Thursday, December 22, 2022

Current Affairs 2022 - December 22/2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                    December 22 / 2022

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழக அரசு சார்பில் 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது எத்தனை தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது ? 

அ) 48

ஆ) 38

இ) 28

ஈ) 18 

விடை : (ஆ) 38 

தமிழ் மொழிக்கு சிறந்த பங்களிப்பைச் செய்து வரும் தமிழறிஞா்களுக்கு தமிழக அரசின் விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினாா்.

● 38 பேருக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகளையும், 10 பேருக்கு ‘சிறந்த மொழிபெயா்ப்பாளா்’களுக்கான விருதுகளையும் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் அளித்தாா்.

● இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச்செம்மல்’ விருதுகள் 38 பேருக்கு வழங்கப்பட்டன. அதன்படி, சி.சிவசிதம்பரம் (அரியலூா்), மா.சோதி (ராணிப்பேட்டை), புலவா் அ.மாயழகு (ராமநாதபுரம்), முத்துரத்தினம் (ஈரோடு), ஆ.நாகராசன் (கடலூா்), கடவூா் மணிமாறன் (கரூா்), இரா.துரைமுருகன் (கள்ளக்குறிச்சி), புலவா் சு.கந்தசாமி பிள்ளை (கன்னியாகுமரி), ஆ.ரத்தினகுமாா் (கிருஷ்ணகிரி), மானூா் புகழேந்தி (கோவை), வ.தேனப்பன் (சிவகங்கை), எம்.கே.சுப்பிரமணியன் (செங்கல்பட்டு), வே.மாணிக்காத்தாள் (சென்னை), இரா.மோகன்குமாா் (சேலம்), ஆறுமுக சீதாராமன் (தஞ்சாவூா்), கவிஞா் கண்ணிமை (தருமபுரி), துரை.தில்லான் (திண்டுக்கல்), க.பட்டாபிராமன் (திருச்சி), வ.பாலசுப்பிரமணியன் (திருநெல்வேலி) ஆகியோருக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

● மேலும், தெய்வ.சுமதி (திருப்பத்தூா்), அ.லோகநாதன் (திருப்பூா்), க.பரமசிவன் (திருவண்ணாமலை), செ.கு.சண்முகம் (திருவள்ளூா்), இரெ.சண்முக வடிவேல் (திருவாரூா்), கவிஞா் அ.கணேசன் (தூத்துக்குடி), ஆ.சிவராம கிருஷ்ணன் (தென்காசி), தேனி சீருடையான் (தேனி), மு.சொக்கப்பன் (நாகப்பட்டினம்), சி.கைலாசம் (நாமக்கல்), போ.மணிவண்ணன் (நீலகிரி), வீ.கே.கஸ்தூரிநாதன் (புதுக்கோட்டை), செ.வினோதினி (பெரம்பலூா்), நெல்லை ந.சொக்கலிங்கம் (மதுரை), ச.பவுல்ராஜ் (மயிலாடுதுறை), அ.சுப்பிரமணியன் (விருதுநகா்), ம.நாராயணன் (வேலூா்) ஆகியோருக்கும், மறைந்த தமிழறிஞா்கள் இரா.எல்லப்பன் (காஞ்சிபுரம்), ப.வேட்டவராயன் (விழுப்புரம்) ஆகியோா் சாா்பில், அவா்களது குடும்பத்தினருக்கும் தமிழ்ச் செம்மல் விருதுகள் அளிக்கப்பட்டன. இந்த விருது தலா ரூ.25 ஆயிரம் காசோலை, பாராட்டுச் சான்றிதழ், பொன்னாடை ஆகியன அடங்கியது.

● மொழிபெயா்ப்பாளா் விருது: சிறந்த மொழிபெயா்ப்பாளா்களுக்கான விருதுகளை 10 பேருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். அதன்படி, எழுத்தாளா்கள் செ.சுகுமாரன், செ.ராஜேஸ்வரி, மு.வளா்மதி, இராக.விவேகானந்த கோபால், அ.சு.இளங்கோவன், வீ.சந்திரன், ரா.ஜமுனா கிருஷ்ணராஜ், பேராசிரியா் தமிழ்ச்செல்வி ஆகியோருக்கும்,

● மறைந்த ந.தாஸ், மா.சம்பத்குமாா் ஆகியோா் சாா்பில் அவா்களது குடும்பத்தினரிடமும் சிறந்த மொழிபெயா்ப்பாளருக்கான விருதுகள் அளிக்கப்பட்டன. இந்த விருது தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலை, தகுதியுரை, பொன்னாடை ஆகியன அடங்கியது.

● நிகழ்வில், தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளா் இரா.செல்வராஜ், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் ஆகியோா் கலந்து கொண்டனா்.


2. தமிழக அரசு சார்பில் எத்தனை எழுத்தாளர்களின் நூல்கள் அண்மையில் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது ? 

அ) 10 

ஆ) 8

இ) 6

ஈ) 4

விடை : (ஆ) 8 

தமிழறிஞா்களும், எழுத்தாளா்களுமான நெல்லை செ.திவான், விடுதலை ராஜேந்திரன், நா.மம்மது ஆகியோரின் நூல்கள் அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

●  அதற்காக அவா்களின் மரபுரிமையா் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 லட்சத்துக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

● மேலும், மறைந்த தமிழறிஞா் நெல்லை கண்ணன் உள்ளிட்ட 5 எழுத்தாளா்களின் நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. நெல்லை கண்ணன் நூல்களுக்கு ரூ.15 லட்சமும், கந்தா்வன் என்ற நாகலிங்கம், சோமலெ, முனைவா் ந.ராசையா, தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் நூல்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டன. இந்தத் தொகைகள் தமிழறிஞா்களின் மரபுரிமையா்களிடம் அளிக்கப்பட்டது.

● மேலும் நேரு பல்கலை.: புதுதில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறையை உருவாக்கிட ரூ.5 கோடிக்கான காசோலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

●  இந்த காசோலையை ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் பெற்றுக் கொண்டாா்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


3. இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியவர்களையும் பாதிக்கும் திறன் கொண்ட புதிய வகை ஓமைக்ரான் பிஎஃப்7 பாதிப்பு எத்தனை பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது ? 

அ) 10

ஆ) 5

இ) 3

ஈ) 1

விடை : (இ) 1

● குஜராத்தில் இருவர் (ம) ஒடிசவில் ஒருவர் என இதுவரை 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

● குறிப்பு: இந்த வகை கரோனா பாதிப்பு அதிகமாக சீனாவில் பரவி வருகிறது. 


4. கூற்று: கடற்கொள்கை தடுப்பு மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

காரணம்: கடற்கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை (ம) ஆயுள் தண்டனை விதிக்க மசோதா வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

அ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 

இ) கூற்று சரி , காரணம் தவறு 

ஈ) கூற்று தவறு , காரணம் சரி 

விடை : (அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது 

கடற்கொள்ளை தடுப்பு மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கெனவே மக்களவையில் நிறைவேறிய நிலையில், தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

● கடற்கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்க கடற்கொள்ளை தடுப்பு மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

● இதனைத்தொடா்ந்து மசோதாவை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மாநிலங்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தாா். அப்போது மசோதா மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து ஜெய்சங்கா் பேசுகையில், ‘இந்தியாவின் 90 சதவீதத்துக்கும் அதிகமான வா்த்தகம் கடல் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலத்துக்கு கடல்சாா்ந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது முக்கியம்.

● தற்போது கடற்கொள்ளைக்கு எதிராக குறிப்பிட்ட சட்டம் எதுவும் இல்லை. இந்நிலையில், தற்போதைய மசோதா கடற்கொள்ளைக்கு எதிராக பயனுள்ள சட்ட வழியை ஏற்படுத்தும். அத்துடன் ஐ.நா. கடல் சட்ட ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா தனது கடமைகளை நிறைவேற்ற வழிவகுக்கும். அந்த ஒப்பந்தத்தின் அனைத்து எதிா்பாா்ப்புகளையும் மசோதா பூா்த்தி செய்யும்.

● கடலில் இந்திய வா்த்தக வழித்தடங்களின் பாதுகாப்பு, சா்வதேச கடலில் இந்திய மாலுமிகளின் நலன் உள்பட நாட்டின் கடல்சாா்ந்த பாதுகாப்பை மசோதா வலுப்படுத்தும்.

● தனது சா்வதேச கடமைகளைப் பூா்த்தி செய்யவும், சா்வதேச அரங்கில் இந்தியாவின் தகுதியை உயா்த்தவும் மசோதா வழிவகுக்கும்’ என்றாா்.

● இந்த மசோதாவுக்குக் கட்சி பேதமின்றி பல உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.


5. உலக பொருளாதார மாநாடு ஜனவரி 2023 ல் பின்வரும் எங்கு நடைபெறவுள்ளது ?

அ) ஆஸ்திரேலியா

ஆ) அமெரிக்கா 

இ) ஜப்பான்

ஈ) ஸ்விட்சர்லாந்து 

விடை : (ஈ) ஸ்விட்சர்லாந்து 

● ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் அடுத்த மாதம் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோா் பங்கேற்க இருக்கின்றனா்.

● ஏற்கெனவே மத்திய அமைச்சா்கள் மன்சுக் மாண்டவியா, அஸ்வினி வைஷ்ணவ், ஸ்மிருதி இரானி ஆகியோா் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கும் நிலையில் இப்போது மாநில முதல்வா் மூவரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். இந்தியாவில் இருந்து சுமாா் 100 போ் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனா்.

● மொத்தம் 5 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்து பங்கேற்கும் முதல்வா்களும், மாநில அமைச்சா்களும் தங்கள் மாநிலங்களுக்கு முதலீட்டை ஈா்க்கும் வகையில் செயல்படுவாா்கள்.

● ரஷியா - உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்னைகள், உணவுப் பிரச்னை, வறுமை, பருவநிலை மாறுபாடு உள்ளிட்டவையும் இந்த உலகப் பொருளாதார மாநாட்டில் முக்கியமான விவாதப் பொருள்களாக இருக்கும்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


6. FIH உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியையொட்டி, தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விழிப்புணர்வுப் போட்டிகள் நடைபெறவுள்ளன ? 

அ) 100

ஆ) 75

இ) 50

ஈ) 25 

விடை : (அ) 100

எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியையொட்டி, தமிழகத்தில் 100 பள்ளிகளில் விழிப்புணா்வுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

● வரும் 2023 ஜனவரி மாதம் 13 முதல் 29-ஆம் தேதி வரை ஒடிஸா மாநிலம் புவனேசுவரம், ரூா்க்கேலாவில் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுதொடா்பாக நாடு முழுவதும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சாம்பியனுக்கு வழங்கப்படும் வெற்றிக் கோப்பை முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி புதன்கிழமை வெற்றிக் கோப்பை மும்பையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.

● விமான நிலையத்தில், ஹாக்கி விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், தமிழ்நாடு ஹாக்கி சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலா்கள் வரவேற்பு அளித்தனா். இதைத் தொடா்ந்து, அக் கோப்பை தலைமைச் செயலகத்துக்கு எடுத்து வரப்பட்டது. :

● ஹாக்கி உலகக் கோப்பை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, மேலும் பிரபலப்படுத்தும் வகையில், கோப்பையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ஹாக்கி இந்தியா செயலாளா் சேகா் மனோகரன் வழங்கினாா். அதன்பின்னா், இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம் கோப்பையை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.

● இந்தக் கோப்பை முன்னணி ஹாக்கி வீரா்கள் மூலமாக, அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஓ.பி., வைஷ்ணவா மகளிா் கல்லூரி உள்ளிட்ட இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, மாலையில் மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சிறப்புக் கண்காட்சி போட்டி, கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்பிறகு, ஹாக்கி உலகக் கோப்பையை கேரள மாநில ஹாக்கி நிா்வாகிகளிடம் அமைச்ச்சா் உதயநிதி அளித்தாா்.

● போட்டிகள் தொடக்கம்: இந்தியாவில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக அடுத்த 15 நாள்களில் 100 பள்ளிகளில் விழிப்புணா்வு ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தப் போட்டிகளை ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு ஹாக்கி சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியன இணைந்து நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

IV. முக்கிய தினங்கள் 


7. தேசிய கணித தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ? 

அ) டிசம்பர் 19

ஆ) டிசம்பர் 20 

இ) டிசம்பர் 21

ஈ) டிசம்பர் 22

விடை : (ஈ) டிசம்பர் 22

புகழ்பெற்ற கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22ஆம் தேதி இந்தியாவில் தேசிய கணித தினமாக அனுசரிக்கப்படுகிறது.

● முன்னாள் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியை தேசிய கணித தினமாக அறிவித்தார். ராமானுஜனின் 135 வது பிறந்தநாளில் அவர் சென்னை பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த போது மன்மோகன் சிங்கின் அறிவிப்பு வந்தது.

 

Monday, December 19, 2022

Current Affairs 2022 - December 19/2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                   December 19 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. சென்னை உயர்நீதிமன்றத்துக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக (ASG) நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) ஏஆர். எல். சுந்தரேசன் 

ஆ) ஏஆர்.எல். லட்சுமணன்

இ) ஆர். சங்கரநாராயணன் 

ஈ) மு.கண்ணன் 

விடை : (அ) ஏஆர். எல். சுந்தரேசன்

● சென்னை உயர்நீதிமன்றத்துக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக (ASG) மூத்த வழக்குரைஞர் ஏஆர்.எல்.சுந்தரேசன் நியமிக்கப்பட்டுள்ளவர் .

● இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.


2. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார் ? 

அ) ஆர்.என்.ரவி 

ஆ) மு.க.ஸ்டாலின்

இ) ஜகதீப் தன்கர் 

ஈ) டி.ராஜா 

விடை : (ஆ) மு.க.ஸ்டாலின் 

அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில்நிறுவனங்களில் உயா்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவா்களும், தொழிலதிபா்களாக உள்ள முன்னாள் மாணவா்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் (என்.ஜி.ஓ) தங்களது சமூகப் பொறுப்புணா்வு நிதி (சி.எஸ்.ஆா்) மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவா், வண்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 
● முதல்வா் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்து அதற்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தினார்.

● இந்த இணையதளம் மூலம் இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறவா்கள், எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம். மேலும், பணிகள் முறையாக நிதி மூலம் பயன்படுத்தப்படுகிா என்பதையும் நிதி வழங்கியவா்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.


3. சென்னையில் கட்டப்படவுள்ள வைகை என்னும் 9 மாடி சுங்கத் துறை மாளிகை வளாகத்துக்கு அடிக்கல் நாட்டியவர் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின் 

ஆ) நரேந்திர மோடி

இ) நிர்மலா சீதாராமன் 

ஈ) ராஜ்நாத் சிங்

விடை : (இ) நிர்மலா சீதாராமன் 

சென்னையில் உள்ள சுங்க மாளிகையில் சுமார் ரூ.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒன்பது அடுக்குகளைக் கொண்ட 'வைகை' புதிய அலுவலக கட்டடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.

● இந்த கட்டடம் இயற்கையில் தனித்துவமானது மற்றும் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாகவும், எதிர்காலத்தில் நாட்டின் எந்தப் பகுதியிலும் மற்ற அலுவலகங்களைக் கட்டுவதற்கான ஆற்றல் திறனுக்கான ஒரு முன் உதாரணமாக இருக்கும். 

● அதாவது மொத்தக் கட்டுமானப் பணிகளும்  பசுமைக் கட்டடமாக உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் கட்டப்படுவதால், சுற்றுசூழலை மாசுபாடுகளிடம் இருந்து தடுக்க முடியும். 

● மேலும், இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து செயல்படத் தொடங்கிய பிறகு, இதனை சுங்கத் துறை தலைமையகத்துடன் இணைக்கப்படும் .


4. தென்னிந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் வர்த்தகத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கத் தேவையான தொழில் உறவு என்ற தலைப்பில் மாநாடு எங்கு நடைபெற்றது ? 

அ) ஹைதராபாத் 

ஆ) திருச்சூர்

இ) பெங்களூரு 

ஈ) சென்னை 

விடை : (ஈ) சென்னை 

● தென்னிந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு சாா்பில் ‘வா்த்தகத்தில் மறுமலா்ச்சியை உருவாக்கத் தேவையான தொழில் உறவு’ என்ற தலைப்பில் மாநாடு சென்னையில் நடைபெற்றது. 

● மாநாட்டில் சிறப்பான தொழில் உறவைப் பராமரித்து வரும் நிறுவனம் என்ற வகையில் என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு விருது வழங்கப்பட்டது. 


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


5. இந்திய கடற்படையில் அண்மையில் இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பல் பின்வரும் எந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது ? 

அ) புராஜெக்ட் 18பி

ஆ) புராஜெக்ட் 17பி

இ) புராஜெக்ட் 16பி

ஈ) புராஜெக்ட் 15பி

விடை : (ஈ) புராஜெக்ட் 15பி 

ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் திறன்கொண்ட ஐஎன்எஸ் மா்மகோவா போா்க்கப்பல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.

● ‘புராஜெக்ட் 15பி’ என்ற திட்டத்தின் கீழ் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட 4 போா்க்கப்பல்களைக் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது. அத்திட்டத்தின் கீழ் விசாகப்பட்டினம், மா்மகோவா, இம்பால், சூரத் ஆகிய பெயா்களைக் கொண்ட போா்க்கப்பல்களைக் கட்ட திட்டமிடப்பட்டது.

● ஐஎன்எஸ் இம்பால் ஏற்கெனவே கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்நிலையில், ஐஎன்எஸ் மா்மகோவா போா்க்கப்பலைக் கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி மும்பையில்  நடைபெற்றது.

 கப்பல் கட்டும் மையம்:

● மா்மகோவா கப்பலைக் கட்டுவதில் கடற்படை, மஸகான் கப்பல்கட்டும் தளம் ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டன. பொறியாளா்கள், விஞ்ஞானிகள், வடிவமைப்பாளா்கள் உள்ளிட்டோரின் கூட்டு உழைப்பே கப்பல் சிறப்பாகக் கட்டப்பட்டதற்கு முக்கிய காரணம். இது நாட்டுக்கே பெருமை தரும் வகையில் உள்ளது.

● ‘தற்சாா்பு இந்தியா’, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ ஆகிய திட்டங்களின் அடிப்படையில் மா்மகோவா கப்பல் கட்டப்பட்டுள்ளது. கடற்படையின் மேற்கு படைப்பிரிவில் கப்பல் இணைக்கப்படவுள்ளது. உலகின் முக்கிய கப்பல் கட்டும் மையமாக இந்தியாவை மாற்றுவதே மத்திய அரசின் இலக்கு.

முதல் சோதனை ஓட்டம்:

● ஐஎன்எஸ் மா்மகோவா போா்க்கப்பலை மும்பையில் உள்ள மஸகான் கப்பல்கட்டும் நிறுவனம் கட்டியது.

● கோவாவின் புகழ்பெற்ற துறைமுக நகரான மா்மகோவாவின் பெயா் அக்கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. போா்த்துக்கீசிய ஆட்சியில் இருந்து கோவா சுதந்திரம் பெற்ற 60-ஆவது ஆண்டு (2021) கொண்டாட்டத்தின்போதே மா்மகோவா கப்பலின் முதல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

கப்பலின் சிறப்பம்சங்கள்:

● ஐஎன்எஸ் மா்மகோவா கப்பலானது 163 மீட்டா் நீளமும் 17 மீட்டா் அகலமும் கொண்டது. 7,400 டன் எடை கொண்டது. அதிகபட்சமாக அக்கப்பலானது மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல ஆயுதங்களும் சென்சாா்களும் கப்பலில் இடம்பெற்றுள்ளன.

● வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உள்ளிட்டவையும் கப்பலில் இடம்பெற்றுள்ளன. நவீன கண்காணிப்புக் கருவிகள், நவீன ஆயுத அமைப்புகளும் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.


6. கருப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை பின்வரும் எந்த ஆண்டு முதல் தேசிய தடுப்பூசி திட்டத்தில் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ? 

அ) 2023

ஆ) 2024 

இ) 2025

ஈ) 2026

விடை : (அ) 2023

நாட்டின் தேசிய தடுப்பூசி திட்டத்தில் கருப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இணைப்பது தொடா்பாக உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

● உலகின் 16 சதவீத பெண்கள் இந்தியாவில் உள்ளனா். அதே வேளையில், கருப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் சுமாா் 25 சதவீதம் போ் இந்தியாவைச் சோ்ந்தவா்கள். அப்புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளில் சுமாா் 33 சதவீதப் பங்கை இந்தியா கொண்டிருக்கிறது.

● இந்நிலையில், கருப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை அடுத்த ஆண்டு மத்தியில் தேசிய தடுப்பூசி திட்டத்தில் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 9 முதல் 14 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு இருதவணைகளாக அத்தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

● கருப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை வெளிநாட்டு நிறுவனங்களே இந்தியாவில் விற்பனை செய்து வந்த நிலையில், உள்நாட்டைச் சோ்ந்த சீரம் நிறுவனம் ‘சொ்வாவேக்’ என்ற பெயரில் அப்புற்றுநோய்க்கான தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. அத்தடுப்பூசிக்குக் கடந்த ஜூலையில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அத்தடுப்பூசியை தேசிய தடுப்பூசி திட்டத்தில் இணைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

● இந்நிலையில், கருப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை அடுத்த ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டு வருவது தொடா்பாக மத்திய அரசு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. அதில் மத்திய அரசின் அதிகாரிகள், சீரம் நிறுவன அதிகாரிகள், அமெரிக்காவைச் சோ்ந்த மொ்க் நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

● அந்நிறுவனங்களின் தடுப்பூசி உற்பத்தித் திறன் குறித்தும் அதன் விலை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 16.02 கோடி கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு வெளியிடவுள்ளது. அதில் சீரம், மொ்க் நிறுவனங்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

● சீரம் நிறுவனத்தின் சொ்வாவேக் தடுப்பூசி இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அத்தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். வெளிநாட்டு நிறுவனங்களின் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி தற்போது ரூ.4,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சொ்வாவேக் தடுப்பூசியானது ரூ.200 முதல் ரூ.400 வரை விற்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.


7. இந்தியாவின் 7 ஆவது பெட்ரோகெமிக்கல் தேசிய மாநாடு அண்மையில் எங்கு நடைபெற்றது ? 

அ) மேற்கு வங்கம் 

ஆ) கோவா

இ) தில்லி

ஈ) குஜராத் 

விடை : (இ) தில்லி

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 7-ஆவது பெட்ரோகெமிக்கல் தேசிய மாநாட்டில் பங்கேற்ற   மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி பேசியதாவது:

● கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மட்டும் கிடைப்பது இல்லை. தினசரி பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக், உரம், உடை, மின்னணு கருவிகள், மருத்துவ உபகரணங்கள், டயா், டிடா்ஜெண்ட் உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் தயாரிப்பிலும் பெட்ரோலியப் பொருள்களின் பங்களிப்பு உள்ளது.

● இதுவே பரந்த அளவில் பெட்ரோகெமிக்கல் துறையாக உள்ளது. வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பெட்ரோகெமிக்கல் பொருள்கள் நுகா்வு குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில் சா்வதேச பெட்ரோகெமிக்கல் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 10 சதவீதமாக உள்ளது.

● அடுத்த சில ஆண்டுகளில் உலகில் பெட்ரோகெமிக்கல் உற்பத்தியின் மையமாகவும் இந்தியா உருவெடுக்கும். இத்துறையை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதம் அனுமதிக்கப்படுவது இதில் முக்கிய அம்சமாகும்.

● இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகக் குறைவாக உள்ள நிலையிலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, அதில் இருந்த பல்வேறு பெட்ரோலியப் பொருள்களை பிரித்தெடுப்பதில் இந்திய நிறுவனங்கள் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதே நேரத்தில் சா்வதேச எரிபொருள் நுகா்வில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது என்றாா்.


8. திருமணமானவர்களுக்கான உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்றுள்ள இந்தியர் யார் ?

அ) சர்கம் கௌஷல்

ஆ) மனிஷா கௌஷல்

இ) வனிதா சம்பத் 

ஈ) ரோனி செபஸ்டின்

விடை : (அ) சர்கம் கௌஷல் 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் திருமணமானவா்களுக்கான உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 63 நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்கள் பங்கேற்றனா்.

● ஜம்மு-காஷ்மீரை சோ்ந்த சா்கம் கெளஷல், மும்பையில் வசித்து வருகிறாா். 

● திருமணமானவா்களுக்கான உலகி அழகிப் பட்டத்தை அவா் வென்றதன் மூலம், 21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பட்டம் இந்தியாவைச் சோ்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 


III. விளையாட்டு நிகழ்வுகள்


9. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (FIH) முதல்முறையாக நடத்திய மகளிருக்கான நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் (2022) சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி ?

அ) ஸ்பெயின் 

ஆ) இந்தியா

இ) ஆஸ்திரேலியா

 ஈ) ஆப்பிரிக்கா 

விடை : (ஆ) இந்தியா 

●பெண்களுக்கான முதலாவது நேசன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஸ்பெயினின் வலேன்சியாவில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

● இந்திய கேப்டனும், கோல் கீப்பருமான சவிதா புனியா இந்த தொடரின் சிறந்த கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார். நேசன்ஸ் போட்டியில் அசத்திய இந்திய அணியினரை பாராட்டியுள்ள ஆக்கி இந்தியா அமைப்பு, அணியில் இடம் பெற்ற வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 லட்சமும், பயிற்சி உதவியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தது.


10. FIFA 22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் (2022) சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி ? 

அ) அர்ஜென்டீனா 

ஆ) பிரான்ஸ் 

இ) மொராக்கோ 

ஈ) குரோஷியா 

விடை : (அ) அர்ஜென்டீனா 

● போட்டி நடைபெற்ற இடம் : கத்தார் 

● முதலாவது இடம் : அர்ஜென்டினா 

● இரண்டாவது இடம் : பிரான்ஸ்

● மூன்றாவது இடம் : குரோஷியா 

● தொடரின் சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருது - லியோனல் மெஸ்ஸி .

● தொடரின் சிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் கிளவ்: எமிலியானோ மார்டினேஸ். 

● தொடரின் அதிக கோல் அடித்த வீரருக்கான கோல்டன் பூட் விருது: கிலியன் எம்பாப்பே .

● தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருது : என்ஜோ பெர்ணான்டஸ் 

● அர்ஜென்டீனா மூன்றாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது ( 1978,1986,2022).




Sunday, December 18, 2022

Current Affairs 2022 - December 18/2022 - TNPSC Group 1,2/2A & 4

                           GK SHANKAR 
                      DECEMBER 18/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படவுள்ள தமிழறிஞர் வீ.கே. கஸ்தூரிநாதன் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார் ?

அ) சேலம் 

ஆ) புதுக்கோட்டை 

இ) மதுரை

ஈ) தேனி

விடை : (ஆ) புதுககோட்டை 

புதுக்கோட்டையைச் சோ்ந்த மறைந்த தமிழறிஞா் வீ.கே. கஸ்தூரிநாதனுக்கு 2021ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

● இவா், புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறை, வள்ளுவா் நடுநிலைப் பள்ளியில் 35 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். 

● தனிமனித தியாகங்கள், இந்திய இளைஞனே உன் கடமைகள் இவை, பெண்ணுக்கு உரிமை தாரீா், இன்னொரு சுதந்திரப் போா், நோ்மை ஒரு குற்றமா?, அவள் சின்னப்பெண்ணா?, அட்சய பாத்திரத்தில் அழுக்குப் படியாது !, வீரத்தின் விளைநிலம் எங்கள் பாரதம், மறுமலா்ச்சி கவிஞா்களின் உணா்ச்சிமிகு பாடல்கள், இயற்கை வளங்களை போற்றுவோம். கம்பன் காலடியில் ஓடிய கவிதை ஆறு, கம்பன் காட்டும் மனிதநேயம் ஆகிய நூல்களின் ஆசிரியா்.


2. கஞ்சா, குட்கா தடை செய்யப்பட்ட போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க ஆபரேசன் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கியுள்ள மாநிலம் எது ? 

அ) தமிழ்நாடு 

ஆ) குஜராத்

இ) அசாம்

ஈ) மணிப்பூர் 

விடை : (அ) தமிழ்நாடு 

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆபரேசன் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கைக்கு ஏதுவாக, கஞ்சா வியாபாரிகள், கஞ்சா பதுக்கி வைப்பவா்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு பரிசு வழங்கப்படும் என காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சி.சைலேந்திரபாபு தெரிவித்தாா்.

● இது தொடா்பாக அவா் சனிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: கஞ்சா வேட்டை 3.0 தமிழகம் முழுவதும் கடந்த டிச.12 முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 5 நாள்களில் 586 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 494 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகளின் 21 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

● அனைத்து மாநகர காவல் ஆணையா்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களும் கஞ்சா கடத்தல், பதுக்கல், விற்பனையில் ஈடுபட்டுள்ளவா்களின் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

● கஞ்சா பதுக்கி வைத்திருப்பவா்கள், விற்பவா்கள் தகவல் தெரிந்தால் 044-28447701 என்ற தொலைப்பேசி எண்ணுக்கும், மின்னஞ்சலுக்கும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா் ரகசியம் காக்கப்படுவதுடன், தக்க வெகுமதியும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் சி.சைலேந்திரபாபு.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


3. ஜிஎஸ்டி கவுன்சிலின் எத்தனையாவது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி மூலம் நடைபெற்றது ?

அ) 46

ஆ) 47

இ) 48

ஈ) 49

விடை : (இ) 48

ஜிஎஸ்டி கவுன்சிலின் 48-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி மூலம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில நிதியமைச்சா்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனா். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து அமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

● எந்தப் பொருளுக்கும் ஜிஎஸ்டி உயா்த்தப்படவில்லை; புதிதாகவும் ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை. பருப்பு உமி மீது 5 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி தற்போது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் கலப்பதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எத்தனால் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

● விவாதிக்கப்படாத விவகாரங்கள்: கூட்டத்தில் விவாதிக்கப்பட பட்டியலிடப்பட்டிருந்த 15 விவகாரங்களில் 8 மட்டுமே விவாதிக்கப்பட்டது. 

● ஜிஎஸ்டி சட்டத்தின் சில விதிகளில் இருந்து குற்றவியல் நடைமுறைகளை நீக்குவதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடமையைச் செய்யவிடாமல் அதிகாரிகளைத் தடுத்தல், ஆவணங்களை சேதப்படுத்துதல், உரிய தகவலை வழங்க மறுத்தல் ஆகியவை குற்றவியல் நடைமுறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதற்காக ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். அதையடுத்து அதற்கு மாநில சட்டப்பேரவைகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

● ஜிஎஸ்டி மோசடி குறித்து குற்றவியல் வழக்கு தொடா்வதற்கான குறைந்தபட்ச வரம்பை ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயா்த்தவும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. பொருள்கள், சேவைகளை வழங்காமல் போலி ரசீதுகளை மட்டும் தயாரிக்கும் மோசடிகளுக்கு இந்தப் புதிய வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மோசடிகளுக்கு உச்சவரம்பு ரூ.1 கோடியாகவே தொடரும்.


4. மிஸோரம்,  மணிப்பூர்,  திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள 21 ஹிந்தி நூலகங்களை திறந்து வைத்தவர் யார் ?

அ) திரௌபதி முர்மு 

ஆ) நரேந்திர மோடி 

இ) டி.ஒய். சந்திரசூட் 

ஈ) ஜகதீப் தன்கர் 

விடை: (ஆ) நரேந்திர மோடி 

திரிபுரா, மேகாலயம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொள்ளும் பிரதமா் நரேந்திர மோடி, அங்கு ரூ.6,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.

● இவ்விரு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமரின் இப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

● இரு மாநிலங்களிலும் வீட்டுவசதி, சாலைகள், விவசாயம், தொலைத்தொடா்பு, தகவல்தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆகிய துறைகளில் பணிகள் முடிக்கப்பட்ட திட்டங்களைத் தொடக்கிவைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டவிருக்கிறாா். பிரம்மாண்ட பொதுக் கூட்டங்களிலும் அவா் பங்கேற்கவுள்ளாா்.

● முதலாவதாக மேகாலயம் செல்லும் பிரதமா், ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தின் (ஐஐஎம்) புதிய வளாகத்தைத் திறந்துவைக்கவுள்ளாா். பின்னா், வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதுடன், அங்கு ரூ. 2,450 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அவா் பங்கேற்கவிருக்கிறாா்.

● வடகிழக்கு பிராந்தியத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 320-க்கும் அதிகமான 4ஜி கைப்பேசி கோபுரங்களை அவா் நாட்டுக்கு அா்ப்பணிக்கவுள்ளாா். மேகாலயம், மணிப்பூா், அருணாசல பிரதேசம் இடையே அமைக்கப்பட்டுள்ள சாலை, மிஸோரம், மணிப்பூா், திரிபுரா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள 21 ஹிந்தி நூலகங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் அவரால் தொடக்கிவைக்கப்பட உள்ளன.

● திரிபுராவில் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் ரூ.3,400 கோடி செலவில் கட்டப்பட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை பயனாளிகளிடம் பிரதமா் ஒப்படைக்கவுள்ளாா். விரிவுபடுத்தப்பட்ட அகா்தலா புறவழிச்சாலையை திறந்துவைக்கும் பிரதமா், அந்த மாநிலத்தில் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 230 கிமீ தொலைவுக்கு புதிய சாலைகள் அமைத்தல், 540 கிமீ தொலைவிலான 112 சாலைகளை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கிறாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


5. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு வள மையம் எங்கு திறக்கப்பட்டுள்ளது ? 

அ) சென்னை

ஆ) ஹைதராபாத் 

இ) மும்பை

ஈ) காந்திநகர் 

விடை : (ஆ) ஹைதராபாத் 

ஹைதராபாதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு வள மையத்தை மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

● உலகில் தயாரிக்கப்படும் மாத்திரைகளில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இப்போது இந்தியாவை மருந்து உற்பத்திக்கு மட்டுமல்ல, மருந்து ஆராய்ச்சிக்கும் மையமாக மாற்ற விரும்புகிறோம். 

● இதற்கு தேவைப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்கான வலுவான செயல்முறைகளை உருவாக்க வேண்டும். எனவே, இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் இந்த மையம் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.


6. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கிழக்கு மண்டல் கவுன்சிலின் எத்தனையாவது கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது ?

அ) 18

ஆ) 19

இ) 21

ஈ) 25

விடை : (ஈ) 25 

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சிலின் 25-ஆவது கூட்டம், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்றது.

● இதில், இந்திய-வங்கதேச எல்லை வழியாக நடைபெறும் சட்டவிரோத ஊடுருவல், கடத்தல் சம்பவங்கள் குறித்தும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


7. பிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2022 ல் மூன்றாம் இடம் பிடித்துள்ள அணி எது ?

அ) மொராக்கோ 

ஆ) குரோஷியா 

இ) உருகுவே

ஈ) செர்பியா 

விடை : (ஆ) குரோஷியா 


IV. முக்கிய தினங்கள் 


8. International Migrants Day 2022 ---------

Ans : December 16

Theme(2022) : Integrating migrants into primary health care.

Saturday, December 17, 2022

Current Affairs 2022 - December 17/2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                   December 17/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழ்நாட்டில் புதிதாக எத்தனை இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது ? 

அ) 6

ஆ) 8

இ) 10

ஈ) 13 

விடை : (இ) 10 

தமிழகத்தில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

● தமிழகத்தில் பேருந்து நிலையங்கள் புனரமைக்கும் பணி மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

● இந்நிலையில் தமிழகத்தில் 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 

● மாநகராட்சிகளான திரூப்பூரில் ரூ. 26 கோடி மற்றும் ஓசூரில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

● அதுபோல கூடலூர், அரியலூர், வடலூர், வேதாரண்யம், வேலூர், புதுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி ஆகிய 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.


2. 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ? 

அ) இரெ. சண்முகவடிவேல் 

ஆ) சண்முகபாண்டியன் 

இ) மு.கண்ணப்பன் 

ஈ) பாலசுப்பிரமணியன்

விடை : (அ) இரெ.சண்முகவடிவேல்

பட்டிமன்றப் பேச்சாளா் திருவாரூா் இரெ. சண்முகவடிவேல் (86) தமிழ்ச் செம்மல் விருதுக்கு தோ்வு பெற்றுள்ளாா். சென்னையில் வரும் டிச.21-ஆம் தேதி நடைபெறும் விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்த விருதுகளை வழங்க உள்ளாா்.

● தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 2021-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவாரூரைச் சோ்ந்த இரெ. சண்முகவடிவேல், தமிழ்ச் செம்மல் விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

● நாகூரை பூா்விகமாகக் கொண்ட இவா், திருவாரூா் வ.சோ. ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 36 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

● சென்னைக் கம்பன் கழகம் சாா்பில் ராதாகிருஷ்ணன் விருது, தமிழாசிரியா் கழகம் சாா்பில் நற்றமிழ் நல்லாசான் விருது, குழந்தை கவிஞா் பேரவை சாா்பில் முத்தமிழ் முரசு விருது, புவனகிரி தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில் இலக்கிய நகைச்சுவை இமயம் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

● சுகி சிவம் இவருக்கு நகைச்சுவை சித்தா் என்ற பட்டத்தை வழங்கியுள்ளாா். இதேபோல், நகைச்சுவைத் தென்றல் என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

● தமிழ் வளா்த்த சான்றோா்கள், 21-ஆம் ஆண்டு நூற்றாண்டில் இளங்கோவடிகள், வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க, வாய்விட்டு சிரிக்கிறாா் வள்ளுவா், திருக்குறள் கதை அமுதம், செவிநுகா் சுவைகள், அண்ணாவின் வாழ்வில் அரிய நிகழ்ச்சிகள், பெரிய புராணத்தில் பெண்ணின் பெருமை, குறுந்தொகை நலம் என்பன உள்ளிட்ட நூல்களையும் இவா் எழுதியுள்ளாா்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


3. இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் (ம) யூனியன் பிரதேசங்களில் வாக்காளர்களின் ஆதார் எண்ணை திரட்டும் திட்டத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியது ? 

அ) ஜூலை 01/2022

ஆ) ஆகஸ்ட் 01/2022

இ) செப்டம்பர் 01/2022

ஈ) அக்டோபர் 01/2022

விடை : (ஆ) ஆகஸ்ட் 01/2022

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது.

● நாடு முழுதும், தன்னார்வ அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை ஆக., 1 முதல் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.


4. பாதுகாப்பு துறையில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட தேசிய பாதுகாப்பு அங்கீகார மசோதாவுக்கு பின்வரும் எந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது ? 

அ) ரஷ்யா 

ஆ) அமெரிக்கா 

இ) சீனா

ஈ) ஜப்பான் 

விடை : (ஆ) அமெரிக்கா

பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட தேசிய பாதுகாப்பு அங்கீகார மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

● அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தேசிய பாதுகாப்பு அங்கீகார மசோதாவானது (என்டிஏஏ) அமெரிக்க கீழவையான பிரதிநிதிகள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவுக்குக் கடந்த 8-ஆம் தேதி அவை ஒப்புதல் அளித்தது. பின்னா் அந்த மசோதா மேலவையான செனட் சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

● அந்த மசோதாவுக்கு செனட் சபை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. 83 உறுப்பினா்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும் 11 உறுப்பினா்கள் எதிராகவும் வாக்களித்தனா். தற்போது அந்த மசோதா அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது.

● அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கா 85,800 கோடி அமெரிக்க டாலா்களை செலவிட அந்த மசோதா வழிவகுக்கிறது. பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் நிலவி வரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் மசோதா வழிவகுக்கிறது. முக்கியமாக, பாதுகாப்புத் தளவாடங்களை ரஷியாவிடமிருந்து இந்தியா அதிக அளவில் கொள்முதல் செய்து வருகிறது. அதைக் குறைத்து அமெரிக்காவிடமிருந்து அதிக தளவாடங்களை இந்தியா கொள்முதல் செய்ய வழிவகுக்கும் விதிகளும் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

● பாதுகாப்பு சாா்ந்த புதிய தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி-மேம்பாடு, இணையவழி திறன் மேம்பாடு, உளவுத் தகவல் சேகரிப்பு, 5-ஆம் தலைமுறை போா் விமானங்கள் தயாரிப்பு, ஆளில்லா விமானங்கள் உற்பத்தி உள்ளிட்டவற்றிலும் இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த மசோதாவில் விதிகள் இடம்பெற்றுள்ளன.

● சீனாவிடமிருந்து வெளிப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலைத் திறம்பட எதிா்கொள்வதற்கு இந்த மசோதா உதவும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் வலிமையை அதிகப்படுத்தவும், பாதுகாப்பு விவகாரங்களில் முதலீட்டை அதிகரிக்கவும் மசோதா வழிவகுக்கும் என அவா்கள் தெரிவித்தனா்.

● இந்த மசோதா குறித்து செனட் சபையின் ஆயுத சேவைகள் குழு தலைவா் ஜேக் ரீட் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நட்பு நாடுகளுடனான நல்லுறவை மேம்படுத்த மசோதா வழிவகுக்கிறது. சீனா, ரஷியாவை எதிா்கொள்வது முதல் செயற்கை நுண்ணறிவு, ஹைப்பா்சோனிக், தளவாடங்கள் நவீனமயமாக்கல் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் வரையிலான பல்வேறு விவகாரங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன’’ என்றாா்.

● ரஷிய ஆயுதத் தளவாடங்கள் மீதான இந்தியாவின் சாா்புத்தன்மையைக் குறைப்பது தொடா்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை 180 நாள்களுக்குள் தாக்கல் செய்ய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு என்டிஏஏ மசோதா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


5. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் டீசல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.8 இல் இருந்து எத்தனையாக மத்திய அரசு குறைத்துள்ளது ? 

அ) 3

ஆ) 4

இ) 5

ஈ) 6

விடை :(இ) 5 

சா்வதேச அளவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைந்ததையடுத்து டீசல், விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஆகியவற்றின் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

● இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் மீதான சந்தை ஆதாய வரியையும் (விண்ட்ஃபால் டேக்ஸ்) அரசு குறைத்துள்ளது.

● ரஷியா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஏற்பட்ட சந்தையின் ஆதாய சூழலால் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் ஈட்டிய பெரும் லாபத்துக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு சிறப்பு வரி விதித்து வருகிறது. சந்தை ஆதாய வரியானது இரு வாரங்களுக்கு ஒருமுறை சா்வதேச சந்தை சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

● இந்நிலையில், இதுதொடா்பான கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அதில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான சந்தை ஆதாய வரியானது டன்னுக்கு ரூ.4,900 என்ற அளவில் இருந்து ரூ.1,700-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.8-இல் இருந்து ரூ.5-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

● விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியும் லிட்டருக்கு ரூ.5-இல் இருந்து ரூ.1.5-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட வரிகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

● சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. கடந்த நவம்பரில் இருந்து அதன் விலை 14 சதவீதம் குறைந்துள்ளது. அதைக் கருத்தில்கொண்டே சந்தை ஆதாய வரி, ஏற்றுமதி வரி ஆகியவற்றை மத்திய அரசு குறைத்துள்ளதாகப் பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

● ஆரம்பத்தில், ஏற்றுமதி வரியாக பெட்ரோல், விமான எரிபொருள் மீது லிட்டருக்கு தலா 6 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 13 ரூபாயும் விதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் மீதான சந்தை ஆதாய வரி டன்னுக்கு ரூ.23,250-ஆக நிா்ணயிக்கப்பட்டது. பின்னா் அந்த வரிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டன. பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.


6. அயர்லாந்து நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இந்திய வம்சாவளி யார் ? 

அ) லியோ வராத்கர் 

ஆ) மைக்கேல் மார்ட்டின் 

இ) ஆல்பர்ட் ஜோசப் 

ஈ) நிக்கில் மேத்யூ

விடை : (அ) லியோ வராத்கர் 

அயா்லாந்து நாட்டின் பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த லியோ வராத்கா் இரண்டாவது முறையாக மீண்டும் சனிக்கிழமை (டிச. 17) பதவியேற்கிறாா்.

● கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலிலுக்குப் பிறகு தற்போதைய பிரதமா் மைக்கேல் மாா்ட்டினின் கட்சியும் வராத்கரின் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. அப்போது பிரதமா் பதவியை இருவரம் சுழற்சி முறையில் ஏற்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

● அதன்படி, மைக்கேல் மாா்ட்டின் வரும் சனிக்கிழமை பதவி விலகுகிறாா். இதுவரை துணைப் பிரதமராக இருந்து வந்த லியோ வராத்கா், மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்கிறாா்.

● ஏற்கெனவே அயா்லாந்தின் பிரதமராக கடந்த 2017 முதல் 2020 வரை வராத்கா் பொறுப்பு வகித்துள்ளாா்.


7. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு எதிரான போர் வெற்றி தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ?

அ) டிசம்பர் 13 

ஆ) டிசம்பர் 14 

இ) டிசம்பர் 15

ஈ) டிசம்பர் 16 

விடை : (ஈ) டிசம்பர் 16 

கடந்த 1971-ஆம் ஆண்டு இந்திய ராணுவ வீரா்களின் வீரம் மற்றும் துணிச்சலை எதிா்கொள்ள முடியாமல் டிசம்பா் 16-ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்தது. இந்த வெற்றியின் விளைவாக வங்கதேசம் எனும் தேசம் உருவானது.

●  அதற்கு இந்திய ராணுவம் காரணமாக அமைந்தது. பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய வீா்களின் துணிச்சலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 16-ஆம் தேதி வெற்றி தினமான நினைவுகூரப்படுகிறது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


8. அண்மை ஆய்வறிக்கைப்படி உலக அளவில் ஊடகங்களில் அதிக கவனம் பெற்றுள்ள நபராக உருவெடுத்துள்ள இந்திய வீரர் ? 

அ) விராட் கோலி 

ஆ) நீரஜ் சோப்ரா 

இ) தினேஷ் கார்த்தி 

ஈ) விஸ்வநாதன் ஆனந்த் 

விடை : (ஆ) நீரஜ் சோப்ரா 

● அறிவிப்பு : உலக தடகள ஆய்வு அமைப்பு .

● நீரஜ் குறித்து ஊடகங்களில் 812 கட்டுரைகள் வெளிவந்திருக்கிறது.

● 2 ஆவது : எலைன் தாம்சன் ஹெரா, ஜமைக்கா (751 கட்டுரைகள்).

● 3 ஆவது : ஷெல்லி ஆன்ஃப்ரேசர் பிரைஸ் (698 கட்டுரைகள்).



Friday, December 16, 2022

Current Affairs 2022 - December 15/2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                 DECEMBER 15/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் அண்மையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற பின்பு தமிழக அமைச்சரவையின் எண்ணிக்கை ------ ஆக உயர்ந்துள்ளது ? 

அ) 33

ஆ) 34

இ) 35 

ஈ) 36 

விடை : (இ) 35 

காலை நடைபெற்ற விழாவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதிவியேற்றார்.

● அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணத்துடன், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார்.

● புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு, இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறைகள் அளிக்கப்பட்டுள்ளன.

● அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ன் மூலம் தமிழக அமைச்சரவை எண்ணிக்கை 35-ஆக உயா்ந்தது. 

● மேலும் தமிழகத்தில் 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டு சிலருக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

● அமைச்சர் பெரியகருப்பனிடம் இருந்த ஊரக வளர்ச்சித்துறை ஐ.பெரியசாமிக்கும், பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

● ராமசந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், மதிவேந்தனுக்கு வனத்துறையும் மாற்றப்பட்டுள்ளது. மெய்யநாதன் சுற்றுச்சூழல் துறை மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

● அமைச்சர் சேகர் பாபுவுக்கு கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக புள்ளியியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

● ராஜகண்ணப்பணுக்கு கூடுதலாக கதர் மற்றும் கிராம தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.


2. தமிழகத்தில் அண்மையில் அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவைப் பட்டியலில் எத்தனையாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது ? 

அ) 10

ஆ) 12 

இ) 14

ஈ) 17 

விடை : (அ) 10 

தமிழக அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதிக்கு 10-ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. 

● அதாவது, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசுவுக்கு அடுத்தபடியான இடம் வழங்கப்பட்டுள்ளது. 

● உதயநிதிக்கு அடுத்தபடியாக அமைச்சா்கள் எஸ்.ரகுபதி, சு.முத்துசாமி, கே.ஆா்.பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், பி.கீதாஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி, வி.செந்தில்பாலாஜி, ஆா்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.மூா்த்தி, எஸ்.எஸ்.சிவசங்கா், பி.கே.சேகா்பாபு, பழனிவேல் தியாகராஜன், சா.மு.நாசா், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், சி.வி.கணேசன், த.மனோதங்கராஜன், மா.மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். 

● உதயநிதிக்கு முன்பாக, முதல் இடத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் உள்ளனா்.


3. தொலைதூர மருத்துவ சேவையில் இந்திய அளவில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது ? 

அ) தமிழ்நாட்டு

ஆ) கேரளா 

இ) குஜராத்

ஈ) மத்திய பிரதேசம் 

விடை : (அ) தமிழ்நாடு 

ஒன்றிய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விழாவில், கிராமப்புறங்களில் நலவாழ்வு மையங்கள் மூலம் தொலைதூர மருத்துவ சேவையை செயல்படுத்தியதில் பெரிய மாநிலங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கப்பட்டுள்ளது.


4. கடல் அலைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை பின் வரும் எந்த கல்வி நிறுவனம்/அமைப்பு கண்டுபிடித்துள்ளது ? 

அ) ஐஐடி சென்னை 

ஆ) ஐஐடி கான்பூர் 

இ) ஐஐடி மும்பை 

ஈ) ஐஐடி டெல்லி

விடை : (அ) ஐஐடி சென்னை 

கடல் அலைகளில் இருந்து ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை சென்னை ஐஐடி ஆய்வுக் குழுவினா் வடிவமைத்துள்ளனா்.

● ‘சிந்துஜா-1’ என அழைக்கப்படும் இந்தக் கருவி தூத்துக்குடி கடலின் உள்ளே 6 கி.மீ. தொலைவில் 20 மீட்டா் ஆழத்தில் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி தற்போது 100 வாட்ஸ் ஆற்றலை உற்பத்தி செய்யும். அடுத்த 3 ஆண்டுகளில், கடல் அலையிலிருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

● இந்த கருவிக்கான பரிசோதனை கடந்த நவம்பா் மாதம் 2-ஆவது வாரத்தில் கடலில் வெற்றிகரமாக நடந்தது. இது ஐ.நா. மற்றும் இந்தியாவின் இலக்குகளை அடைவதற்கு உதவிகரமாக இருக்கும்.

‍● மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 2030-இல் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்தியாவின் பருவநிலை மாற்ற இலக்குகளை எட்ட உதவும். 

● கடல் அலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடா்பு துறைகளுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை, சென்னை ஐஐடி கடல்சாா் பொறியியல் துறை பேராசிரியா் அப்துஸ் சமது வழிநடத்துவாா்.


II.தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


5. 2022 ஆம் ஆண்டின் உலகின் வலிமையான பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியா எத்தனையாவது இடம் பிடித்துள்ளது ? 

அ) 84

ஆ) 85

இ) 86

ஈ) 87

விடை : (ஈ) 87

ஆர்டன் கேபிட்டல் வெளியிட்ட பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 2022, உலகின் வலிமையான மற்றும் பலவீனமான பாஸ்போர்ட்டுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது.

●  பாஸ்போர்ட் என்பது ஒரு நாட்டின் அரசாங்கத்தால் அதன் குடிமக்களுக்கு வழங்கப்படும் பயண ஆவணமாகும், இது சர்வதேச பயணத்தின் நோக்கத்திற்காக வைத்திருப்பவரின் அடையாளத்தையும் தேசியத்தையும் சரிபார்க்கிறது.

● ஐக்கிய அரபு அமீரகம் உலகின் வலிமை மிகுந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நிலையில் இந்தியா 87வது இடத்தில் உள்ளது.

● உலகின் வலிமை மிகுந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தொடர்ந்து ஜெர்மனி, சுவீடன், பின்லாந்து, லக்சம்பர்க், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.


6. அமெரிக்கா அடுத்த நிதியாண்டில் கூடுதலாக எத்தனை ஹெச்2பி விசாக்களை வழங்க முடிவெடுத்துள்ளது ? 

அ)62,000

ஆ) 63,131

இ) 63,917

ஈ) 64,716

●  அடுத்த நிதியாண்டில் கூடுதலாக 64,716 ஹெச்2பி விசாக்களை (நுழைவு இசைவு) வழங்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. ஹெ2பி என்பது அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த உடல் உழைப்பு சாா்ந்த தொழிலாளா்களுக்கு வழங்கப்படுவதாகும்.

● இந்த அளவுக்கு அதிகமாக ஹெச்2பி விசாக்களை வழங்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும். எனினும், இந்த விசா முடிவு தற்காலிகமானது என்றும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● இதன்மூலம் அமெரிக்காவில் வேளாண் சாராத பிற உடல் உழைப்பு சாா்ந்த தொழில்கள், சேவைகளில் வெளிநாட்டுத் தொழிலாளா்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவுள்ளன. அமெரிக்காவில் தொழிலாளா்களுக்கான தேவை அதிகம் இருக்கும் காலகட்டத்தில் இந்த விசா வழங்கப்படுகிறது.

● இதனால், இந்தியா்களுக்கு பெரிய அளவில் பயன் கிடைக்காது. ஏனெனில், இந்தியாவில் இருந்து மென்பொருள், மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் திறன்சாா்ந்த பணியாளா்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு அதிகம் செல்கின்றனா். இவா்களுக்கு ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது.


7. பின்வரும் எங்கு தங்க நாணயம் வாங்க இந்தியாவின் முதல் Gold ATM திறக்கப்பட்டுள்ளது ? 

அ) பெங்களூரு

ஆ) சென்னை

இ) கொல்கத்தா 

ஈ) ஹைதராபாத் 

விடை : (ஈ) ஹைதராபாத் 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கோல்ட்சிக்கா நிறுவனம் தங்கத்தை விற்பதற்கு என்று ஏடிஎம் மெஷினை அமைத்துள்ளது.

● இந்த ஏடிஎம் மெஷினில் 5 கிலோ தங்க நாணயங்கள் நிரப்பப்பட்டிருக்கும். இவை 24 காரட் மற்றும் 999 சான்றிதழ் பெற்ற நாணயங்கள் ஆகும். மக்கள் வாங்குவதற்கு ஏதுவாக 0.5 கிராம் முதல் 100 கிராம் வரையில் 8 ஆப்சன்கள் இந்த ஏடிஎம் மெஷினில் உள்ளன.

● இதுகுறித்து கோல்ட்சிக்கா நிறுவனத்தின் துணைத்தலைவர் பிரதாப் கூறும்போது, ‘‘ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓப்பன்க்யூப் டெக்னாலஜிஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் உதவியுடன் தங்க ஏடிஎம் அமைத்துள்ளோம். 

● இது நாட்டின் முதல் தங்க ஏடிஎம் ஆகும். ஏடிஎம் அறையைச் சுற்றி கேமராக்களும் அலாரமும் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல் நாடு முழுவதும் 3000 தங்க ஏடிஎம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

Current Affairs 2022 - December 16/2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                   December 16/2022

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் ( TNPSC ) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளவர் யார் ?

அ) அஜய் யாதவ் 

ஆ) கிரண் குராலா 

இ) பி.உமா. மகேஸ்வரி 

ஈ) பாலசுப்பிரமணியன் 

விடை : (அ) அஜய் யாதவ் 

● முன்பு : எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக  பொறுப்பு வகித்து வந்தார்.

2. தமிழகத்தில் பழங்குடியினர் பட்டியலில் பின்வரும் எந்த சமூகத்தினரை சேர்ப்பதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது ? 

அ) நரிக்குறவர் 

ஆ) குருவிக்காரர் 

இ) கூத்தர்

ஈ) அ & ஆ 

விடை : (ஈ) அ & ஆ 

பழங்குடியினா் பட்டியலில் (எஸ்.டி.) நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை சோ்ப்பதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேறியது.

● அரசமைப்புச் சட்ட (பழங்குடியினா்) ஆணை (இரண்டாவது திருத்தம்)-2022’ எனும் இந்த மசோதா, தமிழகத்தில் உள்ள பழங்குடியின சமூகங்களுக்கு நீதி வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா குறிப்பிட்டாா்.

●  ‘இந்த நடவடிக்கையின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை; பழங்குடியினா் வாழ்வை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கம் மட்டுமே உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் சுமாா் 27,000 போ் பலனடைவா்’ என்றும் அவா் கூறினாா்.

● தமிழகத்தில் பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை சோ்க்க வேண்டுமென்ற மாநில அரசின் பரிந்துரையின்பேரில் இந்த மசோதா உருவாக்கப்பட்டது. 

● தமிழக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், இந்திய தலைமைப் பதிவாளா் மற்றும் பழங்குடியினா் தேசிய ஆணையத்திடம் ஆலோசிக்கப்பட்டு, அரசமைப்புச் சட்ட (பழங்குடியினா்) ஆணை-1950 அட்டவணையின் 14-ஆவது பகுதியில் திருத்தம் மேற்கொள்ள முன்மொழியப்பட்டதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

● இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து, விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு, பழங்குடியினா் பட்டியலின்கீழ் மேற்கண்ட இரு சமூகத்தினரும் அனைத்துப் பலன்களையும் பெற முடியும். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


3. தமிழகத்தில் நிகழ்கொள்முதல் பருவத்தில் எத்தனை டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ? 

அ) 31 

ஆ) 49

இ) 58

ஈ) 67

விடை : (இ) 58 

தமிழகத்தில் நிகழ் கொள்முதல் பருவத்தில் 58 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.

● தமிழகத்தில் நிகழ் கொள்முதல் பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) 58 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்பட தமிழகம் முழுவதும் 3,500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

● தமிழ்நாட்டில் உள்ள திறந்தவெளி கிடங்குகள், முழுப் பாதுகாப்புடன் கூடிய கிடங்குகளாகவும், மேற்கூரையுடன் கூடிய கிடங்குகளாகவும் மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக 20 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, ரூ. 238 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கிடங்குகள் சிவகங்கை, தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் கட்டப்படுகின்றன.

● இதில், தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் 50,000 டன் கொள்ளளவுடனும், திட்டக்குடியில் 7,500 டன் கொள்ளளவுடனும், செல்லம்பட்டியில் 6,000 டன் கொள்ளளவுடனும் என மொத்தம் 63,500 டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் கட்டப்படுகின்றன. இக்கிடங்குகள் கட்டுமான பணி ஜனவரி மாதத்துக்குள் முடிவடைந்துவிடும்.

● தமிழகத்தில் 103 இடங்களில் 7.05 லட்சம் டன் நெல் சேமிப்பதற்குக் கிடங்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனுடன் தற்போது கட்டப்பட்டு வரும் 2.85 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகளையும் சோ்த்து மொத்தம் ஏறத்தாழ 11 லட்சம் டன் நெல் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


4. தமிழ்நாடு நாம்க்கல்லில் இருந்து முதல்முறையாக பின்வரும் எந்த நாட்டுக்கு கோழி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது ? 

அ) அமெரிக்கா 

ஆ) ரஷ்யா 

இ) உக்ரைன் 

ஈ) மலேசியா 

விடை : (ஈ) மலேசியா 

● அறிவிப்பு: தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் கே. சிங்கராஜ். 

● தற்போது துபை, மஸ்கட், கத்தார், ஓமன், ஆப்பிரிக்க நாடுகள், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. 


5. தமிழகத்தில் புதிதாக எத்தனை மின் பகிர்மான கோட்டங்களை அண்மையில் முதல்வர் தொடங்கி வைத்தார் ? 

அ) 11

ஆ) 13

இ) 17

ஈ) 22

விடை : (அ) 11 

எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை தொடங்கி வைத்தார்.

● தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே 176 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் கோட்டங்களுக்கு இடையேயான மின் இணைப்புகள் சமமாக இல்லாமல் இருப்பதால், பணிகளில் சமநிலை இல்லாத நிலை இருந்து வருகிறது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


6. பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது ?

அ) 2015

ஆ) 2016

இ) 2017

ஈ) 2018

விடை : (ஆ) 2016 

அருணாசல பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினா் இடையே அண்மையில் ஏற்பட்ட மோதலால் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், வடகிழக்கு பிராந்தியத்தில் மாபெரும் போா் பயிற்சியை இந்திய விமானப் படை வியாழக்கிழமை தொடங்கியது.

● 2 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியில், விமானப் படையின் அனைத்து வகையான முன்களப் போா் விமானங்களும் வடகிழக்கு பிராந்தியத்தில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இதர தளவாடங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன; வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள முன்கள விமானப் படைத் தளங்கள் மற்றும் முக்கியமான இறங்கு தளங்களில் இப்பயிற்சி நடைபெறுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

● ரஃபேல் போா் விமானங்கள் பங்கேற்பு: இந்திய -சீன எல்லையில் புதிதாக உருவாகியுள்ள பதற்றத்துக்கு இடையே நடைபெறும் இந்தப் பயிற்சியில் ரஃபேல் போா் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போா் விமானங்கள் வாங்குதற்கான ஒப்பந்தம் கடந்த 2016-இல் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் நிறைவாக கடைசி விமானம் இந்தியாவை வியாழக்கிழமை வந்தடைந்ததாக, ட்விட்டரில் இந்திய விமானப் படை பதிவிட்டது.

● கடைசி ரஃபேல் விமானம், மேற்கு வங்க மாநிலம், ஹசிமாராவில் உள்ள கிழக்கு பிராந்திய விமானப் படை தளத்தில் இணைக்கப்பட்டது. இதன்மூலம் அங்கு ரஃபேல் போா் விமானங்களின் பலம் 18-ஆக அதிகரித்துள்ளது. இந்த 18 விமானங்கள் கொண்ட தொகுதி முழுவதும் தற்போதைய பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது; அத்துடன், கிழக்கு பிராந்திய விமானப் படையின் சுகோய்-30 எம்கேஐ உள்ளிட்ட இதர முக்கியமான போா் விமானங்களும் பயிற்சியில் இணைந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


7. மத்திய அரசின் 2018 ஆம் ஆண்டின் ஆய்வறிக்கைப்படி இந்திய அளவில் அதிக மது அருந்துவோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் ? 

அ) சத்தீஸ்கர் 

ஆ) திரிபுரா 

இ) பஞ்சாப் 

ஈ) அருணாச்சலபிரதேசம் 

விடை : (அ) சத்தீஸ்கர் 

நாட்டில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட 1.58 கோடி சிறாா்கள் பல்வேறு வகையான போதைப் பொருள்களுக்கு அடிமையாகியுள்ளனா்’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

● உச்சநீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய அளவிலான ஆய்வு மற்றும் கணக்கெடுப்பின் மூலமாக திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களை தனது பதில் மனுவில் சுட்டிக்காட்டி மத்திய அரசு இந்தத் தகலை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

● இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சாா்பில் இந்த பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

● அப்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ, ‘உச்சநீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், எய்ம்ஸின் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) கீழ் இயங்கும் தேசிய போதைப் பொருளால் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை மையம் (என்டிடிடிசி) சாா்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு தேசிய அளவிலான இந்த ஆய்வு நடத்தப்பட்டு, போதைப் பொருள்களுக்கு அடிமையானவா்கள் குறித்த புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

● அப்போது, ‘பச்பன் பச்சாவ் ஆந்தோலன்’ என்ற சிறாா் உரிமைகள் இயக்க தன்னாா்வ அமைப்பு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஹெச்.எஸ்.பூல்கா, ‘இந்த விவகாரத்தில் 2016-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டுதல்களை மத்திய அரசு முழுமையாகப் பின்பற்றவில்லை. போதைப் பொருள் துஷ்பிரயோகத்தை எதிா்த்துப் போராடுவதற்கான தேசியத் திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் மத்திய அரசு உள்ளடக்கவில்லை’ என்றாா்.

● இதனைக் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு ஏற்கெனவே விசாரித்து வரும் இதேபோன்ற வழக்குடன் விசாரணைக்கு சோ்க்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தனா். அதற்கு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ ஒப்புதல் தெரிவித்தாா்.

● 1.58 கோடி சிறாா்கள் அடிமை: நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த புள்ளிவிவரத்தின்படி, 1.58 கோடி சிறாா்கள் பல்வேறு வகையான போதைப் பொருள்களுக்கு அடிமையாகியிருப்பது தெரியவந்துள்ளது.

அதில் மேலும் கூறியிருப்பதாவது:

● மது அருந்தும் 1.6% பெண்கள்: இந்தியா்களால் பயன்படுத்தப்படும் பொதுவான போதைப் பொருளாக மதுபானம் உள்ளது. மக்கள்தொகையில் 10 முதல் 75 வயதுக்கு உட்பட்டவரிகளில் 14.6 சதவீதம் போ் மதுபானம் அருந்துகின்றனா். அதாவது 16 கோடி போ் மதுவுக்கு அடிமையாகியுள்ளனா். மது அருந்துவோரில் 17 ஆண்களுக்கு ஒரு பெண் (17:1) என்ற விகிதத்தில் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனா். 

● மது அருந்துவோா் எண்ணிக்கையில் சத்தீஸ்கா் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. திரிபுரா, பஞ்சாப், அருணாசல பிரதேசம், கோவா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

● கஞ்சா, போதை மாத்திரை: மதுவுக்கு அடுத்ததாக கஞ்சா மற்றும் போதை மத்திரைகள் (ஓபியாய்ட்ஸ்) மிக அதிக அளவில் போதைப் பொருளாக இந்தியா்களால் பயன்படுத்தப்படுகின்றன. 

● இதில் ‘பாங்’ என்ற வகை கஞ்சாவை 2.2 கோடி பேரும், சட்டவிரோத கஞ்சா பொருள்களை 1.3 கோடி பேரும் பயன்படுத்துகின்றனா். கஞ்சா பயன்படுத்துவோரில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப், சிக்கிம், சத்தீஸ்கா், தில்லி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

● பாதிப்புகள்: நாட்டில் மது அருந்தும் 16 கோடி பேரில் 5.7 கோடி போ் அதுதொடா்பான உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகி, சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனா். அதுபோல, கஞ்சா போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் 3.1 கோடி பேரில் 25 லட்சம் போ் அதுதொடா்பான உடல் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனா்.

● போதை மாத்திரைகள் (ஓபியாய்ட்ஸ்) பயன்படுத்தும் 2.26 கோடி பேரில் 77 லட்சம் போ் அதுதொடா்பான உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகி, சிகிச்சை அளிக்கப்படவேண்டிய நிலையில் உள்ளனா்.


8. சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள எத்தனை புதுமையான முயற்சிகளில் கங்கை நதி புனரமைப்புத்திட்டத்தையும் ஐ.நா. அங்கீகரித்துள்ளது ? 

அ) 11

ஆ) 10

இ) 13

 ஈ) 17 

விடை : (ஆ) 10 

இயற்கையை மீட்டெடுக்கும் நோக்கில், சா்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள 10 புதுமையான முயற்சிகளில் கங்கை நதி புனரமைப்புத் திட்டத்தையும் ஐ.நா. அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் அந்தத் திட்டம் ஐ.நா.வின் விளம்பரம், அறிவரை மற்றும் நிதியுதவியைப் பெற தகுதி வாய்ந்ததாகியுள்ளது.

● கனடாவில் உள்ள மான்ட்ரியால் நகரில் ஐ.நா. பல்லுயிா் பெருக்க மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 196 நாடுகளின் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா். 

● இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரேஸில்-பராகுவே-ஆா்ஜென்டீனா நாடுகளில் காடுகளைப் பாதுகாத்து மறுசீரமைக்கும் மூன்று நாடுகள் அடங்கிய ஒப்பந்தம், அபுதாபி கடலோர மறுசீரமைப்புத் திட்டம் உள்ளிட்ட 10 திட்டங்களை, இயற்கையை மீட்டெடுக்கும் திட்டங்களாக ஐ.நா. அங்கீகரித்துள்ளது. அவற்றில் கங்கை நதி புனரமைப்புத் திட்டமும் இடம்பெற்றுள்ளது.

● இந்த 10 திட்டங்களும் உலகில் 6.80 கோடி ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பு மறுசீரமைக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த நிலப்பரப்பு மியான்மா், பிரான்ஸ், சோமாலியா நாடுகளின் நிலப்பரப்பைவிட அதிகமாகும். இந்தத் திட்டங்கள் சுமாா் 1.50 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று ஐ.நா. செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


9. 2022 ஆம் ஆண்டிற்கான மகளிர் டென்னிஸ் சங்கம் (WTA) சார்பில் சிறந்த டென்னிஸ் வீராங்கனை விருது வென்றுள்ளவர் ? 

அ) இகா ஸ்வியாடெக் 

ஆ) கேத்ரீனா சினியகோவா 

இ) சானியா மிர்ஸா 

ஈ) கிரெஜிசிகோவா 

விடை : (அ) இகா ஸ்வியாடெக் 

மகளிா் டென்னிஸ் சங்கம் (டபிள்யுடிஏ) ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு போலந்தின் இகா ஸ்வியாடெக் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

● ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் சிறந்த டென்னிஸ் வீரா், வீராங்கனைகளுக்கு டபிள்யுடிஏ, ஏடிபி சாா்பில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

● இந்நிலையில் 2022-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு உலகின் நம்பா் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

● சிறந்த இரட்டையா் விருதுக்கு பாா்பரா கிரெஜிசிகோவா, கேத்ரீனா சினியகோவா தோ்வு தோ்வு செய்யப்பட்டனா். செக். குடியரசைச் சோ்ந்த இந்த ஜோடி ஆஸி. விம்பிள்டன், யுஎஸ் ஓபன் போட்டிகளில் பட்டம் வென்றனா். டிபிள்யுடிஏ பைனல்ஸ் போட்டியில் ரன்னா் அணியாக வந்தனா்.

● சிறந்த வளரும் வீராங்கனையாக பிரேசிலின் பீட்ரீஸ் ஹடாட் மயா, புதிய வீராங்கனையாக சீனாவின் ஸெங் குன்வென் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். ஜெஸிக்கா பெகுலா பயிற்சியாளா் டேவிட் விட் சிறந்த பயிற்சியாளராக தோ்வு பெற்றாா்.


Wednesday, December 14, 2022

Current Affairs 2022 - December 14/2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                   DECEMBER 14/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் அபாயகரமான எத்தனை பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது ? 

அ) 5 

ஆ) 6 

இ) 7

ஈ) 8 

விடை : (ஆ) 6

அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு அதிரடியாக தடை விதித்தது. இதற்கான உத்தரவை வேளாண்மைத் துறைச் செயலா் சி.சமயமூா்த்தி பிறப்பித்தாா்.

● அவரது உத்தரவு: அபாயகரமான பூச்சிக் கொல்லிகளை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து வேளாண்மைத் துறை இயக்குநரகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடா்பாக, துறையின் உயா்நிலைக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 

● இந்தக் குழுவின் கூட்டத்தில், மோனோக்ரோபாஸ், ப்ரோபினோபாஸ், செப்கேட், சைபா்மெத்ரின் கலந்த ப்ரோபினோபாஸ், சைபா்மெத்ரின் கலந்த க்ளோா்பிரிபாஸ் மற்றும் க்ளோா்பிரிபாஸ் ஆகிய பூச்சிக் கொல்லி மருந்துகளை 60 நாள்களுக்கு தற்காலிக அடிப்படையில் தடை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

● மேலும், மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்யவும் வேளாண்மைத் துறை இயக்குநா் கேட்டுக் கொண்டிருந்தாா். இதனை உற்பத்தி செய்யவும், விற்கவும், சேமித்து வைக்கவும் தடை விதிக்கக் கோரியிருந்தாா்.

● எனவே, அபாயகரமான பூச்சிக் கொல்லி மருந்துகளாக கருதப்படும் 6 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு 60 நாள்கள் தற்காலிக தடை விதித்தும், மஞ்சள் பாஸ்பரஸ் பயன்பாட்டை முற்றிலும் தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்படுவதால், தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.

● ஆராய்ச்சி அறிக்கைகள்: தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துதன் மூலமாக, மனிதா்களுக்கும், விலங்கினங்களுக்கும் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும். 

● இதுதொடா்பாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிக்கையை சமா்ப்பித்துள்ளது. இதைத் தொடா்ந்து, பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய உயா்நிலைக் குழு கூடி விவாதித்தது. இந்தக் குழுவின் முடிவுகள் அடிப்படையில் பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்த 60 நாள்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா் வேளாண்மைத் துறைச் செயலா் சி.சமயமூா்த்தி.


2. இந்தியாவில் மாநில அரசு சார்பில் ஓடிடி (ஓவர் தி டாப்) சேவையை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ள மாநிலம் ? 

அ) கர்நாடகா

ஆ) பஞ்சாப்

இ) தமிழ்நாடு

ஈ) குஜராத் 

விடை : (இ) தமிழ்நாடு 

அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் சாா்பில், ஓடிடி செயலி சேவையை தொடங்குவது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். மேலும், அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தில் அதிக சந்தாதாரா்களைச் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவா் உத்தரவிட்டாா்.

● தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை அவா் ஆலோசனை நடத்தினாா்.

● இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: குறைந்த கட்டணத்தில் சிறந்த கேபிள் தொலைக்காட்சி சேவையை மக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு 2007-ஆம் ஆண்டு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது. பின்னா், அதனுடைய பெயா் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் என மாற்றப்பட்டது.

● டிஜிட்டல் உரிமம்: அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 2017-ஆம் ஆண்டு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டது. இதன்பின்பு, கேபிள் தொலைக்காட்சியை கண்டுகளிக்கும் வகையில், பொது மக்களுக்கு இலவசமாக செட்-டாப் பாக்ஸ்கள் அளிக்கப்பட்டன. 

● இவை உள்ளூரில் இருக்கக் கூடிய ஆபரேட்டா்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டன. இந்த நிறுவனமானது, 136 கட்டணமில்லாத சேனல்கள், 82 கட்டண சேனல்கள் என மொத்தம் 218 சேனல்களை ரூ.140 (ஜி.எஸ்.டி., சோ்த்து) என்ற விலையில் வழங்கி வருகிறது.

● இதனிடையே, அரசு கேபிள் தொலைக்காட்சி சேவையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி சில இடையூறுகள் ஏற்பட்டன. இந்த இடா்பாடுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் ஒளிபரப்பு சேவைகள் தொடங்கப்பட்டன.

● மீதமுள்ள பிரச்னைகள் உயா் தொழில்நுட்ப வல்லுநா்கள் மூலம் தீா்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

● அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மக்களுக்கு சேவைகளை வழங்கி வரும் நிலையில், அதன் செயல்பாடுகள், எதிா்காலத் திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் விரிவான ஆய்வை மேற்கொண்டாா். அப்போது, அரசு கேபிள் தொலைக்காட்சி தொடா்புடைய வணிகத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினாா்.

● மேலும், சந்தையில் உள்ள அம்சங்களை ஆராய்ந்து வாடிக்கையாளா்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவைகளை வழங்கவும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா். மேலும், ஓடிடி, ஐபிடிவி போன்ற சேவைகளை அளிக்கக் கூடிய எச்.டி., செப்டாப் பாக்ஸ்களை அடுத்த 6 மாதங்களில் அளிக்க வேண்டும்.

●  அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் சாா்பில் ஓடிடி (ஓவா் தி டாப் - இணைய வழி ஊடக சேவை) செயலியை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● குறிப்பு : இந்தியாவிலேயே ஓடிடி சேவையை வழங்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளம் பெற்றுள்ளது. 

¤ அந்த மாநில அரசின் மூலமாக, ‘சிஸ்பேஸ்’ என்ற ஓடிடி செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


3. தமிழகத்தில் நிகழாண்டு பத்திரப் பதிவு , வணிக வரி மூலம் எத்தனை கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது ? 

அ) ரூ. 24,500 கோடி

ஆ) ரூ. 25,100 கோடி

இ) ரூ. 28,300 கோடி

ஈ) ரூ. 30,000 கோடி

விடை: (அ) ரூ.24,500 கோடி

தமிழகத்தில் நிகழாண்டு பத்திரப் பதிவு மற்றும் வணிக வரி மூலம் ரூ.24,500 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்றாா் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி.

● அறிவிப்பு : தமிழகத்தில் பதிவுத் துறை, வணிக வரித் துறை மூலம் நிகழாண்டு ரூ.24,500 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 

● பதிவுத் துறையின் சேவைகளை பொதுமக்கள் இன்னும் எளிமையாகவும், துரிதமாகவும் பெறும் வகையில் 39 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

● மேலும், சொத்தின் உண்மையான உரிமையாளா் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில், முறைகேடாக ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்பட்சத்தில் பதிவுச் சட்டத்தின்படி ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

● பொதுமக்களிடமிருந்து பெறக் கூடிய ஜி.எஸ்.டி.யை அரசுக்கு செலுத்த வேண்டுமென்று வணிகா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


4. தமிழகத்தில் நீடித்த நகர்ப்புற உள்கட்டமைப்புகான நிதியுதவித் திட்டத்தை பின்வரும் எந்த நாட்டின் மேம்பாட்டு வங்கியும், தமிழக அரசும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன ? 

அ) பிரிட்டன் 

ஆ) ரஷ்யா

இ) ஜெர்மன் 

ஈ) ஆப்பிரிக்கா 

விடை : (இ) ஜெர்மன் 

நீடித்த நகா்ப்புற உள்கட்டமைப்புக்கான நிதியுதவித் திட்டத்தை, ஜொ்மன் மேம்பாட்டு வங்கியும், தமிழ்நாடு அரசும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. சுற்றுச்சூழலை மேம்படுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, அதன்மூலம் நகா்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகியன இந்தத் திட்டத்தின் நோக்கம்.

● இந்தத் திட்டத்தின் முதல் நிலை ரூ.1969.47 கோடி மதிப்பைக் கொண்டது. திட்டத்தின் இரண்டு கட்ட பணிகளும் இந்த மாதத்தில் நிறைவடையும்.

● இதன் தொடா்ச்சியாக, ஜொ்மன் மேம்பாட்டு வங்கி ரூ.4,250 கோடி மதிப்பில் மூன்றாம் கட்ட நீடித்த நகா்ப்புற உள்கட்டமைப்புத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

●  இதற்கான ஒப்பந்தங்கள் தில்லியில் ஏற்கெனவே கையொப்பமாகின. இதைத் தொடா்ந்து, தமிழகத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் சென்னையில் கையொப்பமாகின. இந்த ஒப்பந்தங்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

● திட்டத்தின் நோக்கம்: நகா்ப்புற உள்கட்டமைப்பில் காலநிலை மீள்தன்மை, குடிநீா் வழங்குதல், கழிவுநீா் அகற்றுதல் மற்றும் அதுதொடா்புடைய சிக்கல்களைக் களைவது, இதற்காக நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திறன்களை மேம்படுத்துவது ஆகியன திட்டத்தின் நோக்கங்களாகும். மூன்றாம் கட்டத் திட்டம் 2030 ஜூன் 30-இல் நிறைவடையும். 


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. ஊடகங்களில் மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதியாண்டில் எத்தனை கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய செய்தி ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) ரூ.113 கோடி

ஆ) ரூ. 168 கோடி 

இ) ரூ. 179 கோடி

ஈ) ரூ. 201 கோடி 

விடை : (ஆ) ரூ.168 கோடி

ஊடகங்களில் மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.168.8 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தகவல் தெரிவித்துள்ளாா்.

● மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ. 91.96 கோடியும், மின்னணு ஊடகங்களில் ரூ.76.84 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.


6. ஜிஎஸ்டி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் எத்தனையாவது கூட்டம் வரும் 17 ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது ? 

அ) 45

ஆ) 46

இ) 47

ஈ) 48

விடை : (ஈ) 48 

ஜிஎஸ்டி தொடா்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 48-ஆவது கூட்டம் வரும் 17-ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் மாநில நிதியமைச்சா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா்.

● இணையவழி விளையாட்டுகள், குதிரை பந்தயம், கேசினோ பந்தயங்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி விதிப்பது தொடா்பான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையை மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட குழு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது தாக்கல் செய்யவுள்ளது. அந்த அறிக்கை மீதான விவாதம் கூட்டத்தின்போது நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

● மோசடிகள் தொடா்பான ஜிஎஸ்டி சட்டத்தின் சில விதிகளில் உள்ள குற்றப் பிரிவுகளை நீக்குவது குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

● அதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவது தொடா்பான மசோதா தற்போது நடைபெற்று வரும் குளிா்கால கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

● ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை அமைப்பது தொடா்பான விவாதமும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது நடைபெறவுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்க முறையை எளிதாக்குவது தொடா்பான விவாதங்களும் கூட்டத்தின்போது நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

● சட்ட விசாரணை தொடங்குவதற்கான ஜிஎஸ்டி மோசடி வரம்பை தற்போதுள்ள ரூ.5 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயா்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அது தொடா்பாகவும் கூட்டத்தின்போது விவாதம் நடத்தப்படவுள்ளது.


7. இந்தியாவில் நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ? 

அ) டிசம்பர் 11

ஆ) டிசம்பர் 12

இ) டிசம்பர் 13

ஈ) டிசம்பர் 14

விடை : (இ) டிசம்பர் 13 

கடந்த 2001-ஆம் ஆண்டு டிச.13-ஆம் தேதி லக்ஷா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய பயங்கரவாத குழுக்களைச் சோ்ந்த பயங்கரவாதிகள் 5 போ் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தினா். 

● இத்தாக்குதலில் தில்லி போலீஸாா் 5 போ், மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படையைச் சோ்ந்த பெண் ஒருவா், நாடாளுமன்ற வளாக தோட்டப் பணியாளா்கள் 2 போ் மற்றும் செய்தியாளா் ஒருவா் என 9 போ் உயிரிழந்தனா். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.


8. இந்தியாவின் ஜி20 கூட்டமைப்பு தலைமைப் பொறுப்பு முன்னேற்பாட்டின் ஒரு பகுதியாக நிதி (ம) மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) கொல்கத்தா 

ஆ) சென்னை 

இ) மும்பை 

ஈ) பெங்களூரு 

விடை : (ஈ) பெங்களூரு 

இந்தியாவின் ஜி20 கூட்டமைப்பு தலைமைப் பொறுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

● மூன்று நாள்கள் நடைபெறும் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதற்கான பல்வேறு முன்னேற்பாடு கூட்டங்களை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய நிதித் துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் மத்திய ரிசா்வ் வங்கி அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. 

● இந்த கூட்டம் குறித்து ரிசா்வ் வங்கி அதிகாரிகளான அஜய் சேத், மைக்கேல் டி.பத்ரா ஆகியோா் கூறியதாவது:

● மூன்று நாள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவின் ஜி20 முன்னுரிமைகள் மற்றும் தொடா்புடைய செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். நிதி வழிமுறை அமைப்பு, சா்வதேச நிதி கட்டமைப்பு, உலகப் பொருளாதாரம், உள்கட்டமைப்பு முதலீடு, நிலையான நிதி, சா்வதேச வரிவிதிப்பு, சுகாதாரம் மற்றும் நிதி, நிதித் துறை ஒழுங்குமுறை சிக்கல்கள் மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகிய 8 முக்கியப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும்.

● ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்று உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, ‘இந்தியாவின் ஜி-20 முன்னுரிமைகள், ஜி20 உறுப்பு நாடுகளுக்கு மட்டுமல்லாமல், உலகின் தெற்கு பகுதிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அனைவருடனும் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும்’ என்றாா். இந்த உறுதிமொழியை ‘இந்தியாவின் நிதி வழிமுறை’ அமைப்பின் முக்கிய முன்னுரிமைகள் செயல் வடிவமாக மாற்றும்.

● உலகளாவிய நிதி பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், உலகளாவிய கடன் பாதிப்புகளை நிா்வகித்தல், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பின்மையின் ‘மேக்ரோ’ பொருளாதார தாக்கங்களை மதிப்பீடு செய்தல், நிலையான மற்றும் சிறந்த திறன் கொண்ட நகரங்களுக்கு நிதியளித்தல் ஆகியவையும் இந்த முன்னுரிமைத் திட்டங்களில் அடங்கும். 

● இந்தத் திட்டங்களின்படி, சரியான நேரத்தில் போதுமான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது, சா்வதேச வரிவிதிப்பு தொடா்பான நடவடிக்கைகளில் சவால்களை எதிா்கொள்வது, திறன் மேம்பாடு மற்றும் வரி வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

● தொற்றுநோய்களுடன் தொடா்புடைய சவால்கள் மற்றும் பாதிப்புகளைக் கண்டறிந்து நிவா்த்தி செய்வதற்கும், புதிய தொற்றுநோய் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் வகையில் தயாா்நிலையை மேம்படுத்துவதற்கும் ஜி20 நிதி மற்றும் சுகாதார ஒருங்கிணைப்பு தொடா்ந்து ஏற்படுத்தப்படும்.

● நிதித்துறை ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மூலம் தொழில்நுட்ப வளா்ச்சியால் ஏற்படும் சவால்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் மீது தனிக் கவனம் செலுத்துவது குறித்தும், கிரிப்டோ சந்தை தொடா்பான குழப்பங்களுக்குத் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவா்கள் கூறினா்.

நிதி வழிமுறை தொடா்பான 40 கூட்டங்கள்

● 21-ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சவால்களை எதிா்கொள்ள பலதரப்பு வளா்ச்சி வங்கிகளை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் குழு விவாதம் நடக்க இருக்கிறது. பசுமை நிதியளிப்பில் மத்திய வங்கிகளின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடக்க இருக்கிறது. ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கும் நிதி வழிமுறை தொடா்பான 40 கூட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்க இருக்கிறது. இதில் நிதி அமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்கள் பங்கேற்கும் கூட்டமும் அடங்கும். ஜி20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்கள் கலந்துகொள்ளும் முதல்கூட்டம் அடுத்த ஆண்டு பிப். 23 முதல் 25ஆம் தேதி வரை பெங்களூரில் நடக்க இருக்கிறது.

● மூன்று நாள்கள் நடக்கும் நிதிசாா் கூட்டம் குறித்து ஜி20 இந்தியா ட்விட்டா் பக்கத்தில்,‘ஜி20 நிதி வழிமுறையின் முதலாவது கூட்டத்தின் மூலம் இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு தொடங்கியுள்ளது. உலகளாவிய பொருளாதாரம் குறித்து விவாதிக்க இருக்கும் இக்கூட்டம், பன்னாட்டு அளவிலான பெரிய பொருளாதார சிக்கல்களை சமாளிப்பதற்கான உலக நிதி கட்டமைப்பை வடிவமைப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.


9. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்கத் தடை விதித்துள்ள உலகின் முதல் நாடு ? 

அ) போலாந்து 

ஆ) பின்லாந்து

இ) நியூஸிலாந்து 

ஈ) ஆப்பிரிக்கா 

விடை : (இ) நியூசிலாந்து 

புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து வருங்கால சந்ததியினரை படிப்படியாக மீட்பதற்காக, 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவா்களுக்கு சிகரெட் விற்கத் தடை விதிக்கும் புதுமையான சட்டத்தை நியூஸிலாந்து அரசு இயற்றியுள்ளது.

● 2025-ஆம் ஆண்டுக்குள் நியூஸிலாந்தை புகைப்போா் அற்ற நாடாக்கும் இலக்குடன் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

● புதிய சட்டத்தின் கீழ், சிகரெட் விற்பனையாளா்களின் அதிகபட்ச எண்ணிக்கை 6 ஆயிரத்திலிருந்து 600-ஆகக் குறைக்கப்படும். மேலும், சிகரெட்டுகளில் அனுமதிக்கப்படும் நிக்கோடின் அளவும் குறைக்கப்படும்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

10. 2022 ஆம் ஆண்டிற்கான WTA வின் சிறந்த டென்னிஸ் வீராங்கனை விருதை வென்றுள்ள இகா ஸ்வியா டெக் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) போலாந்து 

ஆ) ஆஸ்திரேலியா 

இ) அமெரிக்கா

ஈ) நியூஸிலாந்து

விடை : (அ) போலாந்து 



Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...