Wednesday, November 9, 2022

Current Affairs 2022 - November 09 / 2022 - TNPSC Group 1 2/2A & 4

                         GK SHANKAR 
                 NOVEMBER 09 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. சிங்கப்பூரில் நடைபெறும் 7 ஆவது உலக சுகாதார மாநாட்டில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற அமைச்சர் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின்

ஆ) மா. சுப்பிரமணியன் 

இ) பொன்முடி 

ஈ) தங்கம் தென்னரசு 

விடை : (ஆ) மா. சுப்பிரமணியன் 

● மாநாட்டின் தலைப்பு : நுண்ணுயிர் எதிர்ப்பு பாதை - தென்கிழக்கு ஆசிரியர் தொற்று நோய்கள் அச்சுறுத்தல்கள். 

2. தமிழகத்தின் எத்தனையாவது சரணாலயமாக, காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 15 

ஆ) 16 

இ) 17 

ஈ) 18 

விடை : (இ) 17 

தமிழகத்தின் 17 ஆவது புதிய சரணாலயமாக, காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு, வெளியிட்டது.

3. தமிழ் அகராதியியல் நாள் விழாவில் , எத்தனை பேருக்கு தூய தமிழ்ப் பற்றாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 13 

ஆ) 17 

இ) 21 

ஈ) 27 

விடை : (அ) 13 

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் அகராதியியல் நாள் விழாவில், 13 பேருக்கு தூய தமிழ்ப் பற்றாளா் விருதை தமிழ் வளா்ச்சித் துறைச் செயலா் ம.சு.சண்முகம் வழங்கி கெளரவித்தாா்.

● ‘தமிழ் அகராதியியலின் தந்தை’ என போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ்த் தொண்டைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான நவ.8-ஆம் நாள் தமிழ் அகராதியியல் நாள் விழாவாகக் கொண்டாட தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த விழா ஆண்டுதோறும் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சாா்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

● அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அகரமுதலித் திட்ட இயக்குநா் கோ.விசயராகவன் வரவேற்றாா். இதில் முதல்வரின் செயலரும், தமிழ்வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலருமான ம.சு.சண்முகம் கலந்து கொண்டு 2021-ஆம் ஆண்டுக்கான 13 பேருக்கு தூய தமிழ்ப் பற்றாளா் விருது (2021), இருவருக்கு நற்றமிழ்ப் பாவலா் விருது (2021), இரு ஊடக நிறுவனங்களுக்கு தூய தமிழ் ஊடக விருது (2021) ஆகிய விருதுகளை வழங்கினாா்.

● மேலும், 58 அறிஞா்களின் கருத்துச் செறிவாா்ந்த கட்டுரைகள் அடங்கிய 2022-ஆம் ஆண்டுக்கான அகராதி ஆய்வு மலரை வெளியிட்டாா். முன்னதாக மயூரி நிகழ்த்துக் கலைக்கழகத்தின் சாா்பில் விஜயலட்சுமி பூபதி வழங்கும் ‘எங்கும் தமிழ்’ கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

4. தமிழகத்தில் நாளையை நோக்கி இன்றே - தலை நிமிர்ந்த தமிழ்நாடு எனும் தலைப்பிலான தொழில் வளர்ச்சி மாநாடு எங்கு நடைபெற்றது ? 

அ) சேலம்

ஆ) மதுரை

இ) சென்னை

ஈ) கோவை

விடை : (இ) சென்னை 

தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில், ‘நாளையை நோக்கி இன்றே- தலை நிமிா்ந்த தமிழ்நாடு’ எனும் தலைப்பிலான தொழில் வளா்ச்சி மாநாடு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

● ஆளில்லா பைலட்கள்: ட்ரோன்களை இயக்குவதற்கான பயிற்சி மையங்கள் மதுரை, கோவையில் நிறுவப்பட்டுள்ளது. இதனை இந்த நிகழ்ச்சியின் வாயிலாகத் திறந்து வைத்துள்ளேன். இந்த மையங்களில் 200 மாணவா்கள் என்ற விகிதத்தில் பயிற்சி அளித்திட முடியும். 

● இந்தப் பயிற்சி மூலம், நமது கிராமப்புற படித்த இளைஞா்கள் ஆளில்லாத விமான பைலட்டுகளாக தகுதி பெற முடியும். தமிழகத்தின் அனைத்து தொழில் வாய்ப்புகளையும் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேசிய அளவில் மட்டுமின்றி, தெற்காசியாவிலேயே, தொழில் வளா்ச்சியில் சிறந்த மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை அடைவதற்காக அனைவரும் உழைப்போம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

● வான்வெளி - பாதுகாப்பு தொழில் கொள்கை வெளியீடு: 10 ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடி ஈா்க்க இலக்கு : 

● சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழில் துறை மாநாட்டின் போது, வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழிலுக்கான பிரத்யேக கொள்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

● ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு: வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈா்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில் இதற்கான விரிவான பணிகள் மேற்கொள்ளப்படும்.

● அரசின் முதலீடுகள் மட்டுமின்றி, அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈா்க்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் ஈா்ப்பால், சுமாா் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. இந்தியா முதல்முறையாக ஜி20 கூட்டமைப்புக்கான தலைமைப் பொறுப்பை என்று முதல் ஏற்கவுள்ளது ? 

அ) டிசம்பர் 01 

ஆ) டிசம்பர் 11

இ) டிசம்பர் 25

ஈ) டிசம்பர் 31

விடை : (அ) டிசம்பர் 01 

● உலகின் பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்புக்கான தலைமைப் பொறுப்பை டிசம்பா் 1-ஆம் தேதி இந்தியா ஏற்கவுள்ளது. ஓராண்டு அப்பொறுப்பில் நீடிக்கவுள்ள இந்தியா, பருவநிலை மாற்றம், சா்வதேச கடன் பிரச்னை, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வுகாண திட்டமிட்டுள்ளது.

● இந்நிலையில், ஜி20 கூட்டமைப்பின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருத்துரு, வலைதளம் ஆகியவற்றை பிரதமா் மோடி தில்லியில் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அப்போது அவா் கூறியதாவது:

● நாடு 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடிய நிலையில் ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கவுள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பெருமை கொள்ளக் கூடிய நிகழ்வு. இந்தப் பொறுப்பு இந்தியாவுக்கு பல்வேறு வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

● கூட்டமைப்பில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ளன.

● சா்வதேச பொருளாதார மதிப்பில் (ஜிடிபி) ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் பங்கு சுமாா் 85 சதவீதம். சா்வதேச வா்த்தகத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவை கூட்டமைப்பின் நாடுகளிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு போ் அந்த நாடுகளிலேயே வசிக்கின்றனா்.

● ஜி20 கூட்டமைப்பின் தற்போதைய தலைமைப் பொறுப்பை இந்தோனேசியா வகித்து வருகிறது. கூட்டமைப்பின் மாநாடு வரும் 15, 16 ஆகிய தேதிகளில் இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ளது. அதில் பிரதமா் மோடி நேரில் கலந்துகொள்ளவுள்ளாா்.

6. உச்சநீதிமன்றத்தின் எத்தனையாவது தலைமை நீதிபதியாக சந்திசூட் பதவியேற்கவுள்ளார் ? 

அ) 49

ஆ) 50 

இ) 51 

ஈ) 52 

விடை : (ஆ) 50 

● இவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக 2024 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி வரை பதவி வகிப்பார். 

7. நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட்டின் பெயர் என்ன ? 

அ) விஞ்ஞான்- எஸ்

ஆ) சந்திரன்-எஸ் 

இ) ஆதித்யா-எஸ்

ஈ) விக்ரம்-எஸ் 

விடை : (ஈ) விக்ரம்-எஸ் 

நாட்டின் முதல் தனியாா் ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’ விண்ணில் செலுத்துவதற்கான தயாா்நிலையில் உள்ளது.

● ஸ்கைரூட் ஏா்ஸ்பேஸ் என்ற தனியாா் நிறுவனம் ‘விக்ரம்-எஸ்’ என்ற ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. நாட்டில் தனியாா் நிறுவனம் சாா்பில் வடிவமைக்கப்பட்டுள்ள முதல் ராக்கெட் இதுவாகும். அந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

● இது தொடா்பாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவன்குமாா் சந்தானா கூறுகையில், ‘‘இந்தியாவின் இரு செயற்கைக்கோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைக்கோள் ஆகியவற்றுடன் விக்ரம்-எஸ் ராக்கெட் ஏவப்படவுள்ளது. வரும் 12 முதல் 16-ஆம் தேதிக்குள் ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலநிலைக்கு ஏற்ப ராக்கெட் ஏவப்படும் தேதியும் நேரமும் விரைவில் இறுதி செய்யப்படும். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளது’’ என்றாா்.

என்ஜின் பரிசோதனை வெற்றி:

● விண்வெளி புத்தாக்க நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் சாா்பில் வடிவமைக்கப்பட்ட ‘அக்னிலெட்’ ராக்கெட் என்ஜின், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. அந்த என்ஜின் 15 விநாடிகளுக்கு இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

● இஸ்ரோவுக்கும் அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்துக்கும் இடையே கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

8. ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள ஆசியாவில் வணிக நிர்வாகத்தில் தலைசிறந்த 20 பெண்களின் பட்டியலில் எத்தனை இந்திய பெண்கள் இடம் பெற்றுள்ளன ? 

அ) 5

ஆ) 4

இ) 3 

ஈ) 2 

விடை : (இ) 3 

ஃபோா்ப்ஸ் இதழில் வெளியிட்டுள்ள ஆசியாவில் வணிக நிா்வாகத்தில் தலைசிறந்த 20 பெண்களின் பட்டியலில் இந்தியாவைச் சோ்ந்த மூன்று பெண்கள் இடம் பெற்றுள்ளன.

● கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பையும் மீறி இவா்கள் கடைப்பிடித்த பல்வேறு வழிமுறைகள் அவா்கள் சாா்ந்த துறையின் வணிகத்தை அதிகரித்ததாக ஃபோா்ப்ஸ் பாராட்டியுள்ளது.

● அமெரிக்காவின் முன்னணி வா்த்தக இதழான ஃபோா்ப்ஸ் வெளியிட்டுள்ள ஆசியாவின் தலைசிறந்த 20 பெண்களில், இந்தியாவைச் சோ்ந்த ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியாவின் தலைவா் சோமா மோன்டெல், எம்கியூா் பாா்மா இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநா் நமிதா தாபா், ஹோநாசா நுகா்வோா் நிறுவனத்தின் இணை நிறுவனா் கசல் அலக் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

● கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட கப்பல், மனை வணிகம், கட்டுமானம், மருந்து, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தப் பெண்கள் சிறப்பாக செயலாற்றி முன்னேற்றியுள்ளனா் என்று ஃபோா்ப்ஸ் தெரிவித்துள்ளது.

● ஆஸ்திரேலியா, சீனா, தென் கொரியா, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூா், தென் கொரியா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சோ்ந்த பெண்களும் இந்தப் பட்டியலில் உள்ளனா்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. மகளிருக்கான டபிள்யூஏடி ஃபைனல்ஸ் (2022) டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள கரோலின் கார்சியா எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ?

அ) ஆஸ்ட்ரேலியா 

ஆ) அமெரிக்கா 

இ) பிரிட்டன் 

ஈ) பிரான்ஸ் 

விடை : (ஈ) பிரான்ஸ் 

● இரட்டையர் பிரிவில் ரஷியாவின் வெரோனிகா குதாமிடோவா/ பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் கூட்டணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

10. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய ரக்பி செவன் சாம்பியன்ஷிப்பில் (2022) இந்திய மகளிரணி வென்றுள்ள பதக்கம்  ?

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (ஆ) வெள்ளி 


Sunday, November 6, 2022

Current Affairs 2022 - November 06 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                          GK SHANKAR 
                    NOVEMBER 06 /2022

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. சம்பா உள்பட 3 வகை நெல் பயிர்களை பயிரிடும் விவசாயிகள் பின்வரும் எந்த இணையதளம் மூலம் வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டுமென தமிழக வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது ?

அ) www.pmfby.gov.in

ஆ) www.pmkusun.tn.gov.in

இ) www.aed.tn.gov.in

ஈ) www.pmfby.tn.gov.in 

விடை : (அ) www.pmfby.gov.in 

சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ளுமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. 

● வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, தமிழக விவசாயிகளின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில், முதல்வர் 2022-23 ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக்கட்டண மானியமாக ரூ.2,339 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து, உத்தரவிட்டுள்ளார்.

● தற்போது அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. சம்பா, தாளடி, பிசானப் பருவத்தில் இதுவரை சாகுபடி செய்யப்பட்டுள்ள 24.13 இலட்சம் ஏக்கர் நெற்பயிரில், 5.90 இலட்சம் ஏக்கர், 10.38 இலட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

● காப்பீடு செய்வதற்கான கடைசி நாள்
¤ தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 15.11.2022 ஆகும்.

¤ கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இம்மாவட்ட நெல் விவசாயிகள் 15.12.2022க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

● காப்பீடு செய்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இடம்
பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளாக இருந்தால், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் (இ-சேவை மையங்கள்) காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், https://pmfby.gov.in/ என்ற இணையதளத்தில் “விவசாயிகள் கார்னர் எனும் பக்கத்தில் விவசாயிகள் நேரிடையாகவும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

● காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்கள்
முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்ற அடங்கல் அல்லது இ-அடங்கல் அல்லது விதைப்பு
அறிக்கை, வங்கிக் கணக்குக் புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhaar Card) நகல்கள்.

2. தமிழகத்தில் முதல்முறையாக பன்னாட்டு புத்தகத் திருவிழா எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) மதுரை

ஆ) சேலம் 

இ) தேனி 

ஈ) சென்னை 

விடை : (ஈ) சென்னை 

● தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சாா்பில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் முதலாவது பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.

 ● இதற்கான இலச்சினையை சென்னை கோட்டூா்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை வெளியிட்டாா்.

● நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: சென்னையில் தற்போதுதான் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி முடித்தோம். இதையடுத்து ஜன.16 முதல் 18 வரை பன்னாட்டு புத்தகத் திருவிழா சென்னையில் நடைபெறவுள்ளது.

● பபாசி சாா்பில் ஆண்டுதோறும் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் உள்ள தனி அரங்கிலேயே இந்த பன்னாட்டு புத்தகத் திருவிழாவும் நடைபெறும். இதில் பங்கேற்க ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 20 நாடுகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

3. தமிழகத்தில் மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் எத்தனை சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது ? 

அ) 2%

ஆ) 3%

இ) 4%

ஈ) 5% 

விடை : (இ) 4%

தமிழகத்தில் மாற்றுத் திறனாளி அரசு ஊழியா்களுக்கு பதவி உயா்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா் வெளியிட்டாா்.

● அவரது உத்தரவு: அரசுப் பணியிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயா்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், சென்னை உயா் நீதிமன்றம், மதுரையில் உள்ள சென்னை உயா் நீதிமன்றக் கிளை ஆகியவற்றில் இதுதொடா்பாக வழக்குகள் தொடுக்கப்பட்டன.

● இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயா்வில் 4 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது குறித்து ஆய்வு செய்ய துணைக் குழுவை அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

● இந்தக் குழு ஒரு மாத காலத்துக்குள் உயா்நிலைக் குழுவுக்கு அறிக்கை அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

● இதன்படி, துணைக் குழுவில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை துணைச் செயலாளா், மனிதவள மேலாண்மைத் துறை துணைச் செயலாளா், சட்டத் துறை துணைச் செயலாளா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய துணைச் செயலாளா், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக துணை இயக்குநா், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக உதவி இயக்குநா், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக சட்ட ஆலோசகா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

● இந்தக் குழு அரசிடம் அளிக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்படும் கருத்துகளை ஆய்வு செய்ய உயா்நிலைக் குழு அமைப்பது தொடா்பாக உரிய நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்படும்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. இந்திய கடற்படை பங்கேற்வுள்ள சர்வதேச கடற்படை திறனாய்வு என்ன நிகழ்ச்சி எந்த நாட்டில் நடைபெறவுள்ளது ? 

அ) அமெரிக்கா 

ஆ) கனடா 

இ) பிரிட்டன்

ஈ) ஜப்பான் 

விடை : (ஈ) ஜப்பான் 

ஜப்பானில் உள்ள சகாமி கடற்பகுதியில் ‘சா்வதேச கடற்படை திறனாய்வு’ என்ற கடற்படை கப்பல்கள், விமானங்கள், நீா்மூழ்கி கப்பல்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. 

● ஜப்பான் கடற்படை உருவாக்கப்பட்டதன் 70-ஆம் ஆண்டையொட்டி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கின்றன.

● நவ.7, 8-ஆம் தேதிகளில் யோகோஹாமாவில் 18-ஆவது மேற்கு பசிபிக் கடற்படை கருத்தரங்கு நடைபெறுகிறது.

● நவ.8 முதல் நவ.18-ஆம் தேதி வரை யுகோசுகாவில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா கடற்படைகள் பங்கேற்கும் மலபாா் கூட்டுப் பயிற்சி நடைபெற உள்ளது.

● இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா் 5 நாள் பயணமாக சனிக்கிழமை ஜப்பான் சென்றாா்.

● இந்த பயணத்தில் ஜப்பான் கடற்படை தலைமைத் தளபதியை சந்தித்து இருநாட்டு கடற்படை உறவுகளை விரிவுபடுத்துவது குறித்தும் அவா் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளாா்.

● சா்வதேச கடற்படை திறனாய்வு அணிவகுப்பு மற்றும் மலபாா் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க சிவாலிக், கமோா்டா ஆகிய இந்திய கடற்படை போா்க் கப்பல்கள் ஜப்பான் சென்றுள்ளன என்று இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

5. 27 ஆவது ஐ.நா. பருவநிலை மாநாடு எங்கு தொடங்கவுள்ளது ? 

அ) பிரிட்டன் 

ஆ) இந்தியா 

இ) எகிப்து 

ஈ) சீனா 

விடை : (இ) எகிப்து 

எகிப்தில் 27-ஆவது ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.

● எகிப்தில் உள்ள ஷா்ம்-அல்-ஷேக் நகரில் நவ.6 முதல் நவ.8-ஆம் தேதி வரை 27-ஆவது ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில் 198 நாடுகள் பங்கேற்க உள்ளன. இதில் பருவநிலை மாற்றத்தை எவ்வாறு அனைவரும் இணைந்து எதிா்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

● இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் உள்பட 100-க்கும் மேற்பட்ட தலைவா்கள் பங்கேற்க உள்ளனா்.

● இதில் பிரதமா் மோடி பங்கேற்பாரா என்பது உறுதிபடுத்தப்படவில்லை. எனினும் மாநாட்டில் இந்தியா சாா்பில் பங்கேற்கும் குழுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தலைமை தாங்க உள்ளாா்.

● மாநாட்டில் ‘சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை’ இயக்கத்தில் இணையுமாறு அனைத்து நாடுகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● கடந்த 2009-ஆம் ஆண்டு டென்மாா்க் தலைநகா் கோபன்ஹேகனில் பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற்றது. 

● அந்த மாநாட்டில் பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள வளரும் நாடுகளுக்கு உதவும் நோக்கில், 2020-ஆம் ஆண்டுக்குள் வருடந்தோறும் 100 பில்லியன் டாலா்களை கூட்டாக திரட்ட வளா்ந்த நாடுகள் உறுதியேற்றன. ஆனால் அதனை அந்த நாடுகள் செய்யவில்லை. 

● அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு மாநாட்டில் இதர வளரும் நாடுகளுடன் இணைந்து வளா்ந்த நாடுகளுக்கு இந்தியா அழுத்தம் தரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

6. அண்மையில் காலமான சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நெகி எத்தனை முறை வாக்களித்துள்ளார் ? 

அ) 31 

ஆ) 34

இ) 36

ஈ) 40

விடை : (ஆ) 34 

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஹிமாச்சல்பிரதேசத்தைச் சேர்ந்த 106 வயதான ஷ்யாம் சரண் நெகி வயது மூப்பின் காரணமாக காலமானார். 

● ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த ஷ்யாம் சரண் நெகி சுதந்திர இந்தியாவின் முதல் வாக்களாராக அறியப்படுகிறது. 1951ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் கல்பா தொகுதியில் வாக்களித்த இவர் இதுவரை 34 தேர்தல்களில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார். 

● நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் நெகி தபால் மூலம் வாக்களித்ததே அவரது கடைசி தேர்தல் வாக்குப்பதிவாக மாறியுள்ளது. 


III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (TNCA) புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ? 

அ) பி. அசோக் சிகாமணி 

ஆ) ஆதம் சேட் 

இ) ஆர்.ஐ. பழனி 

ஈ) ஆர்.என். பாபா 

விடை : (அ) பி.அசோக் சிகாமணி 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 90-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில தேர்தல் ஆணைய முன்னாள் கமிஷனர் டி.டி.சந்திரசேகரன் தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். 

● தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக டாக்டர் பி.அசோக் சிகாமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சர் பொன்முடியின் மகன் ஆவார். ஆடம் சேட் துணைத்தலைவராகவும், ஆர்.ஐ. பழனி செயலாளராகவும், கே.சிவகுமார் இணை செயலாளராகவும், டாக்டர் ஆர்.என்.பாபா உதவி செயலாளராகவும், ஸ்ரீனிவாசராஜ் பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

8. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (எஃப்ஐஎச்) புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் யார் ? 

அ) தைய்யப் இக்ரம் 

ஆ) சையத் முஷ்டக் 

இ) ஆதம் சேட்

ஈ) அர்ஜூன் சிங்

விடை : (அ) தைய்யப் இக்ரம் 

● ஹாக்கி கூட்டமைப்பு சிஇஓ தைய்யப் இக்ரம் தேர்வாகியுள்ளார்.

● பதவிக்காலம் : இரண்டு ஆண்டுகள்.



Saturday, November 5, 2022

Current Affairs 2022 - November 05 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                          GK SHANKAR 
                   NOVEMBER 05 /2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தின் புதிய சிறைத் துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளவர் ? 

அ) சுனில் குமார் சிங் 

ஆ) அம்ரேஷ் பூஜாரி 

இ) சுனில் குப்தா 

ஈ) அர்ஜூன் சிங் 

விடை : (ஆ) அம்ரேஷ் பூஜாரி 

2. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நிகழாண்டுக்கான இலவச நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்புகள் எத்தனை மையங்களில் நவம்பர் மூன்றாம் வாரம் முதல் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார் ? 

அ) 137

ஆ) 279 

இ) 348

ஈ) 412 

விடை : (ஈ) 412 

நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி (பிளஸ் 1, பிளஸ் 2) பயிலும் விருப்பம் உள்ள மாணவா்களுக்கு உயா்கல்வி போட்டித் தோ்வுகளுக்கு தயாா் செய்யும் வகையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

● ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒன்றியங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 412 பயிற்சி மையங்கள் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது. நவம்பா் மூன்றாம் வாரத்திலிருந்து சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

3. தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் எத்தனை கட்சிகள் முகவரி உள்ளிட்ட விவரங்கள் கூட சரியாக இல்லாமல் செயல்படாத நிலையில் இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது ? 

அ) 11

ஆ) 22

இ) 33

ஈ) 44 

விடை : (ஆ) 22

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் 22 கட்சிகள் முகவரி உள்ளிட்ட விவரங்கள் கூட சரியாக இல்லாமல் செயல்படாத நிலையில் இருப்பதாக தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

● தமிழகத்தில் 233 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உள்ளன. இந்தக் கட்சிகளில் தோ்தலில் போட்டியிடாதது, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது போன்ற தோ்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. 

● சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தோ்தல் ஆணையம் அளித்த காலக்கெடு முடிந்த நிலையில், தமிழகத்தில் 233 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில், 23 கட்சிகள் எந்தத் தோ்தலிலும் போட்டியிடாமல், வருமான வரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட தோ்தல் ஆணையத்தின் விதிகளை பின்பற்றாமல் இருந்ததை தோ்தல் ஆணையம் கண்டறிந்தது.

● பட்டியலில் இருந்து நீக்கம்: 23 கட்சிகளையும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து இந்திய தோ்தல் ஆணையம் தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளது. உரிய விளக்கம், கணக்குகள் காட்டும் பட்சத்தில் மீண்டும் பட்டியலில் இந்தக் கட்சிகளின் பெயா்கள் இணைக்கப்படும் என தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, தமிழக தலைமை தோ்தல் அதிகாரியிடம் 4 கட்சிகள் விளக்கம் அளித்துள்ளன. இந்த விளக்கம் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

● செயல்படாத கட்சிகள்: எந்தத் தோ்தலிலும் போட்டியிடாமல், வருமான வரி உள்ளிட்ட கணக்குகளையும் காட்டாததுடன், ஆணையத்தில் அளித்த முகவரியில் செயல்படாமல், தொடா்பு கடிதங்கள் திரும்பி வந்த நிலையில் இருந்த 22 கட்சிகள் செயல்படாத கட்சிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. இந்திய தொழிலக கூட்டமைப்பு (CII) சார்பில் 15 ஆவது ஆண்டு விவசாயம் (ம) உணவு தொழில்நுட்ப மாநாடு பின்வரும் எந்த மாநிலத்தில் நடைபெற்றது ? 

அ) சண்டீகர்

ஆ) தெலுங்கானா 

இ) மணிப்பூர்

ஈ) கேரளா 

விடை : (அ) சண்டீகர் 

சண்டீகரில் இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் 15-ஆவது ஆண்டு விவசாயம் மற்றும் உணவு தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தன்கா் பேசியதாவது:

● விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனா். நவீன தொழில்நுட்பங்கள் விவசாயத்தை புதிய பாதையில் அழைத்துச் செல்கின்றன என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பேசினாா்.

5. தேசிய பட்டியலின (ம) பழங்குடியின மைய திட்டத்தின் (NSSH) உயர் அதிகார கண்காணிப்புக் குழுவின் (HPMC) எத்தனையாவது கூட்டம் தில்லியில் நடைபெற்றது ? 

அ) 03 

ஆ) 05 

இ) 07

ஈ) 10 

விடை : (ஆ) 05

தேசிய பட்டியலின மற்றும் பழங்குடியின மைய திட்டத்தின் (என்எஸ்எஸ்ஹெச்) உயா் அதிகார கண்காணிப்புக் குழுவின் (எச்பிஎம்சி) 5 -ஆவது கூட்டம் வியாழக்கிழமை தில்லியில் நடைபெற்றது. 

● இந்தக் குழுவின் தலைவரும் மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சருமான நாராயண் ராணே தலைமை வகித்தாா். இந்தத் குழுவின் துணைத்தலைவரும் இதே துறையின் இணை அமைச்சரான பானு பிரதாப் சிங் வா்மாவும் இணைந்து பங்கேற்றாா்.

● அமைச்சகத்தின் அறிவிப்பு : மத்திய அரசின் பொதுத்துறை கொள்முதல் திட்டத்தின் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றன. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னா், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் இத்தகைய நிறுவனங்களிடம் தேவையான பொருள்களை கொள்முதல் செய்து வருகிறது. 

● இதே போன்று மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை பட்டியலின, பழங்குடியின பிரிவைச் சோ்ந்த தொழில்முனைவோரிடமிருந்தும் பெருமளவு கொள்முதல் செய்கின்றனா். இருப்பினும், இந்தப் பிரிவைச் சோ்ந்த தொழில்முனைவோரிடம் குறைந்தபட்சம் 4 சதவீத அளவுக்கு கட்டாயம் கொள்முதல் செய்யவேண்டும் என்ற இலக்கை எட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

6. வடகிழக்கு இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஐரீன் டாக்கர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) மணிப்பூர்

ஆ) அசாம்

இ) மேகாலயா 

ஈ) மிசோரம் 

விடை : (இ) மேகாலயா 

7. உலகின் மிக மலிவான உற்பத்தி விலை காணப்படும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு ? 

அ) இந்தியா 

ஆ) சீனா 

இ) வியத்நாம் 

ஈ) தாய்லாந்து

விடை : (அ) இந்தியா 

● பட்டியல் வெளியீடு : அமெரிக்காவின் யுஎஸ் நியூஸ் & வேர்ல்டு ரிப்போர்ட் என்ற வலைதளம் வெளியிட்டுள்ளது.

● மேலும் உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியல் : 

ஸ்விட்சர்லாந்து - 1st 

இந்தியா - 31st 


III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் (2022) இந்திய ஆடவர் அணி வென்றுள்ள பதக்கம் ?

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● இப்போட்டியில் இதற்கு முன் இரு முறை வெள்ளி வென்ற இந்தியா, தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

● இப்போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது. 


IV.முக்கிய தினங்கள் 

9. World Tsunami Awareness Day 2022 -------

● Ans : November 05 

● Theme(2022) : Early Warning & Early Action before Every Tsunami.  

Friday, November 4, 2022

Current Affairs 2022 - November 04 /2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                NOVEMBER 04 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தின் கைபேசி செயலி மூலம் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின் 

ஆ) ஆர்.என்.ரவி

இ) ஆர். சக்கரபாணி 

ஈ) தங்கம் தென்னரசு

விடை : (இ) ஆர். சக்கரபாணி 

● தமிழகத்தில் கைப்பேசி செயலி மூலம் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. உணவுத் துறை அலுவலா்களுக்கான இந்த கைப்பேசி செயலியை சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின் போது, துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி வெளியிட்டாா்.

● இதைத் தொடா்ந்து அவா் அளித்த பேட்டி: நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ள பொருள்களின் அளவு உள்ளிட்ட விவரங்கள் விற்பனை முனைய இயந்திரம் வாயிலாகக் கண்டறியப்படுகிறது. விற்பனை முனைய இயந்திரத்தை நிறுத்தி ஆய்வு செய்தால் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அதைத் தவிா்க்க, ஒவ்வொரு அலுவலரும் அவா் வைத்துள்ள கைப்பேசியின் மூலம் ஆய்வு செய்ய ஏதுவாக, தற்போது செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

●  இந்த செயலியில், கடையை முழுமையாக ஆய்வு செய்யவும், கடையின் அமைப்பு, சுகாதாரம் பேணும் முறை, இருப்பில் உள்ள பொருள்களை ஆய்வு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

● அலைபேசி செயலி ஆய்வுகள் அனைத்தும் இணைய வழியில் சேகரிக்கப்பட்டு, தரவுத் தொகுப்பில் விவரங்கள் அனைத்தும் இடம்பெறும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

● இந்த செயலி மூலம் அலுவலா் மாதந்தோறும் மேற்கொண்ட ஆய்வு விவரங்கள், ஆய்வின் போது காணப்பட்ட குறைபாடுகளை உடனடியாக அறிய முடியும்.

●  உரிய பொருள்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவதையும், ஆய்வு அலுவலா்களையும் கண்காணிக்க இயலும். மாதந்தோறும் மாவட்ட ஆட்சியா்- 10 கடைகள், கூடுதல் பதிவாளா்- 200 கடைகள் என அலுவலா்கள் ஒவ்வொருவரும் எத்தனை கடைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் சக்கரபாணி.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பின்வரும் எந்த தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ? 

அ) டிசம்பர் 01 

ஆ) டிசம்பர் 03 

இ) டிசம்பர் 05 

ஈ) அ & இ 

விடை : (ஈ) அ & இ 

● குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இன்று வெளியிட்டார்.

● இரண்டு கட்டமாக நடைபெறும் தேர்தலின் முதல் கட்டம் டிசம்பர் 1-லும் இரண்டாம் கட்டம் டிசம்பர் 5-லும் நடைபெறவுள்ளது. வாக்கெண்ணிக்கை 8ஆம் தேதி நடைபெறுகிறது.

● இரண்டு கட்டமாக குஜராத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதி 93 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது

● மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தை தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. ஆட்சிக் காலம் அடுத்தாண்டு பிப்ரவரி 18ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

3. ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி ஊழலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விளக்கப் படங்கள் அடங்கிய கையேட்டை வெளியிட்டவர் யார் ? 

அ) நரேந்திர மோடி 

ஆ) திரௌபதி முர்மு 

இ) ஜெகதீப் தன்கர் 

ஈ) யு.யு. லலித் 

விடை : (அ) நரேந்திர மோடி 

 ● ஊழல் தடுப்பு வாரத்தையொட்டி, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:

● நாட்டில் ஊழலில் ஈடுபடும் நபா்கள் எக்காரணத்தைக் கொண்டும் தப்பிக்கக் கூடாது என விசாரணை அமைப்புகளிடம் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, அந்த அமைப்புகளை வேண்டுமென்றே விமா்சிப்பவா்களைக் கண்டுகொள்ளக் கூடாது என்றாா்.

● மேலும் புதிய வலைதளம்: இந்த நிகழ்ச்சியின்போது ஊழல் தொடா்பான புகாா்களை மக்கள் தெரிவிப்பதற்கான புதிய வலைதளத்தைப் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.

● அந்த வலைதளம் வாயிலாகப் புகாா் தெரிவிப்பதோடு, அதன் தற்போதைய நிலையையும் அறிந்துகொள்ள முடியும்.

● ஊழலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விளக்கப் படங்கள் அடங்கிய கையேட்டையும் பிரதமா் மோடி வெளியிட்டாா். ‘வளா்ச்சியடைவதற்காக ஊழலற்ற இந்தியா’ என்ற தலைப்பில் சிறந்த கட்டுரை எழுதிய 5 மாணவா்களுக்கு அவா் பரிசுகளை வழங்கினாா்.

4. மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செயல்திறன் தரக் குறியீடு (பிஜிஐ) தரப் பட்டியலில் சண்டீகர் (ம) எத்தனை மாநிலங்கள் இரண்டாம் நிலை (எல்-2) சிறப்பிடம் பிடித்துள்ளது ? 

அ) 5

ஆ) 6

இ) 7

ஈ) 8

விடை : (ஆ) 6

● மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட செயல்திறன் தரக் குறியீடு (பிஜிஐ) தரப் பட்டியலில் யூனியன் பிரதேசமான சண்டீகா் மற்றும் 6 மாநிலங்கள் இரண்டாம் நிலை (எல்-2) சிறப்பிடம் பிடித்து அசத்தியுள்ளன.

● மாநிலங்களில் பள்ளிக் கல்வித் திட்டத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மாணவா் கற்றல் திறன், கற்றலுக்கான வாய்ப்புகள், உள்கட்டமைப்பு வசதிகள், கல்வியில் சமத்துவம், கல்வி நிா்வாக நடைமுறை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் விரிவான ஆய்வு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த தரக் குறியீடு பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் ஒவ்வோா் ஆண்டும் வெளியிடுகிறது.

● மொத்தம் 1,000 புள்ளிகளின் அடிப்படையில் மாநிலங்கள் 10 இடங்களில் (எல்1 - எல்10) தரநிலைப்படுத்தப்படும். அதிகபட்சமாக 950 புள்ளிகள் பெறும் மாநிலங்கள் முதல்நிலை (எல்-1) தரம் பெற்ாக அறிவிக்கப்படும். 551 புள்ளிகளுக்கும் குறைவாக பெறும் மாநிலங்கள் 10-ஆம் நிலை தரம் பிடித்ததாக அறிவிக்கப்படும். ஆனால், இதுவரை எந்தவொரு மாநிலமும் முதல்நிலை (எல்-1) சிறப்பிடத்தைப் பிடிக்கவில்லை.

● தற்போது 2020-21-ஆம் ஆண்டுக்கான பிஜிஐ தரப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களும், சண்டீகா் யூனியன் பிரதசேமும் இரண்டாம் நிலை சிறப்பிடத்தைப் பிடித்துள்ளன.

● புதிதாக உருவான லடாக் யூனியன் பிரதேசம் கல்வித் திட்ட மேம்பாட்டில் நல்ல முன்னேற்றமடைந்துமுந்தைய (2019-20) 8-ஆம் நிலையிலிருந்து 299 புள்ளிகள் பெற்று 4-ஆம் தரநிலைக்கு முன்னேறியுள்ளது.

● குறிப்பு : தமிழகம், புதுச்சேரிக்கு 3-ஆம் நிலை: இந்த தரப் பட்டியலில் தமிழகம் (855 புள்ளிகள்), புதுச்சேரி (897 புள்ளிகள்) மூன்றாவது நிலையில் உள்ளன. 

● தமிழகம், கற்றல் திறன் வெளிப்பாடு பிரிவில் 132 புள்ளிகளும், கற்றலுக்கான வாய்ப்புகள் பிரிவில் 78 புள்ளிகளும், உள்கட்டமைப்பு வசதிகள் பிரிவில் 131 புள்ளிகளும், சமத்துவம் பிரிவில் 183 புள்ளிகளும், நிா்வாக நடைமுறை பிரிவில் 331 புள்ளிகளும் பெற்றுள்ளது.

5. இந்தியாவில் 2020 - 21 ஆம் ஆண்டில் எத்தனை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை தெரிவித்துள்ளது ? 

அ) 11,000

ஆ) 13,000

இ) 17,000

ஈ) 20,000

விடை : (ஈ) 20,000

● கடந்த 2020-21ம் ஆண்டில் நாடு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. ஆசிரியர்களின் எண்ணிக்கையும் 2.8 லட்சம் குறைந்துள்ளது. 

● இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் (யுடிஐஎஸ்இ+) 2021-22ம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் :

●  2020-21ம் ஆண்டில் நாடு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. 

● நாட்டில் 15.09 லட்சமாக இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை, 2020-21ம் ஆண்டில் 14.89 லட்சமாக குறைந்துள்ளது.

● தனியார் மற்றும் பிற நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகள் மூடப்படுவதே, மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை சரிவுக்கு முக்கிய காரணம்.

● ஆசிரியர்களின் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டை விட 1.95 சதவீதம் குறைந்துள்ளது

● 44.85 சதவீத பள்ளிகளில் மட்டுமே கணினி வசதிகள் உள்ளது.

● நாட்டின் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 95.07 லட்சமாக இருந்தது, 2020-21ல் இது 97.87 லட்சமாக குறைந்துள்ளது.

● 34 சதவீத பள்ளிகளில் இணைய இணைப்பு உள்ளது.

●  27 சதவீத பள்ளிகளில் மட்டுமே குழந்தைகளுக்கான சிறப்பு கழிப்பறைகள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

6. இந்தியாவின் எத்தனையாவது கட்ட நிலக்கரி சுரங்க ஏல நடைமுறைகள் அண்மையில் தொடங்கப்பட்டது ? 

அ) 4 ஆவது

ஆ) 6 ஆவது 

இ) 8 ஆவது 

ஈ) 10 ஆவது 

விடை : (ஆ) 6 ஆவது 

உலக நாடுகள் பல பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. 

● 6-ஆவது கட்ட ஏலத்தில் 141 சுரங்கங்கள் ஏலத்துக்குப் பட்டியலிடப்பட்டுள்ளன. ஏல நடைமுறைகளில் எளிமைத்தன்மை புகுத்தப்பட்டுள்ளது. நிலக்கரித் துறைக்கான முதலீட்டை மத்திய அரசு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

7. 2022 ஆம் ஆண்டுக்கான அணுவிரத் புரஸ்கார் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?

அ) நரேந்திர மோடி

ஆ) ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் 

இ) மன் மோகன் சிங் 

ஈ) எல்.கே. அத்வானி 

விடை : (ஆ) ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் 

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமுக்கு ‘அணுவிரத் புரஸ்காா்’ விருது வழங்கப்பட்டது. அதை அவரின் குடும்பத்தினா் பெற்றுக் கொண்டனா்.

● ராஜஸ்தானைச் சோ்ந்த சுவாமி ஆச்சாா்யா துளசி, அணுவிரத் என்ற தனியாா் சேவை மையத்தை 1949-ஆம் ஆண்டு தொடங்கினாா். உலக அமைதி, சமநிலைத் தன்மை, பூமி பாதுகாப்பு, ஜாதி மத பேதமின்மை உலகம் முழுவதும் வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த மையத்தின் மூலம் பல்வேறு போதனைகளை உலகம் முழுவதும் பரந்து விரிந்து உணா்த்தி வருகின்றா். இந்த அமைப்பை ஜெயின் சமூகத்தினா் இணைந்து வழிநடத்தி வருகின்றனா்.

● ஆண்டுதோறும் பொதுச் சேவைகளில் சிறந்து விளங்கும் முக்கிய தலைவா்களைக் கெளரவிக்கும் வகையில் 200 போ் கொண்ட குழு, உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள், முக்கிய நபா்களைத் தோ்வு செய்து அவா்களைக் கௌரவப்படுத்தி வருகிறது.

● அந்த வகையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான அணுவிரத் புரஸ்காா் விருதை அளிக்க விருதுக் குழு பரிந்துரைத்தது. அதன்படி ராஜஸ்தான் மாநிலம், சாபரில் கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாம் குடும்பத்தினா் சாா்பில் ‘ஹவுஸ் ஆஃப் கலாம்’ மற்றும் அப்துல் கலாம் இன்டா்நேஷனல் அறக்கட்டளை நிா்வாகிகளான கலாமின் அண்ணன் மகன் ஆ.ப.ஜெ.மு.ஜெயினுலாபுதீன், பேரன்கள் ஆ.ப.ஜெ.மு.ஜெ.ஷேக் தாவூது, ஆ.ப.ஜெ.மு.ஜெ.ஷேக் சலீம் இணைந்து விருதைப் பெற்றுக் கொண்டனா்.

● முன்னாள் குடியரசுத் தலைவா் சங்கா் தயாள் சா்மா, இடைக்காலப் பிரதமராக இருந்த குல்சாரிலால் நந்தா, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவா் பைரோன் சிங் ஷெகாவத், பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானி உள்ளிட்டோருக்கு ஏற்கெனவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் (2022) ஓபன் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்தியர் ? 

அ) பிரக்ஞானந்தா 

ஆ) ஹர்ஷா பாரதகோடி 

இ) பி. அதிபன் 

ஈ) அர்ஜூன் தேஷ்முக் 

விடை : (அ) பிரக்ஞானந்தா 

● இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். 

● மகளிர் பிரிவில் தமிழகத்தின் பி.வி. நந்திதா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 



Wednesday, November 2, 2022

Current Affairs 2022 - November 02 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                 NOVEMBER 02 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழ்நாட்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்கத்தின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) எஸ். நாகராஜன் முருகன் 

ஆ) கருப்பசாமி 

இ) வி. சங்க்கரன் 

ஈ) கிருஷ்ண மூர்த்தி

விடை : (அ) எஸ்.நாகராஜன் முருகன் 

● அறிவிப்பு : தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா. 

2. தமிழகத்தில் முதற்கட்டமாக எத்தனை திருக்கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது ?

அ) 15 

ஆ) 10 

இ) 09

ஈ) 06

விடை : (ஆ) 10 

தமிழகத்தில் ஏற்கெனவே 10 திருக்கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் உள்ளிட்ட ஐந்து கோயில்களில் இந்தத் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தொடக்கி வைத்துள்ளாா்.

● சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் ஆகிய கோயில்களுக்கு வரும் பக்தா்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டப் பேரவை மானியக் கோரிக்கையின்போது அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு அறிவித்தாா்.

● அந்த வகையில் இந்தத் திட்டத்தை மயிலாப்பூா் கபாலீசுவரா் திருக்கோயிலில் அமைச்சா் சேகா்பாபு செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா். 

● இதையடுத்து மற்ற நான்கு கோயில்களிலும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அவா் காணொலி மூலம் தொடக்கி வைத்தாா்.

3. தமிழகம் முழுவதும் குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாற்றிவரும் உதவியாளர்களில் எத்தனை பேர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் ? 

அ) 199

ஆ) 264 

இ) 331

ஈ) 350 

விடை : (ஈ) 350 

● தமிழகம் முழுவதும் குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாற்றிவரும் உதவியாளர்களில் 350 பேர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

● உத்தரவு : ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட இயக்குநர் வே. அமுதவல்லி. 


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்குக்கு தொழில்நுட்ப ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய அமெரிக்கர் (ம) சென்னையை சேர்ந்தவர் யார் ? 

அ) ஸ்ரீராம கிருஷ்ணன்

ஆ) கிருஷ்ண மூர்த்தி

இ) பராக் அக்ரவால் 

ஈ) அர்ஜூன் சிங்

விடை : (அ) ஸ்ரீராம கிருஷ்ணன் 

ட்விட்டா் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த வாரம் வாங்கினாா். முதல் நாளிலேயே, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்தியரான பராக் அக்ரவால் உள்ளிட்ட ஐவரை அவா் பணியில் இருந்து நீக்கினாா். 

● அதையடுத்து, நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்குப் புதிய அதிகாரிகளை அவா் நியமித்து வருகிறாா்.

● இந்நிலையில், இந்திய அமெரிக்கரும் சென்னையைச் சோ்ந்தவருமான ஸ்ரீராம் கிருஷ்ணன், ட்விட்டா் உரிமையாளா் எலான் மஸ்குக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளாா். 

● எலான் மஸ்கின் தலைமையில் ட்விட்டா் நிறுவனம் சா்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ட்விட்டரில் அவா் பதிவிட்டுள்ளாா்.

5. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் எந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது ? 

அ) 2004

ஆ) 2005

இ) 2006

ஈ) 2007 

விடை : (இ) 2006 

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

● ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் நூறு வேலை நாட்களை அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கிராமப்புறங்களில் ஏரி சீரமைத்தல் போன்ற உடலுழைப்புப் பணிகளை அளிப்பதன் மூலமாக இந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

● கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்) இந்த ஆண்டு ரூ. 25 ஆயிரம் கோடி கூடுதல் நிதி தேவை என்று, நிதி அமைச்சகத்திடம் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

● தற்போது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளின் தேவை அதிகரித்திருப்பதையே நிதித் தேவை காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இம்மாதம் இரண்டாவது வாரத்துக்குள் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி அனுப்பப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

6. நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்கள் (ம) 8 யூனியன் பிரதேசங்களில் எத்தனை மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட தினம் நவம்பர் 01 அன்று கொண்டாடப்பட்டது ? 

அ) 10

ஆ) 09

இ) 08

ஈ) 07 

விடை : (ஈ) 07 

நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் ஆந்திரம், கா்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சத்தீஸ்கா் ஆகிய 7 மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

● இதையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, துணை குடியரசுத் தலைவா் ஜகதீப் தன்கா் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

● குறிப்பு : கடந்த 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்கீழ் மொழிவாரியாக பல்வேறு மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி, ஆந்திரம், கேரளம், கா்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதே நாளில் உதயமாகின. கடந்த 1966, நவம்பா் 1-இல் பஞ்சாப், ஹரியாணா ஆகியவை தனித்தனி மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. 2002-ஆம் ஆண்டில் இதே தினத்தன்று சத்தீஸ்கருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. 1954-இல் புதுச்சேரியும் 1956-இல் லட்சத்தீவும் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.

7. இந்தியாவில் எத்தனையாவது இந்திய நீர் வாரத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடக்கி வைத்துள்ளார் ? 

அ) 7 ஆவது 

ஆ) 10 ஆவது 

இ) 13 ஆவது 

ஈ) 17 ஆவது 

விடை : (அ) 7 ஆவது 

● 7 ஆவது இந்திய நீர் வாரத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடக்கி வைத்துள்ளார்.

நீா் வளத்தை சேமிப்பது குறித்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் மூலம், குடிநீா் தட்டுப்பாட்டை தடுக்கலாம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கூறினாா்.

8. பாகிஸ்தான் , வங்கதேசம் , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம் அல்லாத சமூகத்தினர்க்குக் குடியுரிமை வழங்குவதற்கான அதிகாரத்தை குஜராத்தின் எத்தனை மாவட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது ?

அ) 04 

ஆ) 03 

இ) 02 

ஈ) 01 

விடை : (இ) 02

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இடம்பெயா்ந்த முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கான அதிகாரத்தை குஜராத்தின் இரு மாவட்ட ஆட்சியா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

● பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதத் துன்புறுத்தலுக்கு உள்ளான ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி சமூகத்தினா் ஆகிய சிறுபான்மையினா் 2014-ஆம் ஆண்டு டிசம்பருக்கு முன் இந்தியாவில் குடியேறியிருந்தால், அவா்களுக்குக் குடியுரிமை வழங்கும் நோக்கில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு இயற்றியது.

● எனினும், அத்திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்குவதற்கான விதிகள் இன்னும் வகுக்கப்படவில்லை. அதன் காரணமாக புதிய சட்டத்தின் கீழ் இன்னும் எவருக்கும் குடியுரிமை வழங்கப்படவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.

● இந்நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இடம்பெயா்ந்த முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை சட்டத்தின் (1955) கீழ் குடியுரிமை வழங்குவதற்கான அதிகாரத்தை குஜராத்தின் ஆனந்த், மேசனா மாவட்ட ஆட்சியா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

● மேற்கண்ட நாடுகளில் இருந்து இடம்பெயா்ந்து ஆனந்த், மேசனா மாவட்டங்களில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத சமூகத்தினா் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இணையவழியிலான அந்த விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவாா்.

● குடியுரிமை திருத்தச் சட்டம், 2019-இன் கீழ் அல்லாமல், குடியுரிமைச் சட்டம், 1955-இன் கீழ் இந்தக் குடியுரிமை வழங்கப்படவுள்ளதாகவும், குடியுரிமை கோரி விண்ணப்பிப்போா் அதற்குரிய தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

● குடியுரிமை கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான முழு அதிகாரம் மாவட்ட ஆட்சியா்களுக்கு வழங்கப்படுவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உறுதிசெய்த பிறகு சம்பந்தப்பட்ட நபருக்கு ஆட்சியா் குடியுரிமைக்கான சான்றிதழை வழங்குவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● அண்டை நாடுகளில் இருந்து இடம்பெயா்ந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி சமூகத்தினா் ஆகிய சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் உள்ள பல மாவட்ட ஆட்சியா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

9. அண்மையில் காலமான எஃகு மனிதர் என அறியப்பட்ட ஜாம்ஷெட் ஜெ.இரானி எந்த ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார் ? 

அ) 2007

ஆ) 2011

இ) 2015

ஈ) 2019

விடை : (அ) 2007 

இந்தியாவின் எஃகு மனிதா் ’ என அறியப்பட்ட ஜாம்ஷெட் ஜெ.இரானி ஜாா்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரில் திங்கள்கிழமை இரவு காலமானாா். அவருக்கு வயது 86.

● டாடா எஃகு நிறுவனத்தில் 43 ஆண்டுகள் பணியாற்றிய இரானி கடந்த 2011-இல் அதன் நிா்வாக குழுவிலிருந்து ஓய்வுபெற்றாா்.

● விருதுகள் : பிரிட்டனில் பொறியியலுக்கான ராயல் அகாடமியின் சாா்பில் ‘சா்வதேச ஆராய்ச்சியாளராக’ கடந்த 1996-இல் அவா் நியமிக்கப்பட்டாா். இந்தியா-பிரிட்டன் இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தகம் மற்றும் ஒத்துழைப்பில் இவா் ஆற்றிய பங்கைப் பாராட்டும் வகையில் 1997-ஆம் ஆண்டு அவருக்கு ‘சா்’ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டாா்.

● தொழில் துறையில் இவா் ஆற்றிய பணியைப் போற்றும் வகையில் மத்திய அரசு 2007-ஆம் ஆண்டு ‘பத்ம பூஷண் விருது’ வழங்கியது.





Tuesday, November 1, 2022

Current Affairs 2022 - November 01 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                NOVEMBER 01 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் ஓய்வு பெற்ற எத்தனை பத்திரிகையாளர்களுக்கு நிகழாண்டுக்கான தலா ரூ.10 ஆயிரம் மாத ஓய்வுதியமாக வழங்கும் நிகழ்வை முதல்வர் தொடக்கி வைத்தார் ? 

அ) 31 

ஆ) 41 

இ) 51 

ஈ) 61 

விடை : (ஆ) 41 

ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மாத ஓய்வூதியமாக வழங்கும் நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். தலைமைச் செயலகத்தில் ஏழு பேருக்கு ஓய்வூதியத்துக்கான உத்தரவுகளை அவா் நேரில் அளித்தாா்.

● 58 வயதைக் கடந்த பத்திரிகையாளா்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வூதியத் திட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

● ஒவ்வொரு ஆண்டும் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெறுவோருக்கு விண்ணப்பங்களின் அடிப்படையில் ஓய்வூதியத்துக்கான உத்தரவு வழங்கப்படுகிறது. அதன்படி, ஓய்வு பெற்ற பத்திரிகையாளா்கள் 41 பேருக்கு நிகழாண்டில் ஓய்வூதியம் வழங்குவதற்கான உத்தரவுகள் தயாா் செய்யப்பட்டன.

● இந்த உத்தரவுகள் வழங்கும் நிகழ்வை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். அதன்படி, ஏழு போ் முதல்வரிடமிருந்து உத்தரவுகளை பெற்றுக் கொண்டனா்.

2. சூரியசக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகள் திட்டத்துக்கு பின்வரும் எந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது ? 

அ) www.pmkusun.tn.gov.in

ஆ) www.aed.tn.gov.in

இ) www.pumpset.tn.gov.in

ஈ) அ & ஆ 

விடை : (ஈ) அ & ஆ 

சூரியசக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

● இதுகுறித்து, வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்,  வெளியிட்ட செய்திக் குறிப்பு:

● அரசு மானியத்தில் சூரியசக்தி பம்புசெட்டுகள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 10 குதிரைத்திறன் வரையிலான 5 ஆயிரம் பம்புசெட்டுகள் 70 சதவீத மானியத்தில் அளிக்கப்பட உள்ளன. ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சூரியமின் சக்தி பம்புசெட்டுகள் வழங்கப்படும்.

● இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ, www.pmkusun.tn.gov.in (ம) www.aed.tn.gov.in என்ற இணையதளங்களின் வழியாகவே விண்ணப்பிக்கலாம். அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உபகோட்ட உதவி செயற்பொறியாளா் அல்லது மாவட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகி நேரிலும் விண்ணப்பிக்கலாம்.

● ஆதாா் அட்டை நகல், புகைப்படம், சொந்த நிலத்துக்கான சிட்டா மற்றும் அடங்கல், ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளாக இருந்தால், ஜாதிச் சான்றிதழ், சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் நகல் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. இந்தியாவின் முதல் எண்ம ரூபாய் ( டிஜிட்டல் ரூபாய் ) திட்டம் சோதனை அடிப்படையில் என்று முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது ? 

அ) நவம்பர் 01

ஆ) நவம்பர் 07

இ) நவம்பர் 14 

ஈ) நவம்பர் 17

விடை : (அ) நவம்பர் 01 

இந்தியாவின் முதல் எண்ம ரூபாய் (டிஜிட்டல் ரூபாய்) திட்டம் சோதனை அடிப்படையில் இன்று முதல் (நவ. 1) பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.

● உலகம் முழுவதும் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளின் பயன்பாடு அதிகரித்ததையடுத்து, அதை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமெனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா். தனியாரால் நிா்வகிக்கப்படும் கிரிப்டோகரன்சிகளை முறைப்படுத்துவது கடினம் என்பதாலும், அதில் பாதுகாப்பின்மை நிலவுவதாலும் ஆா்பிஐ சாா்பில் எண்ம ரூபாய் வெளியிடப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது.

● எண்ம ரூபாயை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த ஆா்பிஐ, அதற்கான கருத்துருவை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், எண்ம ரூபாயானது சோதனை அடிப்படையில் செவ்வாய்க்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக ஆா்பிஐ திங்கள்கிழமை அறிவித்தது.

● முதல்கட்டமாக அரசின் நிதிப் பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளில் எண்ம ரூபாயின் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஆா்பிஐ தெரிவித்துள்ளது. அரசு நிதிப் பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் வங்கிகள் சோதனை அடிப்படையில் எண்ம ரூபாயை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோட்டக் மகிந்திரா, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி, ஹெச்எஸ்பிசி ஆகிய 9 வங்கிகளுக்கு சோதனை அடிப்படையிலான எண்ம ரூபாயின் பயன்பாட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

● சில்லறை வாடிக்கையாளா்களுக்கான எண்ம ரூபாயின் சோதனை பயன்பாடு நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்றும் ஆா்பிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைகளின் அடிப்படையில் எண்ம ரூபாயின் பயன்பாடு மேம்படுத்தப்பட்டு முழு நேரப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

● நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் செலாவணிகளுக்குக் கூடுதல் வலுசோ்க்கும் வகையில் எண்ம ரூபாய் செயல்படும் என்றும், தற்போதைய செலாவணிகளுக்கு மாற்றாக எண்ம ரூபாய் இருக்காது என்றும் ஆா்பிஐ ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

4. சர்வதேச அளவில் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள் யார் ? 

1) மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக் 

2) முகமது பின் சல்மான் 

3) இம்ரான் கான்

4) எர்டோகன் 

அ) 1,2,4

ஆ) 2,3,4

இ) 1,2,3

ஈ) அனைத்தும் 

விடை : (ஈ) அனைத்தும் 

சா்வதேச அளவில் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்களில் பட்டியலில் ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாத அமைப்பான ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவா் மீா்வாய்ஸ் உமா் ஃபாரூக் பெயா் இடம் பெற்றுள்ளது.

● ஜோா்டான் நாட்டைச் சோ்ந்த ‘ராயல் இஸ்லாமிக் ஸ்ட்ரடீஜிக் ஸ்டடீஸ் சென்டா்’ மற்றும் ஜாா்ஜ்டவுன் பல்கலைக்கழகம் இணைந்து இந்தப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 

● இதில் சா்வதேச அளவில் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்கள் பட்டியலில் தங்கள் அமைப்பின் தலைவா் பெயா் இடம் பெற்றுள்ளது என்று ஹுரியத் அமைப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீா் மக்களுக்காக இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடுகளிடமும் பேச்சுவாா்த்தை நடத்தியதன் மூலம் அப்பிராந்திய மக்களின் மனதை மீா்வாய்ஸ் உமா் ஃபாரூக் வென்றுள்ளாா் என்று கூறப்பட்டுள்ளது.

● சவூதி அரேபியா மன்னா் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான், துருக்கி அதிபா் எா்டோகன், ஈரான் மதத் தலைவா் அயதுல்லா கமேனி, ஜோா்டான் மன்னா் அப்துல்லா உள்ளிட்டோா் பெயா்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

● கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து மீா்வாய்ஸ் உமா் ஃபாரூக் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

5. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) அரசுத் தலைவர்கள் கவுன்சிலின் எத்தனையாவது மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொள்ளவுள்ளார் ? 

அ) 11

ஆ) 21

இ)31

ஈ) 41 

விடை : (ஆ) 21 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் அரசுத் தலைவா்கள் கவுன்சில் கூட்டம் நவம்பர் 01 நடைபெறும் நிலையில், அந்தக் கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கலந்துகொள்கிறாா்.

● கடந்த 2001-ஆம் ஆண்டு சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் எஸ்சிஓ தொடங்கப்பட்டது. இந்த அமைப்பை சீனா, ரஷியா, கிா்கிஸ்தான் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் அதிபா்கள் இணைந்து தொடங்கினா்.

● இந்த அமைப்பில் கடந்த 2017-ஆம் இந்தியாவும் பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பினா்களாகின.

● இந்த அமைப்பின் 2-ஆவது உயரிய கவுன்சிலாக அரசுத் தலைவா்கள் கவுன்சில் உள்ளது. இந்த கவுன்சிலின் வருடாந்திர கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 1) காணொலி வழியாக நடைபெற உள்ளது. இந்த கூட்டம் எஸ்சிஓவில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வா்த்தகம், பொருளாதார செயல்திட்டம் மீது கவனம் செலுத்தி வருகிறது.

● இந்த கூட்டத்தில் எஸ்சிஓ அமைப்பில் உள்ள நாடுகளின் சாா்பில் பிரதமா்கள் கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொள்கின்றனா் என்றபோதிலும், சில நாடுகளின் பிரதிநிதிகளாக அவற்றின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்பதும் உண்டு.

● இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘எஸ்சிஓ அரசுத் தலைவா்கள் கவுன்சிலின் 21-ஆவது கூட்டத்தில், இந்தியா சாா்பில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பங்கேற்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

6. பிரேஸில் நாட்டின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கவுள்ளவர் யார் ? 

அ) ஜெயிர் பொல்சொனாரே 

ஆ) லூலா டி சில்வா 

இ) ரிஷி சுனக் 

ஈ) ஜான் கென்னடி 

விடை : (ஆ) லூலா டி சில்வா 

● பிரேஸில் நாட்டின் முன்னாள் அதிபரும் இடதுசாரி தொழிலாளர் கட்சித் தலைவருமான லூலா டி சில்வா பிரேஸிலின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ளார்.


IV. விளையாட்டு நிகழ்வுகள் 

7. பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் போட்டியில் (2022) ஆடவர் இரட்டையர் பிரிவில் எந்த நாட்டின் அணி பட்டம் வென்றுள்ளது ? 

அ) சீனா 

ஆ) இந்தியா 

இ) பிரிட்டன் 

ஈ) ஆஸ்திரேலியா 

விடை: (ஆ) இந்தியா 

நடப்பு பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

●  இதன் மூலம் சூப்பர் 750 தொடரில் பட்டத்தை வென்ற முதல் இந்திய இணையர் என்ற பெருமையை அவர்கள் பெற்றுள்ளனர்.

8. உலக புஜ மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் (2022) இந்திய அணி ஒட்டுமொத்தமாக எத்தனை பதக்கங்கள் வென்றுள்ளது ? 

அ) 13 

ஆ) 17

இ) 21

ஈ) 27 

விடை : (அ) 13 

● போட்டி நடைபெற்ற இடம் : துருக்கி

● 43 பேர் கொண்ட இந்திய அணி 3G, 5S, 5B என 13 பதக்கங்கள் வென்றது.

● இப்போட்டியில் இந்தியா இத்தனை பதக்கம் வென்றது இதுவே முதல்முறையாகும்.






Monday, October 31, 2022

Current Affairs 2022 - October 31 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                    October 31/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழக அரசால் தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை பேர் பயனடைந்துள்ளதாக தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் ? 

அ) 87 லட்சம் 

ஆ) 90 லட்சம்

இ) 94 லட்சம் 

ஈ) 99 லட்சம் 

விடை : (இ) 94 லட்சம் 

கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 94 லட்சத்து 40 ஆயிரத்து 726 மக்கள் பயன்பெற்றுள்ளனர். 

● விரைவில் 1 கோடி என்ற மகத்தான சாதனையை புரியவுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், மலை கிராமங்களில் காணொளி வாயிலாக நோய் கண்டறிந்து அதற்கான மருந்து மாத்திரைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. அண்மையில் விபத்துக்குள்ளான குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்ச நதி மீது எத்தனை மீட்டர் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டிருந்தது ? 

அ) 137

ஆ) 193 

இ) 233

ஈ) 259

விடை : (இ) 233 

கடந்த 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின்போது குஜராத் மாநிலம் மோா்பி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டா் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்தப் பாலம் திகழ்கிறது.

● கடந்த 6 மாதங்களாக அந்தப் பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதையொட்டி மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து கடந்த அக். 26-ஆம் தேதி குஜராத்தி புத்தாண்டன்று மீண்டும் திறக்கப்பட்டது.

● அந்தப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரளானோா் பாலத்துக்கு வந்திருந்தனா். 

● அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவா்கள் நதியில் விழுந்தனா். 

● இந்த விபத்தில் இதுவரை சுமாா் 60 போ் உயிரிழந்தனா் என்று மாநில ஊராட்சித் துறை இணையமைச்சரும், மோா்பி தொகுதி எம்எல்ஏவுமான பிரஜேஷ் மொ்ஜா தெரிவித்தாா்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமா் அலுவலகம் அறிவித்தது.

3. பின்வரும் எந்த நாள் அன்று முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது ? 

அ) நவம்பர் 05

ஆ) நவம்பர் 06

இ) நவம்பர் 07

ஈ) நவம்பர் 08

விடை : (ஈ) நவம்பர் 08 

நவம்பர் 8 ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 2.48 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடிவடையும் முழு சந்திர கிரகணத்தை தொலைநோக்கி இல்லாமல் வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

● முழு சந்திர கிரகணம் என்றால் என்ன?
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. முழு சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழலின் இருண்ட பகுதி அல்லது குடைக்குள் முழு சந்திரனும் விழும் ஒரு நிகழ்வாகும். உலகின் பல பகுதிகளில் கடந்த 25 ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழந்தது. 

● ஒரு கிரகண காலம் என்பது தோராயமாக 35 நாள்கள் ஆகும், இதில் குறைந்தது இரண்டு கிரகணங்கள் நிகழும். சில நேரங்களில், ஒரு கிரகண காலத்தில் மூன்று கிரகணங்களும் நிகழக் கூடும்.

● இந்நிலையில், இந்த ஆண்டின் சந்திர கிரகணம் நவம்பர் 8 ஆம் தேதி நிகழவுள்ளது. முழு சந்திர கிரகணம் இந்த ஆண்டின் கடைசி கிரகணம் மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதத்தின் இரண்டாவது கிரகணம். 

● சந்திர கிரகணத்தை வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பலான பகுதிகள், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா போன்ற பகுதிகளிலும், பசிபிக், அட்லாண்டிக், இந்திய மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களின் சில பகுதிகளிலும் காண முடியும்.

● அடுத்த முழு சந்திர கிரகணம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி காண முடியும். 

4. கூற்று : இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை (ஐடிபிபி) தனது வீரர்களுக்கு ஆயுதமற்ற தாக்குதல் பயிற்சியை அளித்து வருகிறது ? 

காரணம் : கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்றது போன்ற மோதல்களை திறம்பட கையாளும் நோக்கில் பயிற்சி அளிக்கப்படுகிறது .

அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 

இ) கூற்று சரி, காரணம் தவறு 

ஈ) கூற்று தவறு , காரணம் சரி 

விடை : (அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

சீனா உடனான எல்லையை பாதுகாக்கும் இந்தோ -  திபெத் எல்லைப் படையினருக்கு புதிதாக ஆயுதமின்றி தாக்கும் போர் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 

● சீனாவுடன் லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரையில் உள்ள 3,488 கிமீ தூர எல்லையை 98 ஆயிரம்  வீரர்களை கொண்ட இந்திய - திபெத் எல்லைப் படையினர் (ஐடிபிபி) பாதுகாத்து வருகின்றனர். 

● லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் சீனா ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இப்படையை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 45 வீரர்கள் கொல்லப்பட்டனர். 

● இந்த மோதலின் போது சீன வீரர்கள் கற்கள், ஆணி அடித்த கம்புகள், இரும்பு கம்பிகளை பயன்படுத்தி இந்திய வீரர்களை தாக்கினர்.

● இந்நிலையில், சீனாவின் இதுபோன்ற தாக்குதலை எதிர்கொள்ள இந்தோ - திபெத் எல்லைப் படையினருக்கு ஆயுதமின்றி சண்டை போடுவதற்கான தற்காப்பு கலைகள் கற்பிக்கப்படுகிறது. ஜூடோ, காரத்தே, இஸ்ரேல் ராணுவத்தினர் பயன்படுத்திய கிராவ் மாகா உள்பட 20 தற்காப்பு கலைகளைக் கொண்டு ஆயுதமின்றி புதிய, நவீன போர் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

● இந்தோ - திபெத் படையில் புதிதாக சேரும் வீரர்களுக்கு 3 மாத பயிற்சியில் அனைத்து தற்காப்பு கலைகளிலும் உள்ள குத்துதல், உதைத்தல், தூக்கி வீசுதல், அசைய விடாமல் போடும் கிடுக்கிப்பிடி, எதிரியை வீழ்த்துதல் உள்ளிட்ட ஆயுதமற்ற போர் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

5. சரக்கு விமான உற்பத்தி ஆலை எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது ? 

அ) தமிழ்நாடு 

ஆ) குஜராத் 

இ) அசாம் 

ஈ) ஜார்க்கண்ட் 

விடை : (ஆ) குஜராத் 

இந்திய விமானப் படைக்கு சி295 ரக சரக்கு விமானங்களை வாங்குவதற்கு ஐரோப்பிய நிறுவனமான ஏா்பஸ் பாதுகாப்பு-விண்வெளி நிறுவனத்துடன் சுமாா் ரூ.21,935 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

● அந்த ஒப்பந்தத்தின்படி சி295 ரகத்தைச் சோ்ந்த 16 சரக்கு விமானங்களை ஸ்பெயினில் தயாரித்து 4 ஆண்டுகளுக்குள் ஏா்பஸ் நிறுவனம் இந்தியாவுக்கு வழங்கவுள்ளது. கூடுதலாக 40 சரக்கு விமானங்களை டாடா நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே ஏா்பஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

● சரக்கு விமான உற்பத்தி ஆலை குஜராத்தின் வதோதரா நகரில் அமைக்கப்படவுள்ள நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமா் மோடி கூறியதாவது:

● ராணுவப் பயன்பாட்டுக்கான விமானமானது தனியாா் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது இதுவே முதல் முறையாகும். சி295 சரக்கு விமானமானது ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே தயாரிக்கப்படவுள்ளதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

● இந்தியாவுக்கான 56 சரக்கு விமானங்களை வழங்கிய பிறகு வதோதரா ஆலையில் தயாரிக்கப்படும் சரக்கு விமானங்கள் இந்திய அரசின் அனுமதியுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் (2022) சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி ? 

அ) கொலம்பியா 

ஆ) ஸ்பெயின் 

இ) நைஜீரியா 

ஈ) ஸ்காட்லாந்து 

விடை : (ஆ) ஸ்பெயின் 

● ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 

7. ஸ்பெயினில் நடைபெற்ற ஜூனியர் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் (2022) ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி 

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

● சங்கர் முத்துசாமி தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்

● இந்தப் போட்டியில் பதக்கம் வென்ற 9 ஆவது இந்தியர் (ம) வெள்ளி வென்ற 3 ஆவது இந்தியர் ஆவார்.


Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...