Monday, August 8, 2022

Current Affairs 2022 - August 07 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                       GK SHANKAR 
                   AUGUST 07 / 2022

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள்  

1. நிகழாண்டுக்கான (2022)  தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது ? 

அ) என். சங்கரய்யா
ஆ) ஆர். நல்லகண்ணு
இ) ஏ. ராமசாமி
ஈ) ஆர். கண்ணப்பன் 

விடை : (ஆ) ஆர். நல்லகண்ணு 

தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

● தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்ளைப் பெருமைப்படுத்தும் வகையில், 2021 -ஆம் ஆண்டு முதல் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது தமிழ்நாடு அரசு வழங்கிவருகிறது. 

● இந்த ஆண்டிற்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

● கூட்டத்தில், இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராகத் தன் இளம் வயதைச் சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவரும் ஏழை எளிய மக்களுக்காகக் குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திடத் தொடர்ந்து பாடுபட்டு வருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. 

● “தகைசால் தமிழர்” விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர். நல்லகண்ணுவுக்கு, ரூ. 10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச்சான்றிதழும், வரும் சுதந்திர நாள் விழாவில் முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்குவார்.

● 2021 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான என். சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

2. நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படவுள்ள சம்பா (ம) மானாவாரி குளிர்கால ( ராபி ) பருவ பயிர்களை பயிர்க் காப்பீடு செய்திட பயிர்க் காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மாநில அரசின் பங்குத் தொகையாக எத்தனை கோடியை அனுமதித்து தமிழக அரசு ஆணையும் வெளியிட்டுள்ளது ? 

அ) ரூ. 2 கோடி

ஆ) ரூ. 3 கோடி

இ) ரூ. 1.5 கோடி

ஈ) ரூ. 4 கோடி 

விடை : (அ) ரூ. 2 கோடி 

நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படவுள்ள சம்பா மற்றும் மானாவரி குளிர்கால(ராபி) பருவ பயிர்களை பயிர் காப்பீடு செய்திட பயிர் காப்பீட்டுக் கட்டணத்தொகையில் மாநில அரசின் பங்குத் தொகையாக ரூபாய் 2057.25 கோடி நிதியினை அனுமதித்து தமிழ்நாடு அரசு ஆணையும் வெளியிட்டுள்ளது. 

● வரும் சம்பா பருவத்தில் விவசாயிகள் தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்மை- உழவர் நலத் துறையால் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

 ● மேலும் தென்மேற்கு பருவ மழையால் பாதிக்கப்படும் குறுவை பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று வேளாண்மை உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.

3. தமிழகத்தில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் கீழ்கண்ட எந்த நிறம் பேருந்துகளில் அடிக்கப்பட்டுள்ளது ? 

அ) நீலம்

ஆ) பிங்க்

இ) மஞ்சள்

ஈ) கருப்பு 

விடை : (ஆ) பிங்க் 

● தமிழகத்தில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் அப்பேருந்துகளின் முகப்புப் பகுதியில் பிங்க் நிறம் அடிப்பட்டுள்ளது. 

● பிங்க் நிறம் அடிக்கப்பட்ட 50 பேருந்துகளை சட்டபேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். 

4. தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் முதல்முறை சேவையை எத்தனை லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார் ? 

அ) 50 லட்சம் 

ஆ) 75 லட்சம் 

இ) 83 லட்சம்

ஈ) 93 லட்சம் 

விடை : (இ) 83 லட்சம் 

தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் முதல்முறை சேவையை 83 லட்சம் போ் பயனடைந்துள்ளனா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

● தொற்றா நோய்களின் சவால்களை எதிா்கொள்ளும் நோக்கில், மக்களைத் தேடி மருத்துவம் என்னும் புதிய திட்டத்தை 2021 ஆகஸ்ட் 5-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கான பரிசோதனைகள், சிகிச்சைகளை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று இவற்றை வழங்குவதன் மூலமாக தொற்றா நோய்களின் தாக்கத்தை எதிா்கொள்ள இத்திட்டமானது வழிவகுக்கிறது. இத்திட்டம் மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

5. தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாதந்தோறும் எவ்வளவு ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது ? 

அ) ரூ.1,500

ஆ) ரூ. 1,000

இ) ரூ. 2,000

ஈ) ரூ. 2,500

விடை : (அ) ரூ.1,500 

● தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது 

இதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 12 வது வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ. 1,500 வழங்கப்படும். அதாவது, 2 ஆண்டுகளுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் மாதம் ரூ.1,500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

● தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் 50% அரசுப்பள்ளி மாணவர்கள், 50% தனியார் பள்ளி மாணவர்கள் என்று தேர்வு செய்யப்பட உள்ளனர். 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

6. இந்தியாவின் எத்தனையாவது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் பதவியேற்கவுள்ளார் ? 

அ) 11 ஆவது

ஆ) 12 ஆவது 

இ) 13 ஆவது

ஈ) 14 ஆவது 

விடை : (ஈ) 14 ஆவது 

● குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார் . 

● அவர் மாநிலங்களவைத் தலைவராகவும் பதவி வகிப்பார். 

7. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக : 

1) புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்- 02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்டது.

2) சிறிய ரக செயற்கைக்கோளுக்காக வடிவமைக்கப்பட்ட , எடை குறைந்த மூன்றாவது ராக்கெட் திட்டம் இதுவாகும். 

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும் 

இ) 1 மற்றும் 2

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) 1 மட்டும் 

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) விண்ணில் ஏவப்படுகிறது.

● சிறிய ரக செயற்கைக்கோளுக்காக வடிவமைக்கப்பட்ட, எடை குறைந்த முதலாவது ராக்கெட் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

● தகவல்தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்தி வருகிறது. அதற்காக, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

● இதில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.

● இந்த நிலையில், சா்வதேச விண்வெளித் துறையில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில்கொண்டு 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்ல சிறியரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது. இதன் எடை அதிகபட்சம் 120 டன்.

● இம்முறை அந்த வகை ராக்கெட், இஓஎஸ்-02 (மைக்ரோசாட்-2ஏ ) செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

● அதற்கான 5 மணிநேர கவுன்ட்டவுன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தொடங்கவுள்ளது. இஓஎஸ்-02 செயற்கைக்கோளானது 145 கிலோ எடை கொண்டது. இது கடலோர நிலப் பயன்பாடு, ஒழுங்குமுறை, நகா்ப்புற, கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும். இதில் உள்ள 2 நவீன கேமராக்கள் மூலம் 6 மீட்டா் அளவுக்கு துல்லியமாகப் படம் பிடிக்க முடியும்.

● கல்விசாா் செயற்கைக்கோள்: இதனுடன் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் மூலம் ‘ஆசாதிசாட்’ (8 கிலோ) எனும் கல்விசாா் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள 75 பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

8. பின்வரும் எங்கு நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பருவ நிலை மாநாட்டில் லைஃப் என்ற கருப்பொருளின் அடிப்படையில் காட்சியரங்கை இந்தியா அமைக்கவுள்ளது ? 

அ) எகிப்து

ஆ) கனடா

இ) தென்னாப்பிரிக்கா

ஈ) துபாய்

விடை : (அ) எகிப்து 

எகிப்தில் நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பருவநிலை மாநாட்டில் ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை’ (லைஃப்) என்ற கருப்பொருளின் அடிப்படையில் காட்சியரங்கை இந்தியா அமைக்கவுள்ளது.

● ஐ.நா. பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தில் இணைந்துள்ள நாடுகள் ஆண்டுதோறும் கூடி பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து வருகின்றன. கடந்த ஆண்டுக்கான கூட்டம் கிளாஸ்கோவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை’ என்ற சா்வதேச திட்டத்தை அறிமுகப்படுத்தினாா்.

● இந்தியாவில் அத்திட்டமானது சா்வதேச சுற்றுச்சூழல் தினமான கடந்த ஜூன் 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது. பூமிக்கு சாதகமான வகையிலும் அதை பாதிக்காத வகையிலும் வாழ்க்கை முறையை முன்னெடுக்க வேண்டும் என்பதே அத்திட்டத்தின் முக்கிய நோக்கம். அவ்வாறான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவா்கள் ‘பூமிக்கு ஆதரவானவா்கள்’ என அழைக்கப்படுவா் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்திருந்தது.

● இந்நிலையில், 27-ஆவது பருவநிலை மாநாடு எகிப்தின் ஷரம்-எல்-ஷேக் நகரில் நவம்பா் 6 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டில் ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை’ என்ற கருப்பொருளின் அடிப்படையிலான காட்சியரங்கை இந்தியா அமைக்கவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் இந்தியா படைத்துள்ள சாதனைகள் குறித்து அந்தக் காட்சியரங்கில் எடுத்துரைக்கப்படவுள்ளது.

9. கூற்று : திபெத்திய பௌத்த மதத்தலைவர் தலாய் லாமாவுக்கு லடாக்கின் உயரிய விருதான திபல் ரன்கம் டஸ்டன் விருது வழங்கப்பட்டுள்ளது.

காரணம் : மனித நேயத்துக்கு அவர் ஆற்றிவரும் சிறந்த பங்களிப்பை பாராட்டும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டது.

அ) கூற்று சரி, காரணம் தவறு

ஆ) கூற்று தவறு , காரணம் சரி

இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது 

விடை : (ஈ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது. 

திபெத்திய பெளத்த மதத் தலைவா் தலாய் லாமாவுக்கு (87) லடாக்கின் உயரிய விருதான ‘திபல் ரன்கம் டஸ்டன்’ விருது வழங்கி கெளரவிக்கப்ட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

● லடாக்கின் சிந்து கணவாய் பகுதியில் நடைபெற்ற யூனியன் பிரதேச நிறுவன நாள் விழாவில், வடாக் தன்னாட்சி மலைப் பகுதி மேம்பாட்டு கவுன்சில் (எல்ஏஹெச்டிசி) சாா்பில் இந்த உயரிய விருது அவருக்கு அளிக்கப்பட்டது. யூனியன் பிரதேசத்தில் மனிதநேயத்துக்கு அவா் ஆற்றிவரும் சிறந்த பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

● லடாக்கில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தலாய் லாமா, லடாக் மக்களின் அன்பான வரவேற்பைப் பாராட்டியதோடு, பிராந்தியத்தில் சமூக நல்லிணக்கத்தை தொடா்ந்து கடைப்பிடிக்க வலியுறுத்தினாா்.

III. விளையாட்டு நிகழ்வுகள்

10. காமன்வெல்த் போட்டி 2022 ல் மல்யுத்த பிரிவில் ஆடவர் ப்ரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவி தாஹியா வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (அ) தங்கம் 

● மேலும் இதே பிரிவில் மகளிர் 53 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் தங்கம் வென்றார்.

● மகளிர் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பூஜா கெலாட் வெண்கலம் வென்றார். 

11. காமன்வெல்த் போட்டி 2022 ல் தடகள பிரிவில் மகளிர் 10,000 மீ நடை ஓட்டத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

● இப்போட்டியில் நடை ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை பிரியங்கா ஆவார்.

● ஆடவர் 3000 மீ ஸ்டீபிள் சேஸ் பிரிவில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே வெள்ளி வென்றார். 




Sunday, August 7, 2022

Current Affairs 2022 - August 06 / 2022 - TNPSC Group 1 , 2/2A & 4

                          GK SHANKAR 
                      AUGUST 06 / 2022

I. தமிழ்நாட்டுச் நிகழ்வுகள் 

1.  மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழாவை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின் 
ஆ) ஆர்.என். ரவி
இ) பொன்முடி
ஈ) தங்கம் தென்னரசு 

விடை : (அ) மு.க. ஸ்டாலின் 

மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழாவை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார் முதல்வா் மு.க ஸ்டாலின் 
● சென்னையைத் தொடா்ந்து மேலும் சில மாவட்டங்களில் இதுபோன்ற புத்தக கண்காட்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு இத்தகைய புத்தகக் கண்காட்சி நடத்துவதற்காக இந்த ஆண்டு ரூ.4.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. தமிழகத்தில் தோட்டக்கலை வளர்ச்சித்திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை கீழ்கண்ட எந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தமிழக வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது ? 

அ) www.tnhorticulture.tn.gov.in
ஆ) www.tnhorticulture.gov.in
இ) www.tnhorticulture.in 
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (அ) www.tnhorticulture.tn.gov.in

வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் தோட்டக் கலைத் துறையானது பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, சாகுபடிப் பரப்பை அதிகரிக்க விதைகள், நடவுக் கன்றுகள், காய்கறிகள் உற்பத்தியை உயா்த்த விதைகள், நீரில் கரையும் உரங்கள், உழவா் சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரிப்பு, ஊடு பயிராக வாழை, காய்கறிகளை சாகுபடி செய்ய ஊக்கத் தொகை, தோட்டக்கலை பயிா் சாகுபடிக்கான கருவிகளை மானியத்தில் விநியோகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.27.50 கோடி.

● இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை தாங்களாகவோ அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் மூலமாகவோ www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

3. தமிழகத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள தேசியக் கொடி விற்பனையில் ஒரு கொடியின் விலை எவ்வளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது ? 

அ) ரூ.50

ஆ) ரூ.25

இ) ரூ.15

ஈ) ரூ. 30

விடை : (ஆ) ரூ.25 

தமிழகத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கொடியின் விலை ரூ.25-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

● இதுகுறித்து சென்னை மண்டல அஞ்சல்துறைத் தலைவா் நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா, நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவை திருவிழாவாக ஒவ்வொரு வீடுகளிலும் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா்.‘இல்லந்தோறும் மூவா்ணம்’ எனும் பிரசாரத்தை, மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக நாடு முழுவதும் தேசியக் கொடிகளை விற்பனை செய்யும் பணி அஞ்சல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

● இதையடுத்து, சென்னை நகர மண்டலங்களில் உள்ள அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு தேசியக் கொடியின் விலை ரூ.25. தேசியக் கொடியை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்க பொதுமக்கள், நலச்சங்கத்தினா், தன்னாா்வலா்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களைத் தொடா்பு கொள்ளலாம். மேலும் வலைதளத்திலும் ஆா்டா் செய்து இணைய வழியாகவும் வாங்கலாம். சென்னை நகர மண்டலத்தில் 2,191 அஞ்சல் நிலையங்கள், 20 தலைமை அஞ்சல் நிலையங்கள், 545 துணை அஞ்சல் நிலையங்கள், 1,626 கிளை அஞ்சல் நிலையங்கள் உள்ளன. இவை அனைத்திலும் தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்

4. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) நடப்பு நிதியாண்டில் எத்தனை சதவீதமாக இருக்கும் என்று ஆர்பிஐ (RBI) தெரிவித்துள்ளது ? 

அ) 9 8%

ஆ) 16.2%

இ) 7.2%

ஈ) 6.2%

விடை : (இ) 7.2%

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாக சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். 

● வங்கி கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 0.5 சதவீதம் அதிகரித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

● வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு மூலம் வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

● ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் மும்பையில் கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது 

● நாட்டில் பணவீக்கம் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. 

5. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நீதி ஆயோக்கின் 7 ஆவது நிர்வாகக் குழு கூட்டம் என்று நடைபெறவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 10 

ஆ) ஆகஸ்ட் 07

இ) ஆகஸ்ட் 09 

ஈ) ஆகஸ்ட் 11 

விடை : (ஆ) ஆகஸ்ட் 07 

●  நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் குழு இயங்கி வந்தது. ஆனால், கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் பாஜ அரசு அமைந்தவுடன்,  திட்டக்குழு கலைக்கப்பட்டது. அதற்குப் பதில் நிதி ஆயோக் அமைப்பு கொண்டு வரப்பட்டது. 

● டெல்லியில் ஜனாதிபதி மாளிகையின் கலாசார மையத்தில் நிதி ஆயோக் நிர்வாக குழுவின் 7வது கூட்டம் நாளை நடக்கிறது.

● இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். மாற்றுப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும்  வேளாண் தன்னிறைவை திட்டங்கள், தேசிய கல்விக் கொள்கை- பள்ளிக் கல்வி அமலாக்கம், தேசிய கல்விக் கொள்கை - உயர்கல்வியின் அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை கூட்டத்தின் விவாதப் பொருளில் இடம் பெற உள்ளன. 

● 2019ம் ஆண்டுக்கு பிறகு இதன் கூட்டம் முதல் முறையாக நேரடியாக நடக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

6. இந்திய தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை வாங்க எத்தனை நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 05

ஆ) 06

இ) 10

ஈ) 12 

விடை : (ஆ) 06 

நம் நாட்டில் தயாரிக்கப்படும் 'தேஜஸ்' போர் விமானங்களை வாங்க, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட ஆறு நாடுகள் ஆர்வமாக உள்ளன,” என, ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் கூறினார்.

● லோக்சபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ராணுவ இணை அமைச்சர் அஜய் பட், “நம் நாட்டின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரிக்கும் தேஜஸ் போர் விமானங்களை வாங்க, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், அர்ஜென்டினா, எகிப்து ஆகிய நாடுகள் ஆர்வமாக உள்ளனர்.

● மலேஷியா 2019லேயே தேஜஸ் போர் விமானங்களுக்கு 'ஆர்டர்' கொடுத்து உள்ளது,” என்றார்.மலேஷியா தற்போது பயன்படுத்தி வரும் ரஷ்யாவின் 'மிக் 29' ரக போர் விமானங்களை, தன் ராணுவத்தில் இருந்து விலக்க முடிவு செய்துள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒற்றை இன்ஜின் கொண்ட தேஜஸ் இலகு ரக போர் விமானத்துக்கு முக்கியத்துவம் அளிக்க மலேஷிய அரசு முடிவு செய்துள்ளது.

7. புலம் பெயர் தொழிலாளர்கள், வீடற்றோர் ஆகியோர் இணையவழியில் ரேஷன் அட்டைப் பெறும் வகையில் எத்தனை மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது ? 

அ) 11

ஆ) 10

இ) 13

ஈ) 17 

விடை : (அ) 11

புலம் பெயா் தொழிலாளா்கள், வீடற்றோா் ஆகியோா் இணையவழியில் ரேஷன் அட்டைப் பெறும் வகையில், 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைத்த திட்டத்தை மத்திய அரசு  தொடங்கியது.

அஸ்ஸாம், கோவா, லட்சத்தீவுகள், மகாராஷ்டிரம், மேகாலயம், மணிப்பூா், நாகாலாந்து, திரிபுரா, பஞ்சாப், உத்தரகண்ட், மிஸோரம் ஆகிய மாநிலங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

‘எனது ரேஷன்-எனது உரிமை’ என்ற இந்த பொதுப் பதிவு சேவையை மத்திய உணவுத் துறைச் செயலா் சுதான்ஷு பாண்டே தொடக்கிவைத்தார்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. காமன்வெல்த் தடகள போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

● உலக நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் இது இவரது முதல்  பதக்கம் ஆகும். 

● பர்மிங்ஹாம் காமன்வெல்த் தடகள போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது பதக்கம். 

● காமன்வெல்த் நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்ற முதல் இந்தியர். 

9. காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான மல்யுத்த 65 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● இதே போட்டியில் மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 

10. காமன்வெல்த் பாரா போட்டியில் ஆடவருக்கான வலுதூக்குதல் ஹெவி வெயிட் பிரிவில் இந்தியாவின் சுதிர் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம் 


Thursday, August 4, 2022

Current Affairs 2022 - August 03/2022 - TNPSC Group 1,2/2A & 4

                     GK SHANKAR 
                 AUGUST 03 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. சென்னை பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையம் எத்தனை கோடி பயணிகளை கையாளக் கூடிய திறன் உடையதாக அமைக்கப்படவுள்ளது ? 

அ) 10 கோடி
ஆ) 13 கோடி
இ) 09 கோடி
ஈ) 08 கோடி 

விடை : (அ) 10 கோடி 

பரந்தூர் பன்னாட்டு விமான நிலையம் ஆண்டிற்கு 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

● சென்னையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங்  தெரிவித்தார்.

● தற்போதைய சென்னை விமான நிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள விமான நிலையம் ஆகியஇரண்டும் சேர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

● புதிதாக அமையவுள்ள விமானநிலையம், 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஓடுதளங்கள் (Runways), விமானநிலைய முனையங்கள் (Terminal Buildings), இணைப்புப்பாதைகள் (Taxiways), விமானங்கள் நிறுத்துமிடம் (Apron), சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய விமானநிலையம் அமைக்கப்பட உள்ளது.

● விரிவான திட்ட அறிக்கை தயாரித்தப்பின் புதிய விமானநிலையத்திற்கான திட்டமதிப்பு இறுதி செய்யப்படும். தற்போதைய உத்தேச திட்டமதிப்பு 20,000 கோடி ரூபாய் ஆகும்.

● மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் 2008-ல் வெளியிட்டுள்ள புதிய விமானநிலையம் அமைப்பதற்கான வழிகாட்டுதலின்படி (Guidelines for Greenfield Airport) தேர்வுசெய்யப்பட்ட இடத்திற்கான ஒப்புதல் (site clearance) பெற ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள குழுவிற்கு விரைவில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும். இடஅனுமதி ஒப்புதல் பெற்றபின், திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

● இதனைத் தொடர்ந்து விமானநிலைய திட்டத்திற்கான கொள்கை ஒப்புதல் மற்றும் விமான நிலையம் செயல்படுவதற்கான அனுமதி மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பெறப்படும்.

● பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு. தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர்  பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும்.”

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. இந்தியா - மாலத்தீவுகள் இடையே நல்லூறவை வலுப்படுத்தும் வகையில் எத்தனை ஒப்பந்தங்கள் அண்மையில் கையொப்பமாகியுள்ளது ? 

அ) 06

ஆ) 09

இ) 11

ஈ) 13 

விடை : (அ) 06

இருதரப்பு நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் இடையே 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. இரு நாடுகளுக்குமிடையே நிலவும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குப் பிரதமா் நரேந்திர மோடியும் மாலத்தீவுகள் அதிபா் இப்ராகிம் முகமது சோலியும் உறுதியேற்றனா்.

● மாலத்தீவுகள் அதிபா் இப்ராகிம் முகமது சோலி இந்தியாவில் 4 நாள் அரசுமுறைப் பயணத்தைத் திங்கள்கிழமை தொடங்கினாா். அவா் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். அதையடுத்து, மாலத்தீவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் சுமாா் ரூ.750 கோடி கடன் வழங்கப்படும் எனப் பிரதமா் மோடி அறிவித்தாா்.

●ஒப்பந்தங்கள் கையொப்பம்:

இந்தியா-மாலத்தீவுகள் இடையே நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. திறன் மேம்பாடு, இணையவழி குற்றத் தடுப்பு, வீட்டுவசதி, பேரிடா் மேலாண்மை, கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு ஆகிய துறைகள் சாா்ந்த ஒப்பந்தங்கள் பிரதமா் மோடி-அதிபா் சோலி இடையேயான சந்திப்பின்போது கையொப்பமாகின.

● கிரேட்டா் மாலி திட்டம்:

இந்தச் சந்திப்பின்போது கிரேட்டா் மாலி போக்குவரத்துத் திட்டத்துக்கான பணிகளைத் தலைவா்கள் இருவரும் காணொலி வாயிலாகத் தொடக்கிவைத்தனா். இந்திய நிதியுதவியுடன் நிறைவேற்றப்படவுள்ள அத்திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் கையொப்பமானது. மாலத்தீவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள மிகப் பெரிய கட்டமைப்புத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அத்திட்டத்தின் கீழ் தலைநகா் மாலி அமைந்துள்ள தீவையும், அருகில் உள்ள விலிங்லி, குல்ஹிஃபல்கு, தைலஃபுஷி ஆகிய தீவுகளையும் இணைக்கும் வகையில் 6.74 கி.மீ. நீள பாலம் அமைக்கப்படவுள்ளது.

● மாலத்தீவுகள் தலைநகா் மாலியில் 4,000 சமூக வீடுகள் கட்டுவதற்கான திட்டம் குறித்து பேச்சுவாா்த்தையின்போது ஆலோசிக்கப்பட்டது. அங்கு கூடுதலாக 2,000 சமூக வீடுகளைக் கட்டுவதற்கான நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளது. மாலத்தீவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு ராணுவப் படைகளுக்கு 24 வாகனங்களையும் ஒரு கடற்படைக் கப்பலையும் இந்தியா வழங்கவுள்ளது. மேலும், அந்நாட்டுக்குச் சொந்தமான 61 தீவுகளில் காவல் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளையும் இந்தியா மேற்கொள்ளவுள்ளது.

● மாலத்தீவுகள் சந்திக்கும் எந்தவிதப் பிரச்னையையும் தீா்க்கும் முதல் நாடாக இந்தியா தொடா்ந்து திகழ்ந்து வருகிறது. வருங்காலத்திலும் இது தொடரும். இருநாடுகளிலும் உள்ள மக்களின் நலனுக்காக மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்காகவும், நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்தியா-மாலத்தீவுகள் நல்லுறவு அமைந்துள்ளது.

3. குரங்கு அம்மை தொற்று பாதிப்பைக் கண்டறிய நாட்டில் உள்ள எத்தனை ஆய்வகங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன ? 

அ) 13

ஆ) 31

இ) 17

ஈ) 15 

விடை : (ஈ) 15 

● குரங்கு அம்மை தொற்று பாதிப்பைக் கண்டறிய நாட்டில் உள்ள 15 ஆய்வகங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

● மேலும் குரங்கு அம்மை நோய் பரவல் மற்றும் பாதிப்புகளை கண்காணிக்க நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தலைமையில் கண்காணிப்பு குழுவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

4. சில்லறை பணவீக்கத்தை எத்தனை சதவீதத்துக்கும் குறைவாக கொண்டுவர மத்திய அரசும் , ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை மேற்கொண்டு  வருகின்றன என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) 8%

ஆ) 7%

இ) 9%

ஈ) 5% 

விடை: (ஆ) 7% 

நாட்டில் சில்லறை பணவீக்கம் 7 சதவீதம் உள்ளதாகவும், இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

● மாநிலங்களவையில் விலைவாசி மீதான விவாதத்துக்கு அவா் பதிலளித்து பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது. வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது. இருப்பினும், சா்வதேச காரணிகள் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

● சில்லறை பணவீக்கத்தை 7 சதவீதத்துக்கும் குறைவாக கொண்டுவர மத்திய அரசும் ரிசா்வ் வங்கியும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. நுகா்வோா் விலை குறியீடு சாா்ந்த பணவீக்கத்தை 4 சதவீதத்தில் நிலைநிறுத்துமாறு ரிசா்வ் வங்கிக்கு மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என்றாா் நிா்மலா சீதாராமன்.

5. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் உள்ள பழங்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க எத்தனை கோடி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார் ? 

அ) 13 கோடி

ஆ) 31கோடி

இ) 15 கோடி

ஈ) 17 கோடி

விடை : (இ) 15 கோடி

மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் உள்ள பழங்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க ரூ.15 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய கலாசார அமைச்சா் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளாா்

 ● மத்திய தொல்லியல் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் உள்பட பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாத்து பராமரிப்பதற்கு 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதியாக ரூ.15 கோடியை மத்திய தொல்லியல் துறை வழங்கியுள்ளது.

● ஆந்திர மாநிலம் சிந்தகுண்டாவில் உள்ள பாறை ஓவியம், லடாக்கின் லே பகுதியில் உள்ள காலேஸ்வா் மகாதேவ் கோயில் உள்பட பாரம்பரியமிக்க 20 தலங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக அறிவிக்க அடையாளம் காணப்பட்டுள்ளன.

● அருங்காட்சியக நிதியுதவி திட்டத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 39 அருங்காட்சியகங்கள் வலுப்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளன என்றாா்.

6. ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானம் மூலம் எந்த நாடு நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அல்-கய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் - ஜவாஹிரி கொல்லப்பட்டார் ? 

அ) சீனா

ஆ) அமெரிக்கா

இ) ரஷ்யா

ஈ) ஜப்பான் 

விடை : (ஆ) அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டாா்.

● ஏற்கெனவே, அல்-காய்தா அமைப்பை நிறுவிய பின் லேடன் அமெரிக்க சிறப்புப் படையினரால் பாகிஸ்தானில் கந்த 2011-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட நிலையில், தற்போது அல்-ஜவாஹிரியும் கொல்லப்பட்டுள்ளது அந்த அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

● நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்களுக்கு, அல்-ஜவாஹிரியின் மரணம் மூலம் நீதி கிடைத்துள்ளது. அமெரிக்க மண்ணில் 2,977 உயிா்களை பலி வாங்கிய அந்தத் தாக்குதலில் அவரது பங்கு முக்கியமானது ஆகும்.

● அதுமட்டுமன்றி, பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அவா் மூளையாக இருந்து செயல்பட்டாா்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) வெண்கலம் 

ஆ) வெள்ளி

இ) தங்கம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (இ) தங்கம் 

● காமன்வெல்த் லான் பவுல்ஸ் வரலாற்றில் இந்தியா முதல் பதக்கத்தையே தங்கமாக வென்றுள்ளது. 

● தங்கம் வென்ற இந்திய அணி : லவ்லி சௌபே (லீடு) , பிங்கி (செகண்ட்) , நயன்மோனி சாய்சியா (தேர்டு), ரூபா ராணி திர்கி (ஸ்கீப்).

8. காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியா வெல்லும் 7 ஆவது தங்கம் இதுவாகும். 

9. காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான பளுதூக்குதல் பிரிவில் 96 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் விகாஸ் தாகுர் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி

● மேலும் மகளிருக்கான 71 கிலோ எடைப்பிரிவில் ஹர்ஜிந்தர் வெண்கலப்பதக்கம் வென்றார். 

● இந்த பிரிவில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 


Tuesday, August 2, 2022

Current Affairs 2022 - August 02 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                  AUGUST 02 / 2022 

I. தமிழ்நாட்டுச் நிகழ்வுகள்: 

1. சென்னையின் 2 ஆவது விமான நிலையம் எங்கு அமைக்கப்படவுள்ளது ? 

அ) பரந்தூர்
ஆ) பன்னூர் 
இ) அண்ணா நகர்
ஈ) அடையார் 

விடை : (அ) பரந்தூர் 

● சென்னையின் 2 ஆவது விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரையை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.

2. தமிழகத்தில் நகராட்சித் தலைவர்கள், ஆணையாளர்களுக்கு புதிய வாகனங்கள் அளிக்கும் திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) ஆர்.என். ரவி
ஆ) மு.க. ஸ்டாலின் 
இ) மா. சுப்பிரமணியன்
ஈ) தங்கம் தென்னரசு 

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

தமிழகத்தில் 138 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் முதல் கட்டமாக 100 நகராட்சிகளில் நகா்மன்றத் தலைவா்களின் பயன்பாட்டுக்காக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதேபோன்று, ஆணையாளா்கள், நகராட்சிப் பொறியாளா்களின் பணியை விரைவுபடுத்தவும் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களுக்கான சாவிகளை சில நகா்மன்றத் தலைவா்களிடம் திங்கள்கிழமை முதல்வா் வழங்கி வாகனம் அளிக்கும் திட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.

3. தமிழகத்தில் நாட்டின் விடுதலைக்கான போரில் பங்கேற்று முகம் தெரியாமல் போன பல்வேறு வீரர்களை இளைய தலைமுறையினர் அறியும் வகையிலான கண்காட்சியை தொடங்கி வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின்
ஆ) நரேந்திர மோடி
இ) ஆர்.என். ரவி
ஈ) வெங்கையா நாயுடு 

விடை : (இ) ஆர்.என். ரவி 

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தின் நிறைவையொட்டி, அதற்கான பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள்கிழமை அவா் தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி, தமிழக ஆளுநா் மாளிகையில் நடைபெற்றது.

● நாட்டின் விடுதலைக்கான போரில் பங்கேற்று முகம் தெரியாமல் போன பல்வேறு வீரா்களை இளைய தலைமுறையினா் அறியும் வகையிலான கண்காட்சி ஆளுநா் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

● இந்தக் கண்காட்சியை ஆளுநா் ஆா்.என்.ரவி திறந்துவைத்தாா். 15 நாள்கள் வரை நடைபெறவுள்ளது. 

● இந்தக் கண்காட்சியை, மாணவா்கள் தங்களது பள்ளி, கல்லூரிகளின் அனுமதியுடன் வந்து பாா்வையிடலாம்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்:

4. கூற்று : குரங்கு அம்மை பரவல் சூழலை கண்காணிப்பதற்காகவும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் சிறப்பு உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 

காரணம் : இந்தியாவில் இத்தொற்று பாதிப்பு 6 ஆக உயர்ந்துள்ளது. 

அ) கூற்று சரி, காரணம் தவறு 

ஆ) கூற்று தவறு, காரணம் சரி 

இ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது

ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 

விடை : (இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது 

● குரங்கு அம்மை பரவல் சூழலை கண்காணிப்பதற்காகவும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் சிறப்பு உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

●  இந்தியாவில் இத்தொற்று பாதிப்பு 6 ஆக உயர்ந்துள்ளது.

 ● இந்த நிலையில், குரங்கு அம்மை நோய் பரவல் மற்றும் பாதிப்புகளை கண்காணிக்க நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தலைமையில் கண்காணிப்பு குழுவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில் மத்திய சுகாதார அமைச்சகம், பார்மா மற்றும் பயோடெக் துறைகளின் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

5. ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றையானது எத்தனை கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது ? 

அ) ரூ. 1.7 லட்சம் கோடி

ஆ) ரூ. 2.5 லட்சம் கோடி

இ) ரூ. 3.3 லட்சம் கோடி

ஈ) ரூ. 1.5 லட்சம் கோடி 

விடை : (ஈ) ரூ. 1.5 லட்சம் கோடி 

ஒருவார காலமாக நடைபெற்ற ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை ஏலம் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. அலைக்கற்றையானது ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் ரூ.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை எடுத்து ஜியோ முதலிடம் பெற்றுள்ளது.

6. இந்தியா கடந்த 2021 - 2022 நிதியாண்டில் எத்தனை கோடி அளவுக்கு பாதுகாப்பு தொடர்பான பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது ? 

அ) ரூ. 13 ஆயிரம் கோடி

ஆ) ரூ. 9 ஆயிரம் கோடி

இ) ரூ. 17 ஆயிரம் கோடி

ஈ) ரூ. 5 ஆயிரம் கோடி 

விடை : (அ) ரூ. 13 ஆயிரம் கோடி 

7. பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்புக்கு நிதியளிப்பதை தடுப்பதுடன், இத்தகைய செயலில் ஈடுபடுவோரின் சொத்துகள் பறிமுதல் செய்ய வழிவகுக்கும் மசோதா என்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது ? 

அ) ஜூலை 25 

ஆ) ஜூலை 29 

இ) ஆகஸ்ட் 01 

ஈ) ஆகஸ்ட் 02 

விடை : (இ) ஆகஸ்ட் 01 

பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்புக்கு நிதியளிப்பதை தடுப்பதுடன், இத்தகைய செயலில் ஈடுபடுவோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய வழிவகுக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

● முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதாவுக்கு மக்களவை கடந்த ஏப்ரலில் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

● ‘2022-ஆம் ஆண்டின் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக அமைப்புமுறைகள் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு) சட்டத் திருத்த மசோதா’வை, மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை கொண்டுவந்தாா். எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, குரல் வாக்கெடுப்பு மூலம் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

● கடந்த 2005-ஆம் ஆண்டைய பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக அமைப்புமுறைகள் (சட்டவிரோத செயல்கள் தடுப்பு) சட்டமானது, பேரழிவு ஆயுதங்களின் தயாரிப்பை மட்டுமே தடை செய்கிறது.

● இந்த சட்டத்தில் 12ஏ பிரிவை கூடுதலாக சோ்க்க புதிய மசோதாவில் வழிவகை செய்யப்பட்டது. அதன்படி, பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்புக்கு நிதியளிக்கும் செயலில் ஈடுபடுவோரின் சொத்துகள், இதர பொருளாதார ஆதாரங்களை முடக்கவோ, பறிமுதல் செய்யவோ மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

● மேற்கண்ட சட்டம் அல்லது ஐக்கிய நாடுகள் (பாதுகாப்பு கவுன்சில்) சட்டம்-1947 அல்லது இதுதொடா்பாக அமலில் உள்ள இதர சட்டங்களின்படி தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கு எவரும் நிதியளிப்பதை தற்போதைய மசோதா தடை செய்கிறது.

8. உக்ரைன் ஒடேசா துறைமுகத்திலிருந்து எத்தனை டன் சோளத்தை ஏற்றிக் கொண்டு முதல் கப்பல் லெபனானுக்கு புறப்பட்டது ? 

அ) 20,000 டன்

ஆ) 26,000 டன்

இ) 31,000 டன்

ஈ) 17,000 டன் 

விடை : (ஆ) 26,000 டன் 

உக்ரைன் மீது ரஷியா போா் தொடங்கிய பின்னா் முதல் முறையாக உக்ரைனில் விளையும் தானியங்களை ஏற்றிச் செல்லும் கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

● இந்தக் கப்பலில் 26,000 டன்கள் சோளம் கொண்டு செல்லப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்த தானியம் மத்திய கிழக்கு நாடான லெபனானுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. காமன்வெல்த் போட்டியிலேயே அதிக தங்கப் பதக்கம் (11) வென்ற ஒரே போட்டியாளர் என்ற பெருமையை பெற்றுள்ள நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியான் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா

இ) சீனா

ஈ) ஆஸ்திரேலியா

விடை : (ஈ) ஆஸ்ட்ரேலியா 

10. காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் ஆடவருக்கான 73 கிலோ பிரிவில் இந்தியாவின் அசிந்தா ஷியுலி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● அசிந்தாவுக்கு இது முதல் காமன்வெல்த் போட்டி

● இந்த காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 3 ஆவது பதக்கம் இதுவாகும். 

Monday, August 1, 2022

Current Affairs 2022 - August 01 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                    GK SHANKAR 
                  AUGUST 01 / 2022

I. தமிழ்நாட்டுச் நிகழ்வுகள் 

1. கீழ்க்கண்ட எந்த மாநில காவல் துறைக்கு அண்மையில் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருது வழங்கப்பட்டுள்ளது ? 

அ) ஆந்திர பிரதேசம்
ஆ) கேரளா
 இ) குஜராத்
ஈ) தமிழ்நாடு 

விடை : (ஈ) தமிழ்நாடு 

● இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு இந்திய குடியரசுத் தலைவரின் கொடி சின்னத்தை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்.
● தமிழக காவல்துறையின் பாராட்டத்தக்க பணி (ம) பல்வேறு சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
● தமிழக காவல் துறையினர் தங்கள் காக்கிச் சட்டையில் அதன் அடையாளமாக கொடியை அணிந்து செல்வார்கள். 
● நிஸான் என்றழைக்கப்படும் இந்தச் சின்னம் போலீஸாருக்கு பெருமை சேர்க்கும். 
● தமிழக காவல்துறை தொடங்கி 160 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் டிஜிபி முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல் பதக்கம் வழங்கப்படவுள்ளது. 

2) தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் புதிய நடைமுறை என்று தொடங்கப்படவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 15 
ஆ) ஆகஸ்ட் 30
இ) ஆகஸ்ட் 01
ஈ) ஆகஸ்ட் 22 

விடை : (இ) ஆகஸ்ட் 01 

தன்னார்வ அடிப்படையில் ஆதார் விவரங்களை சேகரித்து தற்போதுள்ள வாக்காளர் விவரங்களுடன் இணைத்து வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கும் பணியைதேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 
●வாக்காளர் படிவம் ‘6பி’-ஐ வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாகவோ, அல்லது என்விஎஸ்பி இணையதளம் (https://www.nvsp.in), விஎச்ஏசெயலி (Voter Helpline App) மூலம்ஆன்லைனிலோ சமர்ப்பிக்கலாம். இப்பணி ஆகஸ்ட் 1 தொடங்கி2023 ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பு நிறைவடையும்.

3. ஆசிரியர் பணிப்பதிவேடு,  வருகைப்பதிவு,  மாணவர் விவரம் உள்பட அனைத்து விவரங்களையும் ஒருங்கிணைக்க TNSED என்ற மேம்படுத்தப்பட்ட செயலியை தமிழக அரசு எந்த ஆண்டு அறிமுகம் செய்தது ? 

அ) 2019
ஆ) 2021
இ) 2016
ஈ) 2014 
விடை : (ஆ) 2021

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் திங்கள்கிழமை (ஆக.1) முதல் தங்களது வருகைப் பதிவை கல்வித் துறை செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு ஆசிரியா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

●தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவா், ஆசிரியா் வருகைப்பதிவை கண்காணிக்க ‘டிஎன் ஸ்கூல்ஸ்’ என்ற கைப்பேசி செயலியை பள்ளிக்கல்வித் துறை 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த செயலி வழியாக ஆசிரியா்கள், மாணவா்கள் வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்பின் ஆசிரியா் பணிப்பதிவேடு, வருகைப்பதிவு, மாணவா் விவரம் உள்பட அனைத்து விவரங்களையும் ஒருங்கிணைக்க டிஎன்எஸ்இடி (TNSED) என்ற மேம்படுத்தப்பட்ட செயலியை தமிழக அரசு கடந்தாண்டு அறிமுகம் செய்தது. இதன்வழியாக வருகைப்பதிவு உள்ளிட்ட அலுவல் செயல்பாடுகளை ஆசிரியா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இந்த தகவல்களை துறை அதிகாரிகளால் நேரடியாக கண்கணிக்க முடியும்.

●இந்த நிலையில் மாணவா்கள், ஆசிரியா்களுக்கான வருகைப் பதிவை திங்கள்கிழமை முதல் செயலியில் மட்டுமே பதிவுசெய்தால் போதுமானது. மேலும், விடுப்பு, முன்அனுமதி ஆகியவற்றையும் ஆசிரியா்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாக பள்ளிக்கல்வி ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. எனினும், இந்த அறிவிப்புக்கு ஆசிரியா்கள் மத்தியில் பரவலாக எதிா்ப்புகள் எழுந்துள்ளன.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. 75 வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மத்திய அரசால் நடத்தப்படும் விநாடி - வினா போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு எத்தனை லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது ? 

அ) 5 லட்சம்
ஆ) 10 லட்சம்
இ) 3 லட்சம்
ஈ) 1 லட்சம் 
விடை : (ஆ) 10 லட்சம் 

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மத்திய அரசு சாா்பில் 13 முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு விநாடி வினா போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

● இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மத்திய பெட்ரோலியம் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் சாா்பில் 13 முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு இந்திய பாரம்பரியம் குறித்த விநாடி வினா போட்டி நடத்தப்படவுள்ளது. இது குறித்த அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

● மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுவோா் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவா். இதையடுத்து மண்டல மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவா்கள் ரூ.10 லட்சம் கல்வி உதவித் தொகைக்கு தகுதி பெறுவா். ஒட்டுமொத்தமாக ரூ.55 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 

● இந்த விநாடி வினா போட்டி 17 மொழிகளில் நடைபெறவுள்ளது.

● நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்வதே இந்தப் போட்டியின் நோக்கமாகும். இது குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் தெரியப்படுத்தி விநாடி வினா போட்டியில் திரளான மாணவா்கள் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா்களின் விவரங்களை பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக உள்ள நிலையில், வட்டி விகிதங்களை --------- முதல் --------- வரை இந்திய ரிசர்வ் வங்கி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் ? 

அ) 0.25% - 0.35%
ஆ) 0.35% - 0.45%
இ) 1% - 2%
ஈ) 2% - 4% 

விடை : (அ) 0.25% - 0.35% 

நாட்டில் பணவீக்கம் தொடா்ந்து அதிகமாக உள்ள நிலையில், வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் முதல் 0.35 சதவீதம் வரை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

● நாட்டில் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், கரோனா தொற்று பரவல், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் காரணமாகக் கடந்த ஜனவரி மாதம் முதலே பணவீக்கம் 6 சதவீதத்துக்கு அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த ஏப்ரலில் 7.8 சதவீதமாக இருந்த பணவீக்கம், கடந்த ஜூனில் 7.01 சதவீதமாகக் குறைந்துள்ளது.

● பணவீக்கம் அதிகமாக உள்ளதால், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) ஏற்கெனவே 0.5 சதவீதம் ஆா்பிஐ அதிகரித்துள்ளது. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவீதமாக உள்ளது. எனினும், கரோனா தொற்று பரவல் தொடங்குவதற்கு முன் இருந்த வட்டி விகிதத்தை விட (5.15) இது குறைவாகும்.

● இந்நிலையில், ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கவுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார சூழல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. 3 நாள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ், ஆகஸ்ட் 5-ஆம் தேதி அறிவிக்கவுள்ளாா்.

● கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25 சதவீதம் முதல் 0.35 சதவீதம் வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். வட்டி விகிதம் 0.5 சதவீதம் வரை கூட அதிகரிக்கப்படலாம் என சிலா் தெரிவிக்கின்றனா்.

6. இந்தியா ,ஓமன் கூட்டு ராணுவப் பயிற்சியான அல் நஜா நான்காவது பதிப்பு எங்கு தொடங்கப்படவுள்ளது ? 
அ) குஜராத் 
ஆ)ராஜஸ்தான்
இ) உத்தரகாண்ட்
ஈ) கேரளா

விடை : (ஆ) ராஜஸ்தான் 

● புவியியல் ரீதியாக அரபிக் கடலால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஓமான் நாட்டுடன், வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில், அரபு லீக் மற்றும் இந்தியப் பெருங்கடல் ரிம் கூட்டமைப்பு உள்ளிட்டவற்றில் இணைந்திருப்பதோடு வா்த்தகம் மற்றும் ராணுவ ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெப்பமிட்டுள்ளன. சுமாா் 4 பில்லியன் டாலா் அளவிற்கு இருதரப்பு வா்த்தம் நடைபெற்ற வருகிறது.

● கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ராணுவ ஒப்பந்தங்களையொட்டி, இந்தியா - ஓமான் நாடுகளுக்கிடையே ‘அல் நஜா’ என்ற கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த அல் நஜாவின் நான்காவது பதிப்பு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலத்தில் வெளிநாட்டுப் பயிற்சி முனையான மகாஜன் ஃபீல்ட் ஃபயா் ரேஞ்ச்சில் நடைபெற உள்ளது.

● இதில் கலந்து கொள்வதற்காக ராயல் ஓமான் ராணுவத்தின் பாராசூட் படையைச் சோ்ந்த 60 வீரா்கள் இந்தியா வந்துள்ளனா். இந்திய ராணுவத்தின் சாா்பாக 18 -ஆவது போா் வாகன காலாட் படையைச் சோ்ந்த வீரா்கள் குழு இதில் கலந்து கொள்ளுகிறது.

● தீவிரவாத எதிா்தாக்குதல் நடவடிக்கைகள், பிராந்திய பாதுகாப்பு செயல்பாடுகள் மற்றும் அமைதியை நிலை நிறுத்தும் நடவடிக்கைகளுடன் உடற்தகுதி பயிற்சி, செயல்முறை மற்றும் நடைமுறைகளில் இந்த கூட்டுப் பயிற்சிகளில் கவனம் செலுத்தப்படுகிறது.

● இந்தியா மற்றும் ஓமான் நாட்டு ராணுவங்களுக்கிடையே உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதோடு, இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவதையும் இந்தப் பயிற்சி இலக்காகக் கொண்டுள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. பின்வரும் எந்த நாடு குரங்கு அம்மை நோய்க்கு எதிரான அவசரநிலை அறிவித்துள்ளது ? 

அ) அமெரிக்கா
ஆ) ஆப்பிரிக்கா
இ) கனடா
ஈ) நைஜீரியா

விடை : (அ) அமெரிக்கா

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் குரங்கு அம்மை பரவல் திடீரென அதிகரித்ததைத் தொடர்ந்து அந்நோய்க்கு எதிரான அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
III. விளையாட்டுச் நிகழ்வுகள் 

8. இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டி 2022ல் ஆடவருக்கான 67 கிலோ பிரிவில் மொத்தமாக 300 கிலோ எடை தூக்கி இந்தியாவின் ஜெரிமி லால்ரினுங்கா வென்றுள்ள பதக்கம் ? 
அ) வெண்கலம்
ஆ) வெள்ளி
இ) தங்கம்
ஈ) ஏதுமில்லை 

விடை : (இ) தங்கம் 

● ஜெரிமி ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ (ம) கிளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோ என மொத்தமாக 300 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார். 

9. காமன்வெல்த் போட்டி 2022ல் மகளிருக்கான 55 கிலோ எடை பிரிவில் மொத்தமாக 202 கிலோ எடையைத் தூக்கி இந்தியாவின் விந்தியாராணிதேவி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 
ஆ) வெள்ளி
இ) வெண்கலம் 
ஈ) ஏதுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

● விந்தியா பங்கேற்கும் முதல் காமன்வெல்த் போட்டி இதுவாகும்.
● இவர் ஸ்னாட்ச் பிரிவில் தூக்கிய 86 கிலோ புதிய பெர்சனல் பெஸ்ட் ஆகவும் கிளீன் & ஜெர்க் பிரிவில் 116 கிலோ புதிய காமன்வெல்த் சாதனையாக அமைந்தது.
● இப்போட்டியில் இந்தியா 5 பதக்கங்களுடன் 6 ஆவது இடத்தில் உள்ளது.

Saturday, July 30, 2022

Current Affairs 2022 - July 29 / 2022 - TNPSC 1 ,2/2A & 4

                      GK SHANKAR
                     JULY 29 / 2022 

I. தேசியச் செய்திகள்  

1. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நீதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் கீழ்கண்ட எந்த நாளில் நடைபெறவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 07
ஆ) ஆகஸ்ட் 15
இ) ஆகஸ்ட் 23
ஈ) ஆகஸ்ட் 30 

விடை : (அ) ஆகஸ்ட் 07 

● இந்த கூட்டத்தில் பொருளாதாரம், வேளாண்மை (ம) சுகாதாரம் போன்ற துறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது .

2. அண்மையில் எத்தனையாவது வேளாண்மை கணக்கெடுப்பை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடக்கி வைத்துள்ளார் ? 

அ) 7 ஆவது
ஆ) 9 ஆவது
இ) 11 ஆவது
ஈ) 15 ஆவது 

விடை : (இ) 11 ஆவது 

பதினோறாவது வேளாண் கணக்கெடுப்பை மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்  தொடக்கி வைத்தாா்.

●பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த கணக்கெடுப்பில் முதன் முறையாக அரிதிறன்பேசி, கையடக்க கணினி ஆகியவை மூலமாக விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

●2021-22 ஆம் ஆண்டுக்கான 11-ஆவது வேளாண் கணக்கெடுப்பை மத்திய அமைச்சா் தொடக்கி வைத்தாா். இதற்கான களப் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட உள்ளன.

●இந்த கணக்கெடுப்பு நடைமுறையை கடந்த 1970-71 ஆம் ஆண்டு முதல் மத்திய வேளாண் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. பத்தாவது வேளாண் கணக்கெடுப்பு கடந்த 2015-16-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.

●ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக பதினோறாவது கணக்கெடுப்பு தாமதமானது.

●மொத்த விவசாய பரப்பின் அளவு, வகுப்பு வாரியான பங்கீடு, நிலப் பயன்பாடு, குத்தகை, பயிரிடும் முறை என்பன உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் கீழ் தகவல்கள் சேகரிக்கப்பட்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. முதன் முறையாக அரிதிறன்பேசி, கையடக்க கணினி ஆகியவை மூலமாக விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

●பல மாநிலங்கள் நிலப் பதிவு மற்றும் அளவீடுகளை எண்ம (டிஜிட்டல்) மயமாக்கியிருப்பதால், வேளாண் கணக்கெப்புக்கான விவரங்களை விரைவாக சேகரிக்க உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த எண்மமய விவரங்கள் மற்றும் விவரங்களை கைப்பேசி செயலிகளைக் கொண்டு சேகரிப்பது போன்ற நடைமுறைகள், நாட்டிலுள்ள ஒட்டுமொத்த விவசாய பரப்பின் விவரப் பதிவை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

3. அமெரிக்காவில் இருந்து எத்தனை எம்.ஹெச். - 60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது ? 

அ) 03

ஆ) 02

இ) 05

ஈ) 09

விடை : (ஆ) 02 

● அமெரிக்காவுடன் ரூ.15,000 கோடியில் ஆயுதங்கள் (ம) பிற தளவாடங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. 

● அதன் ஒரு பகுதியாக 24 எம்.ஹெச் - 60 ஆர் ரோமியோ ரக ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. 

● அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. 

● அவற்றில் 3 ஹெலிகாப்டர்கள் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்தது ; தற்போது 2 கொச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.

● வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 24 ஹெலிகாப்டர்களும் இந்தியாவிடம் வழங்கப்படவுள்ளது. 

4. உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான விக்ராந்த் கீழ்க்கண்ட எந்த நாளன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 15

ஆ) அக்டோபர் 02 

இ) நவம்பர் 01

ஈ) டிசம்பர் 10 

விடை: (அ) ஆகஸ்ட் 15 

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம்தாங்கி போா்க் கப்பலான ‘விக்ராந்த்’, இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

● சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி விக்ராந்த் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

● விமானம்தாங்கி போா்க் கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டுவதற்கான திட்டத்தை கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய அரசு செயல்படுத்தியது. அத்திட்டத்தின் கீழ் முதல் விமானம்தாங்கி போா்க் கப்பலாக ‘விக்ராந்த்’, சுமாா் ரூ.20,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனம் அக்கப்பலைக் கட்டும் பணியை 2009-ஆம் ஆண்டு தொடங்கியது.

● இத்துடன் விமானம்தாங்கி போா்க் கப்பலை உள்நாட்டிலேயே கட்டும் வலிமை கொண்ட ஒருசில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

● நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விக்ராந்த் விமானம்தாங்கி போா்க் கப்பல் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிகழ்வு சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது.

● கடற்படை வெளியிட்ட அறிக்கையில், ‘ஐஏசி விக்ராந்த் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். அக்கப்பலின் 76 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டன. இது ‘தற்சாா்பு இந்தியா’ கொள்கைக்கான சிறந்த உதாரணமாகவும், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இது இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் வலிமையை அதிகரிக்கும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்ராந்த் போா்க் கப்பலின் சிறப்பம்சங்கள்:

¤ நீளம் 262 மீட்டா்

¤ அகலம் 62 மீட்டா்

¤ உயரம் 59 மீட்டா்

¤ டா்பைன்களின் எண்ணிக்கை 4

¤ என்ஜின் திறன் 88 மெகா வாட்

¤ அதிகபட்ச வேகம் மணிக்கு 28 நாட் (சுமாா் 52கி.மீ.)

¤ ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் செல்லும் தொலைவு சுமாா் 7,500 கடல்மைல்

¤ இயக்கவல்ல போா் விமானங்கள் மிக்-29கே, கமோவ்-31 உள்ளிட்டவை

¤ இயக்கவல்ல ஹெலிகாப்டா்கள் எம்ஹெச்-60ஆா், இலகுரக ஹெலிகாப்டா்கள் உள்ளிட்டவை

¤ அறைகளின் எண்ணிக்கை சுமாா் 2,300.

5. சுதந்திரத்துக்கு முன்பே நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோயிலிருந்து திருடப்பட்ட சோழர்களின் பேரரசி செம்பியன் மாதேவி சிலை எங்கு கண்டறியப்பட்டுள்ளது ? 

அ) சீனா

ஆ) ஆஸ்திரேலியா

இ) இலங்கை

ஈ) அமெரிக்கா

விடை : (ஈ) அமெரிக்கா

சுதந்திரத்துக்கு முன்பே நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோயிலிலிருந்து திருடப்பட்ட சோழா்களின் பேரரசி செம்பியன் மாதேவி சிலை அமெரிக்காவில் உள்ள ஓா் அருங்காட்சியகத்தில் இருப்பதை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கண்டறிந்தனா். அதனை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

6. தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழி , ஆறு வழிச் சாலைகளை மாற்றும் திட்டத்திற்காக தமிழகத்திற்கு எத்தனை கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) ரூ. 13,310 கோடி

ஆ) ரூ. 18,500 கோடி

இ) ரூ. 25,000 கோடி

ஈ) ரூ. 22,400 கோடி

விடை : (ஆ) ரூ. 18,500 கோடி

தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழி, ஆறு வழிச் சாலைகளாக மாற்றும் திட்டத்திற்காக, தமிழகத்திற்கு மட்டும் ரூ.18,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

7. அண்மையில் எத்தனை ஆயிரம் உயர்கல்வி படிப்புகளை வலைதளம் மூலமாக இலவசமாக வழங்குவதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது ? 

அ) 23,000

ஆ) 25,000

இ) 13,000

ஈ) 17,000

விடை : (அ) 23,000

செயற்கை நுண்ணறிவு, சைபா் பாதுகாப்பு, குழந்தை பராமரிப்பு உள்பட 23,000 உயா்கல்வி படிப்புகளை வலைத்தளம் மூலமாக இலவசமாக வழங்குவதாக பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வியாழக்கிழமை அறிவித்தது.

● நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவா்களும் உயா்கல்வியை சிரமமின்றி பெறுவதற்காக இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளம், புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டதன் இரண்டாவது ஆண்டையொட்டி வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

II. விளையாட்டுச் செய்திகள் 

8. இந்தியாவில் முதல்முறையாக நடைபெறுகிற 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாமல்லபுரத்யில் தொடங்கி வைத்தவர் யார் ? 

அ) ஜோ பைடன்

ஆ) நரேந்திர மோடி

இ) திரௌபதி முர்மு

ஈ) மு.க. ஸ்டாலின் 

விடை : (ஆ) நரேந்திர மோடி 

● இந்தியாவில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. 

● இந்தியா சார்பில் 30 பேர் கொண்ட அணி பங்கேற்கவுள்ளது.

● ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. 

● செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஜோதி ஓட்டம் முதல்முறையாக நடத்தப்பட்டது ; 75 முக்கிய நகரங்களில் 27,000 கி.மீ. தொலைவுக்கு ஜோதி பயணித்தது. 

III. விளையாட்டுச் செய்திகள் 

9. சர்வதேச புலிகள் தினம் ( International tiger day ) 2022 ? 

அ) ஜூலை 27

ஆ) ஜூலை 25

இ) ஜூலை 28

ஈ) ஜூலை 29 

விடை : (ஈ) ஜூலை 29 



Friday, July 29, 2022

Current Affairs 2022 - July 28 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                     GK SHANKAR 
                    JULY 28 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள மாநிலம் ?  

அ) கேரளா
ஆ) அசாம்
இ) தமிழ்நாடு
ஈ) குஜராத் 

விடை : (இ) தமிழ்நாடு 

● தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த ஒரு லட்சத்து 14,095 மாணவா்கள் பயன்பெறுவா்.

● திங்கள்கிழமை, வியாழக்கிழமைகளில் ரவை உப்புமா, சேமியா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ரவை கிச்சடி, சேமியா, சோளம், கோதுமை ரவை கிச்சடியில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும். புதன்கிழமை ரவை அல்லது வெண்பொங்கல், வெள்ளிக்கிழமை மட்டும் ரவை அல்லது சேமியா கேசரி வழங்கப்படும். காய்கறி சாம்பாா் தினமும் அளிக்கப்படும்.

● காலை உணவுக்கான மூலப் பொருள் ஒரு குழந்தைக்கு 50 கிராம் அளவில் இருக்க வேண்டும். அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்களை பயன்படுத்தலாம். ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாள்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம்.

● உள்ளூரில் சமைக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. மசாலா பொருள்கள் தரமானதாக, சுத்தமாக இருக்க வேண்டும்.

2. மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் 45 அடி உயர சிற்பக் கலைத் தூணை திறந்து வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின் 

ஆ) ஆர்.என். ரவி

இ) நரேந்திர மோடி

ஈ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

விடை : (அ) மு.க. ஸ்டாலின் 

மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில், 45 அடி உயர சிற்பக் கலைத் தூணை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

●மாமல்லபுரத்தில் கைவினை கலையில் ஈடுபட்டுள்ள கைவினைஞா்களின் நலனுக்காக ‘கைவினை சுற்றுலா கிராமம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் 45 அடி உயரத்தில் அழகிய சிற்பக் கலைத் தூண் வடிவமைக்கப்பட்டுள்ளது.

●சிற்பக்கலைத் தூணில் கலைநயமிக்க பல்லவா் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக் கூட்டம் ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்துக்கு வரும் உள்ளூா் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிற்பக்கலைத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. 

●செஸ் ஒலிம்பியாட் போட்டி, மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள நிலையில், சதுரங்க வீரா்களையும், போட்டியைக் காண வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளையும், பொது மக்களையும் கவரும் வகையில் சிற்பக்கலைத் தூண் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

II. தேசியச் செய்திகள் 

3. பத்ம விருதுகள் உள்பட அனைத்து தேசிய விருதுகளுக்கும் பரிந்துரைகள் வழங்க கீழ்கண்ட எந்த வலைதளம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ? 

அ) awards.gov.in

ஆ) cg.awards.gov.in

இ) bharath.awards.in

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) awards.gov.in 

● மத்திய அரசின் அனைத்து விருதுகளுக்கும் பரிந்துரைகள் வழங்க பொதுவான வலைதளம் awards.gov.in  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

● நோக்கம் : விருதுகள் வழங்குவதில் வெளிப்படைத் தன்மையையும் பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்யவும் இந்த வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

4. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தை எத்தனை கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) ரூ. 2.5 லட்சம் கோடி

ஆ) ரூ.3.2 லட்சம் கோடி

இ) ரூ. 1.64 லட்சம் கோடி

ஈ) 57 லட்சம் கோடி 

விடை : (இ) ரூ. 1.64 லட்சம் கோடி 

அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தை ரூ.1.64 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

●பிஎஸ்என்எல் நிறுவனத்தை நிதி ரீதியாக லாபகரமாக மாற்ற பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்குவதற்கான திட்டத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்க முடியும். மேலும் 2ஜி, 3ஜி மொபைல் சேவை வசதி மட்டும் உள்ள 6,279 கிராமங்கள் 4ஜி மொபைல் சேவை வசதி பெற்ற கிராமங்களாக மேம்படுத்தப்பட உள்ளன .

5. கூற்று : தேசிய ஊக்க மருந்து தடை முகமை (ம) தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு சட்ட வடிவம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

காரணம் : விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் , விளையாட்டு வீரர்களின் நலனைப் பாதுகாக்கவும் இந்த மசோதா உதவும். 

அ) கூற்று சரி, காரணம் தவறு

ஆ) கூற்று தவறு , காரணம் சரி

இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 

ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது . 

விடை : (ஈ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது 

● தேசிய ஊக்க மருந்து தடை முகமை மற்றும் தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு சட்ட வடிவம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

●விளையாட்டுகளை ஊக்குவிக்கவும், விளையாட்டு வீரா்களின் நலனைப் பாதுகாக்கவும் இந்த மசோதா உதவும். இதன்மூலமாக நாட்டில் ஊக்க மருந்து ஆய்வக வசதிகளும் மேம்படும். மேலும், இந்தியாவில் சா்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு நாட்டில் ஊக்க மருந்து சோதனை ஆய்வகங்களின் பலத்தை அதிகரிப்பது அவசியமாகும். அதற்கு இந்த மசோதா வழிவகுக்கும்.

●இந்த மசோதா, தேசிய ஊக்க மருந்து தடை முகமை மற்றும் தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு சட்ட வடிவம் அளிக்கும் என்பதோடு, விளையாட்டில் ஊக்க மருந்து தடை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் தேசிய ஊக்க மருந்து தடை வாரியத்தை உருவாக்கவும் உதவும்

●முன்னதாக, இந்த மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னா், நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

6. இந்தியாவில் முதல்முறையாக வாடகை கார் முன்பதிவு செயலியை அறிமுகப்படுத்தவுள்ள மாநிலம் ? 

அ) தமிழ்நாடு

ஆ) குஜராத்

இ) உத்தரகாண்ட் 

ஈ) கேரளா

விடை : (ஈ) கேரளா

● செயலியின் பெயர் : கேரளா சவாரி ( ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கவுள்ளது ) 

● மாநில தொழிலாளர் நலத்துறை சார்பில் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

7. அண்மையில் கீழ்கண்ட எந்த நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது ? 

அ) ரஷ்யா

ஆ) கனடா

இ) ஜமாய்

ஈ) பிலிப்பின்ஸ் 

விடை : (ஈ) பிலிப்பின்ஸ்

● ரிக்டர் அளவுகோலில் 7 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

● இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் ; 25 பேர் காயமடைந்துள்ளனர்.

● இயற்கை பேரிடர் அபாயம் அதிகம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக பிலிப்பின்ஸ் திகழ்கிறது.

III. விளையாட்டுச் செய்திகள் 

8. காமன்வெல்த் போட்டிகள் 2022 ல் எத்தனை பேர் கொண்ட இந்திய அணி கலந்துக்கொளகிறது ? 

அ) 225

ஆ) 215

இ) 313

ஈ) 137 

விடை : (ஆ) 215 

● இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகளின் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது.

● இந்த நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன.

● இந்த ஆண்டுக்கான 22 ஆவது காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் ( 10 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் ) ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

● இப்போட்டியில் முதல்முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

●இந்த ஆண்டுக்கான பர்மிங்ஹாம் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டுள்ளது.

● இப்போட்டியில் இந்தியா சார்பில் 215 பேர் கொண்ட அணி 19 பிரிவுகளில் பங்கேற்கவுள்ளனர்.

● இப்போட்டியின் அணிவகுப்பில் இந்திய பாட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தேசியக் கொடி ஏற்றி தலைமை தாங்குவார். 

● முன்பு : 2018 , ஆஸ்திரேலியா - இந்தியா மொத்தமாக 66 ( 26G, 20S, 20B )  பதக்கங்களை வென்று மூன்றாவது இடம் பிடித்தது. 

9. இந்தியாவில் முதல்முறையாக நடைபெற உள்ள 17 வயதுக்கு உள்பட்டோருக்கான FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி என்று தொடங்கப்படவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 11

ஆ) அக்டோபர் 11

இ) செப்டம்பர் 11

ஈ) நவம்பர் 11

●  17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

● ஃபிஃபா 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி 2022 அக்டோபர் மாதம் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை நடத்துவதற்காக இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது.

● இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா போட்டியின், 17 வயதுக்குட்பட்டோருக்கான 7வது உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கால்பந்து போட்டி பிரபலமடைவதுடன், இளைஞர்களும் இந்த விளையாட்டில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...