JULY 06 / 2022
I. தமிழ்நாட்டுச் செய்திகள்
1. தமிழகத்துக்கு உரிய உணவு மானிய நிலுவை தொகை ரூபாய் எத்தனை கோடியை விரைவில் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது ?
அ) ரூ. 2000 கோடி
ஆ) ரூ. 2,700 கோடி
இ) ரூ. 1,300 ,கோடி
ஈ) ரூ. 4,200 கோடி
விடை : (அ) ரூ.2000 கோடி
2. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக:
1) தமிழகத்தில் இனி ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையில்லாத சூழலை உருவாக்கும் அரசு, தனியார் துறையினருக்கு 2 விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார் .
2) இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது .
அ) 1(ம) 2
ஆ) 2 மட்டும்
இ) 1 மட்டும்
ஈ) ஏதுமில்லை
விடை : (இ) 1 மட்டும்
II. தேசியச் செய்திகள்
3. இந்தியாவில் அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படையில் நடப்பாண்டில் எத்தனை சதவீத பெண்கள் சேர்க்கப்படவுள்ளன ?
அ) 50%
ஆ) 20%
இ) 30%
ஈ) 10%
விடை : (ஆ) 20%
4. கீழ்கண்ட எந்த ஆண்டுக்குள் இந்தியாவின் யூரியா உற்பத்தி தன்னிறைலைக் காணும் என மத்திய அமைச்சர் மனசுக் மாண்டவியா தெரிவித்துள்ளர் ?
அ) 2024
ஆ) 2030
இ) 2040
ஈ) 2025
விடை : (ஈ) 2025
5. நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கீழ்கண்ட யாரெல்லாம் சிறையில் இருந்து விடுவிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது ?
1) 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்
2) அபராத தொகை செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்கள்.
3) திருநங்கைகள் கைதிகள்
4) 75 வயதுக்கு மேற்பட்ட ஆண் கைதிகள்.
அ) 1,2,4
ஆ) 2,3,4
இ) 1,2,3
ஈ) 1,3,4
விடை : (இ) 1,2,3
6. அமொிக்க உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றில் முதல்முறையாக பொறுப்பேற்றுள்ள முதல் கருப்பினப் பெண் நீதிபதி யார் ?
அ) கேதான்ஜி பிரவுன்
ஆ) பிரியா மிஸ்ரா
இ) ஈஷா வேலண்டைன்
ஈ) ரோஸிலின் மெர்சி
விடை : (அ) கேதான்ஜி பிரவுன்
III. விளையாட்டுச் செய்திகள்
7. கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக எந்த நாட்டின் வாரியம் ஆடவர், மகளிர் அணிகளுக்கு அனைத்து ஃபார்மட் போட்டிகளில் சமமான ஊதியம் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது ?
அ) ஆஸ்திரேலியா
ஆ) இந்தியா
இ) இங்கிலாந்து
ஈ) நியூசிலாந்து
விடை : (ஈ) நியூசிலாந்து
IV. முக்கிய தினங்கள்
8. World Zoonosis Day - உலக ஜூனோசிஸ் தினம் 2022
அ)ஜூலை 03
ஆ) ஜூலை 04
இ) ஜூலை 06
ஈ)ஜூலை 05
விடை : (இ) ஜூலை 06
No comments:
Post a Comment