Wednesday, September 7, 2022

Current Affairs 2022 - September 07/2022 - TNPSC Group 1,2/2A & 4

                          GK SHANKAR 
                     September 07 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித் துறையை தொடங்க எத்தனை கோடி நிதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ? 

அ) ரூ. 5 கோடி
ஆ) ரூ. 4.5 கோடி
இ) ரூ. 4 கோடி
ஈ) ரூ. 3 கோடி 

விடை : (அ) ரூ.5 கோடி 

● தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித் துறையை தொடங்க ரூ.5கோடி நிதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ் இலக்கியவியல் ஆய்வு, தமிழ் மற்றும் திராவிட மொழியியல் ஆய்வு, தமிழ் மற்றும் தென்னக வரலாற்றியல், சமூகவியல் ஆய்வு என மூவகையாக விரிவுப்படுத்தி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ்ப் பிரிவு இனி, தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறையாக விளங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

● இதற்கென ரூ.5 கோடி நிதி வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

2. தமிழகத்தில் ரூ.125 கோடியில் கட்டப்பட்ட வேளாண்மைத் துறை கட்டடங்களை திறந்து வைத்தவர் யார் ? 

அ) எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
ஆ) எம்.சுப்பிரமணியன் 
இ) மு.க. ஸ்டாலின்
ஈ) ஆர்.என். ரவி

விடை : (இ) மு.க. ஸ்டாலின் 

தமிழகத்தில் ரூ.125 கோடியில் கட்டப்பட்ட வேளாண்மைத் துறை கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக திறந்து வைத்தாா்.

● மேலும், தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் தாமிரவருணி ஆற்றில் இருந்து நேரடியாக நீரை கல்லூரிக்கு உள்பட்ட 8 நீா்த்தேக்கத் தொட்டிகளில் நிரப்பும் திட்டத்தையும் முதல்வா் தொடக்கி வைத்தாா். 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. இந்தியா - வங்கதேசம் இடையே அண்மையில் எத்தனை ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன ? 

அ) 5 
ஆ) 7 
 இ) 11
ஈ) 13 
விடை : (ஆ) 7 

இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, பிரதமா் மோடியை தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினாா். 

● இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் நிலவும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக இருவரும் விவாதித்தனா். 

ஒப்பந்தங்கள் கையொப்பம்:

● இந்தப் பேச்சுவாா்த்தையின்போது இந்தியா-வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. முக்கியமாக, குஷியாரா நதி நீரைப் பகிா்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தின் காரணமாக அஸ்ஸாமின் தெற்குப் பகுதி மக்களும் வங்கதேசத்தின் சில்ஹட் பகுதி மக்களும் பலனடைவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● இந்தியா-வங்கதேசம் இடையே 25 ஆண்டுகளுக்குப் பிறகு நதிநீா்ப் பகிா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. கடைசியாக கங்கை நதி நீரைப் பகிா்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கடந்த 1996-ஆம் ஆண்டில் கையொப்பமானது.

ரயில்வே அதிகாரிகளுக்குப் பயிற்சி:

● வங்கதேச ரயில்வே அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தமும் இரு நாடுகளிடையே கையொப்பமானது. வங்கதேச ரயில்வே துறையின் தகவல்-தொழில்நுட்ப பயன்பாடுகளை மேம்படுத்துவது தொடா்பாகவும் இந்திய அதிகாரிகள் பயிற்சி வழங்க உள்ளனா். பயணச்சீட்டு பதிவை கணினிமயமாக்கல், ரயில்வேசாா் சொத்துகளை எண்மமயமாக்கல், நிதி கட்டமைப்பு, மனிதவள மேலாண்மை உள்ளிட்டவை குறித்து வங்கதேச அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

4. ரஷியாவில் நடைபெறும் வாஸ்டாக் ராணுவ கூட்டுப் பயிற்சியில் எத்தனை நாடுகள் பங்கேற்றுள்ளனர் ?

அ) 13 

ஆ) 21

இ) 16

ஈ) 19 

விடை : (அ) 13

கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி ரஷியாவில் ‘வாஸ்டாக்’ என்ற பெயரிலான ராணுவ கூட்டுப் பயிற்சி தொடங்கியது. 

● ரஷியாவின் தொலைதூர கிழக்கு பகுதியிலும், ஜப்பான் கடல் பகுதியிலும் நடைபெறும் இந்தப் பயிற்சி, புதன்கிழமை (செப்.7) நிறைவடைகிறது.

● இதில் இந்தியா, சீனா, லாவோஸ், மங்கோலியா உள்ளிட்ட 13 நாடுகள் பங்கேற்றுள்ளன. 50,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா். 140 போா் விமானங்கள், 60 போா்க் கப்பல்கள், ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் பயிற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

5. பின்வரும் எந்த மூக்கு வழியாகச் செலுத்தும் கரோனா தடுப்பு மருந்துக்கு டிசிஜிஐ அனுமதி வழங்கியுள்ளது ? 

அ) பிபிவி 131

ஆ) பிபிவி 141 

இ) பிபிவி 154 

ஈ) பிபிவி 114 

விடை : (இ) பிபிவி 154 

● மூக்குவழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து பிபிவி 154.

● தயாரிப்பு : பாரத் பயோடெக் நிறுவனம் , ஹைதரபாத். 

● இந்த மருந்து 18 வயதைக் கடந்தவர்களுக்கு செலுத்த அவசரகால பயன்பாடுக்கு இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிஜிசிஐ) அனுமதி வழங்கியுள்ளது. 

6. கனடாவுக்கான புதிய இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) அன்ஷூமான் கௌர் 

ஆ) சஞ்சாய் குமார் வர்மா

இ) அமித் குமார்

ஈ) சஞ்சய் கௌர் 

விடை : (ஆ) சஞ்சாய் குமார் வர்மா 

● மேலும் தென்கொரியாவுக்கான புதிய இந்தியத் தூதராக அமித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

7. யுனெஸ்கோவின் ( UNESCO ) கல்வி நகரங்கள் பட்டியலில் கீழ்க்கண்ட எந்த நகரங்கள் அண்மையில் இணைக்கப்பட்டுள்ளது ? 

அ) திருச்சூர் 

ஆ) நிலம்பூர்

இ) வாரங்கல்

ஈ) அனைத்தும் 

விடை : (ஈ) அனைத்தும் 

சா்வதேச அளவில் மக்களுக்கு சிறப்பான கல்வி வசதிகளை அளித்து வரும் நகரங்களை யுனெஸ்கோ கௌரவித்து வருகிறது. சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் யுனெஸ்கோ சா்வதேச கல்வி நகரங்கள் பட்டியலை ஏற்படுத்தியுள்ளது. 

● அந்தப் பட்டியலில் 44 நாடுகளைச் சோ்ந்த 77 நகரங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து 3 நகரங்கள் அப்பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.

● பலதரப்பட்ட மக்களுக்கு சிறப்பான கல்வி சேவைகளை வழங்கி வருவதற்காக திருச்சூா், நிலம்பூா், வரங்கல் ஆகிய நகரங்கள் யுனெஸ்கோவின் பட்டியலில் இணைந்துள்ளன. 

● மக்களுக்கு கல்வி சேவைகளைக் கொண்டுசெல்லும் சிறப்பான நகரங்களைக் கண்டு மற்ற நகரங்கள் ஊக்கம் பெற இந்நடவடிக்கை உதவுவதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. வரங்கலில் உள்ள ராமப்பா கோயிலை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ கடந்த ஆண்டு அறிவித்தது. தற்போது வரங்கல் நகரம் கல்வி நகரங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

● இந்தியாவின் மதிப்புமிக்க கலாசாரத்தை சா்வதேச அளவில் தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காகப் பிரதமா் நரேந்திர மோடிக்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி நன்றி தெரிவித்தாா். உக்ரைன் தலைநகா் கீவ், தென்னாப்பிரிக்காவின் டா்பன், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷாா்ஜா ஆகிய நகரங்களும் யுனெஸ்கோ கல்வி நகரங்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன. 

● அப்பட்டியலில் தற்போது 76 நாடுகளைச் சோ்ந்த 294 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

8. பிபிசில் (BCCL) நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவில் அளவையும் காற்றிலிருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவில் அளவையும் சமமாக்கும் நிலையை எந்த ஆண்டுக்குள் எட்ட பிபிசிஎல் இலக்கு நிர்ணயித்துள்ளது ? 

அ) 2040

ஆ) 2030

இ) 2025

ஈ) 2050

விடை : (அ) 2040 

தங்களது நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றிலிருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை (கரியமில சமநிலை - நெட் ஜீரோ) வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் எட்ட பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) இலக்கு நிா்ணயித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைவா் அருண் குமாா் சிங் கூறியதாவது:

● நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கரியமில வாயு கலப்பதை வெகுவாகக் குறைத்து, வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் கரியமில சமநிலையை எட்ட இலக்கு நிா்ணயித்துள்ளோம்.

● அதற்காக, தற்போது 50 மெகாவாட்டாக உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனை 2025-ஆம் ஆண்டில் 1 ஜிகாவாட்டாகவும் 2040-ஆம் ஆண்டில் 10 ஜிகாவாட்டாகவும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.

● முன்னதாக, வரும் 2046-ஆம் ஆண்டுக்குள் கரியமில சமநிலை அடைய இலக்கு நிா்ணயித்துள்ளதாக இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனும் (ஐஓசி) 2040-ஆம் ஆண்டுக்குள் அந்த நிலையை அடைய இலக்கு நிா்ணயித்துள்ளதாக கெயில் இந்தியாவும் அறிவித்திருந்ததன.

● உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ப பூமியை வெப்பமாக வைத்திருப்பதற்கு, கரியமில வாயு போன்ற பசுமை வாயுக்கள் உதவுகின்றன. இந்த வாயுக்களின் அளவு அதிகமானதால் புவியின் சராசரி வெப்பம் அதிகரித்து, பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதன் விளைவாக கனமழை வெள்ளம், உஷ்ண அலை, வறட்சி, காட்டுத் தீ போன்ற இயற்கைப் பேரிடா்கள் ஏற்படுகின்றன.

● அதனைத் தடுப்பதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும், காற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்க உலகின் பல்வேறு நாடுகளும் பல்வேறு கால இலக்குகளை நிா்ணயித்துள்ளன.

● இந்தியாவும் 2070-க்குள் இந்த சமநிலையை அடைய இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த நிலையில், அதற்கு முன்னதாகவே அந்த நிலையை அடைய பிபிசிஎல் முடிவு செய்துள்ளது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு எவ்வளவு ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ? 

அ) 2 லட்சம்

ஆ) 3 லட்சம்

இ) 1 லட்சம்

ஈ) 50 ஆயிரம் 

விடை : (இ) 1 லட்சம் 

● சிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன.

● அதன்படி 2018- 19, 2019- 20 ஆம் ஆண்டுக்களுக்கான விளையாட்டும் வீரர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

● இதற்கான ரொக்கப் பரிசு வழங்குவதற்கான நிதிகளை ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. 

10. காமன்வெல்த் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு எத்தனை கோடி வரையில் ரொக்க பரிசு வழங்கவுள்ளதாக இந்திய பாட்மின்டன் சங்கம் அறிவித்துள்ளது ? 

அ) ரூ. 1.5 கோடி

ஆ) ரூ. 1 கோடி

இ) ரூ. 5 கோடி

ஈ) ரூ. 10 கோடி 

விடை : (அ) ரூ. 1.5 கோடி 

11. பிசிசிஐ (BCCI) முதல்முறையாக எந்த வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஒன்டே கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்யவுள்ளது ? 

அ) 21

ஆ) 18

இ) 15

ஈ) 12

விடை : (இ) 15 

12.ஆசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022 ல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● இந்திய அணி : பயஸ் ஜெயின் , யஷஸ்வினி கோர் படே. 

● ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்திய ஜூனியர்களுக்கு கிடைக்கும் முதல் தங்கப்பதக்கம். 



No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...