Wednesday, July 6, 2022
Current Affairs 2022 - July 06 / 2022 - TNPSC Group 2/2A & Group 4
Tuesday, July 5, 2022
Current Affairs 2022 - July 05 / 2022 - TNPSC Group 2 / 2A & Group 4
Monday, July 4, 2022
Current Affairs 2022 - July 04 / 2022 - TNPSC Group 2/2A & Group 4
● வணிகவியல் சாா்ந்த வழக்குகளுக்கு விரைவில் தீா்வு காணும் வகையில் வணிகவியல் நீதிமன்றங்கள் தொடங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
● சேலத்தில் 2 வணிகவியல் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம் வணிக மையமாக மாறியுள்ளதைத் தொடா்ந்து வணிகவியல் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
3. கூற்று : சேலம் மாவட்டம் ஜருகு மலையில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டுக்காக 108 அவசர சிகிச்சை ஊர்தியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
காரணம் : ஜருகு மலை மக்கள் கோரிக்கை ஏற்று வழங்கப்பட்டது.
அ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு , காரணம் சரி
விடை : (அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
● சேலம் மாவட்டம் ஜருகு மலையில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டுக்காக 108 அவசர சிகிச்சை ஊா்தியை (ஆம்புலன்ஸ்) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.
● சேலம், நாமக்கல் பகுதியில் ஆய்வுப் பணிகளுக்குச் சென்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன், கடந்த சனிக்கிழமை (ஜூலை 2) வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள ஜருகுமலை எனும் மலைவாழ் கிராமத்துக்கு 14 கி.மீ. நடந்தே சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்தாா்.
● இதையடுத்து, மலைப் பகுதியில் பிரசவ சிகிச்சை, அவசர சிகிச்சைகள் தேவைப்படும்போது வாகன வசதி எதுவும் இல்லை என்றும், அதற்கு பிரத்யேக வாகனம் வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை வைத்தனா்.
●இதையடுத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன், உடனடியாக ஜருகுமலை மக்களின் பயன்பாட்டுக்காக பிரத்யேக 108 அவசர சிகிச்சை ஊா்தி ஒன்றை வழங்க உத்தரவிட்டாா். அதன்படி, அங்கு அந்த வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது.
II. தேசியச் செய்திகள்
4. நாட்டின் பொது விநியோகத்தின் மூலம் அளிக்கப்படும் உணவு, ஊட்டச்சத்து, பாதுகாப்பு குறித்த ஒரு நாள் தேசிய மாநாடு மத்திய அரசால் எங்கு நடத்தப்படவுள்ளது ?
அ) டெல்லி
ஆ) தமிழ்நாடு
இ) ராஜஸ்தான்
ஈ) மின்சாரம்
விடை : (அ) டெல்லி
● இந்த மாநாடு மத்திய உணவு, பொது விநியோகத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
● மத்திய அமைச்சர் பியூஷ் கோயில் தலைமையில் நடைபெறவுள்ளது.
● நோக்கம் : பொது விநியோக அமைப்பு முறையின் கீழ் இயங்கும் திட்டங்களில் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு ,சிறந்த நடைமுறைகளை காணவும் உணவுப் பொருள்களில் ஊட்டச்சத்துகளை வலுப்படுத்தி அதற்கான பாதுகாப்பில் கவனம் செலுத்துவது போன்றவற்றுக்காகவும் இந்த மாநாட்டுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது .
5. இந்தியாவின் தேஜஸ் இலகுரக போர் விமானங்களை கொள்முதல் செய்ய உள்ள நாடு எது ?
அ) சீனா
ஆ) ரஷ்யா
இ) உக்ரைன்
ஈ) மலேசியா
விடை : ( ஈ ) மலேசியா
● இந்தியாவின் தேஜஸ் இலகுரக போா் விமானங்களை மலேசியா கொள்முதல் செய்வது குறித்த பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) தெரிவித்துள்ளது.
6. நடப்பு நிதியாண்டில் அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற்ற வெளிநாட்டினர்களின் பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் ?
அ) முதலாவது
ஆ) இரண்டாவது
இ) ஏழாவது
ஈ) ஒன்பதாவது
விடை : (ஆ) இரண்டாவது
● அறிவிப்பு: அமெரிக்காவின் நாட்டு குடியுரிமை (ம) குடியேற்ற சேவைகள் மையம்.
● முதல் மூன்று இடம் :
1st - மெக்ஸிகோ (24,508)
2nd - இந்தியா (12,928)
3rd - பிலிப்பின்ஸ் (11,316).
7. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக:
1) ஜான்சி இரயில் நிலையமானது வீராங்கனை இலட்சுமிபாய் இரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது.
2) ஜான்சி இரயில் நிலையம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
3) 1 மற்றும் 2
4) ஏதுமில்லை
விடை : (அ) 1 மட்டும்
உத்தரபிரதேசத்தின் ஜான்சி இரயில் நிலையமானது இலட்சுமிபாய் இரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.
Sunday, July 3, 2022
Current Affairs 2022 - July 03 /2022 - Group 2/2A & Group 4
● வெளிநாடுகளில் வசிக்கும் உறவினா்களிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை அரசின் அனுமதியின்றி நிதி பெறும் வகையில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட விதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தங்களைச் செய்துள்ளது. முன்பு இந்தத் தொகை வரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது.
● ‘வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த விதிகள் 2022’ என்ற பெயரில் புதிய விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டிருப்பதாவது:
● இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் உறவினா்களிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை மட்டுமே அரசின் அனுமதியின்றி பெற முடியும். இனிமேல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை பெற முடியும்.
● இந்தத் தொகையைவிட அதிகமான தொகையை வெளிநாட்டில் இருந்து பெறுவதாக இருந்தால் இதற்கு முன்பு 30 நாள்களுக்கு முன் அரசிடம் தெரிவிக்க வேண்டும். இனி, 90 நாள்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம்-2011, விதி எண் 6-இல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
4. தெலுங்கானா மாநிலம் பானூர் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் புதிய உற்பத்தி வசதிகளை தொடக்கி வைத்தவர் யார் ?
அ) நரேந்திர மோடி
ஆ) அமித் ஷா
இ) ஜெய்சங்கர்
ஈ) ராஜ்நாத் சிங்
விடை : (ஈ) ராஜ்நாத் சிங்
● தெலங்கானா மாநிலம், பானூா் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் புதிய உற்பத்தி வசதிகளை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
● பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளா்கள், பொறியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் மற்றும் பிற பணியாளா்களிடம் உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சா், பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதற்கும், பிரதமா் நரேந்திர மோடியின் ‘தற்சாா்பு இந்தியா’ திட்டத்தை நனவாக்கும் வகையிலும் பொதுத் துறை நிறுவனத்தின் அா்ப்பணிப்புக்கான சான்றாக, உற்பத்தி வசதிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினாா்.
● அடுத்த ஐந்தாண்டுகளுக்கான உள்நாட்டுமயமாக்கல் திட்டத்தை தயாரித்து, முதல் இரண்டு ஆண்டுகளுக்கான இலக்கை வெற்றிகரமாக அடைந்ததற்காக பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துக்கு அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
5. கிரிசில் நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை ------------------ ஆக குறைத்து கணித்துள்ளது ?
அ) 7.3%
ஆ) 7.8%
இ) 8.1%
ஈ) 8.4%
விடை : (அ) 7.3%
● கிரிசில் நிறுவனம் - உள்நாட்டைச் சேர்ந்த தர மதிப்பீட்டு நிறுவனமாகும்.
● முந்தைய கணிப்பு : 7.8%
6. வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான மிஸ் இந்தியா பட்டம் 2022 வென்றுள்ளவர் யார் ?
அ) அனு குப்தா
ஆ) குஷி படேல்
இ) ஈஷா வேலண்டைன்
ஈ) ரூபா சிங்
விடை : (ஆ) குஷி படேல்
● NRI MISS INDIA WORLD WIDE 2022
● இது இந்தியாவிற்கு வெளியே பிற நாடுகளில் மிக நீண்ட காலமாக நடைபெறும் ஒரு இந்திய போட்டியாகும்.
● குஷி படேல் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த உயிரியல் மருத்துவ மாணவி ஆவார்.
III. சர்வதேச செய்திகள்
7. அண்மையில் கீழ்கண்ட எந்த நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ?
அ) இந்தியா
ஆ) கனடா
இ) ஆப்பிரிக்கா
ஈ) ஈரான்
விடை : (ஈ) ஈரான்
● ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
● குறிப்பு : 5 பேர் உயிரிழந்தனர், 44 பேர் காயமடைந்தனர்.
IV. விளையாட்டுச் செய்திகள்
8. லண்டனில் , 2021 ஆம் ஆண்டிற்கான தங்கச் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள இந்தியாவின் முதல் நபர் (ம) டென்னிஸ் வீரர் ?
அ) விஜய் அமிர்தராஜ்
ஆ) நீரஜ் சோப்ரா
இ) எம்.எஸ். தோனி
ஈ) கே.எல்.ராகுல்
● இந்த விருது சர்வதேச டென்னிஸ் புகழ் மன்றம் (ம) சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு ஆகியவற்றால் வழங்கப்படுகிறது.
● இந்த விருதை பெறும் முதல் இந்தியர் இவர் .
V. முக்கிய தினங்கள்
9. சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம் ( International Plastic Bag Free Day ) 2022 ?
அ) ஜூன் 30
ஆ) ஜூலை 02
இ) ஜூலை 03
ஈ) ஜூலை 01
விடை : (இ) ஜூலை 03
Saturday, July 2, 2022
Current Affairs 2022 - July 02 / 2022 - Group 2/2A & Group 4
● இதையடுத்து, தனிப்படையினா் பல்வேறு வெளிநாட்டு அருங்காட்சியகங்களின் இணையதளங்களை ஆய்வு செய்தனா். அப்போது, சரஸ்வதி மகாலில் திருடப்பட்ட பைபிள் பிரிட்டன் நாட்டின் லண்டனில் உள்ள கிங்ஸ் கலெக்ஷன் என்ற ஒரு நிறுவனத்தின் இணையதளத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
● இதைத் தொடா்ந்து, சிலை திருட்டு தடுப்புப் பிரிவினரின், அந்த பைபிள் குறித்து விசாரணை செய்தனா். அதில் அந்த பைபிள், சரஸ்வதி மகால் நூலகத்தில் திருடப்பட்டதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த பைபிளை யுனெஸ்கோ ஒப்பந்தம் மூலமாக மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வருவதற்குரிய முயற்சியில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் ஈடுபட்டுள்ளனா்.
II. தேசியச் செய்திகள்
5. ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி யார் ?
அ) ஏ.எஸ். ராஜன்
ஆ) சங்க்கரன்
இ) கே. ஆறுமுகம்
ஈ) எல். ஆனந்த் பாபு
விடை : (அ) ஏ.எஸ். ராஜன்
● ஏ. சேர்மராஜன், 1987 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சிபெற்ற தேனியைச் சேர்ந்தவர் ஆவார்.
6. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் (ம) தனியார் முதலீட்டுக்காக இந்தியாவுக்கு எவ்வளவு கடன் அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது ?
அ) 2.25 பில்லியன் டாலர்
ஆ) 1.15 பில்லியன் டாலர்
இ) 1.75 பில்லியன் டாலர்
ஈ) 3.5 பில்லியன் டாலர்
விடை : (இ) 1.75 பில்லியன் டாலர்
● பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் தனியாா் முதலீட்டுக்காக இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.13,834 கோடி) கடன் அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
● சுகாதாரத்துக்கு 1 பில்லியன் டாலா், தனியாா் முதலீட்டுக்கு 750 மில்லியன் டாலா் என இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலா் கடன் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சுகாதாரத்துக்கு அளிக்கப்படும் கடன், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு திட்டத்துக்கு உதவும். இந்தியாவில் உள்ள பொது சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தக் கடன் தொகை பயன்படுத்தப்படும்.
● சுகாதாரத்துக்கான 1 பில்லியன் டாலரில் 500 மில்லியன் டாலா் மூலம் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், ஒடிஸா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மேகாலயம் ஆகிய 7 மாநிலங்கள் பலனடைய முன்னுரிமை அளிக்கப்படும்.
● இதுதவிர, இந்தியப் பொருளாதாரத்தில் உள்ள நிதி இடைவெளிகளை தனியாா் துறை முதலீடு மூலம் நிரப்ப வளா்ச்சிக் கொள்கைக் கடனாக 750 மில்லியன் டாலா் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. DRDO மேற்கொண்ட முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சிறிய ரக ஆளில்லா விமானம் (யுரவி) எங்கு வெற்றிகரமாக சோதனை மேற்கொண்டது ?
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) குஜராத்
ஈ) கர்நாடகா
விடை : (ஈ) கர்நாடகா
● பெங்களூருவில் உள்ள டி.ஆர்.டி.ஓ.வின் முதன்மை ஆய்வுக்கூடமான ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு நிறுவனம் ஆளில்லா தானியங்கி விமானத்தை வடிவமைத்து தயாரித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா தானியங்கி விமானம் நேற்று முதல் முறையாக சோதிக்கப்பட்டது.
● கர்நாடகாவின் சித்ரதுர்காவில் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது, இந்த விமானம் வெற்றிகரமாக மேலெழும்பி பறந்ததுடன், வெற்றிகரமாக தரையிறங்கியும் சாதித்தது.
● முற்றிலும் தானியங்கி முறையில் செயல்பட்ட இந்த விமானம், ஒரு சிறிய டர்போபேன் என்ஜின் மூலம் இயங்குகிறது. இதற்கான உதிரி பாகங்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என டி.ஆர்.டி.ஓ. வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
8. இந்தியாவின் எந்த மாநிலத்தில் வீட்டிற்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரத் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது ?
அ) தமிழ்நாடு
ஆ) பஞ்சாப்
இ) கேரளா
ஈ) ராஜஸ்தான்
விடை : (ஆ) பஞ்சாப்
● பஞ்சாபில் வீட்டிற்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
● பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தொடக்கிவைத்தார்.
III. விளையாட்டுச் செய்திகள்
9. ஸ்வீடனில் நடைபெறும் டைமண்ட் லீக் மீட்டில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வென்றுள்ள பதக்கம் ?
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) ஏதுமில்லை
விடை : (ஆ) வெள்ளி
● இப்போட்டியில் நீரஜ் சோப்ரா 89.94 மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.
IV. முக்கிய தினங்கள் :
10. சர்வதேச கூட்டுறவு தினம் ( International Cooperative Day ) 2022 ?
அ) ஜூலை 01
ஆ) ஜூலை 02
இ) ஜூலை 03
ஈ)ஜூலை 04
விடை : (ஆ) ஜூலை 02
11. உலக விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம் ( World Sports Journalists Day ) 2022 ?
அ) ஜூன் 29
ஆ) ஜூன் 30
இ) ஜூலை 01
ஈ) ஜூலை 02
விடை : (ஈ) ஜூலை 02
Current Affairs 2022 - July 01 / 2022 - Group 2/2A & Group 4
● சிங்கப்பூரின் டிஎஸ்-இஓ உள்பட 3 வணிகப் பயன்பாட்டுக்கான செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி 53 ராக்கெட் வெற்றிகரமாக வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.
● ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து அந்த ராக்கெட் தீப்பிழம்புகளை உமிழ்ந்தவாறு பாய்ந்து சென்றது. அடுத்த சில நிமிடங்களில் அதன் இயக்கமும், செயல்பாடுகளும் நிா்ணயித்த இலக்குகள் அனைத்தையும் துல்லியமாகக் கடந்ததையடுத்து, பிஎஸ்எல்வி - சி 53 திட்டம் வெற்றி பெற்ாக இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் அறிவித்தனா். அதன் தொடா்ச்சியாக, பரஸ்பரம் அவா்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் பகிா்ந்து கொண்டனா்.
● திட்டமிட்டபடி நிலைநிறுத்தம்: ராக்கெட்டைச் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை நிறைவடைந்து வியாழக்கிழமை மாலை சரியாக 6.02 மணிக்கு பிஎஸ்எல்வி - சி 53 விண்ணில் சீறிப் பாய்ந்தது.
● ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் அதில் இருந்த ஒவ்வொரு நிலைகளும் படிப்படியாக பிரியத் தொடங்கின. ராக்கெட் புறப்பட்ட 17 நிமிடம் 57 வினாடியில் முதன்மை செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டது. தொடா்ந்து சில நிமிடங்களில் மீதமுள்ள 2 செயற்கைக்கோள்களும் ஒன்றன்பின் ஒன்றாக அதன் சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன.
● முதன்மை செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ 665 கிலோ எடை கொண்டது. புவி ஆய்வுக்கான துல்லிய புகைப்படங்களை எடுப்பதற்காக சிங்கப்பூா் சாா்பில் அது அனுப்பப்பட்டுள்ளது.
● இதைத் தவிர சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய சிங்கப்பூரின் நியூசா் செயற்கைக்கோளும் நிலைநிறுத்தப்பட்டது. இது அனைத்துப் பருவநிலைகளிலும் தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பக்கூடியது.
● இதனுடன் கல்விசாா் பணிக்காக சிங்கப்பூா் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவா்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
● நான்காம் நிலை: பிஎஸ்எல்வி வரலாற்றில் முதல்முறையாக செயற்கைக்கோள்களை விடுவித்த பிறகு பயன்பாடற்று இருக்கும் ராக்கெட்டின் நான்காம் நிலையையும் ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்த இம்முறை முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டின் இறுதிபாகமான பிஎஸ் 4 பகுதியில் ஆறு ஆய்வுக் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.
● பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டானது நியூ ஸ்பேஸ் இந்திய நிறுவனத்தின் (என்எஸ்ஐஎல்) மூலம் வணிக ரீதியாக செலுத்தப்படும் இரண்டாவது திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
6. இந்திய கலாச்சாரம் , தத்துவ இயலில் மனித உரிமைகள் என்ற மாநாட்டை டெல்லியில் தொடக்கிவைத்தவர் ?
அ) நரேந்திர மோடி
ஆ) ராம்நாத் கோவிந்த்
இ) அருண்குமார் மிஸ்ரா
ஈ) வெங்கையா நாயுடு
விடை : (இ) அருண்குமார் மிஸ்ரா
● டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்திய கலாச்சாரம் , தத்துவ இயலில் மனித உரிமைகள் என்ற மாநாட்டை தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் அருண்குமார் மிஸ்ரா தொடக்கிவைத்தவர் .
7. பொருத்துக :
( 47 வது GST கவுன்சில் கூட்டத்தில் புதிதாக இறுதி செய்யப்பட்ட வரி விதிப்பை பொருத்துக )
1) தோல் பொருள்கள் - 1) 5%
2) நிதி நிறுவன சேவைகள் - 2) 0
3) ஃபிலேரியாசிஸ் மாத்திரைகள் - 3) 18%
4) மருத்துவமனை அறை வாடகை- 4) 12%
அ) 4 3 2 1
ஆ) 3 4 1 2
இ) 1 2 3 4
ஈ) 2 1 3 4
விடை : (அ) 4 3 2 1
● 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
● இந்த வரி விதிப்பு ஜூலை 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
III . விளையாட்டுச்செய்திகள்
8. தமிழகத்தில் எங்கு முதல்முறையாக சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது ?
அ) மதுரை
ஆ) சென்னை
இ) சேலம்
ஈ) கன்னியாகுமரி
விடை : (ஆ) சென்னை
● சென்னை ஓபன் டபிள்யூடிஏ சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் 12 முதல் 18 -ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
● இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.1.96 கோடியாகும். பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு கோப்பையுடன் சுமார் ரூ. 22 லட்சம் பரிசும் 280 புள்ளிகளும் வழங்கப்படும்.
● 2-வது இடத்தை பெறும் வீராங்கனை ரூ.15.60 லட்சத்துடன் 180 புள்ளிகளை பெறுவார்.
● இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடி கோப்பையுடன் ரூ.9.47 லட்சம் பரிசுத் தொகையாக பெறும். 2-வது இடத்தை பிடிக்கும் ஜோடிக்கு ரூ.5.29 லட்சம் வழங்கப்படும்.
IV. முக்கிய தினங்கள்
9. தேசிய மருத்துவர்கள் தினம் ( National Doctor's Day ) 2022 ?
அ) ஜூன் 30
ஆ) ஜூன் 29
இ) ஜூலை 02
ஈ) ஜூலை 01
விடை : (ஈ) ஜூலை 01
● ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 1ம் தேதி இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) சார்பில் "தேசிய மருத்துவர்கள் தினம்" கொண்டாடுகிறது. வங்காள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
● மனிதகுலத்திற்கு சேவை செய்வதில் பெரும் பங்களிப்புடன் இருந்த வங்காளத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் பி.சி.ராய் நினைவாக 1991ம் ஆண்டு முதல் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
Friday, July 1, 2022
Current Affairs 2022 - June 30 / 2022 - Group 2/2A & Group 4
Featured post
உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR
உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...
-
Preamble of the Constitution & Salient Features of the Constitution / அரசியலைமப்பின் முகவுரை (ம) அரசியலைமப்பின் முக்கிய கூறுகள் ...
-
GK SHANKAR DECEMBER 02 / 2022 I . தமிழ்நாட்டு நிகழ்வுகள் 1. தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் க...
-
GK SHANKAR DECEMBER 23/2022 I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 1. தமிழகத்தின் பின்வரும் எந்த சமூகத்தினரை...