Wednesday, July 13, 2022
Current Affairs 2022 - July 13 / 2022 - TNPSC Group 2/2A & Group 4
Tuesday, July 12, 2022
Current Affairs 2022 - July 12 / 2022 - TNPSC Group 2/2A & Group 4
வெண்கலத்தால் ஆன இந்த தேசிய சின்னம் 9,500 கிலோ எடையும், 6.5 மீட்டா் உயரமும் கொண்டதாகும். புதிய நாடாளுமன்றக் கட்டடம் இந்த ஆண்டு இறுதியில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்தச் சின்னம் திறந்து வைக்கப்பட்டிருப்பது மிக முக்கிய முதல் நிகழ்வாக அமைந்துள்ளது.
‘புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மைய மண்டபத்தின் மேற்கூரையில் இந்த தேசிய சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தாங்கி நிற்பதற்காக 6,500 கிலோ இரும்பால் ஆன கட்டமைப்பு அமைக்கப்பட்டு, அதன் ஆதரவுடன் தேசிய சின்னம் பொருத்தப்பட்டுள்ளது.
4. தில்லியில் நடைபெற்ற பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்ற தலைப்பிலான கருத்தரங்கை தொடங்கி வைத்தவர் யார் ?
அ) நரேந்திர மோடி
ஆ) அமித் ஷா
இ) ஜெய்சங்கர்
ஈ) ராஜ்நாத் சிங்
விடை : (ஈ) ராஜ்நாத் சிங்
● தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கை தொடங்கி வைத்து ராஜ்நாத் சிங் பேசியதாவது.
● மனித வளா்ச்சி மற்றும் அமைதிக்காக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தியாக வேண்டும்; அதே நேரம், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் எழும் சட்ட ரீதியிலான, அரசியல், நெறிமுறை மற்றும் பொருளாதார ரீதியிலான சவால்களை எதிா்கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்று கூறினாா்.
● நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தப்பட்ட ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப உபகரணம், இணைய பாதுகாப்பு, மனித நடத்தை ஆய்வு தொழில்நுட்பம், நுண்ணறிவு கண்காணிப்பு நடைமுறை, தொடா் விநியோக நிா்வாகத் திட்டம், குரல் ஆய்வு தொழில்நுட்பம், உத்தரவு, கட்டுப்பாடு, தகவல் தொடா்பு, கணினி, கண்காணிப்பு, உளவு பாா்த்தல் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை சாா்ந்த 75 தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை ராஜ்நாத் சிங் தொடக்கிவைத்தாா்.
5. மக்கள்தொகை பெருக்கத்தில் கீழ்க்கண்ட எந்த ஆண்டுக்குள் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பெறும் என ஐ.நா. கணித்து தெரிவித்துள்ளது ?
அ) 2025
ஆ) 2023
இ) 2024
ஈ) 2026
விடை : (ஆ) 2023
● மக்கள்தொகை பெருக்கத்தில் 2023-ஆம் ஆண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பெறும் என்றும், நிகழாண்டு நவம்பரில் உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டும் என்றும் ஐ.நா. கணித்துள்ளது.
● இதுதொடா்பாக ஐ.நா. பொருளாதார, சமூக விவகாரத் துறையின் மக்கள்தொகை பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாவது:
● உலக மக்கள்தொகை நிகழாண்டு நவம்பா் 15-இல் 800 கோடியை எட்டும். 1950-க்குப் பின்னா் உலக மக்கள் தொகை மெதுவான வீதத்தில் வளா்ச்சியடைகிறது. 2030-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 850 கோடியையும், 2050-ஆம் ஆண்டில் 970 கோடியையும் எட்டும். 2080-இல் உலக மக்கள்தொகை 1,040 கோடியாக இருக்கும். 2100 வரை இதே விகிதம் நீடிக்கும்.
● 2023-இல் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும். வரும் 2050-இல் இந்தியாவின் மக்கள்தொகை 166 கோடியாக இருக்கும்.
● உலக மக்கள்தொகையில் 29 சதவீதத்துடன் அதாவது 230 கோடி மக்கள்தொகையுடன் 2022-இல் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட பிராந்தியமாக கிழக்கு மற்றும் தென்-கிழக்கு ஆசியா திகழ்கிறது. மத்திய, தெற்கு ஆசியா 210 கோடி மக்களுடன் உலக மக்கள்தொகையில் 26 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
● இந்த பிராந்தியத்தில் சீனாவும் இந்தியாவும் தலா 140 கோடி மக்கள்தொகையுடன் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளாக விளங்குகின்றன. 2050-ஆம் ஆண்டுவரையிலான உலக மக்கள்தொகை பெருக்க கணக்கீட்டின்படி, காங்கோ குடியரசு, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், தான்ஸானியா ஆகிய 8 நாடுகளும் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு வகிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
● இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், ‘பூமியின் 800 கோடியாவது மக்களைப் பெற போவதால் நிகழாண்டு சா்வதேச மக்கள்தொகை தினம் (ஜூலை 11) முக்கிய மைல்கல்லாகும். நமது பன்முகத்தன்மை, மனிதாபிமானத்தை அங்கீகரிக்கவும், நீடித்த வாழ்நாளை உறுதிப்படுத்தி, தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்க உதவிய மருத்துவத் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டாடவும் இது சரியான தருணம்’ என்றாா்.
6. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக:
1) உலகின் முதல் மணல் மின்கலன் மேற்கு பின்லாந்தில் நிறுவப்பட்டுள்ளது.
2) மணலில் வெப்ப ஆற்றலை சேமிக்கும் மின்கலம் ஒன்று மேற்கு பின்லாந்தில் நிறுவப்பட்டுள்ளது .
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ)1 & 2
ஈ) ஏதுமில்லை
விடை : (இ) 1 & 2
● புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து வரும் மின்சாரமானது மணலைச் சுமார் 932°F வரை வெப்பப்படுத்தப் பயன்படுகிறது.
● இந்த வெப்ப ஆற்றல் ஆனது பின்னர் அங்குள்ள கட்டிடங்களில் வழங்கப்படும் தண்ணீரைச் சூடாக்குகிறது .
● காற்று (ம) சூரிய ஒளி போன்ற குறிப்பிட்ட இடைவெளியில் இயங்கும் ஆற்றல் மூலங்களிலிருந்து இதனால் ஆற்றலைச் சேமிக்க முடியும்.
● இது ஒரே நேரத்தில் பல மாதங்கள் வரை புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சேமித்து வைத்திருக்க முடியும்.
7 . தென் கொரியாவில் நடைபெறும் ISSF உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் பபுதா வென்றுள்ள பதக்கம் ?
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) ஏதுமில்லை
விடை : (அ) தங்கம்
● ஆடவருக்கான 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் பபுதா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
III. விளையாட்டுச் செய்திகள்
8. சர்வதேச மலாலா தினம் ( International Malala Day ) 2022 ?
அ) ஜூலை 09
ஆ) ஜூலை 12
இ) ஜூலை 10
ஈ) ஜூலை 08
விடை : (ஆ) ஜூலை 12
Monday, July 11, 2022
Current Affairs 2022 - July 11 / 2022 - TNPSC Group 2/2A & Group 4
Current Affairs 2022 - July 10 / 2022 - TNPSC Group 2/2A & Group 4
Saturday, July 9, 2022
Current Affairs 2022 - July 09 / 2022 - TNPSC Group 2/2A & Group 4
Friday, July 8, 2022
Current Affairs 2022 - JULY 08 / 2022 - TNPSC Group 2/2A & Group 4
●மத்திய உருக்குத் துறையின் அமைச்சராக இருந்த ராம் சந்திர பிரசாத் சிங் மற்றும் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி ஆகியோரது மாநிலங்களவை உறுப்பினா் பதவி காலம் நிறைவுறுவதால்,இருவரும் தங்கள் அமைச்சா் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தனா்.
● இந்நிலையில், விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ள ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு உருக்கு அமைச்சகமும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானிக்கு மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
● மத்திய அமைச்சரவை பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை அதற்கான உத்தரவைப் பிறப்பித்தாா்.
7. ஜி20 அமைப்பின் இந்திய தூதராக (ஷெர்பா) நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
அ) பியூஷ் கோயில
ஆ) சுரப்சுக்லா
இ) ஆர். கே. குப்தா
ஈ) அமிதாப் காந்த்
விடை : (இ) ஆர்.கே. குப்தா
● இவர் நீதி ஆயோக் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
● குறிப்பு : ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை நிகழாண்டு இறுதியில் இந்தியா ஏற்கவுள்ளது.
8. ஐ.நா. அமைப்புகளில் ஒன்றான யுனெஸ்கோவின் கலை , கலாசார பாரம்பரிய குழுவின் உறுப்பினராக இந்தியா எத்தனையாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ?
அ) முதலாவது
ஆ) இரண்டாவது
இ) மூன்றாவது
ஈ) ஐந்தாவது
விடை : (இ) மூன்றாவது
● UNESCO சார்பில் 2003 ஆம் ஆண்டு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது அக்குழுவில் பல நாடுகளில் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இடம் பெறுவர் .
● அக்குழுவின் உறுப்பினராக இந்தியா :
1st time : 2006 - 2010
2nd time : 2014 - 2018
3rd time : 2022 - 2026 .
9. கரோனா தீநுண்மியின் ஓமைக்ரான் பி.ஏ.2.75 வகை வைரஸ் பரவல் முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ள நாடு எது ?
அ) அமெரிக்கா
ஆ) இந்தியா
இ) சீனா
ஈ) பிரிட்டன்
விடை : (ஆ) இந்தியா
அறிவிப்பு : உலக சுகாதார அமைப்பு
Current Affairs 2022 - July 07 / 2022 - TNPSC Group 2/2A & Group 4
Featured post
உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR
உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...
-
Preamble of the Constitution & Salient Features of the Constitution / அரசியலைமப்பின் முகவுரை (ம) அரசியலைமப்பின் முக்கிய கூறுகள் ...
-
GK SHANKAR DECEMBER 02 / 2022 I . தமிழ்நாட்டு நிகழ்வுகள் 1. தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் க...
-
GK SHANKAR DECEMBER 23/2022 I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 1. தமிழகத்தின் பின்வரும் எந்த சமூகத்தினரை...