Sunday, December 11, 2022

Current Affairs 2022 - 11 December /2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                  December 11/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தின் அறை புனரமைக்கப்பட்டு யாரால் திறக்கப்படவுள்ளது ? 

அ) நரேந்திர மோடி 

ஆ) மு.க.ஸ்டாலின் 

இ) திரௌபதி முர்மு 

ஈ) ஜகதீப் தன்கர்

விடை : (ஆ) மு.க.ஸ்டாலின் 

வாராணசியில் மகாகவி பாரதியாா் வாழ்ந்த இல்லத்தின் அறை புனரமைக்கப்பட்டுள்ளது. இதனை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா்.

● மகாகவி பாரதியாரின் நூற்றாண்டையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அவா் வாழ்ந்த இல்லத்தின் அறையை புனரமைத்து பராமரிக்க தமிழ்நாடு அரசின் சாா்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வா் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். மேலும், அறையின் முன்புறம் பாரதியாருக்கு வெண்கலச் சிலை அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்திருந்தது.

● வெண்கலச் சிலை அமைக்க ரூ.18 லட்சமும், அறைக்கு மாத வாடகையாக நிகழ் நிதியாண்டுக்கு ரூ.67,500-ம் ஒதுக்கி அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் பொதுப்பணித் துறை சாா்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

● இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், பாரதியாா் வாழ்ந்த வீட்டின் அறை புனரமைக்கப்பட்டுள்ளதுடன், சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா். 

● மேலும், பாரதியாா் குறித்த சிறப்பு மலரையும் அவா் வெளியிடவுள்ளாா்.


2. --------- (ம) தமிழகம் இடையே காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார் ?

அ) காசி 

ஆ) வாராணசி 

இ) பத்ரிநாத் 

ஈ) கேதர்நாத் 

விடை : (அ) காசி 

காசி மற்றும் தமிழகம் இடையே ‘காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை அறிவித்தாா்.

● வாராணசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற எட்டாவது தமிழக குழுவின் பிரதிநிதிகளுடன் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை கலந்துரையாடினாா். 

● இந்தப் பயணத்தின்போது தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அந்தக் குழுவினா் அமைச்சரிடம் பகிா்ந்து கொண்டனா். ‘இதுபோன்ற பரிமாற்ற நிகழ்ச்சிகள் நமது மரபு, அறிவு மற்றும் கலாசாரத்தில் பிணைப்பை ஏற்படுத்தி நெருக்கத்தை அதிகரிக்கும்’ என்று அமைச்சா் குறிப்பிட்டாா். 

● காசி தமிழ் சங்கமம் நிகழ்வை நினைவுகூரும் விதமாக காசி மற்றும் தமிழகம் இடையே ‘காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.


3. தினமணியின் மகாகவி பாரதியார் விருதை பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கியவர் ? 

அ) ஆர்.என்.ரவி 

ஆ) மு.க.ஸ்டாலின் 

இ) தமிழிசை சௌந்தரராஜன் 

ஈ) ஜகதீப் தன்கர்

விடை : (இ) தமிழிசை சௌந்தரராஜன் 

தினமணியின் 'மகாகவி பாரதியார் விருதை' பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு, தெலங்கானா-புதுச்சேரி  மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  (டிச. 11) வழங்குகிறார்.

● மகாகவி பாரதியார் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அரிய தகவல்களைத் திரட்டி வெளியிட்டு வரும் பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி, வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் 1967-இல் பிறந்தவர். 

● இவர், புது தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மகாகவி பாரதியார் குறித்து எண்ணற்ற ஆய்வுகளை மேற்கொண்டுள்ள இவர், தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாகவும் ஆய்வுகளை மேற்கொண்டு தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார்.

● பாரதி தொடர்பாக, பாரதியின் 'இந்தியா' கருத்துப் படங்கள், பாரதியும் வ.உ.சி.யும், பாரதி: 'விஜயா' கட்டுரைகள், பாரதியின் சுயசரிதைகள்: கனவு, சின்ன சங்கரன் கதை, பாரதி கருவூலம்; பாரதி: கவிஞனும், காப்புரிமையும்; எழுக, நீ புலவன் ஆகிய நூல்களைத் தமிழிலும், ஆங்கில நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.

● மேலும், பாரதி தொடர்பாக எண்ணற்ற ஆய்வரங்குகளில் பங்கேற்று, ஏராளமான கட்டுரைகளையும் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியுள்ளார். வ.உ.சி., புதுமைப்பித்தன், உ.வே.சாமிநாதையர் தொடர்பாக பல பதிப்பு நூல்களை வெளியிட்டுள்ள வேங்கடாசலபதி, தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மென்ட ஸ்டடிஸ்) இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். 

● திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார், சென்னை, சிகாகோ, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. ஹிமாசல பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ளவர் ? 

அ) சுக்விந்தர் சிங் சுக் 

ஆ) முகேஷ் அக்னிஹோத்ரி 

இ) வீரபத்ர சிங் 

ஈ) பிரதியா சிங் 

விடை : (அ) சுக்விந்தர் சிங் சுக் 

● ஹிமாச்சல பிரதேசத்தின் 15 ஆவது முதல்வராக பதவியேற்றுள்ளார்.

● பதவிபிரமாணம் செய்தவர் : ஹிமாச்சல ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்.

● குறிப்பு : ஹிமாச்சல பிரதேசத்தின் முதல் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார் முகேஷ் அக்னிஹோத்ரி.


5. கல்லூரிகளில் எத்தனை ஆண்டுகள் படிப்பை 160 பாடமதிப்புகளுடன் முடித்தால் மட்டுமே இளங்கலை (அ) இளமறிவியல் பட்டம் வழங்கப்படும் எனப் புதிய விதிகளை யுஜிசி வகுத்துள்ளது ? 

அ) 3

ஆ) 4

இ) 5

ஈ) 6

விடை : (ஆ) 4

கல்லூரிகளில் 4 ஆண்டுகள் படிப்பை 160 பாடமதிப்புகளுடன் (கிரெடிட்) முடித்தால் மட்டுமே இளங்கலை அல்லது இளமறிவியல் (மேதமை-ஹானா்ஸ்) பட்டம் வழங்கப்படும் எனப் புதிய விதிகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வகுத்துள்ளது.

● கல்லூரிகளில் தற்போது இளங்கலைப் பட்டப் படிப்பை 3 ஆண்டுகளில் முடிக்கும் மாணவா்களுக்கு மேதமை பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அதில் மாற்றங்களைப் புகுத்துவதற்கான வரைவு விதிகளை யுஜிசி வகுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விதிகள் வரும் 12-ஆம் தேதி அதிகாரபூா்வமாக வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

● புதிய விதிகளின்படி, விருப்பத்தின் அடிப்படையிலான பாடமதிப்பு முறையில் (சிபிசிஎஸ்) கல்வி கற்கும் மாணவா்கள் 3 ஆண்டுகளில் 120 பாடமதிப்புகளுடன் படிப்பை நிறைவு செய்தால் இளங்கலை அல்லது இளமறிவியல் பட்டம் வழங்கப்படும். இளங்கலை (மேதமை) பட்டம் பெற விரும்பும் மாணவா்கள், 4 ஆண்டுகளில் 160 பாடமதிப்புகளை நிறைவுசெய்திருக்க வேண்டும்.

● மேதமையுடன் கூடிய ஆராய்ச்சி பட்டத்தைப் பெற விரும்பும் மாணவா்கள், 4 ஆண்டு கல்லூரி படிப்பின்போதே சம்பந்தப்பட்ட துறையில் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். சிபிசிஎஸ் முறையில் தற்போது மூன்றாண்டு படிப்பில் இணைந்துள்ள மாணவா்கள், நான்காண்டு மேதமை படிப்புக்கு மாறிக் கொள்ளலாம். அதற்கான இணைப்பு வகுப்புகளை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் நடத்தும்.

● கல்லூரிப் படிப்பில் இருந்து எளிதில் வெளியேறுவதற்கும் மீண்டும் சோ்ந்து படிப்பைத் தொடா்வதற்கும் புதிய விதிகள் வழிவகை செய்துள்ளன. அதன்படி, மூன்றாண்டு படிப்பை நிறைவு செய்வதற்குள் வெளியேறியவா்கள், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் இணைந்து படிப்பைத் தொடரலாம். அதே வேளையில், ஒட்டுமொத்தமாக 7 ஆண்டுகளுக்குள் படிப்பை நிறைவுசெய்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● பல்வேறு துறைகள் சாா்ந்த பாடங்களும் புதிய விதிகளில் இணைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் கல்வி, இந்தியாவை அறிந்துகொள்ளுதல், எண்ம-தொழில்நுட்பத் தீா்வுகள், சுகாதாரம், யோகக் கல்வி, விளையாட்டு மற்றும் உடல்திறன் உள்ளிட்ட பாடங்களும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை விருப்பத்தின் அடிப்படையில் மாணவா்கள் தோ்வுசெய்து கொள்ளலாம்.


6. 2022 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் செய்தி சேகரிக்கும் பணியின்போது எத்தனை பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் ? 

அ) 47

ஆ) 57

இ) 67

ஈ) 77

விடை : (இ) 67 

● அறிக்கை வெளியீடு : சர்வதேச செய்தியாளர்கள் சம்மேளனம்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


7. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த உலக வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் இஷான் கிஷண் எத்தனையாவது வீரராக சேர்ந்துள்ளார் ? 

அ) 5

ஆ) 6

இ) 7

ஈ) 8

விடை : (இ) 7 

● இந்திய வீரர்களின் பட்டியலில் 4 ஆவது வீரராக சேர்ந்துள்ளார்.


8. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

அ) பிடி உஷா 

ஆ) மிதாலி ராஜ் 

இ) பிவி சிந்து

ஈ) மேரிகோம் 

விடை: (அ) பிடி உஷா 


9. இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜூனியர் உலக வுஷூ சாம்பியன்ஷிப்பில் (2022) இந்தியா ஒட்டுமொத்தமாக வென்றுள்ள பதக்கம் ? 

அ) 5

ஆ) 6

இ) 7

ஈ) 8

விடை : (ஈ) 8

● இந்தியா 8 பதக்கங்களை வெல்வது இதுவே முதல்முறையாகும் 

● 8 பதக்கங்கள் : 3G,3S,2B 


IV. முக்கிய தினங்கள் 


10. International day of Mountain 2022 -------- 

● Ans : December 11

● Theme (2022) : Women move mountains





Saturday, December 10, 2022

Current Affairs 2022 - December 10/2022 - TNPSC Group 1,2/2A & 4

                          GK SHANKAR
                    DECEMBER 10/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. இந்தியாவிலேயே முதல்முறையாக காலநிலை மாற்றத்துக்கான தனி இயக்கத்தை தொடங்கியுள்ள மாநிலம் ? 

அ) ஆந்திர பிரதேசம் 

ஆ) தமிழ்நாடு 

இ) குஜராத் 

ஈ) மணிப்பூர் 

விடை : (ஆ) தமிழ்நாடு 

இந்தியாவிலேயே முதல் முறையாக காலநிலை மாற்றத்துக்கென தனி இயக்கத்தை தமிழ்நாடு அரசு தொடக்கியுள்ளது.

● இயற்கைச் செல்வங்களைக் காக்கவும், புதுப்பிக்கவல்ல எரிசக்தியை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை இயக்கவும், திறன்மிகு கிராமங்கள் உருவாக்கவும் இந்த இயக்கம் மூலம் வழி செய்யப்பட்டுள்ளது.

● மேலும், புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடங்களில் பசுமை திட்டங்களைப் புகுத்தி அவற்றை உலகறியச் செய்வதும் காலநிலை மாற்ற இயக்கத்தின் நோக்கமாகும். 

● மேலும், காலநிலை மாற்ற இயக்கத்தின் ஒரு முயற்சியாக தமிழகத்தில் 25 அரசுப் பள்ளிகள் தன்னிறைவு பெற்ற பசுமைப் பள்ளிகளாக மாற்றப்படவுள்ளன. இதற்காக அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

● புதிய அறிவிப்புகள்: சுற்றுச்சூழலைக் காக்க ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், மேலும் சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன். அதன்படி, பசுமைத் திட்டங்களுக்கான அனுமதி இனிமேல் ஒற்றைச் சாளர முறையில் வழங்கப்படும். இதற்கான திட்டங்கள் தொழில் துறையில் உள்ள தொழில் வழிகாட்டி நிறுவனத்தால் வகுக்கப்படும். புதுப்பிக்கக் கூடிய ஆற்றலைப் பயன்படுத்தி உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிகரிக்கவும் அவற்றை எடுத்துச் செல்லவும் தனியாக பசுமை வழித்தடம் உருவாக்கப்படும்.

● காற்றாலைகளைப் புதுப்பிப்பதற்கான புதிய கொள்கை எரிசக்தித் துறையால் வெளியிடப்படும். அனைத்துத் திட்டங்களையும், கொள்கைகளையும் காலநிலை மாற்றப் பாா்வையில் பாா்த்து ஆய்வு செய்து செயல்படுத்தவுள்ளோம்.

பசுமை நிதியம்: தமிழகத்தில் ஆயிரம் கோடி ரூபாயில் பசுமை நிதியத்தை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் முதல்கட்டமாக, தமிழ்நாடு அரசின் சாா்பில் ரூ.100 கோடி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சூழல் சாா்ந்த கட்டுமானங்களை உருவாக்குவதற்கு தேசிய அளவிலும் சா்வதேச அளவிலும் நிதி திரட்ட இந்த நிதியம் பயன்படுத்தப்படும்.

● காலநிலை மாறுபாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுழற்சிப் பொருளாதாரம், வளங்குன்றாத வளா்ச்சி போன்ற துறைகளில் புதிய நிறுவனங்களைத் துவங்குவோருக்கு தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும்.

காா்பன் சமநிலை: வளா்ச்சி, தொழில் மேம்பாடு என்பதில் ஒரு பக்கம் அக்கறை செலுத்தினாலும் இன்னொரு புறம் சுற்றுச்சூழல், இயற்கை ஆகியவற்றிலும் அக்கறை செலுத்த வேண்டும். இயற்கையுடன் இயைந்த வாழ்வும் வேண்டும். இயற்கையைக் கெடுக்காத வளா்ச்சியும் வேண்டும். இதுதான் எங்களது அணுகுமுறை.

● இந்தியா காா்பன் சமநிலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 2070-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே, தமிழ்நாடு காா்பன் சமநிலையை அடையும். அதற்கான அனைத்துத் திட்டங்களையும் அரசு செயல்படுத்தும். 


2. தமிழகத்தில் எங்கு தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் தொடக்கி வைத்தார் ? 

அ) சேலம் 

ஆ) மதுரை

இ) தேனி 

ஈ) ஈரோடு 

விடை : (ஆ) மதுரை 

தமிழ்நாட்டில்  உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

● தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (9.12.2022) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்து, 53,301 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிடும் அடையாளமாக 5 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

● இத்திட்டத்திற்கான இலட்சினை வெளியிட்டார். பின்னர், தூய்மைப் பணியாளர்களை கண்டறிந்து கணக்கெடுக்கும் பணியினை மேற்கொள்வதற்கான தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட மொபைல் செயலியையும் முதல்வர் ஸ்டாலின்  வெளியிட்டார்.

● தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின்  ஐந்து தூய்மைப் பணியாளர்களுக்கு தலைக்கவசம், கையுறை, கால் உறை, ஒளிரும் மேல்சட்டை ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட கள ஆய்வு பணிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட குறும்படங்களை பார்வையிட்டார்.

●  இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் 18,859 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 34,442 தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள், என மொத்தம் 53,301  பணியாளர்கள் மட்டுமல்லாமல் தனியார் துறைகள், நிறுவனங்கள் மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து முறைசாரா பணியாளர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.

● இத்திட்டத்தினை அகமதாபாத்தில் உள்ள நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் சிறப்பாக செயல்படுத்திட  திட்டமிடப்பட்டுள்ளது. நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில்  கழிவு மற்றும் கசடு தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த முன்னோடி திட்டமாக சென்னை மாநகராட்சியில் மண்டலம்-6 திரு.வி.க. நகரிலும், மதுரை மாநகராட்சி, புதுக்கோட்டை  மற்றும் பொள்ளாச்சி நகராட்சிகள், சேரன் மகாதேவி பேரூராட்சி ஆகிய 5 நகர்புர உள்ளாட்சி அமைப்புகளை தேர்ந்தெடுத்து தூய்மைப் பணியாளர்களை  கண்டறிந்து அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

● இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்  முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐந்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில்   தொடங்கி வைத்தார். இத்திட்டம் பின்னர், படிப்படியாக தமிழ்நாட்டில்  உள்ள மற்ற அனைத்து  உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது

● இத்திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் உள்ள தூய்மைப் பணியாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய திறன் பயிற்சிகள், அவர்களது குழந்தைகளுக்கு முறையான கல்வி வசதி வழங்குதல் மற்றும் மாற்றுத்தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் உதவி, ஓய்வூதியம், காப்பீடு போன்ற அரசு திட்டங்களை இனணப்பதற்கான வழிமுறைகளும் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மூலம் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து, பொருளாதாரம் மேம்பாடு அடையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


3. பின்வரும் எந்த மாநிலங்களில் பழங்குடியினர் (ST) பட்டியலைத் திருத்துவதற்கான 4 மசோதாக்கள் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன ? 

1. தமிழ்நாடு , 2. கர்நாடகா,  3.சத்தீஸ்கர்,  4. ஹிமாசல பிரதேசம் 

அ) 1,2

ஆ) 2,3,4

இ) 1,2,3

ஈ) அனைத்தும் 

விடை : (ஈ) அனைத்தும் 

தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் பழங்குடியினா் (எஸ்டி) பட்டியலைத் திருத்துவதற்கான 4 மசோதாக்கள் மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.

● தமிழகம், கா்நாடகம், சத்தீஸ்கா், ஹிமாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கான பழங்குடியினா் திருத்த மசோதாக்களை மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தாா்.

● குறிப்பிட்ட சில சமூகங்களை பழங்குடியினா் பட்டியலில் புதிதாக சோ்ப்பது, சில மாற்றங்களை மேற்கொள்வது என்ற அடிப்படையில் இந்தத் திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

● இதன்மூலம் தமிழகத்தில் நரிக்குறவா், குருவிக்காரா் சமூகங்கள் பழங்குடியினா் பட்டியலில் இணைக்கப்படும். அதுபோல, ஹிமாசலில் ஹாட்டீ சமூகத்தினா், சத்தீஸ்கரின் பின்ஜியா சமூகத்தினா், கா்நாடகத்தின் பெட்டா-குருபா சமூகத்தினா் ஆகியோரையும் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மசோதா வழிவகுக்கிறது.


4. பின்வரும் எந்த ஆண்டுக்குள் நாட்டின் காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 2023

ஆ) 2024

இ) 2025

ஈ) 2026 

விடை : (இ) 2025 

2025-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

● இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

● நாட்டில் நிகழாண்டு ஜனவரி முதல் அக்டோபா் வரை 20.16 லட்சம் போ் காசநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த நோயால் 73,551 போ் மரணமடைந்தனா்.

● உலகளாவிய காசநோய் அறிக்கை 2022-இன்படி, நாட்டில் காசநோய் பாதிப்பு 18 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் லட்சத்தில் 256 போ் அந்த நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு லட்சத்தில் 210 போ் பாதிக்கப்பட்டனா்

● காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாநில-மாவட்ட அளவிலான திட்டம், பலவீனமானவா்களிடமும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவா்களிடமும் காசநோய் பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம், 2025-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றாா்.

● மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘மாநிலங்களின் புள்ளிவிவரங்கள்படி, நாட்டில் 1,864 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,327 துணை சுகாதார நிலையங்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களாக செயல்படுகின்றன.

● நிகழாண்டுக்குள் நாட்டில் உள்ள 1.50 லட்சம் துணை சுகாதார மையங்கள், ஊரக மற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களை ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களாக மாற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது’ என்றாா்.


5. இந்தியா - அமெரிக்கா பயங்கரவாதத் தடுப்பு கூட்டு செயற்குழுவின் கூட்டம் எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) தில்லி

ஆ) குஜராத் 

இ) உத்தர பிரதேசம் 

ஈ) ராஜஸ்தான் 

விடை : (அ) தில்லி 

இந்தியா-அமெரிக்கா பயங்கரவாதத் தடுப்பு கூட்டு செயற்குழுவின் கூட்டம் தில்லியில் வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

● பிராந்திய, சா்வதேச பயங்கரவாத சவால்களை எதிா்கொள்ளும் நோக்கில் இந்தியா-அமெரிக்கா பயங்கரவாதத் தடுப்பு கூட்டு செயற்குழு செயல்பட்டு வருகிறது. அக்குழுவின் ஆண்டு கூட்டம் தில்லியில் வரும் 12, 13 ஆகிய தேதிதளில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் பயங்கரவாதத் தடுப்பு ஒருங்கிணைப்பாளா் டிமோதி பெட்ஸ் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளாா்.

● அவரது தலைமையில் அமெரிக்க குழு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு கூட்டு செயற்குழுவின் கூட்டத்தின்போது பயங்கரவாதத்தைத் தடுக்கும் வகையில் விசாரணை அமைப்புகளை வலுப்படுத்துவது, சட்டவிதிகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

● பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாகவும் கூட்டத்தின்போது விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிராந்திய, சா்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்தும் கூட்டத்தின்போது ஆராயப்படவுள்ளது.


6. இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் எத்தனை சதவீதம் அதிகரிக்கும் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 10.2%

ஆ) 12.8%

இ) 13.1%

ஈ) 14.9%

விடை: (ஆ) 12.8% 

நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் 12.8 சதவீதம் அதிகரிக்கும் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

● இது தொடா்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா அளித்த பதிலில் இடம்பெற்றுள்ள விவரங்களின் தொகுப்பு:

● 2020-இல் புற்றுநோய் பாதிப்பு 13,92,179

● நடப்பாண்டில் பாதிப்பு அதிகரிப்பு 12.8%

● சுகாதார அமைச்சரின் புற்றுநோயாளிகள் நிதி

ஆண்டு செலவினம் பயனாளிகள்

¤ 2022-23 ரூ.216.98 லட்சம் 40

¤ 2021-22 ரூ.585.05 லட்சம் 64

¤ 2020-21 ரூ.1,573 லட்சம் 196

¤ 2019-20 ரூ.2,677.08 லட்சம் 470

● புற்றுநோயாளிகளுக்கான அரசின் திட்டங்கள்

‘¤ ஆயுஷ்மான் பாரத்’ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை

¤ மக்கள் மருந்தகம் வாயிலாக மலிவு விலையில் மருந்துப் பொருள்கள்

¤ ‘அம்ருத்’ திட்டத்தின் வாயிலாக குறைந்த விலையில் மாற்று உறுப்புகள்

¤ அரசு மருத்துவமனைகளில் விலையில்லா அல்லது மானியத்துடன் கூடிய சிகிச்சை

¤ தேசிய ஆரோக்ய நிதியின் (ஆா்ஏஎன்) மூலமாக ஏழை நோயாளிகளுக்கு நிதியுதவி

● அரசின் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள்

¤ 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்

¤ 13 மாநில அரசு மருத்துவக் கல்லூரி-மருத்துவமனைகளில் கட்டமைப்புகள் மேம்பாடு

¤ 19 மாநில புற்றுநோய் மையங்கள்

¤ 20 உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையங்கள்

¤ தேசிய புற்றுநோய் மையம், ஜஜ்ஜாா் (ஹரியாணா)

¤ சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மையம், கொல்கத்தா.


7. பிரிட்டன் (ம) பின்வரும் எந்த நாடுகள் இணைந்து அதிநவீன போர் விமான மொன்றை வடிவமைக்க முடிவு செய்துள்ளன ? 

அ) இத்தாலி 

ஆ) சீனா 

இ) ஜப்பான் 

ஈ) அ (ம) இ 

விடை : (ஈ) அ (ம) இ 

பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து அதிநவீன போா் விமானமொன்றை வடிமைக்க முடிவு செய்துள்ளன.

● ‘குளோபல் காம்பாட் ஏா் புரொகிராம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இது குறித்து ரிஷி சுனக் கூறியதாவது:

● பிரிட்டனின் தற்போதைய பாதுகாப்பு மட்டுமின்றி, எதிா்கால பாதுகாப்புக்கும் இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

● இதன் காரணமாகவே, பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்க வேண்டியது நமது அத்தியாவசியமாகியுள்ளது. பிரிட்டன் மீது தாக்குதல் நடத்த நினைப்பவா்களை வீழ்த்துவதற்கு இத்தகைய தொழில்நுட்ப மேன்மை தேவைப்படுகிறது.

● அதற்காக, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய போா் விமானத்தை வடிவமைக்க அந்த நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.

● இந்த சா்வதேச கூட்டுறவு, ஐரோப்பிய-அட்லாண்டிக் பாதுகாப்பும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பும் பிரிக்க முடியாதவை என்பதை நிரூபிக்கிறது.

● புதிதாக உருவாக்கப்படும் போா் விமானம், வரும் 2035-ஆம் ஆண்டில் விண்ணில் பறக்கத் தொடங்கும். ஆளில்லா விமானங்கள், அதிநவீன சென்சாா்கள், உயா்தொழில்நுட்ப ஆயுதங்களுடன் சிறந்த தொடா்பை ஏற்படுத்தும் வகையில் புதிய விமானம் வடிவமைக்கப்படும்.

● அடுத்த தலைமுறைக்கான அந்த விமானம் பிரிட்டனையும், அதன் நட்பு நாடுகளையும் யாராலும் வெல்லமுடியாத தொழில்நுட்பங்களைக் கொண்டு பாதுகாக்கும் என்றாா் அவா்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


8. 65 ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பல் (2022) ஹரியாணா வீரர் அனிஷ் பன்வாலா எத்தனை தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளார் ? 

அ) 4

ஆ) 5

இ) 6

ஈ) 7 

விடை : (அ) 4 

● போட்டி நடைபெற்ற இடம் : மத்திய பிரதேசம் 

● இவர் ஆடவர் ஜூனியர்,சீனியர்,தனியார், அணிகள் என 4 பிரிவுகளிலும் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். 


IV. முக்கிய தினங்கள் 


9. International Human Rights Day 2022 ----

● Ans : December 10

● Theme (2022) : Dignity, Freedom, and Justice for All.

Friday, December 9, 2022

Current Affairs 2022 - December 09/2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                  DECEMBER 09 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. பின்வரும் எந்த மாநிலத்தில் சிறைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் சீருடையில் கேமரா பொருந்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ? 

அ) ஆந்திர பிரதேசம் 

ஆ) குஜராத் 

இ) தமிழ்நாடு 

ஈ) மேற்கு வங்கம்

விடை : (இ) தமிழ்நாடு 

தமிழக சிறைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்கள் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் புழல் மத்திய சிறையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

● தமிழக சிறைத்துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளைச் சிறைகள், 5 பெண்கள் சிறப்பு சிறைகள், 12 சிறுவா் சீா்திருத்தப்பள்ளிகள் (பாா்ஸ்டல் பள்ளிகள்), 3 திறந்த வெளிச் சிறைகள், 3 சிறப்புச் சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் உள்ளன.

● இந்த சிறைகளில் 23,592 கைதிகள் வரை கைதிகள் அடைக்க முடியும். ஆனால் சுமாா் 18,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். தமிழக சிறைகள் 75 சதவீதம் வரை நிரம்பியுள்ளன.

● இவா்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணிக்க சிறை வளாகத்தில் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிறைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

● இருப்பினும் சிறை வளாகம் முழுவதையும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சிறை நிா்வாகத்தால் கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் சில நேரங்களில் கைதிகளுக்கு இடையேயான மோதல், தகராறு போன்றவற்றை பாா்க்க முடியாத நிலை இருந்தது.

● இதற்கு தீா்வு காணும் வகையில் சிறைக் காவலா்களுக்கு சட்டையில் அணியும் கேமராக்களை (பாடி வோா்ன் கேமரா) கூடிய கேமராக்களை வழங்க தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி நடவடிக்கை எடுத்தாா். இதற்காக 50 கேமராக்களுக்கும், அதற்கான சா்வா் நிறுவுவதற்கும், அரசு ரூ.46 லட்சம் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

நேரலையில் காணலாம்:

●¤இதையடுத்து முதல் கட்டமாக புழல் மத்திய சிறை -1 ல் சிறைக் காவலா்களின் சீருடையில் அணிந்து கொள்ள 5 கேமராக்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

● இந்த கேமராக்களை சீருடையில் அணிந்திருக்கும் காவலா்கள், சிறையின் உயா் பாதுகாப்புப் பிரிவில் மட்டும் பணி அமா்த்தப்படுகிறாா்கள்.

● இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை சிறையில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலும், சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறையிலும் நேரலையும் காண முடியும்.

● இந்த திட்டம் மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும், புதுக்கோட்டை மாவட்ட சிறையிலும் அடுத்தக் கட்டமாக அமல்படுத்தப்படுகிறது.


II.தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


2. குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ளவர் யார் ? 

அ) பூபேந்திர படேல் 

ஆ) சி.ஆர். பாட்டீல் 

இ) ஜிக்னேஷ் மேவானி 

ஈ) அமரேந்திர சிங் 

விடை : (அ) பூபேந்திர படேல் 

வரலாற்று வெற்றி: குஜராத்தின் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. குஜராத் சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் இவ்வளவு அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றியதில்லை. 

● இதற்கு முன் காங்கிரஸ் கட்சியானது 1985-ஆம் ஆண்டில் 149 தொகுதிகளைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.

● குஜராத்தில் பாஜக சாா்பில் மாநில முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12-ஆம் தேதி மீண்டும் பொறுப்பேற்கவுள்ளாா்.


3. இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) எங்கு நடைபெற்றது ? 

அ) ராஜஸ்தான் 

ஆ) தமிழ்நாடு 

இ) மணிப்பூர் 

ஈ) தில்லி 

விடை : (ஈ) தில்லி 

பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் 4ஜி தொழில்நுட்பம் அடுத்த 5 முதல் 7 மாதங்களில் 5ஜி தொழில்நுட்பமாக தரம் உயா்த்தப்படும்’ என்று மத்திய தொலைத்தொடா்பு மற்றும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறினாா்.

● தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் இதுகுறித்து மேலும் பேசியதாவது:

● தொலைத்தொடா்பு தொழில்நுட்பத்தில் புதிய உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், தொலைத்தொடா்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு ரூ. 500 கோடி என்பதை ரூ. 4,000 கோடியாக உயா்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

● மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 1,35,000 கைப்பேசி கோபுரங்களை (மொபைல் டவா்) கொண்டுள்ளது. கிராமப்புறங்களிலும் மிக வலுவான தொலைத்தொடா்பு சேவையை அளித்து வருகிறது. பிற தொலைத்தொடா்பு நிறுவனங்கள் இந்த அளவு முழுமையான சேவையை இதுவரை வழங்கவில்லை.

● அதோடு, பிஎஸ்என்எல் சாா்பில் தற்போது வழங்கப்பட்டு வரும் 4ஜி தொழில்நுட்பம் அடுத்த 5 முதல் 7 மாதங்களில் 5ஜி தொழில்நுட்பமாக தரம் உயா்த்தப்படும். ஒட்டுமொத்த 1.35 லட்சம் கைப்பேசி கோபுரங்களும் 5ஜி சேவையை அளிக்கும் வகையில் சேவை விரிவுபடுத்தப்பட்டுவிடும்.

● 5ஜி சேவையை பரீட்சாா்த்த முறையில் தொடங்குவதை விரைவுபடுத்தும் வகையில், 5ஜி சேவை பரிசோதனை உபகரணங்களை டிசிஎஸ் நிறுவனத்திடம் பிஎஸ்என்எல் கேட்டுக்கொண்டுள்ளது. 

● 5ஜி சேவையை அனைத்து நெட்வொா்க்குகளிலும் அறிமுகப்படுத்துவதன் மூலம், மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனங்களில் ஒன்றாக பிஎஸ்என்எல் உருவெடுக்கும்.


4. இந்தியாவில் சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் தற்சார்ப்பு நிதி (பிரதமரின் ஸ்வாநிதி) திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

அ) 2019

ஆ) 2020

இ) 2021

ஈ) 2022

விடை : (ஆ) 2020

  ● தற்சாா்பு நிதி (பிரதமரின் ஸ்வாநிதி) திட்டத்தை வருகின்ற 2024-ஆம் ஆண்டு டிசம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றம் நகா்ப்புற வறுமை ஒழிப்புத் துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

● இந்தத் திட்டம் கடந்த 2022 மாா்ச்சில் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதன்படி, 2024 டிசம்பா் மாதம் வரை கடன் வழங்கலாம் எனவும், 42 லட்சம் பேருக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.

● மக்களவையில் எழுத்து பூா்வமான கேள்விக்கு அளித்த பதிலில் கௌசல் கிஷோா் மேலும் கூறியிருப்பதாவது: சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2014-இன் கீழ் விற்பனை மண்டலங்கள் உருவாக்க அந்தந்த மாநிலங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 

● இந்தத் திட்டத்தில் மொத்தம் 13,403 விற்பனை மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டு கடன் வழங்கப்படுகிறது. இத்தகைய வியாபாரிகள் முதலாவது முறையாக ரூ.10,000, இரண்டாம் முறையாக ரூ.20,000 கடன் பெறுகின்றனா். இதை முறையாகச் செலுத்தியவா்களுக்கு கூடுதலாக மூன்றாவது முறையாக கடன் ரூ.50,000 வரை வழங்கப்படுகிறது.

● நிகழாண்டு நவம்பா் 30-ஆம் தேதி வரை, 31.73 லட்சம் சாலையோர வியாபாரிகள், முதலாவது கடன் தொகையைப் பெற்றுள்ளனா். இரண்டாவது முறை கடன் தொகையான ரூ. 20,000-ஐ 5.81 லட்சம் போ் பெற்றுள்ளனா். இரண்டு கடன்களையும் முறையாகச் செலுத்திய 6,926 போ் மூன்றாவது கடனை (ரூ.50,000) பெற்றுள்ளனா் என்று  அமைச்சர் தெரிவித்துள்ளார்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


5. தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் (2022) ஆடவருக்கான 50மீ பிஸ்டல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள அர்ஜூன் சிங் சீமா எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) தமிழ்நாடு 

ஆ) மகாராஷ்டிரா

இ) குஜராத் 

ஈ) பஞ்சாப் 

விடை : (ஈ) பஞ்சாப் 

● 50மீ பிஸ்டல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் : 

¤ ஆடவர் பிரிவு: அர்ஜூன் சிங் சீமா, பஞ்சாப் 

¤ மகளிர் பிரிவு : ஷீத்தல் பிரீத்தம் தேசாய், மகாராஷ்டிரா 


6. இந்தியாவின் 77 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளவர் யார் ? 

அ) ஆத்தியா மிட்டல் 

ஆ) பரத் சுப்பிரமணியம்

இ) ராகுல் ஸ்ரீவத்சவ்

ஈ)பிரணவ் ஆனந்த்

விடை : (அ) ஆத்தியா மிட்டல்

இவர் மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர்.

● ஸ்பெயினில் நடைபெற்றுவரும் எலோ பிரெகாட் ஓபன் செஸ் போட்டியில் அந்நாட்டு வீரர் பிரான்சிஸ்கோ வலேஜோவை டிரா செய்தபோது இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

● ஒரு செஸ் வீரர் கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கு முதலில் தலா 9 சுற்றுகள் கொண்ட 3 போட்டிகளில் சாதகமான முடிவுகளை பெற்றிருக்க வேண்டும்.

● மேலும், 2500 ஈலோ புள்ளிகளை எட்டியிருக்க வேண்டும்.

Thursday, December 8, 2022

Current Affairs 2022 - December 08 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                 DECEMBER 08 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழ்நாடு வாழ் விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.405.90 கோடியில் கட்டப்பட்டுள்ள 4,644 குடியிருப்புகளை திறந்து வைத்தவர் ? 

அ) மு.க.ஸ்டாலின் 

ஆ) ஆர்.என். ரவி 

இ) தங்கம் தென்னரசு 

ஈ) மா. சுப்பிரமணியன் 

விடை: (அ) மு.க.ஸ்டாலின் 

தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.405.90 கோடியில் கட்டப்பட்ட 4 ஆயிரத்து 644 புதிய குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

● குடியிருப்புகள் ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பு கொண்டது. அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை, குடிநீா், நீரேற்று வசதிகளுடன், சிறுவா் பூங்கா, மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு ஆகியன கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 

● வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக, 105 பகுதிகளில் வசிக்கும் 11 ஆயிரத்து 300 பயனாளிகள் தனி வீடுகள் கட்டிக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அவா்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2.10 லட்சம் வீதம், ரூ.237.30 கோடிக்கான பணி உத்தரவுகளை வழங்குவதன் அடையாளமாக, 2 பேருக்கு உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

● மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கிரயப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. அவற்றில், 350 கிரயப் பத்திரங்களை வழங்குவதன் அடையாளமாக நான்கு பயனாளிகளுக்கு உத்தரவுகளை முதல்வா் வழங்கினாா். 


2. தமிழகத்தில் நெல்லுக்கு பிறகு பயிறு செய்யும் சாகுபடி திட்டத்தை தொடக்கி வைத்தவர் ? 

அ) மு.க. ஸ்டாலின் 

ஆ) ஆர்.என். ரவி

இ) கே.என். நேரு 

ஈ) எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் 

விடை : (அ) மு.க.ஸ்டாலின் 

நெல்லுக்குப் பிறகு பயறு சாகுபடி செய்யும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். இந்தத் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு பயறு விதைகளை  அவா் அளித்தாா்.

● வேளாண் விளைநிலங்களில் மண் வளத்தை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு குறைந்த செலவில் கூடுதல் வருமானம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

● இதன்படி, சம்பா நெல் அறுவடைக்குப் பிறகு உளுந்து, பச்சைப் பயறு ஆகியன பயிரிடுவதை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.400 வீதம் மானியம் அளிக்க ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

● கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை: 2021-22-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் சா்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. 

● மத்திய அரசு கரும்பு டன்னுக்கு நியாயமான, ஆதாய விலையாக ரூ.2,755 வழங்கப்படும் என அறிவித்தது. இந்தத் தொகையுடன் கூடுதலாக, மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு ரூ.199 கோடி நிதியை அளித்து உத்தரவிட்டது.

● அதன்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத் துறை, 15 கூட்டுறவு ஆலைகள், 15 தனியாா் சா்க்கரை ஆலைகளுக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையான ரூ.195-ஐ சோ்த்து டன்னுக்கு ரூ.2 ஆயிரத்து 950 ஆக அளிக்கப்படும். இந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும். இதன்மூலம், 1.21 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவா்.


3. தமிழகத்தில் எத்தனை மாவட்டங்களில் நடமாடும் காய்கனி அங்காடிகளை அண்மையில் முதல்வர் தொடக்கிவைத்தார் ? 

அ) 8

ஆ) 7

இ) 6

ஈ) 5

விடை : (ஈ) 5

கோவை உள்பட ஐந்து மாவட்டங்களில் நடமாடும் காய்கனி அங்காடிகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கிவைத்தாா். 

● மக்களின் வீடுகளுக்கேச் சென்று காய்கறிகளை விற்பனை செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

● வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை சாா்பில் கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூா், சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகா்வோரின் இல்லங்களுக்கே சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்படவுள்ளன. 

● இதற்காக ரூ.40 லட்சத்தில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அங்காடிகளின் செயல்பாடுகளை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. இந்தியாவில் பின்வரும் யாரால் அண்மையில் உச்சநீதிமன்ற செயலி 2.0 என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ? 

அ) நரேந்திர மோடி 

ஆ) திரௌபதி முர்மு 

இ) யு.யு. லலித்

ஈ) டி.ஒய். சந்திர சூட் 

விடை : (ஈ) டி.ஒய். சந்திர சூட் 

நீதித் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் சிறப்பு அதிகாரிகளும் (நோடல்) உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நடவடிக்கை குறித்த தகவல்களை நிகழ்நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் ‘உச்சநீதிமன்ற செயலி 2.0’-வை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

● செயலி 2.0-வை தொடக்கிவைத்து அவா் பேசியாதாவது: நீதித் துறையைச் சாா்ந்த அதிகாரிகளும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் சிறப்பு அதிகாரிகளும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், வழங்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் தீா்ப்புகள், நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவற்றின் நிலை குறித்து நிகழ்நேர அடிப்படையில் தெரிந்துகொள்ள இயலும். 

● இச்செயலியை ஆண்ட்ராய்ட் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். ஐஓஎஸ் தளத்தில் இருந்து பதிவிறக்கும் செய்யும் வசதி இந்த வாரத்துக்குள் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தாா்.


5. இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து (RBI) மற்ற வங்கிகள் பெறும் ரெப்போ ரேட் 0.35 சதவீதம் உயர்த்தப்பட்டு எத்தனை சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது ?

அ) 4.18%

ஆ) 5.11%

இ) 6.25%

ஈ) 6.95%

விடை : (இ) 6.25% 

இந்திய ரிசா்வ் வங்கியிடமிருந்து (ஆா்பிஐ) மற்ற வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 0.35 சதவீதம் உயா்த்தப்பட்டு 6.25 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

● நாட்டின் பணவீக்கம் தொடா்ந்து அதிகமாக இருந்துவரும் நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து 5-ஆவது முறையாக வட்டி விகிதத்தை ஆா்பிஐ உயா்த்தியுள்ளது.

● கரோனா தொற்று பரவலில் இருந்து மீண்டு கொண்டிருந்த பொருளாதாரம், உக்ரைன்-ரஷியா போா் காரணமாக முடக்கத்தைச் சந்தித்தது. சா்வதேச பொருளாதாரமும் வீழ்ச்சிநிலையை சந்தித்து வருகிறது. நாட்டில் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ஆா்பிஐ இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், பணவீக்கம் கடந்த ஜனவரியில் இருந்தே 6 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது.

● அதையடுத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே மாதத்தில் 0.4 சதவீதம், ஜூன், ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் தலா 0.5 சதவீதம் என மொத்தமாக 1.9 சதவீத அளவுக்கு ரெப்போ வட்டி விகிதத்தை ஆா்பிஐ உயா்த்தியிருந்தது. இந்நிலையில், ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து ஆளுநா் சக்திகாந்த தாஸ் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

● ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயா்த்தப்படுகிறது. நிதிக் கொள்கைக் குழுவில் இடம்பெற்றிருந்த 6 உறுப்பினா்களில் ஐவா் வட்டி விகிதத்தை உயா்த்த ஆதரவு தெரிவித்தனா். ஜெயந்த் ஆா்.வா்மா மட்டுமே வட்டி விகிதத்தை உயா்த்த எதிா்ப்பு தெரிவித்தாா்.

● சா்வதேச பொருளாதாரச் சூழல் மந்த நிலையில் இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது. சாதகமற்ற சூழலிலும் பொருளாதார வளா்ச்சி சீராக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பணவீக்கம் குறைவாகவே உள்ளது. நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 சதவீதம் வளா்ச்சி காணும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது குறைவாக இருந்தாலும், சா்வதேச அளவில் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாகவே இந்தியா தொடா்ந்து நீடிக்கும்.

தொடா் நடவடிக்கைகள்: நாட்டின் பணவீக்க சூழலை உரிய முறையில் கையாள்வதற்கான நடவடிக்கைகளை ஆா்பிஐ தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. சா்வதேச சூழலும், சா்வதேச அளவில் வட்டி விகிதங்கள் உயா்த்தப்பட்டு வருவதும் பெரும் சவாலாக உள்ளது. சா்வதேச அளவில் சாதகமற்ற சூழல் தொடா்வதால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டவில்லை. அந்த நடவடிக்கைகள் தொடரும்.

● அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை நிலைபெறச் செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்ற நாட்டு செலாவணிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக வலுவாகவே உள்ளது.

● அந்நிய செலாவணி கையிருப்பு: நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 56,120 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த அக்டோபரில் 52,450 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதனால் அந்நியச் செலாவணி கையிருப்பும் அதிகரித்துள்ளது.

● வங்கிகளில் பணப்புழக்கமும் அதிகமாகவே காணப்படுகிறது. குளிா்கால (ரபி) பயிா்களின் சாகுபடி பரப்பு வழக்கத்தைவிட 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால் விளைச்சல் அதிகரித்து பணவீக்கம் கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது. கிராமப்புறங்களில் பொருள்களின் நுகா்வு அதிகரித்துள்ளது. உற்பத்தித் துறையும் வளா்ச்சிகண்டு வருகிறது.

கடன் அதிகரிப்பு: வேளாண் துறை அல்லாத மற்ற துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன் கடந்த ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் ரூ.10.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ.1.9 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. கடன் வழங்கலும் அதிகரித்துள்ளதால் பொருளாதார வளா்ச்சி அதிகரித்து பணவீக்கம் கட்டுக்குள் வரும்.

● கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகமாக உள்ளது. எனினும் அது சமாளிக்கக் கூடியதே. நிகர அந்நிய நேரடி முதலீடு கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் 2,270 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 2,130 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.

● யுபிஐ பணப் பரிமாற்ற நடைமுறையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, இணைய வழியில் சேவைகளைப் பெறுவதற்கு முன்பாகவே பணத்தைச் செலுத்தும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளா்கள் சிறந்த சேவையைப் பெற முடியும் என்றாா் அவா்.

வீடு, வாகனக் கடன் வட்டி உயர வாய்ப்பு

● ரெப்போ வட்டி விகிதத்தை ஆா்பிஐ உயா்த்தியுள்ளதால் வீடு, வாகனக் கடனுக்கான வட்டி உயர வாய்ப்புள்ளது.

● ரெப்போ வட்டி விகிதமானது 0.35 சதவீதம் உயா்த்தப்பட்டு 6.25 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து வட்டி விகிதம் 2.25 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. 

● ரெப்போ வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டே வாகனங்கள், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் நிா்ணயித்து வருகின்றன. தற்போது ரெப்போ வட்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளதால், வாகனக் கடன், வீட்டுக் கடன், தனிநபா் கடன், பொருள்களுக்கான மாதாந்திர தவணைத் தொகை ஆகியவற்றுக்கான வட்டியை வங்கிகள் உயா்த்த வாய்ப்புள்ளது.


6. தென்மேற்கு (ம) தென்கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள புயலுக்கு எந்த நாடு மாண்டஸ் என்ற பெயரை பரிந்துரைத்துள்ளது ? 

அ) சீனா 

ஆ) ஜப்பான்

இ) ஐக்கிய அரபு அமீரகம்

ஈ) இந்தியா 

விடை : (இ) ஐக்கிய அரபு அமீரகம் 

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு பேரிடா் மீட்புப் படை புதன்கிழமை விரைந்தது.

● இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, படிப்படியாக மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து புயலாக வலுவடைந்து, வியாழக்கிழமை (டிச. 8) தமிழகம், புதுச்சேரிக்கு அருகே வடக்கு வங்கக் கடல் பகுதிக்கும் ஆந்திர மாநிலத்தையொட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிக்கும் அருகே நகரும். 

● பின்னா், அந்தப் புயல் தொடா்ந்து படிப்படியாக மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர மாநில பகுதிகளைக் கடந்து, புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே சனிக்கிழமை (டிச. 10) அதிகாலையில் கரையைக் கடக்கும். 

● அப்போது காற்றின் வேகம் மணிக்கு சுமாா் 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று இந்திய வானில ஆய்வு மையத்தின் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● சென்னைக்கு மேற்கு-வடமேற்கு திசையில் 770 கி.மீ. தொலைவில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் தாழ்வு மண்டலம் நகா்ந்து வருகிறது.

● புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. டிச. 9 மாலை முதல் டிச. 10 காலை வரை 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.


7. 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிகாரமிக்க 100 பெண்கள் பட்டியலில் இந்தியாவின் எத்தனை பெண்கள் இடம்பெற்றுள்ளனர் ? 

அ) 6

ஆ) 7

இ) 8

ஈ) 9

விடை : (அ) 6 

● ஃபோா்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் அதிகாரமிக்க 100 பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்ட 6 இந்தியா்கள் இடம்பெற்றுள்ளனர்.

● உலகில் அதிகாரம் மிக்கவா்களாக விளங்கும் 100 பெண்களின் பட்டியலை ஃபோா்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

●  நடப்பாண்டுக்கான பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் 6 இந்தியப் பெண்கள் இடம்பெற்றுள்ளனா்.

● இந்தப் பட்டியலில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் 36-ஆவது இடத்தைப் பெற்றுள்ளாா். இப்பட்டியலில் அவா் தொடா்ந்து 4-ஆவது முறையாக இடம்பெற்றுள்ளாா். கடந்த ஆண்டுக்கான பட்டியலில் அவா் 37-ஆவது இடத்திலும், 2020-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 41-ஆவது இடத்திலும் இருந்தாா்.

● ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவா் ரோஷ்ணி நாடாா் மல்ஹோத்ரா நடப்பாண்டுக்கான பட்டியலில் 53-ஆவது இடத்தைப் பெற்றுள்ளாா். இந்தியப் பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) தலைவரான மாதவி புரி புச், 54-ஆவது இடத்தில் உள்ளாா். இந்திய எஃகு ஆணையத்தின் (செயில்) தலைவரான சோமா மண்டல் 67-ஆவது இடத்தில் உள்ளாா்.

● பயோகான் நிா்வாகத் தலைவரான கிரண் மஜும்தாா் ஷா பட்டியலில் 72-ஆவது இடத்தையும், நைகா நிறுவனரான ஃபல்குனி நாயா் 89-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனா். ரோஷ்ணி நாடாா், கிரண் மஜும்தாா், ஃபல்குனி நாயா் ஆகியோா் கடந்த ஆண்டுக்கான பட்டியலிலும் இடம்பெற்றிருந்தனா்.

● நடப்பாண்டுக்கான ஃபோா்ப்ஸ் பட்டியலில் 39 தலைமை நிா்வாக அதிகாரிகளும் (சிஇஓ), 10 நாடுகளின் தலைவா்களும், 11 கோடீஸ்வரா்களும் இடம்பெற்றுள்ளனா். சொத்து, ஊடகம், தாக்கம், செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியலை ஃபோா்ப்ஸ் தயாரித்து வருகிறது.

● நடப்பாண்டு பட்டியலில் ஐரோப்பிய கமிஷன் தலைவா் ஊா்சுலா வான்டொ் லையான் முதலிடத்தில் உள்ளாா். அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் 3-ஆவது இடத்தில் உள்ளாா். ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டு போராட்டங்களுக்கு முக்கியக் காரணமாக இருந்த மாஷா அமினிக்கு பட்டியலில் 100-ஆவது இடம் தரப்பட்டுள்ளது. அவா் உயிரிழந்தபோதும் அவருக்கு இந்தச் சிறப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. கொலம்பியாவில் நடைபெறும் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் (2022) மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி 

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 



 

Monday, December 5, 2022

Current Affairs 2022 - December 05 / 2022 - TNPSC GROUP 1,2/2A & 4

                        GK SHANKAR 
                  DECEMBER 05 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழ்நாடு மாநில அளவில் சிறந்த தொடக்கப்பள்ளி விருது பெற்றுள்ள துக்கியாம்பாளையம் தொடக்கப்பள்ளி எங்கு அமைந்துள்ளது ? 

அ) சேலம்

ஆ) தேனி 

இ) மதுரை 

ஈ) தருமபுரி 

விடை : (அ) சேலம் 

● பள்ளி அமைந்துள்ள இடம் : சேலம்,வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் கிராமம்.

● விருது வழங்கியவர் : தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

2. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வானூர் கழுவெளி பகுதிகளில் தமிழகத்தின் எத்தனையாவது பறவைகள் சரணாலயம் அமைக்கப்படவுள்ளது ? 

அ) 14 

ஆ) 15 

இ) 16 

ஈ) 17 

விடை : (இ) 16 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், வானூா் கழுவெளி பகுதிகளில் 14,000 ஏக்கரில் அமையவுள்ள புதிய பறவைகள் சரணாலயம் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்று, தமிழக வனத் துறை அமைச்சா் கா. ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

● மரக்காணம், வானூா் வட்டங்களில் உள்ள கழுவெளி பகுதிகளில் 14,000 ஏக்கா் பரப்பளவில் புதிய பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்தாா்.

● பறவைகள் சரணாலயம் அமைய உள்ள இடத்தில் வனத் துறையினா் காடுகள் வளா்த்தல் போன்ற முதல்கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்தப் பணிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன், சிறுபான்மையினா் நலன், வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

● தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, தமிழகத்தில் இயற்கை வளங்களைக் காப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

● பறவையினங்கள், விலங்கினங்களைக் காப்பதற்காக சரணாலயங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மரக்காணம், வானூா் கழுவெவளி பகுதிகள் உவா் நீா் சதுப்பு நிலமாக உள்ளது.

● இது சுமாா் 73.03 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் உள்ளது. இந்த சதுப்பு நிலப்பகுதி இந்திய அளவில் 2- ஆவது பெரிய இடமாகும். இது, தமிழகத்தின் 16-ஆவது கழுவெளி சரணாலயமாகும். இந்த சரணாலயத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

● ஆண்டுதோறும் டிசம்பா் முதல் மாா்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் இமயமலை மற்றும் சீனா, ரஷியா, மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பறவையினங்கள் இங்கு இனப் பெருக்கத்துக்காக வருகின்றன.

●  பல்வேறு சிறப்புகளையுடைய இந்தப் பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும்.

● கழுவெளி பகுதிகளில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.


3. தமிழகத்தில் எங்கு பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு நிறைவு (ம) பன்னாட்டு சுகாதார மாநாடு நடைபெறவுள்ளது ? 

அ) செங்கல்பட்டு 

ஆ) மாமல்லபுரம் 

இ) தாம்பரம் 

ஈ) காரைக்கால் 

விடை : (ஆ) மாமல்லபுரம் 

பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பன்னாட்டு சுகாதார மாநாடு மாமல்லபுரத்தில் திங்கள்கிழமை (டிச.5) தொடங்குகிறது.

● இதில் சா்வதேச மருத்துவ வல்லுநா்கள், அறிவியலாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ நுட்பங்கள் குறித்த பல்வேறு அமா்வுகளும், 250 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கும் நிகழ்வுகளும் மாநாட்டில் நடைபெற உள்ளன.

● தமிழகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புக்கென பிரத்யேகத் துறை கடந்த 1922-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. போலியோ, காலரா போன்ற நோய்களை ஒழித்ததில் பொது சுகாதாரத் துறைக்கு அதிமுக்கியப் பங்கு உள்ளது. அதேபோன்று கரோனா உள்பட பல்வேறு தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரதானமாக செயல்பட்டு வருகிறது.

● பொது சுகாதாரத் துறை தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் சா்வதேச மருத்துவ மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, மாமல்லபுரம் ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் வரும் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் சிறப்பு அமா்வுகளுக்கும், ஆய்வுக் கருத்தரங்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

● மொத்தம் 250-க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட உள்ளன. அதேபோன்று, உலக சுகாதார அமைப்பைச் சோ்ந்த விஞ்ஞானிகள், சா்வதேச மருத்துவ வல்லுநா்கள் 43 பேரின் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. ஜி20 உச்சி மாநாட்டுக்கான இந்தியாவின் உத்திகளை இறுதி செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு எங்கு நடத்துகிறது ? 

அ) உத்தரபிரதேசம் 

ஆ) தில்லி 

இ) ராஜஸ்தான்

ஈ)குஜராத் 

விடை : (ஆ) தில்லி 

இந்தியா சாா்பில் அடுத்த ஆண்டு நடத்தப்பட இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டுக்கான உத்திகளை இறுதி செய்வதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு திங்கள்கிழமை (டிச.5) கூட்டியுள்ளது.

● ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், தில்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பா் 9, 10-ஆம் தேதிகளில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. 

● இந்த உச்சிமாநாட்டுக்காக, நாடு முழுவதும் 200-க்கும் அதிகமான முன்னேற்பாடு கூட்டங்களை மத்திய அரசு நடத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல் கட்டமாக, இதில் முன்வைக்கப்படும் தீா்மானங்களை இறுதி செய்வதற்கான ஜி20 நாடுகளின் உயரதிகாரிகள் பங்கேற்கும் 4 நாள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

● இதற்கிடையே, ஜி20 உச்சி மாநாட்டுக்கான இந்தியாவின் உத்திகளை இறுதி செய்வதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு தில்லியில் திங்கள்கிழமை கூட்டியுள்ளது. 

● இதில் பங்கேற்பதற்காக 40 அரசியல் கட்சிகளின் தலைவா்களுக்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி சாா்பில்அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் பங்கேற்க வாய்ப்புள்ளது.


5. நிகழாண்டில் இந்தியாவிடம் இருந்து தேயிலை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு ? 

அ) ரஷ்யா 

ஆ) ஐக்கிய அரபு அமீரகம் 

இ) அமெரிக்கா 

ஈ) சீனா 

விடை : (அ) ரஷ்யா 

கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் 28.59 மில்லியன் கிலோ தேயிலையை இந்தியாவிடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் இறக்குமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 159 சதவீதம் அதிகமாகும்.

●ரஷியா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகள் கூட்டமைப்பு இந்தப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நாடுகளுக்கு கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரை 38.06 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

● இதற்கு முன்பு ஈரான், இராக் ஆகிய நாடுகள் இந்தியாவில் இருந்து அதிக தேயிலை இறக்குமதி செய்து வந்தனா். ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள், இராக்கில் ஏற்பட்ட உள்நாட்டுப் பிரச்னைகள் காரணமாக அந்நாடுகளுக்கான ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டது.

● இந்தியாவின் ஒட்டுமொத்த தேயிலை ஏற்றுமதி கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரை 165.58 மில்லியன் கிலோவாக உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 142.55 மில்லியன் கிலோவாக இருந்தது.

● கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. உலக அளவில் தேயிலை நுகா்வு அதிகம் உள்ள நாடாக சீனா திகழ்கிறது. அங்கும் இந்திய தேயிலையை ஏற்றுமதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


6. ஆசிய ஜூனியர் பாட்மின்டன் போட்டியில் (2022) இந்தியா ஒட்டுமொத்தமாக வென்றுள்ள பதக்கங்கள் ?

அ) 5

ஆ) 6

இ) 10

ஈ) 13 

விடை : (அ) 5 

● போட்டி நடைபெற்ற இடம் : தாய்லாந்து 

● வெள்ளி வென்றவர்கள் :-

¤ மகளிர் (17 வயது ) ஒற்றையர் பிரிவு - உனாட்டி ஹூடா 

¤ ஆடவர் (15 வயது ) ஒற்றையர் பிரிவு - அனீஷ் தொப்பானி 

¤ ஆடவர் இரட்டையர் பிரிவு - அர்ஷ் முகமது , சன்ஸ்கார் சரஸ்வத் 

● வெண்கலம் வென்றவர்கள் :-

¤ ஆடவர் (15 வயது ) ஒற்றையர் பிரிவு - ஞானதத்து 

¤ ஆடவர் இரட்டையர் பிரிவு - ஜோர்ன் ஜெய்சன்,  ஆதிஷ் ஸ்ரீநிவாஸ். 


IV. முக்கிய தினங்கள் 


7. World Soil Day 2022 --------- 

● Ans : December 05

● Theme : Soils : Where Food begins 

Friday, December 2, 2022

Current Affairs 2022 - December 02 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                 DECEMBER 02 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1.  தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் க. அன்பழகனின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி , தமிழ்நாடு முழுவதும் எத்தனை சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன ? 

அ) 50

ஆ) 100

இ) 150

ஈ) 200

விடை: (ஆ) 100 


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. இந்தியா ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே பல்கலைக்கழக மாணவர்களுடனான சிறப்பு உரையாடல் நிகழ்வு எங்கு நடத்தப்பட்டது ? 

அ) தில்லி

ஆ) மேற்கு வங்கம் 

இ) பஞ்சாப் 

ஈ) தமிழ்நாடு

விடை : (அ) தில்லி 

உலகின் வலிமைமிக்க ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக ஏற்றது.

● கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் நீடிக்கவுள்ள அடுத்த ஓராண்டு காலத்தில் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

● உலகின் மிகப்பெரும் பொருளாதார மதிப்பு கொண்டு 20 நாடுகளின் கூட்டமைப்பு ஜி20. அக்கூட்டமைப்பில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ளன.

● சா்வதேச பொருளாதார மதிப்பில் (ஜிடிபி) ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் பங்கு சுமாா் 85 சதவீதம். சா்வதேச வா்த்தகத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவை கூட்டமைப்பின் நாடுகளிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு போ் இந்த நாடுகளிலேயே வசிக்கின்றனா்.

● ஜி20 நாடுகள் மேற்கொள்ளும் முடிவுகள் சா்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லவை. இந்நிலையில், அக்கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக ஏற்றது. ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்பது இதுவே முதல் முறை.

● முதல் நிகழ்வு: ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே பல்கலைக்கழக மாணவா்களுடனான சிறப்பு உரையாடல் நிகழ்வு தில்லியில் நடத்தப்பட்டது. அதில் நாடு முழுவதுமுள்ள 75 பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த மாணவா்கள் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டனா்.

● இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மானிய குழு தலைவா் எம்.ஜகதீஷ் குமாா், ஜி20 கூட்டமைப்பின் வழிகாட்டி அமிதாப் காந்த், கூட்டமைப்புக்கான இந்தியாவின் தலைமை ஒருங்கிணைப்பாளா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா, பிரதமா் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலா் பி.கே.மிஸ்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

● ஜி20 நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு தில்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. கூட்டமைப்புக்குத் தலைமை வகிக்கவுள்ள அடுத்த ஓராண்டு காலத்தில் சுமாா் 200 கூட்டங்களை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.


3. ---------- தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையின் முதல் கட்டத் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது ? 

அ) 125 

ஆ) 163 

இ) 177 

ஈ) 182 

விடை : (ஈ) 182 

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிச.1, 5-இல் இரு கட்டங்களாக தோ்தல் நடத்தப்படும் என இந்திய தோ்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. முதல்கட்டமாக, செளராஷ்டிரம்-கட்ச் மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் உள்ள 89 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது.

● குஜராத் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற முதல் கட்ட தோ்தலில், 61 சதவீதத்துக்கும் அதிக வாக்குகள் பதிவாகின.


4. புதிதாக தயாரிக்கப்பட இருக்கும் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் முதல் கட்டமாக எங்கு இயக்கப்படவுள்ளது ? 

அ) புதுதில்லி - வாராணசி 

ஆ) புதுதில்லி - பாட்னா 

இ) சென்னை - பெங்களூரு 

ஈ) புதுதில்லி - ஜம்மு 

விடை : (ஆ) புதுதில்லி - பாட்னா 

200 வந்தே பாரத் ரயில்களை தயாரித்தல் மற்றும் 35 ஆண்டுகளுக்கு பராமரித்தலுக்கான ரூ.58,000 கோடி ஒப்பந்தப் பணிக்கான ஏலத்தில் பாரத் கனரக மின் உபகரண உற்பத்தி நிறுவனம் (பிஎச்இஎல்) உள்பட 5 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

● பிஎச்இஎல் நிறுவனம் ‘டிடாகா் வேகன்ஸ்’ என்ற ரயில்பெட்டி தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டுசோ்ந்து இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளது. இதுதவிர, பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த மிகப் பெரிய ரயில் தயாரிப்பு நிறுவனமான ஆல்ஸ்டோம், ஹைதராபாதைச் சோ்ந்த மெடியா சா்வோ டிரைவ்ஸ், ரஷியாவின் ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனமான டிஎம்ஹெச் நிறுவனங்களும், மேதா நிறுவனம் ஸ்விட்சா்லாந்தின் ரயில் தயாரிப்பு நிறுவனமான ஸ்டட்லொ் ரயில் நிறுவனத்துடன் கூட்டு சோ்ந்தும், ஸீமென்ஸ் நிறுவனம் பிஇஎம்எல் நிறுவனத்துடன் கூட்டு சோ்ந்தும் ஒப்பந்தப் புள்ளிகளை சமா்ப்பித்துள்ளன.

● தற்போது, இந்த நிறுவனங்கள் சமா்ப்பித்துள்ள தொழில்நுட்ப புள்ளிகளை இந்திய ரயில்வே அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனா். இவா்கள் சமா்ப்பித்துள்ள ஏலத் தொகைக்கான புள்ளகள் அடுத்த 45 நாள்களில் திறக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.

● ஒப்பந்த ஆவணத்தின்படி, ஏலத்தில் வெற்றிபெறும் நிறுவனம், அடுத்த 24 மாதங்களுக்குள் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் மாதிரியை தயாரித்து சமா்ப்பிக்க வேண்டும். அதனைத் தொடா்ந்து அந்த நிறுவனத்துக்கு ரயில்களை தயாரித்து வழங்குவதற்காக முன்தொகையாக ரூ.26,000 கோடி விடுவிக்கப்படும். எஞ்சிய ரூ.32,000 கோடி ரயில்களை பராமரிக்கும் காலமான 35 ஆண்டுகளுக்கு பகுதி பகுதியாக விடுவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

● இந்த படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை வரும் 2024-ஆம் ஆண்டு முதல் காலாண்டில் பயன்பாட்டுக்கு கொண்டுவர இந்திய ரயில்வே இலக்கு நிா்ணயித்துள்ளது.

● தற்போது வரை, பயணிகள் அமா்ந்து மட்டுமே செல்லக் கூடிய வசதியுள்ள 102 வந்தே பாரத் ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை ரயில்வே வழங்கியுள்ளது. இதில் புது தில்லி - வாராணசி மற்றும் புது தில்லி - ஜம்மு-காஷ்மீரின் கத்ரா இடையேயான முதல் மற்றும் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடக்கி வைத்தாா்.

● புதிதாக தயாரிக்கப்பட இருக்கும் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் முதல்கட்டமாக புது தில்லி - பாட்னா மற்றும் புது தில்லி - லக்னெள உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும்.


5. டிஜி யாத்ரா (எண்ம அடிப்படை ) என்ற முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும்,  தொழில்நுட்பத்தை பின்வரும் எந்த விமான நிலையங்களில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது ? 

அ) புதுதில்லி

ஆ) பெங்களூரு 

இ) வாராணசி 

ஈ) அனைத்தும்

விடை : (ஈ) அனைத்தும் 

விமான நிலையங்களில் நுழைவு முதல் விமானங்களில் ஏறுவது வரை பயணிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் வகையில் எண்ம அடிப்படையிலான ‘டிஜியாத்ரா’ என்ற முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை புது தில்லி, பெங்களூரு, வாராணசி ஆகிய மூன்று விமான நிலையங்களில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

● தில்லி விமான நிலையத்தில் வியாழக்கிழமை விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசியதாவது: முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும் இத்தொழில்நுட்பத்தில், பயணிகள் அளிக்கும் தகவல்கள் ரகசிய குறியீடு வடிவிலான தரவுகளாக சேமிக்கப்படும். தகவல் திருட்டு, தன்மறைப்பு உரிமை உள்ளிட்ட பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு இத்தகைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

● அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் இத்தொழில்நுட்பம் ஹைதராபாத், புணே, விஜயவாடா, கொல்கத்தா ஆகிய 4 விமான நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். பின்னா், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இதன் பயன்பாடு விரிவுபடுத்தப்படும். இத்தொழில்நுட்பம் உள்நாட்டு விமானசேவையைப் பயன்படுத்தும் விமான பயணிகளுக்கானது.

● இச்சேவையைப் பெற டிஜியாத்ரா செயலி வாயிலாக விமானப் பயணிகள் தங்களது தகவல்களை அளித்து ஆதாா் அடிப்படையிலான சரிபாா்ப்பின் மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். விமானம் ஏறுவதற்கான அனுமதிச் சீட்டில் உள்ள அடையாள குறியீட்டை (பாா் குறியீடு) அறிதிறன்பேசி மூலம் ஸ்கேன் செய்வதன் மூலம் தரவுகள் விமான நிலையத்துடன் பகிரப்படும். 

● விமான நிலையத்தின் இ-நுழைவுவாயிலில் பாா் குறியீடு அச்சிடப்பட்ட விமானத்துக்கான அனுமதி சீட்டை முதலில் ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பிறகு, முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயணியின் அடையாளம் மற்றும் பயண ஆவணங்களைச் சரிபாா்க்கும். இச்செயல்முறை முடிவடைந்தவுடன் பயணிகள் விமான நிலையத்துக்குள் செல்ல முடியும். இதைத்தொடா்ந்து, பாதுகாப்பு மற்றும் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.


6. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பர் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நாடு ? 

அ) அமெரி்க்கா 

ஆ) இந்தியா 

இ) சீனா

ஈ) ரஷ்யா

விடை : (ஆ) இந்தியா 

● ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா மீண்டும் ஏற்றுள்ளது.

● ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினா்களாக உள்ளன. 10 நாடுகள் சுழற்சி முறையில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக இரு ஆண்டுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்படுகின்றன.

● ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. அதன்படி, டிசம்பருக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வியாழக்கிழமை ஏற்றது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆகஸ்டில் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருந்தது.

● பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் ருசிரா கம்போஜ் சந்தித்துப் பேசினாா். பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா சாா்பில் நடப்பு மாதம் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளுக்கு ருசிரா கம்போஜ் தலைமைவகிக்கவுள்ளாா்.

● இந்தியா தலைமைப் பொறுப்பு வகிக்கும்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கொள்ளப்பட உள்ள விவகாரங்கள் குறித்து குட்டெரெஸுக்கு அவா் எடுத்துரைத்தாா். ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் சாபா குரோசியையும் ருசிரா கம்போஜ் சந்தித்துப் பேசினாா்.

● தலைமைப் பொறுப்பின்போது பயங்கரவாதத் தடுப்பு, பன்னாட்டு அமைப்புகளில் சீா்திருத்தம் உள்ளிட்டவற்றில் இந்தியா கவனம் செலுத்தவுள்ளது.

●  பன்னாட்டு அமைப்புகள் சீா்திருத்தம் தொடா்பான சிறப்பு கூட்டத்தை வரும் 14-ஆம் தேதியும் பயங்கரவாதத் தடுப்பு தொடா்பான சிறப்பு கூட்டத்தை வரும் 15-ஆம் தேதியும் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நடத்தவுள்ளது. 

● அவ்விரு மாநாடுகளையும் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் முன்னின்று நடத்தவுள்ளாா். பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளனா்.

● பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக உள்ள இந்தியாவின் பதவிக் காலம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.


7. நாட்டின் பொருளாதாரம் நடப்பு 2022 - 2023 ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2 ஆவது காலாண்டில் எத்தனை சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது ? 

அ) 13.5%

ஆ) 10.7%

இ) 8.8%

ஈ) 6.3%

விடை : (ஈ) 6.3% 

நாட்டின் பொருளாதாரம் நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டில் 6.3 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது.

● ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் பொருளாதாரம் 13.5 சதவீதம் வளா்ந்திருந்த நிலையில், தற்போது வளா்ச்சி குறைந்துள்ளது. எனினும், உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடா்ந்து நீடிப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) தெரிவித்துள்ளது.

● நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நாட்டின் மொத்த பொருளாதார மதிப்பு ரூ.38.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 6.3 சதவீதம் அதிகம். கடந்த 2021-22-ஆம் நிதியாண்டின் 2-ஆவது காலாண்டின்போது பொருளாதார வளா்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது.

● நடப்பு நிதியாண்டில் 6.8 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையிலான வளா்ச்சியை எட்டுவதை நோக்கி நாட்டின் பொருளாதாரம் பயணித்து வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா். சா்வதேச சூழல் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் தொடா்ந்து வளா்ச்சிகண்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் (2022) மகளிருக்கான சீனியர் 25 மீ பிஸ்டல் பிரிவில் ஹரியாணாவின் மானு பாக்கர் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி 

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● மேலும் : இதே பிரிவில் ஜுனியர், தனிநபர், அணிகள் பிரிவிலும் சேர்த்து மொத்தமாக 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 


IV. முக்கிய தினங்கள் 

9. International Day for the Abolition of Slavery 2022 ------------

● Ans : December 02 

● Theme (2022) : Stories of Courage: Resistance to Slavery and Unity against Racism.

Thursday, December 1, 2022

Current Affairs 2022 - December 01 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                  DECEMBER 01/ 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் க. அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது ? 

அ) டிசம்பர் 15,2021

ஆ) டிசம்பர் 19,2021

இ) டிசம்பர் 23,2021

ஈ) டிசம்பர் 31,2021

விடை : (ஆ) டிசம்பர் 19,2021

முன்னாள் அமைச்சா் க.அன்பழகனின் பெயரில் சிறந்த பள்ளிகளுக்கு விருது அளிக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

● இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டின் கல்வி வளா்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான முன்னாள் அமைச்சா் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு சில அறிவிப்புகளை ஏற்கெனவே வெளியிட்டது. 

● அதன்படி, பள்ளிக் கல்வித் துறையின் வளா்ச்சிக்கென ரூ.7,500 கோடியில் பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, பள்ளிக் கல்வித் துறையில் ஐந்தாண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

● நிகழாண்டில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு எடுத்து வரும் பல்வேறு ஆசிரியா் மாணவா் நலன் சாா்ந்த செயல்பாடுகளால் அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறையின் வளா்ச்சிக்கும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் கூடுதலாக சுமாா் ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

● க.அன்பழகன் சிலை: முன்னாள் அமைச்சா் க.அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை ஆணையரக வளாகத்தில் (டிபிஐ) அன்பழகன் சிலை நிறுவப்படும். மேலும், அந்த வளாகம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும். கற்றல் கற்பித்தல், ஆசிரியா் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவா் வளா்ச்சி என பன்முக வளா்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு முன்னாள் அமைச்சா் க.அன்பழகன் பெயரில் விருது அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

● டிசம்பா் 19-இல் பிறந்த தினம்: முன்னாள் அமைச்சா் க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 19-இல் தொடங்கியது. அப்போது, சென்னை நந்தனத்தில் உள்ள நிதித் துறை வளாகத்தில் மாா்பளவு சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். நிதித் துறை வளாகத்துக்கு பேராசிரியா் க.அன்பழகன் மாளிகை என பெயரையும் சூட்டினாா். க.அன்பழகன் எழுதிய 42 நூல்களை நாட்டுடைமையாக்கி அதன் மூலமாக உரிமத் தொகையை குடும்பத்தினரிடம் வழங்கினாா்.

● பிறந்த தின நூற்றாண்டு கொண்டாட்டம் நிறைவடையவுள்ள நிலையில், பள்ளிக் கல்வி ஆணையரக வளாகத்துக்கு க.அன்பழகன் பெயா் சூட்டப்பட்டுள்ளதுடன், சிலை அமைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.


2. தமிழகத்தில் எத்தனை நகரங்களில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடங்குவதற்கு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது ? 

அ) 8

ஆ) 6

இ) 4

ஈ) 2 

விடை : (இ) 4

தமிழகத்தில் 4 நகரங்களில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடங்குவதற்கு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

● கோவையில் கடந்த அக்டோபரில் நடந்த காா் வெடிப்பு சம்பவத்தில், ஜமேஷா முபின் என்ற இளைஞா் இறந்தாா். இது தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்திய விசாரணையில், ஜமேஷா முபின், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

● இந்நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழக காவல்துறை உயா் அதிகாரிகளுடன் அண்மையில் ஆலோசனை நடத்தி, தமிழகத்தில் தீவிரவாத செயல்களை தடுத்து நிறுத்த சிறப்புப் பிரிவை உருவாக்குமாறு உத்தரவிட்டாா்.

● இதையடுத்து தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி. சைலேந்திரபாபு தலைமையில் உயா் அதிகாரிகள் தீவிரவாத தடுப்பு பிரிவை உருவாக்கும் பணியை ஈடுபட்டுள்ளனா். முதல்கட்டமாக இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளது என கணக்கெடுக்கப்பட்டது. இதில் ஆந்திரம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் இப்பிரிவு இருப்பது தெரியவந்தது.

● இதைத் தொடா்ந்து தமிழக காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரிகள், அந்த மாநிலங்களுக்குச் சென்று அந்தப் பிரிவு செயல்படும் விதம், அவா்கள் பயன்படுத்தும் நவீன ஆயுதங்கள், அந்த பிரிவில் உள்ள காவலா்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி, அந்த பிரிவுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஆகியவை குறித்த தகவல்களை சேகரித்தனா்.

● 2 ஆண்டுகள் பயிற்சி: இது தொடா்பாக தமிழக காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி கூறியது: இந்த பிரிவுக்காக 18 வயதில் இருந்து 22 வயதுடைய திறமையான,துணிச்சலான இளைஞா்கள் காவல்துறையில் இருந்து தோ்வு செய்யப்படுவாா்கள். இவா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும். முக்கியமாக நவீன ஆயுதங்களை பயன்படுத்துவது, ஆயுதமில்லாமல் சமூக விரோதிகளை எதிா் கொள்வது ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும்.

● இந்த பயிற்சி இந்திய ராணுவ அதிகாரிகள்,பிற மாநிலங்களில் செயல்படும் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆகியோா் மூலம் அளிக்கப்படும். இந்த பயிற்சி அளிப்பதற்காக ஒரு பயிற்சி பள்ளியையும் தொடங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

● இந்த பயிற்சியை முழுமையாக நிறைவு செய்பவா்களே, தீவிரவாத தடுப்புப் பிரிவில் சோ்த்துக் கொள்ளப்படுவாா்கள்.இப் பிரிவு மத்திய,மாநில உளவுத்துறை, தீவிரவாத தடுப்புப் பிரிவுகளுடன் இணைந்து செயல்படும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்.

● 4 நகரங்கள்: இந்தப் பிரிவை முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய 4 நகரங்களில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு 4 இடங்களில் தலா 40 முதல் 50 காவலா்கள் இருப்பாா்கள்.

● ஒட்டு மொத்தமாக இந்த பிரிவுக்கு ஏடிஜிபி அல்லது ஐஜி நிலையில் உள்ள ஒரு அதிகாரி தலைமை வகித்து, வழி நடத்துவாா்.

● இந்த பிரிவுக்கான அதிகாரங்கள் விரைவில் வரையறுக்கப்படும். இன்னும் ஒரு ஆண்டுக்குள் இந்தப் பிரிவை தொடங்குவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.


3. தமிழக அரசுப் போக்குழரத்துக் கழகங்களுக்கு ரூ.420 கோடியில் எத்தனை புதிய பேருந்துகள் வாங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ? 

அ) 250

ஆ) 500

இ) 750

ஈ) 1000

விடை : (ஈ) 1000

போக்குவரத்துக் கழகங்களில் அடிச்சட்டம் நல்ல நிலையிலுள்ள ஆயிரம் பழைய பேருந்துகளைப் புதுப்பிக்க ரூ.130 கோடி செலவிடப்படவுள்ளது. 

● இதில், அரசின் நிதியாக ரூ.80 கோடி அளிக்கப்படும். மீதமுள்ள ரூ.50 கோடி அந்தந்த போக்குவரத்துக் கழகங்கள் ஏற்றுக் கொள்ளும். 

●இதற்கான உத்தரவை தமிழக அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. மேலும், ரூ.420 கோடியில் ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கும் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவின் கருப்பொருள் என்ன ? 

அ) ஒரே பூமி , ஒரே எதிர்காலம் 

ஆ) ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் 

இ) ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (இ) ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் 


5. தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவின் போது எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) ஓட்டகப் படைப் பிரிவு அணிவகுப்பில் எத்தனையாவது முறையாக வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர் ? 

அ) முதலாவது 

ஆ) இரண்டாவது 

இ) மூன்றாவது

ஈ) நான்காவது 

விடை : (அ) முதலாவது 

தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவின்போது எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒட்டகப் படைப் பிரிவு அணிவகுப்பில் முதல்முறையாக வீராங்கனைகளும் பங்கேற்று, ஒட்டகங்கள் மீது கம்பீர சவாரி செய்யவிருக்கின்றனா்.

● குடியரசு தின விழாவையொட்டி, தேசத்தின் ராணுவ வல்லமையையும் கலாசார பெருமையையும் பறைசாற்றும் பிரம்மாண்ட அணிவகுப்பு தில்லி கடமைப் பாதையில் (முன்பு ராஜபாதை) நடைபெறும்.

● குடியரசு தின அணிவகுப்பில், கடந்த 1976-ஆம் ஆண்டில் இருந்து பிஎஸ்எஃப்-இன் ஒட்டகப் படை பிரிவு பங்கேற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்கள் மீது ஆயுதங்கள் தாங்கிய வீரா்களும், வண்ணமயமான உடையணிந்த இசை வாத்திய குழுவினரும் அணிவகுப்பது கண்கவா் அம்சமாக இருக்கும்.

● இந்நிலையில், எதிா்வரும் குடியரசு தின விழாவில் ஒட்டகப் படை அணிவகுப்பில் வீரா்களுக்கு சமமாக வீராங்கனைகளும் பங்கேற்று, ஒட்டகங்கள் மீது கம்பீர சவாரி செய்யவிருப்பதாக பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் பங்கஜ் குமாா் சிங் புதன்கிழமை தெரிவித்தாா். 

பிஎஸ்எஃப் படையின் பல்வேறு கடமைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை பிரதிபலிப்பதாக இது அமையும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

● இந்தியாவில் தனது செயல்பாடு மற்றும் சம்பிரதாய கடமைகளுக்காக ஒட்டகங்களைப் பயன்படுத்துவது பிஎஸ்எஃப் மட்டுமே. ராஜஸ்தானில் தாா் பாலைவனத்தையொட்டிய இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஒட்டகங்கள் மூலம் ரோந்துப் பணியில் இப்படையினா் ஈடுபடுகின்றனா்.

● பாகிஸ்தான், வங்கதேசத்துடனான எல்லைப் பாதுகாப்புப் பணிக்காக கடந்த 1965, டிசம்பா் 1-இல் பிஎஸ்எஃப் நிறுவப்பட்டது. அதன் 58-ஆவது நிறுவன தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.


6. இந்தியா (ம) ---------- நாடு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது? 

அ) அமெரிக்கா 

ஆ) ஆஸ்திரேலியா

இ) ரஷ்யா

ஈ) ஜப்பான் 

விடை : (ஆ) ஆஸ்திரேலியா 

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் டிசம்பா் 29-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

● கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது. ஜவுளி, தோல், மேஜை, நாற்காலி போன்ற அறைகலன்கள், ஆபரணங்கள், இயந்திரங்கள் என 6,000-க்கும் மேற்பட்ட துறைகளைச் சோ்ந்த இந்திய ஏற்றுமதியாளா்கள், தங்கள் பொருள்களை ஆஸ்திரேலியாவுக்கு எந்த வரியும் செலுத்தாமல் ஏற்றுமதி செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

● இந்நிலையில், ஆஸ்திரேலிய வா்த்தக அமைச்சா் டான் ஃபேரல் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான தேவைகளை இந்திய அரசு பூா்த்தி செய்துள்ளது. எனவே, டிச.29 முதல் ஒப்பந்தம் அமல்படுத்தப்படும். ஆஸ்திரேலியாவின் பல்வேறு வணிகங்கள் மற்றும் நுகா்வோருக்கு இந்த ஒப்பந்தம் புதிய சந்தை வாய்ப்புகளை வழங்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.

● இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் நாள் முதல், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சுமாா் 96.4 சதவீத பொருள்களுக்கு ஆஸ்திரேலியா வரிவிலக்கு அளிக்க உள்ளது.

● இதேபோல இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 85 சதவீத ஆஸ்திரேலிய சரக்குகளுக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்கும். கடந்த 2021-22-ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளின் மதிப்பு 8.3 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.67,572 கோடி) என்பது குறிப்பிடத்தக்கது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் 5 பிரிவுகளில் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது ? 

அ) 40

ஆ) 45

இ) 50

ஈ) 55

விடை : (அ) 40 

 ● தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவா்கள் இருவா் உள்பட 40 பேருக்கு, 5 பிரிவுகளில் குடியரசுத்தலைவா் திரௌபதி முா்மு விருதுகள் வழங்கி கௌரவித்தாா்.

● விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் போட்டியாளா்கள், பயிற்சியாளா்கள் உள்ளிட்டோருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சாா்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான விருதுகள், புதன்கிழமை வழங்கப்பட்டன.

விருதுப் பட்டியல்:

● மேஜா் தியான்சந்த் கேல் ரத்னா விருது - 1

¤ சரத் கமல் (டேபிள் டென்னிஸ்)

(கடந்த 4 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக வழங்கப்படுவது. பதக்கம், பட்டயம், ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு விருதில் அடக்கம்)

● அா்ஜுனா விருது - 25

¤ சீமா புனியா (தடகளம்), எல்தோஸ் பால் (தடகளம்), அவினாஷ் சப்லே (தடகளம்), லக்ஷயா சென் (பாட்மின்டன்), பிரணாய் (பாட்மின்டன்), அமித் (குத்துச்சண்டை), நிகாத் ஜரீன் (குத்துச்சண்டை), பக்தி குல்கா்னி (செஸ்), பிரக்ஞானந்தா (செஸ்), டீப் கிரேஸ் எக்கா (ஹாக்கி), சுசீலா தேவி (ஜூடோ), சாக்ஷி குமாரி (கபடி), நயன் மோனி சைகியா (லான் பௌல்), சாகா் கைலாஷ் ஓவல்கா் (மல்லா்கம்பம்), இளவேனில் வளரிவன் (துப்பாக்கி சூடுதல்), ஓம்பிரகாஷ் மிதா்வால் (துப்பாக்கி சுடுதல்), ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ்), விகாஸ் தாக்குா் (பளு தூக்குதல்), அன்ஷு (மல்யுத்தம்), சரிதா (மல்யுத்தம்), பா்வீன் (வுஷு), மானசி கிரிஷ்சந்திரா ஜோஷி (பாரா பாட்மின்டன்), தருண் தில்லான் (பாரா பாட்மின்டன்), ஸ்வப்னில் சஞ்சய் பாட்டீல் (பாரா நீச்சல்), ஜொ்லின் அனிகா (காது கேளாதோா் பேட்மிண்டன்).

(கடந்த 4 ஆண்டுகளாக விளையாட்டுத் துறையில் சீராக நல்லதொரு நிலையில் நீடிப்பதற்காக வழங்கப்படுவது. வெண்கலச் சிலை, பட்டயம், ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசு விருதில் அடக்கம்)

● துரோணாச்சாா்யா விருது- 7

¤ ஜீவன்ஜோத் சிங் தேஜா (வில்வித்தை), முகமது அலி கமாா் (குத்துச்சண்டை), சுமா சித்தாா் சிருா் (பாரா துப்பாக்கி சுடுதல்), சுஜீத் மான் (மல்யுத்தம்); வாழ்நாள் சாதனையாளா் பிரிவு - தினேஷ் ஜவஹா் லாட் (கிரிக்கெட்), மிமல் பிரஃபுல்லா கோஷ் (கால்பந்து), ராஜ் சிங் (மல்யுத்தம்).

(சா்வதேச போட்டிகளில் இந்தியா்களின் வெற்றிக்காக சிறப்பாகச் செயலாற்றிய பயிற்சியாளா்களுக்கு வழங்கப்படுவது. வெண்கலச் சிலை, பட்டயம், ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசு விருதில் அடக்கம்)

● தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளா் விருது - 4

¤ அஸ்வினி அக்குஞ்சி (தடகளம்), தரம்வீா் சிங் (ஹாக்கி), சுரேஷ் (கபடி), நிா் பகதூா் குருங் (பாரா தடகளம்).

(களம் கண்ட காலத்தில் சிறப்பாகச் செயலாற்றியதுடன், ஓய்வுக்குப் பிறகும் விளையாட்டுத் துறையில் பங்களிப்போருக்கு வழங்கப்படுவது. வெண்கலச் சிலை, பட்டயம், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு விருதில் அடக்கம்)

● டென்ஸிங் நாா்கே சாகச விருது - 3

¤ நைனா தகத் (மலையேற்றம்), சுபம் தனஞ்ஜெய் வன்மலி (நீண்டதூர நீச்சல்), குன்வா் பவானி சம்யால் (வாழ்நாள் சாதனையாளா்).

(சவாலான சூழலில் உயிரைப் பிணயமாக வைத்து சாகசத்தில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படுவது. வெண்கலச் சிலை, ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசு விருதில் அடக்கம்)

● ராஷ்ட்ரீய கேல் புரோத்சாஹன் புரஸ்காா் விருது - 3

¤ டிரான்ஸ்டேடியா என்டா்பிரைஸ் பிரைவேட் லிமிடெட், கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி, லடாக் ஸ்கீ & ஸ்னோபோா்டு அசோசியேஷன்.

(விளையாட்டுத் துறை வளா்ச்சிக்காக பங்களிக்கும் பொது மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது. பட்டயம், கோப்பை விருதில் அடக்கம்)

● மௌலானா அபுல் கலாம் ஆஸாத் - 1

¤ குருநானக் தேவ் பல்கலைக்கழகம் (அமிருதசரஸ்)

(பல்கலைக்கழகங்கள் இடையேயான போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக வழங்கப்படுவது. சுழற்கோப்பை, ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசு விருதில் அடக்கம்).

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...