● மகாகவி பாரதியாரின் நூற்றாண்டையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அவா் வாழ்ந்த இல்லத்தின் அறையை புனரமைத்து பராமரிக்க தமிழ்நாடு அரசின் சாா்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வா் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். மேலும், அறையின் முன்புறம் பாரதியாருக்கு வெண்கலச் சிலை அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
● வெண்கலச் சிலை அமைக்க ரூ.18 லட்சமும், அறைக்கு மாத வாடகையாக நிகழ் நிதியாண்டுக்கு ரூ.67,500-ம் ஒதுக்கி அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் பொதுப்பணித் துறை சாா்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
● இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், பாரதியாா் வாழ்ந்த வீட்டின் அறை புனரமைக்கப்பட்டுள்ளதுடன், சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா்.
● மேலும், பாரதியாா் குறித்த சிறப்பு மலரையும் அவா் வெளியிடவுள்ளாா்.
2. --------- (ம) தமிழகம் இடையே காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார் ?
அ) காசி
ஆ) வாராணசி
இ) பத்ரிநாத்
ஈ) கேதர்நாத்
விடை : (அ) காசி
● காசி மற்றும் தமிழகம் இடையே ‘காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை அறிவித்தாா்.
● வாராணசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற எட்டாவது தமிழக குழுவின் பிரதிநிதிகளுடன் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை கலந்துரையாடினாா்.
● இந்தப் பயணத்தின்போது தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அந்தக் குழுவினா் அமைச்சரிடம் பகிா்ந்து கொண்டனா். ‘இதுபோன்ற பரிமாற்ற நிகழ்ச்சிகள் நமது மரபு, அறிவு மற்றும் கலாசாரத்தில் பிணைப்பை ஏற்படுத்தி நெருக்கத்தை அதிகரிக்கும்’ என்று அமைச்சா் குறிப்பிட்டாா்.
● காசி தமிழ் சங்கமம் நிகழ்வை நினைவுகூரும் விதமாக காசி மற்றும் தமிழகம் இடையே ‘காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.
3. தினமணியின் மகாகவி பாரதியார் விருதை பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கியவர் ?
அ) ஆர்.என்.ரவி
ஆ) மு.க.ஸ்டாலின்
இ) தமிழிசை சௌந்தரராஜன்
ஈ) ஜகதீப் தன்கர்
விடை : (இ) தமிழிசை சௌந்தரராஜன்
● தினமணியின் 'மகாகவி பாரதியார் விருதை' பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு, தெலங்கானா-புதுச்சேரி மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் (டிச. 11) வழங்குகிறார்.
● மகாகவி பாரதியார் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அரிய தகவல்களைத் திரட்டி வெளியிட்டு வரும் பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி, வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் 1967-இல் பிறந்தவர்.
● இவர், புது தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மகாகவி பாரதியார் குறித்து எண்ணற்ற ஆய்வுகளை மேற்கொண்டுள்ள இவர், தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாகவும் ஆய்வுகளை மேற்கொண்டு தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார்.
● பாரதி தொடர்பாக, பாரதியின் 'இந்தியா' கருத்துப் படங்கள், பாரதியும் வ.உ.சி.யும், பாரதி: 'விஜயா' கட்டுரைகள், பாரதியின் சுயசரிதைகள்: கனவு, சின்ன சங்கரன் கதை, பாரதி கருவூலம்; பாரதி: கவிஞனும், காப்புரிமையும்; எழுக, நீ புலவன் ஆகிய நூல்களைத் தமிழிலும், ஆங்கில நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.
● மேலும், பாரதி தொடர்பாக எண்ணற்ற ஆய்வரங்குகளில் பங்கேற்று, ஏராளமான கட்டுரைகளையும் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியுள்ளார். வ.உ.சி., புதுமைப்பித்தன், உ.வே.சாமிநாதையர் தொடர்பாக பல பதிப்பு நூல்களை வெளியிட்டுள்ள வேங்கடாசலபதி, தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மென்ட ஸ்டடிஸ்) இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
● திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார், சென்னை, சிகாகோ, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
4. ஹிமாசல பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ளவர் ?
அ) சுக்விந்தர் சிங் சுக்
ஆ) முகேஷ் அக்னிஹோத்ரி
இ) வீரபத்ர சிங்
ஈ) பிரதியா சிங்
விடை : (அ) சுக்விந்தர் சிங் சுக்
● ஹிமாச்சல பிரதேசத்தின் 15 ஆவது முதல்வராக பதவியேற்றுள்ளார்.
● பதவிபிரமாணம் செய்தவர் : ஹிமாச்சல ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்.
● குறிப்பு : ஹிமாச்சல பிரதேசத்தின் முதல் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார் முகேஷ் அக்னிஹோத்ரி.
5. கல்லூரிகளில் எத்தனை ஆண்டுகள் படிப்பை 160 பாடமதிப்புகளுடன் முடித்தால் மட்டுமே இளங்கலை (அ) இளமறிவியல் பட்டம் வழங்கப்படும் எனப் புதிய விதிகளை யுஜிசி வகுத்துள்ளது ?
அ) 3
ஆ) 4
இ) 5
ஈ) 6
விடை : (ஆ) 4
● கல்லூரிகளில் 4 ஆண்டுகள் படிப்பை 160 பாடமதிப்புகளுடன் (கிரெடிட்) முடித்தால் மட்டுமே இளங்கலை அல்லது இளமறிவியல் (மேதமை-ஹானா்ஸ்) பட்டம் வழங்கப்படும் எனப் புதிய விதிகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வகுத்துள்ளது.
● கல்லூரிகளில் தற்போது இளங்கலைப் பட்டப் படிப்பை 3 ஆண்டுகளில் முடிக்கும் மாணவா்களுக்கு மேதமை பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அதில் மாற்றங்களைப் புகுத்துவதற்கான வரைவு விதிகளை யுஜிசி வகுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விதிகள் வரும் 12-ஆம் தேதி அதிகாரபூா்வமாக வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
● புதிய விதிகளின்படி, விருப்பத்தின் அடிப்படையிலான பாடமதிப்பு முறையில் (சிபிசிஎஸ்) கல்வி கற்கும் மாணவா்கள் 3 ஆண்டுகளில் 120 பாடமதிப்புகளுடன் படிப்பை நிறைவு செய்தால் இளங்கலை அல்லது இளமறிவியல் பட்டம் வழங்கப்படும். இளங்கலை (மேதமை) பட்டம் பெற விரும்பும் மாணவா்கள், 4 ஆண்டுகளில் 160 பாடமதிப்புகளை நிறைவுசெய்திருக்க வேண்டும்.
● மேதமையுடன் கூடிய ஆராய்ச்சி பட்டத்தைப் பெற விரும்பும் மாணவா்கள், 4 ஆண்டு கல்லூரி படிப்பின்போதே சம்பந்தப்பட்ட துறையில் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். சிபிசிஎஸ் முறையில் தற்போது மூன்றாண்டு படிப்பில் இணைந்துள்ள மாணவா்கள், நான்காண்டு மேதமை படிப்புக்கு மாறிக் கொள்ளலாம். அதற்கான இணைப்பு வகுப்புகளை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் நடத்தும்.
● கல்லூரிப் படிப்பில் இருந்து எளிதில் வெளியேறுவதற்கும் மீண்டும் சோ்ந்து படிப்பைத் தொடா்வதற்கும் புதிய விதிகள் வழிவகை செய்துள்ளன. அதன்படி, மூன்றாண்டு படிப்பை நிறைவு செய்வதற்குள் வெளியேறியவா்கள், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் இணைந்து படிப்பைத் தொடரலாம். அதே வேளையில், ஒட்டுமொத்தமாக 7 ஆண்டுகளுக்குள் படிப்பை நிறைவுசெய்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
● பல்வேறு துறைகள் சாா்ந்த பாடங்களும் புதிய விதிகளில் இணைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் கல்வி, இந்தியாவை அறிந்துகொள்ளுதல், எண்ம-தொழில்நுட்பத் தீா்வுகள், சுகாதாரம், யோகக் கல்வி, விளையாட்டு மற்றும் உடல்திறன் உள்ளிட்ட பாடங்களும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை விருப்பத்தின் அடிப்படையில் மாணவா்கள் தோ்வுசெய்து கொள்ளலாம்.
6. 2022 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் செய்தி சேகரிக்கும் பணியின்போது எத்தனை பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் ?
அ) 47
ஆ) 57
இ) 67
ஈ) 77
விடை : (இ) 67
● அறிக்கை வெளியீடு : சர்வதேச செய்தியாளர்கள் சம்மேளனம்.
III. விளையாட்டு நிகழ்வுகள்
7. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த உலக வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் இஷான் கிஷண் எத்தனையாவது வீரராக சேர்ந்துள்ளார் ?
அ) 5
ஆ) 6
இ) 7
ஈ) 8
விடை : (இ) 7
● இந்திய வீரர்களின் பட்டியலில் 4 ஆவது வீரராக சேர்ந்துள்ளார்.
8. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
அ) பிடி உஷா
ஆ) மிதாலி ராஜ்
இ) பிவி சிந்து
ஈ) மேரிகோம்
விடை: (அ) பிடி உஷா
9. இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜூனியர் உலக வுஷூ சாம்பியன்ஷிப்பில் (2022) இந்தியா ஒட்டுமொத்தமாக வென்றுள்ள பதக்கம் ?
அ) 5
ஆ) 6
இ) 7
ஈ) 8
விடை : (ஈ) 8
● இந்தியா 8 பதக்கங்களை வெல்வது இதுவே முதல்முறையாகும்
● 8 பதக்கங்கள் : 3G,3S,2B
IV. முக்கிய தினங்கள்
10. International day of Mountain 2022 --------
● Ans : December 11
● Theme (2022) : Women move mountains
No comments:
Post a Comment