Thursday, October 20, 2022

Current Affairs 2022 - October 20 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                OCTOBER 20 / 2022

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. நிகழாண்டு தமிழ்நாடு முழுவதும் ரூ. 1,050 கோடி மதிப்பில் எத்தனை வகுப்பறைகள் கூடுதலாகக் கட்டப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார் ?

அ) 7,200

ஆ) 7,919

இ) 8,118

ஈ) 8,727

விடை : (அ) 7,200 

நிகழாண்டில் தமிழ்நாடு முழுவதும் ரூ.1,050 கோடி மதிப்பில் 7,200 வகுப்பறைகள் கூடுதலாகக் கட்டப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

● சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், புதன்கிழமை அவா் படித்தளித்த அறிக்கை:

● கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மகத்தான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. காலை உணவு, இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், மாதிரிப் பள்ளிகள், நான் முதல்வன், தகைசால் பள்ளிகள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

● அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்கி வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமாா் 15 லட்சம் மாணவா்கள் கூடுதலாகச் சோ்ந்துள்ளனா்.

● அதிகரித்து வரும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய வகுப்பறைகளுக்கான தேவைகளும் உயா்ந்துள்ளன. இதனடிப்படையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமாா் ரூ.800 கோடி மதிப்பில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.250 கோடி மதிப்பில் 1,200 வகுப்பறைகளும் என மொத்தம் ரூ.1,050 கோடியில் 7 ஆயிரத்து 200 வகுப்பறைகள் கூடுதலாகக் கட்டப்படும். 

● பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்கென நிகழாண்டில் ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது ரூ.115 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசுப் பள்ளிகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

● இதனால், அரசுப் பள்ளிகளைத் தேடி வரும் மாணவா்களுக்கு தரமான பள்ளிக் கட்டமைப்பு கிடைக்கப் பெறுவதுடன், பாதுகாப்பான கற்றல் சூழலும் உறுதி செய்யப்படும்.


2. 2022 - 2023 ஆம் நிதி ஆண்டில் கூடுதல் செலவினங்களுக்காக எத்தனை கோடிக்கு துணை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது ? 

அ) ரூ. 2,131

ஆ) ரூ. 3,796 

இ) ரூ. 4,171 

ஈ) ரூ. 4,717 

விடை : (ஆ) ரூ. 3,796 


3. தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை தரைப் பாலங்கள் மேம்பாலங்களாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 689 

ஆ) 861 

இ) 942

ஈ) 1,281 

● அறிவிப்பு : தமிழக பொதுப்பணி (ம) நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ. வேலு. 

சட்டப்பேரவையில் அமைச்சர் கூறியதாவது : மாநிலத்தில் மொத்தம் 1,281 தரைப்பாலங்கள் உள்ளன. அவற்றில், 2021-22-ஆம் ஆண்டில் ரூ.755 கோடியில் 689 தரைப்பாலங்கள் மேம்பாலங்களாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

● நிகழ் நிதியாண்டில், 172 தரைப் பாலங்களை மேம்பாலங்களாக மாற்ற ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, இந்த ஆண்டில் பணிகளை முடிக்க உள்ளோம். உள்ளோம். மொத்தமாக 861 பாலங்களுக்கான பணிகள் இந்த ஆண்டில் நிறைவடையவுள்ளன.

● மொத்தமுள்ள 420 பாலங்களுக்கான பணிகள் 2024-ஆம் ஆண்டுக்குள் முடிக்கவுள்ளோம். 

● இதன்படி, தோ்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிப்படி, 1,281 தரைப்பாலங்களும் மேம்பாலங்களாக மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

4. தமிழகம் முழுவதும் பொது மக்களின் பயன்பாட்டுக்காக ரூ.500 கோடியில் எத்தனை புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார் ? 

அ) 1000

ஆ) 750

இ) 500

ஈ) 250 

விடை : (அ) 1000 

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கையின் படி : 

● பொது மக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. 

● ரூ.500 கோடி மதிப்பில் ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. 

● மேலும், ஜொ்மனி வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் 2 ஆயிரத்து 213 டீசல் பேருந்துகளையும், 500 மின்சாரப் பேருந்துகளையும் வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

5. 48 ஆவது சரக்கு (ம) சேவை வரி ( GST ) கவுன்சில் கூட்டம் தமிழகத்தில் எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) சென்னை

ஆ) சேலம்

இ) மதுரை

ஈ) தேனி 

விடை : (இ) மதுரை 

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நவம்பா் முதல் பாதியில் தமிழகத்தின் மதுரையில் நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

● ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயம் அமைப்பது குறித்த அமைச்சா்கள் குழுவின் அறிக்கை, சூதாட்ட விடுதிகள், இணையவழி விளையாட்டுகள் மீது வரி விதிப்பது உள்ளிட்டவை குறித்து இந்த கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

6. பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சி பின்வரும் எந்த மாவட்டத்தில் பிரதமர் மோடி அண்மையில் தொடங்கி வைத்தார் ?

அ) மும்பை 

ஆ) சென்னை 

இ) கொல்கத்தா

ஈ) காந்திநகர் 

விடை : (ஈ) காந்திநகர் 

குஜராத் தலைநகர், காந்திநகரில் பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சி தொடங்கியுள்ளது. அக். 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி  தொடக்கி வைத்தார்.  
● தற்போது தொடங்கியுள்ள கண்காட்சிக்கு முன்னெப்போதும் இல்லாத சிறப்பு உள்ளது. ஏனெனில், இந்தக் கண்காட்சியில் முதல்முறையாக இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளன.

● புதிய விமானப் படை தளம்: இந்த நிகழ்ச்சியின்போது இந்தியா-பாகிஸ்தான் எல்லையையொட்டி குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்டம் டீசா பகுதியில் புதிய விமானப் படை தளத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.


III. விளையாட்டு நிகழ்கள் 

7. தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்பில் ( 2022 ) ஆடவருக்கான 200 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ள தமிழக வீரர் யார் ? 

அ) ராகுல் குமார்

ஆ) அர்ஜூன் தாஸ் 

இ) ஆரோக்கிய ராஜ்

ஈ) தனபால் 

விடை : (அ) ராகுல் குமார் 

● போட்டி நடைபெற்ற இடம் : கர்நாடகா. 

தேசிய ஓபன் சாம்பியன்ஷிப்பில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை 297 புள்ளிகளுடன் ரயில்வேஸ் அணி பெற்றது. சா்வீசஸ் (174), கா்நாடகம் (69.50) முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன.

● ஆடவா் பிரிவில் சா்வீசஸும், மகளிா் பிரிவில் ரயில்வேஸும் சாம்பியன் ஆகின.

● போட்டியிலேயே சிறந்த வீரராக சா்வீசஸ் அணியின் குண்டு எறிதல் வீரா் தஜிந்தா்பால் சிங் தூா், சிறந்த வீராங்கனையாக ரயில்வேஸின் ஓட்டப் பந்தய வீராங்கனை ஜோதி யாராஜி ஆகியோா் தோ்வாகினா்.

8. உலக செஸ் சம்மேளனம் சிறைக் கைதிகளுக்காக கண்டங்கள் இடையே நடத்திய செஸ் போட்டியில் (2022) இந்திய கைதி அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (இ) வெண்கலம் 

● மகாராஷ்டிரத்தின் ஏரவாடா சிறையைச் சேர்ந்த 20 பேர் கொண்ட இந்திய கைதிகள் அணி வெண்கலம் வென்றது.

● 46 நாடுகளில் இருந்து 85 க்கும் அதிகமான அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா கலந்து கொண்டது இது முதல் முறையாகும்.

9. ISSF உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் (2022) 10மீ ஏர் ரைஃபில் ஜூனியர் மகளிர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை யார் ? 

அ) ரமிதா 

ஆ) ஈஷா சிங் 

இ) திலோத்தமா 

ஈ) வர்ஷா சிங்

விடை : (அ) ரமிதா 

● பதக்க பட்டியலில் இந்தியா : 10 G , 5G, 10B என இதுவரை 25 பதக்கங்களுடன் 2 ஆவது இடத்தில் இருக்கிறது . 


IV. முக்கிய தினங்கள் 

10. World Statistics Day 2022 --------- 

● Ans : October 20

● Theme (2022) : Data for Sustainable Development.  

Current Affairs 2022 - October 19 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                 OCTOBER 19 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. அண்மையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் யாருக்கு தலைமைப் பண்புக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது ? 

அ) எல்.பி. தங்கவேலு 

ஆ) பொன்னுராஜ் 

இ) மதிவேந்தன் 

ஈ) சங்க்கரன் 

விடை : (அ) எல்.பி. தங்கவேலு 

● தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் இந்திய லேப்ரோஸ்கோபி மருத்துவ நிபுணர்கள் அமைப்பின் தலைவர் டாக்டர் எல்.பி. தங்கவேலுக்கு விருது வழங்கப்பட்டது. 

● காரணம் : மருத்துவத் துறையில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஆற்றிய சேவைகளைக் கௌரவிக்கும் வகையில் இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது .


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. இந்தியாவின் 27 ஆவது தலைமை கணக்கு அதிகாரியாக (CGA) பொறுப்பேற்றுள்ளவர் யார் ?

அ) எஸ். விஜயலட்சுமி 

ஆ) பாரதி தாஸ்

இ) அமிர்தா குப்தா 

ஈ) அஞ்சலி சந்திரகுப்தன் 

விடை : (ஆ) பாரதி தாஸ் 

● பணி விவரம் : துறை ரீதியாக கணக்கு அறிக்கைகளைத் தயாரித்து மத்திய அரசுக்கு அளிப்பது, துறை ரீதியான கணக்காய்வுகள் நடத்துவது ஆகியவை தலைமை கணக்கு அதிகாரியின் பொறுப்பாகும். 

3. சர்வதேச சூரியசக்தி கூட்டணி நாடுகள் அமைப்பின் தலைவர் பதவிக்கும் , இணைத் தலைவர் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடுகள் ? 

அ) இந்தியா, சீனா 

ஆ) இந்தியா , ரஷ்யா 

இ) இந்தியா, பிரான்ஸ் 

ஈ) இந்தியா, கனடா 

விடை : (இ) இந்தியா, பிரான்ஸ் 

● புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சரான ஸ்ரீ ராஜ் குமார் சிங், புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் ஐந்தாவது சட்டசபையை தொடங்கி வைத்தார்.

● இந்தியா ISA சட்டமன்றத்தின் தலைவர் பதவியை வகிக்கிறது, பிரான்ஸ் அரசாங்கம் இணைத் தலைவராக உள்ளது.

● ISA-வின் ஐந்தாவது கூட்டம், ஆற்றல் அணுகல், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் மாற்றம் ஆகிய மூன்று முக்கியமான பிரச்சினைகளில் ISA இன் முக்கிய முயற்சிகள் குறித்து விவாதிக்கபடவுள்ளது.

4. சர்வதேச காவல் துறை அமைப்பான இன்டர்போலின் எத்தனையாவது பொதுச்சபை கூட்டத்தை தில்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் ? 

அ) 87

ஆ) 88

இ) 89

ஈ) 90 

விடை : (ஈ) 90 

● சர்வதேச காவல் துறை அமைப்பான இன்டர்போலின் 90-ஆவது பொதுச்சபை கூட்டத்தை அவர் தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். 

● இந்த நிகழ்ச்சியின் நினைவு தபால்தலையையும் ரூ.100 நாணயத்தையும் அவர் வெளியிட்டார். 

● முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவரை உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்டர்போல் தலைவர் அகமது நாசர் அல்ரைசி, பொதுச் செயலாளர் ஜர்கன் ஸ்டாக் ஆகியோர் வரவேற்றனர். 

● பாகிஸ்தான் உள்பட 195 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இன்டர்போல் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளன. 

5. 2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது வழங்கப்பட்டுள்ள ஷேறன் கருணதிலக் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) இந்தியா

ஆ) இலங்கை 

இ) அமெரிக்கா 

ஈ) பிரிட்டன்

விடை : (ஆ) இலங்கை 

வாழ்வின் பல்வேறு உணா்வுநிலைகளுடன் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் உக்கிரத்தன்மையை வெளிப்படுத்திய ‘தி செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்டா’ என்ற நாவலுக்காக எழுத்தாளா் ஷேஹன் கருணதிலகவுக்கு ‘புக்கா்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

● லண்டனில் புக்கா் விருது வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

● இலங்கை எழுத்தாளா் ஷேஹன் கருணதிலக எழுதிய ‘தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மெய்டா’ என்ற நாவலுக்காக புக்கா் விருது வழங்கப்பட்டது. புக்கா் விருதுடன் சுமாா் ரூ.45 லட்சம் பரிசுத்தொகையும் எழுத்தாளா் கருணதிலகவுக்கு வழங்கப்பட்டது.

● அந்த நாவலில் இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்து நகைச்சுவையுடன் அவா் பதிவு செய்துள்ளதாக தோ்வுக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

6. இந்தியாவில் எங்கு ரஷிய துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஆலை நிறுவப்படவுள்ளது ? 

அ) மத்திய பிரதேசம் 

ஆ) தமிழ்நாடு 

இ) கேரளா 

ஈ) உத்தர பிரதேசம்

விடை : (ஈ) உத்தர பிரதேசம் 

இந்திய-ரஷிய துப்பாக்கி நிறுவனம் கடந்த 2019-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்படி உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ரஷிய துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஆலை நிறுவ முடிவெடுக்கப்பட்டது.

● இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சி குஜராத் மாநிலம் காந்திநகரில் செவ்வாய்க்கிழமை (அக். 18) தொடங்கியது. இதில் பங்கேற்ற அலெக்சாண்டா் மிக்கீவ் கூறியதாவது:

● அமேதியில் கோா்வா ஆயுதத் தயாரிப்பு ஆலை இந்த ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும். இங்கு ஏகே-203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படும். 

● ரஷியாவின் சிறப்புவாய்ந்த இந்த துப்பாக்கியை முழுமையாக இந்தியாவில் தயாரிப்பதுதான் எங்கள் திட்டமாகும். எதிா்காலத்தில் இந்தியாவுடன் மேலும் பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரஷியாவின் பல்வேறு நவீன ஆயுதங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.

● இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ஏகே-203 ரக துப்பாக்கிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. மலைகள், காடுகள், பனிப் பகுதிகள் என பல்வேறு இடங்களிலும், காலநிலைகளிலும் சிறப்பாக அதனைப் பயன்படுத்த முடியும் என்றாா்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. கால்பந்த விளையாட்டு உலகில் மதிப்பு மிக்கதாக இருக்கும் பேலோன் தோர் விருது 2022 ஆடவர் (ம) மகளிர் பிரிவில் பின்வரும் யாருக்கு விருது வழங்கப்பட்டது ? 

அ) லயோனல் மெஸ்ஸி 

ஆ) கரின் பென்ஸிமா 

இ) அலெக்ஸியா புடெலாஸூம் 

ஈ) ஆ & இ 

விடை : (ஈ) ஆ & இ 

கால்பந்து விளையாட்டு உலகில் மதிப்பு மிக்கதாக இருக்கும் பேலோன் தோா் விருதை 2022-ஆம் ஆண்டில் ஆடவா் பிரிவில் பிரான்ஸின் கரிம் பென்ஸிமாவும், மகளிா் பிரிவில் ஸ்பெயினின் அலெக்ஸியா புடெலாஸும் வென்றனா்.

● இதில் பென்ஸிமா முதல் முறையாக இந்த விருதை வென்றிருக்கும் நிலையில், புடெலாஸ் தொடா்ந்து 2-ஆவது முறையாக அதை கைப்பற்றியிருக்கிறாா். 

● மகளிா் பிரிவில் 2 முறை இந்த விருதை வென்ற முதல் வீராங்கனை புடெலாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

8. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ( BCCI ) எத்தனையாவது தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார் ? 

அ) 36 

ஆ) 33

இ) 31 

ஈ) 29 

விடை : (அ) 36 

● BCCI யின் 36 ஆவது தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Wednesday, October 19, 2022

Current Affairs 2022 - October 18 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                     GK SHANKAR 
                OCTOBER 18 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. பின்வரும் எந்த மாநிலத்தில் அண்மையில் கருவிழி மூலமாக ரேஷன் பொருள்கள் பெறும் திட்டம் தொடங்கப்பட்டது ? 

அ) குஜராத்

ஆ) மணிப்பூர் 

இ) ஜார்க்கண்ட் 

ஈ) தமிழ்நாடு 

விடை : (ஈ) தமிழ்நாடு 

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் விநியோகம் செய்யும் நடைமுறை முதற்கட்டமாக திருவல்லிக்கேணியில் இன்று தொடங்கியது.

● சென்னையில் திருவல்லிக்கேணி நியாயவிலைக் கடைகளில் முதல் முறையாக இன்று கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் விநியோகம் தொடங்கியது. 

● சோதனை முயற்சியாக இந்த திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி மற்றும் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஆகியோர் இன்று தொடக்கி வைத்தனர்.

● காரணம் :  வயது மூப்பு மற்றும் விரல் ரேகை பதிவு செய்ய இயலாத இனங்களில் கண் கருவிழியைச் சரிபாா்க்கும் முறை மூலம் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்கவுள்ளது.

● இதுவரை : மகாராஷ்டிரம், அஸ்ஸாம், தெலங்கானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போது செயல்பாட்டில் இத்திட்டம் இருகிறது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. உச்சநீதிமன்றத்தின் எத்தனையாவது நீதிபதியாக டி.ஓய். சந்திர சூட் பதவியேற்கவுள்ளார் ? 

அ) 49 ஆவது

ஆ) 50 ஆவது

இ) 51 ஆவது

ஈ) 52 ஆவது

விடை : (ஆ) 50 ஆவது

● நியமனம் : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

● பதவி ஏற்கும் நாள் : நவம்பர் 09/2022.

● தற்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித் நவம்பர் 08 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். 

3. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் (ம) விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்தனை மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது ? 

அ) 59

ஆ) 60

இ) 61 

ஈ) 62 

விடை : (அ) 59 

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 59 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

● அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.

● நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

● அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,456 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 59 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

● இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

● இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

4. இந்தியாவில் கடந்த 2005 - 06 முதல் 2019 - 21 வரையிலான காலகட்டத்தில் சுமார் எத்தனை கோடி பேர் ஏழ்மை நிலையில் இருந்து விடுபட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ?

அ) 41.5 கோடி 

ஆ) 42.7 கோடி

இ) 43 கோடி 

ஈ) 44.6 கோடி 

விடை : (ஈ) 41.5 கோடி 

இந்தியாவில் கடந்த 2005-06 முதல் 2019-21 வரையிலான காலகட்டத்தில் சுமாா் 41.5 கோடி போ் ஏழ்மைநிலையில் இருந்து விடுபட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● பன்முக ஏழ்மை குறியீட்டை ஐ.நா. வளா்ச்சித் திட்டம் (யுஎன்டிபி) ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிட்டது. நடப்பாண்டுக்கான அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. 

● இந்தியாவில் கடந்த 2005-06 முதல் 2019-21 வரையிலான காலகட்டத்தில் சுமாா் 41.5 கோடி போ் ஏழ்மை நிலையில் இருந்து விடுபட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

● குறிப்பு : உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான ஏழைகள் (22.89 கோடி) உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

5. மத்திய விவசாயம் (ம) உர அமைச்சகங்கள் சார்பில் 2 நாட்கள் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி எங்கு தொடங்கிவைத்தார் ?

அ) மத்திய பிரதேசம் 

ஆ) தில்லி 

இ) உத்தர பிரதேசம்

ஈ) தமிழ்நாடு 

விடை : (ஆ) தில்லி 

தில்லியில் மத்திய விவசாயம் மற்றும் உர அமைச்சகங்கள் சாா்பில் 2 நாள்கள் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டை பிரதமா் மோடி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். 

● தொடங்கப்பட்ட திட்டங்கள் : இந்நிலையில், மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே உரம்’ என்ற திட்டத்தின் கீழ், அனைத்து மானிய உரங்களும் ‘பாரத்’ என்ற ஒரே பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. அதனை பிரதமா் மோடி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினாா்.

● விவசாயிகள் வள மையம் திறப்பு: இந்த நிகழ்ச்சியில் ‘பிரதமரின் விவசாயிகள் வள மையங்கள்’ திறக்கப்பட்டன. மொத்தம் 600 மையங்களைப் பிரதமா் மோடி திறந்துவைத்தாா். இதுகுறித்து அவா் பேசியதாவது:

● பிரதமரின் விவசாயிகள் வள மையங்கள் பல்வேறு சேவைகளை விவசாயிகளுக்கு வழங்கும். இந்த மையங்கள் விதைகள், உரங்கள் உள்ளிட்டவற்றை விநியோகிக்கும் மையமாக மட்டுமின்றி மண் வளம், விதைகள் மற்றும் உரங்களைப் பரிசோதிக்கும் மையமாகவும் இருக்கும். அத்துடன் அரசுத் திட்டங்கள் குறித்த தகவலையும் இந்த மையங்களில் பெறலாம். மேலும் நாட்டில் உள்ள சுமாா் 3.30 லட்சம் உர சில்லறை விற்பனை கடைகள் பிரதமரின் விவசாயிகள் வள மையங்களாக மாற்றப்படும்.

விவசாயிகள் நிதியுதவி திட்டம்: ரூ.16,000 கோடி விடுவிப்பு

● விவசாயிகள் மாநாடு நிகழ்ச்சியின்போது பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடியை பிரதமா் மோடி விடுவித்தாா். இது அந்தத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட 12-ஆவது தவணையாகும். இதன் மூலம் அந்தத் திட்டம் வாயிலாக, சுமாா் 11 கோடி விவசாயிகளுக்கு ரூ. 2.16 லட்சம் கோடி பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது.

● மத்திய அரசு சாா்பில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், ரூ.2,000 வீதம் ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக மொத்தம் ரூ.6,000 வழங்கப்படுகிறது.

6. அண்மையில் மறைந்த ஓஆர்எஸ் எனப் பரவலாக அறியப்படும் பிரபல மருத்துவர் மஹாலனோபிஸ் எந்த ஆண்டு தாய்லாந்து அரசின் உயரிய விருதான பிரின்ஸ் மஹிடோல் விருதை பெற்றார் ?

அ) 1998

ஆ) 2000

இ) 2006 

ஈ) 2010

விடை : (இ) 2006 

ஓஆர்எஸ்' எனப் பரவலாக அறியப்படும் உப்பு சர்க்கரை கரைசலைக் கண்டறிந்ததில் முக்கியப் பங்கு வகித்த மருத்துவர் திலீப் மஹாலனோபிஸ் (88) உடல்நலக் குறைவால் கொல்கத்தாவில் அண்மையில் காலமானார்.

● குறிப்பு : 1971-ஆம் ஆண்டு வங்கதேச போர் காலகட்டத்தில் பலர் காலரா நோயால் பாதிக்கப்பட்டபோது உப்பு சர்க்கரை கரைசலை வழங்கி பலரின் உயிரைக் காப்பாற்றினார் திலீப் மஹாலனோபிஸ். 

● அதற்காகப் பல நாடுகளின் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். தன் வாழ்நாளில் ஈட்டிய ரூ.1 கோடியை சிறார் மருத்துவமனைக்கு அவர் நன்கொடையாக வழங்கினார்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் நடத்திய 17 வயதுக்கு உள்பட்ட ஆடவருக்கான 3×3 ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டியில் இந்தியா வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி 

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

● போட்டி நடைபெற்ற இடம் : கோலாம்பூர்,  மலேசியா. 

● ஆசிய அளவிலான 6 ஆவது போட்டி . 

8. உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ( 2022 ) மகளிர் அணிகள் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ?

அ) வெண்கலம்

ஆ) தங்கம் 

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (இ) வெண்கலம் 

● இந்திய அணி : ரிதம் சங்வான், பால்க, யுவிகா தோமர். 


IV. முக்கிய தினங்கள் 

9. World Menopause Day 2022 ----------

● Ans : October 18 / 2022

● Theme : Cognition & Mood 

Monday, October 17, 2022

Current Affairs 2022 - October 17 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                OCTOBER 17 / 2022 

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழக காவல் துறையில் -------- என்ற புதிய செயலி மூலம் மின்னணு ரோந்துப்பணி என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ? 

அ) காவலன் துணை 

ஆ) ஸ்மார்ட் காவலன் 

இ) உங்கள் காவலன் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) ஸ்மார்ட் காவலன் 

தமிழகத்தில் காவல்துறை ரோந்துப்பணியை நவீனப்படுத்த ஸ்மார்ட் காவலர் என்ற செயலியை காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு இன்று தொடங்கி வைத்தார்.

● ஸ்மார்ட் காவலர் செயலி காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப்பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவிகள் தேவைப்பட்டாலோ அது குறித்த செய்தியினை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும்.
 
● இந்த புதிய செயலி காவல்துறை நிர்வாகத்திலும், பொதுமக்கள் சேவையிலும் ஒரு மைல் கல்லாக அமையும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. இந்தியாவில் பின்வரும் எந்த மாநிலம் மருத்துவப் படிப்பை ஹிந்தியில் தொடங்கியுள்ள முதல் மாநிலம் ஆகும் ? 

அ) உத்தர பிரதேசம் 

ஆ) மகாராஷ்டிரா 

இ) மத்திய பிரதேசம் 

ஈ) அசாம்

விடை : (இ) மத்திய பிரதேசம் 

மத்திய பிரதேசத்தில் மருத்துவப் படிப்பை ஹிந்தியில் கற்பிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 

● இதையொட்டி முதல்கட்டமாக மருத்துவப் படிப்பின் உயிரி வேதியியல், உடற்கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் பாடங்கள் ஹிந்தியில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன. 

● மாநில தலைநகா் போபாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மொழிபெயா்க்கப்பட்ட பாடப் புத்தகங்களை அமைச்சா் அமித் ஷா வெளியிட்டாா்.

● குறிப்பு : நாட்டில் முதல் மாநிலமாக மருத்துவப் படிப்பை ஹிந்தியில் மத்திய பிரதேசம் தொடங்கியுள்ளது. இதுபோல இதர 8 மொழிகளில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

● 97 மருத்துவா்கள் குழு: பாடப் புத்தகங்களின் ஹிந்தி மொழிபெயா்ப்புப் பணிகளை 97 மருத்துவா்கள் அடங்கிய குழு மேற்கொண்டனா் என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநில மருத்துவக் கல்வி அமைச்சா் விஸ்வாஸ் சாரங் தெரிவித்தாா்.

3. நாட்டில் எத்தனை எண்ம வங்கிப் பிரிவுகளை பிரதமர் மோடி அண்மையில் தொடக்கி வைத்துள்ளார் ? 

அ) 50 

ஆ) 75 

இ) 100

ஈ) 125 

விடை : (ஆ) 75 

சாமானிய மக்கள் வாழ்க்கையை எளிமையாக்க 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

● டிஜிட்டல் வங்கிக் கிளைகளை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

● நாடு சுதந்திரமடைந்து 75-வது ஆண்டை குறிக்கும் விதமாக 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகள் தற்போது தொடங்கி வைக்கப் பட்டுள்ளன. இதில், காஷ்மீர் வங்கியின் இரண்டு டிஜிட்டல் வங்கிக் கிளைகளும் அடக்கம்.

● பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த வங்கிகள் இணைந்து நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் இந்த டிஜிட்டல் கிளைகளை அமைத்துள்ளன. 

● இப்புதிய கிளைகள் மூலம், சேமிப்பு கணக்கை தொடங்குதல், இருப்பு நிலை அறிதல், பாஸ்புக் பிரின்டிங் செய்தல், பணப் பரிமாற்றம், ஃபிக்ஸட் முதலீடு செய்தல், கடன் விண்ணப்பம், காசோலைகளுக்கான பணத்தை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை டிஜிட்டல் வடிவில் பொதுமக்கள் பெறலாம்.

4. இந்தியாவில் முதல்முறையாக அலுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் எங்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடக்கி வைத்தார் ? 

அ) புவனேசுவர் 

ஆ) சென்னை 

இ) மும்பை 

ஈ) அகமதாபாத் 

விடை : (அ) புவனேசுவர்

முதல்முறையாக உள்நாட்டிலேயே அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்ட ரயில் பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் இந்திய ரயில்வேயில் இணைக்கப்பட்டது.

● ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலை மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

● இதுகுறித்து அவா் கூறுகையில், ‘இந்திய ரயில்வேக்கு இலகுரக அலுமினிய ரயில் பெட்டிகள் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகும். இது நாட்டுக்கும் உள்நாட்டுமயமாக்கலை நோக்கிய பயணத்திலும் பெருமையான தருணமாகும். இந்த ரயில் பெட்டிகளால் 14,500 டன் கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்படும்.

● இந்த ரயிலால் அதிக பாரத்தை சுமந்து செல்ல முடியும். துருப்பிடிக்காமல் நீண்ட காலம் தாக்குப் பிடிக்கும். 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக் கூடியவை. 30 ஆண்டுகளுக்குப் பிறகும் புதுப்பொலிவுடன் காணப்படும். நாட்டின் பருவநிலை மாற்ற இலக்குகளை அடைய இந்த ரயில் உதவும்’ என்று தெரிவித்தாா்.

● வழக்கமான ரயில் பெட்டிகளைவிட ஒரு பயணத்தில் 180 டன் கூடுதல் சரக்கை அலுமினியம் ரயில் பெட்டிகளால் சுமந்து செல்ல முடியும். துருப்பிடிக்காத தன்மை, இந்த ரயில் பெட்டிகளின் பராமரிப்புச் செலவை குறைக்கும்’ என்று அலுமினியம் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் பங்குகொண்ட ஹிண்டால்கோ நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ரயில்வே துறை தெரிவித்துள்ளதாவது:

● சாதாரண ரயில் பெட்டிகளுடன் ஒப்பிடுகையில் அலுமினியம் ரயில் பெட்டிகள் 10 ஆண்டுகள் அதிக ஆயுளைக் கொண்டுள்ளன. எனினும் அவற்றின் தயாரிப்பு செலவு சாதாரண ரயில்களைவிட 35 சதவீதம் அதிகம் என்று தெரிவித்துள்ளது.

5. சீனாவின் அதிபராக எத்தனையாவது முறையாக ஷி ஜின்பிங் பதவி தொடரவுள்ளார் ? 

அ) இரண்டாவது 

ஆ) மூன்றாவது

இ) நான்காவது 

ஈ) ஐந்தாவது

விடை : (இ) மூன்றாவது 

● சீனாவின் அதிபராக மூன்றாவது  முறையாக ஷி ஜின்பிங் பதவி தொடரவுள்ளார்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. எகிப்தில் நடைபெறும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன் 2022 ல் ஆடவர் அணிகளுக்கான 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் 

அ) வெண்கலம்

ஆ) வெள்ளி 

இ) தங்கம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (இ) தங்கம் 

● இந்திய அணி : ருதராங்ஷ் பாட்டீல், கிரண் ஜாதவ், அர்ஜூன் பபுதா. 

● இதுவரை இந்தியா 5G, 1S, 5B என 11 பதக்கங்களுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது. 

7. ஃபெனெஸ்டா ஓபன் தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் யார் ? 

அ) மனீஷ் சுரேஷ்குமார்

ஆ) அரவிந்த் குமார்

இ) திக்விஜய் பிராத் சிங்

ஈ) டேனியல் யாதவ் 

விடை : (அ) மனீஷ் சுரேஷ்குமார் 

● போட்டி நடைபெற்ற இடம் : தில்லி

● மகளிர் ஒற்றையர் பிரிவில் வைதேகி சௌதரி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

8. தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் மகளிருக்கான 400மீ ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை யார் ?

அ) அர்ச்சனா 

ஆ) காயத்திரி 

இ) ரம்யா 

ஈ) சுபா வெங்கடேசன் 

விடை : (ஈ) சுபா வெங்கடேசன் 

IV. முக்கிய நிகழ்வுகள் 

9. International Day for the Eradication of Poverty 2022 ---------

● Ans : October 17 

● Dignity for all in Practice. 

Sunday, October 16, 2022

Current Affairs 2022 - October 16 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                     GK SHANKAR 
                  OCTOBER 16 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்க திருக்குறள் உள்ளிட்ட எத்தனை தமிழ் நூல்கள் பிரெய்லி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது ? 

அ) 46 

ஆ) 50 

இ) 55

ஈ) 60 

விடை : (அ) 46 

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்பை உலகெங்கும் கொண்டு சோ்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

● செம்மொழி நிறுவனத்தின் வளா்ச்சிப் பணியில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைவது பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி நூல் பதிப்புத் திட்டமாகும். 

● செம்மொழி நிறுவனத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகளுள் பாா்வை மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் தொல்காப்பியம், நன்னூல், திருக்கு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புானூறு ஆகியவை உள்பட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம் தற்போது நிறைவுபெறும் நிலையில் உள்ளது.

● இவற்றில் 41 நூல்கள் செவ்வியல் நூல்களாகும். இந்த நூல்கள் அனைத்திலும் எளிய உரையிலும், மூலபாடங்கள் எளிய சந்தி அமைப்பிலும் இடம்பெற்றிருக்கும். கடந்த மாா்ச் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டம் வரும் டிசம்பா் மாதம் நிறைவுற்றவுடன் அச்சிடப்படும் அனைத்து நூல்களும் பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருளாக பின்வரும் எதனை மத்திய அரசால் அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது ? 

அ) தஞ்சாவூர் வீணை 

ஆ) தஞ்சாவூர் கலைத்தட்டு 

இ) தஞ்சாவூர் ஓவியம் 

ஈ) நரசிங்கம் பேட்டை நாதஸ்வரம் 

விடை : (ஆ) தஞ்சாவூர் கலைத்தட்டு 

மத்திய அரசு இணையதளம் மூலம் நடத்திய பொது வாக்கெடுப்பில், இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருளாக தஞ்சாவூர் கலைத் தட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் கைவினைக் கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

● மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில், இந்தியாவில் சிறந்த கைவினைப் பொருட்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக பொது வாக்கெடுப்பை இணையதளம் மூலம் நடத்தியது.

● இந்தப் போட்டியில் இந்தியாவில் புவிசார் குறியீடு பதிவு பெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றன. இதில், கைவினைப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், இயற்கைப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என ஐந்து வகையான பொருட்கள் இடம்பெற்றது. இதில் அதிக வாக்குகளைப் பெற்று கைவினை பொருளுக்கான பிரிவில் தஞ்சாவூர் கலைத்தட்டு முதலிடத்தை பெற்றுள்ளது.

● இதையடுத்து கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டு அமைச்சகத்திடம் அதற்கான சான்றிதழை மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

● குறிப்பு : கலைநயமிக்க தஞ்சாவூர் கலைத் தட்டுக்கு 2006-ம் ஆண்டு புவிசார் குறியீடு பதிவுக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2007 புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்தது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022 என்ற இருநாள் நிகழ்ச்சியை தில்லி பூசா நிறுவனத்தில் தொடங்கி வைக்கவுள்ளவர் ? 

அ) திரௌபதி முர்மு 

ஆ) எஸ். ஜெய்சங்கர் 

இ) நரேந்திர மோடி 

ஈ) ராஜ்நாத் சிங் 

விடை : (இ) நரேந்திர மோடி 

பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ என்ற இரு நாள் நிகழ்ச்சியை தில்லி பூசா நிறுவனத்தில் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (அக்டோபா் -17) தொடங்கிவைக்கிறாா்.

● இந்த நிகழ்வில் பிரதமரின் கிஸான் திட்டத்தின் 12-ஆவது தவணையான ரூ. 16,000 கோடியை பிரதமா் மோடி விடுவிக்கிறாா்.

● மத்திய வேளாண்மைத் துறையும், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகமும் இணைந்து ‘பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ நிகழ்ச்சியை இரு நாட்கள் நடத்துகின்றன.

● இந்த மாநாட்டில் பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் 12-ஆவது தவணையாக, ரூ. 16,000 கோடியை நேரடி பணப் பரிவா்த்தனையின் மூலம் மின்னணு முறையில் பிரதமா் விடுவிப்பாா்.

● மத்திய வேளாண்மை துறையின் ‘பிரதமரின் விவசாய கௌரவ நிதி‘ திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்ததிட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000, மூன்று தவணையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு (11 தவணைகளில்) இதுவரை ரூ. 2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

● இந்த நிகழ்ச்சியில் ‘ஒரே நாடு, ஒரே உர திட்ட’த்தையும் பிரதமா் தொடங்கிவைக்கிறாா். பாரத் என்ற ஒரே பெயரில் உரங்களை சந்தைப்படுத்துவதற்கு வசதியாக பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் எம்ஓபி ஆகிய உர பைகளையும் இந்த திட்டத்தின் கீழ் பிரதமா் அறிமுகப்படுத்துவாா்.

● இதே நிகழ்ச்சியில் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் 600 ‘பிரதமரின் வளமை மையங்களை‘ பிரதமா் திறந்துவைப்பாா்.

● நாட்டில் தற்போதுள்ள 2.7 லட்சம் சில்லறை உர விற்பனையகங்கள் படிப்படியாக ‘பிஎம் வளமை மையங்கள்‘ என மாற்றப்படும். விவசாயிகளின் பல்வேறு தேவைகளை இந்த மையங்கள் பூா்த்தி செய்யும். விதைகள், மண், உரங்கள் பரிசோதனைக்கான வசதிகள் திட்டங்கள் குறித்த தகவல்கள் முதலியவற்றை இந்த மையங்கள் வழங்கும்.

● இந்த மாநாட்டில் வேளாண் புத்தொழில் முனைவோா் கண்காட்சியையும் பிரதமா் திறந்து வைப்பாா். சுமாா் 300 நிறுவனங்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்துகிறது என்றாா் தோமா்.

4. ஆசிய கடலோர காவல்படை முகமை தலைவர்களில் 18 ஆவது கூட்டம் பின்வரும் எங்கு நடைபெற்றது ? 

அ) உத்தரப்பிரதேசம் 

ஆ) மகாராஷ்டிரா 

இ) தமிழ்நாடு 

ஈ) தில்லி 

விடை : (ஈ) தில்லி 

● ஆசிய கடலோர காவல்படை முகமையில் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பிரான்ஸ், இந்தோனேசியா, மலேசியா, மாலத்தீவுகள், பாகிஸ்தான், சிங்கப்பூா், இலங்கை உள்பட 23 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

● குறிப்பு : இந்தோ-பசிபிக் பகுதியில் வெளிப்படையான, சுதந்திரமான விதிகள் அடிப்படையில் கடல் எல்லைகளை வரையறுக்க வேண்டும் என்றார் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். 

5. சர்வதேச பட்டினி குறியீடு 2022 அறிக்கையில் இந்தியா இடம் பிடித்துள்ளது ? 

அ) 100

ஆ) 107 

இ) 109 

ஈ) 121 

விடை : (ஆ) 107 

நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 

● 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. 

● சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. 

● அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

● குறிப்பு : கடந்த ஆண்டில் 101-வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது

III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் போல்வால்ட் பிரிவில் தங்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை யார் ? 

அ) ரோஸி மீனா 

ஆ) பவித்ரா 

இ) ரவீணா 

ஈ) வந்தனா 

விடை : (அ) ரோஸி மீனா

● போல்வால்ட் பிரிவில் ரோஸி மீனா பால்ராஜ் புதிய தேசிய சாதனையுடன் (4.21மீ) தங்கம் வென்றுள்ளார்

மகளிர் 20 கி.மீ. நடை ஓட்டத்தில் ரவீணா புதிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.

7.. ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி 2022 ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி ? 

அ) வங்கதேசம் 

ஆ) ஆஸ்திரேலியா

இ) இங்கிலாந்து 

ஈ) இந்தியா 

விடை : (ஈ) இந்தியா 

● குறிப்பு : இதுவரை 8 முறை நடைபெற்ற ஆசிய மகளிர் டி20 கோப்பை போட்டிகளில் இந்தியா 7 ஆவது முறையாக சாம்பியன் ஓட்டத்தை வென்றுள்ளது. 

IV. முக்கிய தினங்கள் 

8. World Food Day 2022 -------------

● Ans : October 16 

● Theme(2022) : Leave No One Behind .




Friday, October 14, 2022

Current Affairs 2022 - October 14 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                   OCTOBER 14 / 2022

I. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் : 

1. சர்வதேச நாடாளுமன்றங்களுக்கு இடையேயான யூனியனின் செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர் ? 

அ) அபராஜிதா சாராங்கி 

ஆ) வினி மஹாஜன் 

இ) சிவ்தாஸ் மீனா 

ஈ) அஜிஷா சிங் 

விடை : (அ) அபராஜிதா சாரங்கி 

மக்களவை பாஜக உறுப்பினரான அபராஜிதா சாரங்கி, சா்வதேச நாடாளுமன்றங்களுக்கிடையேயான யூனியனின் செயற்குழு உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டாா். ருவாண்டாவில் நடைபெற்று வரும் இந்த யூனியன் கூட்டத்தில் இந்தத் தோ்தல் நடைபெற்றதாக மாநிலங்களவை அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

● சுமாா் 178 நாடுகள் உறுப்பினா்களாக கொண்டு கடந்த 133 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் சா்வதேச நாடாளுமன்றங்களுக்கிடையேயான யூனியனின்(ஐபியூ) 145 -ஆவது பேரவைக் கூட்டம் ருவாண்டா தலைநகா் கிகாலியில் நடைபெற்று வருகிறது. 

● இதில் இந்திய நாடாளுமன்றம் சாா்பில் மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனா். இந்த கூட்டத்திற்கிடையே ஐபியூ-இன் செயற்குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் கிகாலி கூட்டத்தில் நடைபெற்றது.

● இதில் பல்வேறு குழு நாடுகளின் உறுப்பினா் தோ்வு செய்யப்படுவதில் ’ஆசிய பசிபிக் குழும’ நாடுகளில் இருந்து ஐபியூ செயற்குழுவிற்கு ஒரு உறுப்பினரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த நாடுகளைச் சோ்ந்த உறுப்பினா்களிடம் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்றது. 

● இதில் போட்டியிட்ட இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையின் பாஜக உறுப்பினரான அபராஜிதா சாரங்கி(படம்) பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று செயற்குழுவிற்கு தோ்வாகியிருப்பதாக மாநிலங்களவை அலுவலகம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் மேலும் எத்தனை கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் ? 

அ) ரூ. 4,200 கோடி 

ஆ) ரூ. 3,800 கோடி 

இ) ரூ. 2,700 கோடி

ஈ) ரூ. 1,300 கோடி 

விடை : (ஆ) ரூ. 3,800 கோடி 

தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் மேலும் ரூ.3,800 திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

● இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின்ஒரு பகுதியாக தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சாா்பில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

●தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ.1,500  கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கடன் பத்திரங்கள் 24 ஆண்டுகளில் முதிா்ச்சியடையும். இவை தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும். இதன்மூலம் முதலீட்டாளா்கள் முதலீடு செய்யவும் வா்த்தகம் செய்யவும் முடியும்.

● தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இதுவரை ரூ.8,000 கோடிக்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது. மேலும் ரூ.3,800 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

● உள்கட்டமைப்பு முதலீட்டு நிதியம் என்பது பரஸ்பர நிதி போல உருவாக்கப்படும். இதன்மூலம் முதலீட்டாளா்களிடம் இருந்து பணத்தைப் பெற்று முதலீடு செய்து, ஒரு காலகட்டத்துக்குப் பிறகு பணத்தை மீண்டும் ஈட்டி திரும்ப அளிக்க முடியும்.

● உலக அளவில் மிகவும் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் இந்த வளா்ச்சியில் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை சாலைகள் மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் வலுவாக இணைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

● இது தவிர அனைத்துவிதமான காலநிலைகளிலும் முக்கிய ஆன்மிகத் தலங்கள், சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வரும் வகையில் சாலைகள் மேம்படுத்தப்படும். இந்தியாவில் மக்களின் போக்குவரத்துக்கான செலவைக் குறைப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

3. நாட்டின் எத்தனையாவது வந்தே பாரத் ரயில் சேவையை உனா - தில்லி இடையே பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் ? 

அ) 3 ஆவது

ஆ) 4 ஆவது 

இ) 5 ஆவது 

ஈ) 6 ஆவது 

விடை : (ஆ) 4 ஆவது

ஹிமாசல பிரதேசத்தில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் நான்காவது ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.

● நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சுமாா் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவை கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

● வந்தே பாரத் விரைவு ரயிலின் 3-ஆவது ரயில் சேவையை குஜராத்தின் காந்தி நகருக்கும் மகாராஷ்டிரத்தின் மும்பைக்கும் இடையே கடந்த மாதம் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.

● இந்நிலையில், 4-ஆவது ரயில் சேவையை ஹிமாசல பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்தில் இருந்து தில்லி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கிவைத்தார். 

4. இந்தியாவின் முதல் 4.20 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி இயந்திரம் எங்கு நிறுவப்பட்டுள்ளது ? 

அ) சென்னை 

ஆ) கன்னியாகுமரி 

இ) தேனி 

ஈ) திருநெல்வேலி 

விடை : (ஈ) திருநெல்வேலி 

● திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் இந்தியாவின் முதல் 4.20 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

● இது மிகப்பெரிய உற்பத்தி திறன் கொண்ட ஒற்றை அலகைக் கொண்டது.

● இதுவரை, ஆரல்வாய்மொழிக் கணவாயில் நிறுவப்பட்டுள்ள 3,000 தனிக் காற்றாலை அமைப்புகள் 2 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது ஆகும். 

II. விளையாட்டு நிகழ்வுகள் 

5. இந்திய லீக் கிரிக்கெட்டின் மகளிர் ஐபிஎல் போட்டியின் அறிமுக சீசன் பின்வரும் எந்த ஆண்டு நடைபெறவுள்ளது ? 

அ) 2026

ஆ) 2025 

இ) 2024 

ஈ) 2023 

விடை : (ஈ) 2023 

● இந்திய லீக் கிரிக்கெட்டின் மகளிர் ஐபிஎல் போட்டியின் அறிமுக சீசன் அடுத்த ஆண்டு மார்ச்சில் நடைபெறவுள்ளது. 

6. எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் மகளிருக்கான 25 மீ பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (இ) வெண்கலம்

● இந்திய அணி : ஈஷா சிங், நாம்யா கபூர், விபூகி பாட்டியா. 

III. முக்கிய தினங்கள் 

7. பின்வரும் எந்த மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது ? 

அ) செப்டம்பர் 

ஆ) அக்டோபர் 

இ) நவம்பர் 

ஈ) டிசம்பர் 

விடை : (ஆ) அக்டோபர் 

● இது அமெரிக்கப் புற்றுநோய் சங்கத்தால் 1985 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 

● இது மார்பகப் புற்றுநோயைப் பற்றி மக்களுக்கு கற்பிப்பதற்கான ஒரு வருடாந்திரப் பிரச்சாரமாகும்.

8. World Egg Day 2022 ----------

● Ans : October 14

● Theme (2022) : Egg for a Better life. 

9. World Standards Day 2022 ---------

● Ans : October 14 

● Theme (2022) : Shared Vision for a Better World.


Thursday, October 13, 2022

Current Affairs 2022 - October 13 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                   OCTOBER 13 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயங்கள் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது ? 
அ) கேரளா

ஆ) தமிழ்நாடு

இ) உத்தர பிரதேசம்

ஈ) ராஜஸ்தான் 

விடை : (ஆ) தமிழ்நாடு 

● அறிவிப்பு : தமிழக அரசு 

● அழிந்து வரும் தேவாங்கு இனத்தைப் பாதுகாக்கும் வகையில் கரூர் , திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டர் பரப்பிலான நிலத்தை கடவூர் தேவாங்கு சரணாலயமாக அறிவித்து அறிவிக்கை செய்துள்ளது.

● காரணம் : தேவாங்கு , இரவு நேர பாலூட்டி வகையைச் சேர்ந்தது. 
¤ இவை பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை செய்கிறது.
¤ இதனால் சுற்றுச்சூழல் (ம) நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் தேவாங்குகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

● குறிப்பு : இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச மையமானது தேவாங்கை அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் இணைநதுள்ளது.

2. தமிழகத்தில் குட்டி காவலர் எனும் மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) ஆர்.என். ரவி

ஆ) மு.க.ஸ்டாலின் 

இ) பொன்மூடி 

ஈ) மா. சுப்பிரமணியன் 

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

குட்டி காவலர்' மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

● முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர், உயிர் அறக்கட்டளை இணைந்து 'குட்டி காவலர்' மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

● நோக்கம் : இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பித்து அவர்களை சாலைப் பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவதே குட்டி காவலர் திட்டத்தின் நோக்கமாகும். 

3. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான தனி இதழ்களை வெளியிட்டவர் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின்

ஆ) ஆர்.என்.ரவி

இ) பொன்முடி 

ஈ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

விடை : (அ) மு.க.ஸடாலின் 

பள்ளி மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’ மற்றும் ‘தேன்சிட்டு’, ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ ஆகிய இதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அத்துடன், பாரதி இளங்கவிஞர் விருதை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

● அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பருவஇதழ்களை பள்ளிக்கல்வித் துறை தொடங்கியுள்ளது. அதன்படி, 4 மற்றும் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ என்ற இதழும் மாதமிரு முறை இதழாக வெளியிடப்படுகிறது. 

● குழந்தைகளின் ஆக்கங்களோடு, அவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், செய்திகள், சுவையான கதைகள் போன்றவை இந்த இதழ்களில் வெளியிடப்படும். 

● இவை மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கென தனியே ‘கனவு ஆசிரியர்’ என்கிற மாதாந்திர இதழும் வெளியிடப்படுகிறது. ஆசிரியர்களின் படைப்புகளோடும் வகுப்பறைஅனுபவங்கள், அவர்களுக்கான சிறப்புக் கட்டுரைகளோடு ‘கனவு ஆசிரியர்’ இதழ் வெளியாக உள்ளது. ‘ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு’, ‘கனவு ஆசிரியர்’ ஆகிய 3 இதழ்களையும் முதல்வர் ஸ்டாலின்நேற்று வெளியிட்டார். பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டனர்.

● பாரதி இளங்கவிஞர் விருது: மேலும், மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவாக செப். 11-ம் தேதி அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘மகாகவிநாள்’ கடைபிடிக்கப்படும் என்றும், இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்திமாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் ‘பாரதி இளங்கவிஞர் விருது’ வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். 

● அதன்படி, மகாகவி பாரதியார் நினைவு தின கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற சேலம், அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் பா.பிரவீன் மற்றும் தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ர.சைனி ஆகியோருக்கு ‘பாரதி இளங்கவிஞர் விருது’ மற்றும் பரிசுத் தொகையாக தலா ரூ.1 லட்சம் வழங்கி, வாழ்த்தினார். 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை கடந்த இரண்டு இரண்டு ஆண்டுகளாக குறைந்த விலையில் விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய எத்தனை கோடியை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) ரூ.31,000 கோடி

ஆ) ரூ. 28,000 கோடி 

இ) ரூ. 26,000 கோடி 

ஈ) ரூ. 22,000 கோடி

விடை : (ஈ) ரூ.22,000 கோடி 

அமைச்சரவை ஒப்புதல்கள் : 2020, ஜூன் முதல் 2022, ஜூன் வரையில் சந்தை விலையைவிட குறைவான விலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பீட்டை ஈடுசெய்ய ஒருமுறை தொகையாக ரூ.22,000 கோடி வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

● இந்தத் தொகை ஐஓசி, பிபிசிஎல், எச்பிசிஎல் ஆகிய மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்.

● ரயில்வே ஊழியா்களுக்கு போனஸ்: ரயில்வே ஊழியா்களுக்கு 78 நாள்களுக்கு இணையான உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்கியதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

● குஜராத் துறைமுகத்தில் கன்டெய்னா் முனையம்: அரசு - தனியாா் பங்கேற்பு முறையின் கீழ், குஜராத்தில் உள்ள தீனதயாள் துறைமுகத்தில் கன்டெய்னா் முனையம் அமைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்துக்கு ரூ.4,234.64 கோடி செலவாகும்.

● கூட்டுறவு சங்க சட்டத்தில் திருத்தம்: பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

● வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு, தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை அடுத்த நான்கு ஆண்டுகளில் ஏற்படுத்தும் வகையில் ரூ.6,600 கோடியில் புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

4. இந்தியாவில் மாநில அரசு பகல் நேர பள்ளிகளுக்கான தரவரிசையில் பின்வரும் எந்த மாநில பள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது ? 

அ) தில்லி

ஆ) தமிழ்நாடு 

இ) மணிப்பூர்

ஈ) ஜார்க்கண்ட் 

விடை : (அ) தில்லி 

கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான "உலக கல்வி' இணையதளம் ஒவ்வோர் ஆண்டும் பள்ளிகளுக்கான தரவரிசையை வெளியிட்டு வருகிறது.

● இதன் சமீபத்திய தரவரிசையில், தில்லி அரசு நடத்தும் துவாரகா செக்டார் 10-இல் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா பள்ளி முதலிடத்தையும், யமுனா விஹாரில் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன. 

● குறிப்பு : தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள ஐந்து பள்ளிகள் தில்லியைச் சேர்ந்தவை ஆகும்.

5. இந்தியா மற்றும் பின்வரும் எந்த நாடுக்கு இடையே எண்ணெய் (ம) எரிவாயு துறைகளில் 4 மிகப்பெரிய ஒப்பந்தங்கள் அண்மையில் கையொப்பமாகியுள்ளது ? 

அ) ரஷ்யா 

அ) ஜப்பான் 

இ) அமெரிக்கா 

ஈ) ஆப்பிரிக்கா 

விடை : (இ) அமெரிக்கா 

பருவநிலை நடவடிக்கைகள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பிரச்னைகளுக்குத் தீா்வு காண இந்தியாவும் அமெரிக்காவும் தனியாா் துறைகளின் பலத்தை எந்த அளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதை வெளிப்படுத்தும்விதமாக, இரு நாடுகளிடையே எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் 4 மிகப்பெரிய ஒப்பந்தங்கள் புதன்கிழமை கையொப்பமாகின.

● இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கும், எரிவாயு நொதிப்பு தொழில்நுட்பத்தில் சா்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவைச் சோ்ந்த உயிரிதொழில்நுட்ப நிறுவனமான லான்ஸா டெக் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது. லான்ஸா ஜெட் நிறுவனம் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தின் மூலமாக நீடித்த விமான எரிவாயு உற்பத்தி செய்வதற்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

● வாகனப் புகை உமிழ்வு அளவீடு மற்றும் குறைப்புக்கு தீா்வு காண்பது தொடா்பாக கெய்ல் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான அவந்த்திகா எரிவாயு நிறுவனத்துக்கும் பக்கொ் ஹக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

● அதுபோல, என்ஜினீயா் இந்திய நிறுவனத்துக்கும் அமெரிக்காவின் யுஓபி நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

● நான்காவதாக பிபிசிஎல் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனத்துக்கும், பக்கொ் ஹக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. கூற்று : இந்திய ராணுவத்தின் குறிப்பிட்ட பிரிவுகளுக்கான மின்சார வாகனங்களை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

காரணம் : கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் அரசின் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

இ) கூற்று சரி , காரணம் தவறு 

ஈ) கூற்று தவறு , காரணம் சரி 

விடை : (ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

ராணுவத்தின் குறிப்பிட்ட பிரிவுகளுக்காக மின்சார வாகனங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

● காா்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் அரசின் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

● இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ராணுவத்தின் குறிப்பிட்ட பிரிவுகளில் இலகுரக வாகனங்களில் 25 சதவீதமும், பேருந்துகளில் 38 சதவீதமும், மோட்டாா் சைக்கிள்களில் 48 சதவீதமும் மின்சார வாகனங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 

● காா்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையில் எங்கெல்லாம் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தலாம் என்பதற்கான செயல்திட்டம் தயாா் செய்யப்பட்டுள்ளது.

7. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டுக்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) ஆதர்ஷ் ஸ்வைகா 

ஆ) சிபி ஜார்ஜ் 

இ) அவ்தார் சிங் 

ஈ) கே.ஜி . பாலகிருஷ்ணன் 

● தற்போது சிபி ஜார்ஜ் இந்திய தூதராக உள்ளார், விரைவில் ஆதர்ஷ் ஸ்வைகா பொறுப்பேற்கவுள்ளார். 

● இவர் தற்போது தில்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சக தலைமையகத்தில் இணைச் செயலராக பணியாற்றி வருகிறார்.

● மேலும் கினியா குடியரசுக்கான அடுத்த இந்திய தூதராக அவ்தார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 

8. சர்வதேச செலாவணி நிதியம் (ம) உலக வங்கியின் ஆண்டு கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்றவர் யார் ? 

அ) நரேந்திர மோடி 

ஆ) எஸ். ஜெய்சங்கர் 

இ) அமித் ஷா 

ஈ) நிர்மலா சீதாராமன் 

விடை : (ஈ) நிர்மலா சீதாராமன் 

அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) நீடித்த பொருளாதார வளா்ச்சி, உயா் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவும் வகையில் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

● இந்திய பொருளாதாரம் சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்னைகளில் எரிசக்தி விலை உயா்வும் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. குஜராத்தில் நடைபெற்ற 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் 2022 ல் தமிழ்நாடு எத்தனை பதக்கங்களுடன் நிறைவு செய்தது ? 

அ) 88

ஆ) 74

இ) 116

ஈ) 66

விடை : (ஆ) 74 

நாட்டிலுள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரேதங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்ற இப்போட்டி கடந்த செப்டம்பா் 20 முதல் அக்டோபா் 12 வரை 23 நாள்கள் குஜராத்தின் 6 நகரங்களில் விமரிசையாக நடைபெற்று வந்தது.

● இப்போட்டியில் தொடா்ந்து 4-ஆவது முறையாக சா்வீசஸ் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தமிழகம் 5-ஆம் இடம் பிடித்தது.

● போட்டியின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த சா்வீசஸ் அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது. மகாராஷ்டிரம், ஹரியாணா முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன. போட்டி முழுவதுமாக சிறப்பாகச் செயல்பட்ட அணியாக மகாராஷ்டிரம் தோ்வானது.

சிறந்த வீரா், வீராங்கனை

¤ கேரளத்தைச் சோ்ந்த நீச்சல் வீரா் சஜன் பிரகாஷ், இப்போட்டியில் 5 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தமாக 8 பதக்கங்கள் வென்று சிறந்த வீரராகத் தோ்வானாா். 

¤  கா்நாடக நீச்சல் வீராங்கனை ஹாஷிகா ராமச்சந்திரா 6 தங்கம், 1 வெண்கலத்துடன் போட்டியிலேயே சிறந்த வீராங்கனையாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

● மொத்தமாக பதக்கங்கள் :  1,249

● தங்கம் 382

● வெள்ளி 381

● வெண்கலம் 486

பதக்கப்பட்டியல் (டாப் 05)

¤ சா்வீசஸ் : 61G, 35S,  32B, = 128 M

¤ மகாராஷ்டிரம் : 39G, 38S, 63B = 140 M

¤ ஹரியாணா:  38G,  38S, 40B = 116M

¤ கா்நாடகம்:  27G, 23S, 38B = 88M

¤ தமிழகம்:  25G, 22S,  27B =  74M

IV. முக்கிய நிகழ்வுகள் 

10. International Day for Disaster Risk Reduction 2022 ---------

● Ans : October 13

● Theme (2022) : Substantially increase the availability and access to multi-hazard early warning systems and disaster risk information and assessment for people by 2030.

11. World Sight Day 2022 ----------- 

● Ans : October 13

● Theme (2022) : Love your eyes 


Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...