Thursday, May 19, 2022

தமிழ்நாட்டில் சமூக அரசியல் இயக்கங்கள் - இராமலிங்க சுவாமிகள் TNPSC Notes

 தமிழ்நாட்டில் சமூக அரசியல் இயக்கங்கள்


இராமலிங்க சுவாமிகள்

  • அவர் பிரபலமாக வள்ளலார் அல்லது இராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்பட்டார்.

  • காலம்: 1823 – 1874 

  • சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மருதூர் கிராமத்தில் பிறந்தார். 

  • பெற்றோர்: இராமையாபிள்ளைசின்னம்மையார்.

  • அவரது தெய்வீக சக்திகள் பதினொரு வயதிலேயே அங்கீகரிக்கப்பட்டன.

  • ஆன்மீக வாழ்க்கையில் ஆழ்ந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட அவர், 1858ஆம் ஆண்டில் வடலூருக்கு அருகிலுள்ள கருங்குழிக்கு சென்று குடியேறினார்.

சீர்திருத்தவாதி

  • தேவார, திருவாசகப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அவர் மனம் உருகும் பாடல்களைச் சொந்தமாக இயற்றினார்.

  • அவரது காலத்தில் சைவ மதம், திருவாடுதுறை, தர்மபுரம் மற்றும் திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் பிடியில் இருந்தது.

  • இராமலிங்க அடிகளின் பாடல்கள் முற்போக்குச் சிந்தனைகள் கொண்டிருந்தன, மேலும் மதவெறியையும் பகுத்தறிவற்ற தன்மையையும் கண்டனம் செய்தது.

  • அவர், “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்எனப் பாடினார்.

சமரச சுத்த சன்மார்க்க சங்கம்

  • தாவரங்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் அவர் தனது இரக்கத்தையும் கருணையையும் காட்டினார்.

  • இது ஜீவகாருண்யம் என்று அழைக்கப்படுகிறது.

  • சமரச வேத சன்மார்க்க சங்கத்தை 1865ல் நிறுவினார்.

  • இது 1872ல் சமரச சுத்த சன்மார்க்க சத்யசங்கம் என மறுபெயரிடப்பட்டது.

சத்ய தர்மசாலை

1860களில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் கொள்ளை நோயின் பின்னணியில் 1867ஆம் ஆண்டு சாதி மற்றும் மத வேறுபாடின்றி ஏழை மக்களுக்கு உணவளிக்க வடலூரில் சத்ய தர்மச் சாலையை நிறுவினார்

சத்திய ஞானசபை

  • ஜனவரி 25, 1872 அன்று அவர் வடலூரில் "சத்திய ஞான சபையை" திறந்தார்.

  • அது உண்மையான ஞான மன்றத்தின் மண்டபம். அது முற்றிலும் மதச்சார்பற்றது.

  • இது அனைத்து சாதி மக்களுக்கும் திறந்திருந்தது.

கோட்பாடுகள்

  • அவர் ஒரு சாதியற்ற சமூகத்தை ஆதரித்தார்.

  • மூடநம்பிக்கைகளையும் சடங்குகளையும் எதிர்த்தார்.

  • உணவுக்காக விலங்குகளை கொல்வதை அவர் எதிர்த்தார்.

  • ஏழைகளுக்கு உணவளிப்பதை மிக உயர்ந்த வழிபாடாக அவர் பரிந்துரைத்தார்.

  • பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சமத்துவமின்மையை அவர் கண்டித்தார்.

இலக்கிய படைப்புகள்

  • இவர் பாடிய 5818 பாடல்களின் திரட்டு, ‘திருவருட்பாஎன்று அழைக்கப்படுகிறது. இதுஆறு திருமுறைகளாகபகுக்கப்பட்டு உள்ளது

  • அவரது மற்றொரு படைப்புமனுமுறைகண்ட வாசகம்மனு நீதி சோழனின் வாழ்க்கையை விவரிக்கிறது.

ஜீவகாருண்ய ஒழுக்கம்

  1. அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கத்தை வலியுறுத்துகிறது.

  2. தாவர உணவை மட்டுமே வலியுறுத்துகிறது.

வள்ளலாரின் பதிப்புகள்

  • சின்மய தீபிகை 

  • ஒழிவிலொடுக்கம் 

  • தொண்டைமண்டல சதகம்

வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்

  • உயிர்களுக்கு செய்யும் சேவையே மோட்சத்தை அடையும் வழி

  • கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.

  • நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே

  • தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே

  • மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே

  • ஏழைகளை வயிறு எரியச் செய்யாதே

  • தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.

  • பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே.

  • பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.

  • இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே.

  • குருவை வணங்கக் கூசி நிற்காதே.

  • வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிக்காதே.


Tuesday, May 17, 2022

இந்தியாவின் புகை இல்லாத முதல் மாநிலம் ! - Himachal Pradesh

▪︎இமாச்சலப் பிரதேசம் மாநிலமானது, அனைவருக்கும் LPG இணைப்பினை வழங்கிய முதல் மாநிலமாகவும் புகை இல்லாத முதல் மாநிலமாகவும் மாறியுள்ளது.

▪︎மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் மற்றும் கிரஹினி சுவிதா யோஜனா ஆகியவற்றின் காரணமாக இந்தச் சாதனை எட்டப்பட்டது.

▪︎மாநிலத்தினைப் புகை இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காக உஜ்வாலா திட்டம் மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

▪︎கிராமப்புறப் பெண்களுக்கு உதவும் வகையில் கிரஹினி சுவிதா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Monday, May 16, 2022

National Dengue Day - May 16 , 2022


▪︎In India , the National Dengue Day is                Observed  every year on 16 May.

▪︎The day is an initiative by the Ministry of  Health and Family Welfare, to raise                awareness about dengue and its preventive  measures, and preparedness for the control of the Vector - borne disease before the          transmission season begins.

▪︎Dengue is spread through the bite of the female mosquito ( Aedes aegypti ) .

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...