● சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்றுவரும் அகழ் வைப்பகக் கட்டுமானப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு, தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டனா்.
● பின்னா் அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியது: கீழடியில் ரூ. 12. 21 கோடியில் உலகத் தரத்தில் கட்டப்பட்டு வரும் அகழ் வைப்பக கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட 10, 210 -க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலதாமதம் ஆகிறது. இருப்பினும் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் நிறைவுக்கு பின்பு கீழடி அகழ் வைப்பகம் வரும் ஜனவரி மாதம் முதல் பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்படும் என்றாா்.
2. தென்மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கும் 30 ஆவது தென்மண்டல கவுன்சில் கூட்டம் எங்கு நடைபெறவுள்ளது ?
அ) தமிழ்நாடு
ஆ) கேரளா
இ) கர்நாடகா
ஈ) மகாராஷ்டிரா
விடை : (ஆ) கேரளா
● மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மண்டல அளவில் கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதில் மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள் ,பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்
● அதன்படி தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
● இந்நிலையில் கேரள மாநிலத்தில் நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி காலை 11:30 மணி அளவில் சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார். அன்றைய தினம் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசும் அவர், முல்லைப் பெரியாறு ,சிறுவாணி, நெய்யாறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.
3. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் வெள்ள அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி என்று நடைபெற்றது ?
அ) ஆகஸ்ட் 15
ஆ) ஆகஸ்ட் 27
இ) ஆகஸ்ட் 31
ஈ) செப்டம்பர் 01
விடை : (ஈ) செப்டம்பர் 01
● பருவமழையை ஒட்டி, வெள்ள அபாயம் குறித்த விழிப்புணா்வு மற்றும் ஒத்திகைப் பயிற்சி தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் செப்டம்பர் 01 நடைபெறுகிறது.
● இந்தப் பயிற்சியின் மூலம் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை அமைப்பின் செயல்பாடுகள் சரியாக இயங்குகிறதா என்பதை அறிய முடியும் என வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.
● இந்தப் பயிற்சியில் பொது மக்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
4. பின்வரும் எந்த கல்வி நிறுவனம் / அமைப்பு 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கச் செய்ய மேம்பட்ட குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகின்றது ?
அ) மும்பை ஐஐடி
ஆ) கான்பூர் ஐஐடி
இ) சென்னை ஐஐடி
ஈ) பெங்களூரு ஐஐடி
விடை : (இ) சென்னை ஐஐடி
● 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கும் வகையில் குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.
● சென்னை ஐஐடி-ல் உள்ள விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையம் (Centre of Excellence for Sports Science and Analytics), பல பதிப்புகளைக் கொண்ட ஸ்மார்ட்பாக்சர் என்ற பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி உள்ளது. தற்போது, குத்துச்சண்டை வீரர்களுக்கு உதவிடும் வகையில் இந்த மென்பொருளை மேம்படுத்த கர்நாடக மாநிலம் பெல்லாரியில் அமைந்துள்ள இன்ஸ்பயர் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் (IIS) நிறுவனத்தில் சென்னை ஐஐடி இணைந்து பணியாற்றி வருகிறது.
● இதுகுறித்து, சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், " விளையாட்டுப் பொறியியல் (Sports Engineering) என்ற ஒப்பீட்டு அளவிலான புதிய துறைக்கு கணிதம், இயற்பியல், செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட்- ஆஃப்-திங்ஸ் தொடர்புடன் அணியும் பொருட்கள் ஆகியவை இடைநிலைக் களமாக பயன்படுத்தப்படும். உடலியல், உயிர் இயக்கவியல் போன்ற விளையாட்டுடன் தொடர்பு உடையவற்றைப் புரிந்துகொள்ள விளையாட்டுப் பொறியியல் உதவிகரமாக இருக்கும். அத்துடன், விளையாடுவதில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கவும், விளையாட்டு சாதனங்களை நன்கு வடிவமைக்கவும் இது உதவும்.
● ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரித்தல் 2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை அதிகரிக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை எட்டிப் பிடிக்க, குறிப்பிட்ட சில முக்கிய விளையாட்டுகளை இந்திய அரசு பட்டியலிட்டு, அவற்றுக்கான முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வில்வித்தை, குத்துச்சண்டை, பேட்மிண்டன், மல்யுத்தம், ஹாக்கி, பளுதூக்குதல், சைக்கிள் பந்தயம், தடகளம் போன்ற விளையாட்டுகள் இதில் அடங்கும்.
● இந்தியா போன்ற வளரும் நாடுகள், ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வெல்வதற்கு பத்தாண்டுகளோ, அதற்கும் அதிகமாகவோ தேவைப்படும். இந்த இலக்கை எட்டிப்பிடிக்க தொழில்நுட்ப அடிப்படையிலான வீரர்களின் செயல்திறன் மேம்பாட்டை ஏற்றுக் கொள்வது முக்கியமான ஒன்றாகும்.
● இதனை குறிக்கோளாகக் கொண்டுதான் ஸ்மார்ட்பாக்சர் மென்பொருளை ஐஐடி மெட்ராஸ் மேம்படுத்தி வருகிறது" என்று தெரிவித்துள்ளது.
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
5. கருப்பை வாய் புற்றுநோய்க்கு உள்நாட்டிலேயே முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியின் பெயர் என்ன ?
அ) செர்வாவேக்
ஆ) கோர்பிவேக்
இ) கோவாவேக்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை : (அ) செர்வாவேக்
● கருப்பை வாய் புற்றுநோய்க்கு உள்நாட்டில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி வியாழக்கிழமை (செப். 1) அறிமுகம் செய்யப்படவுள்ளது.
● இதுதொடா்பாக, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: கருப்பை வாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பாற்றலை அளிக்கும் ‘சொ்வாவேக்’ தடுப்பூசியை ‘சீரம் இந்தியா’ நிறுவனம் தயாரித்துள்ளது. இது, கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கியக் காரணியான ஹியூமன் பாப்பிலோமா தீநுண்மிக்கு எதிராக செயல்படும்.
● இந்தியாவில் 15 முதல் 44 வயதுள்ள பெண்கள் மத்தியில் ஏற்படும் புற்றுநோய்களில் 2-ஆவது இடத்தில் கருப்பை வாய் புற்றுநோய் உள்ளது. இதற்கு முதல்முறையாக உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
● மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் தில்லியில் வியாழக்கிழமை தடுப்பூசியை அறிமுகம் செய்யவுள்ளாா்.
6. மாநிலங்களுக்கு எத்தனை லட்சம் டன் கொண்டைக் கடலையை ரூ.8 க்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ?
அ) 25
ஆ) 15
இ) 10
ஈ) 7
விடை : (ஆ) 15
● ஒன்றிய அரசு தன் கையிருப்பிலிருந்து 15 லட்சம் டன் கொண்டை கடலையை மாநிலங்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.
● ஒன்றிய அரசு கொள்முதல் செய்த விலையைவிட கிலோவுக்கு ரூ.8 குறைத்து மாநிலங்களுக்கு கொண்டை கடலை வழங்கப்படும்.
● ஒன்றிய அரசு தரும் கொண்டை கடலையை மாநில அரசுகள் பொது விநியோகத் திட்டம், மதிய உணவு திட்டத்துக்கு பயன்படுத்தலாம்.
7. இந்தியாவில் இணையவழியில் நடைபெறும் குற்றங்கள் கடந்த ஆண்டில் (2021) ------- சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது ?
அ) 16%
ஆ) 10%
இ) 7%
ஈ) 5%
விடை : (ஈ) 5%
● இந்தியாவில் இணையவழியில் நடைபெறும் குற்றங்கள் கடந்த ஆண்டில் (2021) 5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
● 2020-ஆம் ஆண்டு 50,035-ஆக இருந்த இணையவழிக் குற்றம் தொடா்பான புகாா்கள், 2021-ஆம் ஆண்டில் 52,974-ஆக அதிகரித்துள்ளது. 2019-இல் 44,735 இணையவழிக் குற்றங்கள் நடைபெற்றுள்ளன.
● இது தொடா்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) வெளியிட்டுள்ள தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 2021-ஆம் ஆண்டில் தெலங்கானா, உத்தர பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக அளவில் இணையவழி குற்றங்கள் பதிவாகியுள்ளன. பதிவாகும் குற்றங்களில் மூன்றில் ஒன்றுக்குதான் காவல் துறையினரால் தீா்வு காண முடிகிறது.
● இணையவழிக் குற்றங்களில் 60.8 சதவீதம் நிதி உள்ளிட்ட மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக உள்ளது. இதற்கு அடுத்து 8.6 சதவீதம் பாலியல் ரீதியான இணையவழிக் குற்றங்கள் ஆகும். 5.4 சதவீதம் மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற குற்றங்கள் ஆகும்.
● தெலங்கானாவில் அதிகபட்சமாக 10,303 இணையவழிக் குற்றங்கள் பதிவாகியுள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராகவும் இணையவழியில் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன. தகவல் திருட்டு, டெபிட், கிரெடிட் காா்டு மோசடிகள் இணையவழியில் நடப்பது அதிகம் உள்ளது.
● இதுதவிர இணையவழியில் பயங்கரவாதத்தைப் பரப்புவது தொடா்பாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் சுற்றுச்சூழல் (ம) பருவநிலை துறை அமைச்சர்களின் கூட்டம் எங்கு தொடங்கப்படவுள்ளது ?
அ) இந்தியா
ஆ) இந்தோனேசியா
இ) ஆஸ்திரேலியா
ஈ) கனடா
விடை : (ஆ) இந்தோனேசியா
● இந்தோனேசிய பாலி தீவில் ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் சுற்றுச்சூழல் (ம) பருவநிலை துறை அமைச்சர்களின் கூட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
9.ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் பிலிப்பின்ஸின் மகசேசே விருதுக்காக எத்தனை பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன ?
அ) 5
ஆ) 2
இ) 4
ஈ) 6
விடை : (ஆ) 2
தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் :-
● கம்போடியாவில் அரசின் அடக்குமுறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய மனநல மருத்துவர் சொதியாரா சிம்.
● வன்கொடுமைக்குள்ளான ஆயிரகணக்கான சிறுவர்களுக்கு உதவிய பிலிப்பின்ஸ் மருத்துவர் பெர்னடெட் மேட்ரிட்.
III. விளையாட்டு நிகழ்வுகள்
10. செர்பியாவில் நடைபெற இருக்கும் உலக சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் எத்தனை பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கவுள்ளது ?
அ) 30
ஆ) 31
இ) 37
ஈ) 40
விடை : (அ) 30
● போட்டி நடைபெறவுள்ள இடம் : செர்பியா.
● செப்டம்பர் 10 முதல் 18 வரை போட்டிகள் நடைபெறவுள்ளது.
● ஆடவர் பிரிவில் : 20 பேர் ; மகளிர் பிரிவில் : 10 பேர்.
No comments:
Post a Comment