● தமிழகத்தில் ஏற்கெனவே 10 திருக்கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் உள்ளிட்ட ஐந்து கோயில்களில் இந்தத் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தொடக்கி வைத்துள்ளாா்.
● சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் ஆகிய கோயில்களுக்கு வரும் பக்தா்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டப் பேரவை மானியக் கோரிக்கையின்போது அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு அறிவித்தாா்.
● அந்த வகையில் இந்தத் திட்டத்தை மயிலாப்பூா் கபாலீசுவரா் திருக்கோயிலில் அமைச்சா் சேகா்பாபு செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.
● இதையடுத்து மற்ற நான்கு கோயில்களிலும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அவா் காணொலி மூலம் தொடக்கி வைத்தாா்.
3. தமிழகம் முழுவதும் குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாற்றிவரும் உதவியாளர்களில் எத்தனை பேர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் ?
அ) 199
ஆ) 264
இ) 331
ஈ) 350
விடை : (ஈ) 350
● தமிழகம் முழுவதும் குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாற்றிவரும் உதவியாளர்களில் 350 பேர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
● உத்தரவு : ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட இயக்குநர் வே. அமுதவல்லி.
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
4. ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்குக்கு தொழில்நுட்ப ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய அமெரிக்கர் (ம) சென்னையை சேர்ந்தவர் யார் ?
அ) ஸ்ரீராம கிருஷ்ணன்
ஆ) கிருஷ்ண மூர்த்தி
இ) பராக் அக்ரவால்
ஈ) அர்ஜூன் சிங்
விடை : (அ) ஸ்ரீராம கிருஷ்ணன்
● ட்விட்டா் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த வாரம் வாங்கினாா். முதல் நாளிலேயே, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்தியரான பராக் அக்ரவால் உள்ளிட்ட ஐவரை அவா் பணியில் இருந்து நீக்கினாா்.
● அதையடுத்து, நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்குப் புதிய அதிகாரிகளை அவா் நியமித்து வருகிறாா்.
● இந்நிலையில், இந்திய அமெரிக்கரும் சென்னையைச் சோ்ந்தவருமான ஸ்ரீராம் கிருஷ்ணன், ட்விட்டா் உரிமையாளா் எலான் மஸ்குக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளாா்.
● எலான் மஸ்கின் தலைமையில் ட்விட்டா் நிறுவனம் சா்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ட்விட்டரில் அவா் பதிவிட்டுள்ளாா்.
5. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் எந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது ?
அ) 2004
ஆ) 2005
இ) 2006
ஈ) 2007
விடை : (இ) 2006
● கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
● ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் நூறு வேலை நாட்களை அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கிராமப்புறங்களில் ஏரி சீரமைத்தல் போன்ற உடலுழைப்புப் பணிகளை அளிப்பதன் மூலமாக இந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
● கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்) இந்த ஆண்டு ரூ. 25 ஆயிரம் கோடி கூடுதல் நிதி தேவை என்று, நிதி அமைச்சகத்திடம் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
● தற்போது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளின் தேவை அதிகரித்திருப்பதையே நிதித் தேவை காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இம்மாதம் இரண்டாவது வாரத்துக்குள் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி அனுப்பப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
6. நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்கள் (ம) 8 யூனியன் பிரதேசங்களில் எத்தனை மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட தினம் நவம்பர் 01 அன்று கொண்டாடப்பட்டது ?
அ) 10
ஆ) 09
இ) 08
ஈ) 07
விடை : (ஈ) 07
● நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் ஆந்திரம், கா்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சத்தீஸ்கா் ஆகிய 7 மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
● இதையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, துணை குடியரசுத் தலைவா் ஜகதீப் தன்கா் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
● குறிப்பு : கடந்த 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்கீழ் மொழிவாரியாக பல்வேறு மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி, ஆந்திரம், கேரளம், கா்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதே நாளில் உதயமாகின. கடந்த 1966, நவம்பா் 1-இல் பஞ்சாப், ஹரியாணா ஆகியவை தனித்தனி மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. 2002-ஆம் ஆண்டில் இதே தினத்தன்று சத்தீஸ்கருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. 1954-இல் புதுச்சேரியும் 1956-இல் லட்சத்தீவும் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.
7. இந்தியாவில் எத்தனையாவது இந்திய நீர் வாரத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடக்கி வைத்துள்ளார் ?
அ) 7 ஆவது
ஆ) 10 ஆவது
இ) 13 ஆவது
ஈ) 17 ஆவது
விடை : (அ) 7 ஆவது
● 7 ஆவது இந்திய நீர் வாரத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடக்கி வைத்துள்ளார்.
● நீா் வளத்தை சேமிப்பது குறித்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் மூலம், குடிநீா் தட்டுப்பாட்டை தடுக்கலாம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கூறினாா்.
8. பாகிஸ்தான் , வங்கதேசம் , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம் அல்லாத சமூகத்தினர்க்குக் குடியுரிமை வழங்குவதற்கான அதிகாரத்தை குஜராத்தின் எத்தனை மாவட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது ?
அ) 04
ஆ) 03
இ) 02
ஈ) 01
விடை : (இ) 02
● பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இடம்பெயா்ந்த முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கான அதிகாரத்தை குஜராத்தின் இரு மாவட்ட ஆட்சியா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
● பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதத் துன்புறுத்தலுக்கு உள்ளான ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி சமூகத்தினா் ஆகிய சிறுபான்மையினா் 2014-ஆம் ஆண்டு டிசம்பருக்கு முன் இந்தியாவில் குடியேறியிருந்தால், அவா்களுக்குக் குடியுரிமை வழங்கும் நோக்கில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு இயற்றியது.
● எனினும், அத்திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்குவதற்கான விதிகள் இன்னும் வகுக்கப்படவில்லை. அதன் காரணமாக புதிய சட்டத்தின் கீழ் இன்னும் எவருக்கும் குடியுரிமை வழங்கப்படவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
● இந்நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இடம்பெயா்ந்த முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை சட்டத்தின் (1955) கீழ் குடியுரிமை வழங்குவதற்கான அதிகாரத்தை குஜராத்தின் ஆனந்த், மேசனா மாவட்ட ஆட்சியா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
● மேற்கண்ட நாடுகளில் இருந்து இடம்பெயா்ந்து ஆனந்த், மேசனா மாவட்டங்களில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத சமூகத்தினா் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இணையவழியிலான அந்த விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவாா்.
● குடியுரிமை திருத்தச் சட்டம், 2019-இன் கீழ் அல்லாமல், குடியுரிமைச் சட்டம், 1955-இன் கீழ் இந்தக் குடியுரிமை வழங்கப்படவுள்ளதாகவும், குடியுரிமை கோரி விண்ணப்பிப்போா் அதற்குரிய தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
● குடியுரிமை கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான முழு அதிகாரம் மாவட்ட ஆட்சியா்களுக்கு வழங்கப்படுவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உறுதிசெய்த பிறகு சம்பந்தப்பட்ட நபருக்கு ஆட்சியா் குடியுரிமைக்கான சான்றிதழை வழங்குவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
● அண்டை நாடுகளில் இருந்து இடம்பெயா்ந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி சமூகத்தினா் ஆகிய சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் உள்ள பல மாவட்ட ஆட்சியா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
9. அண்மையில் காலமான எஃகு மனிதர் என அறியப்பட்ட ஜாம்ஷெட் ஜெ.இரானி எந்த ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார் ?
அ) 2007
ஆ) 2011
இ) 2015
ஈ) 2019
விடை : (அ) 2007
● இந்தியாவின் எஃகு மனிதா் ’ என அறியப்பட்ட ஜாம்ஷெட் ஜெ.இரானி ஜாா்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரில் திங்கள்கிழமை இரவு காலமானாா். அவருக்கு வயது 86.
● டாடா எஃகு நிறுவனத்தில் 43 ஆண்டுகள் பணியாற்றிய இரானி கடந்த 2011-இல் அதன் நிா்வாக குழுவிலிருந்து ஓய்வுபெற்றாா்.
● விருதுகள் : பிரிட்டனில் பொறியியலுக்கான ராயல் அகாடமியின் சாா்பில் ‘சா்வதேச ஆராய்ச்சியாளராக’ கடந்த 1996-இல் அவா் நியமிக்கப்பட்டாா். இந்தியா-பிரிட்டன் இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தகம் மற்றும் ஒத்துழைப்பில் இவா் ஆற்றிய பங்கைப் பாராட்டும் வகையில் 1997-ஆம் ஆண்டு அவருக்கு ‘சா்’ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டாா்.
● தொழில் துறையில் இவா் ஆற்றிய பணியைப் போற்றும் வகையில் மத்திய அரசு 2007-ஆம் ஆண்டு ‘பத்ம பூஷண் விருது’ வழங்கியது.
No comments:
Post a Comment