Wednesday, July 13, 2022

Current Affairs 2022 - July 13 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                     GK SHANKAR 
                     JULY 13 / 2022

I.தேசியச் செய்திகள் 

1. ஜார்க்கண்டின் தேவ்கர் நகரில் அமைக்கப்பட்டுள்ள அம்மாநிலத்தன் 2 ஆவது விமான நிலையத்தை திறந்து வைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி
ஆ) ஹேமந்த் சோரன் 
இ) ராம்நாத் கோவிந்த் 
ஈ) ராஜ்நாத் சிங் 

விடை : (அ) நரேந்திர மோடி

2. உலகிலேயே மிகப்பெரிய சக்தி வாய்ந்த விண்வெளி தொலை நோக்கியான ஜேம்ஸ் வெப்பை நாசா எந்த ஆண்டு விண்வெளியில் செலுத்தியது ? 

அ) 2022
ஆ) 2021
இ) 2019
ஈ) 2018 
விடை : (ஆ) 2021 

3. நாடு முழுவதும் எந்த தேதி முதல் வாக்காளர் பட்டியலுடன் அதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கைகள் தொடங்கவுள்ளன ? 

அ) ஆகஸ்ட் 15 
ஆ) ஆகஸ்ட் 30 
இ) ஆகஸ்ட் 01
ஈ) ஆகஸ்ட் 20 

விடை : (இ) ஆகஸ்ட் 01 

4. மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு எதிராக நிகழாண்டு ஜூன் வரையில் எத்தனை லட்ச புகார்கள் வந்துள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 6.50 லட்சம்
ஆ) 9.81 லட்சம் 
இ) 3.99 லட்சம்
ஈ) 5.59 லட்சம் 

விடை : (ஈ) 5.59 லட்சம் 

5. 2020 - 2021 ஆம் ஆண்டில் அடிப்படையில் இந்தியாவில் உயரதிகாரிகளாகப் பெண்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் ? 

அ) மிஸோரம் 
ஆ) உத்தரகண்ட்
இ) ஆந்திர பிரதேசம்
ஈ) தமிழ்நாடு 

விடை : (அ) மிஸோரம் 

6. நாட்டின் சில்லறைப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் ----------- சதவீதமாக குறைந்துள்ளது ? 

அ) 17.37%
ஆ) 7.01%
இ) 8.10%
ஈ) 18.26%
விடை : (ஆ) 7.01%

7. இந்திய தொழிலக உற்பத்தி நிகழாண்டு மே மாதத்தில் ------- சதவீதம் என்ற அளவில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது ? 

அ) 18.26%
ஆ) 17.37%
இ) 19.6%
ஈ) 23.6%
விடை : (இ) 19.6%

II. விளையாட்டுச் செய்திகள்

8. ஃபின்லாந்தில் நடைபெற்ற முதியோருக்கான தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பக்வனி தேவி எத்தனை பதக்கங்கள் வென்றார் ? 

அ) 5
ஆ) 6
இ) 2
ஈ) 3 
விடை : (ஈ) 3 

9. சென்னையில் நடைபெற்ற 5 ஆவது இளையோர் தேசிய குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்துக்கு கிடைத்துள்ள பதக்கம் ? 

அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) ஏதுமில்லை 

விடை : (இ) வெண்கலம் 

Tuesday, July 12, 2022

Current Affairs 2022 - July 12 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                        GK SHANKAR
                      JULY 12 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. கரோனா தடுப்பூசி முகாமில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக எந்த மாவட்டம் தடுப்பூசி செலுத்தி முதலிடம் பிடித்துள்ளது ? 

அ) மதுரை
ஆ) சேலம் 
இ) வேலூர்
ஈ) தருமபுரி 

விடை : (ஆ) சேலம் 

● குறிப்பு : தமிழகத்திலேயே அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 95,401 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

2. இந்தியாவில் எந்த மாவட்டம் வயது வந்தோருக்கான கல்வி கற்கும் முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது ?
அ) தமிழ்நாடு 
ஆ) கேரளா
இ) உத்தரகண்ட்
ஈ) மணிப்பூர் 

விடை : (அ) தமிழ்நாடு 

● அறிவிப்பு : தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி .
● முன்பு : சிறப்புப் பள்ளி சாரா (ம) வயது வந்தோர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
● இத்திட்டத்தின் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் அடங்கிய புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

II. தேசியச் செய்திகள் 

3. புதிய நாடாளுமன்ற கட்டத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள தேசிய சின்னத்தை திறந்து வைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி
ஆ) ராம்நாத் கோவிந்த்
இ) வெங்கையா நாயுடு
ஈ) ஜெய்சங்கர் 

விடை : (அ) நரேந்திர மோடி 

● புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள தேசிய சின்னத்தை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

வெண்கலத்தால் ஆன இந்த தேசிய சின்னம் 9,500 கிலோ எடையும், 6.5 மீட்டா் உயரமும் கொண்டதாகும். புதிய நாடாளுமன்றக் கட்டடம் இந்த ஆண்டு இறுதியில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்தச் சின்னம் திறந்து வைக்கப்பட்டிருப்பது மிக முக்கிய முதல் நிகழ்வாக அமைந்துள்ளது.

‘புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மைய மண்டபத்தின் மேற்கூரையில் இந்த தேசிய சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தாங்கி நிற்பதற்காக 6,500 கிலோ இரும்பால் ஆன கட்டமைப்பு அமைக்கப்பட்டு, அதன் ஆதரவுடன் தேசிய சின்னம் பொருத்தப்பட்டுள்ளது.


4. தில்லியில் நடைபெற்ற பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்ற தலைப்பிலான கருத்தரங்கை தொடங்கி வைத்தவர் யார் ? 

) நரேந்திர மோடி

ஆ) அமித் ஷா

இ) ஜெய்சங்கர்

ஈ) ராஜ்நாத் சிங் 

விடை : (ஈ) ராஜ்நாத் சிங் 

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கை தொடங்கி வைத்து ராஜ்நாத் சிங் பேசியதாவது.

● மனித வளா்ச்சி மற்றும் அமைதிக்காக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தியாக வேண்டும்; அதே நேரம், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் எழும் சட்ட ரீதியிலான, அரசியல், நெறிமுறை மற்றும் பொருளாதார ரீதியிலான சவால்களை எதிா்கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்று கூறினாா்.

● நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தப்பட்ட ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப உபகரணம், இணைய பாதுகாப்பு, மனித நடத்தை ஆய்வு தொழில்நுட்பம், நுண்ணறிவு கண்காணிப்பு நடைமுறை, தொடா் விநியோக நிா்வாகத் திட்டம், குரல் ஆய்வு தொழில்நுட்பம், உத்தரவு, கட்டுப்பாடு, தகவல் தொடா்பு, கணினி, கண்காணிப்பு, உளவு பாா்த்தல் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை சாா்ந்த 75 தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை ராஜ்நாத் சிங் தொடக்கிவைத்தாா்.

5. மக்கள்தொகை பெருக்கத்தில் கீழ்க்கண்ட எந்த ஆண்டுக்குள் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பெறும் என ஐ.நா. கணித்து தெரிவித்துள்ளது ? 

அ) 2025

ஆ) 2023

இ) 2024

ஈ) 2026

விடை : (ஆ) 2023 

மக்கள்தொகை பெருக்கத்தில் 2023-ஆம் ஆண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பெறும் என்றும், நிகழாண்டு நவம்பரில் உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டும் என்றும் ஐ.நா. கணித்துள்ளது.

● இதுதொடா்பாக ஐ.நா. பொருளாதார, சமூக விவகாரத் துறையின் மக்கள்தொகை பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாவது:

● உலக மக்கள்தொகை நிகழாண்டு நவம்பா் 15-இல் 800 கோடியை எட்டும். 1950-க்குப் பின்னா் உலக மக்கள் தொகை மெதுவான வீதத்தில் வளா்ச்சியடைகிறது. 2030-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 850 கோடியையும், 2050-ஆம் ஆண்டில் 970 கோடியையும் எட்டும். 2080-இல் உலக மக்கள்தொகை 1,040 கோடியாக இருக்கும். 2100 வரை இதே விகிதம் நீடிக்கும்.

● 2023-இல் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும். வரும் 2050-இல் இந்தியாவின் மக்கள்தொகை 166 கோடியாக இருக்கும்.

● உலக மக்கள்தொகையில் 29 சதவீதத்துடன் அதாவது 230 கோடி மக்கள்தொகையுடன் 2022-இல் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட பிராந்தியமாக கிழக்கு மற்றும் தென்-கிழக்கு ஆசியா திகழ்கிறது. மத்திய, தெற்கு ஆசியா 210 கோடி மக்களுடன் உலக மக்கள்தொகையில் 26 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

● இந்த பிராந்தியத்தில் சீனாவும் இந்தியாவும் தலா 140 கோடி மக்கள்தொகையுடன் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளாக விளங்குகின்றன. 2050-ஆம் ஆண்டுவரையிலான உலக மக்கள்தொகை பெருக்க கணக்கீட்டின்படி, காங்கோ குடியரசு, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், தான்ஸானியா ஆகிய 8 நாடுகளும் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு வகிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், ‘பூமியின் 800 கோடியாவது மக்களைப் பெற போவதால் நிகழாண்டு சா்வதேச மக்கள்தொகை தினம் (ஜூலை 11) முக்கிய மைல்கல்லாகும். நமது பன்முகத்தன்மை, மனிதாபிமானத்தை அங்கீகரிக்கவும், நீடித்த வாழ்நாளை உறுதிப்படுத்தி, தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்க உதவிய மருத்துவத் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டாடவும் இது சரியான தருணம்’ என்றாா்.

6. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக: 

1) உலகின் முதல் மணல் மின்கலன் மேற்கு பின்லாந்தில் நிறுவப்பட்டுள்ளது. 

2) மணலில் வெப்ப ஆற்றலை சேமிக்கும் மின்கலம் ஒன்று மேற்கு பின்லாந்தில் நிறுவப்பட்டுள்ளது . 

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும் 

இ)1 & 2

ஈ) ஏதுமில்லை 

விடை : (இ) 1 & 2 

● புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து வரும் மின்சாரமானது மணலைச் சுமார் 932°F வரை வெப்பப்படுத்தப் பயன்படுகிறது.

● இந்த வெப்ப ஆற்றல் ஆனது பின்னர் அங்குள்ள கட்டிடங்களில் வழங்கப்படும் தண்ணீரைச் சூடாக்குகிறது .

● காற்று (ம) சூரிய ஒளி போன்ற குறிப்பிட்ட இடைவெளியில் இயங்கும் ஆற்றல் மூலங்களிலிருந்து இதனால் ஆற்றலைச் சேமிக்க முடியும். 

● இது ஒரே நேரத்தில் பல மாதங்கள் வரை புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சேமித்து வைத்திருக்க முடியும். 

7 . தென் கொரியாவில் நடைபெறும் ISSF உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் பபுதா வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) ஏதுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● ஆடவருக்கான 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் பபுதா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

III. விளையாட்டுச் செய்திகள் 

8. சர்வதேச மலாலா தினம் ( International Malala Day ) 2022 ? 

அ) ஜூலை 09

ஆ) ஜூலை 12

இ) ஜூலை 10

ஈ) ஜூலை 08

விடை : (ஆ) ஜூலை 12 


Monday, July 11, 2022

Current Affairs 2022 - July 11 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                     GK SHANKAR 
                    JULY 11 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் எங்கு 2,000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன ? 

அ) சேலம்
ஆ) கோவை
இ) மதுரை
ஈ) புதுக்கோட்டை

விடை : (ஈ)புதுக்கோட்டை 

2. தமிழகத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் லிமிடெட் சார்ப்பில் கீழ்க்கண்ட எந்த திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது ? 

அ) டெக் பீ
ஆ) ஐ டெக்
இ) டெக் சி
ஈ) ஏதுமில்லை 

விடை : (அ) டெக் பீ

3. வேலூர் சிப்பாய் புரட்சியின் எத்தனையாவது ஆண்டு நினைவு தினம் அண்மையில் கடைபிடிக்கப்பட்டது ? 

அ) 175 ஆவது 
ஆ) 100 ஆவது
இ) 216 ஆவது
ஈ) 213 ஆவது 

விடை : (இ) 216 ஆவது 

II. தேசியச் செய்திகள் 

4. அண்மையில் இந்தியாவில் இருந்து எந்த நாட்டுக்கு 44,000 மெட்ரிக்டன் யூரியா அனுப்பிவைக்கப்பட்டது ? 

அ) ஆப்கானிஸ்தான் 
 ஆ) இலங்கை 
இ) தென்னாப்பிரிக்கா
ஈ) உக்ரைன் 

விடை : (ஆ) இலங்கை 

5. இந்தியாவில் முற்றிலும் உருவாக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்த் என்று இந்திய கடற்படையிடம் சேர்க்கப்படவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 15
ஆ) ஆகஸ்ட் 19
இ) ஆகஸ்ட் 20
ஈ) ஆகஸ்ட் 22

விடை : (ஈ) ஆகஸ்ட் 22

6. லடாக் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இந்திய வீரர்களுக்கு எந்த மொழி பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகள் இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது ? 

அ) சீன
ஆ) உருது
இ) பிரெஞ்ச்
ஈ) அனைத்தும் 

விடை : (அ)சீனா 

7. கடந்த 4 ஆண்டுகளில் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த எத்தனை இளைஞர்கள் , பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 1000
ஆ) 700
இ) 670
ஈ) 970

விடை : (ஆ) 700

III. விளையாட்டுச் செய்திகள் 

8. அமெரிக்காவில் நடைபெறும் வேர்ல்ட் கேம்ஸ் வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) ஏதுமில்லை 

விடை : (இ) வெண்கலம்

9. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்தெடுக : 

1) விம்பிள்டன் சாம்பியன்ஷிப் 2022, ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். 
2) இவருக்கு இது 9ஆவது பட்டமாகும். 

அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும் 
இ) 1 & 2 
ஈ) ஏதுமில்லை 

விடை : (அ) 1 மட்டும்

IV. முக்கிய தினங்கள் 

10. உலக மக்கள் தொகை தினம் ( World Population Day ) 2022 ? 

அ) ஜூலை 08
ஆ) ஜூலை 09
இ) ஜூலை 10
ஈ) ஜூலை 11

விடை : (ஈ) ஜூலை 11 

Current Affairs 2022 - July 10 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                      GK SHANKAR 
                     JULY 10 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய வெளியிடப்பட்டுள்ள இணையதளம் எது ? 

அ) www. tnvelaivaaippu.gov.in
ஆ) www.tnvelaivaaippu.in
இ) www.tnkalvithedal.gov.in
ஈ) www.tnvelaithedal.gov.in 

விடை : (அ) www.tnvelaivaaipu.gov.in

2. கூற்று : கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் கண்புரை பரிசோதனை சேர்க்கப்படவுள்ளது.

காரணம்: கண்புரை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தில் சேர்க்கப்படவுள்ளது.

அ) கூற்று சரி , காரணம் தவறு 
ஆ) கூற்று தவறு , காரணம் சரி 
இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை. 

3. சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தம் என்று முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 05
ஆ) நவம்பர் 01
இ) நவம்பர் 14
ஈ) ஆகஸ்ட் 01 

விடை: (ஈ) ஆகஸ்ட் 01 

II. தேசியச் செய்திகள் 

4. நாட்டின் பணவீக்கத்தை -------- முதல் -------- சதவீதத்துக்குள் கட்டுபடுத்த RBI இலக்கு நிர்ணயித்துள்ளது ? 

அ) 7 முதல் 12
ஆ) 5 முதல் 9
இ) 2 முதல் 6
ஈ) 6 முதல் 11

விடை : (இ) 2 முதல் 6 % 

5. சுரங்கத்துறையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு தேசிய சுரங்கம் (ம) கனிம வளமாநாட்டில் விருதுகள் வழங்கப்படவுள்ளது ? மாநாடு நடைபெறும் நாள் ? 

அ) ஜூலை 05 
ஆ) ஜூலை 20 
இ) ஜூலை 12
ஈ) ஜூலை 27 

விடை : (இ) ஜூலை 12

6. அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிள் காரணமாக எத்தனை குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன ? 

அ) 25,000
ஆ) 40,000
இ) 50,000
ஈ) 65,000

7. மை ஹோம் இந்தியா அமைப்பு நடத்திய இளைஞர் சம்மேளன மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றவர் யார் ? 

அ) நரேந்திர மோடி
ஆ) வெங்கையா நாயுடு
இ) அமித் ஷா
ஈ) ராம்நாத் கோவிந்த் 

விடை : (ஈ) ராம்நாத் கோவிந்த் 

8. போலீஸாரை 8  அடி இடைவெளிக்குள் பட மெடுப்பவர்களுக்கு தண்டனை வழங்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு ? 

அ) அமெரிக்கா
ஆ) ரஷ்யா
இ) இந்தியா
ஈ) ஜப்பான் 

விடை : (அ) அமெரிக்கா

III. விளையாட்டுச் செய்திகள் 

9. விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளவர் யார் ? 

அ) எலனா ரைபாகினா 
ஆ) ஆன்ஸ் ஜாபியுர்
இ) சானியா மிர்ஸா
ஈ) கலினா ஜாபியுர்

விடை : (அ) எலனா ரைபாகினா 

Saturday, July 9, 2022

Current Affairs 2022 - July 09 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                       GK SHANKAR 
                      JULY 09 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகம் முழுவதும் எத்தனை லட்ச இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்  நாளை (ஜூலை 10) நடைபெறவுள்ளது ? 

அ) 1 லட்சம் 
ஆ) 2 லட்சம்
இ) 3 லட்சம்
ஈ) 4 லட்சம் 

விடை : (அ) 1 லட்சம் 

● இந்த முகாமில் இரண்டாம் தவணை,  பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 
● குறிப்பு : இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16, 2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

2. தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் 2 லட்சமாவது மையத்தை முதல்வர் எங்கு தொடக்கி வைத்தார் ? 

அ) சேலம்
ஆ) திருவண்ணாமலை 
இ) கோயம்புத்தூர் 
ஈ) மதுரை 

விடை : (ஆ) திருவண்ணாமலை 

● இல்லம் தேடி கல்வி திட்டத்தின் 2 லட்சமாவது மையத்தை திருவண்ணாமலை மாவட்டம், பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 
முதன்முதலில் தொடங்கப்பட்டது : 
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், முதலியார் குப்பம் கிராமத்தில் அக்டோபர் 27, 2021 ம் தேதி முதல்வரால் தொடங்கப்பட்டது.

3. தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் தொடர் வாசிப்பு இயக்கப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற மாவட்டம் ? 

அ) திருச்சி
ஆ) சேலம் 
இ) மதுரை
ஈ) திருநெல்வேலி 

விடை : (இ) மதுரை 

● குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க நடத்தப்பட்ட தொடர் வாசிப்பு இயக்கப்போட்டி. 
● 1st - திருச்சி, லால்குடி வட்டாரம்
2nd - மதுரை,அலங்காநல்லூர், வட்டாரம்.
3rd - மதுரை, மேலூர் வட்டாரம். 
● ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் : 
 மதுரை மாவட்டம். 

II. தேசியச் செய்திகள் 

4. அண்மையில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) சீனா
ஆ) ரஷ்யா
இ) அமெரிக்கா
ஈ) ஜப்பான் 

விடை : (ஈ) ஜப்பான் 

● அவருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் இந்தியாவில் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டது. 

5. இந்திய மாநிலங்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எத்தனை உறுப்பினர்கள் அண்மையில் பதவியேற்றுள்ளனர் ? 

அ) 27
ஆ) 31
இ) 20
ஈ) 18 
விடை : (அ) 27 

● 27 உறுப்பினர்களுக்கு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். 
● குறிப்பு : தமிழகத்தைச் சேர்ந்த தர்மர் தமிழில் பதவியேற்றுக் கொண்டார். 

6. ஜம்மு - காஷ்மீரின் அமர்நாத் குகை கோயில் அருகே நிகழ்ந்த திடீர் மேக வெடிப்பைத் தொடர்ந்து பெய்த பலத்த மழை வெள்ளத்தில் சிக்கி எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் ? 

அ) 31
ஆ) 13
இ) 25
ஈ) 18
விடை : 13 
● வெள்ளத்தில் சிக்கி 3 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.  

7. கடந்த நிதியாண்டில் எத்தனை கோடி மதிப்பிலான  பாதுகாப்பு தளவாடங்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை செய்துள்ளது ? 

அ) ரூ. 13,000 கோடி
ஆ) ரூ. 25,000 கோடி
இ) ரூ. 31,000 கோடி
ஈ) ரூ. 41,000 கோடி 

விடை : (அ) ரூ.13,000 கோடி

● அறிவிப்பு : மத்திய பாதுகாப்பு உற்பத்தி துறையின் கூடுதல் செயலாளர் சஞ்சய் ஜாஜூ. 

8. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக: 

1) வெளிநாட்டு விமானங்களை இயக்குவதற்காக இந்திய நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் விமான எரிபொருளுக்குக் கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

2) இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட பாலியஸ்டர் தேசியக் கொடிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ?

அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 (ம) 2 மட்டும் 
ஈ) ஏதுமில்லை 

விடை : (இ) 1  (ம) 2 

● அறிவிப்பு : மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

III. விளையாட்டுச் செய்திகள் 

9. விம்பிள்டன் போட்டி 2022 ல் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள டெனசரே கிராவ்ஸிக் (ம) நீல் ஸ்குப்ஸ்கி கீழ்க்கண்ட எந்த நாட்டை சேர்ந்தவர்கள் ? 

அ) அமெரிக்கா
ஆ) ஆஸ்திரேலியா
இ) இங்கிலாந்து 
ஈ) அ & இ 

விடை : (ஈ) அ & இ 

Friday, July 8, 2022

Current Affairs 2022 - JULY 08 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                        GK SHANKAR 
                      JULY 08 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் புதிதாக 20 அரசு கலை (ம) அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தவர் யார் ? 

அ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி
ஆ) கே. பொன்முடி 
இ) மு.க. ஸ்டாலின்
ஈ) அ & இ 

விடை : (இ) மு.க. ஸ்டாலின் 

● நோக்கம் : அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வியை வழக்கவும்,  மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும் புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. 

2. திருவண்ணாமலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின்
ஆ) சோனியா காந்தி
இ) ஆர். என். ரவி
ஈ) பினராயி விஜயன்

விடை : (அ) மு.க. ஸ்டாலின்

● திருவண்ணாமலை, வேலூர் சாலையில் புதிதாக அண்ணா நுழைவு வாயில் கட்டப்பட்டுள்ளது.

● இதன் அருகிலேயே முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை அமைத்து திறக்கப்பட்டுள்ளது. 

● மேலும் : 2 லட்சமாவது இல்லம் தேடி கல்வி மையத்தை கீழ்பென்னாத்தூர் வட்டம் , ஆராஞ்சி ஊராட்சியில் முதல்வர் திறந்து வைத்தார். 

II. தேசியச் செய்திகள் 

3. இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) டி. ஸ்ரீகாந்த் 
ஆ) ஆர். கே. குப்தா 
இ) ஸ்ரீதர் குமார் 
ஈ) சுரப்சுக்லா 

விடை : (ஆ) ஆர்.கே. குப்தா 

● உத்தரவு : மத்திய பணியாளர் அமைச்சகம்.  
● முன்பு : மத்திய தலைமைச் செயலக அதிகாரியாக பணியில் இருந்தார்.  
● பதவிக்காலம் : அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வுபெறும் வரை இப்பதவியில் நீட்டிப்பார்.  

4. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான 3 நாள் மாநாடு எங்கு தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) மும்பை
ஆ) சென்னை
இ) வாராணசி
ஈ) கொல்கத்தா 

விடை : (இ) வாராணசி 

தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான 3 நாள் மாநாடு, வாரணாசியில் வியாழக்கிழமை தொடங்கியது. இதனை தொடங்கிவைத்து பிரதமர் மோதி பேசியதாவது.

● ஆங்கிலேயர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணியாளர் வர்க்கத்தை உருவாக்கும் வகையில் இந்தியாவில் கல்வி முறையை அறிமுகப்படுத்தினர்; அதில் இன்னும் நிறைய மாற்றம் தேவைப்படுகிறது" என்று பிரதமர் மாநாட்டில் கூறினார். 

5. நடப்பு நிதியாண்டில் நீண்டகால முதலீட்டுத் திட்டங்களை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு எத்தனை கோடி வட்டியில்லா கடன் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது ? 

அ) ரூ. 80,000 கோடி
ஆ) ரூ. 50,000 கோடி
இ) ரூ. 75,000 கோடி
ஈ) ரூ. 97,000 கோடி 

விடை : (அ) ரூ. 80,000 கோடி

● அறிவிப்பு : மத்திய நிதியமைச்சகம்.  
● குறிப்பு : பிரதமரின் துரித சக்தி திட்டத்தின் கீழான முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

6. மத்திய உருக்குத்துறை (ம) சிறுபான்மை நலத்துறை அமைச்சர்களாக அண்மையில் கூடுதல் பொறுப்பேற்றுள்ள மத்திய அமைச்சர்கள் யார் ? 

அ) நிர்மலா சீதாராமன் 
ஆ) ஜோதிராதித்ய சிந்தியா 
இ) ஸ்மிருதி இரானி 
ஈ) ஆ & இ 

விடை : (ஈ) ஆ & இ 
மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, உருக்குத்துறையின் அமைச்சராகவும், ஸ்மிருதி இரானி சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டனா்.

●மத்திய உருக்குத் துறையின் அமைச்சராக இருந்த ராம் சந்திர பிரசாத் சிங் மற்றும் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி ஆகியோரது மாநிலங்களவை உறுப்பினா் பதவி காலம் நிறைவுறுவதால்,இருவரும் தங்கள் அமைச்சா் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தனா்.

● இந்நிலையில், விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ள ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு உருக்கு அமைச்சகமும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானிக்கு மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

● மத்திய அமைச்சரவை பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை அதற்கான உத்தரவைப் பிறப்பித்தாா்.

7.  ஜி20 அமைப்பின் இந்திய தூதராக (ஷெர்பா) நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) பியூஷ் கோயில

ஆ) சுரப்சுக்லா 

இ) ஆர். கே. குப்தா

ஈ) அமிதாப் காந்த்

விடை : (இ) ஆர்.கே. குப்தா 

● இவர் நீதி ஆயோக் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

● குறிப்பு : ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை நிகழாண்டு இறுதியில் இந்தியா ஏற்கவுள்ளது. 

8. ஐ.நா. அமைப்புகளில் ஒன்றான யுனெஸ்கோவின் கலை , கலாசார பாரம்பரிய குழுவின் உறுப்பினராக இந்தியா எத்தனையாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ?  

அ) முதலாவது 

ஆ) இரண்டாவது

இ) மூன்றாவது 

ஈ) ஐந்தாவது 

விடை : (இ) மூன்றாவது 

●  UNESCO சார்பில் 2003 ஆம் ஆண்டு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது அக்குழுவில் பல நாடுகளில் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இடம் பெறுவர் . 

● அக்குழுவின் உறுப்பினராக இந்தியா : 

1st time : 2006 - 2010

2nd time : 2014 - 2018

3rd time : 2022 - 2026 .

9. கரோனா தீநுண்மியின் ஓமைக்ரான் பி.ஏ.2.75 வகை வைரஸ் பரவல் முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ள நாடு எது ? 

அ) அமெரிக்கா

ஆ) இந்தியா

இ) சீனா

ஈ) பிரிட்டன்

விடை : (ஆ) இந்தியா 

அறிவிப்பு : உலக சுகாதார அமைப்பு 


Current Affairs 2022 - July 07 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                   GK SHANKAR 
                  JULY 07 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. கூற்று : தமிழகத்தில் உள்ள ஒரு சில தொழில்துறை (ம) ஆராய்ச்சி நிறுவனங்களுடன் டைசல் நிறுவனம் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன .

காரணம் : தொழில்நுட்பம், ஆராய்ச்சித் துறைகளில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த வகை செய்யும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்கவில்லை 
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு , காரணம் சரி

2. தஞ்சாவூர் அருகே பட்டீஸ்வரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறார் திரைப்பட திருவிழாவை தொடங்கி வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின் 
ஆ) மா. சுப்பிரமணியன்
இ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 
ஈ) அ & இ 

விடை : (இ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

II. தேசியச் செய்திகள் 

3. தெற்கு சூடானுக்கான ஐ.நா. அமைதிப் படைப் பிரிவின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் யார் ? 

அ) சைலேஷ் தினகர்
ஆ) மோகன் சுப்பிரமணியம்
இ) அன்டோனியோ குட்டெரெஸ் 
ஈ) சங்க்கரன் கோ.கி 

விடை : (ஆ) மோகன் சுப்பிரமணியம்

4. மாநிலங்களவை நியமன ஊறுப்பினர்களாக (MP) கீழ்கண்டவருள் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் ? 

அ) இளையராஜா
ஆ) பி.டி. உஷா 
இ) ஏ.ஆர். ரகுமான் 
ஈ) அ & ஆ 

விடை : (ஈ) அ & ஆ 

5. அஸ்ஸாமில் இருந்து வெளியாகும் அக்ர தூத் என்ற நாளிதழின் எத்தனையாவது ஆண்டு கொண்டாடத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார் ? 

 அ) 25 ஆவது
ஆ) 75 ஆவது
இ) 50 ஆவது
ஈ) 100 ஆவது 

விடை : (இ) 50 ஆவது 

6. கீழ்கண்ட எந்த ஆண்டு முதல் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் எரிபொருள் சிக்கன தரநிலை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ? 

அ) 2025
ஆ) 2023
இ) 2024
ஈ) 2026 

விடை : (ஆ) 2023 

7. இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர் பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி எந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ? 

அ) அமெரிக்கா
ஆ) ரஷ்யா
இ) ஆஸ்திரேலியா 
ஈ) ஆப்பிரிக்கா 

விடை : (அ) அமெரிக்கா 

III. முக்கிய தினங்கள் : 

8. உலகளாவிய மன்னிப்பு தினம் ( GLOBAL FORGIVENESS DAY ) 2022 ? 

அ) ஜூலை 04
ஆ) ஜூலை 07 
இ) ஜூலை 05
ஈ) ஜூலை  06 

விடை : (ஆ) ஜூலை 07 

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...