JULY 10 / 2022
I. தமிழ்நாட்டுச் செய்திகள்
1. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய வெளியிடப்பட்டுள்ள இணையதளம் எது ?
அ) www. tnvelaivaaippu.gov.in
ஆ) www.tnvelaivaaippu.in
இ) www.tnkalvithedal.gov.in
ஈ) www.tnvelaithedal.gov.in
விடை : (அ) www.tnvelaivaaipu.gov.in
2. கூற்று : கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் கண்புரை பரிசோதனை சேர்க்கப்படவுள்ளது.
காரணம்: கண்புரை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தில் சேர்க்கப்படவுள்ளது.
அ) கூற்று சரி , காரணம் தவறு
ஆ) கூற்று தவறு , காரணம் சரி
இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
3. சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தம் என்று முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது ?
அ) ஆகஸ்ட் 05
ஆ) நவம்பர் 01
இ) நவம்பர் 14
ஈ) ஆகஸ்ட் 01
விடை: (ஈ) ஆகஸ்ட் 01
II. தேசியச் செய்திகள்
4. நாட்டின் பணவீக்கத்தை -------- முதல் -------- சதவீதத்துக்குள் கட்டுபடுத்த RBI இலக்கு நிர்ணயித்துள்ளது ?
அ) 7 முதல் 12
ஆ) 5 முதல் 9
இ) 2 முதல் 6
ஈ) 6 முதல் 11
விடை : (இ) 2 முதல் 6 %
5. சுரங்கத்துறையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு தேசிய சுரங்கம் (ம) கனிம வளமாநாட்டில் விருதுகள் வழங்கப்படவுள்ளது ? மாநாடு நடைபெறும் நாள் ?
அ) ஜூலை 05
ஆ) ஜூலை 20
இ) ஜூலை 12
ஈ) ஜூலை 27
விடை : (இ) ஜூலை 12
6. அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிள் காரணமாக எத்தனை குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன ?
அ) 25,000
ஆ) 40,000
இ) 50,000
ஈ) 65,000
7. மை ஹோம் இந்தியா அமைப்பு நடத்திய இளைஞர் சம்மேளன மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றவர் யார் ?
அ) நரேந்திர மோடி
ஆ) வெங்கையா நாயுடு
இ) அமித் ஷா
ஈ) ராம்நாத் கோவிந்த்
விடை : (ஈ) ராம்நாத் கோவிந்த்
8. போலீஸாரை 8 அடி இடைவெளிக்குள் பட மெடுப்பவர்களுக்கு தண்டனை வழங்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு ?
அ) அமெரிக்கா
ஆ) ரஷ்யா
இ) இந்தியா
ஈ) ஜப்பான்
விடை : (அ) அமெரிக்கா
III. விளையாட்டுச் செய்திகள்
9. விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளவர் யார் ?
அ) எலனா ரைபாகினா
ஆ) ஆன்ஸ் ஜாபியுர்
இ) சானியா மிர்ஸா
ஈ) கலினா ஜாபியுர்
விடை : (அ) எலனா ரைபாகினா
No comments:
Post a Comment