Monday, July 4, 2022

Current Affairs 2022 - July 04 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                        GK SHANKAR 
                       JULY 04 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற தலைப்பில் எங்கு 9,000 நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது ? 

அ) சேலம் 
ஆ) மதுரை
இ) நாமக்கல்
ஈ) தருமபுரி 

விடை: (இ) நாமக்கல்

தமிழக நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், 21 மாநகராட்சி, 188 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் திமுக சாா்பிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் சாா்பிலும் வெற்றி பெற்ற சுமாா் 9,000 வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்ற ‘உள்ளாட்சியில் நல்லாட்சி’ என்ற தலைப்பிலான நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு, நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மைக் குட்டைமேட்டில் நடைபெற்றது.

● இந்த மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

2. சென்னைக்கு அடுத்தபடியாக எந்த மாவட்டத்தில் வணிகவியல் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன ? 

அ) வேலூர்
ஆ) சேலம்
இ) தருமபுரி
ஈ) தேனி 

விடை : (ஆ) சேலம்

சென்னைக்கு அடுத்தபடியாக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வணிகவியல் நீதிமன்ற தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி வணிகவியல் நீதிமன்றத்தைத் திறந்துவைத்தார்.

● வணிகவியல் சாா்ந்த வழக்குகளுக்கு விரைவில் தீா்வு காணும் வகையில் வணிகவியல் நீதிமன்றங்கள் தொடங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

● சேலத்தில் 2 வணிகவியல் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம் வணிக மையமாக மாறியுள்ளதைத் தொடா்ந்து வணிகவியல் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

3. கூற்று : சேலம் மாவட்டம் ஜருகு மலையில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டுக்காக 108 அவசர சிகிச்சை ஊர்தியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

காரணம் : ஜருகு மலை மக்கள் கோரிக்கை ஏற்று வழங்கப்பட்டது.

அ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது.

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.

இ) கூற்று சரி, காரணம் தவறு

ஈ) கூற்று தவறு , காரணம் சரி

விடை : (அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

சேலம் மாவட்டம் ஜருகு மலையில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டுக்காக 108 அவசர சிகிச்சை ஊா்தியை (ஆம்புலன்ஸ்) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.

● சேலம், நாமக்கல் பகுதியில் ஆய்வுப் பணிகளுக்குச் சென்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன், கடந்த சனிக்கிழமை (ஜூலை 2) வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள ஜருகுமலை எனும் மலைவாழ் கிராமத்துக்கு 14 கி.மீ. நடந்தே சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்தாா்.

● இதையடுத்து, மலைப் பகுதியில் பிரசவ சிகிச்சை, அவசர சிகிச்சைகள் தேவைப்படும்போது வாகன வசதி எதுவும் இல்லை என்றும், அதற்கு பிரத்யேக வாகனம் வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை வைத்தனா்.

●இதையடுத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன், உடனடியாக ஜருகுமலை மக்களின் பயன்பாட்டுக்காக பிரத்யேக 108 அவசர சிகிச்சை ஊா்தி ஒன்றை வழங்க உத்தரவிட்டாா். அதன்படி, அங்கு அந்த வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது.

II. தேசியச் செய்திகள் 

4. நாட்டின் பொது விநியோகத்தின் மூலம் அளிக்கப்படும் உணவு, ஊட்டச்சத்து, பாதுகாப்பு குறித்த ஒரு நாள் தேசிய மாநாடு மத்திய அரசால் எங்கு நடத்தப்படவுள்ளது ? 

அ) டெல்லி

ஆ) தமிழ்நாடு

இ) ராஜஸ்தான்

ஈ) மின்சாரம்

விடை : (அ) டெல்லி

● இந்த மாநாடு மத்திய உணவு, பொது விநியோகத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

● மத்திய அமைச்சர் பியூஷ் கோயில் தலைமையில் நடைபெறவுள்ளது.

● நோக்கம் : பொது விநியோக அமைப்பு முறையின் கீழ் இயங்கும் திட்டங்களில் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு ,சிறந்த நடைமுறைகளை காணவும் உணவுப் பொருள்களில் ஊட்டச்சத்துகளை வலுப்படுத்தி அதற்கான பாதுகாப்பில் கவனம் செலுத்துவது போன்றவற்றுக்காகவும் இந்த மாநாட்டுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது . 

5. இந்தியாவின் தேஜஸ் இலகுரக போர் விமானங்களை கொள்முதல் செய்ய உள்ள நாடு எது ? 

அ) சீனா

ஆ) ரஷ்யா

இ) உக்ரைன்

ஈ) மலேசியா

விடை : ( ஈ ) மலேசியா

இந்தியாவின் தேஜஸ் இலகுரக போா் விமானங்களை மலேசியா கொள்முதல் செய்வது குறித்த பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) தெரிவித்துள்ளது.

6. நடப்பு நிதியாண்டில் அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற்ற வெளிநாட்டினர்களின் பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் ? 

அ) முதலாவது

ஆ) இரண்டாவது

இ) ஏழாவது

ஈ) ஒன்பதாவது

விடை : (ஆ) இரண்டாவது 

● அறிவிப்பு: அமெரிக்காவின் நாட்டு குடியுரிமை (ம) குடியேற்ற சேவைகள் மையம்.

● முதல் மூன்று இடம் : 

1st - மெக்ஸிகோ (24,508)

2nd - இந்தியா (12,928)

3rd - பிலிப்பின்ஸ் (11,316).

7. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக:

1) ஜான்சி இரயில் நிலையமானது வீராங்கனை இலட்சுமிபாய் இரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது.

2) ஜான்சி இரயில் நிலையம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

3)  1 மற்றும் 2 

4) ஏதுமில்லை

விடை : (அ) 1 மட்டும் 

உத்தரபிரதேசத்தின் ஜான்சி இரயில் நிலையமானது இலட்சுமிபாய் இரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட உள்ளது. 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...