● குடியிருப்புகள் ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பு கொண்டது. அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை, குடிநீா், நீரேற்று வசதிகளுடன், சிறுவா் பூங்கா, மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு ஆகியன கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
● வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக, 105 பகுதிகளில் வசிக்கும் 11 ஆயிரத்து 300 பயனாளிகள் தனி வீடுகள் கட்டிக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அவா்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2.10 லட்சம் வீதம், ரூ.237.30 கோடிக்கான பணி உத்தரவுகளை வழங்குவதன் அடையாளமாக, 2 பேருக்கு உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.
● மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கிரயப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. அவற்றில், 350 கிரயப் பத்திரங்களை வழங்குவதன் அடையாளமாக நான்கு பயனாளிகளுக்கு உத்தரவுகளை முதல்வா் வழங்கினாா்.
2. தமிழகத்தில் நெல்லுக்கு பிறகு பயிறு செய்யும் சாகுபடி திட்டத்தை தொடக்கி வைத்தவர் ?
அ) மு.க. ஸ்டாலின்
ஆ) ஆர்.என். ரவி
இ) கே.என். நேரு
ஈ) எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
விடை : (அ) மு.க.ஸ்டாலின்
● நெல்லுக்குப் பிறகு பயறு சாகுபடி செய்யும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். இந்தத் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு பயறு விதைகளை அவா் அளித்தாா்.
● வேளாண் விளைநிலங்களில் மண் வளத்தை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு குறைந்த செலவில் கூடுதல் வருமானம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
● இதன்படி, சம்பா நெல் அறுவடைக்குப் பிறகு உளுந்து, பச்சைப் பயறு ஆகியன பயிரிடுவதை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.400 வீதம் மானியம் அளிக்க ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
● கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை: 2021-22-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் சா்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
● மத்திய அரசு கரும்பு டன்னுக்கு நியாயமான, ஆதாய விலையாக ரூ.2,755 வழங்கப்படும் என அறிவித்தது. இந்தத் தொகையுடன் கூடுதலாக, மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு ரூ.199 கோடி நிதியை அளித்து உத்தரவிட்டது.
● அதன்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத் துறை, 15 கூட்டுறவு ஆலைகள், 15 தனியாா் சா்க்கரை ஆலைகளுக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையான ரூ.195-ஐ சோ்த்து டன்னுக்கு ரூ.2 ஆயிரத்து 950 ஆக அளிக்கப்படும். இந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும். இதன்மூலம், 1.21 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவா்.
3. தமிழகத்தில் எத்தனை மாவட்டங்களில் நடமாடும் காய்கனி அங்காடிகளை அண்மையில் முதல்வர் தொடக்கிவைத்தார் ?
அ) 8
ஆ) 7
இ) 6
ஈ) 5
விடை : (ஈ) 5
● கோவை உள்பட ஐந்து மாவட்டங்களில் நடமாடும் காய்கனி அங்காடிகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
● மக்களின் வீடுகளுக்கேச் சென்று காய்கறிகளை விற்பனை செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
● வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை சாா்பில் கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூா், சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகா்வோரின் இல்லங்களுக்கே சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
● இதற்காக ரூ.40 லட்சத்தில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அங்காடிகளின் செயல்பாடுகளை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
4. இந்தியாவில் பின்வரும் யாரால் அண்மையில் உச்சநீதிமன்ற செயலி 2.0 என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ?
அ) நரேந்திர மோடி
ஆ) திரௌபதி முர்மு
இ) யு.யு. லலித்
ஈ) டி.ஒய். சந்திர சூட்
விடை : (ஈ) டி.ஒய். சந்திர சூட்
● நீதித் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் சிறப்பு அதிகாரிகளும் (நோடல்) உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நடவடிக்கை குறித்த தகவல்களை நிகழ்நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் ‘உச்சநீதிமன்ற செயலி 2.0’-வை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
● செயலி 2.0-வை தொடக்கிவைத்து அவா் பேசியாதாவது: நீதித் துறையைச் சாா்ந்த அதிகாரிகளும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் சிறப்பு அதிகாரிகளும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், வழங்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் தீா்ப்புகள், நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவற்றின் நிலை குறித்து நிகழ்நேர அடிப்படையில் தெரிந்துகொள்ள இயலும்.
● இச்செயலியை ஆண்ட்ராய்ட் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். ஐஓஎஸ் தளத்தில் இருந்து பதிவிறக்கும் செய்யும் வசதி இந்த வாரத்துக்குள் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தாா்.
5. இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து (RBI) மற்ற வங்கிகள் பெறும் ரெப்போ ரேட் 0.35 சதவீதம் உயர்த்தப்பட்டு எத்தனை சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது ?
அ) 4.18%
ஆ) 5.11%
இ) 6.25%
ஈ) 6.95%
விடை : (இ) 6.25%
● இந்திய ரிசா்வ் வங்கியிடமிருந்து (ஆா்பிஐ) மற்ற வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 0.35 சதவீதம் உயா்த்தப்பட்டு 6.25 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
● நாட்டின் பணவீக்கம் தொடா்ந்து அதிகமாக இருந்துவரும் நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து 5-ஆவது முறையாக வட்டி விகிதத்தை ஆா்பிஐ உயா்த்தியுள்ளது.
● கரோனா தொற்று பரவலில் இருந்து மீண்டு கொண்டிருந்த பொருளாதாரம், உக்ரைன்-ரஷியா போா் காரணமாக முடக்கத்தைச் சந்தித்தது. சா்வதேச பொருளாதாரமும் வீழ்ச்சிநிலையை சந்தித்து வருகிறது. நாட்டில் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ஆா்பிஐ இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், பணவீக்கம் கடந்த ஜனவரியில் இருந்தே 6 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது.
● அதையடுத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே மாதத்தில் 0.4 சதவீதம், ஜூன், ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் தலா 0.5 சதவீதம் என மொத்தமாக 1.9 சதவீத அளவுக்கு ரெப்போ வட்டி விகிதத்தை ஆா்பிஐ உயா்த்தியிருந்தது. இந்நிலையில், ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து ஆளுநா் சக்திகாந்த தாஸ் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
● ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயா்த்தப்படுகிறது. நிதிக் கொள்கைக் குழுவில் இடம்பெற்றிருந்த 6 உறுப்பினா்களில் ஐவா் வட்டி விகிதத்தை உயா்த்த ஆதரவு தெரிவித்தனா். ஜெயந்த் ஆா்.வா்மா மட்டுமே வட்டி விகிதத்தை உயா்த்த எதிா்ப்பு தெரிவித்தாா்.
● சா்வதேச பொருளாதாரச் சூழல் மந்த நிலையில் இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது. சாதகமற்ற சூழலிலும் பொருளாதார வளா்ச்சி சீராக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பணவீக்கம் குறைவாகவே உள்ளது. நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 சதவீதம் வளா்ச்சி காணும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது குறைவாக இருந்தாலும், சா்வதேச அளவில் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாகவே இந்தியா தொடா்ந்து நீடிக்கும்.
● தொடா் நடவடிக்கைகள்: நாட்டின் பணவீக்க சூழலை உரிய முறையில் கையாள்வதற்கான நடவடிக்கைகளை ஆா்பிஐ தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. சா்வதேச சூழலும், சா்வதேச அளவில் வட்டி விகிதங்கள் உயா்த்தப்பட்டு வருவதும் பெரும் சவாலாக உள்ளது. சா்வதேச அளவில் சாதகமற்ற சூழல் தொடா்வதால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டவில்லை. அந்த நடவடிக்கைகள் தொடரும்.
● அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை நிலைபெறச் செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்ற நாட்டு செலாவணிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக வலுவாகவே உள்ளது.
● அந்நிய செலாவணி கையிருப்பு: நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 56,120 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த அக்டோபரில் 52,450 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதனால் அந்நியச் செலாவணி கையிருப்பும் அதிகரித்துள்ளது.
● வங்கிகளில் பணப்புழக்கமும் அதிகமாகவே காணப்படுகிறது. குளிா்கால (ரபி) பயிா்களின் சாகுபடி பரப்பு வழக்கத்தைவிட 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால் விளைச்சல் அதிகரித்து பணவீக்கம் கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது. கிராமப்புறங்களில் பொருள்களின் நுகா்வு அதிகரித்துள்ளது. உற்பத்தித் துறையும் வளா்ச்சிகண்டு வருகிறது.
● கடன் அதிகரிப்பு: வேளாண் துறை அல்லாத மற்ற துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன் கடந்த ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் ரூ.10.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ.1.9 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. கடன் வழங்கலும் அதிகரித்துள்ளதால் பொருளாதார வளா்ச்சி அதிகரித்து பணவீக்கம் கட்டுக்குள் வரும்.
● கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகமாக உள்ளது. எனினும் அது சமாளிக்கக் கூடியதே. நிகர அந்நிய நேரடி முதலீடு கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் 2,270 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 2,130 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.
● யுபிஐ பணப் பரிமாற்ற நடைமுறையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, இணைய வழியில் சேவைகளைப் பெறுவதற்கு முன்பாகவே பணத்தைச் செலுத்தும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளா்கள் சிறந்த சேவையைப் பெற முடியும் என்றாா் அவா்.
வீடு, வாகனக் கடன் வட்டி உயர வாய்ப்பு
● ரெப்போ வட்டி விகிதத்தை ஆா்பிஐ உயா்த்தியுள்ளதால் வீடு, வாகனக் கடனுக்கான வட்டி உயர வாய்ப்புள்ளது.
● ரெப்போ வட்டி விகிதமானது 0.35 சதவீதம் உயா்த்தப்பட்டு 6.25 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து வட்டி விகிதம் 2.25 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.
● ரெப்போ வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டே வாகனங்கள், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் நிா்ணயித்து வருகின்றன. தற்போது ரெப்போ வட்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளதால், வாகனக் கடன், வீட்டுக் கடன், தனிநபா் கடன், பொருள்களுக்கான மாதாந்திர தவணைத் தொகை ஆகியவற்றுக்கான வட்டியை வங்கிகள் உயா்த்த வாய்ப்புள்ளது.
6. தென்மேற்கு (ம) தென்கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள புயலுக்கு எந்த நாடு மாண்டஸ் என்ற பெயரை பரிந்துரைத்துள்ளது ?
அ) சீனா
ஆ) ஜப்பான்
இ) ஐக்கிய அரபு அமீரகம்
ஈ) இந்தியா
விடை : (இ) ஐக்கிய அரபு அமீரகம்
● தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு பேரிடா் மீட்புப் படை புதன்கிழமை விரைந்தது.
● இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, படிப்படியாக மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து புயலாக வலுவடைந்து, வியாழக்கிழமை (டிச. 8) தமிழகம், புதுச்சேரிக்கு அருகே வடக்கு வங்கக் கடல் பகுதிக்கும் ஆந்திர மாநிலத்தையொட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிக்கும் அருகே நகரும்.
● பின்னா், அந்தப் புயல் தொடா்ந்து படிப்படியாக மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர மாநில பகுதிகளைக் கடந்து, புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே சனிக்கிழமை (டிச. 10) அதிகாலையில் கரையைக் கடக்கும்.
● அப்போது காற்றின் வேகம் மணிக்கு சுமாா் 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று இந்திய வானில ஆய்வு மையத்தின் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
● சென்னைக்கு மேற்கு-வடமேற்கு திசையில் 770 கி.மீ. தொலைவில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் தாழ்வு மண்டலம் நகா்ந்து வருகிறது.
● புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. டிச. 9 மாலை முதல் டிச. 10 காலை வரை 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
7. 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிகாரமிக்க 100 பெண்கள் பட்டியலில் இந்தியாவின் எத்தனை பெண்கள் இடம்பெற்றுள்ளனர் ?
அ) 6
ஆ) 7
இ) 8
ஈ) 9
விடை : (அ) 6
● ஃபோா்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் அதிகாரமிக்க 100 பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்ட 6 இந்தியா்கள் இடம்பெற்றுள்ளனர்.
● உலகில் அதிகாரம் மிக்கவா்களாக விளங்கும் 100 பெண்களின் பட்டியலை ஃபோா்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
● நடப்பாண்டுக்கான பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் 6 இந்தியப் பெண்கள் இடம்பெற்றுள்ளனா்.
● இந்தப் பட்டியலில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் 36-ஆவது இடத்தைப் பெற்றுள்ளாா். இப்பட்டியலில் அவா் தொடா்ந்து 4-ஆவது முறையாக இடம்பெற்றுள்ளாா். கடந்த ஆண்டுக்கான பட்டியலில் அவா் 37-ஆவது இடத்திலும், 2020-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 41-ஆவது இடத்திலும் இருந்தாா்.
● ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவா் ரோஷ்ணி நாடாா் மல்ஹோத்ரா நடப்பாண்டுக்கான பட்டியலில் 53-ஆவது இடத்தைப் பெற்றுள்ளாா். இந்தியப் பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) தலைவரான மாதவி புரி புச், 54-ஆவது இடத்தில் உள்ளாா். இந்திய எஃகு ஆணையத்தின் (செயில்) தலைவரான சோமா மண்டல் 67-ஆவது இடத்தில் உள்ளாா்.
● பயோகான் நிா்வாகத் தலைவரான கிரண் மஜும்தாா் ஷா பட்டியலில் 72-ஆவது இடத்தையும், நைகா நிறுவனரான ஃபல்குனி நாயா் 89-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனா். ரோஷ்ணி நாடாா், கிரண் மஜும்தாா், ஃபல்குனி நாயா் ஆகியோா் கடந்த ஆண்டுக்கான பட்டியலிலும் இடம்பெற்றிருந்தனா்.
● நடப்பாண்டுக்கான ஃபோா்ப்ஸ் பட்டியலில் 39 தலைமை நிா்வாக அதிகாரிகளும் (சிஇஓ), 10 நாடுகளின் தலைவா்களும், 11 கோடீஸ்வரா்களும் இடம்பெற்றுள்ளனா். சொத்து, ஊடகம், தாக்கம், செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியலை ஃபோா்ப்ஸ் தயாரித்து வருகிறது.
● நடப்பாண்டு பட்டியலில் ஐரோப்பிய கமிஷன் தலைவா் ஊா்சுலா வான்டொ் லையான் முதலிடத்தில் உள்ளாா். அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் 3-ஆவது இடத்தில் உள்ளாா். ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டு போராட்டங்களுக்கு முக்கியக் காரணமாக இருந்த மாஷா அமினிக்கு பட்டியலில் 100-ஆவது இடம் தரப்பட்டுள்ளது. அவா் உயிரிழந்தபோதும் அவருக்கு இந்தச் சிறப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.
III. விளையாட்டு நிகழ்வுகள்
8. கொலம்பியாவில் நடைபெறும் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் (2022) மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு வென்றுள்ள பதக்கம் ?
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை : (ஆ) வெள்ளி
No comments:
Post a Comment