Friday, July 1, 2022

Current Affairs 2022 - June 30 / 2022 - Group 2/2A & Group 4

                      GK SHANKAR 
                     JUNE 30 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் எடைக்குறைவுடன் பிறக்கும் குழந்தைகளைக் கண்காணிக்க தமிழக அரசு ஒதுக்கியுள்ள நீதி எவ்வளவு ? 

அ) 80 லட்சம்
ஆ) 85 லட்சம்
இ) 100 லட்சம்
ஈ) 75 லட்சம்

விடை : (ஆ) 85 லட்சம்

2. தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் ---------- மொழியை பயிற்றுவிக்கவும் , அதற்கான ஆசிரியர்களை நியமிக்கவும் --------------- அரசு முன்வந்துள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது ? 

அ) ஜப்பான், ஜப்பான் அரசு
ஆ) மலாய்,  சிங்கப்பூர்
இ) உருது, பாகிஸ்தான்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) ஜப்பான், ஜப்பான் அரசு 

3. தமிழகத்தில் எங்கு 150 அடி தேசிய கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது ?
அ) நீலகிரி
ஆ) மதுரை
இ) கன்னியாகுமரி
ஈ) கடலூர்

விடை : (இ) கன்னியாகுமரி

II. தேசியச் செய்திகள்

4. கூற்று : குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது .
காரணம் : தற்போதைய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பதவியை ராஜிநாமா செய்தார்.

அ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது.

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.

இ) கூற்று தவறு , காரணம் சரி 

ஈ) கூற்று சரி, காரணம் தவறு 

விடை : (ஈ) கூற்று சரி , காரணம் தவறு . 

5. அட்டர்னி ஜெனரலாக ( மத்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் ) கே.கே. வேணுகோபால் அவர்களின் பதவிக்காலம் எத்தனை நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது ? 

அ) ஓராண்டு
ஆ) ஆறு மாதங்கள்
இ) மூன்று மாதங்கள்
ஈ) எட்டு மாதங்கள்

விடை : (இ) மூன்று மாதங்கள்

6. 2023 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த மாணவ நகரங்கள் பட்டியலில் சென்னை பிடித்துள்ள இடம் ? 

அ) 125 ஆவது
ஆ) 131 ஆவது
இ) 113 ஆவது
ஈ) 151 ஆவது

விடை : (அ) 125 ஆவது

7. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அப்யாஸ் அதிவேக வான்வழி இலக்கு வாகனம் (ஹீட்) எங்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது ? 

அ) டெல்லி
ஆ) ஒடிஸா
இ) கேரளா
ஈ) தமிழ்நாடு

விடை : (ஆ) ஒடிஸா

8. ஆஸ்கர் அகாதெமி விருது தேர்வுக் குழுவில் இடம்பெற அழைக்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் நடிகர் யார் ? 

அ) கமல் ஹாசன்
ஆ) மோகன் லால்
இ) சூர்யா
ஈ) சிரஞ்சீவி

III. விளையாட்டுச் செய்திகள்

9. பின்வரும் கூற்றுகளில் தவறானவற்றை தேர்ந்தெடுக: 

அ) இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் ஆட்டத்திற்கு இந்திய கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆ) கடந்த 35 ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கேப்டனாவது இதுவே முதல்முறையாகும்.

இ) இதற்குமுன் 1998 இல் வேகப்பந்து வீச்சாளரான கபில் தேவ் கேப்டனாக இருந்தார்.

ஈ) இந்திய டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கும் 36 வது கேப்டன் பும்ரா ஆவார் .

விடை : இ 

IV. முக்கிய தினங்கள் 

10. சர்வதேச பாராளுமன்ற தினம் ( International Day of Parliamentarism ) 2022 ? 
அ) ஜூன் 26
ஆ) ஜூன் 27
இ) ஜூன் 28 
ஈ) ஜூன் 30 

விடை : (ஈ) ஜூன் 30


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...