Monday, July 11, 2022

Current Affairs 2022 - July 11 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                     GK SHANKAR 
                    JULY 11 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் எங்கு 2,000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன ? 

அ) சேலம்
ஆ) கோவை
இ) மதுரை
ஈ) புதுக்கோட்டை

விடை : (ஈ)புதுக்கோட்டை 

2. தமிழகத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் லிமிடெட் சார்ப்பில் கீழ்க்கண்ட எந்த திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது ? 

அ) டெக் பீ
ஆ) ஐ டெக்
இ) டெக் சி
ஈ) ஏதுமில்லை 

விடை : (அ) டெக் பீ

3. வேலூர் சிப்பாய் புரட்சியின் எத்தனையாவது ஆண்டு நினைவு தினம் அண்மையில் கடைபிடிக்கப்பட்டது ? 

அ) 175 ஆவது 
ஆ) 100 ஆவது
இ) 216 ஆவது
ஈ) 213 ஆவது 

விடை : (இ) 216 ஆவது 

II. தேசியச் செய்திகள் 

4. அண்மையில் இந்தியாவில் இருந்து எந்த நாட்டுக்கு 44,000 மெட்ரிக்டன் யூரியா அனுப்பிவைக்கப்பட்டது ? 

அ) ஆப்கானிஸ்தான் 
 ஆ) இலங்கை 
இ) தென்னாப்பிரிக்கா
ஈ) உக்ரைன் 

விடை : (ஆ) இலங்கை 

5. இந்தியாவில் முற்றிலும் உருவாக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்த் என்று இந்திய கடற்படையிடம் சேர்க்கப்படவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 15
ஆ) ஆகஸ்ட் 19
இ) ஆகஸ்ட் 20
ஈ) ஆகஸ்ட் 22

விடை : (ஈ) ஆகஸ்ட் 22

6. லடாக் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இந்திய வீரர்களுக்கு எந்த மொழி பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகள் இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது ? 

அ) சீன
ஆ) உருது
இ) பிரெஞ்ச்
ஈ) அனைத்தும் 

விடை : (அ)சீனா 

7. கடந்த 4 ஆண்டுகளில் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த எத்தனை இளைஞர்கள் , பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 1000
ஆ) 700
இ) 670
ஈ) 970

விடை : (ஆ) 700

III. விளையாட்டுச் செய்திகள் 

8. அமெரிக்காவில் நடைபெறும் வேர்ல்ட் கேம்ஸ் வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) ஏதுமில்லை 

விடை : (இ) வெண்கலம்

9. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்தெடுக : 

1) விம்பிள்டன் சாம்பியன்ஷிப் 2022, ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். 
2) இவருக்கு இது 9ஆவது பட்டமாகும். 

அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும் 
இ) 1 & 2 
ஈ) ஏதுமில்லை 

விடை : (அ) 1 மட்டும்

IV. முக்கிய தினங்கள் 

10. உலக மக்கள் தொகை தினம் ( World Population Day ) 2022 ? 

அ) ஜூலை 08
ஆ) ஜூலை 09
இ) ஜூலை 10
ஈ) ஜூலை 11

விடை : (ஈ) ஜூலை 11 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...