● 58 வயதைக் கடந்த பத்திரிகையாளா்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வூதியத் திட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.
● ஒவ்வொரு ஆண்டும் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெறுவோருக்கு விண்ணப்பங்களின் அடிப்படையில் ஓய்வூதியத்துக்கான உத்தரவு வழங்கப்படுகிறது. அதன்படி, ஓய்வு பெற்ற பத்திரிகையாளா்கள் 41 பேருக்கு நிகழாண்டில் ஓய்வூதியம் வழங்குவதற்கான உத்தரவுகள் தயாா் செய்யப்பட்டன.
● இந்த உத்தரவுகள் வழங்கும் நிகழ்வை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். அதன்படி, ஏழு போ் முதல்வரிடமிருந்து உத்தரவுகளை பெற்றுக் கொண்டனா்.
2. சூரியசக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகள் திட்டத்துக்கு பின்வரும் எந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது ?
அ) www.pmkusun.tn.gov.in
ஆ) www.aed.tn.gov.in
இ) www.pumpset.tn.gov.in
ஈ) அ & ஆ
விடை : (ஈ) அ & ஆ
● சூரியசக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
● இதுகுறித்து, வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வெளியிட்ட செய்திக் குறிப்பு:
● அரசு மானியத்தில் சூரியசக்தி பம்புசெட்டுகள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 10 குதிரைத்திறன் வரையிலான 5 ஆயிரம் பம்புசெட்டுகள் 70 சதவீத மானியத்தில் அளிக்கப்பட உள்ளன. ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சூரியமின் சக்தி பம்புசெட்டுகள் வழங்கப்படும்.
● இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ, www.pmkusun.tn.gov.in (ம) www.aed.tn.gov.in என்ற இணையதளங்களின் வழியாகவே விண்ணப்பிக்கலாம். அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உபகோட்ட உதவி செயற்பொறியாளா் அல்லது மாவட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகி நேரிலும் விண்ணப்பிக்கலாம்.
● ஆதாா் அட்டை நகல், புகைப்படம், சொந்த நிலத்துக்கான சிட்டா மற்றும் அடங்கல், ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளாக இருந்தால், ஜாதிச் சான்றிதழ், சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் நகல் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
3. இந்தியாவின் முதல் எண்ம ரூபாய் ( டிஜிட்டல் ரூபாய் ) திட்டம் சோதனை அடிப்படையில் என்று முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது ?
அ) நவம்பர் 01
ஆ) நவம்பர் 07
இ) நவம்பர் 14
ஈ) நவம்பர் 17
விடை : (அ) நவம்பர் 01
● இந்தியாவின் முதல் எண்ம ரூபாய் (டிஜிட்டல் ரூபாய்) திட்டம் சோதனை அடிப்படையில் இன்று முதல் (நவ. 1) பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.
● உலகம் முழுவதும் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளின் பயன்பாடு அதிகரித்ததையடுத்து, அதை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமெனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா். தனியாரால் நிா்வகிக்கப்படும் கிரிப்டோகரன்சிகளை முறைப்படுத்துவது கடினம் என்பதாலும், அதில் பாதுகாப்பின்மை நிலவுவதாலும் ஆா்பிஐ சாா்பில் எண்ம ரூபாய் வெளியிடப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது.
● எண்ம ரூபாயை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த ஆா்பிஐ, அதற்கான கருத்துருவை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், எண்ம ரூபாயானது சோதனை அடிப்படையில் செவ்வாய்க்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக ஆா்பிஐ திங்கள்கிழமை அறிவித்தது.
● முதல்கட்டமாக அரசின் நிதிப் பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளில் எண்ம ரூபாயின் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஆா்பிஐ தெரிவித்துள்ளது. அரசு நிதிப் பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் வங்கிகள் சோதனை அடிப்படையில் எண்ம ரூபாயை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
● எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோட்டக் மகிந்திரா, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி, ஹெச்எஸ்பிசி ஆகிய 9 வங்கிகளுக்கு சோதனை அடிப்படையிலான எண்ம ரூபாயின் பயன்பாட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஆா்பிஐ தெரிவித்துள்ளது.
● சில்லறை வாடிக்கையாளா்களுக்கான எண்ம ரூபாயின் சோதனை பயன்பாடு நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்றும் ஆா்பிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைகளின் அடிப்படையில் எண்ம ரூபாயின் பயன்பாடு மேம்படுத்தப்பட்டு முழு நேரப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.
● நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் செலாவணிகளுக்குக் கூடுதல் வலுசோ்க்கும் வகையில் எண்ம ரூபாய் செயல்படும் என்றும், தற்போதைய செலாவணிகளுக்கு மாற்றாக எண்ம ரூபாய் இருக்காது என்றும் ஆா்பிஐ ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
4. சர்வதேச அளவில் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள் யார் ?
1) மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக்
2) முகமது பின் சல்மான்
3) இம்ரான் கான்
4) எர்டோகன்
அ) 1,2,4
ஆ) 2,3,4
இ) 1,2,3
ஈ) அனைத்தும்
விடை : (ஈ) அனைத்தும்
● சா்வதேச அளவில் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்களில் பட்டியலில் ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாத அமைப்பான ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவா் மீா்வாய்ஸ் உமா் ஃபாரூக் பெயா் இடம் பெற்றுள்ளது.
● ஜோா்டான் நாட்டைச் சோ்ந்த ‘ராயல் இஸ்லாமிக் ஸ்ட்ரடீஜிக் ஸ்டடீஸ் சென்டா்’ மற்றும் ஜாா்ஜ்டவுன் பல்கலைக்கழகம் இணைந்து இந்தப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
● இதில் சா்வதேச அளவில் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்கள் பட்டியலில் தங்கள் அமைப்பின் தலைவா் பெயா் இடம் பெற்றுள்ளது என்று ஹுரியத் அமைப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீா் மக்களுக்காக இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடுகளிடமும் பேச்சுவாா்த்தை நடத்தியதன் மூலம் அப்பிராந்திய மக்களின் மனதை மீா்வாய்ஸ் உமா் ஃபாரூக் வென்றுள்ளாா் என்று கூறப்பட்டுள்ளது.
● சவூதி அரேபியா மன்னா் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான், துருக்கி அதிபா் எா்டோகன், ஈரான் மதத் தலைவா் அயதுல்லா கமேனி, ஜோா்டான் மன்னா் அப்துல்லா உள்ளிட்டோா் பெயா்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
● கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து மீா்வாய்ஸ் உமா் ஃபாரூக் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
5. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) அரசுத் தலைவர்கள் கவுன்சிலின் எத்தனையாவது மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொள்ளவுள்ளார் ?
அ) 11
ஆ) 21
இ)31
ஈ) 41
விடை : (ஆ) 21
● ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் அரசுத் தலைவா்கள் கவுன்சில் கூட்டம் நவம்பர் 01 நடைபெறும் நிலையில், அந்தக் கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கலந்துகொள்கிறாா்.
● கடந்த 2001-ஆம் ஆண்டு சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் எஸ்சிஓ தொடங்கப்பட்டது. இந்த அமைப்பை சீனா, ரஷியா, கிா்கிஸ்தான் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் அதிபா்கள் இணைந்து தொடங்கினா்.
● இந்த அமைப்பில் கடந்த 2017-ஆம் இந்தியாவும் பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பினா்களாகின.
● இந்த அமைப்பின் 2-ஆவது உயரிய கவுன்சிலாக அரசுத் தலைவா்கள் கவுன்சில் உள்ளது. இந்த கவுன்சிலின் வருடாந்திர கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 1) காணொலி வழியாக நடைபெற உள்ளது. இந்த கூட்டம் எஸ்சிஓவில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வா்த்தகம், பொருளாதார செயல்திட்டம் மீது கவனம் செலுத்தி வருகிறது.
● இந்த கூட்டத்தில் எஸ்சிஓ அமைப்பில் உள்ள நாடுகளின் சாா்பில் பிரதமா்கள் கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொள்கின்றனா் என்றபோதிலும், சில நாடுகளின் பிரதிநிதிகளாக அவற்றின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்பதும் உண்டு.
● இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘எஸ்சிஓ அரசுத் தலைவா்கள் கவுன்சிலின் 21-ஆவது கூட்டத்தில், இந்தியா சாா்பில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பங்கேற்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
6. பிரேஸில் நாட்டின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கவுள்ளவர் யார் ?
அ) ஜெயிர் பொல்சொனாரே
ஆ) லூலா டி சில்வா
இ) ரிஷி சுனக்
ஈ) ஜான் கென்னடி
விடை : (ஆ) லூலா டி சில்வா
● பிரேஸில் நாட்டின் முன்னாள் அதிபரும் இடதுசாரி தொழிலாளர் கட்சித் தலைவருமான லூலா டி சில்வா பிரேஸிலின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
IV. விளையாட்டு நிகழ்வுகள்
7. பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் போட்டியில் (2022) ஆடவர் இரட்டையர் பிரிவில் எந்த நாட்டின் அணி பட்டம் வென்றுள்ளது ?
அ) சீனா
ஆ) இந்தியா
இ) பிரிட்டன்
ஈ) ஆஸ்திரேலியா
விடை: (ஆ) இந்தியா
● நடப்பு பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
● இதன் மூலம் சூப்பர் 750 தொடரில் பட்டத்தை வென்ற முதல் இந்திய இணையர் என்ற பெருமையை அவர்கள் பெற்றுள்ளனர்.
8. உலக புஜ மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் (2022) இந்திய அணி ஒட்டுமொத்தமாக எத்தனை பதக்கங்கள் வென்றுள்ளது ?
அ) 13
ஆ) 17
இ) 21
ஈ) 27
விடை : (அ) 13
● போட்டி நடைபெற்ற இடம் : துருக்கி
● 43 பேர் கொண்ட இந்திய அணி 3G, 5S, 5B என 13 பதக்கங்கள் வென்றது.
● இப்போட்டியில் இந்தியா இத்தனை பதக்கம் வென்றது இதுவே முதல்முறையாகும்.
No comments:
Post a Comment