Saturday, July 2, 2022

Current Affairs 2022 - July 02 / 2022 - Group 2/2A & Group 4

                     GK SHANKAR 
                    JULY 02 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள்

1. சிங்கப்பூரை சேர்ந்த ஐஜிஎஸ்எஸ் கூட்டாண்மை நிறுவனம் பின்வரும் எந்த மாநிலத்தில் செமிகண்டக்டர் உயர்தொழில் நுட்பப் பூங்காவை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுவுள்ளது ? 

அ) தமிழ்நாடு
ஆ) கர்நாடகா
இ) குஜராத்
ஈ) ஜார்கண்ட்

விடை : (அ) தமிழ்நாடு

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் 'செமிகண்டக்டர்' உயர் தொழில்நுட்பப பூங்காவை அமைக்க உள்ளது. 

● இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

● இந்நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தில் 25 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீடு செய்து, 1,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. 

●சர்க்யூட் வடிவமைப்பாளர்கள், உற்பத்தி பொருள் வினியோகஸ்தர்கள், உபகரண வினியோகஸ்தர்கள் மற்றும் செமிகண்டக்டர் அவுட்சோர்சிங் மற்றும் பரிசோதனை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான திட்டங்கள் இந்த பூங்காவில் அமைக்கப்படும். இதன் காரணமாக உருவாகக்கூடிய சூழல் அமைப்புகளின் மூலம் 25 ஆயிரம் பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

2. தமிழகத்தில் எத்தனை நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை முதல்வர் தொடக்கி வைத்தார் ? 

அ) 31
ஆ) 18
இ) 14
ஈ) 09 
விடை : (இ) 14 

தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டுக்காக ரூ.3 கோடியே 92 லட்சம் செலவில் 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்கள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன. 

● குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்ற நிகழ்விடத்திலேயே குற்றப் புலனாய்வு செய்வோருக்கு அறிவியல் ரீதியான சேவைகளை வழங்க நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள் பெரிதும் உதவும். 

● இதற்கென ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் குற்ற நிகழ்விடங்களை ஆய்வு செய்து தடயங்களை கண்டறியவும், தடய பொருள்களை ஆராய்ந்து குற்றம் எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என குற்றப் புலனாய்வு செய்வோருக்கு அறிக்கை வழங்கவும் ஒரு உதவி இயக்குநா் பணிபுரிகிறாா்.

● இந்த வாகனங்கள் சென்னை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூா் மாநகர ஆணையரகங்கள், வேலூா், தருமபுரி, கோவை, நீலகிரி, மதுரை, விழுப்புரம், ராமநாதபுரம், தஞ்சாவூா் ஆகிய காவல் மாவட்டங்களில் பயன்படுத்தப்படும்.

3. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக: 

1) மாநில அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது தமிழக அரசு . 
2) அணை பாதுகாப்புச் சட்டம் 2020 ன் படி இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது . 

அ) 1 மற்றும் 2 
ஆ) 1 மட்டும்
இ) 2 மட்டும் 
ஈ) ஏதுமில்லை

விடை : (ஆ) 1 மட்டும் 

அணை பாதுகாப்புச் சட்டம் 2021 ன் படி மாநில அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

● மத்திய அணை பாதுகாப்புச் சட்டத்தின் 11 ஆவது பிரிவின்படி மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் . அதன்படி, மாநில அணை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

● இந்த அமைப்பின் தலைவராக தலைமைப் பொறியாளர் (பொது) இருப்பார். 

4. தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் திருடப்பட்ட தமிழின் முதல் பைபிள் எங்கு கண்டறியப்பட்டுள்ளது ? 

அ) அமெரிக்கா
ஆ) ரஷ்யா
இ) சீனா
ஈ) லண்டன்

விடை : (ஈ) லண்டன்

தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தில் திருடப்பட்ட தமிழின் முதல் பைபிள், லண்டனில் இருப்பதைக் கண்டறிந்த தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, அதை மீட்பதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

● பாா்த்தோலொமஸ் சீகன் பால்க் என்ற கிறிஸ்தவ மதபோதகா், 1682-ஆம் ஆண்டு ஜொ்மனி நாட்டில் உள்ள சாக்சானி என்ற நகரத்தில் பிறந்து பாலே பல்கலை.யில் படித்து லூதரன் தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றினாா். பின்னா், டென்மாா்க் நாட்டு மன்னரின் வேண்டுகோளை ஏற்று, சீகன் பால்க்கும், கென்ரிக் என்ற மற்றொரு மதபோதகரும் தென்னிந்தியாவுக்கு கிறிஸ்தவத்தை பரப்ப வந்தனா். 

● 1706-ஆம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியில் டச்சு காலனி பகுதிக்கு வந்த இவா்கள், சீகன் பால்க் ஒரு அச்சகத்தை நிறுவி தமிழ் மொழியில் இந்திய நாட்டு கலாசாரம், மதம் தொடா்பான புத்தகங்களை வெளியிட்டாா். இவா் பைபிளின் ‘புதிய அத்தியாயத்தை’ தமிழில் 1715-ஆம் ஆண்டு மொழி பெயா்த்தாா். அவா் 1719-ஆம் ஆண்டு மறைந்தாா்.

● சீகன் பால்க்கால் மொழி பெயா்க்கப்பட்டு அச்சிடப்பட்ட அரிய வகை பைபிள் (புதிய அத்தியாயம்) அப்போதைய தஞ்சாவூா் சரபோஜி மன்னருக்கு பரிசாக அந்த நேரத்தில் வழங்கப்பட்டது. அந்தப் புத்தகம் பிற்காலத்தில் தமிழக அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு, தஞ்சை சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் பொது மக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

●இந்த நிலையில், தமிழில் முதல் முதலாக மொழிபெயா்ப்பு செய்யப்பட்ட விலை மதிப்பில்லாத அந்த பைபிள் காணாமல் போனதாக 2015-ஆம் ஆண்டு அக். 10-ஆம் தேதி சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தின் நிா்வாக அலுவலா், தஞ்சாவூா் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்

● இதையடுத்து, தனிப்படையினா் பல்வேறு வெளிநாட்டு அருங்காட்சியகங்களின் இணையதளங்களை ஆய்வு செய்தனா். அப்போது, சரஸ்வதி மகாலில் திருடப்பட்ட பைபிள் பிரிட்டன் நாட்டின் லண்டனில் உள்ள கிங்ஸ் கலெக்ஷன் என்ற ஒரு நிறுவனத்தின் இணையதளத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

● இதைத் தொடா்ந்து, சிலை திருட்டு தடுப்புப் பிரிவினரின், அந்த பைபிள் குறித்து விசாரணை செய்தனா். அதில் அந்த பைபிள், சரஸ்வதி மகால் நூலகத்தில் திருடப்பட்டதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த பைபிளை யுனெஸ்கோ ஒப்பந்தம் மூலமாக மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வருவதற்குரிய முயற்சியில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் ஈடுபட்டுள்ளனா்.


II. தேசியச் செய்திகள் 

5. ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி யார் ? 

அ) ஏ.எஸ். ராஜன்

ஆ) சங்க்கரன்

இ) கே. ஆறுமுகம்

ஈ) எல். ஆனந்த் பாபு 

விடை : (அ) ஏ.எஸ். ராஜன் 

● ஏ. சேர்மராஜன்,  1987 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சிபெற்ற தேனியைச் சேர்ந்தவர் ஆவார். 

6. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் (ம) தனியார் முதலீட்டுக்காக இந்தியாவுக்கு எவ்வளவு கடன் அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) 2.25 பில்லியன் டாலர்

ஆ) 1.15 பில்லியன் டாலர் 

இ) 1.75 பில்லியன் டாலர்

ஈ) 3.5 பில்லியன் டாலர்

விடை : (இ) 1.75 பில்லியன் டாலர்

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் தனியாா் முதலீட்டுக்காக இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.13,834 கோடி) கடன் அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

● சுகாதாரத்துக்கு 1 பில்லியன் டாலா், தனியாா் முதலீட்டுக்கு 750 மில்லியன் டாலா் என இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலா் கடன் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சுகாதாரத்துக்கு அளிக்கப்படும் கடன், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு திட்டத்துக்கு உதவும். இந்தியாவில் உள்ள பொது சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தக் கடன் தொகை பயன்படுத்தப்படும்.

● சுகாதாரத்துக்கான 1 பில்லியன் டாலரில் 500 மில்லியன் டாலா் மூலம் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், ஒடிஸா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மேகாலயம் ஆகிய 7 மாநிலங்கள் பலனடைய முன்னுரிமை அளிக்கப்படும்.

இதுதவிர, இந்தியப் பொருளாதாரத்தில் உள்ள நிதி இடைவெளிகளை தனியாா் துறை முதலீடு மூலம் நிரப்ப வளா்ச்சிக் கொள்கைக் கடனாக 750 மில்லியன் டாலா் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. DRDO மேற்கொண்ட முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சிறிய ரக ஆளில்லா விமானம் (யுரவி) எங்கு வெற்றிகரமாக சோதனை மேற்கொண்டது ? 

அ) கேரளா 

ஆ) தமிழ்நாடு

இ) குஜராத் 

ஈ) கர்நாடகா

விடை : (ஈ) கர்நாடகா 

பெங்களூருவில் உள்ள டி.ஆர்.டி.ஓ.வின் முதன்மை ஆய்வுக்கூடமான ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு நிறுவனம் ஆளில்லா தானியங்கி விமானத்தை வடிவமைத்து தயாரித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா தானியங்கி விமானம் நேற்று முதல் முறையாக சோதிக்கப்பட்டது.

● கர்நாடகாவின் சித்ரதுர்காவில் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது, இந்த விமானம் வெற்றிகரமாக மேலெழும்பி பறந்ததுடன், வெற்றிகரமாக தரையிறங்கியும் சாதித்தது.

● முற்றிலும் தானியங்கி முறையில் செயல்பட்ட இந்த விமானம், ஒரு சிறிய டர்போபேன் என்ஜின் மூலம் இயங்குகிறது. இதற்கான உதிரி பாகங்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என டி.ஆர்.டி.ஓ. வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

8. இந்தியாவின் எந்த மாநிலத்தில் வீட்டிற்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரத் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது ?

அ) தமிழ்நாடு

ஆ) பஞ்சாப்

இ) கேரளா

ஈ) ராஜஸ்தான்

விடை : (ஆ) பஞ்சாப்

● பஞ்சாபில் வீட்டிற்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

● பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தொடக்கிவைத்தார். 

III. விளையாட்டுச் செய்திகள் 

9. ஸ்வீடனில் நடைபெறும் டைமண்ட் லீக் மீட்டில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) ஏதுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

● இப்போட்டியில் நீரஜ் சோப்ரா 89.94 மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். 

IV. முக்கிய தினங்கள் : 

10. சர்வதேச கூட்டுறவு தினம் ( International Cooperative Day ) 2022 ? 

அ) ஜூலை 01

ஆ) ஜூலை 02

இ) ஜூலை 03

ஈ)ஜூலை 04

விடை : (ஆ) ஜூலை 02

11. உலக விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம் ( World Sports Journalists Day ) 2022 ? 

அ) ஜூன் 29

ஆ) ஜூன் 30

இ) ஜூலை 01

ஈ) ஜூலை 02

விடை : (ஈ) ஜூலை 02 



No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...