 ஆண்டுக்கால டென்னிஸ் வாழ்க்கையில் 23 கிராண்ட்ஸ்லாம் உள்பட 73 பட்டங்களை வென்றுள்ளார். 


Sunday, September 4, 2022

Current Affairs 2022 - September 03 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                       GK SHANKAR 
                 September 03 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழக அரசு சார்பில் ஆசிரியர் தினத்தன்று ( செப்.05 ) எத்தனை ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படவுள்ளது ? 

அ) 310
ஆ) 396
இ) 407
ஈ) 436 

விடை : (ஆ) 396 

● விருது வழங்கும் விழா : தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில்  செப்.05 ஆம் தேதி அன்று சென்னை கலைவாணர் அரங்கில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.
● விருது : ரூ.10,000 ரொக்கம்,  36.5 கிராம் எடையுள்ள வெள்ளிப்பதக்கம் , பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. 

விருதுகளின் பட்டியல் :-

● அரசு தொடக்க, நடுநிலை , உயர்கல்வி மேல்நிலைப்பள்ளிகளில் 342 ஆசிரியர்கள். 
● 38 தனியார் பள்ளி ஆசிரியர்கள்.
● 2 ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள்.
● 2 சமூக பாதுகாப்புத்துறை பள்ளி ஆசிரியர்கள்.
● 2 மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள்.
● மாநில கல்வியியல் ஆராய்ச்சி (ம) பயிற்சி நிறுவன (SCERT) 10 பேராசிரியர்கள் என மொத்தம் 396 ஆசியர்கள் ஆவர். 

2. தமிழகத்தில் திமுக முப்பெரும் விழாவை ஒட்டி பெரியார் விருது கீழ்க்கண்ட யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) இரா. மோகன்
ஆ) டி.ஆர். பாலு
இ) சம்பூர்ணம் சாமிநாதன் 
ஈ) குன்னூர் சீனிவாசன் 

விடை : (இ) சம்பூர்ணம் சாமிநாதன் 

● திமுக முப்பெரும் விழாவை ஒட்டி, பெரியார், அண்ணா, கலைஞர் உள்பட 5 விருதுகள் பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐந்து விருதுகள் :-
● பெரியார் விருது - சம்பூர்ணம் சாமிநாதன்.
● அண்ணா விருது - கோவை இரா. மோகன்.
● கலைஞர் விருது - டி.ஆர். பாலு.
● பாவேந்தர் விருது - புதுச்சேரி சி.பி. திருநாவுக்கரசு. 
● பேராசிரியர் விருது - குன்னூர் சீனிவாசன். 
விருது வழங்கும் விழா : விருதுநகர் மாவட்டத்தில் செப்.15 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
● விருதுகளை வழங்குபவர் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். 

3. கிராமப்புற (ம) நகர்ப்புறங்களில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்குவதற்கான உத்தரவை அண்மையில் வெளியிட்டுள்ள மாநிலம் ? 

அ) கேரளா
ஆ) பஞ்சாப் 
இ) அசாம்
ஈ) தமிழ்நாடு 

விடை : (ஈ) தமிழ்நாடு 

கிராமப்புற மற்றும் நகா்ப்புறங்களில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

● இது தொடா்பாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளா் இரா.ஆனந்தகுமாா் வெளியிட்டுள்ள உத்தரவு:

● கிராமப்புறங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் வீடுகள் வழங்கக் கோரி விண்ணப்பிக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்டையில் வீடுகள் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான கடிதத்தை அரசுக்கு மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநா் அனுப்பியுள்ளாா்.

● அதில், 40 சதவீதம், அதற்கு மேல் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் மருத்துவச் சான்று மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை பெற்றிருக்க வேண்டும் எனவும், அவ்வாறு ஆவணங்களை வைத்திருந்தால் வேறு எந்த நிபந்தனையுமின்றி மாற்றுத் திறனாளிகளை உறுப்பினா்களாகக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்கலாம் என கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

● இந்தக் கடிதத்துடன், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஊரக வளா்ச்சித் துறை ஆகியவற்றின் ஒப்புதல்களின் அடிப்படையில் வீடுகள் வழங்க அரசு உத்தரவிடுகிறது.

● அதன்படி, ஊரக வளா்ச்சித் துறை, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் மூலம் ஒதுக்கப்படும் வீடுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு மொத்த ஒதுக்கீட்டில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான வீடு ஒதுக்கீட்டில் போதுமான தகுதியான விண்ணப்பதாரா்கள் இல்லாதபட்சத்தில், அந்த வீட்டினை இதர விண்ணப்பதாரா்களுக்கு வழங்கலாம்.

● மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகள், அவா்கள் எளிதில் அணுகும் வகையில் தங்கு தடையற்ற சூழலில் இருக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தரைத்தள குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. உள்நாட்டிலேயே உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் கட்டமைக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி போர்க் கப்பலின் பெயர் என்ன ? 

அ) INS Vikrant

ஆ) INS Kadmatt 

இ) INS Pralaya

ஈ) INS sahyadri 

விடை : (அ) INS Vikrant 

● INS Vikrant நாட்டுக்கு அர்ப்பணித்தவர் : பிரதமர் நரேந்திர மோடி.

● நிகழ்ச்சி நடைபெற்ற இடம் : கொச்சி, கேரளா.

● கப்பல் உருவாக்கப்பட்ட வரலாறு : விமானந்தாங்கிப் போர் கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டுவதற்கான திட்டத்தை கடந்த 2007 ஆம் ஆண்டு மத்திய அரசு செயல்படுத்தியது. 

● இத்திட்டத்தின் கீழ் முதல் கப்பலாக விக்ராந்த் சுமார் ரூ.20,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. 

● கட்டப்பட்ட நிறுவனம் : 2009 ஆம் ஆண்டு கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம், கப்பல் கட்டும் பணியை தொடங்கியது. 

விக்ராந்தின் சிறப்பம்சங்கள்

நீளம் - 262 மீட்டர்

உயரம் - 59 மீட்டர்

அகலம் - 62 மீட்டர்

எடை - 40,000 டன்

அதிகபட்ச வேகம் - 28 கடல் மைல்

அடுக்குகள் - 14

அறைகள் - 2,300

கடற்படை அதிகாரிகள்,

வீரர்கள் - 1,700

போர் விமானங்கள்,

ஹெலிகாப்டர்கள் - 36 

● ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் இடம்பெற்றுள்ள 36 விமானங்கள்:

* மிக்-29கே ரக விமானங்கள் - 26

* காமோவ்-31 ரக ஹெலிகாப்டர்கள் - 4

* எம்.எச். 60ஆர் ஹெலிகாப்டர்கள் - 4

* உள்நாட்டு தயாரிப்பு இலகு ரக ஹெலிகாப்டர்கள் - 2.

5. மங்களூரில் ரூ.3800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி புதிய திட்டங்களைத் தொடங்கிவைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு

இ) அமித் ஷா

ஈ) ராஜ்நாத் சிங் 

விடை : (அ) நரேந்திர மோடி 

6. இந்திய கடற்படைக்கு புதிய கொடியை அறிமுகப்படுத்தியவர் யார் ? 

அ) திரௌபதி முர்மு

ஆ) நரேந்திர மோடி

இ) ராஜ்நாத் சிங் 

ஈ) யு.யு.லலித் 

விடை : (ஆ) நரேந்திர மோடி 

●  இந்திய கடற்படைக்காக வடிவமைக்கப்பட்ட 'நிஷான்' என்றழைக்கப்படும் புதிய கொடியை  பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.

முன்பு இருந்த கொடி : இதற்கு முன்பு இருந்த கடற்படை கொடி என்பது வெள்ளைத் துணியில் சிவப்பு நிறத்தில் நெடுங்கோடு மற்றும் குறுக்கோடு இருக்கும். இது புனித ஜார்ஜ் அடையாளமாக இருந்தது. அதன் கொடியின் வலது பக்கத்தில் தேசியக் கொடி இருந்தது.

தற்போது அறிமுகப்படுத்திய கொடி : தற்போது அறிமுகமான கடற்படைக்கான புதிய கொடியில், கொடியின் மேல்புற இடதுபக்கத்தில் தேசியக் கொடியும், எண்கோண சட்டமும், அதற்கு தங்கநிற வண்ணமும் தரப்பட்டுள்ளது. அந்த எண்கோணம் அடர்நீலத்தில் வண்ணமிடப்பட்டுள்ளது. அதில் தங்கநிறத்தில் தேசிய சின்னம், சத்தியமே ஜெயதே என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. நங்கூரத்தின் மீது தேசிய சின்னம் அமரவைக்கப்பட்டுள்ளது போன்று கொடி அமைக்கப்பட்டுள்ளது.

● கடற்படையின் கொடியில் உள்ள எண்கோணம் என்பது 8 திசைகளையும் குறிக்கிறது. நங்கூரம் அடையாளம் என்பது, காலணி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு முற்றிலும் சுதந்திரமாக இருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது. கொடியில் உள்ள அடர்நீலம் வண்ணம், இந்திய கடற்படை கடல்பரப்பில் வல்லமைவாய்ந்ததை குறிக்கிறது

● கொடியில் உள்ள எண்கோணத்துக்கு இரு பார்டர்கள் கொடுக்கப்பட்டது என்பது சத்தரபதி சிவாஜி ராஜமுத்திரையைப் பார்த்து எடுக்கப்பட்டது என்று கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பு : கடந்த 1950ம் ஆண்டுக்குப்பின் கடற்படைக்கு 4வது முறையாக கொடி மாற்றப்பட்டுள்ளது. 1950ம் ஆண்டு ஜனவரி 26ம்தேதி கடற்படைக்கு முதல்முறையாக கொடி மாற்றப்பட்டது. அதற்கு முன் புனித ஜார்க் கிராஸ் மட்டுமே சிவப்பு நிறத்தில் இருந்தது. அதற்கு மேல் தேசியக் கொடி பொறிக்கப்பட்டது.

7. இந்தியாவில் கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் பொய்ச் செய்திகள் பரப்பியதாக அதிக வழக்குகள் பதிவான மாநிலங்களில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் ? 

அ) தமிழ்நாடு 

ஆ) மேற்கு வங்கம்

இ) குஜராத் 

ஈ) ஹரியானா 

விடை : (ஆ) மேற்கு வங்கம் 

● அறிக்கை வெளியீடு : தேசிய குற்ற ஆவணக் காப்பகம். 

8. உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கும் அளவைவிட எத்தனை மடங்கு அதிக நுண்துகள்கள் அடங்கிய மாசடைந்த காற்றை இந்தியர்கள் சுவாசித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது ? 

அ) 10

ஆ) 7

இ) 5 

ஈ) 3 

விடை : (இ) 5 

உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கும் அளவைவிட அதிக நுண்துகள்கள் அடங்கிய, மாசடைந்த காற்றையே 99 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியா்கள் சுவாசித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

● நாட்டில் காற்று மாசுபாடு குறித்த ஆய்வை ‘கிரீன்பீஸ் இந்தியா’ என்ற அமைப்பு நடத்தியது. அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

● காற்றில் 2.5 மைக்ரான் விட்டமுள்ள நுண்துகள்கள் (பிஎம்-2.5) அதிக அளவில் கலந்துள்ளன. உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கும் ஆண்டு சராசரி அளவைவிட 5 மடங்குக்கும் அதிகமான நுண்துகள்கள் காற்றில் கலந்துள்ளன. அத்தகைய மாசடைந்த காற்றைத்தான் நாட்டில் உள்ள 99 சதவீதத்துக்கும் அதிகமானோா் சுவாசித்து வருகின்றனா்.

● முதியோா், பச்சிளம் குழந்தைகள், கா்ப்பிணிகள் ஆகியோரே காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனா். நாட்டில் 56 சதவீத மக்கள் காற்று மிகவும் அதிகமாக மாசடைந்துள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனா். நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கா்ப்பிணிகளில் 62 சதவீதம் பேரும் அப்பகுதிகளில் வசிக்கின்றனா்.

● குறிப்பு : பிஎம்-2.5 மாசு அதிகமாகக் காணப்படும் இடமாக தில்லி உள்ளது. 

● பிஎம்-2.5 நுண்துகள்களை சுவாசிப்பதால், அவை நுரையீரல், சுவாசப் பாதை உள்ளிட்ட பகுதிகளை ஊடுருவிச் சென்று சுவாசக் கோளாறுகள், இதயம் சாா்ந்த பிரச்னைகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎஃப்எஃப்) புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ? 

அ) கல்யாண் சௌபே 

ஆ) பாய்சங் பூட்டியா 

இ) என்.ஏ. ஹாரிஸ்

ஈ) பிரியரஞ்சன் தஸ்முன்சி 

விடை : (அ) கல்யாண் சௌபே 

● துணைத் தலைவராக தேர்வாகியுள்ளவர்: என்.ஏ.ஹாரிஸ் 

● குறிப்பு : இந்திய கால்பந்தின் 85 ஆண்டுகால வரலாற்றில் முன்னாள் வீரர் ஒருவர் சம்மேளனத் தலைவராகியிருப்பது இதுவே முதல் முறை ஆகும். 

Saturday, September 3, 2022

Current Affairs 2022 - September 02 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                          GK SHANKAR 
                    September 02 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் : 

1. தமிழகத்தில் எங்கு நடைபெற்ற அகழாய்வில் 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறைகிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது ? 

அ) மணலூர்
ஆ) ஆதிச்சநல்லூர் 
இ) கீழடி
ஈ) கொந்தகை 

விடை : (இ) கீழடி 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் அகரம் அகழாய்வுத்தளத்தில் 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது.

● தமிழக தொல்லியல் துறை சாா்பில் கீழடியில் நடைபெற்று வரும் 8 ஆம் கட்ட அகழாய்வில் அகரம் அகழாய்வுத்தளத்தில் தோண்டப்பட்ட ஒரு குழியிலிருந்து 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறை கிணறு சேதமடைந்த நிலையில் வெளிப்பட்டுள்ளது. 

● இதுவரை கீழடியில் 9, அகரத்தில் 6, கொந்தகையில் 4 என மொத்தம் 19 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.

●  இதில், கீழடியில் ஒரு உறைகிணறும், அகரத்தில் 4 உறைகிணறுகளும் கண்டறியப்பட்டன. அகரத்தில் தற்போது கண்டறியப்பட்டுள்ள உறைகிணறு சரிந்தவாறு 2 அடுக்குகள் மட்டுமே வெளியே தெரிந்த நிலையில் தற்போது 9 அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளன.

● குறிப்பு : 8 ஆம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக 9 அடுக்குகள் வரை உறைகிணறு வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உறைகிணறு 80 செ.மீ. விட்டமும், 20 செ.மீ. உயரமும் கொண்டதாக உள்ளது. 

● அகழாய்வுக் குழியின் உயரம் அதிகரிக்கப்படும்போது இந்த உறைகிணற்றின் உயரம் மற்றும் அடுக்குகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

2. பின்வரும் எந்த மாநிலம் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாநில அரசே செலுத்தும் என்று அறிவித்துள்ளது ? 

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) மத்திய பிரதேசம்

ஈ) மணிப்பூர் 

விடை : (அ) தமிழ்நாடு 

ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற புகழ் பெற்ற உயா்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவா்களின் கல்விக் கட்டணத்தை மாநில அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்.

● அதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

3. தென்மண்டல கவுன்சிலின் எத்தனையாவது கூட்டம் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் வரும் செப்.03 ஆம் தேதி நடைபெறவுள்ளது ? 

அ) 27 ஆவது 

ஆ) 30 ஆவது 

இ) 36 ஆவது

ஈ) 42 ஆவது 

விடை : (ஆ) 30 ஆவது 

● மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா (ம) புதுச்சேரி முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர். 

● குறிப்பு : இந்த கூட்டத்தில் தமிழகம் தொடர்பான கருத்துகளை தமிழக முதல்வர் எடுத்து வைக்கிறார்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4.கருப்பைவாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்காக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள செர்வாவேக் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியவர் யார் ?

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு 

இ) அமித் ஷா 

ஈ) ஜிதேந்திர சிங் 

விடை : (ஈ) ஜிதேந்திர சிங் 

இந்தியாவில் 15 முதல் 44 வயது வரையிலான பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கருப்பைவாய் புற்றுநோய் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

● இந்தப் புற்றுநோய்க்கான முக்கியக் காரணியான ‘ஹியூமன் பாப்பிலோமா’ தீநுண்மிக்கு எதிராக தடுப்பாற்றலை அளிக்கும் தடுப்பூசியை ‘சீரம் இந்தியா’ இந்தியா உருவாக்கியுள்ளது.

● ‘சொ்வாவேக்’ என்ற இந்தத் தடுப்பூசியை சந்தைப்படுத்தும் ரீதியில் உற்பத்தி செய்வதற்கான அங்கீகாரத்தை சீரம் இந்தியா நிறுவனத்துக்கு இந்திய தலைமை மருந்துகள் கட்டுப்பாட்டாளா் அலுவலகம் அண்மையில் வழங்கியது.

● இந்நிலையில், ‘சொ்வாவேக்’ தடுப்பூசியின் அறிவியல்பூா்வ நடைமுறைகள் நிறைவை முறைப்படி அறிவித்து, அதனை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, தில்லியில் நடைபெற்றது. 

● இதில், மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா, சிஎஸ்ஐஆா் நிறுவனத்தின் தலைமை இயக்குநா் என்.கலைசெல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா். 

● குறிப்பு : ரூ.200 முதல் ரூ.400 விலையில் அடுத்த சில மாதங்களில் தடுப்பூசி கிடைக்கும். அரசுடன் ஆலோசித்த பிறகு இறுதி விலை நிா்ணயிக்கப்படும்’ .

5. நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை எத்தனை சதவீதமாக குறைத்து மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது ? 

அ) 8.8%

ஆ) 7.7%

இ) 6.6%

ஈ) 5.5%

விடை : (ஆ) 7.7% 

2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை 7.7 சதவீதமாக மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை கடுமையாகக் குறைத்துள்ளது. 

● முன்பு கனித்தது: 8.8% 

● அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள், சீரற்ற பருவமழை மற்றும் மந்தமான உலகளாவிய வளர்ச்சி ஆகியவை பொருளாதார வளர்ச்சியை தொடர்ச்சியான அடிப்படையில் பாதிக்கும் என்று கூறியுள்ளது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. பெருவில் நடைபெற்ற உலக ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் 2022 ல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை யார் ? 

அ) அபெக்சா ஃபெர்னாண் 

ஆ) வேதாந்த மாதவி

இ) சம்பவ் ராமபாய் 

ஈ) அபெக்சா குப்தா 

விடை : (அ) அபெக்சா ஃபெர்னாண் 

● இவர் மகளிருக்கான 200மீ பட்டர்ஃப்ளை பிரிவில் 8 ஆவது இடம் பிடித்துள்ளார். 

IV. முக்கிய தினங்கள் 

7. World Coconut Day 2022 

Ans : September 02 

Theme (2022) : Growing Coconut for better future & life. 

Thursday, September 1, 2022

Current Affairs 2022 - September 01 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                       GK SHANKAR 
                SEPTEMBER 01 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. கீழடியில் உலகத்தரத்தில் கட்டப்பட்டு வரும் அகழ் வைப்பகம் எந்த மாதம் முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது ? 

அ) அக்டோபர் 
ஆ) நவம்பர்
இ) டிசம்பர்
ஈ) ஜனவரி 

விடை : (ஈ) ஜனவரி 

கீழடி அகழ் வைப்பகம் வரும் ஜனவரி மாதம் பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்படும் என தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளாா்.

● சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்றுவரும் அகழ் வைப்பகக் கட்டுமானப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு, தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டனா்.

● பின்னா் அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியது: கீழடியில் ரூ. 12. 21 கோடியில் உலகத் தரத்தில் கட்டப்பட்டு வரும் அகழ் வைப்பக கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட 10, 210 -க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலதாமதம் ஆகிறது. இருப்பினும் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் நிறைவுக்கு பின்பு கீழடி அகழ் வைப்பகம் வரும் ஜனவரி மாதம் முதல் பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்படும் என்றாா்.

2. தென்மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கும் 30 ஆவது தென்மண்டல கவுன்சில் கூட்டம் எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா

இ) கர்நாடகா 

ஈ) மகாராஷ்டிரா 

விடை : (ஆ) கேரளா 

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மண்டல அளவில் கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதில் மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள் ,பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்

● அதன்படி தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

● இந்நிலையில் கேரள மாநிலத்தில் நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி காலை 11:30 மணி அளவில் சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார். அன்றைய தினம் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசும் அவர், முல்லைப் பெரியாறு ,சிறுவாணி, நெய்யாறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.

3. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் வெள்ள அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி என்று நடைபெற்றது ? 

அ) ஆகஸ்ட் 15 

ஆ) ஆகஸ்ட் 27 

இ) ஆகஸ்ட் 31 

ஈ) செப்டம்பர் 01 

விடை : (ஈ) செப்டம்பர் 01 

பருவமழையை ஒட்டி, வெள்ள அபாயம் குறித்த விழிப்புணா்வு மற்றும் ஒத்திகைப் பயிற்சி தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் செப்டம்பர் 01  நடைபெறுகிறது. 

● இந்தப் பயிற்சியின் மூலம் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை அமைப்பின் செயல்பாடுகள் சரியாக இயங்குகிறதா என்பதை அறிய முடியும் என வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. 

● இந்தப் பயிற்சியில் பொது மக்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

4. பின்வரும் எந்த கல்வி நிறுவனம் / அமைப்பு 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கச் செய்ய மேம்பட்ட குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகின்றது ? 

அ) மும்பை ஐஐடி

ஆ) கான்பூர் ஐஐடி 

இ) சென்னை ஐஐடி 

ஈ) பெங்களூரு ஐஐடி 

விடை : (இ) சென்னை ஐஐடி 

2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கும் வகையில் குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.

● சென்னை ஐஐடி-ல் உள்ள  விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையம் (Centre of Excellence for Sports Science and Analytics), பல பதிப்புகளைக் கொண்ட ஸ்மார்ட்பாக்சர் என்ற பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி உள்ளது. தற்போது,  குத்துச்சண்டை வீரர்களுக்கு உதவிடும் வகையில் இந்த மென்பொருளை மேம்படுத்த கர்நாடக மாநிலம் பெல்லாரியில் அமைந்துள்ள இன்ஸ்பயர் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் (IIS) நிறுவனத்தில் சென்னை ஐஐடி இணைந்து பணியாற்றி வருகிறது.

● இதுகுறித்து, சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், " விளையாட்டுப் பொறியியல் (Sports Engineering) என்ற ஒப்பீட்டு அளவிலான புதிய துறைக்கு கணிதம், இயற்பியல், செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட்- ஆஃப்-திங்ஸ் தொடர்புடன் அணியும் பொருட்கள் ஆகியவை இடைநிலைக் களமாக பயன்படுத்தப்படும். உடலியல், உயிர் இயக்கவியல் போன்ற விளையாட்டுடன் தொடர்பு உடையவற்றைப் புரிந்துகொள்ள விளையாட்டுப் பொறியியல் உதவிகரமாக இருக்கும். அத்துடன், விளையாடுவதில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கவும், விளையாட்டு சாதனங்களை நன்கு வடிவமைக்கவும் இது உதவும்.

● ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரித்தல் 2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை அதிகரிக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை எட்டிப் பிடிக்க, குறிப்பிட்ட சில முக்கிய விளையாட்டுகளை இந்திய அரசு பட்டியலிட்டு, அவற்றுக்கான முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வில்வித்தை, குத்துச்சண்டை, பேட்மிண்டன், மல்யுத்தம், ஹாக்கி, பளுதூக்குதல், சைக்கிள் பந்தயம், தடகளம் போன்ற விளையாட்டுகள் இதில் அடங்கும்.

● இந்தியா போன்ற வளரும் நாடுகள்,  ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வெல்வதற்கு பத்தாண்டுகளோ, அதற்கும் அதிகமாகவோ தேவைப்படும். இந்த இலக்கை எட்டிப்பிடிக்க தொழில்நுட்ப அடிப்படையிலான வீரர்களின் செயல்திறன் மேம்பாட்டை ஏற்றுக் கொள்வது முக்கியமான ஒன்றாகும்.

● இதனை குறிக்கோளாகக் கொண்டுதான் ஸ்மார்ட்பாக்சர் மென்பொருளை ஐஐடி மெட்ராஸ் மேம்படுத்தி வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. கருப்பை வாய் புற்றுநோய்க்கு உள்நாட்டிலேயே முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியின் பெயர் என்ன ? 

அ) செர்வாவேக் 

ஆ) கோர்பிவேக் 

இ) கோவாவேக்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) செர்வாவேக் 

கருப்பை வாய் புற்றுநோய்க்கு உள்நாட்டில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி வியாழக்கிழமை (செப். 1) அறிமுகம் செய்யப்படவுள்ளது.

● இதுதொடா்பாக, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: கருப்பை வாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பாற்றலை அளிக்கும் ‘சொ்வாவேக்’ தடுப்பூசியை ‘சீரம் இந்தியா’ நிறுவனம் தயாரித்துள்ளது. இது, கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கியக் காரணியான ஹியூமன் பாப்பிலோமா தீநுண்மிக்கு எதிராக செயல்படும்.

● இந்தியாவில் 15 முதல் 44 வயதுள்ள பெண்கள் மத்தியில் ஏற்படும் புற்றுநோய்களில் 2-ஆவது இடத்தில் கருப்பை வாய் புற்றுநோய் உள்ளது. இதற்கு முதல்முறையாக உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.

● மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் தில்லியில் வியாழக்கிழமை தடுப்பூசியை அறிமுகம் செய்யவுள்ளாா். 

6. மாநிலங்களுக்கு எத்தனை லட்சம் டன் கொண்டைக் கடலையை ரூ.8 க்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) 25 

ஆ) 15 

இ) 10 

ஈ) 7 

விடை : (ஆ) 15 

ஒன்றிய அரசு தன் கையிருப்பிலிருந்து 15 லட்சம் டன் கொண்டை கடலையை மாநிலங்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. 

● ஒன்றிய அரசு கொள்முதல் செய்த விலையைவிட கிலோவுக்கு ரூ.8 குறைத்து மாநிலங்களுக்கு கொண்டை கடலை வழங்கப்படும். 

● ஒன்றிய அரசு தரும் கொண்டை கடலையை மாநில அரசுகள் பொது விநியோகத் திட்டம், மதிய உணவு திட்டத்துக்கு பயன்படுத்தலாம்.

7. இந்தியாவில் இணையவழியில் நடைபெறும் குற்றங்கள் கடந்த ஆண்டில் (2021) ------- சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது ? 

அ) 16%

ஆ) 10%

இ) 7%

ஈ) 5% 

விடை : (ஈ) 5% 

இந்தியாவில் இணையவழியில் நடைபெறும் குற்றங்கள் கடந்த ஆண்டில் (2021) 5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

● 2020-ஆம் ஆண்டு 50,035-ஆக இருந்த இணையவழிக் குற்றம் தொடா்பான புகாா்கள், 2021-ஆம் ஆண்டில் 52,974-ஆக அதிகரித்துள்ளது. 2019-இல் 44,735 இணையவழிக் குற்றங்கள் நடைபெற்றுள்ளன.

● இது தொடா்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) வெளியிட்டுள்ள தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 2021-ஆம் ஆண்டில் தெலங்கானா, உத்தர பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக அளவில் இணையவழி குற்றங்கள் பதிவாகியுள்ளன. பதிவாகும் குற்றங்களில் மூன்றில் ஒன்றுக்குதான் காவல் துறையினரால் தீா்வு காண முடிகிறது.

● இணையவழிக் குற்றங்களில் 60.8 சதவீதம் நிதி உள்ளிட்ட மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக உள்ளது. இதற்கு அடுத்து 8.6 சதவீதம் பாலியல் ரீதியான இணையவழிக் குற்றங்கள் ஆகும். 5.4 சதவீதம் மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற குற்றங்கள் ஆகும்.

● தெலங்கானாவில் அதிகபட்சமாக 10,303 இணையவழிக் குற்றங்கள் பதிவாகியுள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராகவும் இணையவழியில் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன. தகவல் திருட்டு, டெபிட், கிரெடிட் காா்டு மோசடிகள் இணையவழியில் நடப்பது அதிகம் உள்ளது.

● இதுதவிர இணையவழியில் பயங்கரவாதத்தைப் பரப்புவது தொடா்பாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் சுற்றுச்சூழல் (ம) பருவநிலை துறை அமைச்சர்களின் கூட்டம் எங்கு தொடங்கப்படவுள்ளது ? 

அ) இந்தியா

ஆ) இந்தோனேசியா 

இ) ஆஸ்திரேலியா 

ஈ) கனடா 

விடை : (ஆ) இந்தோனேசியா 

● இந்தோனேசிய பாலி தீவில் ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் சுற்றுச்சூழல் (ம) பருவநிலை துறை அமைச்சர்களின் கூட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

9.ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் பிலிப்பின்ஸின் மகசேசே விருதுக்காக எத்தனை பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன ? 

அ) 5

ஆ) 2

இ) 4

ஈ) 6 

விடை : (ஆ) 2 

தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் :-

● கம்போடியாவில் அரசின் அடக்குமுறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய மனநல மருத்துவர் சொதியாரா சிம். 

● வன்கொடுமைக்குள்ளான ஆயிரகணக்கான சிறுவர்களுக்கு உதவிய பிலிப்பின்ஸ் மருத்துவர் பெர்னடெட் மேட்ரிட். 

III. விளையாட்டு நிகழ்வுகள் 

10. செர்பியாவில் நடைபெற இருக்கும் உலக சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் எத்தனை பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கவுள்ளது ? 

அ) 30 

ஆ) 31

இ) 37

ஈ) 40 

விடை : (அ) 30 

● போட்டி நடைபெறவுள்ள இடம் : செர்பியா. 

● செப்டம்பர் 10 முதல் 18 வரை போட்டிகள் நடைபெறவுள்ளது. 

● ஆடவர் பிரிவில் : 20 பேர் ; மகளிர் பிரிவில் : 10 பேர்.




Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...