● தமிழகத்தில் கைப்பேசி செயலி மூலம் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. உணவுத் துறை அலுவலா்களுக்கான இந்த கைப்பேசி செயலியை சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின் போது, துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி வெளியிட்டாா்.
● இதைத் தொடா்ந்து அவா் அளித்த பேட்டி: நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ள பொருள்களின் அளவு உள்ளிட்ட விவரங்கள் விற்பனை முனைய இயந்திரம் வாயிலாகக் கண்டறியப்படுகிறது. விற்பனை முனைய இயந்திரத்தை நிறுத்தி ஆய்வு செய்தால் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அதைத் தவிா்க்க, ஒவ்வொரு அலுவலரும் அவா் வைத்துள்ள கைப்பேசியின் மூலம் ஆய்வு செய்ய ஏதுவாக, தற்போது செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
● இந்த செயலியில், கடையை முழுமையாக ஆய்வு செய்யவும், கடையின் அமைப்பு, சுகாதாரம் பேணும் முறை, இருப்பில் உள்ள பொருள்களை ஆய்வு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
● அலைபேசி செயலி ஆய்வுகள் அனைத்தும் இணைய வழியில் சேகரிக்கப்பட்டு, தரவுத் தொகுப்பில் விவரங்கள் அனைத்தும் இடம்பெறும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
● இந்த செயலி மூலம் அலுவலா் மாதந்தோறும் மேற்கொண்ட ஆய்வு விவரங்கள், ஆய்வின் போது காணப்பட்ட குறைபாடுகளை உடனடியாக அறிய முடியும்.
● உரிய பொருள்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவதையும், ஆய்வு அலுவலா்களையும் கண்காணிக்க இயலும். மாதந்தோறும் மாவட்ட ஆட்சியா்- 10 கடைகள், கூடுதல் பதிவாளா்- 200 கடைகள் என அலுவலா்கள் ஒவ்வொருவரும் எத்தனை கடைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் சக்கரபாணி.
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
2. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பின்வரும் எந்த தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ?
அ) டிசம்பர் 01
ஆ) டிசம்பர் 03
இ) டிசம்பர் 05
ஈ) அ & இ
விடை : (ஈ) அ & இ
● குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இன்று வெளியிட்டார்.
● இரண்டு கட்டமாக நடைபெறும் தேர்தலின் முதல் கட்டம் டிசம்பர் 1-லும் இரண்டாம் கட்டம் டிசம்பர் 5-லும் நடைபெறவுள்ளது. வாக்கெண்ணிக்கை 8ஆம் தேதி நடைபெறுகிறது.
● இரண்டு கட்டமாக குஜராத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதி 93 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது
● மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தை தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. ஆட்சிக் காலம் அடுத்தாண்டு பிப்ரவரி 18ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
3. ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி ஊழலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விளக்கப் படங்கள் அடங்கிய கையேட்டை வெளியிட்டவர் யார் ?
அ) நரேந்திர மோடி
ஆ) திரௌபதி முர்மு
இ) ஜெகதீப் தன்கர்
ஈ) யு.யு. லலித்
விடை : (அ) நரேந்திர மோடி
● ஊழல் தடுப்பு வாரத்தையொட்டி, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:
● நாட்டில் ஊழலில் ஈடுபடும் நபா்கள் எக்காரணத்தைக் கொண்டும் தப்பிக்கக் கூடாது என விசாரணை அமைப்புகளிடம் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, அந்த அமைப்புகளை வேண்டுமென்றே விமா்சிப்பவா்களைக் கண்டுகொள்ளக் கூடாது என்றாா்.
● மேலும் புதிய வலைதளம்: இந்த நிகழ்ச்சியின்போது ஊழல் தொடா்பான புகாா்களை மக்கள் தெரிவிப்பதற்கான புதிய வலைதளத்தைப் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.
● அந்த வலைதளம் வாயிலாகப் புகாா் தெரிவிப்பதோடு, அதன் தற்போதைய நிலையையும் அறிந்துகொள்ள முடியும்.
● ஊழலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விளக்கப் படங்கள் அடங்கிய கையேட்டையும் பிரதமா் மோடி வெளியிட்டாா். ‘வளா்ச்சியடைவதற்காக ஊழலற்ற இந்தியா’ என்ற தலைப்பில் சிறந்த கட்டுரை எழுதிய 5 மாணவா்களுக்கு அவா் பரிசுகளை வழங்கினாா்.
4. மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செயல்திறன் தரக் குறியீடு (பிஜிஐ) தரப் பட்டியலில் சண்டீகர் (ம) எத்தனை மாநிலங்கள் இரண்டாம் நிலை (எல்-2) சிறப்பிடம் பிடித்துள்ளது ?
அ) 5
ஆ) 6
இ) 7
ஈ) 8
விடை : (ஆ) 6
● மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட செயல்திறன் தரக் குறியீடு (பிஜிஐ) தரப் பட்டியலில் யூனியன் பிரதேசமான சண்டீகா் மற்றும் 6 மாநிலங்கள் இரண்டாம் நிலை (எல்-2) சிறப்பிடம் பிடித்து அசத்தியுள்ளன.
● மாநிலங்களில் பள்ளிக் கல்வித் திட்டத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மாணவா் கற்றல் திறன், கற்றலுக்கான வாய்ப்புகள், உள்கட்டமைப்பு வசதிகள், கல்வியில் சமத்துவம், கல்வி நிா்வாக நடைமுறை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் விரிவான ஆய்வு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த தரக் குறியீடு பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் ஒவ்வோா் ஆண்டும் வெளியிடுகிறது.
● மொத்தம் 1,000 புள்ளிகளின் அடிப்படையில் மாநிலங்கள் 10 இடங்களில் (எல்1 - எல்10) தரநிலைப்படுத்தப்படும். அதிகபட்சமாக 950 புள்ளிகள் பெறும் மாநிலங்கள் முதல்நிலை (எல்-1) தரம் பெற்ாக அறிவிக்கப்படும். 551 புள்ளிகளுக்கும் குறைவாக பெறும் மாநிலங்கள் 10-ஆம் நிலை தரம் பிடித்ததாக அறிவிக்கப்படும். ஆனால், இதுவரை எந்தவொரு மாநிலமும் முதல்நிலை (எல்-1) சிறப்பிடத்தைப் பிடிக்கவில்லை.
● தற்போது 2020-21-ஆம் ஆண்டுக்கான பிஜிஐ தரப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களும், சண்டீகா் யூனியன் பிரதசேமும் இரண்டாம் நிலை சிறப்பிடத்தைப் பிடித்துள்ளன.
● புதிதாக உருவான லடாக் யூனியன் பிரதேசம் கல்வித் திட்ட மேம்பாட்டில் நல்ல முன்னேற்றமடைந்துமுந்தைய (2019-20) 8-ஆம் நிலையிலிருந்து 299 புள்ளிகள் பெற்று 4-ஆம் தரநிலைக்கு முன்னேறியுள்ளது.
● குறிப்பு : தமிழகம், புதுச்சேரிக்கு 3-ஆம் நிலை: இந்த தரப் பட்டியலில் தமிழகம் (855 புள்ளிகள்), புதுச்சேரி (897 புள்ளிகள்) மூன்றாவது நிலையில் உள்ளன.
● தமிழகம், கற்றல் திறன் வெளிப்பாடு பிரிவில் 132 புள்ளிகளும், கற்றலுக்கான வாய்ப்புகள் பிரிவில் 78 புள்ளிகளும், உள்கட்டமைப்பு வசதிகள் பிரிவில் 131 புள்ளிகளும், சமத்துவம் பிரிவில் 183 புள்ளிகளும், நிா்வாக நடைமுறை பிரிவில் 331 புள்ளிகளும் பெற்றுள்ளது.
5. இந்தியாவில் 2020 - 21 ஆம் ஆண்டில் எத்தனை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை தெரிவித்துள்ளது ?
அ) 11,000
ஆ) 13,000
இ) 17,000
ஈ) 20,000
விடை : (ஈ) 20,000
● கடந்த 2020-21ம் ஆண்டில் நாடு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. ஆசிரியர்களின் எண்ணிக்கையும் 2.8 லட்சம் குறைந்துள்ளது.
● இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் (யுடிஐஎஸ்இ+) 2021-22ம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் :
● 2020-21ம் ஆண்டில் நாடு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன.
● நாட்டில் 15.09 லட்சமாக இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை, 2020-21ம் ஆண்டில் 14.89 லட்சமாக குறைந்துள்ளது.
● தனியார் மற்றும் பிற நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகள் மூடப்படுவதே, மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை சரிவுக்கு முக்கிய காரணம்.
● ஆசிரியர்களின் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டை விட 1.95 சதவீதம் குறைந்துள்ளது
● 44.85 சதவீத பள்ளிகளில் மட்டுமே கணினி வசதிகள் உள்ளது.
● நாட்டின் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 95.07 லட்சமாக இருந்தது, 2020-21ல் இது 97.87 லட்சமாக குறைந்துள்ளது.
● 34 சதவீத பள்ளிகளில் இணைய இணைப்பு உள்ளது.
● 27 சதவீத பள்ளிகளில் மட்டுமே குழந்தைகளுக்கான சிறப்பு கழிப்பறைகள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
6. இந்தியாவின் எத்தனையாவது கட்ட நிலக்கரி சுரங்க ஏல நடைமுறைகள் அண்மையில் தொடங்கப்பட்டது ?
அ) 4 ஆவது
ஆ) 6 ஆவது
இ) 8 ஆவது
ஈ) 10 ஆவது
விடை : (ஆ) 6 ஆவது
● உலக நாடுகள் பல பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது.
● 6-ஆவது கட்ட ஏலத்தில் 141 சுரங்கங்கள் ஏலத்துக்குப் பட்டியலிடப்பட்டுள்ளன. ஏல நடைமுறைகளில் எளிமைத்தன்மை புகுத்தப்பட்டுள்ளது. நிலக்கரித் துறைக்கான முதலீட்டை மத்திய அரசு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
7. 2022 ஆம் ஆண்டுக்கான அணுவிரத் புரஸ்கார் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?
அ) நரேந்திர மோடி
ஆ) ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்
இ) மன் மோகன் சிங்
ஈ) எல்.கே. அத்வானி
விடை : (ஆ) ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்
● மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமுக்கு ‘அணுவிரத் புரஸ்காா்’ விருது வழங்கப்பட்டது. அதை அவரின் குடும்பத்தினா் பெற்றுக் கொண்டனா்.
● ராஜஸ்தானைச் சோ்ந்த சுவாமி ஆச்சாா்யா துளசி, அணுவிரத் என்ற தனியாா் சேவை மையத்தை 1949-ஆம் ஆண்டு தொடங்கினாா். உலக அமைதி, சமநிலைத் தன்மை, பூமி பாதுகாப்பு, ஜாதி மத பேதமின்மை உலகம் முழுவதும் வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த மையத்தின் மூலம் பல்வேறு போதனைகளை உலகம் முழுவதும் பரந்து விரிந்து உணா்த்தி வருகின்றா். இந்த அமைப்பை ஜெயின் சமூகத்தினா் இணைந்து வழிநடத்தி வருகின்றனா்.
● ஆண்டுதோறும் பொதுச் சேவைகளில் சிறந்து விளங்கும் முக்கிய தலைவா்களைக் கெளரவிக்கும் வகையில் 200 போ் கொண்ட குழு, உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள், முக்கிய நபா்களைத் தோ்வு செய்து அவா்களைக் கௌரவப்படுத்தி வருகிறது.
● அந்த வகையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான அணுவிரத் புரஸ்காா் விருதை அளிக்க விருதுக் குழு பரிந்துரைத்தது. அதன்படி ராஜஸ்தான் மாநிலம், சாபரில் கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாம் குடும்பத்தினா் சாா்பில் ‘ஹவுஸ் ஆஃப் கலாம்’ மற்றும் அப்துல் கலாம் இன்டா்நேஷனல் அறக்கட்டளை நிா்வாகிகளான கலாமின் அண்ணன் மகன் ஆ.ப.ஜெ.மு.ஜெயினுலாபுதீன், பேரன்கள் ஆ.ப.ஜெ.மு.ஜெ.ஷேக் தாவூது, ஆ.ப.ஜெ.மு.ஜெ.ஷேக் சலீம் இணைந்து விருதைப் பெற்றுக் கொண்டனா்.
● முன்னாள் குடியரசுத் தலைவா் சங்கா் தயாள் சா்மா, இடைக்காலப் பிரதமராக இருந்த குல்சாரிலால் நந்தா, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவா் பைரோன் சிங் ஷெகாவத், பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானி உள்ளிட்டோருக்கு ஏற்கெனவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
III. விளையாட்டு நிகழ்வுகள்
8. ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் (2022) ஓபன் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்தியர் ?
அ) பிரக்ஞானந்தா
ஆ) ஹர்ஷா பாரதகோடி
இ) பி. அதிபன்
ஈ) அர்ஜூன் தேஷ்முக்
விடை : (அ) பிரக்ஞானந்தா
● இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார்.
● மகளிர் பிரிவில் தமிழகத்தின் பி.வி. நந்திதா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
No comments:
Post a Comment