Saturday, July 2, 2022

Current Affairs 2022 - July 01 / 2022 - Group 2/2A & Group 4

                        GK SHANKAR 
                       JULY 01 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் எங்கு மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படவுள்ளதாக தமிழக முதல்வர் அண்மையில் அறிவித்துள்ளார் ? 

அ) ராணிப்பேட்டை
ஆ) வேலூர்
இ) கடலூர் 
ஈ) சென்னை

விடை : (அ) ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.400 கோடி மதிப்பில் 250 ஏக்கா் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தாா்.

● இதனால், சா்வதேச அளவில், தலைசிறந்த காலணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் மேலும் வலுப்பெறும். இந்தப் பூங்கா நிறுவப்படுவதால் , 20 ஆயிரம் பேருக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா்.

2. தமிழகத்தில் வேளாண்மை கூலித் தொழிலாளர்களின் விவரங்களை கீழ்க்கண்ட எந்த செயலி மூலம் பதிவு செய்ய வேளாண்மை (ம) உழவர் நலத்துறை  செயலாளர் அறிவித்துள்ளார் ? 

அ) உழவன் உதவி
ஆ) உழவன்
இ) வேளாண் உதவி
ஈ) உழவன் நலம்

விடை : (ஆ) உழவன்

● விவசாய கூலித் தொழிலாளர்கள் தங்களது விவரங்களை நேரடியாகவோ , முதல்வர் மூலமாகவோ, மாவட்டம், வட்டம் , கிராமம் வாரியாக உழவன் செயலி மூலம் பதிவு செய்வதற்கான உத்தரவை சி. சத்யமூர்த்தி பிறப்பித்துள்ளார்.

3. இந்திய அளவில் முன்னேற விழையும் மாவட்டங்களில் (2021) சிறுகுறு (ம) நடுத்தர தொழிலில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதலிடம் பெற்ற தமிழக மாவட்டம் ? 

அ) மதுரை
ஆ) ராமநாதபுரம்
இ) விருதுநகர்
ஈ) சேலம் 

விடை : (இ) விருதுநகர் 

● புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசிய விருதை வழங்கினார்.

● மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாவட்டங்களை ஆய்வு செய்தனர்.

● அதில் 112 பின்தங்கிய மாவட்டங்கள் முன்னேற விழையும் மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டன.

● இதில் தமிழகத்தின் ராமநாதபுரம்,  விருதுநகர் மாவட்டங்களும் அடங்கும். 

II. தேசியச் செய்திகள் 

4. மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ளவர் யார் ? 

அ) உத்தவ் தாக்கரே
ஆ) பகத் சிங் கோஷியாரி 
இ) தேவேந்திர ஃபட்னவீஸ் 
ஈ) ஏக்நாத் ஷிண்டே 

விடை : (ஈ) ஏக்நாத் ஷிண்டே 

● இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் 20 ஆவது முதல்வர் ஆவார் .
● பதவி பிரமாணம் : அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி செய்து வைத்தார் .

5. இஸ்ரோவால் ( ISRO ) 3 வணிகப் பயன்பாட்டுக்கான செயற்கைக் கோள்களுடன் கீழ்கண்ட எந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ? 

அ) பிஎஸ்எல்வி - சி53
ஆ) பிஎஸ்எல்வி - பி53
இ) ஜிஎஸ்எல்வி - எஃப் 13
ஈ) ஜிஎஸ்எல்வி - எஃப் 31

விடை : (அ) பிஎஸ்எல்வி - சி53 

சிங்கப்பூரின் டிஎஸ்-இஓ உள்பட 3 வணிகப் பயன்பாட்டுக்கான செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி 53 ராக்கெட் வெற்றிகரமாக வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.

● ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து அந்த ராக்கெட் தீப்பிழம்புகளை உமிழ்ந்தவாறு பாய்ந்து சென்றது. அடுத்த சில நிமிடங்களில் அதன் இயக்கமும், செயல்பாடுகளும் நிா்ணயித்த இலக்குகள் அனைத்தையும் துல்லியமாகக் கடந்ததையடுத்து, பிஎஸ்எல்வி - சி 53 திட்டம் வெற்றி பெற்ாக இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் அறிவித்தனா். அதன் தொடா்ச்சியாக, பரஸ்பரம் அவா்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் பகிா்ந்து கொண்டனா்.

● திட்டமிட்டபடி நிலைநிறுத்தம்: ராக்கெட்டைச் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை நிறைவடைந்து வியாழக்கிழமை மாலை சரியாக 6.02 மணிக்கு பிஎஸ்எல்வி - சி 53 விண்ணில் சீறிப் பாய்ந்தது.

● ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் அதில் இருந்த ஒவ்வொரு நிலைகளும் படிப்படியாக பிரியத் தொடங்கின. ராக்கெட் புறப்பட்ட 17 நிமிடம் 57 வினாடியில் முதன்மை செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டது. தொடா்ந்து சில நிமிடங்களில் மீதமுள்ள 2 செயற்கைக்கோள்களும் ஒன்றன்பின் ஒன்றாக அதன் சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன.

முதன்மை செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ 665 கிலோ எடை கொண்டது. புவி ஆய்வுக்கான துல்லிய புகைப்படங்களை எடுப்பதற்காக சிங்கப்பூா் சாா்பில் அது அனுப்பப்பட்டுள்ளது.

● இதைத் தவிர சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய சிங்கப்பூரின் நியூசா் செயற்கைக்கோளும் நிலைநிறுத்தப்பட்டது. இது அனைத்துப் பருவநிலைகளிலும் தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பக்கூடியது.

● இதனுடன் கல்விசாா் பணிக்காக சிங்கப்பூா் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவா்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

● நான்காம் நிலை: பிஎஸ்எல்வி வரலாற்றில் முதல்முறையாக செயற்கைக்கோள்களை விடுவித்த பிறகு பயன்பாடற்று இருக்கும் ராக்கெட்டின் நான்காம் நிலையையும் ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்த இம்முறை முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டின் இறுதிபாகமான பிஎஸ் 4 பகுதியில் ஆறு ஆய்வுக் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

● பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டானது நியூ ஸ்பேஸ் இந்திய நிறுவனத்தின் (என்எஸ்ஐஎல்) மூலம் வணிக ரீதியாக செலுத்தப்படும் இரண்டாவது திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

6. இந்திய கலாச்சாரம் , தத்துவ இயலில் மனித உரிமைகள் என்ற மாநாட்டை டெல்லியில் தொடக்கிவைத்தவர் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) ராம்நாத் கோவிந்த்

இ) அருண்குமார் மிஸ்ரா

ஈ) வெங்கையா நாயுடு

விடை : (இ) அருண்குமார் மிஸ்ரா

● டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்திய கலாச்சாரம் , தத்துவ இயலில் மனித உரிமைகள் என்ற மாநாட்டை தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் அருண்குமார் மிஸ்ரா தொடக்கிவைத்தவர் .

7. பொருத்துக : 

( 47 வது GST கவுன்சில் கூட்டத்தில் புதிதாக இறுதி செய்யப்பட்ட வரி விதிப்பை பொருத்துக ) 

1) தோல் பொருள்கள் -  1) 5%

2) நிதி நிறுவன சேவைகள் - 2) 0

3) ஃபிலேரியாசிஸ் மாத்திரைகள் - 3) 18%

4) மருத்துவமனை அறை வாடகை- 4) 12%

அ) 4 3 2 1

ஆ) 3 4 1 2

இ) 1 2 3 4

ஈ) 2 1 3 4 

விடை : (அ) 4 3 2 1

● 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.

● இந்த வரி விதிப்பு ஜூலை 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


III . விளையாட்டுச்செய்திகள் 

8. தமிழகத்தில் எங்கு முதல்முறையாக சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது ? 

அ) மதுரை

ஆ) சென்னை

இ) சேலம்

ஈ) கன்னியாகுமரி

விடை : (ஆ) சென்னை

● சென்னை ஓபன் டபிள்யூடிஏ சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் 12 முதல் 18 -ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

● இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.1.96 கோடியாகும். பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு கோப்பையுடன் சுமார் ரூ. 22 லட்சம் பரிசும் 280 புள்ளிகளும் வழங்கப்படும்.

● 2-வது இடத்தை பெறும் வீராங்கனை ரூ.15.60 லட்சத்துடன் 180 புள்ளிகளை பெறுவார். 

● இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடி கோப்பையுடன் ரூ.9.47 லட்சம் பரிசுத் தொகையாக பெறும். 2-வது இடத்தை பிடிக்கும் ஜோடிக்கு ரூ.5.29 லட்சம் வழங்கப்படும்.

IV. முக்கிய தினங்கள்

9. தேசிய மருத்துவர்கள் தினம் ( National Doctor's Day ) 2022 ? 

அ) ஜூன் 30 

ஆ) ஜூன் 29 

இ) ஜூலை 02

ஈ) ஜூலை 01

விடை : (ஈ) ஜூலை 01

● ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 1ம் தேதி இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) சார்பில் "தேசிய மருத்துவர்கள் தினம்" கொண்டாடுகிறது. வங்காள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. 

மனிதகுலத்திற்கு சேவை செய்வதில் பெரும் பங்களிப்புடன் இருந்த வங்காளத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் பி.சி.ராய் நினைவாக 1991ம் ஆண்டு முதல் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...