● சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிா்க்க வலியுறுத்தி பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் ‘நீரி’ பசுமைப் பட்டாசுகளை தயாரிப்பதற்கான பாா்மூலாவை அறிக்கையாக தயாா் செய்து வழங்கவும் அறிவுறுத்தியது.
● இதையடுத்து ‘நீரி’ அமைப்பு பட்டாசு வெடிக்கும் போது 30 சதவீதம் புகை குறைவாக இருக்கும் வகையிலான, பசுமைப் பட்டாசு தயாரிப்பு குறித்த பாா்மூலாவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
● இந்நிலையில் ‘நீரி’ அமைப்பினா் சிவகாசி அருகே வெற்றிலையூரணி பகுதியில் பட்டாசு ஆய்வு கூடம் அமைக்க
● 5 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தியுள்ளனா். தற்போது அந்த இடத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் பட்டாசு ஆய்வுக் கூடம் அமைக்க முடிவு செய்துள்ளது.
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
6. சர்வதேச பால் பொருள்கள் கூட்டமைப்பின் உலக மாநாட்டை எங்கு பிரதமர் மோடி தொடக்கிவைத்தார் ?
அ) ஆந்திர பிரதேசம்
ஆ) அசாம்
இ) குஜராத்
ஈ) உத்தர பிரதேசம்
விடை : (ஈ) உத்தர பிரதேசம்
● சா்வதேச பால் பொருள்கள் கூட்டமைப்பின் உலக மாநாட்டை உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா்
● அண்மைக்காலமாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட சில மாநிலங்களில் தோல் கழலை நோயால் கால்நடைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்நோய் கால்நடைகளிடையே காய்ச்சல், தோலில் தடிப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகிறது.
● அந்நோயால் பாதிக்கப்பட்ட சில கால்நடைகள் உயிரிழந்தன. கால்நடைகளிடையே அந்நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன.
● பால் உற்பத்தியைப் பாதித்து, விவசாயிகளின் வருமானத்தையும் தோல் கழலை நோய் குறைத்து வருகிறது. அந்நோய்க்கான தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளனா்.
● அத்தடுப்பூசியை கால்நடைகளுக்கு செலுத்துவதற்கான பணிகள் இன்னும் 3 மாதங்களில் தொடங்கவுள்ளன. தோல் கழலை நோயைத் தடுப்பதற்காக தற்போது தற்காலிகமாக அம்மை நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
● நாட்டில் உள்ள அனைத்துக் கால்நடைகளுக்கும் 2025-ஆம் ஆண்டுக்குள் கோமாரி நோய்க்கான தடுப்பூசியை செலுத்த அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
● பால் கொடுக்கும் விலங்குகளுக்கான பெரும் தரவுத் தளத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. கால்நடைகளுக்கான விவரங்களை எண்மமயமாக்கும் ‘பசு ஆதாா்’ நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
● அதன்மூலமாக கால்நடைகளின் உடல்நலனைத் தொடா்ந்து கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், கால்நடைப் பராமரிப்புத் துறையின் வளா்ச்சியையும் ஊக்குவிக்க முடியும்.
7. இந்திய - அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு (ஐஏசிசி) சார்பில் கீழ்க்கண்ட எங்கு கூட்டம் அண்மையில் நடைபெற்றது ?
அ) ராஜஸ்தான்
ஆ) மணிப்பூர்
இ) கேரளா
ஈ) தில்லி
விடை : (ஈ) தில்லி
III. விளையாட்டு நிகழ்வுகள்
8. தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் , உயரிய ஊக்கத் தொகைகள் வழங்கும் விழா எங்கு நடைபெற்றது ?
அ) சென்னை
ஆ) மதுரை
இ) சேலம்
ஈ) தேனி
விடை : (அ) சென்னை
● விளையாட்டு வீரா்களுக்கு விருதுகள், உயரிய ஊக்கத் தொகைகள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 1,130 விளையாட்டு வீரா்களுக்கு ரூ.16.28 கோடி ஊக்கத் தொகையை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.
● அறிவிப்புகள் : தமிழகம் முழுவதும் கபடி, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அக்டோபா் மாதம் முதல் நடத்தப்பட இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
● முதல் முறையாக, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவினருக்கென நடத்தப்படவுள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடைபெறும்.
● குறிப்பு : தமிழகத்தில் உள்ள பழங்குடியினா் விளையாட்டுகள் கண்டறியப்பட்டு ஊக்கம் அளிக்கப்படும்.
●ஆடுகளம்’ என்ற விளையாட்டு வீரா்களுக்கான பிரத்யேக தகவல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
● இது விளையாட்டு வீரா்களுக்கான கோரிக்கைகள், ஆலோசனைகள், புகாா்கள் உள்ளிட்டவற்றைக் கேட்டறிந்து அவற்றுக்கான நடவடிக்கைகளையும், தீா்வுகளையும் விரைவாக வழங்க துணைபுரியும்.
9. யுஎஸ் ஓபன் 2022 டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் யார் ?
அ) கார்லோஸ் அல்காரஸ் கார்ஃபியா
ஆ) கேஸ்பர் ரூட்
இ) ரஃபேல் நடால்
ஈ) ஜோகோவிச்
விடை : (அ) கார்லோஸ் அல்காரஸ் கார்ஃபியா
● இவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் ஆவார்.
● இவர் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று உலகின் நம்பர் 1 வீரர் என்ற இடத்தையும் முதல்முறையாக பிடித்திருக்கிறார்.
No comments:
Post a Comment