JULY 05 / 2022
I.தமிழ்நாட்டுச் செய்திகள்
1. தமிழகத்தில் எங்கு 1,100 ஆண்டுகள் முந்தைய சமணர் பள்ளி தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன ?
அ) சேலம்
ஆ) மதுரை
இ) திருநெல்வேலி
ஈ) விருதுநகர்
விடை : (ஈ) விருதுநகர்
● விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம் புல்லூர் கிராமத்தில் 1,100 ஆண்டுகள் பழமையான சமணர் பள்ளி தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
2. தமிழ்நாட்டில் ரூ.1.25 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் எத்தனை நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளன ?
அ) 60
ஆ) 31
இ) 45
ஈ) 75
விடை : (அ) 60
●சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது
● தலைப்பு : முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு என்ற தலைப்பிலான மாநாடு நடைபெற்றது.
● முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாநாட்டில், ரூ.1 லட்சத்து 25,444 கோடி முதலீட்டுக்கான 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் 74,898 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. ராம்ராஜ் காட்டன் எத்தனை கோடி முதலீட்டில் ஜவுளி ஆலை அமைப்பது தொடர்பாக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது ?
அ) ரூ. 1,700 கோடி
ஆ) ரூ. 1000 கோடி
இ) ரூ. 2,400 கோடி
ஈ) ரூ. 3,250 கோடி
விடை : (ஆ) ரூ. 1000 கோடி
● இந்த ஆலையின் மூலம் தமிழகத்தில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. வேளாண்மை கழிவுகளைப் பயன்படுத்தி தொழில் துறை நொதிகள் (ம) இரண்டாம் தலைமுறை எரிபொருளான பயோ எத்தனால் தயாரிப்பது குறித்து கண்டறிந்துள்ள நிறுவனம் / அமைப்பு ?
அ) ஐஐடி சென்னை
ஆ) டிஆர்டிஓ
இ) ஓஎன்ஜிசி
ஈ) ஐஐடி மும்பை
விடை : (அ) ஐஐடி சென்னை
• இந்திய மருந்துப் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஆல்பா-அமைலஸ் மற்றும் செல்லுலாஸ் போன்ற தொழில்துறை நொதிகளுக்கு அதிகளவில் தேவை இருந்து வருகிறது.
• இந்நிலையில் வேளாண்மை கழிவுகளில் இருந்து தொழில்துறை நொதிகள் மற்றும் மதிப்புக் கூட்டுத் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய 'பேசிலஸ் எஸ்பி பிஎம்06' எனப்படும் பாக்டீரியா எவ்வாறு உதவுகிறது என்பதை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
II. தேசியச் செய்திகள்
5. நிகழாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை ------------- சதவீதமாக வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது ?
அ) 7.3%
ஆ) 8.4%
இ) 6.4%
ஈ) 5.9%
விடை : (இ) 6.4%
6. சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125 ஆவது பிறந்த தினத்தையொட்டி அவரது 30 அடி உயர வெண்கலச் சிலையை திறந்து வைத்தவர் ?
அ) ஜகன் மோகன் ரெட்டி
ஆ) மு.க. ஸ்டாலின்
இ) ராம்நாத் கோவிந்த்
ஈ) நரேந்திர மோடி
விடை : (ஈ) நரேந்திர மோடி
● ஆந்திர பிரதேச மாநிலம் , பீமா வரத்தில் உள்ள பெதாமிராம் பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125 வது பிறந்த தினத்தையொட்டி அவரது 30 அடி உயர வெண்கலச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
III. சர்வதேச செய்திகள்
7. கரோனா தீநுண்மியை அழிக்க , புதிய என் - 95 முகக்கவசத்தை கீழ்கண்ட எந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் ?
அ) அமெரிக்கா
ஆ) ரஷ்யா
இ) இந்தியா
ஈ) சீனா
விடை : (அ) அமெரிக்கா
● கரோனா வைரசை அழிக்ககூடிய N-95 முகக்கவசம் .
● அமெரிக்காவை சேர்ந்த ரென்சீலர் பாலிடெக்னிக் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் .
IV. விளையாட்டுச் செய்திகள்
8. கஜகஸ்தானில் நடைபெற்ற எலோர்டா கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியா வென்றுள்ள பதக்கங்கள் ?
அ) 13
ஆ) 31
இ) 23
ஈ) 14
விடை : (ஈ) 14
● இப்போட்டியில் இந்தியாவின் சார்பில் 33 பேர் கலந்துக்கொண்டனர்.
● வென்ற பதக்கங்கள் (14) :
2 G , 2 S & 10 B .
9. இந்தியன் சூப்பர் லீக் ( ISL ) கால்பந்து போட்டியின் அணிகளில் ஒன்றான சென்னையின் எஃப்சி, எதிர்வரும் சீசனுக்காக எத்தனை தமிழக வீரர்களை அணியில் சேர்த்துள்ளனர் ?
அ) 5
ஆ) 2
இ) 4
ஈ) 3
விடை : (ஆ) 2
● தமிழகத்தைச் சேர்ந்த லிஜோ ஃபிரான்சிஸ், ஜாக்சன் தாஸ் ஆகியோர் 2 ஆண்டு ஒப்பந்தத்தின் பேரில் சென்னை எஃப்சி அணியில் இணைந்துள்ளனர்.
No comments:
Post a Comment