● தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் பாதுகாப்பான கழிப்பறை வசதி உறுதி செய்யப்பட்டு, திறந்த வெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட்ட சுகாதார மதிப்பீட்டில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
● இதற்கான விருதை தில்லியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தமிழக ஊரக வளா்ச்சி துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பனிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
● ஆண்டுதோறும், மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீா், தூய்மைப் பணித் துறை, நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் உள்ள தூய்மைப் பணிகளின் தரம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றத்தின் அளவீடுகளை அறிந்து மாநிலங்கள் வாரியாக தரவரிசைப்படுத்தி காந்தி ஜெயந்தி தினத்தில் விருதுகளை வழங்குகிறது.
● 2021-22-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில், தேசிய அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில், தெலங்கானாவும் ஹரியாணாவும் முறையே முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளன. தமிழகம் ‘மூன்றாம்’ இடத்தைப் பெற்றுள்ளது.
● இந்த விருதுகளை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், ஊரகத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் ஆகியோா் முன்னிலையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வழங்கினாா். தூய்மை இந்தியா விழாவில் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் மற்றும் ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறையின் முதன்மை செயலா் பெ.அமுதா அகியோா் குடியரசுத் தலைவரிடம் இருந்து இந்த விருதைப் பெற்றுக் கொண்டனா்.
● மேலும், வீட்டுத் தோட்டம், கழிவு நீா் மேலாண்மை பணிகளுக்கான மத்திய அரசின் ‘சுஜலாம்’ என்கிற 100 நாள் நீா் மேலாண்மை இயக்கத்தில், மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளுக்கு தேசிய அளவில் தமிழகம் ‘ஐந்தாம்’ இடம் பெற்றுள்ளது. அதற்கான விருதையும் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா், குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக்கொண்டாா். சுகாதாரம் சாா்ந்த விழிப்புணா்வு நடவடிக்கைகளுக்கும் இவ்விழாவில் தமிழகத்திற்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
2. நிரந்தர வைப்புத் தொகைக்கான குறைந்தபட்ச முதலீட்டு வரம்பை ரூ.50,000 லிருந்து ---------- ஆக தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் அதிகரித்துள்ளது ?
அ) 75 ஆயிரம்
ஆ) 1 லட்சம்
இ) 1.5 லட்சம்
ஈ) 2 லட்சம்
விடை : (ஈ) 2 லட்சம்
● நிரந்தர வைப்புத் தொகைக்கான குறைந்தபட்ச முதலீட்டு வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.2 லட்சமாக தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் (டிஎன்பிஎஃப்சிஎல்) அதிகரித்துள்ளது.
● நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தையும் 0.25 சதவீத அளவுக்குக் குறைத்துள்ளது.
● குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ.2 லட்சமாக நிா்ணயம், வட்டி வகித குறைப்பு ஆகியவை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
● அக்டோபா் 1-ஆம் தேதிக்கு முன்பு முதலீடு செய்தவா்களுக்கு, நிரந்தர வைப்புத் தொகையின் கால அளவில் (1 முதல் 5 ஆண்டுகள் வரை) குறிப்பிடப்பட்ட வட்டி வகிதம் தொடா்ந்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
3. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாட்டிலேயே பெருமளவில் கிராமப் புறங்களின் குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டதற்காக முதல் பரிசு பெற்றுள்ள மாநிலம் ?
அ) தமிழ்நாடு
ஆ) மேகாலயா
இ) புதுச்சேரி
ஈ) கோவா
விடை : (அ) தமிழ்நாடு
● ஜல் ஜீவன் திட்டத்தின்படி, தமிழக கிராமப் புறங்களில் 55 சதவீத குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீா் வழங்கப்பட்டுள்ளது.
● நாட்டிலேயே பெருமளவில் இந்தப் பணிகளை மேற்கொண்டதற்காக முதல் பரிசை தமிழக அரசு பெற்றுள்ளது.
● தில்லி விஞ்ஞான் பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஜல்ஜீவன் விருதை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, தமிழக நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் வழங்கினாா். அப்போது, தமிழக நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறையின் செயலா் சிவ் தாஸ் மீனாவும் உடனிருந்தாா்.
● இதில் இரண்டாவது பரிசு மேகாலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறிய மாநிலங்கள் வரிசையில் முதல் இரு இடங்களில் புதுச்சேரியும்,கோவாம் இடம்பெற்றுள்ளன.
III. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
4. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படையில் அதிகாரபூர்வமாக இணைக்கும் நிகழ்ச்சி எங்கு நடைபெற்றது ?
அ) மும்பை
ஆ) அலகாபாத்
இ) ஜோத்பூர்
ஈ) சென்னை
விடை : (இ) ஜோத்பூர்
● உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டா்களின் (எல்சிஹெச்) முதல் தொகுதி விமானப் படையில் திங்கள்கிழமை (அக். 3) அதிகாரபூா்வமாக இணைக்கப்படவுள்ளது.
● இலகுரக ஹெலிகாப்டா்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) உள்நாட்டிலேயே தயாரித்தது. எதிரி நாட்டு ஏவுகணைகளையும் ஆயுதங்களையும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது அந்த ஹெலிகாப்டா். நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலும் அந்த ஹெலிகாப்டா் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
● இலகுரக ஹெலிகாப்டா்களை இந்திய விமானப்படையில் அதிகாரபூா்வமாக இணைக்கும் நிகழ்ச்சி ஜோத்பூரில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளாா். விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி உள்ளிட்ட அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனா்.
● 5.8 டன் எடை கொண்ட ஹெலிகாப்டா், இரட்டை என்ஜின்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கெனவே பல்வேறு ஆயுதங்கள் வெற்றிகரமாகப் பொருத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
● இந்திய விமானப் படைக்கு 10 இலகுரக ஹெலிகாப்டா்கள், ராணுவத்துக்கு 5 ஹெலிகாப்டா்கள் என மொத்தம் 15 ஹெலிகாப்டா்களை ரூ.3,887 கோடியில் வாங்க மத்திய அமைச்சரவை கடந்த மாா்ச்சில் ஒப்புதல் அளித்திருந்தது. அவற்றில் முதல் தொகுதியானது திங்கள்கிழமை விமானப்படையில் இணைக்கப்படவுள்ளது.
● இலகுரக ஹெலிகாப்டா்களில் இரவிலும் ஆயுதங்களைப் பொருத்தி தாக்குதல் நடத்த முடியும். அனைத்து காலநிலைகளிலும் கூட அந்த ஹெலிகாப்டரைப் பயன்படுத்த முடியும். தேடுதல்-மீட்பு நடவடிக்கைகளிலும் அதைப் பயன்படுத்த முடியும். மெதுவாகப் பயணிக்கும் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றைக் கூட அந்த ஹெலிகாப்டரால் தாக்க முடியும்.
5. இண்டர்போல் பொதுச் சபை கூட்டம் பின்வரும் எந்த மாநிலத்தில் நடைபெறவுள்ளது ?
அ) டெல்லி
ஆ) கேரளா
இ) தமிழ்நாடு
ஈ) ராஜஸ்தான்
விடை : (அ) டெல்லி
● சர்வதேச காவல் துறை அமைப்பான இண்டர்போலின் பொதுச்சபை கூட்டம் தில்லியில் வரும அக்டோபர் 18 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
● இந்த கூட்டத்தையொட்டி ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் மத்திய புலனாய்வு அமைப்பு கண்ககுத் தொடங்கியுள்ளது.
● குறிப்பு : கடந்த 1923 ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் காவல் ஆணையம் ( ஐசிபிசி ) தொடங்கப்பட்டது, இது 1956 ஆம் ஆண்டு இண்டர்போல் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
III. விளையாட்டு நிகழ்வுகள்
6. இத்தாலியில் நடைபெற்ற பார்மா ஒபன் மகளிர் டென்னிஸ் போட்டி 2022 ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள மயார் ஷெரிஃப் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ?
அ) இத்தாலி
ஆ) எகிப்து
இ) ஆஸ்திரேலியா
ஈ) ஜமைகா
விடை : (ஆ) எகிப்து
● இதன் மூலம் டபிள்யூடிஏ டுர் பட்டம் வென்ற முதல் வீராங்கனை இவர் ஆவார்.
7. 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 ல் மகளிருக்கான 4×400 மீ ரிலேவில் தங்கம் வென்றுள்ள மாநிலம் ?
அ) மகாராஷ்டிரா
ஆ) கேரளா
இ) குஜராத்
ஈ) தமிழ்நாடு
விடை : (ஈ) தமிழ்நாடு
● மகளிருக்கான 4×400 மீ ரிலேவில் தமிழகத்தின் வித்யா, ஒலிம்பான்டெஃபி, சுபா வெங்கடேசன், திவ்யா கூட்டணி தங்கம் வென்றனர்.
● இதுவரை தமிழகத்தின் பதக்கங்கள் : 12G, 9S, 11B என 32 பதக்கங்களோடு 4 ஆவது இடத்தில் உள்ளது.
IV. முக்கிய தினங்கள்
8. World Habitat Day 2022
Ans : October 03
Theme (2022) : Mind the Gap. Leave No One & No Place Behind .
No comments:
Post a Comment