● நாட்டின் விடுதலைக்கான போரில் பங்கேற்று முகம் தெரியாமல் போன பல்வேறு வீரா்களை இளைய தலைமுறையினா் அறியும் வகையிலான கண்காட்சி ஆளுநா் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது.
● இந்தக் கண்காட்சியை ஆளுநா் ஆா்.என்.ரவி திறந்துவைத்தாா். 15 நாள்கள் வரை நடைபெறவுள்ளது.
● இந்தக் கண்காட்சியை, மாணவா்கள் தங்களது பள்ளி, கல்லூரிகளின் அனுமதியுடன் வந்து பாா்வையிடலாம்.
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்:
4. கூற்று : குரங்கு அம்மை பரவல் சூழலை கண்காணிப்பதற்காகவும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் சிறப்பு உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
காரணம் : இந்தியாவில் இத்தொற்று பாதிப்பு 6 ஆக உயர்ந்துள்ளது.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது
ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
விடை : (இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
● குரங்கு அம்மை பரவல் சூழலை கண்காணிப்பதற்காகவும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் சிறப்பு உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
● இந்தியாவில் இத்தொற்று பாதிப்பு 6 ஆக உயர்ந்துள்ளது.
● இந்த நிலையில், குரங்கு அம்மை நோய் பரவல் மற்றும் பாதிப்புகளை கண்காணிக்க நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தலைமையில் கண்காணிப்பு குழுவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில் மத்திய சுகாதார அமைச்சகம், பார்மா மற்றும் பயோடெக் துறைகளின் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
5. ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றையானது எத்தனை கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது ?
அ) ரூ. 1.7 லட்சம் கோடி
ஆ) ரூ. 2.5 லட்சம் கோடி
இ) ரூ. 3.3 லட்சம் கோடி
ஈ) ரூ. 1.5 லட்சம் கோடி
விடை : (ஈ) ரூ. 1.5 லட்சம் கோடி
● ஒருவார காலமாக நடைபெற்ற ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை ஏலம் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. அலைக்கற்றையானது ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் ரூ.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை எடுத்து ஜியோ முதலிடம் பெற்றுள்ளது.
6. இந்தியா கடந்த 2021 - 2022 நிதியாண்டில் எத்தனை கோடி அளவுக்கு பாதுகாப்பு தொடர்பான பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது ?
அ) ரூ. 13 ஆயிரம் கோடி
ஆ) ரூ. 9 ஆயிரம் கோடி
இ) ரூ. 17 ஆயிரம் கோடி
ஈ) ரூ. 5 ஆயிரம் கோடி
விடை : (அ) ரூ. 13 ஆயிரம் கோடி
7. பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்புக்கு நிதியளிப்பதை தடுப்பதுடன், இத்தகைய செயலில் ஈடுபடுவோரின் சொத்துகள் பறிமுதல் செய்ய வழிவகுக்கும் மசோதா என்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது ?
அ) ஜூலை 25
ஆ) ஜூலை 29
இ) ஆகஸ்ட் 01
ஈ) ஆகஸ்ட் 02
விடை : (இ) ஆகஸ்ட் 01
● பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்புக்கு நிதியளிப்பதை தடுப்பதுடன், இத்தகைய செயலில் ஈடுபடுவோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய வழிவகுக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
● முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதாவுக்கு மக்களவை கடந்த ஏப்ரலில் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
● ‘2022-ஆம் ஆண்டின் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக அமைப்புமுறைகள் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு) சட்டத் திருத்த மசோதா’வை, மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை கொண்டுவந்தாா். எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, குரல் வாக்கெடுப்பு மூலம் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
● கடந்த 2005-ஆம் ஆண்டைய பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக அமைப்புமுறைகள் (சட்டவிரோத செயல்கள் தடுப்பு) சட்டமானது, பேரழிவு ஆயுதங்களின் தயாரிப்பை மட்டுமே தடை செய்கிறது.
● இந்த சட்டத்தில் 12ஏ பிரிவை கூடுதலாக சோ்க்க புதிய மசோதாவில் வழிவகை செய்யப்பட்டது. அதன்படி, பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்புக்கு நிதியளிக்கும் செயலில் ஈடுபடுவோரின் சொத்துகள், இதர பொருளாதார ஆதாரங்களை முடக்கவோ, பறிமுதல் செய்யவோ மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
● மேற்கண்ட சட்டம் அல்லது ஐக்கிய நாடுகள் (பாதுகாப்பு கவுன்சில்) சட்டம்-1947 அல்லது இதுதொடா்பாக அமலில் உள்ள இதர சட்டங்களின்படி தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கு எவரும் நிதியளிப்பதை தற்போதைய மசோதா தடை செய்கிறது.
8. உக்ரைன் ஒடேசா துறைமுகத்திலிருந்து எத்தனை டன் சோளத்தை ஏற்றிக் கொண்டு முதல் கப்பல் லெபனானுக்கு புறப்பட்டது ?
அ) 20,000 டன்
ஆ) 26,000 டன்
இ) 31,000 டன்
ஈ) 17,000 டன்
விடை : (ஆ) 26,000 டன்
● உக்ரைன் மீது ரஷியா போா் தொடங்கிய பின்னா் முதல் முறையாக உக்ரைனில் விளையும் தானியங்களை ஏற்றிச் செல்லும் கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
● இந்தக் கப்பலில் 26,000 டன்கள் சோளம் கொண்டு செல்லப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்த தானியம் மத்திய கிழக்கு நாடான லெபனானுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
III. விளையாட்டு நிகழ்வுகள்
9. காமன்வெல்த் போட்டியிலேயே அதிக தங்கப் பதக்கம் (11) வென்ற ஒரே போட்டியாளர் என்ற பெருமையை பெற்றுள்ள நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியான் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ?
அ) அமெரிக்கா
ஆ) ரஷ்யா
இ) சீனா
ஈ) ஆஸ்திரேலியா
விடை : (ஈ) ஆஸ்ட்ரேலியா
10. காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் ஆடவருக்கான 73 கிலோ பிரிவில் இந்தியாவின் அசிந்தா ஷியுலி வென்றுள்ள பதக்கம் ?
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை : (அ) தங்கம்
● அசிந்தாவுக்கு இது முதல் காமன்வெல்த் போட்டி
● இந்த காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 3 ஆவது பதக்கம் இதுவாகும்.
No comments:
Post a Comment