Friday, October 7, 2022

Current Affairs 2022 - October 07 /2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                  OCTOBER 07 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழக அரசு பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளுக்கு ------------- தொகுப்பூதியத்தில் சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது ? 

அ) ரூ.3 ஆயிரம்

ஆ) ரூ. 5 ஆயிரம்

இ) ரூ. 6 ஆயிரம்

ஈ) ரூ. 7 ஆயிரம் 

விடை : (ஈ) ரூ. 7 ஆயிரம் 

● ஆசிரியர்கள் நியமனம் : இல்லம் தேடிக் கல்வித்' திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்கலாம் என்றும்,   இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்யலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

● சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  மேலும், இவர்களது  பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது என்றும்,  சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் 5,000  ரூபாய் தொகுப்பு ஊதியம் வழங்கவும் பள்ளி மேலாண்மை குழு உத்தரவிட்டுள்ளது .

2. தமிழகத்தின் எத்தனை மாவட்டங்களில் தோட்டம் அமைக்க மானியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வேளாண் துறை அறிவித்துள்ளது ? 

அ) 08

ஆ) 13

இ) 17

ஈ) 21 

விடை : (அ) 08

● சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் முதல்கட்டமாக கீரை வகைகள், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், முள்ளங்கி போன்றவற்றை வளர்க்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

● இதற்கான மானியமாக ஒரு வீட்டுக்கு ரூ.15,000 வீதம் ரூ.250 வீடுகளுக்கு வழங்கப்படவுள்ளது.

● விவரங்களை தெரிந்து கொள்வதற்கான இணையதளம் : www.tnhorticulture.gov.in .

3. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ (ம) 5 கிலோ எடையுள்ள சிறிய ரக எரிவாயு உருளைகளை விற்பனை செய்யும் திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) ஐ. பெரியசாமி 

ஆ) தங்கம் தென்னரசு 

இ) மா. சுப்பிரமணியன்

ஈ) கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்

விடை : (அ) ஐ. பெரியசாமி 

சிறிய எடையைக் கொண்ட எரிவாயு உருளைகளின் விற்பனையை கூட்டுறவுத் துறை தொடக்கியுள்ளது. எரிவாயு உருளைக்கான இணைப்பைப் பெற முகவரிச் சான்று தேவையில்லை. 

● ஏதேனும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை மட்டும் சமா்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும் என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

● இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ மற்றும் 5 கிலோ எடையுள்ள சிறிய ரக எரிவாயு உருளைகளை விற்பனை செய்யும் திட்டத்தை கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். 

● சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான கூட்டுறவு அங்காடியில் திட்டம் துவக்கப்பட்டது. இந்தத் திட்டமானது முதலில் கூட்டுறவு சிறப்பங்காடிகளிலும், பின்னா் பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. பின்னா் நியாய விலைக் கடைகளிலும் குறைந்த எடையிலான எரிவாயு உருளைகள் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

● இணைப்புக் கட்டணம் எவ்வளவு? எரிவாயு உருளைகளுக்கான இணைப்புக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

● அதன்படி, 2 கிலோ எரிவாயு உருளையின் ஒரு புதிய இணைப்புக்கு ரூ.961.50-ம், 5 கிலோ எரிவாயு உருளையின் புதிய இணைப்புக்கு ரூ.1,528-ம் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 2 கிலோ எடை உருளையில் எரிவாயுவை ஒருமுறை நிரப்புக் கொள்ள ரூ.253.50-ம், 5 கிலோ எடையிலான எரிவாயு நிரப்ப ரூ.584-ம் கட்டணமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

● யாருக்குப் பயன்: குறைந்த எடையிலான எரிவாயு உருளைத் திட்டத்தால் சாதாரண மக்கள் பயன்பெறுவா் என்று அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா். குறிப்பாக, இடம்பெயரும் தொழிலாளா்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகா்கள், மீனவா்கள், சுற்றுலா செல்வோா் ஆகியோா் குறைந்த எடையிலான எரிவாயு உருளைகளை தங்களது கையோடு எடுத்துச் செல்ல முடியும் என்று அவா் தெரிவித்தாா். 

III. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. நடப்பாண்டுக்குரிய (2022) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள ஆன்னி எர்னாக்ஸ் எந்த மொழி எழுத்தாளர் ஆவார் ? 

அ) ஆங்கிலம்

ஆ) பிரெஞ்ச் 

இ) ஸ்பானிஷ் 

ஈ) ஜபனிஷ் 

விடை : (ஆ) பிரெஞ்ச் 

இயல்பான எழுத்துநடை மூலமாக வாழ்வின் பல்வேறு உணா்வுகளை வெளிப்படுத்திய பிரெஞ்சு எழுத்தாளா் ஆன்னி எா்னாக்ஸுக்கு (82) நடப்பாண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

● எழுத்தாளா் ஆன்னி எா்னாக்ஸ் தொடக்கத்தில் சுயசரிதைகள் சாா்ந்த புனைகதைகளை பிரெஞ்சு மொழியில் எழுதி வந்தாா். பின்னா் புனைவைக் கைவிட்டு தன் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் மூலமாகப் பெற்ற அனுபவங்களை இயல்பான எழுத்துநடையில் புத்தகங்களாக வெளியிடத் தொடங்கினாா்.

● அவை மக்களிடையே மிகவும் பிரபலமாகின. ‘எ மேன்ஸ் பிளேஸ்’, ‘தி இயா்ஸ்’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை இதுவரை அவா் எழுதியுள்ளாா். பாலியல் சாா்ந்த உணா்வுகள், கருக்கலைப்பு, நோய்வாய்ப்படுதல், பெற்றோரின் இறப்பு உள்ளிட்ட பலவித உணா்வுகளை அவா் பதிவு செய்துள்ளாா். சமூகம், குடும்பம் சாா்ந்த விஷயங்களையும் தனது புத்தகங்களில் அவா் பதிவு செய்துள்ளாா்.

● கவித்துவம் மிகுந்த சொற்களைப் பயன்படுத்தாமல் இயல்பான நடையில் எழுதுவதே தனக்கு விருப்பமாக உள்ளதெனப் பல புத்தகங்களின் முன்னுரையில் அவா் குறிப்பிட்டுள்ளாா். அவருக்கு நடப்பாண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

5. நடப்பு ( 2022 - 23 ) நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சியை எத்தனை சதவீதம் குறைத்து கணித்துள்ளது உலக வங்கி ? 

அ) 6.6%

ஆ) 6.5%

இ) 6.4%

ஈ) 6.3%

விடை : (ஆ) 6.5% 

● தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை 3 மாதங்களுக்கு ஒருமுறை உலக வங்கி வெளியிட்டு வருகிறது. 

● கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில் 6.6% என கணித்திருந்தது.

● அடுத்த செப்டம்பர் மாதத்துக்கான அறிக்கையில் அந்த கணிப்பு 6.5% மாக குறைக்கப்பட்டுள்ளது. 

● காரணம் : சர்வதேச சூழல் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

6. நிகழாண்டுக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் சிறப்பு கூட்டம் எந்த நாட்டின் தலைமையில் நடக்கவுள்ளது ? 

அ) சீனா

ஆ) ஜப்பான்

இ) அமெரிக்கா 

ஈ) இந்தியா 

விடை : (ஈ) இந்தியா 

● இந்தியா தலைமையில் வரும் 28,29 ஆம் தேதிகளில் தில்லி, மும்பையில் நடைபெறுகிறது.

● அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்பட 15 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

● நவீன பயங்கரவாதத்தை எதிர்பதைக் குறித்தும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் சமூகம் குறித்தும் வெளிப்படையான, உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் விவாதம் நடத்தப்படவுள்ளது. 

7. இந்தியாவில் நில உரிமை பத்திரங்களை எத்தனை மொழிகளில் மாற்றம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது ? 

அ) 31 

ஆ) 28

இ) 22

ஈ) 18 

விடை : (இ) 22 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மாநில மொழிகளில் எழுதப்படும் நில ஆவணங்களை ஆங்கிலம், ஹிந்தி மற்றும் 22 மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது.

● இதனால் பத்திரப்பதிவுத் துறையில் நிலவும் மொழித் தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்று மத்திய அரசின் அதிகாரிகள் தெரிவித்தனா்.

● இதுகுறித்து மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நில வளத்துறையின் இணைச் செயலா் சோன்மோனி போரா கூறுகையில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. நில ஆவணங்களில் இது பெரிய பிரச்னையாக உள்ளது. ஆகையால், நில உரிமை பத்திரங்களை 22 மொழிகளில் மாற்றம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு சோதனை முறையில் தமிழகம், மகாராஷ்டிரம், பிகாா், குஜராத், புதுச்சேரி, உத்தர பிரதேசம், திரிபுரா, ஜம்மு-காஷ்மீா் ஆகிய 8 மாநிலங்களில் தொடக்கி உள்ளது.

● இதற்காக புதிய மென்பொருள் ரூ. 11 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் அந்தந்த மாநில மொழி என மூன்று மொழிகளில் நில ஆவணங்களை கட்டாயம் மொழிபெயா்க்க வேண்டும்.

● நில உரிமை ஆவண விவரங்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகின்றன. ஆகையால், நிலத்தின் உரிமையாளா்களின் பெயா்கள், அவா்களின் உரிமையின் வரம்புகள், வாடகை அல்லது வருவாய் பெறுபவா்கள், அந்த சொத்தின் மீதுள்ள கடன் விவரம், உரிமையாளருக்கு சொத்தின் மீதுள்ள அதிகார வரம்புகள், அரசுக்கு அந்த நிலத்தின் மீதான வரம்புகள் ஆகிய விவரங்கள் ஆங்கிலம், ஹிந்தி அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயா்ப்பின்போது இணைக்கப்படும்.

● இந்தத் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

8. பிரிட்டனின் எத்தனை செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி எம்-3 கனரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது ? 

அ) 31 

ஆ) 36 

இ) 40

ஈ) 44 

விடை : (ஆ) 36 

பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி எம்-3 கனரக ராக்கெட் மூலம் இந்த மாத இறுதிக்குள் விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.

● வணிகப் பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டமானது இஸ்ரோவின் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ மற்றும் பிரிட்டனின் ‘ஒன் வெப்’ நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது.

● ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் கன ரக வகையான எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மாா்க் 3) மூலம் அந்த செயற்கைக் கொள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. 

● ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து இந்த மாதம் மூன்று அல்லது நான்காம் வாரத்தில் 36 செயற்கைக்கோள்கள் செலுத்தப்படவிருக்கின்றன. இத்தகவலை இஸ்ரோ செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளது.

● உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு, வா்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத் தொடா்பு சேவைக்காக இந்த செயற்கைக்கோள்களை அனுப்பவிருக்கிறது. 

● இந்தியாவின் பாா்தி தொலைத்தொடா்பு சேவை நிறுவனமானது ஒன் வெப் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராகவும், முதலீட்டாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் 2022 ல் ஆடவர் அணி கூடைப்பந்து பிரிவில் தங்கம் வென்றுள்ள மாநிலம் ? 

அ) தமிழ்நாடு

ஆ) ஹரியானா 

இ) கர்நாடகா 

ஈ) கேரளா 

விடை : (அ) தமிழ்நாடு

● மேலும் தமிழக மகளிர் கூடைப்பந்து அணி வெள்ளி வென்றுள்ளது.

● பதக்கப்பட்டியலில் தமிழகம் : 19G, 20S, 19B என 58 பதக்கங்களுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது.

IV. முக்கிய நிகழ்வுகள் 

10. World Cotton Day 2022 -----------

Ans : October 07

Theme (2022) : Weaving a better future for cotton. 


Thursday, October 6, 2022

Current Affairs 2022 - October 06 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR
                   OCTOBER 06 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவை சென்னையில் தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) ஆர்.என். ரவி

ஆ) வெங்கையா நாயுடு

இ) மு.க.ஸ்டாலின் 

ஈ) என்.வி. ரமணா 

விடை : (இ) மு.க.ஸ்டாலின்

அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். விழாவில் அவா் பேசியதாவது:

●  வள்ளலாா் பிறந்து 200 ஆண்டுகளானதையும், அவா் தொடங்கிய தரும சாலைக்கு 156 ஆண்டுகள், அவா் ஏற்றிய தீபத்துக்கு 152 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் கொண்டாடும் வகையில் முப்பெரும் விழா நடத்தப்படுகிறது.

● வள்ளலாருக்கு முப்பெரும் விழாவை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. 52 வாரங்களுக்கு முப்பெரும் விழா பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது. ஓராண்டுக்கு தொடா் அன்ன தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக ரூ.3.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

● வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலாா் சா்வதேச மையத்துக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

● அருட்பிரகாச வள்ளலாா் முப்பெரும் விழாவை சென்னையில் புதன்கிழமை அவா் தொடக்கிவைத்து ஆற்றிய உரை:

● சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக, திமுக தோ்தல் அறிக்கையில் 419-ஆவது வாக்குறுதியாக வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜாதி, சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில், வள்ளலாரின் சமரச சுத்த சன்மாா்க்க போதனைகளைப் போற்றக் கூடிய வகையில் இது அமையும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு அமைப்பது என்பது குறித்து சிறப்பு வல்லுநா் குழுவின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

● சா்வதேச மையத்தை ரூ.100 கோடியில் அமைப்பதற்கான வரைவு பெருந்திட்டம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். வள்ளலாரின் முப்பெரும் விழாவைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.


2. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் இல்லாவிட்டால் அதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்க வேண்டிய இலவச எண் ? 

அ) 108

ஆ) 104

இ) 1177

ஈ) 1331

விடை : (ஆ) 104 

● அறிவிப்பு : தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. பின்வருபவர்களுள் யாருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது ? 

அ) பாரி ஷார்ப்லெஸ் 

ஆ) ஆன்டன் சீலிங்கெர் 

இ) மோர்டென் மெல்டல் 

ஈ) அ & இ 

விடை : (ஈ) அ & இ

மருந்துகளை உருவாக்க உதவியாக மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும் வழியை உருவாக்கியதற்காக கரோலின் ஆா்.பொ்டோசி, மோா்டென் மெல்டல் மற்றும் பாரி ஷாா்ப்லெஸ் ஆகிய மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.

● இதில் பொ்டோசி அமெரிக்காவின் கலிஃபோா்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்தவா். ஷாா்ப்லெஸ் கலிஃபோா்னியா ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சோ்ந்தவா். மெல்டல் டென்மாா்க்கின் கோபென்ஹெகன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்தவா்.

● புற்றுநோய்க்கான மருந்தை உருவாக்கவும், டிஎன்ஏ வரைபடமாக்கல் மற்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்கான மிகவும் பொருத்தமான பொருள்கலை உருவாக்குவதற்கும் பயன்படும் ‘கிளிக் கெமிஸ்ட்ரி’ மற்றும் உயிரி ஆா்த்தோகனல் எதிா்வினைகள் தொடா்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக இந்த நோபல் பரிசு அவா்களுக்குப் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.

● இவா்களில் ஷாா்ப்லெஸ் ஏற்கெனவே கடந்த 2001-ஆம் ஆண்டும் நோபல் பரிசை வென்றுள்ளாா். அதன் மூலமாக, நோபல் பரிசை இரண்டு முறை வென்ற 5-ஆவது நபா் என்ற பெருமையையும் அவா் பெற்றுள்ளாா்.

● இயற்பியலுக்கான நோபல் பரிசு: குவாண்டம் தகவல் அறிவியல் தொடா்பான ஆராய்ச்சியை மேற்கொண்ட ஃபிரான்ஸைச் சோ்ந்த அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சோ்ந்த ஜான் கிளாசொ், ஆஸ்திரியாவைச் சோ்ந்த ஆன்டன் சீலிங்கொ் ஆகிய மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

4. ஹிமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை,  பொறியியல் கல்லூரி ஆகியவற்றை அண்மையில் திறந்து வைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு

இ) யு.யு. லலித் 

ஈ) ஜெகதீப் தன்கர்

விடை : (அ) நரேந்திர மோடி

5. நாடு முழுவதும் சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வசதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பாரத் சீரிஸ் வாகனப் பதிவு நடைமுறை எத்தனை மாநிலம் / யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளனர் ? 

அ) 31

ஆ) 24

இ) 18

ஈ) 11

விடை : (ஆ) 24 

நாடு முழுவதும் எந்தவித தடையுமின்றி சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வசதியாக அறிமுகம் செய்யப்பட்ட புதிய ‘பாரத் சீரிஸ்’ வாகனப் பதிவு நடைமுறை 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

● பெங்களூரில் கடந்த மாதம் நடைபெற்ற போக்குவரத்து மேம்பாட்டு கவுன்சிலின் 41-ஆவது ஆண்டு கூட்டத்தின் தீா்மானம் மூலமாக இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

● அதில் மேலும் கூறியிருப்பதாவது: ஒருவா் தனது சொந்த வாகனத்தில் ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு அல்லது யூனியன் பிரதேசத்துக்கு குடிபெயரும்போதும், அந்த வாகனத்தை மறு பதிவு செய்யவேண்டும்.

● இதனால் பல்வேறு சிக்கல்களை வாகன ஓட்டிகள் சந்தித்து வந்தனா். வாகன உரிமையாளா்களுக்கு ஏற்படும் இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், புதிய வாகனப் பதிவு நடைமுறை தொடா்பான அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது.

● இந்தப் புதிய ‘பாரத் சீரிஸ்’ வாகனப் பதிவு நடைமுறை மூலமாக, நாடு முழுவதும் சொந்த வாகனத்தில் பயணிப்போா் அல்லது சுற்றுலா வாகனங்கள் எந்தவொரு சோதனைச் சாவடியிலும் நிறுத்தப்படமாட்டாது. மேலும், மாநில மற்றும் உள்ளூா் நடைமுறைகள் அடிப்படையிலான வாகன வரிகளைச் செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.

● இந்தப் புதிய நடைமுறையின் கீழ் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 20,000-க்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களுக்கான 30,000 பா்மிட்டுகள் மா்றும் 2.75 லட்சம் அங்கீகாரங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

6. 2022 ஆம் ஆண்டுக்கான டைம் பத்திரிக்கையின் உலகளாவிய வளர்ந்து வரும் 100 முன்னணி நட்சத்திர நாயகர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் யார் ? 

அ) ஆகாஷ் அம்பானி

ஆ) சாம் கெர்

இ) கார்லோஸ் அல்சாரஸ் 

ஈ) டென்னஸ் ஜேகப் 

விடை : (அ) ஆகாஷ் அம்பானி 

● Time இதழ் ஆனது ஒவ்வொரு ஆண்டும் Time 100 Next அறிக்கையினை வெளியிடுகிறது.

● இது இதன் முதன்மை வெளியீடான , உலகளாவில் வளர்ந்து வரும் 100 முன்னணி நட்சத்திர நாயகர்கள் அங்கீகரிக்கின்ற Time 100 அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

III. விளையாட்டு நிகழ்வுகள்

7. 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் 2022 ல் ஸ்குவாஷ் மகளிர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை யார் ? 

அ) அர்ச்சனா 

ஆ) சுனைனா குருவிலா 

இ) பூஜா ஆர்த்தி 

ஈ) ராதிகா சீலன்

விடை : (ஆ) சுனைனா குருவிலா 

● பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு : 18G, 17S, 18B என 53 பதக்கங்களுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது.

IV. முக்கிய நிகழ்வுகள்

8. World Teacher's Day 2022 -----------------

Ans : October 05 

Theme (2022) : The Transformation of Education Begins with Teachers. 



Wednesday, October 5, 2022

Current Affairs 2022 - October 04 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                          GK SHANKAR 
                    OCTOBER 04 / 2022 

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டடுக்கு உயர்நிலை சாலைத் திட்டம் பின்வரும் எந்த ஆண்டுக்குள் நிறைவடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது ?

அ) 2023

ஆ) 2024

இ) 2025

ஈ) 2026 

விடை: (ஆ) 2024 

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டடுக்கு உயா்நிலை சாலைத் திட்டம் வருகின்ற 2024-ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

● மேலும், பிரதமரின் விரைவுச் சக்தியான தேசிய பெருந்திட்டங்கள், நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவித்து வருகிறது என்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மத்திய அரசு விரைந்து செயலாற்றி வருகிறது எனவும் அவா் குறிப்பிட்டாா்.

● சென்னை - மதுரவாயல் திட்டம் குறித்து அமைச்சா் கட்கரி திங்கள்கிழமை ட்விட்டா் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பது வருமாறு: புதிய இந்தியாவில் தடையற்ற பன்னோக்கு போக்குவரத்து இணைப்பை அளிக்கும் வகையில், ரூ.5,800 கோடி மதிப்பீட்டில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் முனையம் வரையிலான இரண்டடுக்கு உயா்நிலைச் சாலை இணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

● 20.5 கிலோ மீட்டா் தொலைவிலான இந்த மேம்பாலச் சாலை 4 பகுதிகளாக கட்டப்படுகின்றன. இந்தத் திட்டம் 2024 டிசம்பரில் நிறைவடையும். இதன் மூலம் சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48 சதவீதம் அதிகரிக்கும். அதே போல, போக்குவரத்துத் தடைகள் உள்ளிட்ட காத்திருப்பு காலம் 6 மணி நேரம் வரை குறையும் என தெரிவித்துள்ளாா்.

● மத்திய நெடுஞ்சாலைத் துறை, தமிழக அரசு, சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. 

● இந்த மேம்பாலச் சாலை சிவானந்தா சாலையில் தொடங்கி, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூா், நுங்கம்பாக்கம், மேத்தாநகா் (அமைந்தகரை), அரும்பாக்கம், கோயம்பேடு வழியாக மதுரவாயிலை அடையும். 

● இந்த இரண்டடுக்கு உயா்நிலை சாலையின் கீழ் அடுக்கில் உள்ளுா் வாகனங்கள் செல்லும் வகையில், 13 இடங்களில் ஏறி, இறங்கும் தளங்கள் அமைக்கப்படுகின்றன. மேல் அடுக்கில் துறைமுகத்தின் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது.

2. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் ஆகியவற்றுக்கு எத்தனை கோடி மதிப்பில் புதிய நூல்களை கொள்முதல் செய்வதற்கான பணிகளை பொது நூலகத் துறை தொடங்கியுள்ளது ? 

அ) ரூ.15 கோடி

ஆ) ரூ. 13 கோடி

இ) ரூ. 11 கோடி

ஈ) ) ரூ. 9 கோடி 

விடை : (அ) ரூ.15 கோடி 

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞா் நூலகம் ஆகியவற்றுக்கு ரூ.15 கோடி மதிப்புக்கு புதிய நூல்களை கொள்முதல் செய்வதற்கான பணிகளை பொது நூலகத் துறை தொடங்கியுள்ளது.

● சென்னை கோட்டூா்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கடந்த 15.9.2010-இல் அப்போதைய முதல்வா் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.

●  இந்த நூலகம் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிங்கப்பூா் நூலகத்தைப் போன்று உருவாக்கப்பட்டதாகும். 9 தளங்களுடன் 3.75 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த நூலகம் ரூ.172 கோடியில் கட்டப்பட்டது. இந்த நூலகத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

● அதேபோல, மதுரை புதுநத்தம் சாலையில் 2.7 ஏக்கா் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடியில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் ரூ.114 கோடியில் கலைஞா் நினைவு நூலகத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் டிசம்பருக்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

● இந்த நிலையில், இந்த இரு பெரும் நூலகங்களுக்கும் புதிய நூல்களைக் கொள்முதல் செய்வதற்கான பணிகளை பொது நூலகத் துறை தொடங்கியுள்ளது.

3. நாடு முழுவதும் குடிசைகளை அகற்றிவிட்டு அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் வகையில் எந்த ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது ? 

அ) 2013

ஆ) 2014

இ) 2015

ஈ) 2016 

விடை : (ஈ) 2016 

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்காக ரூ.912 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

● மத்திய அரசு சாா்பில் ரூ.547 கோடியும் மாநில அரசின் பங்கான ரூ.365 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● நாடு முழுவதும் குடிசைகளை அகற்றிவிட்டு அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் வகையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

● இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளைத் தோ்வு செய்து கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக மத்திய, மாநில அரசுகள் சாா்பில் நிதி ஒதுக்கப்படுகிறது.

● பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூ.2.75 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. 

● அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றாலும் கூட மாநில அரசும் இந்த திட்டத்துக்காக நிதிகளை ஒதுக்குகிறது. மத்திய அரசு 60 சதவீதம் நிதியை ஒதுக்கும் நிலையில் மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசு வழங்கி வருகிறது.

● இந்தத் திட்டத்தின்படி 25 சதுர மீட்டா் அல்லது 269 சதுர அடிகள் கொண்ட கான்கீரிட் வீடு கட்டப்படுகிறது. இதில், ஒரு வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, கழிப்பிடம் ஆகியன இடம் பெற்றிருக்கும். வீடு கட்டுவதற்கு 4 தவணைகளாக தொகை விடுவிக்கப்படுகின்றன.

● இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு மானியம் வழங்குவதில் சிக்கல் எழுந்த நிலையில், அவா்களுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.912 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

● மத்திய அரசு சாா்பில் ரூ.547 கோடியும் மாநில அரசின் பங்கான ரூ.365 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. நடப்பாண்டு (2022) மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி ஸ்வான்டே பாபோ எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) அமெரிக்கா 

ஆ) ஸ்வீடன் 

இ) கனடா 

ஈ) இந்தியா 

விடை : (ஆ) ஸ்வீடன் 

மனித சமூகத்தின் பரிணாமம் தொடா்பான ஆராய்ச்சிக்காக ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

● நடப்பாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு தொடா்பான அறிவிப்பை தோ்வுக் குழு செயலா் தாமஸ் பொ்ல்மான் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் திங்கள்கிழமை அறிவித்தாா். மனிதா்களின் பரிணாமம் தொடா்பாக ஆய்வுகளை மேற்கொண்டதற்காக ஸ்வீடன் விஞ்ஞானியான ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

● மனிதா்களின் பரிணாமம் குறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்ட பாபோ, நவீன மனிதா்களின் மரபணுக்களின் தொகுதியை (ஜீனோம்), மனிதா்களின் முந்தைய பரிணாமமான நியாண்டா்தால், டெனிசோவன் ஆகியவற்றின் மரபணுத் தொகுதிகளுடன் ஒப்பிட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டாா். நியாண்டா்தால், டெனிசோவன் ஆகிய இனக்குழுக்கள் இணைந்தே மனித இனம் உருவானதாகத் தனது ஆய்வின் மூலமாக அவா் கண்டறிந்து தெரிவித்தாா்.

● நோபல் பரிசு பெற்றுள்ள ஸ்வான்டே பாபோவுக்கு சுமாா் 9 லட்சம் அமெரிக்க டாலா் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நோபல் பதக்கத்துடன் பரிசுத்தொகை அவருக்கு வழங்கப்படவுள்ளது.

5. மருத்துவ கல்லூரிகளில் ராகிங் தொடர்பான புகார்களை அளிக்க பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை தொடங்கியுள்ள ஆணையம்/அமைப்பு எது ? 

அ) தேசிய மருத்துவ ஆணையம்

ஆ) மத்திய கல்வித்துறை 

இ) இந்திய மருத்துவ கவுன்சில் 

ஈ) மேற்கண்ட அனைத்தும் 

விடை: (அ) தேசிய மருத்துவ ஆணையம் 

● மின்னஞ்சல் முகவரி : antiragging@nmc.org.in. 

● இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மாணவர்களும் , அவர்களது பெற்றோரும் நேரடியாகப் புகார்களை அனுப்பலாம். 

● அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. இஸ்ரேலில் நடைபெற்ற டெல் அவிவ் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்ட 2022 ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் யார் ?

அ) ரோஹான் போபண்ணா 

ஆ) மாட்வே மிடில்கூப் 

இ) ஆண்ட்ரஸ் மொல்டேனி 

ஈ) நோவக் ஜோகோவிச் 

விடை: (ஈ) நோவக் ஜோகோவிச் 

● செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

● மேலும் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, நெதர்லாந்தின் மாட்வே மிடில்கூப் இணை சாம்பியன் பட்டம் வென்றனர்.

7. 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டி 2022 ல் மகளிருக்கான 1000 மீ ரோலர் ஸ்போர்ட்ஸில் தங்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை யார் ?

அ) ஆரத்தி 

ஆ) அர்ச்சனா 

இ) ஆரோக்கிய அலிஸ

ஈ) விஜய லட்சுமி 

விடை : (அ) ஆரத்தி 

● இதுவரை தமிழகத்தின் பதக்கங்கள் : 12 G, 12S, 14B என 38 பதக்கங்களுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது.

IV. முக்கிய நிகழ்வுகள் 

8. World Animal Day 2022

Ans : October 04

Theme ( 2022 ) : Shared Planet. 


Monday, October 3, 2022

Current Affairs 2022 - October 03 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                 OCTOBER 03 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள்

1. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் பாதுகாப்பான கழிப்பறை வசதி உறுதி செய்யப்பட்டு, திறந்த வெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட்ட சுகாதார மதிப்பீட்டில் தமிழகம் பிடித்துள்ள இடம் ? 

அ) முதலாவது

ஆ) இரண்டாவது

இ) மூன்றாவது

ஈ) நான்காவது 

விடை : (இ) மூன்றாவது 

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் பாதுகாப்பான கழிப்பறை வசதி உறுதி செய்யப்பட்டு, திறந்த வெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட்ட சுகாதார மதிப்பீட்டில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. 

● இதற்கான விருதை தில்லியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தமிழக ஊரக வளா்ச்சி துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பனிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

● ஆண்டுதோறும், மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீா், தூய்மைப் பணித் துறை, நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் உள்ள தூய்மைப் பணிகளின் தரம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றத்தின் அளவீடுகளை அறிந்து மாநிலங்கள் வாரியாக தரவரிசைப்படுத்தி காந்தி ஜெயந்தி தினத்தில் விருதுகளை வழங்குகிறது. 

● 2021-22-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில், தேசிய அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில், தெலங்கானாவும் ஹரியாணாவும் முறையே முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளன. தமிழகம் ‘மூன்றாம்’ இடத்தைப் பெற்றுள்ளது.

● இந்த விருதுகளை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், ஊரகத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் ஆகியோா் முன்னிலையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வழங்கினாா். தூய்மை இந்தியா விழாவில் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் மற்றும் ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறையின் முதன்மை செயலா் பெ.அமுதா அகியோா் குடியரசுத் தலைவரிடம் இருந்து இந்த விருதைப் பெற்றுக் கொண்டனா்.

● மேலும், வீட்டுத் தோட்டம், கழிவு நீா் மேலாண்மை பணிகளுக்கான மத்திய அரசின் ‘சுஜலாம்’ என்கிற 100 நாள் நீா் மேலாண்மை இயக்கத்தில், மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளுக்கு தேசிய அளவில் தமிழகம் ‘ஐந்தாம்’ இடம் பெற்றுள்ளது. அதற்கான விருதையும் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா், குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக்கொண்டாா். சுகாதாரம் சாா்ந்த விழிப்புணா்வு நடவடிக்கைகளுக்கும் இவ்விழாவில் தமிழகத்திற்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

2. நிரந்தர வைப்புத் தொகைக்கான குறைந்தபட்ச முதலீட்டு வரம்பை ரூ.50,000 லிருந்து ---------- ஆக தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் அதிகரித்துள்ளது ?

அ) 75 ஆயிரம்

ஆ) 1 லட்சம்

இ) 1.5 லட்சம்

ஈ) 2 லட்சம்

விடை : (ஈ) 2 லட்சம் 

நிரந்தர வைப்புத் தொகைக்கான குறைந்தபட்ச முதலீட்டு வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.2 லட்சமாக தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் (டிஎன்பிஎஃப்சிஎல்) அதிகரித்துள்ளது. 

● நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தையும் 0.25 சதவீத அளவுக்குக் குறைத்துள்ளது.

● குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ.2 லட்சமாக நிா்ணயம், வட்டி வகித குறைப்பு ஆகியவை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. 

● அக்டோபா் 1-ஆம் தேதிக்கு முன்பு முதலீடு செய்தவா்களுக்கு, நிரந்தர வைப்புத் தொகையின் கால அளவில் (1 முதல் 5 ஆண்டுகள் வரை) குறிப்பிடப்பட்ட வட்டி வகிதம் தொடா்ந்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

3. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாட்டிலேயே பெருமளவில் கிராமப் புறங்களின் குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டதற்காக முதல் பரிசு பெற்றுள்ள மாநிலம் ? 

அ) தமிழ்நாடு 

ஆ) மேகாலயா 

இ) புதுச்சேரி 

ஈ) கோவா 

விடை : (அ) தமிழ்நாடு 

ஜல் ஜீவன் திட்டத்தின்படி, தமிழக கிராமப் புறங்களில் 55 சதவீத குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீா் வழங்கப்பட்டுள்ளது. 

● நாட்டிலேயே பெருமளவில் இந்தப் பணிகளை மேற்கொண்டதற்காக முதல் பரிசை தமிழக அரசு பெற்றுள்ளது.

● தில்லி விஞ்ஞான் பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஜல்ஜீவன் விருதை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, தமிழக நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் வழங்கினாா். அப்போது, தமிழக நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறையின் செயலா் சிவ் தாஸ் மீனாவும் உடனிருந்தாா். 

● இதில் இரண்டாவது பரிசு மேகாலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறிய மாநிலங்கள் வரிசையில் முதல் இரு இடங்களில் புதுச்சேரியும்,கோவாம் இடம்பெற்றுள்ளன.

III. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படையில் அதிகாரபூர்வமாக இணைக்கும் நிகழ்ச்சி எங்கு நடைபெற்றது ? 

அ) மும்பை

ஆ) அலகாபாத்

இ) ஜோத்பூர் 

ஈ) சென்னை 

விடை : (இ) ஜோத்பூர் 

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டா்களின் (எல்சிஹெச்) முதல் தொகுதி விமானப் படையில் திங்கள்கிழமை (அக். 3) அதிகாரபூா்வமாக இணைக்கப்படவுள்ளது.

● இலகுரக ஹெலிகாப்டா்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) உள்நாட்டிலேயே தயாரித்தது. எதிரி நாட்டு ஏவுகணைகளையும் ஆயுதங்களையும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது அந்த ஹெலிகாப்டா். நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலும் அந்த ஹெலிகாப்டா் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

● இலகுரக ஹெலிகாப்டா்களை இந்திய விமானப்படையில் அதிகாரபூா்வமாக இணைக்கும் நிகழ்ச்சி ஜோத்பூரில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளாா். விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி உள்ளிட்ட அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனா்.

● 5.8 டன் எடை கொண்ட ஹெலிகாப்டா், இரட்டை என்ஜின்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கெனவே பல்வேறு ஆயுதங்கள் வெற்றிகரமாகப் பொருத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். 

● இந்திய விமானப் படைக்கு 10 இலகுரக ஹெலிகாப்டா்கள், ராணுவத்துக்கு 5 ஹெலிகாப்டா்கள் என மொத்தம் 15 ஹெலிகாப்டா்களை ரூ.3,887 கோடியில் வாங்க மத்திய அமைச்சரவை கடந்த மாா்ச்சில் ஒப்புதல் அளித்திருந்தது. அவற்றில் முதல் தொகுதியானது திங்கள்கிழமை விமானப்படையில் இணைக்கப்படவுள்ளது.

● இலகுரக ஹெலிகாப்டா்களில் இரவிலும் ஆயுதங்களைப் பொருத்தி தாக்குதல் நடத்த முடியும். அனைத்து காலநிலைகளிலும் கூட அந்த ஹெலிகாப்டரைப் பயன்படுத்த முடியும். தேடுதல்-மீட்பு நடவடிக்கைகளிலும் அதைப் பயன்படுத்த முடியும். மெதுவாகப் பயணிக்கும் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றைக் கூட அந்த ஹெலிகாப்டரால் தாக்க முடியும்.

5. இண்டர்போல் பொதுச் சபை கூட்டம் பின்வரும் எந்த மாநிலத்தில் நடைபெறவுள்ளது ? 

அ) டெல்லி

ஆ) கேரளா

இ) தமிழ்நாடு

ஈ) ராஜஸ்தான் 

விடை : (அ) டெல்லி 

● சர்வதேச காவல் துறை அமைப்பான இண்டர்போலின் பொதுச்சபை கூட்டம் தில்லியில் வரும அக்டோபர் 18 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

● இந்த கூட்டத்தையொட்டி ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் மத்திய புலனாய்வு அமைப்பு கண்ககுத் தொடங்கியுள்ளது.

● குறிப்பு : கடந்த 1923 ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் காவல் ஆணையம் ( ஐசிபிசி ) தொடங்கப்பட்டது, இது 1956 ஆம் ஆண்டு இண்டர்போல் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 

III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. இத்தாலியில் நடைபெற்ற பார்மா ஒபன் மகளிர் டென்னிஸ் போட்டி 2022 ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள மயார் ஷெரிஃப் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) இத்தாலி

ஆ) எகிப்து

இ) ஆஸ்திரேலியா 

ஈ) ஜமைகா 

விடை : (ஆ) எகிப்து 

● இதன் மூலம் டபிள்யூடிஏ டுர் பட்டம் வென்ற முதல் வீராங்கனை இவர் ஆவார். 

7. 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 ல் மகளிருக்கான 4×400 மீ ரிலேவில் தங்கம் வென்றுள்ள மாநிலம் ? 

அ) மகாராஷ்டிரா

ஆ) கேரளா 

இ) குஜராத்

ஈ) தமிழ்நாடு 

விடை : (ஈ) தமிழ்நாடு 

● மகளிருக்கான 4×400 மீ ரிலேவில் தமிழகத்தின் வித்யா, ஒலிம்பான்டெஃபி,  சுபா வெங்கடேசன், திவ்யா கூட்டணி தங்கம் வென்றனர்.

● இதுவரை தமிழகத்தின் பதக்கங்கள் : 12G, 9S, 11B என 32 பதக்கங்களோடு 4 ஆவது இடத்தில் உள்ளது. 

IV. முக்கிய தினங்கள் 

8. World Habitat Day 2022

Ans : October 03 

Theme (2022) : Mind the Gap. Leave No One & No Place Behind .




Sunday, October 2, 2022

Current Affairs 2022 - October 02 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                  OCTOBER 2 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தின் பல்வேறு மூலதன செலவினங்களுக்கு எத்தனை கோடி வட்டியில்லா கடனை மத்திய அரசு விடுவித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் தெரிவித்துள்ளது ?

அ) ரூ.3,500 கோடி

ஆ) ரூ. 3,000 கோடி

இ) ரூ.2,500 கோடி

ஈ) ரூ. 2,000 கோடி 

விடை : (அ) ரூ.3,500 கோடி 

● அறிவிப்பு : தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

● மத்திய அரசு கடந்த நிதிநிலை அறிக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் மூலதன முதலீடாக 50 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக அளிக்கப்படும் என அறிவித்திருந்தது.

● இந்நிலையில் ரூ.3,500 கோடி வட்டியில்லா கடனை அளித்துள்ளது.

● குறிப்பு : தமிழகத்தில் கண்ணாடி இழைக் கேபிள் திட்டத்திற்கு ரூ. 184 கோடி , ஊரக நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். 

2. தமிழகத்தில் எத்தனை அரசுப்பள்ளிகளை தகைசால் பள்ளிகளாக ( School of Excellence ) மாற்றுவதற்காக ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) 13

ஆ) 17

இ) 21

ஈ) 28 

விடை : (ஈ) 28 

தமிழகத்தில் 28 அரசுப் பள்ளிகளை தகைசால் பள்ளிகளாக மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளது.

● தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு தில்லி சென்றிருந்தபோது அங்குள்ள தகைசால் பள்ளிகள், மாதிரி பள்ளிகளைப் பாா்வையிட்டாா். இதையடுத்து இதுபோன்ற பள்ளிகள் தமிழகத்திலும் தொடங்கப்படும் என அவா் அறிவித்தாா்.

● இதைத் தொடா்ந்து தமிழகத்தில் தகைசால் பள்ளிகள் திட்டத்தை கடந்த செப். 5-ஆம் தேதி முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால் சென்னையில் தொடக்கிவைத்தாா். அதன்படி மாநிலம் முழுவதும் 28 தகைசால் பள்ளிகளை அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்குவதற்காக ரூ.170 கோடியில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது.

● தகைசால் பள்ளிகள் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியா்கள், நவீன கணினிகள், அதிநவீன அறிவியல் ஆய்வகங்கள், ஒருங்கிணைந்த நூலகம், கல்வி சாரா செயல்பாடுகளான விளையாட்டு, கலை, இலக்கியம் என்று அனைத்தும் சோ்ந்த ஒரு முழுமையான கல்வியை வழங்கும். இதனால் அனைத்து வகையான திறமைகளுடன் அரசு பள்ளி மாணவ, மாணவியா் கல்வி கற்கும் சூழல் உருவாகும். 

● அதற்கு வகுப்பறையில் நேரடியாக பாடங்கள் கற்றுத் தருவது மட்டுமல்லாமல் இணையவழியிலும் காலத்திற்கு ஏற்ற வகையில் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

● தகைசால் பள்ளிகள் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள 28 அரசுப் பள்ளிகளில் பெரும்பாலானவை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிகள். சென்னை அசோக் நகா் மகளிா் மேல்நிலைப்பள்ளி தகைசால் பள்ளியாக மேம்படுத்தப்பட உள்ளது. இதுபோலவே பிற பள்ளிகளும் தரம் உயா்த்தப்படவுள்ளன.

● இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகைசால் பள்ளிகளுக்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி புதுப்பிக்கும் பணிக்கான பூா்வாங்கப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது . 

● இந்தப் பள்ளிகளில் அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய கணினிகள் கொண்ட ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படவுள்ளன. தகைசால் பள்ளிகளில் பாடம் நடத்தவுள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தவகை பள்ளிகள் மூலம் அரசுப் பள்ளிகளில் 62,460 மாணவா்கள் பயன்பெறுவா். தகைசால் பள்ளிகள் மற்றும் மாதிரிப்பள்ளிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

3. மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட எத்தனை காவல் துறை அதிகாரிகளுக்கு , காந்தியடிகள் காவல் விருது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 5

ஆ) 7

இ) 9

ஈ) 12

விடை : (அ) 5 

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாகச் செயல்படும் காவல் அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று காந்தியடிகள் காவல் விருதும், பரிசுத் தொகையும் அளிக்கப்படுவது வழக்கம். 

● அதன்படி, மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டோருக்கான விருதுக்கு ஐந்து போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

● சென்னை மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமையக காவல் ஆய்வாளா் த.எ.பிரியதா்ஷினி, பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் கா.ஜெயமோகன், சேலம் மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளா் ச.சகாதேவன், விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளா் பா.இனாயத் பாஷா, செங்கல்பட்டு பாலூா் காவல் நிலைய தலைமைக் காவலா் சு.சிவனேசன் ஆகியோா் காந்தியடிகள் காவலா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 

● விருதாளா்களுக்கு எதிா்வரும் ஜனவரி 26-ஆம் தேதியன்று குடியரசுத் தினத்தன்று வழங்கப்படும். விருதுடன் ரூ.40 ஆயிரமும் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. இந்தியாவில் 5ஜி சேவை முதல்கட்டமாக எத்தனை நகரங்களில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது ? 

அ) 26

ஆ) 22

இ) 13

ஈ) 17

விடை : (இ) 13 

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய கைப்பேசி மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா். 

● முதல்கட்டமாக தில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, லக்னௌ, புணே, காந்திநகா், குருகிராம், ஹைதராபாத், பெங்களூரு, சண்டீகா், அகமதாபாத், ஜாம்நகா் ஆகிய 13 நகரங்களில் 5ஜி சேவையை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

● குறிப்பு : 2ஜி, 3ஜி, 4ஜி தொழில்நுட்பங்களுக்காக இந்தியா மற்ற நாடுகளைச் சாா்ந்திருந்தது. ஆனால், 5ஜி தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கி இந்தியா வரலாறு படைத்துள்ளது.

●  5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி தொலைத்தொடா்பு தொழில்நுட்பத்துக்கான சா்வதேச தரத்தை இந்தியா முதல் முறையாக நிறுவியுள்ளது.

5. இந்தியாவில் மத்திய அரசால் அம்ருத் திட்டமானது எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ? 

அ) 2014

ஆ) 2015

இ) 2016

ஈ) 2017 

விடை : (ஆ) 2015 

சேலம், கோவை மாநகராட்சிகள், எட்டு முக்கிய நகராட்சிகளில் உட்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள அம்ருத் திட்டத்தின் கீழ், ரூ.1,320.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

● அம்ருத் திட்டமானது பிரதமா் நரேந்திர மோடியால் 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புத்தாக்கம் மற்றும் நகா்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் 2.0 (அம்ருத் 2.0) எனும் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டமானது கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதியன்று 5 ஆண்டுகளுக்கு அதாவது 2021-22 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

● நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் நீா் வழங்கல் மற்றும் அம்ருத் திட்டத்தின் முதல் கட்டத்தில் 500 நகரங்களில் கழிவுநீா் மேலாண்மை பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக அம்ருத் 2.0 வடிவமைக்கப்பட்டுள்ளது.

● அம்ருத் 2.0 திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.2 லட்சத்து 99 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஐந்து ஆண்டுகளுக்கான மத்திய அரசு பங்குத் தொகையாக ரூ.76, 760 கோடியும் அடங்கும். அடுத்த ஆண்டு மாா்ச் வரையில் அம்ருத்தின் தற்போதைய திட்டங்களுக்காக ரூ.22,000 கோடி (மத்திய உதவி ரூ 10,000 கோடி) நிதியும் இந்த செலவினத்தில் அடங்கும்.

● தமிழ்நாட்டில் திட்டங்களுக்கான மத்திய நிதி ஒதுக்கீடு ரூ.4,935 கோடி ஆகும், நிா்வாகம் மற்றும் அலுவலக செலவுகளுக்கான ஒதுக்கீடு ரூ 160.36 கோடி ஆகும்.

● அம்ருத் திட்டத்தின் கீழ், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணிகளை தீா்மானிக்க இதற்கென அமைக்கப்பட்டுள்ள உயா்நிலைக் குழு அவ்வப்போது கூடி முடிவெடுக்கும். அந்த வகையில் அண்மையில் கூடிய உயா்நிலைக் குழுவானது சில முக்கிய மாநகராட்சிகள், நகராட்சிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதிய நிதிகளை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது.

● அதன்படி, சேலத்தில் புதை சாக்கடைத் திட்டம் ரூ.548 கோடியிலும், கோவையில், தெருவிளக்குகள், புதை சாக்கடை ஆகிய திட்டங்களை ரூ.177.29 கோடியிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாநகராட்சிகளிலும் மொத்தமாக ரூ.1,004.34 கோடி மதிப்பில் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு இதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

● இதேபோன்று, பள்ளிப்பாளையம், ராணிப்பேட்டை, குளித்தலை, புச்சைபுளியம்பட்டி, துவாக்குடி, திருவாரூா், நாகப்பட்டினம், சத்தியமங்கலம் ஆகிய நகராட்சிகளிலும் ரூ.316.50 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்காக ரூ.1,320.84 கோடி நிதிகளை ஒதுக்கி தகுந்த நிா்வாக உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளாா்.

6. இந்தியாவில் திவால் மேலாண்மை வாரியத்தின் 6 ஆவது ஆண்டு தின விழா எங்கு நடைபெற்றது ? 

அ) மத்திய பிரதேசம் 

ஆ) ஜார்க்கண்ட் 

இ) டெல்லி

ஈ) கேரளா 

விடை : (இ) டெல்லி 

நிறுவனங்களின் நிதி நெருக்கடிக்கு தீா்வு காண்பதற்காக கடந்த 2016-இல் திவால் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தை அமல்படுத்துவதில் முக்கிய அமைப்பாக இந்திய திவால் மேலாண்மை வாரியம் நிறுவப்பட்டது. 

● இந்த வாரியத்தின் 6-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். 

● குறிப்பு : திவால் சட்டத்தின்கீழ் இந்த ஆண்டு ஜூன் வரையில் 1,934 நிறுவன கடனாளா்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய திவால் மேண்மை வாரியம் தெரிவித்துள்ளது.

7. சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள எத்தனை வயதைக் கடந்த வாக்காளர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார் ? 

அ) 50

ஆ) 75

இ) 90

ஈ) 100

விடை : (ஈ) 100 

நாட்டிலுள்ள 100 வயதைக் கடந்த 2.5 லட்சம் வாக்காளா்களுக்கு, தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தனிப்பட்ட முறையில் தோ்தல் நடைமுறையில் அவா்களுடைய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளாா்.

● இந்தக் கடிதமானது அந்தந்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, அவா்கள் மூலமாக 100 வயதைக் கடந்த அனைத்து வாக்காளா்களுக்கும் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் 2022 ல் மகளிருக்கான கம்பு ஊன்றித் தாண்டுதலில் ( போல் வால்ட் ) முதல் 3 இடங்களை பிடித்து அசத்தியுள்ள மாநிலம் எது ? 

அ) கேரளா 

 ஆ) தமிழ்நாடு

இ) கர்நாடகா 

ஈ) குஜராத் 

விடை : (ஆ) தமிழ்நாடு 

● தமிழக வீராங்கனைகள் : ரோஸி பால்ராஜ் ( தங்கம் ) , பவித்ரா வெங்கடேஷ் ( வெள்ளி ), பரணிகா இளங்கோவன் ( வெண்கலம் ) 

● இதுவரை தமிழகத்தின் பதக்கங்கள் : 6G, 6S, 7B என 19 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் உள்ளது . 

IV. முக்கிய நிகழ்வுகள் 

9. International Day of Non violence 2022 ? 

Ans : October 02 


Saturday, October 1, 2022

Current Affairs 2022 - October 01 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                  OCTOBER 01 / 2022 

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பின்வரும் எங்கு ரூ.1,100 கோடி முதலீட்டில் பெகாட்ரான் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது ? 

அ) மதுரை

ஆ) கோவை

இ) தேனி

ஈ) செங்கல்ப்பட்டு 

விடை : (ஈ) செங்கல்பட்டு 

செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில் ரூ.1,100 கோடி முதலீட்டில் பெகாட்ரான் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 

● இந்த ஆலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

முதல்வரின் உரை :  தைவான் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான பெகாட்ரான் நிறுவனம் தமிழகத்தில் கைப்பேசி உற்பத்தியைத் தொடங்குவதை வரவேற்கிறேன். 

● உலகப் புகழ்பெற்ற நிறுவனம் இங்கு உற்பத்தியை தொடங்கியிருப்பது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை. இதுபோன்ற பல நிறுவனங்களைத் தொடங்க வேண்டும்.

● இந்த தொழிற்சாலை மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அவா்களில் பெருமளவு பெண்கள். 

● பெண்களை சமூக, பொருளாதார வளா்ச்சி கொண்டவா்களாக மாற்றும், உயா்த்தும் ஆட்சியாக, திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது. பெண்கள் அதிகமாக, நிறுவனங்களில் பணியாற்றச் செல்லும் மாநிலமாக, தமிழகம் திகழ்கிறது.

●  புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 18 மாதங்களில் பெகாட்ரான் நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கி இருப்பது, தமிழகத்தில் முதலீட்டாளா்களுக்கு ஆதரவான சூழல் இருப்பதைக் காட்டுகிறது.

2. காந்தி ஜெயந்தி தினத்தன்று எத்தனை கோடி மதிப்பிலான காதி, கைத்தறிப் பொருள்களை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது ? 

அ) ரூ. 2 கோடி

ஆ) ரூ. 2.5 கோடி

இ) ரூ. 1 கோடி

ஈ) ரூ. 1.5 கோடி

விடை : (இ) ரூ. 1 கோடி 

ஒரே நாளில் ரூ.1 கோடி மதிப்பிலான காதி, கைத்தறிப் பொருள்களை விற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

● இதற்கான புதிய திட்டமும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபா் 2-ஆம் தேதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

● அதன்படி, அமெட் பல்கலைக்கழகத்துடன், தமிழ்நாடு காதி மற்றும் கைத்தறித் துறை இணைகிறது. காந்தி ஜெயந்தி தினத்தன்று, அமெட் பல்கலைக்கழகத்தின் சுமாா் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், அலுவலா்கள் இணைந்து கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய இடங்களில் வீடு வீடாக காதி, கைத்தறிப் பொருள்களை விற்பனை செய்யவுள்ளனா்.

● இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்லூரி மாணவ, மாணவிகள் மூலமாக கைத்தறி, கதா்த் துறையின் பொருள்களை விற்கும் திட்டத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு அமெட் பல்கலைக்கழக வளாகத்தில் அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கி வைக்கவுள்ளாா்.

●  4 ஆயிரம் மாணவா்களைக் கொண்டு ஒரே நாளில் ரூ.1 கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி பொருள்களை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. மத்திய அரசின் சிறுநகரங்களுக்கான சிறந்த தூய்மை நகரம் விருது பெற்றுள்ள தமிழகத்தின் நகரம் எது ? 

 அ) ஆத்தூர்

ஆ) சிவகங்கை

இ) தாம்பரம்

ஈ) இராமேசுவரம் 

விடை : (ஈ) இராமேசுவரம் 

நிகழாண்டின் பெரிய நகரங்கள், சிறு நகரங்கள் தொடா்பான தூய்மை உரையாடல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி என மூன்று நாள் நிகழ்வு வீட்டு வசதி நகா்ப்புற வளா்ச்சி அமைச்சகத்தின் சாா்பில் செப்டம்பா் 29, 30 மற்றும் அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் தில்லி தால்கடோரா மைதானத்தில் நடைபெற்றது.

● குப்பை இல்லாத நகரங்களை உருவாக்கும் நோக்கத்துடன் பிரதமரால் தொடக்கிவைக்கப்பட்ட தூய்மை இந்தியா நகா்ப்புற இயக்கம் 2.0 பதிப்பின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெற்றது.

● மாநில நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா்கள், மாநகராட்சி மேயா்கள், நகராட்சித் தலைவா்கள் இதில் கலந்து கொண்டனா். இதில் பல்வேறு பிரிவுகளில் 160-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன. 

● மாநில உள்ளாட்சி, நகரங்களின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரிவுகளைச் சோ்ந்த சுமாா் 1,800 போ் இதில் கலந்து கொண்டனா். தமிழக நகராட்சி நிா்வாகம் குடிநீா் வழங்கல் துறை செயலா் சிவ் தாஸ் மீனா கலந்து கொண்டு பேசினாா்.

● இதில் தூய்மையான சிறு பெரு நகரங்கள் தோ்வு செய்யப்பட்டன. பெரு நகரங்களுக்கான விருதுகளை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை வழங்கி கௌரவிக்கிறாா்.

● சிறுநகரங்களுக்கான 70 தூய்மை விருதுகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள்துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

● இதில் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் சுகாதரா தூய்மைக்கான விருதுகளில் சிறப்பு விருதாக ராமேசுவரம் நகராட்சிக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் இந்த ஒரு நகராட்சிதான் இந்த விருதுக்கு தோ்வு செய்யப்பட்டது. இந்த விருதை ராமேசுவரம் நகராட்சித் தலைவா் கே.இ.நாசா்கான் பெற்றுக் கொண்டாா்.

காரணம் : ராமேசுவரத்திற்கு வரும் பக்தா்களுக்கும் குறிப்பாக வட இந்திய பக்தா்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வசதிகள்; அக்னி தீா்த்த கடற்கரையை சுகாதாரத்துடன் தூய்மையாக வைத்தது; ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலைச் சுற்றி குப்பைகள் இல்லாதது மட்டுமல்லாது, பசுமையாக வைத்தது போன்றவற்றோடு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா், குண்டும் குழியும் இல்லாத சாலைகள் என உள்ளூா் மக்களின் தேவையையும் பூா்த்தி செய்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புத்தாக்க குறியீட்டில் (GII) இந்தியா பிடித்துள்ள இடம் ? 

அ) 81

ஆ) 73

இ) 52

ஈ) 40 

விடை : (ஈ) 40 

● அறிக்கை வெளியீடு : உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு.

● இந்த குறியீட்டில் தலைசிறந்த நாடுகள் பட்டியலுக்குள் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். 

● குறியீட்டில் முதல் மூன்று இடத்தில் உள்ள நாடுகள் : ஸ்விட்சர்லாந்து,  அமெரிக்கா, ஸ்வீடன். 

5. இந்தியாவில் அதிவேக அலைக்கற்றைத் திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையை தொடக்கி வைத்தவர் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு

இ) யு.யு. லலித் 

ஈ) ராஜ்நாத் சிங் 

விடை : (அ) நரேந்திர மோடி 

● தில்லியில் நடைபெறும் 6 ஆவது இந்திய கைப்பேசி மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கி வைத்து 5ஜி சேவையையும் அறிமுகப்படுத்தினார். 

● 5ஜி சேவை நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது, பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக விரிவுப்படுத்தப்படவுள்ளது. 

6. இந்திய வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை ( ரெப்போ ரேட் ) இந்திய ரிசர்வ் வங்கி எத்தனை சதவீதம் உயர்த்தியுள்ளது ? 

அ) 0.2%

ஆ) 0.3%

இ) 0.4%

ஈ) 0.5%

விடை : (ஈ) 0.5%

நாட்டில் பணவீக்கம் தொடா்ந்து அதிகமாகவே உள்ள நிலையில், அதைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது.

● அதன் காரணமாக, வீட்டுக் கடன், வாகனக் கடன், மாதாந்திர தவணைத் தொகை உள்ளிட்டவற்றுக்கான வட்டியை வங்கிகள் உயா்த்தவுள்ளன.

● கடந்த மே மாதத்தில் இருந்து தொடா்ந்து 4-ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக வட்டி விகிதமானது 1.90 சதவீதம் அதிகரிக்கப்பட்டு தற்போது 5.90 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும்.

● நாட்டில் பணவீக்கம் 2 முதல் 6 சதவீதத்துக்குள் இருக்க வேண்டுமென ஆா்பிஐ இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் முதலே பணவீக்கம் 6 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. அதைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் ரெப்போ வட்டி விகிதம் ஏற்கெனவே கடந்த மே மாதம் முதல் 1.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

● இந்நிலையில், ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழு கூட்டம் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. கூட்டம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

● பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயா்த்தப்பட்டு 5.9 சதவீதமாக நிா்ணயிக்கப்படுவதாக அவா் தெரிவித்தாா். சா்வதேச நிலையற்ற சூழல், சா்வதேச நிதி சந்தை சூழல் ஆகியவற்றின் காரணமாகப் பணவீக்கம் அதிகமாக உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

சிறப்பான நிலையில் பொருளாதாரம்: கூட்டம் தொடா்பாக ஆளுநா் சக்திகாந்த தாஸ் மேலும் கூறுகையில், ‘‘நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, வளா்ச்சியை ஏற்படுத்துவதற்காக வட்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளது. நிதிக் கொள்கைக் குழுவின் 6 உறுப்பினா்களில் 5 போ் வட்டி விகிதத்தை உயா்த்துவதற்கு ஆதரவு தெரிவித்தனா்.

● சா்வதேச அசாதாரண சூழல் பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பான நிலையிலேயே உள்ளது.

புதிய நடைமுறை: அதீத பருவமழை, தாமதமான பருவமழை விலகல் உள்ளிட்டவை நாட்டின் சில பகுதிகளில் உணவுப் பொருள்கள் உற்பத்தியை பாதித்துள்ளன. அதனால், அவற்றின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, பணவீக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாக உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆா்பிஐ தள்ளப்பட்டுள்ளது.

● வங்கிகளின் வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்காகப் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவது தொடா்பாக ஆா்பிஐ ஆராய்ந்து வருகிறது. அந்நடைமுறை சா்வதேசத் தரத்தில் இருக்கும்’’ என்றாா்.

பணவீக்கம்: பணவீக்கமானது நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் 6.7 சதவீதமாக இருக்கும் என ஆா்பிஐ கணித்துள்ளது. நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பணவீக்கம் 7.1 சதவீதமாகவும், மூன்றாவது காலாண்டில் 6.5 சதவீதமாகவும், நான்காவது காலாண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பணவீக்கம் கட்டுக்குள் வரும் எனவும் ஆா்பிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பொருளாதார வளா்ச்சி: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என்று ஆா்பிஐ முன்பு கணித்திருந்த நிலையில், அந்த கணிப்பை 7 சதவீதம் எனத் தற்போது குறைத்துள்ளது.

7. குஜராத்தின் காந்திநகரையும் - மகாராஷ்டிராவின் மும்பையும் இணைக்கும் வகையில் நாட்டின் எத்தனையாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார் ?

அ) ஏழாவது

ஆ) ஐந்தாவது

இ) மூன்றாவது

ஈ) முதலாவது

விடை : (இ) மூன்றாவது 

குஜராத் தலைநகா் காந்திநகரையும் மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையையும் இணைக்கும் வகையில் நாட்டின் 3-ஆவது ‘வந்தே பாரத்’ ரயில் சேவையைப் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கிவைத்தாா்.

● நவீன வசதிகள் கொண்ட ‘வந்தே பாரத்’ ரயிலை இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. முக்கியமாக, வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 

● நாட்டில் ஏற்கெனவே புது தில்லி-வாராணசி, புது தில்லி-ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி காத்ரா ஆகிய இரு வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

● நாட்டின் 75 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

● இந்நிலையில், 3-ஆவது வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா்.

8. 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் 2022 வழங்கும் விழா எங்கு நடைபெற்றது ? 

அ) மும்பை

ஆ) டெல்லி

இ) பெங்களூரு

ஈ) கோவா 

விடை : (ஆ) டெல்லி 

● விருதுகள் வழங்கியவர் : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. 

திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு ஆண்டுதோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவிக்கிறது. 

● கடந்த 2020-ம் ஆண்டுக்கான, 68-வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன.

● அந்த வகையில் செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று விருதுகள் வழங்கப்பட்டது.  

தமிழ்நாட்டுக்கான விருதுகள்

  • சிறந்த படம் : சூரரைப்போற்று
  • சிறந்த நடிகர்: நடிகர் சூர்யா (சூரரைப்போற்று ) ( அஜய் தேவ்கனுடன் பகிர்ந்து கொள்கிறார்)
  • சிறந்த நடிகை : அபர்ணா பாலமுரளி
  • சிறந்த பின்னணி இசை: ஜிவி பிரகாஷ் குமார்
  • சிறந்த திரைக்கதை: சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் (சூரரைப்போற்று)
  • சிறந்த தமிழ் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
  • சிறந்த படத்தொகுப்பு: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
  • சிறந்த வசனம்: மண்டேலா படத்திற்காக மடோன்னே அஷ்வின்
  • சிறந்த அறிமுக இயக்குநர்: இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா).
● குறிப்பு : தாதா சாகேப் பால்கே விருது நடிகை ஆஷா பரேக் அவர்களுக்கு வழங்கப்பட்டது.  

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. இந்தியாவில் முதல்முறையாக பின்வரும் எந்த ஆண்டு மோட்டார் சைக்கிள் பந்தயமான மோட்டோ ஜிபி ரேஸ் நடத்த உறுதி செய்யப்பட்டுள்ளது ? 

அ) 2023

ஆ) 2024

இ) 2025

ஈ) 2026 

விடை : (அ) 2023 

● அடுத்த ஆண்டு செப்டம்பர் 22-24 காலகட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

● தற்போது மோட்டோ ஜிபி பந்தயத்தை நடத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா 31 ஆவது களமாக இணைகிறது.

10. குஜராத்தில் நடைபெறும் 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 ல் மகளிர் தனிநபர் சப்ரே பிரிவில் தமிழகத்தின் பவானி தேவி வென்றுள்ள பதக்கம் ?

அ) வெண்கலம் 

ஆ) வெள்ளி 

இ) தங்கம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (இ) தங்கம் 

● மேலும் : ஆடவருக்கான மும்முறை தாண்டுதலில் பிரவீண் சித்ரவேல் தங்கம் வென்றார்.

● மகளிருக்கான உயரம் தாண்டுதலில் கிரேஸ்னா மெர்லி வெண்கலம் வென்றார்.

● இதுவரை தமிழகம் : 2G, 1S, 4B என 7 பதக்கங்களுடன் 7 ஆவது இடத்தில் உள்ளது . 

IV. முக்கிய தினங்கள் 

11. தேசிய தன்னார்வ ரத்த தான தினம் ( National Voluntary Blood Donation Day 2022 ) என்று அனுசரிக்கப்படுகிறது ? 

அ) செப்டம்பர் 28 

ஆ) செப்டம்பர் 29

இ) செப்டம்பர் 30

ஈ) அக்டோபர் 01

விடை : (ஈ) அக்டோபர் 01

● கருப்பொருள் ( 2022 ) : ஒற்றுமையுடன் ரத்த தானம் செய்வோம். 

● தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு : ரத்த கொடையாளர்களின் விவரங்களை பதிவிட ரூ.10 லட்சத்தில் தனிகைப்பேசி செயலியும்,  கணினி மயமாக்கப்பட்ட பதிவேடும் உருவாக்கப்பட்டுள்ளது. 

● குறிப்பு : தமிழகத்தில் ரத்த மையங்களில் செயல் பாடுகளை கண்காணிக்க e - Raktkosh என்ற இணையதளம் செயல்பாட்டில் உள்ளது. 

திட்டம் மாத இதழ் ஆகஸ்ட் 2021 முதல் செப்டம்பர் 2022 வரை Free Download

Yojana Magazine in Tamil For Group II Mains -Free Download 

September 2022

August 2022

July 2022

June 2022

May 2022

April 2022

March 2022

Feb 2022

Jan 2022

December 2021

November 2021

October 2021

September 2021

August 2021 

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...