Wednesday, July 13, 2022

Current Affairs 2022 - July 13 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                     GK SHANKAR 
                     JULY 13 / 2022

I.தேசியச் செய்திகள் 

1. ஜார்க்கண்டின் தேவ்கர் நகரில் அமைக்கப்பட்டுள்ள அம்மாநிலத்தன் 2 ஆவது விமான நிலையத்தை திறந்து வைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி
ஆ) ஹேமந்த் சோரன் 
இ) ராம்நாத் கோவிந்த் 
ஈ) ராஜ்நாத் சிங் 

விடை : (அ) நரேந்திர மோடி

2. உலகிலேயே மிகப்பெரிய சக்தி வாய்ந்த விண்வெளி தொலை நோக்கியான ஜேம்ஸ் வெப்பை நாசா எந்த ஆண்டு விண்வெளியில் செலுத்தியது ? 

அ) 2022
ஆ) 2021
இ) 2019
ஈ) 2018 
விடை : (ஆ) 2021 

3. நாடு முழுவதும் எந்த தேதி முதல் வாக்காளர் பட்டியலுடன் அதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கைகள் தொடங்கவுள்ளன ? 

அ) ஆகஸ்ட் 15 
ஆ) ஆகஸ்ட் 30 
இ) ஆகஸ்ட் 01
ஈ) ஆகஸ்ட் 20 

விடை : (இ) ஆகஸ்ட் 01 

4. மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு எதிராக நிகழாண்டு ஜூன் வரையில் எத்தனை லட்ச புகார்கள் வந்துள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 6.50 லட்சம்
ஆ) 9.81 லட்சம் 
இ) 3.99 லட்சம்
ஈ) 5.59 லட்சம் 

விடை : (ஈ) 5.59 லட்சம் 

5. 2020 - 2021 ஆம் ஆண்டில் அடிப்படையில் இந்தியாவில் உயரதிகாரிகளாகப் பெண்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் ? 

அ) மிஸோரம் 
ஆ) உத்தரகண்ட்
இ) ஆந்திர பிரதேசம்
ஈ) தமிழ்நாடு 

விடை : (அ) மிஸோரம் 

6. நாட்டின் சில்லறைப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் ----------- சதவீதமாக குறைந்துள்ளது ? 

அ) 17.37%
ஆ) 7.01%
இ) 8.10%
ஈ) 18.26%
விடை : (ஆ) 7.01%

7. இந்திய தொழிலக உற்பத்தி நிகழாண்டு மே மாதத்தில் ------- சதவீதம் என்ற அளவில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது ? 

அ) 18.26%
ஆ) 17.37%
இ) 19.6%
ஈ) 23.6%
விடை : (இ) 19.6%

II. விளையாட்டுச் செய்திகள்

8. ஃபின்லாந்தில் நடைபெற்ற முதியோருக்கான தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பக்வனி தேவி எத்தனை பதக்கங்கள் வென்றார் ? 

அ) 5
ஆ) 6
இ) 2
ஈ) 3 
விடை : (ஈ) 3 

9. சென்னையில் நடைபெற்ற 5 ஆவது இளையோர் தேசிய குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்துக்கு கிடைத்துள்ள பதக்கம் ? 

அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) ஏதுமில்லை 

விடை : (இ) வெண்கலம் 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...