Corrections in the Notes : SHRC Members 1+3 .., Also Update the Present Chairman of Respective Committes.
For Further Queries Whatsapp us @ 7358910548 Password for any of Our Document : GKSHANKAR Click here To Download the Notes : https://drive.google.com/drive/folders/1VOCLJg_T_4VwvAyf5KE2mpgKnf1epCiLMonday, May 16, 2022
Last Time Preparation For TNPSC Group 2 Pdf Links | GK SHANKAR
Join Our youtube channel to Support us :
https://www.youtube.com/channel/UCIi5yusnt0_3gkKZqSoXpXQ/join Topic Wise Math Questions : https://drive.google.com/drive/folders/1V5biCWiLS1BPyr4l3lj7O8E0nNrhXwrG?usp=sharing Answers Topic Wise Discussion Playlist : https://youtube.com/playlist?list=PLumyt9NyY6JOt4R9JuEDFOuWeIQ7C580G 2022 TNPSC Original Question Test Practice Questions Link : https://drive.google.com/drive/folders/17JU-8N5gnp-3Em-_6L3bKs7UEc0cK5JG?usp=sharing 2022 Book Back Questions Test Practice Links : https://drive.google.com/drive/folders/1DW7Z-imCyIowpb4N8PRCgTlA_3miGNnC?usp=sharing INSTAGRAM : https://www.instagram.com/gkshankar_tnpsc_facts/ TELEGRAM : https://t.me/theshankargk WHATSAPP : 7358910548 We Believe Education is the key to the necessary changes that we dream, So, spend some time to understand the facts, data’s, the maths and Science on a Daily Basis. Small Drops maketh the ocean // learn daily . Consistency Wins. Do support us. #tnpsc #gkshankar #tnpscmathsசிந்து சமவெளி நாகரிகம் & குப்தர்கள் TNPSC School Book Notes
சிந்து சமவெளி நாகரிகம்
வரலாறு என்றால் என்ன?
அறிமுகம்
வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசைப் பதிவு.
வரலாறு என்ற சொல் கிரேக்கச் சொல்லான ‘இஸ்டோரியா’ (Istoria) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் “விசாரிப்பதன் மூலம் கற்றல்” என்பதாகும்.
வரலாற்றின் ஆதாரங்கள்
மக்கள் வாழ்ந்த காலம், அக்கால நிகழ்வுகள், உணவு முறை, பண்பாடு, பழக்கவழக்கம்,ஆட்சிமுறை, கலை, இலக்கியம் போன்றவற்றை பற்றி அறிய உதவும் எழுதப்பட்ட ஆவணங்கள் மற்றும் பழங்காலப் பொருள்கள் முதலியன வரலாற்று ஆதாரங்கள் எனப்படும்.
வரலாறு என்பது வரலாற்றுக்கு முற்பட்ட காலம், தொடக்க கால வரலாறு,வரலாற்றுக் காலம் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
வரலாற்று காலம் எழுதப்பட்ட சான்றுகள் மற்றும் பிற ஆதாரங்களுக்கான சான்றுகளைக் கொண்டுள்ளது.
எழுதப்பட்ட சான்றுகள் இலக்கியப் படைப்புகள், வரலாற்றுக் குறிப்புகள், கல்வெட்டுகள், தாமிரத் தகடுகள் மற்றும் பனை ஓலைகள்.
வரலாற்றுக்கு முந்தைய காலம்
கல் கருவிகளின் பயன்பாட்டிற்கும் எழுத்து முறைகளின் கண்டுபிடிப்புக்கும் இடையிலான காலம் வரலாற்றுக்கு முந்தைய காலம் ஆகும்.
கல் கருவிகள், அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பாறை ஓவியங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் முக்கிய ஆதாரங்கள் ஆகும்.
வரலாற்றுத் தொடக்க கால
வரலாற்றுக்கும், வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் இடைப்பட்ட காலம் வரலாற்றுத் தொடக்க காலம் ஆகும்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் வகைப்பாடுகள்
பழைய கற்காலம் (Palaeolithic)
பழைய கற்காலத்தின் காலம் பொ.ஆ.மு.10,000க்கு முன்.
பழைய கற்கால இடங்கள் இந்திய துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன.
இந்த இடங்கள் பொதுவாக நீர் ஆதாரங்களுக்கு அருகில் அமைந்துள்ளன.
பழைய கற்கால மக்களால் பயன்படுத்தப்படும் பல பாறை முகாம்களும், குகைகளும் இந்திய துணைக் கண்டத்தில் சிதறிக்கிடக்கின்றன.
இலைகளால் ஆன குடிசைகளிலும் அவர்கள் அரிதாகவே வாழ்ந்தனர்.
பழைய கற்கால இடங்கள்
சோன் பள்ளத்தாக்கு மற்றும் பொட்வார் பீடபூமி - வடமேற்கு இந்தியா
சிவாலிக் மலைகள் - வட இந்தியா
பிம்பேட்கா - மத்தியப் பிரதேசம்
ஆதம்கர் மலை - நர்மதா பள்ளத்தாக்கு
கர்னூல் - ஆந்திரா
சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கம்
இடை கற்காலம்
மனித வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை இடை கற்காலம் என்று அழைக்கப்படுகிறது`.
இது பொ.ஆ.மு.10,000 முதல் பொ.ஆ.மு.6000 வரை.
பழைய கற்காலத்திலும் புதிய கற்காலத்திலும் இடையே ஏற்பட்ட மாற்றங்களைக் இக்கால வரலாறு எடுத்துரைக்கிறது.
இடைக்கற்கால சின்னங்கள் காணப்படும் இடங்கள்
குஜராத் - லாங்கஞ்ச்
மத்திய பிரதேசம் - ஆதம்கார்
ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகாரின் சில இடங்கள்
புதிய கற்காலம்
மனித நாகரிகத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை புதிய கற்காலத்தில் தான் காண முடிகிறது
புதிய கற்காலம் சுமார் பொ.ஆ.மு.6000 முதல் பொ.ஆ.மு.4000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும்.
புதிய கற்காலப் பொருள்கள் காணப்படும் இடங்கள்
வட இந்தியாவில்
காஷ்மீர் பள்ளத்தாக்கு
பீகார் - சிராண்ட்
உத்திர பிரதேசம் - பீலான் சமவெளி
தக்காணத்தில் பல இடங்கள்.
தென்னிந்தியாவில்
கர்நாடகத்தின் மாஸ்கி, பிரம்மகிரி, ஹல்லூர், கோடேகல்
தமிழ்நாட்டில் - பையம்பள்ளி
ஆந்திர பிரதேசத்தில் - உட்னூர்
உலோக காலம்
புதிய கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம் செம்பு கற்காலம் எனப்பட்டது.
இக்காலத்தில் செம்பு மற்றும் வெண்கலம் ஆகிய உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன.
உலோக காலமானது பொ.ஆ.மு.3000 முதல் பொ.ஆ.மு.1000 வரை குறிக்கப்படுகிறது.
மனிதகுல வரலாற்றில் உலோகத்தை உருக்கி வார்க்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததும் உலோகத்தினால் ஆன பொருட்களை உருவாக்கி பயன்படுத்தியதும் முக்கிய நிகழ்வுகளாகும்.
ஹரப்பா பண்பாடு செம்பு கற்காலம் பண்பாட்டின் ஒரு பகுதியேயாகும்.
காணப்படும் இடங்கள்
கர்நாடகத்தின் ஹல்லூர் மற்றும் மஸ்கி
ஆந்திரப் பிரதேசத்தின் - நாகார்ஜுன கொண்டா மற்றும்
தமிழகத்தின் - ஆதிச்சநல்லூர்
சிந்து சமவெளி நாகரிகம்
சிந்து சமவெளி நாகரிகத்தின் பின்னணி
அறிமுகம்
சிந்து சமவெளி நாகரிகம் இந்தியாவில் தோன்றிய முதல் நகர நாகரிகம் ஆகும்.
இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலும் பாகிஸ்தானிலும் பொ.ஆ.மு. 3000 கால அளவில் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் மொத்தமாகச் சிந்து நாகரிகம் எனப்படும்.
ஹரப்பா நாகரிகம்
இந்நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் ஹரப்பா என்பதால், இது ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஹரப்பா நாகரிகம் திடீரென்று ஒரே நாளில் தோன்றிவிடவில்லை.
இப்பகுதியில் புதிய கற்காலக் கிராமங்களின் தொடக்கம் நடைபெற்றது ஏறத்தாழு பொ.ஆ.மு. 7000 (புதிய கற்காலப் பகுதியான மெஹர்காரின் காலத்தைப் போல) எனக் கணிக்கப்படுகிறது.
ஹரப்பா நாகரிகத்தின் கால கட்டங்கள்
தொடக்க கால ஹரப்பா - பொ.ஆ.மு.3000 - 2600
முதிர்ச்சி அடைந்த ஹரப்பா - பொ.ஆ.மு.2600 - 1900
பிற்கால ஹரப்பா - பொ.ஆ.மு.1900 - 1700
தொடக்ககால ஹரப்பா
இது பொ.ஆ.மு 3000- 2600 வரையிலானது.
இந்த காலகட்டத்தில் கிராமங்களும் நகரங்களும் வளர்ச்சி அடையத் தொடங்கின.
மக்கள் வணிகத் தொழிலை மேற்கொண்டனர்.
கலைகளும் கைவினைப்பொருட்கள் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது.
முதிர்ச்சி அடைந்த ஹரப்பா
இது பொ.ஆ.மு 2600 – 1900 வரையிலானது.
இந்த காலகட்டத்தில் நகரங்கள் நன்கு வளர்ச்சி அடைந்தன.
வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன.
வணிகம் மக்களின் முக்கிய தொழில் ஆனது.
பிற்கால ஹரப்பா
இது பொ.ஆ.மு 1900 - 1700 வரையிலானது.
இக்காலத்தில் வணிகம் சரிவை சந்தித்தது.
வணிகம் சரிய தொடங்கியதால் நகரங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
நதிக்கரை - நாகரிகம்
மனிதர்கள் தங்கள் குடியேற்றங்களாக நதிக் கரைகளைக் கீழ்க்கண்ட காரணங்களுக்காகத் தேர்ந்தெடுத்தார்கள்.
வளமான மண்.
ஆறுகளில் பாயும் நன்னீர் குடிப்பதற்கும் கால்நடைகளின் தேவைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் பயன்பட்டன.
போக்குவரத்துக்கு ஏற்ற வழிகளாக இருந்தன.
மற்ற நாகரிகங்களின் கால வரிசை
கண்டுபிடிப்புகள்
ஹரப்பாவுக்கு முதன்முதலில் 1826இல் வருகை தந்தவர் சார்லஸ் மேசன்.
1831இல் அம்ரி என்னும் ஹரப்பா பண்பாட்டோடு தொடர்புடைய இடத்திற்கு அலெக்ஸாண்டர் பர்ன்ஸ் வருகை தந்தார்.
லாகூரிலிருந்து முல்தானுக்கு ரயில் பாதை அமைப்பதற்காக ஹரப்பா அழிக்கப்பட்டது.
இப்பகுதியிலிருந்து ஒரு முத்திரை இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் முதல் அளவையரான அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாமுக்குக் கிடைத்தது.
1853இலும் 1856இலும் 1875இலும் அவர் ஹரப்பாவை பார்வையிட்டார்.
சர் ஜான்மார்ஷல் இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குனராகப் பொறுப்பேற்றார். இவரது முயற்சிகள் மூலம் ஹரப்பாவில் ஆய்வுகள் தொடங்கப்பட்டன.
இந்தியத் தொல்லியல் துறை (Archaleogical Survey of India)
1861 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்ற நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது.
இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது.
ரயில் பாதை
1856-ல் பொறியாளர்கள் லாகூரில் இருந்து கராச்சிக்கு ரயில் பாதை அமைக்கும் பொருட்டு நிலத்தை தோண்டிய பொழுது அதிகமான சுட்ட செங்கற்கள் கண்டறியப்பட்டன.
அவர்கள் அவற்றின் முக்கியத்துவத்தை உணராமல் அவற்றை இரயில் பாதைக்கு இடையில் போடப்படும் கற்களுக்கு பதிலாக பயன்படுத்தினர்.
சர் ஜான் மார்ஷல்
சர் ஜான் மார்ஷல் இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குனராகப் 1924ல் பொறுப்பேற்ற நிகழ்வு இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை எனலாம். இவரது முயற்சிகள் மூலம் ஹரப்பாவின் ஆய்வுகள் தொடங்கப்பட்டன.
அவர் ஹரப்பாவிக்கும் மொஹெஞ்ச-தாரோவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதை கண்டறிந்தார். அவை இரண்டுமே ஒரு பெரிய நாகரிகத்தை சார்த்த வெவ்வேறு பகுதிகள் என்று முடிவுக்கு வந்தார்.
பிற்காலத்தில் 1940களில் ஆர்.இ.எம். வீலர் ஹரப்பாவில் அகழாய்வுகள் நடத்தினார்.
இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, ஹரப்பா நாகரிகப் பகுதியில் பெரும்பாலான இடங்கள் பாகிஸ்தானுக்கு உரியதாகிவிட்டன. எனவே ஆய்வாளர்கள் இந்தியாவில் உள்ள நாகரிப்பகுதிகளைக் கண்டறிய ஆவல் கொண்டனர்.
ஹரப்பா நாகரிகத்துடன் தொடர்புடைய காலிபங்கன், லோத்தல், ராக்கிகார்ஹி, டோலாவீரா ஆகியவை இத்தகைய முயற்சிகளால் அகழாய்வுக்கு உட்பட்டன.
1950களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்பயணங்களும் அகழாய்வுகளும் ஹரப்பா நாகரிகத்தையும் அதன் இயல்பையும் புரிந்துகொள்ள உதவின.
கால வரையறை
புவி எல்லை - தெற்கு ஆசியா
காலப்பகுதி - வெண்கலக்காலம்
காலம் - பொ.ஆ.மு 3300 - 1900 (கதிரியக்க கார்பன் வயதுக்கணிப்பு முறை மூலம் முடிவு
செய்யப்பட்டது)
பரப்பு - 13 லட்சம் சதுர கி.மீ
நகரங்கள் - 6 பெரிய நகரங்கள்
கிராமங்கள் - 200க்கும் மேற்பட்டவை
நகர நாகரிகம்
ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம். அதற்கான காரணங்கள்:
சிறப்பான நகரத் திட்டமிடல்
சிறப்பான கட்டிடக்கலை வேலைப்பாடு
தூய்மைக்கும், பொது சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை
தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள்
விவசாய மற்றும் கைவினைத் தொழில்களுக்கான திடமான அடித்தளம்
சிந்து நாகரிக நகரங்கள்
ஹரப்பா (பஞ்சாப், பாகிஸ்தான்)
மொஹஞ்சதாரோ (சிந்து, பாகிஸ்தான்)
தோலாவீரா (குஜராத், இந்தியா)
லோத்தல் (குஜராத், இந்தியா)
சுர்கொடா (குஜராத், இந்தியா)
காலிபங்கன் (ராஜஸ்தான், இந்தியா)
பானவாலி (ராஜஸ்தான், இந்தியா)
ராகிகரி (ஹரியானா, இந்தியா)
ஹரப்பா நாகரிகத்தின் தனித் தன்மை
சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பம்சமே திட்டமிட்ட நகர அமைப்பு ஆகும். நகரம் திட்டமிடப்பட்ட இரண்டு பகுதிகளாக இருந்தது.
தெருக்களும் வீடுகளும்
தெருக்கள் சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன.
தெருக்கள் நேராக அமைக்கப்பட்டிருந்தன. அவை வடக்கு, தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் சென்றன. ஓன்றை ஒன்று செங்கோணத்தில் வெட்டிக் கொள்ளும் படியும் இருந்தன.
சாலைகள் அகலமாகவும் வளைவான முனைகளைக் கொண்டதாகவும் இருந்தன.
வீடுகள், தெருக்களின் இரு ஓரங்களிலும் சீராக அமைக்கப்பட்டிருந்தன. வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மாடி அடுக்குகளை உடையனவாக காணப்படுகின்றன.
பெரும்பாலான வீடுகள் பல அறைகளையும் ஒரு முற்றத்தையும், ஒரு கிணற்றையும் கொண்டிருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையும், குளியலறையும் இருந்திருக்கின்றன.
வீடுகள் சுட்ட செங்கற்களாலும் சுண்ணாம்புக் கலவையாலும் கட்டப்பட்டிருந்தன. சூரிய வெப்பத்தில் உலர வைக்கப்பட்ட செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலான செங்கற்கள் சீரான அளவுகள் உடையதாகவே இருந்தன. கூரைகள் சமதளமாக இருந்தன.
அரண்மனைகளோ, வழிபாட்டுத் தலங்களோ இருந்ததை தீர்மானிக்கக் கூடிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
பெருங்குளம்
இந்த பெருங்குளமானது நன்கு அகன்று, செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கம் ஆகும். இது நகரின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. நீர் கசியாத கட்டுமானத்துக்கான மிகப் பழமையான சான்று எனலாம்.
இக்குளத்தின் சுவர்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, நீர் கசியாமல் இருப்பதற்காக சுவரிலும், தளத்திலும் பல அடுக்குகள் இயற்கைத் தார் கொண்டு பூசப்பட்டிருந்தது.
வடபுறத்திலிருந்தும், தென்புறத்திலிருந்தும் குளத்திற்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. குளத்தின் பக்கவாட்டில் மூன்று புறமும் அறைகள் உள்ளன.
அருகில் இருந்த கிணற்றில் இருந்து நீர் இறைக்கப்பட்டு பெருங்குளத்தில் விடப்பட்டது. உயயோகப்படுத்தப்பட்ட நீர் வெளியேறவும் வகை செய்யப்பட்டிருந்தது.
கழிவு நீர் அமைப்பு
ஏறத்தாழ எல்லா நகரங்களிலும் மூடப்பட்ட கழிவு நீர் வடிகால் அமைப்பு இருந்தது. வடிகால்கள் செங்கற்களைக் கொண்டும் கல்தட்டைகளைக் கொண்டும் மூடப்பட்டிருந்தன.
வடிகால் கழிவு நீர் தேங்காமல் செல்ல வசதியாக லேசான மென் சரிவைக் கொண்டிருந்தது. கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான துளைகளும் சரியான இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தன.
வீட்டிலிருந்து கழிவுநீர் பல தெருக்களின் கீழ் அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் மூலமாக முக்கிய வடிகால்களைச் சென்றடையுமாறு அமைக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு வீட்டிலும் திடக் கழிவுகளைத் தேக்குவதற்கான குழிகள் இருந்தன. அவை திடக்கழிவுகளைத் தேக்கி, கழிவு நீரை மட்டும் வெளியேற்றின.
தானியக் களஞ்சியம்
தானியக் களஞ்சியம் - செங்கற்களால் அடித்தளமிடப்பட்ட, பெரிய, உறுதியான கட்டட அமைப்பு.
இவை தானியங்கள் சேகரித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
தள வெடிப்புகளில் கோதுமை, பார்லி, தினைவகைகள், எள் மற்றும் பருப்பு வகைகளின் மிச்சங்கள் சிதறிக் காணப்பட்டன.
செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதிர்ச்சியடைந்த ஹரப்பா காலத்தைச் சார்ந்தது.
கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்
இடம்
ஆண்டு
கண்டுபிடித்தவர்
நதி
ஹரப்பா
1921
தயாரம் சாஹ்னி
ராவி
மொஹஞ்சதாரோ
1922
ஆர்.டி.பானர்ஜி
சிந்து
சன்ஹுடாரோ
1931
மஜும்தார்
சிந்து
லோதல்
1945
ராவ்
போகாவோ
காளிபங்கன்
1961
லால்
காகர்
தோலவீரா
1991
ஜோஷி
சரஸ்வதி
வணிக நடவடிக்கைகள்:
அறிமுகம்:
விவசாயம், தொழில் மற்றும் கைவினைப்பொருட்கள் மற்றும் வர்த்தகம் போன்ற பொருளாதார நடவடிக்கைகளின் அனைத்து துறைகளிலும் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது
வர்த்தகம் பண்டமாற்று வகையாக இருந்தது.
சிந்து சமவெளியின் முத்திரைகள் மற்றும் டெரகோட்டா மாதிரிகள் காளை வண்டிகள் மற்றும் எருதுகள் நிலப் போக்குவரத்துக்கும் மற்றும் படகுகள் மற்றும் கப்பல்கள் நதி மற்றும் கடல் போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்பட்டதை வெளிப்படுத்துகின்றன.
வெண்கல மற்றும் செப்புக் கலன்கள் ஹரப்ப உலோகக் கலையின் சிறந்த எடுத்துக்காட்டுகள். தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன.
சில இடங்களில் சிவப்பு மற்றும் கருப்பு வர்ணம் பூசப்பட்ட மட்பாண்டங்கள் காணப்படுகின்றன
வேளாண்மை:
ஹரப்பா மக்கள் நிலையாக வாழ்வதற்கு வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது.
கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள், வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களைப் பயிரிட்டார்கள்.
வேளாண்மையில் கிடைத்த உபரி வருவாய் முக்கியமான பல செயல்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்கியது.
ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல் முறையைப் பின்பற்றினார்கள்.
ஹரப்பா மக்கள் உழவுக்குக் கலப்பையைப் பயன்படுத்தினார்கள்.
நிலத்தை உழுது, விதைக்கும் வழக்கத்தை அவர்கள் கொண்டிருந்திருக்கலாம்.
உழுத நிலங்களைக் காலிபங்கனில் காண முடிகிறது.
அவர்கள் பாசனத்துக்குக் கால்வாய்களையும் கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்
விலங்குகளைப் பழக்கப்படுத்துதல்
ஹரப்பாவில் மேய்ச்சலும் ஒரு முக்கியமான தொழிலாக இருந்தது.
செம்மறியாடு, வெள்ளாடு, கோழி உள்ளிட்ட பறவைகளை வளர்த்தார்கள்.
எருமை, பன்றி, யானை போன்ற விலங்குகள் குறித்த அறிவும் அவர்களுக்கு இருந்தது.
ஆனால் ஹரப்பா பண்பாட்டில் குதிரை இல்லை
ஹரப்பாவில் மாடுகள் செபு எனப்பட்டன.
பெரிய உடலமைப்பைக் கொண்ட இவ்வகைமாடுகள் அவர்களின் பல முத்திரைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
ஹரப்பா மக்களின் உணவில் மீன், பறவை, இறைச்சி ஆகியவையும் இருந்தன.
காட்டுப்பன்றி, மான், முதலை ஆகியவற்றுக்கான சான்றுகளும் ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் கிடைத்துள்ளன
கைவினைத் தயாரிப்பு
ஹரப்பா பொருளாதாரத்தில் கைவினைத் தயாரிப்பு ஒரு முக்கியமான பகுதியாகும்.
மணிகள் மற்றும் அணிகலன் செய்தல், சங்கு வளையல் செய்தல், உலோக வேலைகள் ஆகியவை கை வினைச் செயல்பாடுகளாக இருந்தன
கார்னிலியன் (மணி), ஜாஸ்பர், கிரிஸ்டல் (படிகக்கல்), ஸ்டீட்டைட் (நுரைக்கல்) ஆகியவற்றிலும் செம்பு, வெண்கலம், தங்கம் ஆகிய உலோகங்களிலும் சங்கு, பீங்கான், சுடுமண் ஆகியவற்றிலும் அணிகலன்களைச் செய்தார்கள்.
இந்த அணிகலன்கள் எண்ணற்ற வடிவமைப்பிலும் வேலைப்பாடுகளுடனும் செய்யப்பட்டன.
இவை மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
இங்கிருந்து கலைப்பொருள்கள் ஏற்றுமதி ஆன செய்தி மெசபடோமியாவில் நடத்தப்பட்ட அகழாய்வு மூலம் தெரிகிறது.
ஹரப்பா நாகரிகப் பகுதிகள் சில குறிப்பிட்ட கைவினைப்பொருள் தயாரிப்பில் தேர்ச்சி பெற்றதாக உள்ளன.
அத்தகைய பொருள்களும் அவற்றின் உற்பத்தி மையங்களும் கீழேயுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கலைகள்
ஹரப்பாவின் சிற்பங்கள் மிகச் சிறந்த வேலைப்பாடுகளைக் கொண்டதாகும்.
சுடு மண்ணாலான ஆண், பெண் உருவங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் முத்திரைகளில் வரையப்பட்டுள்ள செதுக்கோவியங்கள் சிற்பியின் திறமைக்கு சான்று பகிர்கின்றன.
மொகஞ்சாதாரோவில் கண்டெடுக்கப்பட்டுள்ள 'நாட்டிய மங்கை' என்ற வெண்கல உருவ பொம்மை சிறப்பான கலை நயத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
அதன் வலது கை இடுப்பின் மீதும், வளையல்கள் அணிந்த இடது கை தொங்கவிடப்பட்ட நிலையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
ஹரப்பாவில் இரண்டு கற்சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒன்று மனிதனின் பின் பக்கவாட்டிலும், மற்றும் நாட்டிய வடிவிலும் அமைந்துள்ளன. ஹரப்பா நகர மட்பாண்டங்கள் சிறந்த சுடு மண் உருவ கலை நயமிக்கவையாகும்.
மட்பாண்டங்களும், குவளைகளும் பொம்மை பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
வண்ணப்பூச்சுடன் கூடிய மட்பாண்டங்கள் தரமிக்கவையாகும்.
கோண வடிவிலான கோடுகள் வட்டங்கள், இலைகள், செடிகள், மரங்கள் போன்ற ஓவியங்கள் மட்பாண்டங்கள் மீது வரையப்பட்டுள்ளன.
சில மட்பாண்டங்களில் மீன் மற்றும் மயில் உருவங்களும் காணப்படுகின்றன.
மட்பாண்டங்கள்
ஹரப்பா மக்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பல வகைப்பட்ட மட்பாண்டங்களைப் பயன்படுத்தினர்
அவை நன்கு சுடப்பட்டவை. மட்பாண்டங்கள் அடர் சிவப்பும் கறுப்பும் கலந்த வண்ணம் பூசப்பட்டிருந்தன.
அகன்ற பாத்திரத்தை வைப்பதற்கேற்ற தாங்கி, நீரைச் சேர்த்து வைக்கும் கலன், துளைகளுடன் கூடிய கலன், கையில் ஏந்துவதற்கு ஏற்ப குறுகிய பிடியுடன் உள்ள கோப்பை, நுனி சிறுத்தும், தாங்கும் பகுதி நன்கு அகன்றும் உள்ள கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் போன்ற பலவகைகளில் மட்பாண்டங்கள் காணப்படுகின்றன..
அவற்றில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் அரச இலைகள், மீன் செதில், ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் வட்டங்கள், கோணல் மாணலான கோடுகள், பக்கவாட்டில் உள்ள பட்டைகள், வடிவியல் கூறுகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் நன்கு சுடப்பட்டதாகவும் நுட்பமான வேலைப்பாடு கொண்டதாகவும் இருக்கின்றன
சமூக மற்றும் அரசியல் வாழ்க்கை
வணிகம்
ஹரப்பா மக்கள் பெரும் வணிகர்களாக இருந்தார்கள்.
அவர்கள் சக்கர வண்டிகளைப் பயன்படுத்தினர். ஆரக்கால் இல்லாத திடமான சக்கரங்களைப் பயன்படுத்தினர்.
தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவைகள் அவர்களால் பயன்படுத்தப்பட்டன.
பொருட்களின் நீளத்தை அளவிட அளவுகள் குறிக்கப்பட்ட குச்சிகளைப் பயன்படுத்தினார்கள்.
லோத்தல் என்னும் இடம் குஜராத்தில் சபர்மதி ஆற்றின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
மெசபடோமியாவுடன் விரிவான கடல் வணிகம் நடைபெற்றிருக்கிறது. சிந்துவெளி முத்திரைகள் தற்கால ஈராக், குவைத் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளை குறிக்கும்
பண்டைய மெசபடோமியாவில் உள்ள சுமேர் பகுதிகளில் கிடைத்துள்ளது இதை உறுதிப்படுத்துகிறது.
சமூகவாழ்க்கை
ஆண், பெண் இருபாலரும் கீழாடை, மேலாடை என்ற இரண்டு வித ஆடைகளையும் அணிந்தனர்.
இருபாலரும் மணிகளாலான ஆபரணங்களை அணிந்து கொண்டனர்.
வளையல்கள், காப்புகள், ஒட்டியாணம், சிலம்பு, காதணி, மோதிரம் போன்றவை பெண்களுக்கான ஆபரணங்கள்,
இவை, தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம் போன்ற உலோகங்களானவை.
மட்பாண்டங்கள், கற்கள், ஓடுகள், தந்தம் மற்றும் உலோகங்களாலான பல்வேறு வகையிலான வீட்டுக்குதவும் பாத்திரங்கள் மொகஞ்சாதோராவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நூற்கும் ஊசிகள், சீப்புகள், தூண்டில் முட்கள், கத்திகள் போன்றவை செம்பாலனவை.
மீன் பிடித்தல் என்பது முறையான தொழில், வேட்டையாடுதலும், எருதுச் சண்டையும் பொழுதுபோக்குகளாகும்.
பல்வேறு போர்க்கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. செம்பு மற்றும் வெண்கலத்திலான கோடரிகள், ஈட்டிகள், குறுவாட்கள், வில் அம்புகள் போன்றவையும் இதிலடங்கும்.
முத்திரைகள்
ஸ்டீட்டைட், செம்பு, சுடுமண், தந்தம் போன்றவற்றாலான முத்திரைகள் ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சதுர வகை முத்திரைகள் செதுக்கப்பட்ட விலங்குகள் மற்றும் கல்வெட்டுகளுடன் பொறிக்கப்பட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான செவ்வக முத்திரைகள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டன. அது கல்வெட்டுகளால் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது
உருவ எழுத்துக்கள் அதில் பொறிக்கப்பட்டன.
எழுத்து
ஹரப்பா எழுத்து வடிவம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை.
400 முதல் 600 வரையிலான வடிவங்கள் இருப்பினும், அவற்றில் 40 அல்லது 60 மட்டுமே அடிப்படையாக விளங்குகின்றன. எஞ்சியவை அவற்றின் மாற்று வடிவங்களே.
ஹரப்பா எழுத்துக்கள் பொதுவாக வலமிருந்து இடமாகவே எழுதப்பட்டுள்ளன. ஒரு சில முத்திரைகளில் முதல் வரி வலமிருந்து இடமாகவும். அடுத்த வரி இடமிருந்து வலமாகவும் மாறி மாறி எழுதப்பட்டுள்ளன.
ஸ்கான்டிநேவியாவைச் சேர்ந்த பார்போலா மற்றும் அவரது உடன் பணியாற்றும் அறிஞர்களும் ஹரப்பா மக்களின் மொழி திராவிட மொழியே என்று முடிவு செய்துள்ளனர்.
ஹரப்பா எழுத்து பற்றிய புதிர் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. ஹரப்பா எழுத்து முழுவதும் படித்தறியப்படும் போது அப்பண்பாட்டின் சிறப்புகள் முழுமையாக வெளிவரும் என்பதில் ஐயமில்லை.
சிந்து சமவெளி நாகரிகம்
நம்பிக்கைகள்
சிந்து மக்கள் இயற்கையை வழிபட்டார்கள்.
அரச மரங்கள் வழிபாட்டுக்குரியதாக இருந்திருக்கலாம்.
சில சுடுமண் உருவங்கள் தாய்த்தெய்வத்தைப் போல் உள்ளன.
காலிபங்கனில் வேள்வி பீடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஹரப்பா மக்கள் இறந்தோரைப் புதைத்தனர்.
புதைப்பதற்கான நடைமுறைகள் விரிவாக இருந்தன.
இறந்த உடல்களை எரித்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
ஹரப்பா புதைகுழிகளில் மட்பாண்டங்கள், அணிகலன்கள், தாமிரக்கண்ணாடி, மணிகள் ஆகியவை கிடைத்துள்ளன.
இறப்பிற்கு பின்னரான வாழ்க்கை பற்றிய அவர்களின் நம்பிக்கையை இவை குறிக்கலாம்
பசுபதி சிவா
அவர்களது முக்கிய ஆண் கடவுள் பசுபதி (முற்காலத்திய சிவன்).
தியான வடிவில் அமர்ந்திருப்பார்.
அவருக்கு மூன்று முகங்களும் இரண்டு கொம்புகளும் காணப்படுகின்றன.
நான்கு விலங்குகள் (யானை, புலி, காண்டாமிருகம், எருமை) வெவ்வேறு திசைகளைப்பார்த்த வண்ணம் அவரை சூழ்ந்துள்ளன.
அவரது பாதத்தில் இரண்டு மான்கள் உள்ளன.
பிற்காலத்தில் லிங்க வழிபாடும் காணப்பட்டது.
இறந்தோரைப் புதைத்தல்
மொகஞ்சாதாரோ, ஹரப்பா, காலிபங்கன், லோத்தல், ரூபார் போன்ற நகரங்களைச் சுற்றி கண்டெடுக்கப்பட்டுள்ள கல்லறைகள் ஹரப்பா மக்களின் இறந்தோரைப் புதைக்கும் வழக்கம் குறித்து அறிய உதவுகின்றன.
மொகஞ்சாதாரோவில், இறந்தோரை புதைக்கும் வழக்கமும், எரித்த பின்னர் எலும்புகளை புதைக்கும் வழக்கமும் வழக்கிலிருந்தன.
அவர்கள் இறந்தவர்களை வடக்கு திசையை நோக்கி தலையுடன் புதைத்தனர்.
லோத்தல் நகரில் புதைகுழியைச் சுற்றி செங்கற்கள் அடுக்கப்பட்டுள்ளன.
'சதி” என்ற உடன்கட்டையேறும் வழக்கம் நிலவியதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.
ஹரப்பா பண்பாட்டின் அழிவு
ஹரப்பா பண்பாட்டின் அழிவு குறித்தும் அதற்கான சான்றுகள் குறித்தும் அறிஞர்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை.
பொ-ஆ-மு.1900 ஆம் ஆண்டில் ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கியது.
அதற்குக் கீழ்கண்டவை காரணங்களாக அமைந்திருக்கலாம்.
ஆற்றின் கரையில் உள்ள அதன் நகரங்களில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு
சுற்றுச்சூழல் மாற்றம்
ஆரியர்களின் படையெடுப்பு
இயற்கைச் சீற்றங்கள்
காலநிலை மாற்றம்
காடுகள் அழிதல்
தொற்று நோய்த் தாக்குதல்
காலப்போக்கில் இம்மக்கள் சிந்து பகுதியிலிருந்து தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் இடம்பெயர்ந்தார்கள்.
கோட்டைகள் பல அழிக்கப்பட்டது குறித்து ரிக்வேதம் குறிப்பிடுகிறது.
சிந்துவெளி நாகரிகம் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை.
அது கிராமப் பண்பாடாக இந்தியாவில் தொடர்ந்தது.
தமிழ்நாட்டில் இரும்பு காலம்
இது சிந்து நாகரிகத்திற்கு சமகாலமானது.
தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் இடைக்கற்காலத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்து வந்ததற்குப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன.
இவர்களில் சில சமூகங்கள் சிந்து பகுதியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கலாம் என்பதை மறுக்க முடியாது.
தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்காலத் தாழிகளில் மெல்லிய கீறல்களாக எழுதப்பட்ட வாசகங்களும் சில இடங்களின் பெயர்களும் சிந்து நாகரிகத்துக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் இடையேயான உறவை நிறுவுவதற்கான சான்றுகளாக முன்வைக்கப்படுகின்றன.
அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட பெரிய கல் பலகைகளைப் பயன்படுத்தி ஒரு வட்ட கல்லறை மெகாலித் என்று அழைக்கப்படுகிறது.
குப்தர்கள்
அறிமுகம்
ஏறத்தாழ பொஆ.300 முதல் 700 வரையிலான காலகட்டம் அரசமைப்பில் ஒரு செவ்வியல் முறை தோன்றி பல பகுதிகளில் பேரரசர் ஆட்சி உருவாக வழிவகுத்தகாலமாக இருந்தது.
இந்த காலகட்டத்தில், குப்தர் அரசு ஒரு பெரும் சக்தியாக உருவாகி, துணைக்கண்டத்தை அரசியல் ரீதியாக ஒன்றிணைத்தது ஒரு வலுவான அரசாக வலுப்பெற்றது.
இதன் வலுவான மத்திய அரசு, பல அரசுகளை அதன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது.
நிலப்பிரபுத்துவம்:
ஒரு நிறுவனமாக நிலப்பிரபுத்துவம் இந்த காலகட்டத்தில் வேரூன்றத் தொடங்கியது.
இந்த காலகட்டத்தில் சமஸ்கிருதத்தில் சிறந்த படைப்புகள் தயாரிக்கப்பட்டு, நுண்கலைகள், சிற்பம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றில் உயர்ந்த கலாச்சார முதிர்ச்சி அடையப்பட்டது.
உயர் வகுப்பினரின் வாழ்க்கைத் தரம் உச்சத்தை எட்டியது.
கலை மற்றும் கட்டிடக்கலை மற்றும் இலக்கியம் செழித்து வளர்ந்தன.
குப்தர்களின் அமைப்பு முறை
ஜனபதங்களும் மகாஜனபதங்களும்
மக்கள் குழுவாக குடியேறிய தொடக்ககால இடங்களே ஜனபதங்கள் ஆகும்.
பின்னர் ஜனபதங்கள் குடியரசுகளாகவோ, சிற்றரசுகளாகவோ ஆனது.
கங்கைச் சமவெளியில் இரும்பின் பரவலான பயன்பாட்டால் பரந்து விரிந்த மக்கள் வாழும் பகுதிகள் தோன்றின.
இதனால் ஜனபதங்கள் மகாஜனபதங்களாக மாற்றம் பெற்றன.
16 மகாஜனபதங்கள்:
அங்கம்,
மகதம்,
வஜ்ஜி,
காசி,
மல்லம்,
குரு,
கோசலம்,
அவந்தி,
சேதி,
வத்சம்,
பாஞ்சாலம்,
மத்சயம்,
சூரசேனம்,
அஸ்மகம்,
காந்தாரம் மற்றும்
காம்போஜம்.
இக்காலத்தில் நான்கு முக்கிய மகாஜனபதங்கள் இருந்தன. அவைகள்:
மகதம் - பீகார்
அவந்தி - உஜ்ஜைனி
கோசலம் - கிழக்கு உத்திரப்பிரதேசம்
வத்சம் - கோசாம்பி, அலகாபாத்
இந்த நான்கு மகாஜனபதங்களில் மகதம் ஒரு பேரரசாக உருவானது.
பண்டைய மகதத்தின் அரச வம்சங்கள்
நான்கு அரச வம்சங்கள் மகதத்தை ஆண்டன.
ஹரியங்கா வம்சம்
சிசுநாக வம்சம்
நந்த வம்சம்
மௌரிய வம்சம்
ஹரியங்கா வம்சம்:
மகதத்தின் படிப்படிபயான அரசியல் மேலாதிக்க வளர்ச்சி ஹரியங்கா வம்சத்தைச் சேர்ந்த பிம்பிசாரர் காலத்தில் தொடங்கியது.
படையெடுப்பு, திருமண உறவு ஆகிய வழிகளில் பிம்பிசாரர் லிச்சாவி, மதுரா மற்றும் கோசலம் ஆகிய பகுதிகளில் தமது அரசை விரிவுபடுத்தினார்.
அவருடைய மகன் அஜாதசத்ரு (புத்தரின் சமகாலத்தவர்) ராஜகிரகத்தில் முதல் பௌத்த சபை மாநாட்டைக் கூட்டினார்.
அவருடைய வாரிசான உதயன் பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்காக அடித்தளமிட்டார்.
சிசுநாக வம்சம்
ஹரியங்கா அரச வம்சத்தைத் தொடர்ந்து சிசுநாக அரச வம்சத்தினர் ஆட்சிப் பொறுப்பேற்றனர்.
இவ்வம்சத்தைச் சேர்ந்த அரசர் காலசோகர் தலைநகரை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றினார்.
இவர் இரண்டாம் பௌத்த மாநட்டை வைசாலியில் கூட்டினார்.
நந்த வம்சம்
நந்தர்களே இந்தியாவில் முதன்முதலாகப் பேரரசை உருவாக்கியவர்கள் ஆவர்.
முதல் நந்தவம்ச அரசர் மகாபத்ம நந்தர் ஆவர்.
அவரைத் தொடர்ந்து அவருடைய எட்டு மகன்களும் ஆட்சி செய்தனர்.
அவர்கள் நவநந்தர்கள் (ஒன்பது நந்தர்கள்) என்றழைக்கப்பட்டனர்.
கடைசி அரசரான தனநந்தர் சந்திரகுப்த மௌரியரால் வெற்றி கொள்ளப்பட்டார்.
ஒடிசாவின் புவனேஷ்வருக்கு அருகிலுள்ள உதயகிரியைச் சேர்ந்த ஹதிகும்பா (யானைக் குகை) என்று அழைக்கப்படும் ஒரு கல்வெட்டு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு நந்தா மன்னரால் கட்டப்பட்ட கால்வாய் பாசனம் பற்றி பதிவு செய்கிறது.
இது நந்தா பேரரசின் புவியியல் அளவையும் குறிக்கிறது.
நந்தர்கள் திறமையான நிர்வாகிகளாக இருந்தபோதிலும் மகத சாம்ராஜ்யத்தை பலப்படுத்தியிருந்தாலும் அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமடையவில்லை.
பாரசீக மாசிடோனிய படையெடுப்பு
பொ.ஆ.மு. 530 வாக்கில், பாரசீகப் பேரரசர் சைரஸ் இந்தியாவிற்குப் படையெடுத்துவந்து கபிஷா என்ற நகரை அழித்தார்.
கிரேக்க வரலாற்றாளர் ஹெரோடாட்டஸின் கூற்றின்படி, காந்தாரம் ஆக்கிமீனைட் பேரரசின் இருபதாவது மற்றும் செல்வமிக்க சத்ரபியாக இருந்தது.
மகா அலெக்சாண்டரின் படையெடுப்பு வரையிலும் அது பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது.
முதலாம் டாரியஸின் கல்வெட்டுகள் சிந்து பகுதியில் பாரசீகர்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறது.
'கதாரா, ஹராவதி, மகா" பகுதிகளின் மக்கள் ஆக்கிமீனைட் பேரரசின் குடிமக்கள்" என்றும் கூறுகின்றது.
ஈரானில் உள்ள பெர்சிபோலிசில் காணப்படும் முதலாம் டாரியஸின் கல்வெட்டில்தான் 'இந்து" என்ற வார்த்தை முதன்முறையாக காணப்படுகிறது.
தட்சசீலம்
தட்சசீலம் இன்றைய பாகிஸ்தானில் உள்ளது.
தட்சசீலம் முக்கியமான கல்வி, கலாச்சாரம் மையமாக உருவானது.
கல்விக்காக மாணவர்கள் வெகுதூரங்களிலிருந்து அங்கு வந்தார்கள்.
1940களில் சர் ஜான் மார்ஷல் நடத்திய அகழ்வாய்வுகளின் போது இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.
“எந்த ஒரு நாகரிகத்திலும் இல்லாத உயர்ந்த அறிவார்நத சாதனைகளைப் படைத்ததாக" தட்சசீலம் கருதப்படுகிறது.
பாணினி தனது புகழ்பெற்ற படைப்பான அஷ்டத்யாயி என்ற இலக்கிய நூலை இங்குதான் எழுதியதாகத் தெரிகிறது.
பாரசீகத் தொடர்பின் தாக்கம்
பாரசீகத் தொடர்பு பண்டைய இந்தியாவின் கலை, கட்டிடக்கலை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தப் பண்பாட்டுத் தாக்கம் காந்தாரப் பகுதியில் அதிகமாக இருந்தது.
மிக முக்கியமான தாக்கம் இந்தயாவின் வடமேற்குப் பகுதியில் பயன்படுத்தப்படும் கரோஷ்டி எழுத்தைக் காந்தாரப் பகுதியில் தன்னுடைய கல்வெட்டுகளுக்காக அசோகர் பயன்படுத்தினார்.
இது பாரசீகத்தின் அகமேனியப் பேரரசில் பரவலாகப் பயன்பட்டு வந்த அராமிக்கிலிருந்து உருவானதாகும்.
அராமிக் போலவே கரோஷ்டியும் வலதுபுறமிருந்து இடதுபுறமாக எழுதப்படும் எழுத்துமுறையாகும்.
பாரசீகத்தின் சிகலோய் என்ற வெள்ளி நாணயம் இப்பகுதியிலிருந்து மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டதே ஆகும்.
இந்தியாவின் மிகப் பழமையான நாணயங்கள் மகாஜனபத அரசின் காலத்தவையாகும்.
நாணயத்திற்கான இந்தியச் சொல்லான 'கார்சா" பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும்.
அலெக்சாண்டர் படையெடுப்பு
தனநந்தரின் ஆட்சிக்காலத்தில் அலெக்சாண்டர் வட-மேற்கு இந்தியா மீது (பொ.ஆ.மு. 327-325) படையெடுத்தார்.
ஆலெக்சாண்டர் பஞ்சாப் பகுதியில் தனது வெற்றிக்குப் பிறகு, மகதப் பேரரசைத் தாக்கும் நோக்கத்தோடு, மேலும் கிழக்கு நோக்கி நகர விரும்பினார்.
எனினும், அவருடைய படையினர் கிழக்கின் மாபெரும் பேரரசைப் (நந்தர்) பற்றியும், அவருடைய பெரிய ராணுவத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்ததால், அத்தகைய வலுவான எதிரியுடன் போரில் ஈடுபட மறுத்துவிட்டார்கள்.
பொ.ஆ.மு. 326இல் பாரசீகர்களைத் தோற்கடித்துவிட்டு, அலெக்சாண்டர் இந்தியத் துணைகண்டத்திற்குள் நுழைந்தபோது தட்சசீலத்தின் அரசரான அம்பி அவரிடம் சரணடைந்து, அவரது மேலாதிக்கததை ஏற்றுக் கொண்டார்.
அலெக்சாண்டரின் வரலாற்றுச் சிறப்புமிக்க போர் ஜீலம் நதிக்கரைக்கும் பியாஸ் நதிக்கரைக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்த போரஸுடன் நடந்தது.
இரு ராணுவங்களும் ஹைடாஸ்பெஸ் போரில் சந்தித்தன.
இதில் போரஸ் சிறைப்பிடிக்கப்பட்டார்.
பின்னர், போரஸின் கண்ணியத்தால் ஈர்க்கப்பட்ட அலெக்சாண்டர் தனது மேலாதிக்கத்தை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவரது அரியணையைத் திருப்பித் தந்தார்.
போரினால் களைப்படைந்த அவரது வீரர்கள் மேலும் அணிவகுத்துச்செல்ல மறுத்தார்கள்.
இராணுவம் தயங்கும்போது மேற்கொண்டு செல்ல அலெக்சாண்டர் விரும்பவில்லை.
நாடு திரும்பும் வழியில் அலெக்சாண்டர் கண்டறிய முடியாத கடும்காய்ச்சல் காரணமாக பாபிலோனில் இறந்தார்.
இந்தியாவில் அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கம்
மேற்குலகிற்காக வணிகப் பெருவழிகள் திறக்கப்பட்டன.
நான்கு வணிகப் பெருவழிகள் பயன்பாட்டில் இருந்தன.
இதனால் கிரேக்க வணிகர்களும் கைவினைக் கலைஞர்களும் இந்தியா வந்தனர்.
காபுல் அருகில் இருந்த அலெக்சாண்டிரியா, பாகிஸ்தானின் பெஷாவர் அருகே இருந்த பூகிஃபெலா, சிந்துவில் இருந்த அலெக்சாண்டிரியா ஆகியன சில முதன்மையான கிரேக்கக் குடியிருப்புகளாகும்.
மௌரியப் பேரரசு
அலெக்சாண்டரின் மரணத்தால் வடமேற்கில் உருவான வெற்றிடம் சந்திரகுப்த மௌரியர் மகத அரியணையைக் கைப்பற்ற உதவியது.
வடமேற்கில் மேலும் பல சிறு அரசுகளையும் கைப்பற்றி, அந்தப் பகுதி முழுவதையும் தனது பேரரசுடன் இணைத்துக் கொள்ளவும் அவ்வெற்றிடம் அவருக்கு உதவியது.
சந்திரகுப்தர் பொ.ஆ.மு. 321இல் மௌரியப் பேரசை அமைத்து, முதல் பேரரசர் ஆனார்.
சந்திரகுப்தர் தனது பேரரசை குஜராத் வரை விரிவுபடுத்தியிருந்தார் என்று ஜுனாகத் பாறை எழுத்துகள் மூலம் அறிகிறோம்.
அவர் அலெக்சாண்டரின் தளபதிகளில் ஒருவரான செலியுகஸுடன் நடத்திய போர் ஆகும்.
அலெக்சாண்டரின் மரணத்திற்கு பிறகு, செலியுகஸ் பஞசாப் வரை பரவியிருந்த பகுதியில் தமது அரசை நிறுவினார்.
பொ.ஆ.மு. 301க்குச் சில காலம் முன்பாகச் சந்திரகுப்தர் அவர்மீது போர் தொடுத்துச் தோற்கடித்து, பஞசாப் பகுதியை விட்டே விரட்டினார்.
இறுதியில் இருவரும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர்.
அதன்படி சந்திரகுப்தர் செலியுகஸிற்கு 500 போர் யானைகளை வழங்கினார். செலியுகஸ் தனது தூதரைச் சந்திரகுப்தரின் அரசவைக்கு அனுப்பினார்.
அந்தத் தூதர்தான் மெகஸ்தனிஸ்
மெகஸ்தனிஸ்
அவர் சந்திரகுப்தரின் அரசயில் இருந்த கிரேக்க அரசர் செலியுகஸின் தூதராவார்.
அவர் 14 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார்.
அவரது இண்டிகா என்னும் நூல் மௌரியப் பேரரசைப் பற்றி அறிய ஒரு முக்கிய ஆதாரமாகும்.
நாளந்தா பல்கலைக்கழகம்
நாளந்தா இந்தியாவின் பண்டைய மகதப் பேரரசில் (இன்றைய பிகார்) இருந்த மிகப் பெரிய பௌத்த மடாலயமாகும்.
மகதப் பேரரசில் புகழ்பெற்ற கல்விச் சாலையாக இருந்தது
நாளந்தாவின் சரியான சமஸ்கிருத கலவை = நா + அலம் + தா.அதன் பொருள் “அறிவை அளிப்பவர்”.
சந்திரகுப்தர்
கிரேக்க வரலாற்றாளர்கள் அவரது பெயரை 'சண்டரகோட்டஸ்" என்றும் 'சண்டரகோப்டஸ்" என்றும் குறிப்பிடுகின்றனர்.
இவை 'சந்திரகுப்தர்" என்ற சொல்லின் திரிபுகள்.
சந்திரகுப்தர் ஆட்சியின் சிறப்பிற்குச் சாணக்கியரின் அறிவும், மேதமையும்தான் காரணம் என்கின்றனர்.
சாணக்கியர்
விஷ்ணுகுப்தர் என்று அழைக்கப்பட்ட சாணக்கியர் அல்லது கௌடில்யர் ஒரு பிராமணர்.
நந்தர்களின் கடும் எதிரி.
நந்தர்களை வீழ்த்துவதற்கான திட்டங்களை இவர்தான் வகுத்தார் என்றும், சந்திரகுப்தர் மகதப் பேரரசராவதற்கு உதவினார் எனவும் கூறப்படுகிறது.
அரசியல் நிர்வாகம் குறித்த புகழ்பெற்ற நூலான அர்த்தசாஸ்திரத்தை சாணக்கியர் எழுதினார் என்பது மரபு.
மகத நாட்டிற்கு வரவிருந்த படையெடுப்பைத் தடுப்பதற்கு இவரது சூழ்ச்சி மிக்க தந்திரங்களும், அற்புதமான யுக்தியும் முத்ராராட்சசம் எனும் நாடகத்தின் கருப்பொருளாகும்.
பிந்துசாரர்
சந்திரகுப்தரின் புதல்வர் பிந்துசாரர் பொ.ஆ.மு. 297இல் அமைதியான, இயல்பான ஆட்சி மாற்றம் மூலம் அவருக்குப் பின் ஆட்சியில் அமர்ந்தார்.
சமண கதைகளின்படி, சந்திரகுப்தர், கர்நாடகாவின் சரவணபெலகொலாவிற்கு அருகிலுள்ள சந்திரகிரியில் துறவியாக வாழ்ந்ததாகத் தெரிகிறது.
பிந்துசாரர் நல்ல திறமையான அரசர்.
மேற்கு ஆசியாவின் கிரேக்க அரசுகளுடன் நல்லுறவு பேணும் தனது தந்தையின் வழியைத் தொடர்ந்தார்.
இவருக்கு சாணக்கியரும் மற்ற அமைச்சர்களும் ஆலோசனைகள் வழங்கினர்.
பேரரசின் பல பகுதிகளுக்கு இவருடைய புதல்வர்கள் அரசப்பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டனர்.
பிந்துசாரருக்குப் பிறகு மௌரியப் பேரரசு சிதையாமல் அப்படியே அவருடைய மகனான அசோகர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
அசோகர்
பிந்துசாரர் 25 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.அவர் பெ.ஆ.மு. 272இல் இறந்திருக்க வேண்டும்.
அசோகர் அவர் தேர்நதெடுத்த வாரிசு அல்ல.
நான்காண்டுகளுக்குப் பிறகே, பொ.ஆ.மு. 268இல் ஆட்சிக்கு வந்தர் என்பதன் மூலம் அரசுரிமைக்காகப் புதல்வர்களுக்கிடையில் போட்டி நடந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.
அசோகரது ஆட்சிக்காலத்தின் முக்கியமான நிகழ்வு அவரது ஆட்சியின் எட்டாவது ஆண்டில் நடந்த கலிங்கத்தின் (இன்றைய ஒடிசா) மீதான அவரது படையெடுப்பு ஆகும்.
இது ஒன்றுதான் மௌரியர்கள் அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்த படையெடுப்பு ஆகும்.
போரில் கொல்லப்பட்டவர்கள், காயம் பட்டுப் பின்னர் இறந்தவர்கள், நாடுகடத்தப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை பல பத்தாயிரங்களாகும்.
போரினால் ஏற்பட்ட துன்பங்களால் நெகிழ்ந்த அவர் மனிதாபிமான மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக மாறி, பௌத்தராக மதம் மாறினார்.
ஆவர் புதிதாய் அறிந்த மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் அவரது கல்வெட்டுக் கட்டளைகளில் வரிசையாகப் பதிவு செய்யப்பட்டன.
இவை அமைதி, அறவழிப்பட்ட நேர்மை, தம்மம் (சமஸ்கிருதத்தில் தர்மம்) மீதான அவரது பெருவிருப்பத்தை நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.
அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள்
14 முக்கியமான பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள், கலிங்க கல்வெட்டுக் கட்டளைகள் என்று அழைக்கப்படும் 2 கல்வெட்டுக் கட்டளைகள், 7 தூண் கல்வெட்டுக் கட்டளைகள், சில சிறு பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள், மிகச் சில சிறு தூண்களில் பதியப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் என்று மொத்தம் 33 கல்வெட்டுக் கட்டளைகள் இதுவரை கிடைத்துள்ளன.
முக்கியமாகப் பாறைகளில் பதியப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் ஆப்கனிஸ்தானின் காந்தஹாரர், வடமேற்கு பாகிஸ்தானின் ஷாபஸ்காரஹி மற்றும் மன்ஷோவிலிருந்து வடக்கே உத்தரகாண்ட் மாவட்டம், மேற்கே குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா கிழக்கே ஒடிசா, தெற்கே கர்நாடகா, ஆந்திரப் பிரதேசத்தின் கரனூல் மாவட்டம் வரை பரவியுள்ளன.
சிறு பாறையில் பதியப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் நேபாளம் (லும்பினி அருகில்) வரை பரவியிருக்கின்றன.
இந்தக் கல்வெட்டுக் கட்டளைகள் பெரும்பாலும் பிராமி எழுத்துமுறையிலும், சில கல்வெட்டுக் கட்டளைகள் மகதி மற்றும் பிராகிருதத்திலும் அமைந்துள்ளன.
காந்தஹார் பிரகடனங்கள் கிரேக்கத்திலும், அராமிக்கிலும் உள்ளன.
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள இரண்டு கல்வெட்டுக் கட்டளைகள் கரோஷ்டி எழுத்தில் உள்ளன.
இந்த மௌரியப் பேரரசின் கல்வெட்டுக் கட்டளைகள் புவியியல் நோக்கில் பரவியுள்ள விதம், அசோகர் ஆட்சி செய்த ஒரு பெரிய பேரரசின் பரப்பளவைக் காட்டுகிறது.
அவரது பேரரசின் எல்லைக்கு வெளியேயான நிலப்பரப்புகளைக் கூறுகிறது.
அவை, 'சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள், கேரளபுத்திரர்கள் (சேரர்கள்), தாமிரபரணி, யோன (யவன) அரசர் அந்தியோகா (அந்தியோகஸ்) இந்த அந்தியோகாஸ் அருகில் இருந்த நாடுகளின் அரசர்கள்".
இந்த அரசாணை அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றில் அசோகருக்கு இருந்த நம்பிக்கை, மக்களது நல்வாழ்வின் மீது அவருக்கிருந்த அக்கறை ஆகியவற்றை வலியுறுத்திக் கூறுகின்றன.
மூன்றாம் பௌத்த சங்கம்
அசோகர் ஆட்சியில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று, பொ.ஆ.மு 250இல் தலைநகரமான பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த சங்கத்தைக கூட்டியது ஆகும்.
அசோகரது ஆழமான பௌத்தமத ஈடுபாட்டால் பௌத்தமதத்திற்கு அரச ஆதரவு கிட்டியது.
குப்தர் வம்சத்தின் தோற்றம்
அறிமுகம்
குப்த அரசர்கள் எளிய குடும்பத்திலிருந்து உருவானவர்கள்.
குப்த வம்சத்தின் முதல் அரசர் ஸ்ரீகுப்தர் (பொ.ஆ. 240–280).
இவரைத்தொடர்ந்து இவரது புதல்வர் கடோத்கஜர் (பொ.ஆ.280–319) ஆட்சிக்கு வந்தார்.
கல்வெட்டுகளில் ஸ்ரீகுப்தர், கடோத்கஜர் ஆகிய இருவரும் மகாராஜா என்று குறிக்கப்படுகிறார்கள்.
மகதா, அலகாபாத், ஆவாத் புராணங்கள் குப்தரின் ஆதிக்கத்தை பற்றி கூறுகின்றன
குப்தர் கால சான்றுகள்
குப்தர் காலத்தை பற்றி அறிய ஏராளமான வரலாற்று சான்றுகள் உள்ளன.
அவற்றில் இலக்கியம், கல்வெட்டு மற்றும் நாணயவியல் ஆதாரங்களும் அடங்கும்.
புராணங்கள் குப்த மன்னர்களின் அரச வம்சாவளியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
தேவிச்சந்திரகுப்தம் மற்றும் விசாகதத்தர் எழுதிய முத்ராராட்சசம் போன்ற இலக்கியப் படைப்புகள் குப்தர்களின் எழுச்சி குறித்த தகவல்களை வழங்குகின்றன.
இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியின் போது இந்தியாவுக்கு விஜயம் செய்த சீனப் பயணி பாஹியான், குப்த பேரரசின் சமூக, பொருளாதார மற்றும் மத நிலைமைகள் குறித்த மதிப்புமிக்க பதிவுகளைச் செய்துள்ளார்
இலக்கியச் சான்றுகள்
நாரதர், விஷ்ணு, பிருகஸ்பதி, காத்யாயனர் ஸ்மிருதிகள்
அரசருக்குக் கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள காமந்தகாரின் நீதிசாரம் என்ற தரும சாத்திரம் (பொ.ஆ.400)
விசாகதத்தரின் தேவிசந்திரகுப்தம், முத்ராராட்சசம் ஆகியவை குப்தரின் எழுச்சி குறித்த விவரங்களை அளிக்கின்றன.
புத்த, சமண இலக்கியங்கள்
காளிதாசர் படைப்புகள்
இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த சீனப் பயணி பாஹியான் குறிப்புகள்.
கல்வெட்டுச் சான்றுகள்
மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு - முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கிறது.
அலகாபாத் தூண் கல்வெட்டு: சமுத்திரகுப்தரின் ஆட்சி, அவரது ஆளுமை, சாதனைகள் ஆகியவற்றை இது விளக்குகிறது. இதனைப் பொறித்தவர் ஹரிசேனர். இது 33 வரிகளில் நாகரி வரிவடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.
நாணய ஆதாரங்கள்
குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தங்க நாணயங்கள் குப்த அரசர்களின் பட்டங்கள் குறித்தும் அவர்கள் நடத்திய சடங்குகள் குறித்தும் தெரிவிக்கின்றன.
தொல்லியல் சான்றுகள்
குப்த அரசர்களால் வெளியிடப்பட்ட தங்க, வெள்ளி, செப்பு நாணயங்கள்.
சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டு
இரண்டாம் சந்திரகுப்தரின் உதயகிரி குகைக் கல்வெட்டு, மதுரா பாறைக் கல்வெட்டு, சாஞ்சி பாறைக் கல்வெட்டு.
ஸ்கந்த குப்தரின் பிதாரி தூண் கல்வெட்டு
கத்வா பாறைக் கல்வெட்டு
முதலாம் சந்திரகுப்தர் (கி.பி. 320-330)
குப்த மரபை தோற்றுவித்தவர் ஸ்ரீகுப்தர்.
அடுத்து பதவிக்கு வந்தவர் கடோத்கஜர்.
இவர்கள் இருவரும் 'மகாராஜா" என்று அழைக்கபட்டனர்.
இவர்களது ஆட்சிபற்றி அதிக விவரங்கள் கிடைக்கவில்லை.
அடுத்த ஆட்சியாளர் முதலாம் சந்திரகுப்தர்.
மகாராஜாதிராஜா அல்லது அரசர்களுக்கு அரசன் என்று முதலில் அழைக்கப்பட்டவர்.
அவரது பரந்த போர் வெற்றிகளை இந்த விருது வெளிப்படுத்துவதாக உள்ளது.
லிச்சாவிகளுடன் மண உறவு கொண்டதன்மூலம் அவர் தனது வலிமையைப் பெருக்கிக் கொண்டார்.
அக்குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவி என்ற இளவரசியை அவர் மணந்துகொண்டார்.
இதனால் குப்தர்களின் வலிமையும் புகழும் அதிகரித்தன.
மெஹ்ருளி இரும்புத்தூண் கல்வெட்டு அவரது பரவலான போர் வெற்றிகள் பற்றி குறிப்பிடுகிறது.
கி.பி. 320 ஆம் ஆண்டு தொடங்கும் குப்த சகாப்தத்தை நிறுவியவர் முதலாம் சந்திரகுப்தர் என்ற கருத்தும் நிலவுகிறது.
சமுத்திரகுப்தர் (கி.பி. 330-380)
சந்திரகுப்தர் கி.பி 335 இல் அவருக்குப் பிறகு அவரது மகன் சமுத்திரகுப்தர் அரசரானார்
குப்த மரபிலேயே மிகச் சிறந்த அரசராக விளங்கியவர் சமுத்திரகுப்தர்.
சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவரான ஹரிசேனர்
இயற்றிய பிரயாகை மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி) அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது.
அவரது ஆட்சி பற்றி அலகாபாத் கல்தூண் கல்வெட்டு விவரமாகக் குறிப்பிடுகிறது.
சமுத்திரகுப்தரின் படையெடுப்புகள்
முதலாவது படையெடுப்பு
சமுத்திரகுப்தர் தமது முதலாவது படையெடுப்பில் அச்சுதன், நாகபாணன் இருவரையும் முறியடித்தார்.
அச்சுதன் பெரும்பாலும் ஒரு நாக மரபு அரசர்.
மேலை கங்கைச் சமவெளிப்பகுதியை ஆட்சி புரிந்துவந்த கோடா குடும்பத்தை சேர்ந்தவர் நாகபாணர்.
இவ்விரு அரசர்களையும் முறியடித்து அவர்களது நாடுகளை சமுத்திரகுப்தர் இணைத்துக் கொண்டார்.
இந்த குறுகிய கால படையெடுப்பினால் சமுத்திரகுப்தர் மேலை கங்கைச் சமவெளி முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.
இரண்டாவது படையெடுப்பு
பின்னர் சமுத்திரகுப்தர் தென்னிந்திய அரசர்களுக்கெதிராக படை நடத்திச் சென்றார்.
அவரது தென்னிந்தியப் படையெடுப்பின் போது பன்னிரண்டு ஆட்சியாளர்களை முறியடித்ததாக அலகாபாத் கல்தூண் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
அவர்களது பெயர்களும் தெளிவாகத் தரப்பட்டுள்ளன
கோசல நாட்டு மகேந்திரன்
மகாகாந்தாரத்தின் வியாகராஜன்
கேரளாவின் மந்தராஜன்
பிஸ்தபுரத்து மகேந்திரகிரி
கோட்டுராவைச் சேர்ந்த சுவாமிதத்தன்
ரெண்டபள்ளாவின் தாமனன்
காஞ்சியைச் சேர்ந்த விஷ்ணுகோபன்
அவமுக்த நாட்டு நீலராஜன்
வெங்கிநாட்டு ஹஸ்திவர்மன்
பலாக்காவின் உக்கிரசேனன்
தேவராஷ்டிரத்து குபேரன்
குஸ்தலபுரத்து தனஞ்சயன்.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை சமுத்திரகுப்தரின் கொள்கை வேறுபட்டிருந்தது.
அவர் தென்னிந்திய அரசர்களை அழித்து அப்பகுதிகளை பேரரசுடன் இணைத்துக் கொள்ளவில்லை.
மாறாக அவர்களை முறியடித்த பின்னர் மீண்டும் ஆட்சிப் பகுதிகளை அவரவரிடமே ஒப்படைத்தார்.
தனது மேலாண்மையை ஏற்றுக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.
மூன்றாவது படையெடுப்பு
சமுத்திரகுப்தரின் மூன்றாவது படையெடுப்பு எஞ்சியிருந்த வட இந்திய அரசர்களை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
ஒன்பது அரசர்களுக்கு எதிராக போரிட்ட அவர் அவர்களை அழித்து ஆட்சிப்பகுதிகளை பேரரசோடு இணைத்துக் கொண்டார்.
அவர்களது பெயர்களும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன – ருத்ரதேவன், மதிலன், நாகதத்தன், சந்திரவர்மன், கணபதிநாகன், நாகசேனன், அச்சுதன், நந்தின், பாலவர்மன்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் நாகர் குடும்பத்தை சேர்ந்தவர்கள். வடஇந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் ஆட்சிபுரிந்து வந்தவர்கள்.
தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டும் அரசரால் நடத்தப்படும் வேதகாலச் சடங்கான குதிரைகளைப் பலியிடும் வேள்வியைச் சமுத்திரகுப்தர் மீண்டும் நடைமுறைப் படுத்தினார்.
அவர் தங்க நாணயங்களை வெளியிட்டார் .
வரலாற்றறிஞர்கள் சமுத்திரகுப்தரை இந்திய நெப்போலியன் என அழைக்கின்றனர்.
சமுத்திரகுப்தரின் பேரரசுப்பரப்பு
இந்த போர் வெற்றிகளுக்குப் பிறகு மேலை கங்கைச் சமவெளி, தற்கால உத்திரப் பிரதேசத்தின் பெரும்பகுதி, மத்திய இந்தியாவின் ஒரு பகுதி, வங்காளத்தின் தென்மேற்குப் பகுதி ஆகிய பகுதிகளும் சமுத்திரகுப்தரின் ஆட்சிக்குட்பட்டது.
இப்பகுதிகளில் அவரது நேரடி நிர்வாகம் நடைபெற்றது.
தெற்கில் கப்பம் செலுத்தும் அரசுகள் இருந்தன.
மேற்கிலிருந்த சாக மற்றும் குஷான சிற்றரசுகளும் அவரது ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டே இருந்தன.
தக்காணத்தின் கிழக்குக் கடற்கரையிலிருந்த அரசுகளும், பல்லவ அரசு உட்பட அவரது மேலாண்மையை ஏற்றுக் கொண்டிருந்தன.
சமுத்திரகுப்தரின் மதிப்பீடு
சமுத்திரகுப்தர் ஒரு விஷ்ணு பக்தராவார்.
போர்களில் வெற்றி பெற்றதன் நினைவாக நடத்தப்படும் வேதகாலச்சடங்கான குதிரைகளைப்பலியிடும் வேள்வியைச் சமுத்திரகுப்தர் மீண்டும் நடைமுறைப்படுத்தினார்.
அவர்தங்க நாணயங்களைவெளியிட்டார்.
அவற்றுள் ஒன்றில் அவர் வீணை வாசிப்பது போன்றஉருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
அவர் மிகச் சிறந்த படையெடுப்பாளர் மட்டுமல்ல, கவிதைப்பிரியரும் இசைப்பிரியருமாவார்.
அதனால் ‘கவிராஜா’ எனும் பட்டம் பெற்றார்.
இரண்டாம் சந்திரகுப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர் பொ.ஆ.375 முதல் 415 வரை 40 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.
தனது சகோதரரான ராமகுப்தருடன் (370-375) வாரிசுரிமைக்குப் போராடி ஆட்சிக்கு வந்தார்.
விக்ரமாதித்யன் என்றும் அழைக்கப்பட்டார்.
பாடலிபுத்திரத்தைத் தலைநகரமாகக் கொண்ட இரண்டாம் சந்திரகுப்தர் தனது அரசின் எல்லைகளை போர்கள், திருமண உறவுகள் ஆகியனவற்றின் மூலம் விரிவுபடுத்தினார்
ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தக்காணப் பகுதியை ஆண்ட வாகடக இளவரசருக்குத் தன் மகள் பிரபாவதியைத் திருமணம் செய்து கொடுத்தார்.
மேற்கு இந்தியாவை வெற்றிகொள்ளல்
மேற்கு இந்தியாவிலிருந்து சாக சத்திரப்புகளை எதிர்த்துப் போரிட்டு பெற்ற வெற்றியே இரண்டாம் சந்திரகுப்தரின் போர்த்துறை சாதனைகளில் மகத்தானதாகும்.
சாக சத்திரப்பு மரபின் கடைசி ஆட்சியாளரான மூன்றாம் ருத்ரசிம்மன் இப்போரில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.
மேற்கு மாளவம், கத்தியவார் தீபகற்பம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய அவரது ஆட்சிப் பகுதிகள் குப்தப் பேரரசுடன் இணைத்துக் கொள்ளப்ட்டன.
இந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு இரண்டாம் சந்திரகுப்தர் அசுவமேத யாகம் நடத்தியதோடு சாகர்களை அழித்தவர்" என்று பொருள் கொண்ட 'சாகரி" என்ற விருதுப் பெயரையும் சூட்டிக்கொண்டார்.
தம்மை 'விக்கிரமாதித்தன்" என்றும் புகழ்படக் கூறிக்கொண்டார்.
இரண்டாம் தலைநகரம் - உஜ்ஜைனி
கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவை வென்ற பின்னர், இரண்டாம் சந்திரகுப்தர் ஹணர், காம்போஜர், கிராதர் போன்ற வட நாட்டு அரசுகளை வென்றார்.
வெற்றி வீரராக மட்டுமின்றி, சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார்.
விக்ரமன், தேவகுப்தன், தேவராஜன், சிம்ஹவிக்ரமன், விக்ரமாதித்யன், சகாரி ஆகியன இவரது வேறுபெயர்களாகும்.(இவை நாணயங்களில் குறிப்பிட்டுள்ளன)
வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் இரண்டாம் சந்திரகுப்தரே.
இவரது ஆட்சிக்காலத்தில் தான் பேரரசின் விரிவாக்கம் உச்சத்தை எட்டியது.
மிகச் சிறந்த அறிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் (நவரத்தினங்கள்) இவருடைய அவையை அலங்கரித்ததாக கூறப்படுகிறது.
பாஹியானின் வருகை
இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தில் புகழ்வாய்ந்த சீனப் பயணியான பாஹியான் இந்தியாவிற்கு வருகைபுரிந்தார்.
இந்தியாவில் அவர் தங்கியிருந்த ஒன்பது ஆண்டுகளில் குப்தப் பேரரசில் மட்டும் ஆறு ஆண்டுகளைக் கழித்தார்.
புத்தர் பிறந்து வாழ்ந்த இடத்தை தரிசித்து புத்த சமய சுவடிகளை சேகரித்து எடுத்துச் செல்லும் நோக்கத்துடனேயே பாஹியான் இந்தியாவிற்கு வந்தார்.
பாடலிபுத்திரத்தில் மூன்றாண்டுகள் தங்கி, வடமொழியைக் கற்றதோடு, புத்த இலக்கியங்களையும் படியெடுத்தார்.
குப்தப் பேரரசில் நிலவிய சமய, சமூக, பொருளாதார நிலைமைகளபை; பற்றி அவர் பல அரிய தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
கங்கைச் சமவெளியை அவர் 'பிராமணர்களின் பூமி" என்று குறிப்பிட்டுள்ளார்.
கபிலவஸ்து, குசிநகரம் போன்ற சில புத்தசமய புனித இடங்கள் அழிந்து கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பேரரசின் பொருளாதாரச் செழிப்பை அவர் நன்கு விவரித்துள்ளார்.
பல்வேறு கோணங்களில் பாஹியானது குறிப்புகள் பயனுடையவை என்றபோதிலும், இரண்டாம் சந்திரகுப்தன் பெயரை அவர் குறிப்பிடவில்லை. அரசியல் விவகாரங்களில் அவர் அதிக அக்கறை காட்டவில்லை
நாட்டின் பொதுவான நிலைமைகளை அறிந்து கொள்ள அவரது குறிப்புகள் பயனுள்ளவையாகத் திகழ்கின்றன.
பிற்கால குப்தர்கள்
இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பின்னர் அவரது புதல்வர் முதலாம் குமாரகுப்தர் ஆட்சி செய்தார்.
முதலாம் குமாரகுப்தர் நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர்.
இவர் சக்ராதித்யர் என்றும் அழைக்கப்பட்டார்.
குப்தவம்சத்தின் கடைசிப் பேரரசரான ஸ்கந்தகுப்தர் முதலாம் குமாரகுப்தரின் புதல்வராவார்.
குப்தவம்சத்தின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி ஆட்சியாளர் விஷ்ணு குப்தர் ஆவார்.
குப்தரின் நிர்வாக முறை
அரசர்கள் மகாராஜாதிராஜ, பரம-பட்டாரக, பரமேஷ்வர போன்ற பட்டங்களை ஏற்றார்கள்.
பரம-தைவத (கடவுளின் பரமபக்தன்), பரம-பாகவத(வாசுதேவ கிருஷ்ணனின் பரமபக்தன்) போன்ற அடைமொழிகளால் தம்மைக் கடவுளோடும் இணைத்துக் கொண்டனர்.
அலகாபாத் கல்வெட்டுகளில் சமுத்திரகுப்தர் புருஷா (அனைவருக்;கும் மேலானவர்) என்ற கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார். அரசருக்கு, ஒரு தெய்வீகத் தகுதி நிலையை நிறுவும்; முயற்சிகளாக இவற்றைக் கருதலாம்.
அமைச்சர்கள், அதிகாரிகள்
குமாரமாத்யா என்ற சொல் ஆறு வைசாலி முத்திரைகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பதவி தனக்கெனத் தனியாக அலுவலகம் (அதிகரணா) உள்ள ஒரு உயரதிகாரியைக் குறிப்பிடுவது போல் உள்ளது.
அமாத்யா என்ற சொல் பல முத்திரைகளில் காணப்படுகிறது. குமாரமாத்தியா என்பது அமாத்யாக்களில் மிக முக்கியமான பதவியாக, அரசகுல இளவரசர்களின் தகுதிக்குச் சமமானதாக இருக்கும் போல் தெரிகிறது.
ஒரு லிச்சாவி முத்திரை லிச்சாவியர்களின் பட்டமேற்பு விழாவிற்கான புனித குளத்திற்குப் பொறுப்பான ஒரு குமாரமாத்யா பற்றிக் குறிப்பிடுகிறது.
குமாரமாத்யா பொறுப்பில் உள்ளவர்கள் சில சமயங்களில் கூடுதல் பொறுப்புகளையும் பதவிப் பெயர்களையும் கொண்டிருந்தனர்.
இந்தப் பொறுப்புகள் வாரிசு அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக, அலகாபாத் பிரசஸ்தியை (மெய்க்கீர்த்தி அல்லது புகழுரைக் கல்வெட்டு) எழுதிய ஹரிசேனர் ஒரு குமாரமாத்யா, சந்திவிக்ரஹிகா, மஹாதண்டநாயகா ஆகிய பட்டங்களைக் கொண்டவராக இருந்துள்ளார்.
அவர் மஹாதண்டநாயகா துருவபூதியின் புதல்வர் ஆவார்.
அமைச்சர் குழு
குப்த அரசர்களுக்கு ஒரு அமைச்சர் குழு உதவி புரிந்தது. அலகாபாத் கல்வெட்டு சபா என்ற ஒரு குழு குறித்துக் கூறுகிறது.
இது அமைச்சர் குழுவாக இருக்கலாம். மஹாசந்திவிக்ரஹா என்பவர் அமைச்சர்களில் உயர் நிலையில் இருந்துள்ளார். இவர் அமைதி மற்றும் போருக்கான அமைச்சர். இவர்தான் போர் தொடுத்தல், உடன்பாடு காணுதல், ஒப்பந்தங்கள் மேற்கொள்ளுதல் ;என்று பிற நாடுகளுடனான தொடர்புகளுக்குப் பொறுப்பானவர்.
நீதித்துறை, ராணுவம் ஆகியவற்றின் பொறுப்பு வகித்தவர் தண்டநாயகா அல்லது மஹாதண்டநாயகா என்றழைக்கப்பட்டுள்ளார்.
ஒரு முத்திரை அக்கினிகுப்தர் என்ற மஹாதண்டநாயகா குறித்துப் பேசுகிறது. அலகாபாத் கல்வெட்டு மூன்று மஹாதண்டநாயகாக்களைக் குறித்து கூறுகிறது. இவையனைத்தும் இந்தப் பதவிகள் எல்லாம் வாரிசுரிமையாக வருபவை என்பதைக் காட்டுகின்றன.
மற்றொருவருக்கு மஹாஅஸ்வபதி (குதிரைப்படைத் தலைவர்) என்ற பதவி இருந்துள்ளது.
பேரரசின் பிரிவுகள்
குப்தர்களின் பேரரசு 'தேசம்" அல்லது 'புக்தி" எனப்படும் மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. உபாரிகா என்றழைக்கப்பட்ட ஆளுநர்களால் இவை நிர்வகிக்கப்பட்டன. உபாரிகாக்கள் அரசரால் நேரடியாக நியமிக்கப்பட்டனர். உபாரிகாக்கள் மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரிகளையும் வாரிய அதிகாரிகளையும் நியமித்தனர்.
உபாரிகாக்கள் நிர்வாக அதிகாரத்தோடு, யானைகள், குதிரைகள், வீரர்கள், என்று ராணுவ நிர்வாகத்தையும் கையில் வைத்திருந்தனர்.
தாமோதர்பூர் செப்பேடுகளில் மூன்று உபாரிகாக்களுக்கு மகாராஜா என்ற பட்டம் இருந்ததாகக் குறிப்பிடப்படுவதன் மூலம் நிர்வாகத்தில் இவர்களுக்கு இருந்த உயர்நிலை தெரிகிறது.
குப்த ஆண்டு 165 என்று தேதியிடப்பட்டுள்ள புத்தகுப்தரின் ஏரான் தூண் கல்வெட்டு காளிந்தி மற்றும் நர்மதை நதிகளுக்க்pடையிலான நிலங்களை ஆட்சிசெய்த லோகபாலா என்று மகாராஜா சுரஷ்;மிசந்திரா என்பவரைக் குறிப்பிடுகிறது. இங்கு லோகபாலா என்பது மாநில ஆளுநரைக் குறிப்பிடுவதாகலாம்.
குப்தப்பேரரசின் மாநிலங்கள் விஷ்யபதி என்ற அதிகாரியின் கீழ் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. இவை விஷ்;யா என அழைக்கப்பட்டன.
விஷ்யபதிகள் பொதுவாக மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சிலசமயங்களில் அரசரே நேரடியாக விஷ்;யபதிகளை நியமித்தார்.
விஷ்யபதியின் நிர்வாகக் கடமைகளுக்கு நகரத்தின் சில முக்கியமான மனிதர்கள் உதவிபுரிந்தார்கள்.
மாவட்ட மட்டத்திற்குக் கீழே இருந்து நிர்வாக அலகுகள்
மாவட்ட மட்டத்திற்குக் கீழ் விதி, பூமி, பதகா, பீடா என்று பல்வேறு விதமான நிர்வாக அலகுகள் இருந்தன.
ஆயுக்தகா, விதி-மஹாதரா எனப்படும் அதிகாரிகள் குறித்த குறிப்புகளும் காணப்படுகின்றன. கிராம மட்டத்தில் கிராமிகா, கிராம் அத்ய~h போன்ற அதிகாரிகள் இருந்துள்ளனர். இவர்களை கிராம மக்களே தேர்ந்தெடுத்தனர்.
புத்தகுப்தர் காலத்து தாமோதர்பூர் செப்பேடு, மஹாதாரா என்பவர் தலைமையிலான அஷ்;டகுல-அதிகாரனா (எட்டு உறுப்பினர் கொண்ட குழு) குறித்து குறிப்பிடுகிறது. மஹாதாரா என்பதற்கு கிராமப் பெரியவர், கிராமத் தலைவர், குடும்பத் தலைவர் என்று பல பொருள் உண்டு.
இரண்டாம் சந்திரகுப்தர் காலத்து சாஞ்சி கல்வெட்டு பஞ்சமண்டலி என்பதைக் குறிப்பிடுகிறது, இது ஒரு குழும நிறுவனமாக இருக்கலாம்.
இராணுவம்
முத்திரைகள், கல்வெட்டுகள் ஆகியன பாலாதிகிருத்யா, மஹாபாலாதிகிருத்யா (காலாட்படை மற்றும் குதிரைப்படை தளபதி) போன்ற ராணுவப் பதவிகளைக் குறிப்பிடுகின்றன.
வழக்கமாகப் பயன்படுத்தப்படும் சேனாபதி என்ற சொல் குப்தர் கல்வெட்டுகளில் காணப்படவில்லை. ஆனால் சில வாகடக கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
ஒரு வைசாலி முத்திரை ராணுவக்கிடங்கின் அலுவலகமான ரணபந்தகர் அதிகாரனாவைக் குறிப்பிடுகிறது.
மற்றொரு வைசாலி முத்திரை, தண்டபாஷிகா என்ற அதிகாரியின் அலுவலகத்தைக் குறிப்பிடுகிறது. இது மாவட்ட அளவிலான காவல்துறை அலுவலகமாக இருக்கலாம்.
மஹாபிரதிஹரா (அரண்மனைக் காவலர்கள் தலைவர்), கத்யதபகிதா (அரச சமையலறைக் கண்காணிப்பாளர்) போன்ற அரண்மனையுடன் நேரடியகாத் தொடர்பு கொண்டிருந்த அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஒரு வைசாலி முத்திரை மஹாபிரதிகராவாகவும் தாராவராகவும் இருந்த ஒருவரைப் குறித்துக் குறிப்பிடுகிறது. நிர்வாக அமைப்பின் மேல்மட்டத்த்pல் அமாத்தியா, சச்சிவா ஆகியோர் இருந்தார்கள். இவர்கள் பல்வேறு துறைகளுக்குப் பொறுப்பாக இருந்த நிர்வாக அதிகாரிகளாவர்;.
துடகா என்றழைக்கப்பட்ட ஒற்றர்கள் கொண்ட உளவு அமைப்பும் இருந்தது.
ஆயுக்தகா என்பது மற்றொரு உயர்மட்ட அதிகாரப் பதவியாகும்.
பொருளாதார நிலைகள்
குப்தர் காலத்தில் காமாந்தகா எழுதியது நீதிசாரா என்ற நூல் ஆகும். இந்நூல் அரச கருவூலத்தின் முக்கிய வருவாய்க்கான பல்வேறு மூலவளங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது.
சமுத்திரகுப்தர் மேற்கொண்ட படையெடுப்புகளுக்கான நிதி இதுபோன்ற வருவாய்களின் உபரிநிதியிலிருந்துதான் கிடைத்திருக்க வேண்டும்.
வேளாண்மையும் வேளாண் அமைப்பும்
குப்தர் ஆட்சிக் காலத்தில் அரசு சார்பில் ஏராளமான பாசனப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக வேளாண்மை மேம்பாடு அடைந்தது. அரசு, தனிநபர்கள் ஆகியோர் நீங்கலாகவும், பிராமணர்கள்;, புத்த, சமண சங்கங்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட தரிசு நிலங்களிலும் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டது.
விவசாயிகள் தமது பயிர்களை முறையாகப் பாதுகாக்க அறிவுத்தப்பட்டார்கள். பயிர்களை நாசம் செய்வோருக்கு தண்டனை வழங்கப்பட்டது. மேலும், பயிர்களைச் சுற்றியும் வேளாண் நிலங்களைச் சுற்றியும் வேலி அமைக்கப்பட்டிருந்தது.
குப்தர் காலத்தில் நெல், கோதுமை, பார்லி, கடலை, தானியம், பயறு, கரும்பு, எண்ணெய் வித்துகள் ஆகியவை பயிரிடப்பட்டன.
காளிதாசர் மூலம் தென்பகுதியானது மிளகு, ஏலம் ஆகியவற்றிற்குப் புகழ்பெற்றிருந்தது தெரியவருகிறது. பழ மரங்கள் வளர்ப்பது குறித்து வராகமிகிரர் விரிவான அறிவுரைகளைத் தந்துள்ளார்.
பஹார்பூர் செப்பேடுகளின்படி உஸ்தபாலா என்ற அதிகாரி மாவட்டத்தின் நிலப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்தார். கிராமத்தில் நிலங்கள் தொடர்பான ஆவணங்களை கிராம கணக்கர் பராமரித்தார்.
குப்தர் காலத்தில் நிலம் கீழ்வருமாறு வகைப்படுத்தப்பட்டிருந்தன.
பாசனம்
நாரதஸ்மிருதி என்ற நூலில், வயல்களை வெள்ளங்களிலிருந்து பாதுகாத்த பந்தியா, பாசனத்திற்கு உதவிய கரா என்ற இருவகை அணைக்கரைகள் குறிப்பிடப்படுகின்றன.
தண்ணீர் தேங்குவதைத் தடுக்க ஜலநிர்கமா என்ற வடிகால்கள் இருந்ததாக அமரசிம்மர் குறிப்பிடுகிறார். நதிகளிலிருந்து மட்டுமில்லாமல், ஏரிகளிலிருந்தும் குளங்களிலிருந்தும் வாய்க்கால்கள் வெட்டப்பட்டன.
குஜராத்தின் கிர்னார் மலையின் அடிவாரத்தில் இருந்த சுதர்சனா ஏரி மிகவும் புகழ்பெற்றதாகும்.
விவசாயிகளின் நிலை
விவசாயிகளின் நிலைமை கீழ் நிலையில் இருந்தது.
சாதிப்பிரிவுகள் காரணமாகவும், நிலங்களும் உரிமைகளும் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதாலும் மானியங்கள் வழங்கப்பட்டதன் காரணமாகவும் அவர்கள் கொத்தடிமைகளின் நிலைக்குக் தள்ளப்பட்டனர்.
சுரங்கமும் உலோகவியலும்
குப்தர் காலத்தில் மிகவும் செழித்த தொழில்கள் சுரங்கத் தொழில், உலோகவியல் ஆகியன ஆகும்.
சுரங்கங்கள் இருந்தது குறித்து அமரசிம்மர், வராஹமிகிரர், காளிதாசர் ஆகியோர் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள்.
இக்காலகட்டத்தில் பீகாரிலிருந்து இரும்புப் படிவுகள் இராஜஸ்தானிலிருந்து செம்புப் படிவுகள் ஆகியன பெருமளவில் தோண்டிஎடுக்கப்பட்டன.
இரும்போடு தங்கம், செம்பு, தகரம், ஈயம், பித்தளை, வெண்கலம், மைக்கா, மாங்கனீஸ், அஞ்சனக்கல், சுண்ணாம்புக்கல், சிவப்பு ஆர்சனிக் ஆகியவற்றையும் பயன்படுத்தினர்.
விவசாயிகளுக்க அடுத்தபடியான முக்கியத்துவம் உலோக வேலை செய்பவர்களுக்கு இருந்தது.
பல்வேறு வீட்டுஉபயோகப் பொருள்கள், பாத்திரங்கள், ஆயுதங்கள் தயாரிக்க உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன.
இரும்பின் கண்டுபிடிப்பிற்குப் பின்னர், கொழுமுனை மேம்படுத்தப்பட்டு, ஆழமான உழவிற்கு உதவியதால் இக்காலகட்டத்தில் வேளாண்மை அதிகரித்தது.
இக்காலகட்டத்தில், உலோகவியல் நுட்பங்கள் உச்சத்தில் இருந்தன என்பதை நிறுவுவதற்கு ,இன்று தில்லி குதுப்மினார் வளாகத்தில் காணப்படும் மெஹ்ரோலி இரும்புத்தூண் சான்றாகக் காட்டபடுகிறது.
இது இரண்டாம் சந்திரகுப்தருடன் அடையாளம் காணப்படுகிறது. இந்த இரும்புத்தூண் பல நூற்றாண்டுகளாகத் துருப்பிடிக்காமல் அப்படியே இருக்கிறது.
இது குப்தர் காலத்து உலோகவியல்; கைவினைஞர்களின் திறனுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.
நாணயங்கள் வடித்தல்,உலோகச் செதுக்கு வேலைப்பாடு, பானைவனைதல், சுடுமண் சிற்பங்கள், மரசெதுக்கு வேலைப்பாடு ஆகியவை வேறு சில கைவினைத் தொழில்களாகும்.
முத்திரை தயாரித்தல், புத்தர் மற்றும் பிறகடவுளரின் சிலை வடித்தல் ஆகியவை இக்காலகட்டத்தில் உலோகவியலில் ஏற்பட்ட ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றமாகும்.
இரும்பு, தங்கம், வெள்ளி, செம்பு, தகரம், ஈயம் ஆகியவற்றை உருக்கிப் பிரித்தெடுப்பதில் ஏற்படும் இழப்பிற்கும் (சேதாரம்) சேர்த்து மக்கள் பணம் தர வேண்டியிருந்தது என்று சொல்லப்படுகிறது.
நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வணிகமும் வர்த்தகமும்
குப்தர் பொருளாதாரத்தின் வலிமைக்கு வணிகர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.
சிரேஷ்டிஇ ,சார்த்தவஹா என்ற இரு வேறுபட்ட வகைகளைச் சேர்ந்த வணிகர்கள் இருந்தனர்.
சிரேஷ்டிஇ என்பவர் பொதுவாக ஒரே இடத்தில் தங்கியிருப்பவர். தனது செல்வம் மற்றும் வணிகத்திலும், வணிக மையத்தை நிர்வகிப்பதன் மூலமும் பெற்ற வளத்தால் மரியாதைக்குரிய நிலையில் இருந்தவர்.
சார்த்தவஹா என்பவர் இலாபத்திற்காக ஊர் ஊராகச் சென்று வணிகம் செய்தவர்.
அன்றாடம் பயன்படுத்தத் தேவையான பொருள்களிலிருந்து விலையுயர்ந்த, ஆடம்பரப் பொருள்கள் வரை வியாபாரம் செய்யப்பட்டன.
மிளகு, சுந்தனக்கட்டை, தந்தம், யானைகள், குதிரைகள், தங்கம், செம்பு, இரும்பு, மைக்கா ஆகியவை விற்கப்பட்டன.
கைவினைக் கலைஞர்கள், வணிகர்கள், பெரு வணிககுழுக்கள் ஆகியன பற்றிக் குறிப்பிடும் செப்பேடுகள், முத்திரைகள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. இதன் மூலம் இக்காலகட்டத்தில் கைவினைத் தொழில்களும் வணிகமும் செழித்திருந்ததைக் காணமுடிகிறது.
தமது அமைப்பகளின் உள் நிர்வாங்களைப் பொருத்தவரை இவை ஏறத்தாழ தன்னாட்சி அதிகாரம் பெற்றவைகளாக இருந்துள்ளன.
இவர்களது சட்ட திட்டங்களை அரசும் மதித்தது.
தனிப்பட்டவணிகக் குழுக்கள் அனைத்தையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழுமத்தினால் இந்த சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நாரத ஸ்மிருதி, பிருகஸ்பதி ஸ்மிருதி ஆகியவை வணிகக் குழுக்களின் அமைப்பு, செயல்பாடு குறித்து விவரிக்கின்றன.
ஒரு குழுவில் குழுத் தலைவர், இரண்டு, மூன்று அல்லது ஐந்து நிர்வாக அதிகாரிகள் இருந்ததாக இவை குறிப்பிடுகின்றன.
குழுச் சட்டங்கள் எழுத்துப்பூர்வமாக ஆவணங்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
தமது குழு உறுப்பினர்களின் தகராறுகளின் மீது தீர்ப்பு வழங்கியது குறித்து பிருகஸ்பதி ஸ்மிருதி கூறுகிறது.
குழுவின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அரசு ஒப்புதல் அளித்தே தீரவேண்டும்.
குழுமங்களின் தலைவர்கள் மாவட்ட அளவில் நிர்வாக அமைப்புகளில் முக்கியமான பங்கு வகித்ததாகச் செப்பேடுகள் கூறுகின்றன.
வணிகக் குழுக்களில் கைவினைஞர்களுக்கான குழுக்கள், வங்கியாளர்களுக்கான குழுக்கள், வணிகர்களுக்கான குழுக்கள் எனப் பலவித குழுக்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழும அமைப்புகள் இயங்கியதாகக் குறிப்புகள் உள்ளன.
பயணிகளின் நலன்களுக்காக நிழல் குடை, விடுதிகள், சத்திரங்கள், கோவில்கள், தோட்டங்கள், மண்டபங்கள் ஏற்படுத்திக் தரும் கொடை நடவடிக்கைகளிலும் வணிகக் குழுக்களும் குழுமங்களும் ஈடுபட்டு வந்ததாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன.
மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்புகளில் வணிகக் குழுக்களின் தலைவர்கள் முக்கியப் பங்காற்றிவந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
வணிகக்குழுக்கள் வங்கிகளின் பங்கினை ஆற்றியதாகவும் அறிய முடிகிறது. இதற்கான கொடையாளர்களின் பெயர்கள் இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.
நிதியுடன் தொடர்புடைய மற்றொரு அம்சம் கந்துவட்டி (அதிகவட்டிக்குக் கடன் தருதல் கந்துவட்டிஆகும்).
வணிகத்தில் அதிக இலாபம் ஈட்டுவதற்காகப் பணம் கடனாகப் பெறப்பட்டு வட்டிக்கு விடப்பட்டதற்கான குறிப்புகள் இக்காலகட்டச் சான்றுகளில் காணப்படுகின்றன.
குப்தர் காலத்தில் மேற்குக் கரையில் கல்யாண், சால் ஆகிய வணிகத் துறைமுகங்களும், மலபார், மங்களூர், சலோபடானா, நயோபடான, பந்தேபடானா ஆகிய வணிகச் சந்தைகளும் இயங்கியுள்ளன.
வங்கத்தின் தாமிரலிப்தி கிழக்குக் கடற்கரையின் முக்கியமான வணிகமையம் என்று பாஹியான் குறிப்பிடுகிறார்.
இந்த வணிகத் துறைமுகங்களும், நகரங்களும் ஒரு புறம் பாரசீகம், அரபியா, பைசாண்டியம் போன்ற நாடு நகரங்களோடும் துறைமுகங்களோடும், மறுபுறம் இலங்கை, சீனா, தென்கிழக்கு ஆகிய நாடுகளோடும் இணைக்கபட்டிருந்தன.
இந்தியா, சீனா இடையிலான கடல் பயணத்தில் எதிர் கொள்ள நேரும் இடர்கள் குறித்து பாஹியான் குறிப்பிடுகிறார்.
அபூர்வமான ரத்தினக் கற்கள், மெல்லிய துணிவகைகள், வாசனைத் திரவியங்கள் ஆகியவை இந்தியாவிலிருந்து விற்கப்பட்டன.
சீனாவிலிருந்து பட்டும், இதர பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்டன.
குப்தர்கள் அதிக எண்ணிக்கையில் தங்க நாணயங்களையும், ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையில் வெள்ளி, செம்பு நாணயங்களையும் வெளியிட்டனர்.
எனினும் குப்தர் காலத்திற்குப் பின்னர் தங்க நாணயங்களின் புழக்கம் குறைந்து போனது.
பண்பாட்டு மலர்ச்சி
கலையும் கட்டடக் கலையும்
குப்தர் காலத்தில் நாகரா,திராவிடம் பாணியிலான கலைகள் வளர்ந்தன. இந்திய கட்டடக்கலை வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க, படைப்பாக்கம் கொண்ட காலமாகும்.
குடைவரை,கட்டுமானக் கோவில்கள்
பாறைகளைக் குடைந்து கட்டப்படும் குடைவரைக் கோவில்கள் பெரும்பாலும் பழைய அமைப்புகளையேத் தொடர்ந்தன. எனினும் முகப்புப் பகுதியின் அலங்காரத்திலும், உள்பக்க தூண்களின் வடிவமைப்பிலும் விரிவான புதிய மாற்றங்களைக் கொண்டு வந்ததன் மூலம் புதுமை செய்தன.
மிகவும் குறிப்பிடத்தகுந்த குடைவரைக் கோவில்கள் அஜந்தா, எல்லோரா (மகாராஷ்டிரம்) மற்றும் பாக் (மத்தியப் பிரதேசம்), உதயகிரிகுகைகள் (ஒடிசா) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
கட்டுமானக் கோவில்களில் பின்வரும் அம்சங்கள் காணப்படுகின்றன:
தட்டையான கூரை கொண்டசதுரக் கோவில்கள்
விமானத்துடன் (இரண்டாவது மாடி) கூடிய தட்டையான கூரை கொண்ட சதுரக் கோவில்கள்
வளைகோட்டு கோபுரம் (சிகரம்) கொண்ட கோவில்கள்
செவ்வகக் கோவில்கள்
வட்டவடிவக் கோவில்கள்
இரண்டாவது குழுவைச் சேர்ந்த கோவில்கள் திராவிட முறையின் பல கூறுகளைக் கொண்டவையாக உள்ளன.
கருவறைக்கு மேலே சிகரம் அமைக்கும் புதுமை மூன்றாவது பாணியின் சிறப்பு ஆகும். அது நாகரா பாணியின் முக்கிய அம்சமாகும்
ஸ்தூபிகள்
மிகச் சிறந்த ஸ்தூபிகள் சமத் (உத்தரப்பிரதேசம்), ரத்தினகிரி (ஒடிசா), மிர்பூர்கான் (சிந்து) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
கல் சிற்பங்கள்
கல் சிற்பக் கலைக்குச் சிறந்த சான்று சாரநாத்தில் காணப்படும் நிற்கும் நிலையிலுள்ள புத்தர் சிலை.
புராணச் சிற்பங்களில் மிக அழகானது உதயகிரி குகையின் நுழைவாயிலில் இருக்கும் வராஹ அவதாரச் சிலை
உலோகச் சிற்பங்கள்
குப்தர் காலத்து உலோகச் சிறபங்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு
பீகாரின் நாளந்தாவில் உள்ள புத்தரின் பதினெட்டடி செம்புச் சிலை,
சுல்தான் கஞ்சில் உள்ள ஏழரையடி புத்தர் சிலை
ஓவியங்கள்
குப்தரின் சுவரோவியங்கள் அஜந்தா, பாக் ,பாதாமி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன..
அஜந்தாவின் சுவர் ஓவியங்கள் ஃபிரெஸ்கோ எனப்படும் சுவரோவிய வகையைச் சேர்ந்தவையல்ல.
ஃபிரெஸ்கோ ஓவியங்கள் சுவரின் பூச்சி ஈரமாக இருக்கும் போதே வரையப்படுபவை, ஆனால் அஜந்தாவின் சுவர் ஓவியங்கள் பூச்சி காய்ந்த பின் வரையப்பட்டவை.
அஜந்தா மற்றும் பாக்கில் காணப்படும் ஓவியங்கள் மத்தியதேச ஓவியப் பள்ளி முறையின் தலை சிறந்த ஓவியங்களாகும்.
சுடுமண் சிற்பங்களும் மட்பாண்டக் கலையும்
களி மண்ணால் செய்த சிறு உருவங்கள் மதம் சார்ந்த ,மதம் சாராத நோக்கங்களுக்காகப் பயன்பட்டன.
விஷ்ணு, கார்த்திகேயர், துர்கை, நாகர் மற்றும் பல ஆண், பெண் கடவுளர்களின் சிறு களிமண் உருவங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
அச்சிசத்திரா, ராய்கார், ஹஸ்தினாபூர், பஷார் ஆகிய இடங்களில் கிடைத்துள்ள குப்தர் காலத்து மட்பாண்டங்கள் மட்பாண்டக் கலையின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
இக்காலகட்டத்து மட்பாண்டங்களின் தனிப்பட்ட சிறப்பம்சம் 'சிவப்பு மட்பாண்டங்கள்" ஆகும்.
குப்தர்கள் கால இலக்கியம்
சமஸ்கிருத இலக்கியம்
குப்தர் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கினார்கள். அவர்களின் அனைத்து கல்வெட்டுகளும் பட்டயங்களும் அம்மொழியில்தான் எழுதப்பட்டன.
இக்காலகட்டம்தான் சமஸ்கிருத இலக்கியத்தின் உச்சகட்டமாகும்.
பண்டைய காலத்தில் உருவான ஸ்மிருதிகள் நல்லொழுக்கம், அரசியல், கலை மற்றும் பண்பாடு என்று பல்வேறு கருப்பொருள்கள் குறித்துப் பேசிய சமய நூல்களாகும். தர்மசாஸ்திரங்களும் புராணங்களும் இந்த இலக்கியக்கட்டமைப்பின் மையப்பொருளை வடிவமைத்தன.
பாணினி எழுதிய அஷ்டத்யாயி, பதஞ்சலியால் எழுதப்பட்ட மஹாபாஷ்யா ஆகிய படைப்புகளின் அடிப்படையில் குப்தர் காலத்தில் சமஸ்கிருத இலக்கணத்தின் வளர்ச்சி புலப்படுகிறது.
இக்காலகட்டம் குறிப்பாக அமரசிம்மரால் அமரகோசம் என்ற சமஸ்கிருத சொற்களஞ்சியம் தொகுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
வங்கத்தைச் சேர்ந்த பௌத்த அறிஞர் சந்திரகோமியர் சந்திரவியாகரணம் என்ற இலக்கண நூலைப் படைத்தார்.
புராணங்களும் இதிகாசங்களும்
புராமணர்களால் பதிவுசெய்யப்பட்ட தொன்மக் கதைகளாக இருந்தன. உண்மையில், இவை தொடக்கத்தில் பாணர்களால் பாடப்பட்டவை. பிராமணர்களின் கைகளுக்கு வந்ததும், இவை செவ்வியல் சமஸ்கிருதத்தில் மீண்டும் இயற்றப்பட்டன.
இவற்றை இந்துக்களின் புனித பனுவல்களாக மாற்றும் முயற்சியாக இந்துப் பிரிவுகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள் அனைத்தும் விரிவான முறையில் சேர்க்கப்பட்டன.
அரச வாரிசுகள் யூகத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டன. காலம் காலமாக மக்களின் நினைவுகளின் ஊடாக நிலைத்து வந்த படைப்புகள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு, மீண்டும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டன.
பதினெட்டு முக்கிய புராணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவைகளில்
பிரம்ம புராணம்
பத்ம புராணம்
விஷ்ணு புராணம்
சிவமகா புராணம்
ஸ்கந்த புராணம்
மார்கண்டேய புராணம்
அக்னி புராணம்
பவிஷ்ய புராணம்
மத்ஸ்ய புராணம்
ஸ்ரீமத்பகவத் புராணம்
ஆகியன நன்கு அறியப்பட்டவையாகும்.
மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்கள் மெருகேறிச் செம்மையடைந்து தமது இறுதி வடிவினைப் பெற்றன.
பௌத்த இலக்கியம்
தொடக்க கால பௌத்த இலக்கியங்கள் மக்கள் மொழியான பாலி மொழியில் இருந்தன. பின்னர் சமஸ்கிருதக் கலப்புடன் கவிதையும் வசனமுமாக மீண்டும் எழுதப்பட்டன.
ஆர்ய தேவர், ஆர்ய அசங்கர் ஆகியோர் குப்தர் காலத்தின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள் ஆவர். தர்க்க அறிவியல் சார்ந்த முதலாவது முழுமையான பௌத்த நூல் வசுபந்துவால் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டது.
வசுபந்துவின் சீடரான திக்நாகரும் பல அரிய நூல்களை எழுதினர்.
சமண இலக்கியம்
சமணர்களின் மதநூல்களும் தொடக்கத்தில் பிராகிருத மொழியிலேயே எழுதப்பட்டன. பின்னர்தான் சமஸ்கிருதத்தில எழுதப்பட்டன.
சமணமதக் கோட்பாடுகளைப் பரப்பப் பல இந்து புராணங்களும், இதிகாசங்களும் சமண மதக் கண்ணோட்டத்தில் மாற்றி எழுதப்பட்டன.
விமலா சமண இராமாயணத்தை எழுதினார். சித்தசேன திவாகரா சமணர்களிடையே தர்க்க சாஸ்திரத்திற்கு அடித்தளமிட்டார்.
சமயம் சாரா இலக்கியம்
சமுத்திரகுப்தர் கவிராஜா என்று புகழ்பெற்றவராவார். காளிதாசர், அமரசிம்மர், விசாகதத்தர், தன்வந்திரி போன்ற நவரத்தினங்கள் அவரது அவையை அலங்கரித்ததாகப் பரவலாக நம்பப்படுகிறது.
காளிதாசர் இயற்கையை, அழகை எழுதிய கவிஞர். சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்ரமோர்வசியம் ஆகியவை இவரது புகழ்பெற்ற நாடகங்கள்.
சூத்ரகர் (மிருச்சகடிகம்), விசாகதத்தர் (முத்ராராட்சசம், தேவிசந்திரகுப்தம்) ஆகியோர் படைப்புகள் வெளியாகின.
பிராகிருத மொழியும் இலக்கியமும்
பிராகிருதத்திற்கு அரசவைக்கு வெளியே ஆதரவு இருந்தது.
மதுரா பகுதியில் சூரசேனி என்ற வடிவமும், அவுத், பண்டல்கண்ட் பகுதிகளில் அர்த மாகதி வடிவமும், நவீன பீகார் பகுதியில் மாதி வடிவமும் வழக்கத்தில் இருந்தன.
நாளந்தா பல்கலைக்கழகம்
மகாவிஹாரா என்று பெயர் பெற்ற நாளந்தா இந்தியாவின் பண்டைய மகதப் பேரரசில் (இன்றைய பிகார்) இருந்த மிகப் பெரிய பௌத்த மடாலயமாகும். இது பாட்னாவிற்குத் தென்மேற்கே சுமார் 95 கிமீ தூரத்தில் பீகார் ஷெரீப் நகரத்திற்கு அருகே உள்ளது. இது பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து 1200வரை புகழ்பெற்ற கல்விச்சாலையாக இருந்தது.
இது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படும் உலகின் தொன்மைச் சின்னமாகும்.
வேதக் கல்வியின் மிகவும் முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் இந்தியாவின் தொடக்ககாலப் பல்கலைக்கழகங்கள் என்று குறிப்பிடப்படும் தட்சசீலம், நாளந்தா, விக்ரமசீலா போன்ற பெரிய கல்வி நிறுவனங்கள் அமையத் தூண்டுகோலாக இருந்தன.
ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளில் நாளந்தா பல்கலைக்கழகம் குப்தப் பேரரசின் ஆதரவிலும், பின்னர் கன்னோசியின் பேரரசரான ஹர்ஷரின் ஆதரவிலும் செழித்தது.
குப்தர் காலத்திலிருந்து தொடர்ந்த பரந்த மனப்பான்மை கொண்ட பண்பாட்டு மரபு ஒன்பதாம் நூற்றாண்டு வரை வளர்ச்சியும் செழுமையும் பெற உதவியது.
இக்காலத்தில் வங்கத்தின் பால வம்ச அரசர்களின் ஆதரவால் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பௌத்த மதம் புகழ்பெறத் துவங்கியது.
தனது உச்சபட்ச வளர்ச்சிக் காலத்தில் இப்பல்கலைக்கழகம் அண்மையிலிருந்தும், வெகு தொலைவிலிருந்தும் மாணவர்களை ஈர்த்தது. திபேத், சீனா, கொரியா, மத்திய ஆசியா போன்ற இடங்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் வந்தனர்.
இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் இப்பல்கலைக்கழகத்திற்கு இந்தோனேஷியாவின் சைலேந்திரா வம்சத்தோடு தொடர்பு இருந்தது தெரிய வருகின்றது. இவ்வம்சத்தின் அரசர் ஒருவர் இவ்வளாகத்தில் ஒரு மடாலயத்தைக் கட்டியுள்ளார்.
பொ.ஆ. 1200இல் தில்லி சுல்தானிய மம்லூக் வம்சத்தின் பக்தியார் கில்ஜியின் படைகளால் நாளந்தா சூறையாடப்பட்டு, அழிக்கப்பட்டது. அதன்பின் மகாவிகாரம் சிறிது காலத்திற்கு சற்று தொலைவில் ஒரு தற்காலிக இடத்தில் தொடர்ந்து செயல்பட்டாலும், காலப்போக்கில் கைவிடப்பட்டு, மறக்கப்பட்டது என்று சில தகவல்கள் கூறுகின்றன.
இந்தியத் தொல்லியல் துறை இப்பகுதியில் ஆய்வு நடத்தியபோது தற்செயலாக இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
முறையான அகழ்வாய்வு 1915இல் ஆரம்பித்தது. அப்போது 12 ஹெக்டேர் பரப்பில் (30 ஏக்கர்) அமைந்திருந்த பதினோரு மடாலயங்களும், ஆறு செங்கல் கோவில்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
அதன் பின்னர் ஏராளமான சிற்பங்கள், நாணயங்கள், முத்திரைகள், செப்பேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவையனைத்தும் அருகில் உள்ள நாளந்தா தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
நாளந்தா இன்று ஒரு மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக உள்ளது.
குப்தர் கால அறிவியல்
கணிதமும், வானவியலும்
சுழியும் என்ற கருத்தாக்கத்தைக் கண்டுபிடித்தது, அதன்விளைவாக பதின்ம இலக்க முறை கண்டுபிடித்தது ஆகிய பெருமைகள் இக்காலகட்டத்தின் அறிவியலாளர்களையேச்சாரும்.
சூரிய சித்தாந்தா என்ற நூலில் ஆரியபட்டர் (பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதி முதல் ஆறாம் நூற்றாண்டின் துவக்கம் வரை) சூரிய கிரகணங்களின் உண்மையான காரணங்களை ஆராய்ந்தார்.
பூமியின் சுற்றளவு குறித்த கணக்கீட்டில் ஆரியபட்டர் கணிப்பு நவீன மதிப்பீட்டிற்கு மிக நெருக்கமாக உள்ளது. பூமி ஒரு அச்சில் தன்னைத் தானே சுற்றுகிறது என்பதைக் கண்டுபிடித்த முதல் வானவியலாளர் அவர்தான். கணிதம், கோணவியல், இயற்கணிதம் ஆகியவற்றைப் பேசும் ஆரியபட்டீயம் என்ற நூலை அவர் எழுதினார்.
வராகமிகிரரின் (ஆறாம் நூற்றாண்டு) பிருஹத் சம்ஹிதா என்ற நூல் வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலைக்களஞ்சியமாகும்.
பஞ்ச சித்தாந்திகா, பிருஹத்ஜாதாக ஆகியவை இவரது மற்ற படைப்புகளாகும். பிரம்மகுப்தர் (ஆறாம் நூற்றாண்டின் இறுதி ஏழாம் நூற்றாண்டின் துவக்கம்) கணிதம் மற்றும் வானவியலுக்கான முக்கிய நூல்களான பிரும்மஸ்புத - சித்தாந்தா, கண்டகாத்யகா ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
மருத்துவ அறிவியல்
மருந்துகள் தயாரிப்பதற்கு உலோகங்களைப் பயன்படுத்துதல், பாதரசம் மற்றம் இரும்பு ஆகியவற்றின் பயன்பாடு குறித்து வராஹமிகிரரும் பிறரும் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது குப்தர் ஆட்சிக் காலகட்டத்தில் வேதியியலில் பெரும் முன்னேற்றம் நிகழ்ந்திருப்பது தெரிகிறது,
நவனிதகம் என்ற மருத்துவ நூல் நோய்களுக்கான மருந்துகள், மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவற்றைக் கூறுகிறது
பாலகாப்யா எழுதிய ஹஸ்த்யாயுர்வேதா என்ற நூல் விலங்குகளுக்கான மருத்துவ நூலாகும்.
குப்தப் பேரரசின் வீழ்ச்சி
குப்த வம்சத்தின் கடைசி அரசராக அறியப்படுபவர் விஷ்ணுகுப்தர். இவர் பொ.ஆ. 540 முதல் 550 வரை ஆட்சி செய்தார். உள்நாட்டுப் பூசல்களும், அரச குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயின.
புத்தகுப்தர் என்ற குப்த அரசர் ஆட்சிக்காலத்தில் மேற்கு தக்காணத்தின் வாகடக அரசரான நரேந்திரசேனா மால்வா, மேகலா மற்றும் கோசலா மீது படையெடுத்தார். பின்னர் மற்றொரு வாகடக அரசரான ஹரிசேனர் மாளவத்தையும் குஜராத்தையும் குப்தர்களிடமிருந்து கைப்பற்றினார்.
இரண்டாம் சந்திரகுப்தரின் பேரனான ஸ்கந்தகுப்தரின் ஆட்சியின்போது ஹீணர்கள் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்தார்கள். ஸ்கந்தகுப்தர் ஹீணர்களை விரட்டுவதில் வெற்றி பெற்றாலும், அதன் விளைவுகள் பேரரசின் நிதி நிலையை நலிவுறச் செய்தது.
ஆறாம் நூற்றாண்டில், ஹீணர்கள் மாளவம், குஜராத், பஞ்சாப், காந்தாரா ஆகியவற்றைக் கைப்பற்றினர். மாளவத்தின் யசோதர்மன், உத்திரபிரதேசத்தின் முகாரிகள், செளராஷ்டிரத்தின் மைத்ரகாக்கள் போன்று பல சிற்றரசர்கள் உருவாக ஆரம்பித்தனர்.
குப்தப் பேரரசு பெருமளவு சுருங்கி மகதத்தில் மட்டும்தான் இருந்தது. பிற்காலத்திய குப்த அரசர்கள் பௌத்தத்தைக் கடைப்பிடித்ததும் இவர்கள் பேரரசை விரிவுபடுத்துவதிலோ, ராணுவப் படையெடுப்புகளிலோ கவனம் செலுத்தாததும் பேரரசைப் பலவீனப்படுத்தியது. அத்துடன், வெளிநாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகள், சிற்றரசர்கள் பலமாக உருவானது ஆகியன அனைத்தும் சேர்ந்து குப்தப் பேரரசு வீழக் காரணமாகின.
ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பேரரசு சிதைந்து பிராந்தியத் தலைவர்களால் ஆளப்பட்ட சிறுசிறு பகுதிகளானது.
Consumer Protection Forum TNPSC Polity Notes
Introduction
Consumer is a person who gives final utility to a commodity. When we pay a price for a commodity or service to use it, we become consumers.
Forms of Consumer Exploitation
The company spends a considerable amount on advertisements alone to attract consumers and feed information that they want us to know, but not the information that we as consumers need about the products.
When the consumers do not have sufficient information about the products, normally they get exploited and are sometimes even harassed by the business community.
Consumer protection
Consumer protection is a group of laws enacted to protect the rights of consumers, fair trade, competition, and accurate information in the marketplace.
The laws are designed to prevent the businesses that engage in unfair practices from gaining an advantage over competitors. They may also provide additional protection for those most vulnerable in society.
Consumer protection laws are a form of government regulations that aim to protect the rights of consumers.
Consumer protection is linked to the ideas of consumer rights and the formation of consumer organisations, which helps consumers to make better choices in the marketplace and get help with consumer complaints.
Other organisations that promote consumer protection include government organisations and self-regulating business organisations.
For example, Telecom Regulatory Authority of India (TRAI) and Insurance Regulatory and Development Authority of India (IRDAI).
The Eight Basic Consumer Rights
The Right to Basic Needs
The Right to Safety
The Right to Information
The Right to Choose
The Right to Representation
The Right to Redress
The Right to Consumer Education
The Right to a Healthy Environment
The Consumer Protection Act, 1986 (COPRA)
This Act, enacted in 1986 in the Parliament of India to protect the interests of consumers.
It makes for the establishment of consumer councils and other authorities for the settlement of consumer's grievances and for matters connected there with it.
The Act was passed in Assembly in October 1986 and came into force on 24 December 1986.
COPRA is regarded as the 'Magna Carta' in the field of consumer protection for checking unfair trade practices, ‘defects in goods’ and ‘deficiencies in services’.
It has led to the establishment of a widespread network of consumer forums and appellate courts all over India.
It has significantly impacted how businesses approach consumer complaints and has empowered consumers to a great extent.
Consumer Protection Councils are established at the national, state and district level to increase consumer awareness.
To increase the awareness of consumers, there are many consumer organisations and NGOs that have been established.
Consumer Disputes Redressal Agencies
National Consumer Disputes Redressal Commission (NCDRC) was established by the Central Government in 1988 under the Consumer Protection Act of 1986.
It has jurisdiction over a complaint valued more than one crore and also have Appellate and Revisional jurisdiction from the orders of State Commissions or the District fora as the case may be.
State Consumer Disputes Redressal Commission (SCDRC) is also known as the "State Commission" established by the State Government in the State.
It is a state-level court that takes up cases valuing less than ₹10 million
District Consumer Disputes Redressal Forum (DCDRF) is also known as the "District Forum" established by the State Government in each district of the State.
The State Governments may establish more than one District Forum in a district.
It is a district level court that deals with cases valuing up to ₹2 million.
Consumer protection Act of 2019
This Act was passed in the Indian Parliament, in August 2019.
It aims to provide the timely and effective administration and settlement of consumer disputes.
National Human Rights Commission (NHRC) TNPSC Polity Notes
The National Human Rights Commission is an autonomous, statutory, and non-constitutional body constituted on 12 October 1993 under the Protection of Human rights Act, 1993.
It consists of a chairman and few other members. They are appointed for 5 years or till the age of 70 years, whichever is earlier.
NHRC is responsible for the protection and promotion of human rights in India defined by the Act as rights relating to life, liberty, equality and dignity of the individual guaranteed by the Constitution or embodied in the international covenants.
NHRC has five divisions. They are Law Division, Investigation Division, Policy Research and Programmes Division, Training Division, and Administrative Division.
Functions of NHRC
To inquire into the violation of human rights or negligence in the prevention of such violation by a public servant.
To intervene in court proceedings relating to human rights.
To undertake and promote research in the field of human rights.
To engage in human rights, education among various sections of society.
To encourage the effects of NGOs and institutions working in the field of human rights.
State Human Rights Commission(SHRC)
Every state in India has a State Human Rights Commission established in accordance with the power conferred on the State under section 21of the Protection of Human Rights Act, 1993.
The State Human Rights Commission of Tamil Nadu was formed on 17 April 1997.
It consists of three members, including a Chairperson.
The state Human Rights Commission can inquire into violation of human rights related to subjects covered under State list and Concurrent list in the seventh schedule of the Indian Constitution (not if NHRC is already enquiring).
The Commission will conduct suo motu actions taken on complaints even if the Commission does not receive a written complaint.
Functions of SHRC
The SHRC shall enquire into violation of human rights in respect of matters specified in the state and concurrent lists.
Its objectives and duties are the same as NHRC, but confined only to the state.
It has the power of a civil court and can take cognizance of cases if received or in suo motu.
It can also recommend compensation to victims.
Human Rights Organisations
Many organisations around the world have taken their efforts to protect human rights and to end human rights abuses.
These Non- governmental organisations monitor the actions of governments and pressure them to act according to human right principles.
Some of these organaisations are Amnesty International, Children’s Defense Fund, Human Rights Watch.
First in India – Woman - TNPSC Notes
First Women’s University – SNDT University in Pune started by Maharshi Karve with five students in 1916.
First Women to hold a Union Cabinet post – Vijaya Lakshmi Pandit.
First Women to hold a Union Foreign Minister’s – Sushma Swaraj (2014).
First Women youngest Minister of a State – Sushma Swaraj (She became the cabinet minister of Haryana when she was only 25 yrs old).
First Women Governor of Independent India – Sarojini Naidu, in charge of United Provinces.
First Women President of UN General Assembly – Vijaya Lakshmi Pandit (1953).
First Women Prime Minister of India – Indira Gandhi (1966).
First Women IPS Officer of India – Kiran Bedi (1972).
First Women to win Nobel Peace Prize – Mother Teresa (1979).
First Indian Women to climb Mount Everest – Bachendri Pal (1984).
First Indian Women to win Booker Prize – Arundhati Roy (1997).
First Women President – Pratibha Patil (2007).
First Women Speaker of LokSabha – Meira Kumar (2009).
First Women judge in Supreme Court – Meera Sahib Fatima Bibi.
First Women President of the Indian National Congress – Annie Besant.
First Women Chief Minister of an Indian State – Sucheta Kripalani (Uttar Pradesh).
First Women Director General of Police (DGP) – Kanchan Chaudhary Bhattacharya.
First women defence Minister of India – Nirmala Sitharaman.
India's first full-time Finance Minister – Nirmala Sitharaman. (Indira Gandhi is the India's first Finance Minister (1969 – 1970))
Featured post
உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR
உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...
-
Preamble of the Constitution & Salient Features of the Constitution / அரசியலைமப்பின் முகவுரை (ம) அரசியலைமப்பின் முக்கிய கூறுகள் ...
-
GK SHANKAR DECEMBER 02 / 2022 I . தமிழ்நாட்டு நிகழ்வுகள் 1. தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் க...
-
GK SHANKAR DECEMBER 23/2022 I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 1. தமிழகத்தின் பின்வரும் எந்த சமூகத்தினரை...