● அதன் ஒரு பகுதியாக ரயில்வே நிர்வாகம் சார்பில் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு தற்காலிகமாக திருப்பூரை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தியாகி திருப்பூர் குமரன் ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் பெயர் பலகை வைக்கப் பட்டுள்ளது. மேலும் திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில் ரயில் நிலைய வளாகத்தில் திருப்பூர் குமரன் புகைப்படக் கண்காட்சி மற்றும் செல்பி பூத் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
Thursday, July 21, 2022
Current Affairs 2022 - July 20 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4
● அதன் ஒரு பகுதியாக ரயில்வே நிர்வாகம் சார்பில் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு தற்காலிகமாக திருப்பூரை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தியாகி திருப்பூர் குமரன் ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் பெயர் பலகை வைக்கப் பட்டுள்ளது. மேலும் திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில் ரயில் நிலைய வளாகத்தில் திருப்பூர் குமரன் புகைப்படக் கண்காட்சி மற்றும் செல்பி பூத் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
Wednesday, July 20, 2022
Current Affairs 2022 - July 19 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4
● சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திருநாள் விழாவுக்கு தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினாா்.
● இந்த விழாவில், எழுத்தாளா்கள், தமிழறிஞா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
● இலக்கிய மாமணி விருது எழுத்தாளா்கள் கோணங்கி, இரா. கலியபெருமாள், மறைந்த கு.சின்னப்ப பாரதி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சின்னப்ப பாரதிக்கான விருதினை அவரது குடும்பத்தினா் பெற்றனா். இந்த விருது ரூ.5 லட்சத்துக்கான காசோலை, தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவை அடங்கியதாகும்.
● 2021-ஆம் ஆண்டுக்கான தமிழ்த் தென்றல் திரு.வி.க.விருது கயல் தினகரன், கபிலா் விருது பாவலா் கருமலைத் தமிழாழன் என்கிற கி. நரேந்திரன், உ.வே.சா. விருது மருத்துவா் இரா. கலைக்கோவன், அம்மா இலக்கிய விருது முனைவா் மு. சற்குணவதி, காரைக்கால் அம்மையாா் விருது முனைவா் இரா. திலகவதி சண்முகசுந்தரம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது ரூ.2 லட்சத்துக்கான காசோலை தங்கப்பதக்கம், தகுதி உரை ஆகியவை அடங்கியது.
4. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு மன அழுத்தம் (ம) குழப்பங்கள் இருந்தால் ---------- என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது ?
அ) 104
ஆ) 111
இ) 1441
ஈ) 1331
விடை : (அ) 104
● இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு மன அழுத்தம் (ம) குழப்பங்கள் இருந்தால் 104 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
● அறிவிப்பு : தமிழக நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
II. தேசியச் செய்திகள்
5. மேற்கு வங்க மாநிலத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ளவர் யார் ?
அ) ஜகதீப் தன்கர்
ஆ) இல. கணேசன்
இ) ஆர். என். ரவி
ஈ) தமிழிசை சௌந்தரராஜன்
விடை : (ஆ) இல. கணேசன்
● குறிப்பு : மணிப்பூர் ஆளுநராக உள்ள இல.கணேசன் கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்க ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.
6.நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் ஒட்டுமொத்தமாக எத்தனை சதவீத வாக்கு பதிவாகியுள்ளது ?
அ) 75%
ஆ) 50%
இ) 99%
100%
விடை : (இ) 99%
● ஜூலை 21 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
● புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
III. விளையாட்டுச் செய்திகள்
7. தென் கொரியாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் ஸ்கீட் தனிநபர் பிரிவில் இந்தியாவின் மைராஜ் அகமது கான வென்றுள்ள பதக்கம் ?
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) மேற்கண்ட ஏதுமில்லை
● இதன் மூலம், இப்போட்டியின் இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்து அவர் வரலாறு படைத்திருக்கிறார். அவருக்கும் இப்பிரிவில் இது முதல் தங்கமாகும்.
● இப்போட்டியில் மகளிர் அணிகளுக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் அஞ்சும் முட்கில்/ஆஷி செüக்சி/சிஃப்ட் கெüர் சம்ரா கூட்டணி வெண்கலம் வென்றுள்ளார்.
● பதக்கப் பட்டியலின் தற்போதைய நிலவரப்படி, இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.
IV. முக்கிய தினங்கள்
8. சர்வதேச நிலவு தினம் ( International Moon Day ) 2022 ?
அ) ஜூலை 16
ஆ) ஜூலை 20
இ) ஜூலை 19
ஈ) ஜூலை 17
விடை : (ஆ) ஜூலை 20
Monday, July 18, 2022
Current Affairs 2022 - July 18 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4
Current Affairs 2022 - July 17 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4
Saturday, July 16, 2022
Current Affairs 2022 - July 16 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4
● இதில், ஒட்டுமொத்த உயா்கல்வி நிறுவனங்கள் அளவில் சென்னை ஐஐடி நான்காவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு ஐஐஎஸ்சி, மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி, கான்பூா் ஐஐடி, காரக்பூா் ஐஐடி, ரூா்கி ஐஐடி, குவாஹாட்டி ஐஐடி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இதில் தில்லி எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) 9-ஆவது இடத்தையும், தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் 10-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
● பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அளவிலான தரவரிசைப் பட்டியல்களில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடம் பிடித்துள்ளது.
● பொறியியல் கல்வி நிறுவனங்கள் அளவிலான தரவரிசைப் பட்டியலில் சென்னை, மும்பை, கான்பூா், காரக்பூா், ரூா்கி, குவாஹாட்டி, ஹைதராபாத் ஐஐடிக்கள் முன்னிலை வகிக்கின்றன. இந்தப் பட்டியலில் கடந்த முறை 9-ஆம் இடம் பிடித்த திருச்சி என்ஐடி, இம்முறை 8-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சூரத்கல் என்ஐடி தொடா்ந்து 10-ஆவது இடம் வகிக்கிறது.
● சென்னை மாநிலக் கல்லூரிக்கு மூன்றாமிடம்: கல்லூரிகள் அளவிலான தரவரிசைப் பட்டியலைப் பொருத்தவரை தில்லி மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. கடந்த முறை 9-ஆம் இடம் பிடித்திருந்த தில்லி ஹிந்து கல்லூரி, இம்முறை 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
● கடந்த முறை 7-ஆவது இடம் பிடித்திருந்த சென்னை மாநிலக் கல்லூரி இம்முறை 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
● கடந்த முறை 3-ஆவது இடத்திலிருந்து சென்னை லயோலா கல்லூரி, தற்போது 4-ஆவது இடத்துக்கு சென்றுள்ளது.
● அதுபோல, கடந்த முறை 2-ஆம் இடம் பிடித்திருந்த தில்லி லேடி ஸ்ரீராம் மகளிா் கல்லூரி இம்முறை 5-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
● மேலாண்மை கல்வி நிறுவனங்கள் பட்டியலில் அகமதாபாத் ஐஐஎம், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பட்டியில் தில்லி எய்ம்ஸ், பல் மருத்துவக் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் சென்னை சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் ஆகியவை முதலிடங்களைப் பிடித்துள்ளன.
II. தேசியச் செய்திகள்
2. சுதந்திரத்தின் அமுதப் பெரு விழாவை ( 75 ஆவது ஆண்டு ) கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் எத்தனை மரக்கன்றுகள் நடும் இயக்கத்திற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ?
அ ) 100 லட்சம்
ஆ) 125 லட்சம்
இ) 50 லட்சம்
ஈ) 75 லட்சம்
● சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை (75 -ஆவது ஆண்டு) கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் 75 லட்சம் மரக்கன்றுகள் நடும் இயக்கத்திற்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
● என்ஹெச்ஏ என்கிற இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இதற்கான பணிகளை மேற்கொள்ளும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
● சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை அமுதப் பெருவிழாவாக மத்திய அரசின் அனைத்து துறைகளும் கொண்டாடி வருகிறது. இந்த வகையில், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளையொட்டியுள்ள பகுதிகளில் மரக்கன்றுக்கள் நட திட்டமிட்டுள்ளது.
3. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக :
1) குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி க்களுக்கு பச்சை நிறத்தில் வாக்குச்சீட்டு வழங்கப்படவுள்ளது
2) எம்.எல்.ஏ க்களுக்கு மஞ்சல் நிறத்தில் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டவுள்ளது .
● குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி க்களுக்கு பச்சை நிறத்திலும் (ம) எம்.எல்.ஏ க்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டவுள்ளது .
● குறிப்பு : நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் மொத்த உறுப்பினா்களின் தற்போதைய எண்ணிக்கை 776. அதில், பாஜகவுக்கு மட்டும் 393 உறுப்பினா்கள் உள்ளனா். ஓா் உறுப்பினரின் வாக்கு மதிப்பு 700-ஆக உள்ளது. நாடு முழுவதும் 4,033 எம்எல்ஏக்கள் உள்ளனா். மாநில மக்கள்தொகையின் அடிப்படையில் அவர்களின் வாக்குகள் மதிப்பிடப்படுகின்றன.
4. ஷாங்காய் ஒத்துழைப்பு (SCO ) அமைப்பின் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான கலாசார, சுற்றுலாத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய நகரம் எது ?
அ) ராமநாதபுரம்
ஆ) வாரணாசி
இ) அகமதாபாத்
ஈ) கொல்கத்தா
விடை : (ஆ) வாரணாசி
● இந்தியாவின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வாராணசி நகரம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) கலாசார மற்றும் சுற்றுலாத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
● எஸ்சிஓ அமைப்பின் 2022-23-ஆம் ஆண்டுக்கான கலாசார, சுற்றுலாத் தலைநகரமாக வாராணசி அறிவிக்கப்பட்டுள்ளது.
● ஒவ்வோா் ஆண்டும் இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் நகரங்கள் சுழற்சி முறையில் சுற்றுலாத் தலைநகரமாக அறிவிக்கப்படும்.
● அந்த வரிசையில் முதலாவது சுற்றுலாத் தலைநகரமாக இந்தியாவின் பழைமையான நகரங்களில் ஒன்றான வாராணசி அறிவிக்கப்பட்டுள்ளது.
● எஸ்சிஓ நாடுகளின் தலைவா்கள் மாநாடு, வரும் செப்டம்பரில் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டுக்குப் பிறகு எஸ்சிஓ அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கும். அடுத்த ஆண்டு நடைபெறும் மாநாட்டையும் இந்தியா தலைமையேற்று நடத்தும் என்றாா் அவா்.
● சீனாவின் பெய்ஜிங் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷியா, கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்களில் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
5. இந்திய பிரதமரால் திறந்து வைக்கப்பட்டுள்ள அக்சய பாத்திரா மதிய உணவகம் எங்கு அமைந்துள்ளது ?
அ) மும்பை
ஆ) மதுரை
இ) வாரணாசி
ஈ) திருச்சூர்
விடை : (இ) வாரணாசி
● அக்சய பாத்திரா மதிய உணவகம் வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ளது.
● அக்சய பாத்ரா அறக்கட்டளையானது, மத்திய அரசாங்கத்தின் PM POSHAN திட்டத்துடன் இணைந்து உலகின் மிகப்பெரிய அளவிலான பள்ளிகளுக்கு உணவு வழங்கீட்டுத் திட்டங்களில் ஒன்றை செயல்படுத்தி வருகிறது .
III. சர்வதேச செய்திகள்
6. இலங்கையின் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளவர் யார் ?
அ) ரணில் விக்ரமசிங்க
ஆ) மகிந்த ராஜபட்ச
இ) பசில் ராஜபகச
ஈ) கோத்தபய ராஜபட்ச
விடை : (அ) ரணில் விக்ரமசிங்க.
7. ரஷியாவுக்கு எதிரான அடுத்த பொருளாதாரத் தடைப் பட்டியலில் கீழ்க்கண்ட எந்த உலோகம் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது ?
அ) வெள்ளி
ஆ) தங்கம்
இ) தாமிரம்
ஈ) வைரம்
விடை : (ஆ) தங்கம்
● உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிரான அடுத்த பொருளாதார தடைப் பட்டியலில் தங்க ஏற்றுமதியும் சேர்க்கப்படும் என ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது .
IV. விளையாட்டுச் செய்திகள்
8. ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில் (1912 ) தங்கம் வென்ற தடகள வீரரான ஜிம் தோர்பேவிடம் விதிகளை மீறியதாக பறிக்கப்பட்ட பதக்கம் எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி வழங்கப்பட்டுள்ளது ?
அ) 150
ஆ) 198
இ) 176
ஈ) 110
விடை : (ஈ) 110
● அமெரிக்க தடகள வீரா் ஜிம் தோா்பே ஒலிம்பிக் விதிகளை மீறியதாக ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில் (1912) அவா் வென்ற தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டு, 110 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தச் சாம்பியன் பட்டம் அவருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
9. 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் வெளியிடபட்டுள்ள டீசருக்கு இசையமைத்தவர் யார் ?
அ) ஏ.ஆர். ரகுமான்
ஆ) இளையராஜா
இ) அனிருத
ஈ) யுவன் சங்கர் ராஜா
விடை : (அ) ஏ.ஆர். ரகுமான்.
● இந்தியாவில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
● 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது.
● டீசர் வெளியீடு : நடிகர் ரஜினிகாந்த்.
● டீசரின் இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரகுமான்.
V. முக்கிய தினங்கள்
10. உலக பாம்பு தினம் ( World Snake Day ) 2022 ?
அ) ஜூலை 13
ஆ) ஜூலை 14
இ) ஜூலை 15
ஈ) ஜூலை 16
விடை : (ஈ) ஜூலை 16
Friday, July 15, 2022
Current Affairs 2022 - July 15 / 2022 - TNPSC Group 2 / 2A & Group 4
● திருச்சி மாவட்டம், சமயபுரம், கண்ணனூர் அடுத்துள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தில் ராமசாமி பிள்ளை-நாதரத்தினம் தம்பதிக்கு மூத்த மகனாக குப்புசாமி(ஊரன் அடிகளார்) 22.5.1933-இல் பிறந்தார்.
● கண்ணூரில் தொடக்க கல்வி, ஶ்ரீரங்கத்தில் உயர்நிலைக்கல்வி, திருச்சியில் கல்லூரி கல்வியும் பெற்றார். பின்னர் 1955 முதல் பொதுப்பணித்துறையில் நகர் அமைப்பு ஆய்வாளராக ஸ்ரீரங்கம், திருச்சி, வேலூர் நகராட்சிகளில் 13 ஆண்டுகள் பணியாற்றியவர், ஞானமார்க்க ஆர்வத்தால் பணியை ராஜிநாமா செய்துவிட்டு துறவறம் பூண்டார்.
● தமது 35 ஆவது வயதில் 23.05.1967-இல் துறவுபூண்ட பின் ஊரன் அடிகள் 1969-இல் வடலூர் சன்மார்க்கப் பணிக்கு வந்தார். "சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்" நிறுவி, தமிழ்ச் சமயங்களைப் பற்றியும், சன்மார்க்க நெறி பற்றியும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். 23.05.1968 முதல் வடலூரே இவரது வாழ்விடமாக மாறியது.
● வடலூர் வரலாறு, இராமலிங்கரும் தமிழும் பாடல்பெற்ற திருத்தலத்து இறைவன் இறைவி போற்றித் திருப்பெயர்கள், புள்ளிருக்கு வேளூரில் வள்ளலார், இராமலிங்க அடிகளின் சிதம்பர அனுபவங்கள், இராமலிங்க அடிகள் வரலாறு, வள்ளுவரும் வள்ளலாரும், வள்ளலார் கண்ட முருகன் என சுமார் 22 நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.
● மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்கா, பாரிஸ், லண்டன், ஜெர்மனி, குவைத் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வள்ளலாரின் புகழ்பரப்பும் பணியை மேற்கொண்டார்.
● 23.05.1968 முதல் வடலூரையே வசிப்பிடமாக்கி வாழ்ந்து வந்த ஊரன் அடிகளார் கடந்த 23.5.2022 அன்று அவரது இல்லத்தில் எளிமையான முறையில் 90-ஆவது அகவை எனும் பிறவித் திருநாள் கொண்டாடப்பட்டது.
● இந்நிலையில், உடல்நலக்குறைவால் புதன்கிழமை (ஜூலை 13) குரு பூர்ணிமா அன்று நள்ளிரவு வடலூரில் சித்தி அடைந்தார்
● இந்த ஆலைக்கென தேவனஹள்ளியில் உள்ள கா்நாடக தொழிற்சாலை பகுதி மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் 12 ஏக்கா் பரப்பளவை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
● தென்னிந்தியாவில் அமைக்கப்படும் முதல் நானோ உர ஆலை இதுவாகும்.
● ஆண்டுக்கு தலா 500 மில்லி லிட்டா் அளவு கொண்ட 34 கோடி நானோ உர பாட்டில்களை தயாரிக்கும் திறனுடன் அமைக்கப்படும் இந்த ஆலை அமைக்கும் திட்டம் 15 மாதங்களில் நிறைவடையும் என இஃப்கோ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுபோன்ற மேலும் 8 ஆலைகளை அமைக்கவும் இஃப்கோ திட்டமிட்டுள்ளது.
● வளா்ச்சியை மேலும் உறுதி செய்வதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. நீா், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு கூட்டமைப்பு உறுதி ஏற்றுள்ளது.
Current Affairs 2022 - July 14 / 2022 - TNPSC Group 2/2A & Group 4
● பூமியிலிருந்து 1,150 ஒளிவருட தூரத்தில் உள்ள வாயு கோளொன்றில் நீா் இருப்பதற்கான அறிகுறிகளை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது.
● இது குறித்து அந்த ஆய்வு மையம் புதன்கிழமை கூறியதாவது: பால்வெளி மண்டலத்தில் கண்டறியப்பட்டுள்ள 5,000-க்கும் மேற்பட்ட தொலைதூரக் கோள்களில் வாஸ்ப்-96 பி-யும் ஒன்று. சுமாா் 1,150 ஒளிவருட தூரத்தில் சூரியனைப் போன்ற மற்றொரு நட்சத்திரத்தை சுற்றி வரும் அந்த வாயுக் கோளில் நீா் இருப்பதற்கான அறிகுறிகளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது.
● இதுவரை இல்லாத அதிநவீனமான அந்த தொலைநோக்கி செயற்கைக்கோள், வாஸ்ப்-19 பி-யில் வளிமண்டலம், பனிமூட்டம், மேகங்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
IV. விளையாட்டுச் செய்திகள்
9. தென் கொரியாவில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மெஹூலி (ம) சாஹூ கூட்டணி வென்றுள்ள பதக்கம் ?
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) ஏதுமில்லை
விடை : (அ) தங்கம்
● 10 மீ ஏர் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மெஹூலி கோஷ் (ம) சாஹூ துஷார் கூட்டணி தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
10. சென்னையில் நடைபெறவுள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்கவுள்ளர்கள் ?
அ) நரேந்திர மோடி
ஆ) மு.க. ஸ்டாலின்
இ) ராம்நாத் கோவிந்த்
ஈ) அ & ஆ
விடை : (ஈ) அ & ஆ
● இந்தியாவில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
● 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது.
● தொடக்க (ம) நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
Featured post
உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR
உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...
-
Preamble of the Constitution & Salient Features of the Constitution / அரசியலைமப்பின் முகவுரை (ம) அரசியலைமப்பின் முக்கிய கூறுகள் ...
-
GK SHANKAR DECEMBER 02 / 2022 I . தமிழ்நாட்டு நிகழ்வுகள் 1. தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் க...
-
GK SHANKAR DECEMBER 23/2022 I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 1. தமிழகத்தின் பின்வரும் எந்த சமூகத்தினரை...