Sunday, July 3, 2022

Current Affairs 2022 - July 03 /2022 - Group 2/2A & Group 4

                       GK SHANKAR 
                      JULY 03 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள் : 

1. தமிழகத்தில் எங்கு ஜவுளி பொருட்கள் பரிசோதனை மையம் அமைக்கப்படவுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார் ? 

அ) ஈரோடு
ஆ) கரூர்
இ) திருப்பூர்
ஈ) மதுரை 
 
விடை : (ஆ) கரூர்

● ஜவுளி பொருட்களின் தரம், தொழில்நுட்பம் குறித்த பரிசோதனைகளை செய்ய சர்வதேச தரத்தில் கரூர் புதிய பேருந்து நிலையம் திருமாநிலையூரில் ரூ.47 கோடியில் ஜவுளி பொருட்கள் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். 

2. தமிழகத்தில் பள்ளி மாணவ , மாணவியர் எத்தனை பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ? 

அ) 6 லட்சம்
ஆ) 13 லட்சம்
இ) 09 லட்சம்
ஈ) 10 லட்சம் 

விடை : (அ) 6 லட்சம் 

● அறிவிப்பு : பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்.
● மிதிவண்டிகள் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் ஜூலை 09 ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.
● முதல்கட்டமாக 6 லட்சம் பேருக்கு மிதிவண்டி வழங்கப்படவுள்ளது.

II. தேசியச் செய்திகள் 

3. வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களிடம் இருந்து ஆண்டுக்கு எத்தனை லட்சம் வரை அரசின் அனுமதியின்றி நிதி பெறும் வகையில் சட்ட திருத்தம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது ? 

 அ) ரூ. 8 லட்சம்
ஆ) ரூ. 3 லட்சம்
இ) ரூ. 10 லட்சம்
ஈ) ரூ. 11 லட்சம் 

விடை : (இ) 10 லட்சம் 

வெளிநாடுகளில் வசிக்கும் உறவினா்களிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை அரசின் அனுமதியின்றி நிதி பெறும் வகையில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட விதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தங்களைச் செய்துள்ளது. முன்பு இந்தத் தொகை வரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது.

● ‘வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த விதிகள் 2022’ என்ற பெயரில் புதிய விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டிருப்பதாவது:

● இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் உறவினா்களிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை மட்டுமே அரசின் அனுமதியின்றி பெற முடியும். இனிமேல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை பெற முடியும்.

● இந்தத் தொகையைவிட அதிகமான தொகையை வெளிநாட்டில் இருந்து பெறுவதாக இருந்தால் இதற்கு முன்பு 30 நாள்களுக்கு முன் அரசிடம் தெரிவிக்க வேண்டும். இனி, 90 நாள்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம்-2011, விதி எண் 6-இல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

4. தெலுங்கானா மாநிலம் பானூர் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் புதிய உற்பத்தி வசதிகளை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) அமித் ஷா

இ) ஜெய்சங்கர்

ஈ) ராஜ்நாத் சிங் 

விடை : (ஈ) ராஜ்நாத் சிங் 

தெலங்கானா மாநிலம், பானூா் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் புதிய உற்பத்தி வசதிகளை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

● பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளா்கள், பொறியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் மற்றும் பிற பணியாளா்களிடம் உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சா், பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதற்கும், பிரதமா் நரேந்திர மோடியின் ‘தற்சாா்பு இந்தியா’ திட்டத்தை நனவாக்கும் வகையிலும் பொதுத் துறை நிறுவனத்தின் அா்ப்பணிப்புக்கான சான்றாக, உற்பத்தி வசதிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினாா்.

● அடுத்த ஐந்தாண்டுகளுக்கான உள்நாட்டுமயமாக்கல் திட்டத்தை தயாரித்து, முதல் இரண்டு ஆண்டுகளுக்கான இலக்கை வெற்றிகரமாக அடைந்ததற்காக பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துக்கு அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

5. கிரிசில் நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை ------------------ ஆக குறைத்து கணித்துள்ளது ? 

அ) 7.3%

ஆ) 7.8%

இ) 8.1%

ஈ) 8.4%

விடை : (அ) 7.3%

● கிரிசில் நிறுவனம் - உள்நாட்டைச் சேர்ந்த தர மதிப்பீட்டு நிறுவனமாகும்.

● முந்தைய கணிப்பு : 7.8% 

6. வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான மிஸ் இந்தியா பட்டம் 2022 வென்றுள்ளவர் யார் ? 

அ) அனு குப்தா

ஆ) குஷி படேல் 

இ) ஈஷா வேலண்டைன்

ஈ) ரூபா சிங் 

விடை : (ஆ) குஷி படேல்

● NRI MISS INDIA WORLD WIDE 2022

● இது இந்தியாவிற்கு வெளியே பிற நாடுகளில் மிக நீண்ட காலமாக நடைபெறும் ஒரு இந்திய போட்டியாகும்.

● குஷி படேல் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த உயிரியல் மருத்துவ மாணவி ஆவார்.  

III. சர்வதேச செய்திகள் 

7. அண்மையில் கீழ்கண்ட எந்த நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ? 

அ) இந்தியா 

ஆ) கனடா

இ) ஆப்பிரிக்கா

ஈ) ஈரான்

விடை : (ஈ) ஈரான்

● ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

● குறிப்பு : 5 பேர் உயிரிழந்தனர், 44 பேர் காயமடைந்தனர்.

IV. விளையாட்டுச் செய்திகள் 

8. லண்டனில் , 2021 ஆம் ஆண்டிற்கான தங்கச் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள இந்தியாவின் முதல் நபர் (ம) டென்னிஸ் வீரர் ? 

அ) விஜய் அமிர்தராஜ்

ஆ) நீரஜ் சோப்ரா 

இ) எம்.எஸ். தோனி 

ஈ) கே.எல்.ராகுல்

● இந்த விருது சர்வதேச டென்னிஸ் புகழ் மன்றம் (ம) சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு ஆகியவற்றால் வழங்கப்படுகிறது.

● இந்த விருதை பெறும் முதல் இந்தியர் இவர் .

V. முக்கிய தினங்கள் 

9. சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம் ( International Plastic Bag Free Day ) 2022 ?

அ) ஜூன் 30

ஆ) ஜூலை 02

இ) ஜூலை 03

ஈ) ஜூலை 01

விடை : (இ) ஜூலை 03


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...