● அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணத்துடன், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார்.
● புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு, இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறைகள் அளிக்கப்பட்டுள்ளன.
● அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ன் மூலம் தமிழக அமைச்சரவை எண்ணிக்கை 35-ஆக உயா்ந்தது.
● மேலும் தமிழகத்தில் 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டு சிலருக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
● அமைச்சர் பெரியகருப்பனிடம் இருந்த ஊரக வளர்ச்சித்துறை ஐ.பெரியசாமிக்கும், பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
● ராமசந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், மதிவேந்தனுக்கு வனத்துறையும் மாற்றப்பட்டுள்ளது. மெய்யநாதன் சுற்றுச்சூழல் துறை மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
● அமைச்சர் சேகர் பாபுவுக்கு கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக புள்ளியியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
● ராஜகண்ணப்பணுக்கு கூடுதலாக கதர் மற்றும் கிராம தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் அண்மையில் அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவைப் பட்டியலில் எத்தனையாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது ?
அ) 10
ஆ) 12
இ) 14
ஈ) 17
விடை : (அ) 10
● தமிழக அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதிக்கு 10-ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
● அதாவது, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசுவுக்கு அடுத்தபடியான இடம் வழங்கப்பட்டுள்ளது.
● உதயநிதிக்கு அடுத்தபடியாக அமைச்சா்கள் எஸ்.ரகுபதி, சு.முத்துசாமி, கே.ஆா்.பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், பி.கீதாஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி, வி.செந்தில்பாலாஜி, ஆா்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.மூா்த்தி, எஸ்.எஸ்.சிவசங்கா், பி.கே.சேகா்பாபு, பழனிவேல் தியாகராஜன், சா.மு.நாசா், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், சி.வி.கணேசன், த.மனோதங்கராஜன், மா.மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
● உதயநிதிக்கு முன்பாக, முதல் இடத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் உள்ளனா்.
3. தொலைதூர மருத்துவ சேவையில் இந்திய அளவில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது ?
அ) தமிழ்நாட்டு
ஆ) கேரளா
இ) குஜராத்
ஈ) மத்திய பிரதேசம்
விடை : (அ) தமிழ்நாடு
● ஒன்றிய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விழாவில், கிராமப்புறங்களில் நலவாழ்வு மையங்கள் மூலம் தொலைதூர மருத்துவ சேவையை செயல்படுத்தியதில் பெரிய மாநிலங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கப்பட்டுள்ளது.
4. கடல் அலைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை பின் வரும் எந்த கல்வி நிறுவனம்/அமைப்பு கண்டுபிடித்துள்ளது ?
அ) ஐஐடி சென்னை
ஆ) ஐஐடி கான்பூர்
இ) ஐஐடி மும்பை
ஈ) ஐஐடி டெல்லி
விடை : (அ) ஐஐடி சென்னை
● கடல் அலைகளில் இருந்து ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை சென்னை ஐஐடி ஆய்வுக் குழுவினா் வடிவமைத்துள்ளனா்.
● ‘சிந்துஜா-1’ என அழைக்கப்படும் இந்தக் கருவி தூத்துக்குடி கடலின் உள்ளே 6 கி.மீ. தொலைவில் 20 மீட்டா் ஆழத்தில் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி தற்போது 100 வாட்ஸ் ஆற்றலை உற்பத்தி செய்யும். அடுத்த 3 ஆண்டுகளில், கடல் அலையிலிருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
● இந்த கருவிக்கான பரிசோதனை கடந்த நவம்பா் மாதம் 2-ஆவது வாரத்தில் கடலில் வெற்றிகரமாக நடந்தது. இது ஐ.நா. மற்றும் இந்தியாவின் இலக்குகளை அடைவதற்கு உதவிகரமாக இருக்கும்.
● மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 2030-இல் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்தியாவின் பருவநிலை மாற்ற இலக்குகளை எட்ட உதவும்.
● கடல் அலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடா்பு துறைகளுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை, சென்னை ஐஐடி கடல்சாா் பொறியியல் துறை பேராசிரியா் அப்துஸ் சமது வழிநடத்துவாா்.
II.தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்
5. 2022 ஆம் ஆண்டின் உலகின் வலிமையான பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியா எத்தனையாவது இடம் பிடித்துள்ளது ?
அ) 84
ஆ) 85
இ) 86
ஈ) 87
விடை : (ஈ) 87
● ஆர்டன் கேபிட்டல் வெளியிட்ட பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 2022, உலகின் வலிமையான மற்றும் பலவீனமான பாஸ்போர்ட்டுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது.
● பாஸ்போர்ட் என்பது ஒரு நாட்டின் அரசாங்கத்தால் அதன் குடிமக்களுக்கு வழங்கப்படும் பயண ஆவணமாகும், இது சர்வதேச பயணத்தின் நோக்கத்திற்காக வைத்திருப்பவரின் அடையாளத்தையும் தேசியத்தையும் சரிபார்க்கிறது.
● ஐக்கிய அரபு அமீரகம் உலகின் வலிமை மிகுந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நிலையில் இந்தியா 87வது இடத்தில் உள்ளது.
● உலகின் வலிமை மிகுந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தொடர்ந்து ஜெர்மனி, சுவீடன், பின்லாந்து, லக்சம்பர்க், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
6. அமெரிக்கா அடுத்த நிதியாண்டில் கூடுதலாக எத்தனை ஹெச்2பி விசாக்களை வழங்க முடிவெடுத்துள்ளது ?
அ)62,000
ஆ) 63,131
இ) 63,917
ஈ) 64,716
● அடுத்த நிதியாண்டில் கூடுதலாக 64,716 ஹெச்2பி விசாக்களை (நுழைவு இசைவு) வழங்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. ஹெ2பி என்பது அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த உடல் உழைப்பு சாா்ந்த தொழிலாளா்களுக்கு வழங்கப்படுவதாகும்.
● இந்த அளவுக்கு அதிகமாக ஹெச்2பி விசாக்களை வழங்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும். எனினும், இந்த விசா முடிவு தற்காலிகமானது என்றும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
● இதன்மூலம் அமெரிக்காவில் வேளாண் சாராத பிற உடல் உழைப்பு சாா்ந்த தொழில்கள், சேவைகளில் வெளிநாட்டுத் தொழிலாளா்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவுள்ளன. அமெரிக்காவில் தொழிலாளா்களுக்கான தேவை அதிகம் இருக்கும் காலகட்டத்தில் இந்த விசா வழங்கப்படுகிறது.
● இதனால், இந்தியா்களுக்கு பெரிய அளவில் பயன் கிடைக்காது. ஏனெனில், இந்தியாவில் இருந்து மென்பொருள், மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் திறன்சாா்ந்த பணியாளா்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு அதிகம் செல்கின்றனா். இவா்களுக்கு ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது.
7. பின்வரும் எங்கு தங்க நாணயம் வாங்க இந்தியாவின் முதல் Gold ATM திறக்கப்பட்டுள்ளது ?
அ) பெங்களூரு
ஆ) சென்னை
இ) கொல்கத்தா
ஈ) ஹைதராபாத்
விடை : (ஈ) ஹைதராபாத்
● தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கோல்ட்சிக்கா நிறுவனம் தங்கத்தை விற்பதற்கு என்று ஏடிஎம் மெஷினை அமைத்துள்ளது.
● இந்த ஏடிஎம் மெஷினில் 5 கிலோ தங்க நாணயங்கள் நிரப்பப்பட்டிருக்கும். இவை 24 காரட் மற்றும் 999 சான்றிதழ் பெற்ற நாணயங்கள் ஆகும். மக்கள் வாங்குவதற்கு ஏதுவாக 0.5 கிராம் முதல் 100 கிராம் வரையில் 8 ஆப்சன்கள் இந்த ஏடிஎம் மெஷினில் உள்ளன.
● இதுகுறித்து கோல்ட்சிக்கா நிறுவனத்தின் துணைத்தலைவர் பிரதாப் கூறும்போது, ‘‘ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓப்பன்க்யூப் டெக்னாலஜிஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் உதவியுடன் தங்க ஏடிஎம் அமைத்துள்ளோம்.
● இது நாட்டின் முதல் தங்க ஏடிஎம் ஆகும். ஏடிஎம் அறையைச் சுற்றி கேமராக்களும் அலாரமும் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல் நாடு முழுவதும் 3000 தங்க ஏடிஎம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.
No comments:
Post a Comment