● இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை தாங்களாகவோ அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் மூலமாகவோ www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.
3. தமிழகத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள தேசியக் கொடி விற்பனையில் ஒரு கொடியின் விலை எவ்வளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது ?
அ) ரூ.50
ஆ) ரூ.25
இ) ரூ.15
ஈ) ரூ. 30
விடை : (ஆ) ரூ.25
● தமிழகத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கொடியின் விலை ரூ.25-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
● இதுகுறித்து சென்னை மண்டல அஞ்சல்துறைத் தலைவா் நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா, நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவை திருவிழாவாக ஒவ்வொரு வீடுகளிலும் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா்.‘இல்லந்தோறும் மூவா்ணம்’ எனும் பிரசாரத்தை, மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக நாடு முழுவதும் தேசியக் கொடிகளை விற்பனை செய்யும் பணி அஞ்சல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
● இதையடுத்து, சென்னை நகர மண்டலங்களில் உள்ள அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு தேசியக் கொடியின் விலை ரூ.25. தேசியக் கொடியை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்க பொதுமக்கள், நலச்சங்கத்தினா், தன்னாா்வலா்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களைத் தொடா்பு கொள்ளலாம். மேலும் வலைதளத்திலும் ஆா்டா் செய்து இணைய வழியாகவும் வாங்கலாம். சென்னை நகர மண்டலத்தில் 2,191 அஞ்சல் நிலையங்கள், 20 தலைமை அஞ்சல் நிலையங்கள், 545 துணை அஞ்சல் நிலையங்கள், 1,626 கிளை அஞ்சல் நிலையங்கள் உள்ளன. இவை அனைத்திலும் தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
4. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) நடப்பு நிதியாண்டில் எத்தனை சதவீதமாக இருக்கும் என்று ஆர்பிஐ (RBI) தெரிவித்துள்ளது ?
அ) 9 8%
ஆ) 16.2%
இ) 7.2%
ஈ) 6.2%
விடை : (இ) 7.2%
● நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாக சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
● வங்கி கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 0.5 சதவீதம் அதிகரித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
● வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு மூலம் வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
● ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் மும்பையில் கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது
● நாட்டில் பணவீக்கம் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
5. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நீதி ஆயோக்கின் 7 ஆவது நிர்வாகக் குழு கூட்டம் என்று நடைபெறவுள்ளது ?
அ) ஆகஸ்ட் 10
ஆ) ஆகஸ்ட் 07
இ) ஆகஸ்ட் 09
ஈ) ஆகஸ்ட் 11
விடை : (ஆ) ஆகஸ்ட் 07
● நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் குழு இயங்கி வந்தது. ஆனால், கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் பாஜ அரசு அமைந்தவுடன், திட்டக்குழு கலைக்கப்பட்டது. அதற்குப் பதில் நிதி ஆயோக் அமைப்பு கொண்டு வரப்பட்டது.
● டெல்லியில் ஜனாதிபதி மாளிகையின் கலாசார மையத்தில் நிதி ஆயோக் நிர்வாக குழுவின் 7வது கூட்டம் நாளை நடக்கிறது.
● இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். மாற்றுப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் வேளாண் தன்னிறைவை திட்டங்கள், தேசிய கல்விக் கொள்கை- பள்ளிக் கல்வி அமலாக்கம், தேசிய கல்விக் கொள்கை - உயர்கல்வியின் அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை கூட்டத்தின் விவாதப் பொருளில் இடம் பெற உள்ளன.
● 2019ம் ஆண்டுக்கு பிறகு இதன் கூட்டம் முதல் முறையாக நேரடியாக நடக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
6. இந்திய தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை வாங்க எத்தனை நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது ?
அ) 05
ஆ) 06
இ) 10
ஈ) 12
விடை : (ஆ) 06
● நம் நாட்டில் தயாரிக்கப்படும் 'தேஜஸ்' போர் விமானங்களை வாங்க, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட ஆறு நாடுகள் ஆர்வமாக உள்ளன,” என, ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் கூறினார்.
● லோக்சபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ராணுவ இணை அமைச்சர் அஜய் பட், “நம் நாட்டின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரிக்கும் தேஜஸ் போர் விமானங்களை வாங்க, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், அர்ஜென்டினா, எகிப்து ஆகிய நாடுகள் ஆர்வமாக உள்ளனர்.
● மலேஷியா 2019லேயே தேஜஸ் போர் விமானங்களுக்கு 'ஆர்டர்' கொடுத்து உள்ளது,” என்றார்.மலேஷியா தற்போது பயன்படுத்தி வரும் ரஷ்யாவின் 'மிக் 29' ரக போர் விமானங்களை, தன் ராணுவத்தில் இருந்து விலக்க முடிவு செய்துள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒற்றை இன்ஜின் கொண்ட தேஜஸ் இலகு ரக போர் விமானத்துக்கு முக்கியத்துவம் அளிக்க மலேஷிய அரசு முடிவு செய்துள்ளது.
7. புலம் பெயர் தொழிலாளர்கள், வீடற்றோர் ஆகியோர் இணையவழியில் ரேஷன் அட்டைப் பெறும் வகையில் எத்தனை மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது ?
அ) 11
ஆ) 10
இ) 13
ஈ) 17
விடை : (அ) 11
புலம் பெயா் தொழிலாளா்கள், வீடற்றோா் ஆகியோா் இணையவழியில் ரேஷன் அட்டைப் பெறும் வகையில், 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைத்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
அஸ்ஸாம், கோவா, லட்சத்தீவுகள், மகாராஷ்டிரம், மேகாலயம், மணிப்பூா், நாகாலாந்து, திரிபுரா, பஞ்சாப், உத்தரகண்ட், மிஸோரம் ஆகிய மாநிலங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
‘எனது ரேஷன்-எனது உரிமை’ என்ற இந்த பொதுப் பதிவு சேவையை மத்திய உணவுத் துறைச் செயலா் சுதான்ஷு பாண்டே தொடக்கிவைத்தார்.
III. விளையாட்டு நிகழ்வுகள்
8. காமன்வெல்த் தடகள போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வென்றுள்ள பதக்கம் ?
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை : (ஆ) வெள்ளி
● உலக நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் இது இவரது முதல் பதக்கம் ஆகும்.
● பர்மிங்ஹாம் காமன்வெல்த் தடகள போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது பதக்கம்.
● காமன்வெல்த் நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்ற முதல் இந்தியர்.
9. காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான மல்யுத்த 65 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வென்றுள்ள பதக்கம் ?
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை : (அ) தங்கம்
● இதே போட்டியில் மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
10. காமன்வெல்த் பாரா போட்டியில் ஆடவருக்கான வலுதூக்குதல் ஹெவி வெயிட் பிரிவில் இந்தியாவின் சுதிர் வென்றுள்ள பதக்கம் ?
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை : (அ) தங்கம்
No comments:
Post a Comment