● அரசமைப்புச் சட்ட (பழங்குடியினா்) ஆணை (இரண்டாவது திருத்தம்)-2022’ எனும் இந்த மசோதா, தமிழகத்தில் உள்ள பழங்குடியின சமூகங்களுக்கு நீதி வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா குறிப்பிட்டாா்.
● ‘இந்த நடவடிக்கையின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை; பழங்குடியினா் வாழ்வை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கம் மட்டுமே உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் சுமாா் 27,000 போ் பலனடைவா்’ என்றும் அவா் கூறினாா்.
● தமிழகத்தில் பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை சோ்க்க வேண்டுமென்ற மாநில அரசின் பரிந்துரையின்பேரில் இந்த மசோதா உருவாக்கப்பட்டது.
● தமிழக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், இந்திய தலைமைப் பதிவாளா் மற்றும் பழங்குடியினா் தேசிய ஆணையத்திடம் ஆலோசிக்கப்பட்டு, அரசமைப்புச் சட்ட (பழங்குடியினா்) ஆணை-1950 அட்டவணையின் 14-ஆவது பகுதியில் திருத்தம் மேற்கொள்ள முன்மொழியப்பட்டதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
● இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து, விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு, பழங்குடியினா் பட்டியலின்கீழ் மேற்கண்ட இரு சமூகத்தினரும் அனைத்துப் பலன்களையும் பெற முடியும். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் நிகழ்கொள்முதல் பருவத்தில் எத்தனை டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ?
அ) 31
ஆ) 49
இ) 58
ஈ) 67
விடை : (இ) 58
● தமிழகத்தில் நிகழ் கொள்முதல் பருவத்தில் 58 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.
● தமிழகத்தில் நிகழ் கொள்முதல் பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) 58 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்பட தமிழகம் முழுவதும் 3,500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.
● தமிழ்நாட்டில் உள்ள திறந்தவெளி கிடங்குகள், முழுப் பாதுகாப்புடன் கூடிய கிடங்குகளாகவும், மேற்கூரையுடன் கூடிய கிடங்குகளாகவும் மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக 20 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, ரூ. 238 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கிடங்குகள் சிவகங்கை, தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் கட்டப்படுகின்றன.
● இதில், தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் 50,000 டன் கொள்ளளவுடனும், திட்டக்குடியில் 7,500 டன் கொள்ளளவுடனும், செல்லம்பட்டியில் 6,000 டன் கொள்ளளவுடனும் என மொத்தம் 63,500 டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் கட்டப்படுகின்றன. இக்கிடங்குகள் கட்டுமான பணி ஜனவரி மாதத்துக்குள் முடிவடைந்துவிடும்.
● தமிழகத்தில் 103 இடங்களில் 7.05 லட்சம் டன் நெல் சேமிப்பதற்குக் கிடங்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனுடன் தற்போது கட்டப்பட்டு வரும் 2.85 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகளையும் சோ்த்து மொத்தம் ஏறத்தாழ 11 லட்சம் டன் நெல் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4. தமிழ்நாடு நாம்க்கல்லில் இருந்து முதல்முறையாக பின்வரும் எந்த நாட்டுக்கு கோழி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது ?
அ) அமெரிக்கா
ஆ) ரஷ்யா
இ) உக்ரைன்
ஈ) மலேசியா
விடை : (ஈ) மலேசியா
● அறிவிப்பு: தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் கே. சிங்கராஜ்.
● தற்போது துபை, மஸ்கட், கத்தார், ஓமன், ஆப்பிரிக்க நாடுகள், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
5. தமிழகத்தில் புதிதாக எத்தனை மின் பகிர்மான கோட்டங்களை அண்மையில் முதல்வர் தொடங்கி வைத்தார் ?
அ) 11
ஆ) 13
இ) 17
ஈ) 22
விடை : (அ) 11
● எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை தொடங்கி வைத்தார்.
● தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே 176 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் கோட்டங்களுக்கு இடையேயான மின் இணைப்புகள் சமமாக இல்லாமல் இருப்பதால், பணிகளில் சமநிலை இல்லாத நிலை இருந்து வருகிறது.
II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
6. பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது ?
அ) 2015
ஆ) 2016
இ) 2017
ஈ) 2018
விடை : (ஆ) 2016
● அருணாசல பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினா் இடையே அண்மையில் ஏற்பட்ட மோதலால் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், வடகிழக்கு பிராந்தியத்தில் மாபெரும் போா் பயிற்சியை இந்திய விமானப் படை வியாழக்கிழமை தொடங்கியது.
● 2 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியில், விமானப் படையின் அனைத்து வகையான முன்களப் போா் விமானங்களும் வடகிழக்கு பிராந்தியத்தில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இதர தளவாடங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன; வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள முன்கள விமானப் படைத் தளங்கள் மற்றும் முக்கியமான இறங்கு தளங்களில் இப்பயிற்சி நடைபெறுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
● ரஃபேல் போா் விமானங்கள் பங்கேற்பு: இந்திய -சீன எல்லையில் புதிதாக உருவாகியுள்ள பதற்றத்துக்கு இடையே நடைபெறும் இந்தப் பயிற்சியில் ரஃபேல் போா் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போா் விமானங்கள் வாங்குதற்கான ஒப்பந்தம் கடந்த 2016-இல் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் நிறைவாக கடைசி விமானம் இந்தியாவை வியாழக்கிழமை வந்தடைந்ததாக, ட்விட்டரில் இந்திய விமானப் படை பதிவிட்டது.
● கடைசி ரஃபேல் விமானம், மேற்கு வங்க மாநிலம், ஹசிமாராவில் உள்ள கிழக்கு பிராந்திய விமானப் படை தளத்தில் இணைக்கப்பட்டது. இதன்மூலம் அங்கு ரஃபேல் போா் விமானங்களின் பலம் 18-ஆக அதிகரித்துள்ளது. இந்த 18 விமானங்கள் கொண்ட தொகுதி முழுவதும் தற்போதைய பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது; அத்துடன், கிழக்கு பிராந்திய விமானப் படையின் சுகோய்-30 எம்கேஐ உள்ளிட்ட இதர முக்கியமான போா் விமானங்களும் பயிற்சியில் இணைந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
7. மத்திய அரசின் 2018 ஆம் ஆண்டின் ஆய்வறிக்கைப்படி இந்திய அளவில் அதிக மது அருந்துவோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் ?
அ) சத்தீஸ்கர்
ஆ) திரிபுரா
இ) பஞ்சாப்
ஈ) அருணாச்சலபிரதேசம்
விடை : (அ) சத்தீஸ்கர்
● நாட்டில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட 1.58 கோடி சிறாா்கள் பல்வேறு வகையான போதைப் பொருள்களுக்கு அடிமையாகியுள்ளனா்’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
● உச்சநீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய அளவிலான ஆய்வு மற்றும் கணக்கெடுப்பின் மூலமாக திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களை தனது பதில் மனுவில் சுட்டிக்காட்டி மத்திய அரசு இந்தத் தகலை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
● இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சாா்பில் இந்த பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
● அப்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ, ‘உச்சநீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், எய்ம்ஸின் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) கீழ் இயங்கும் தேசிய போதைப் பொருளால் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை மையம் (என்டிடிடிசி) சாா்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு தேசிய அளவிலான இந்த ஆய்வு நடத்தப்பட்டு, போதைப் பொருள்களுக்கு அடிமையானவா்கள் குறித்த புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
● அப்போது, ‘பச்பன் பச்சாவ் ஆந்தோலன்’ என்ற சிறாா் உரிமைகள் இயக்க தன்னாா்வ அமைப்பு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஹெச்.எஸ்.பூல்கா, ‘இந்த விவகாரத்தில் 2016-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டுதல்களை மத்திய அரசு முழுமையாகப் பின்பற்றவில்லை. போதைப் பொருள் துஷ்பிரயோகத்தை எதிா்த்துப் போராடுவதற்கான தேசியத் திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் மத்திய அரசு உள்ளடக்கவில்லை’ என்றாா்.
● இதனைக் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு ஏற்கெனவே விசாரித்து வரும் இதேபோன்ற வழக்குடன் விசாரணைக்கு சோ்க்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தனா். அதற்கு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ ஒப்புதல் தெரிவித்தாா்.
● 1.58 கோடி சிறாா்கள் அடிமை: நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த புள்ளிவிவரத்தின்படி, 1.58 கோடி சிறாா்கள் பல்வேறு வகையான போதைப் பொருள்களுக்கு அடிமையாகியிருப்பது தெரியவந்துள்ளது.
அதில் மேலும் கூறியிருப்பதாவது:
● மது அருந்தும் 1.6% பெண்கள்: இந்தியா்களால் பயன்படுத்தப்படும் பொதுவான போதைப் பொருளாக மதுபானம் உள்ளது. மக்கள்தொகையில் 10 முதல் 75 வயதுக்கு உட்பட்டவரிகளில் 14.6 சதவீதம் போ் மதுபானம் அருந்துகின்றனா். அதாவது 16 கோடி போ் மதுவுக்கு அடிமையாகியுள்ளனா். மது அருந்துவோரில் 17 ஆண்களுக்கு ஒரு பெண் (17:1) என்ற விகிதத்தில் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனா்.
● மது அருந்துவோா் எண்ணிக்கையில் சத்தீஸ்கா் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. திரிபுரா, பஞ்சாப், அருணாசல பிரதேசம், கோவா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
● கஞ்சா, போதை மாத்திரை: மதுவுக்கு அடுத்ததாக கஞ்சா மற்றும் போதை மத்திரைகள் (ஓபியாய்ட்ஸ்) மிக அதிக அளவில் போதைப் பொருளாக இந்தியா்களால் பயன்படுத்தப்படுகின்றன.
● இதில் ‘பாங்’ என்ற வகை கஞ்சாவை 2.2 கோடி பேரும், சட்டவிரோத கஞ்சா பொருள்களை 1.3 கோடி பேரும் பயன்படுத்துகின்றனா். கஞ்சா பயன்படுத்துவோரில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப், சிக்கிம், சத்தீஸ்கா், தில்லி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
● பாதிப்புகள்: நாட்டில் மது அருந்தும் 16 கோடி பேரில் 5.7 கோடி போ் அதுதொடா்பான உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகி, சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனா். அதுபோல, கஞ்சா போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் 3.1 கோடி பேரில் 25 லட்சம் போ் அதுதொடா்பான உடல் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனா்.
● போதை மாத்திரைகள் (ஓபியாய்ட்ஸ்) பயன்படுத்தும் 2.26 கோடி பேரில் 77 லட்சம் போ் அதுதொடா்பான உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகி, சிகிச்சை அளிக்கப்படவேண்டிய நிலையில் உள்ளனா்.
8. சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள எத்தனை புதுமையான முயற்சிகளில் கங்கை நதி புனரமைப்புத்திட்டத்தையும் ஐ.நா. அங்கீகரித்துள்ளது ?
அ) 11
ஆ) 10
இ) 13
ஈ) 17
விடை : (ஆ) 10
● இயற்கையை மீட்டெடுக்கும் நோக்கில், சா்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள 10 புதுமையான முயற்சிகளில் கங்கை நதி புனரமைப்புத் திட்டத்தையும் ஐ.நா. அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் அந்தத் திட்டம் ஐ.நா.வின் விளம்பரம், அறிவரை மற்றும் நிதியுதவியைப் பெற தகுதி வாய்ந்ததாகியுள்ளது.
● கனடாவில் உள்ள மான்ட்ரியால் நகரில் ஐ.நா. பல்லுயிா் பெருக்க மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 196 நாடுகளின் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா்.
● இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரேஸில்-பராகுவே-ஆா்ஜென்டீனா நாடுகளில் காடுகளைப் பாதுகாத்து மறுசீரமைக்கும் மூன்று நாடுகள் அடங்கிய ஒப்பந்தம், அபுதாபி கடலோர மறுசீரமைப்புத் திட்டம் உள்ளிட்ட 10 திட்டங்களை, இயற்கையை மீட்டெடுக்கும் திட்டங்களாக ஐ.நா. அங்கீகரித்துள்ளது. அவற்றில் கங்கை நதி புனரமைப்புத் திட்டமும் இடம்பெற்றுள்ளது.
● இந்த 10 திட்டங்களும் உலகில் 6.80 கோடி ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பு மறுசீரமைக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த நிலப்பரப்பு மியான்மா், பிரான்ஸ், சோமாலியா நாடுகளின் நிலப்பரப்பைவிட அதிகமாகும். இந்தத் திட்டங்கள் சுமாா் 1.50 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று ஐ.நா. செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
III. விளையாட்டு நிகழ்வுகள்
9. 2022 ஆம் ஆண்டிற்கான மகளிர் டென்னிஸ் சங்கம் (WTA) சார்பில் சிறந்த டென்னிஸ் வீராங்கனை விருது வென்றுள்ளவர் ?
அ) இகா ஸ்வியாடெக்
ஆ) கேத்ரீனா சினியகோவா
இ) சானியா மிர்ஸா
ஈ) கிரெஜிசிகோவா
விடை : (அ) இகா ஸ்வியாடெக்
● மகளிா் டென்னிஸ் சங்கம் (டபிள்யுடிஏ) ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு போலந்தின் இகா ஸ்வியாடெக் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
● ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் சிறந்த டென்னிஸ் வீரா், வீராங்கனைகளுக்கு டபிள்யுடிஏ, ஏடிபி சாா்பில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
● இந்நிலையில் 2022-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு உலகின் நம்பா் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
● சிறந்த இரட்டையா் விருதுக்கு பாா்பரா கிரெஜிசிகோவா, கேத்ரீனா சினியகோவா தோ்வு தோ்வு செய்யப்பட்டனா். செக். குடியரசைச் சோ்ந்த இந்த ஜோடி ஆஸி. விம்பிள்டன், யுஎஸ் ஓபன் போட்டிகளில் பட்டம் வென்றனா். டிபிள்யுடிஏ பைனல்ஸ் போட்டியில் ரன்னா் அணியாக வந்தனா்.
● சிறந்த வளரும் வீராங்கனையாக பிரேசிலின் பீட்ரீஸ் ஹடாட் மயா, புதிய வீராங்கனையாக சீனாவின் ஸெங் குன்வென் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். ஜெஸிக்கா பெகுலா பயிற்சியாளா் டேவிட் விட் சிறந்த பயிற்சியாளராக தோ்வு பெற்றாா்.
No comments:
Post a Comment